Monday, July 23, 2012

ஔரங்கசீப்பும் ஓசூர் இராஜனின் கதையும்;ஓர் மீளாய்வு

ஔரங்கசீப்பும் ஓசூர் இராஜனின் கதையும்;ஓர் மீளாய்வு

வணக்கம் நண்பர்களே,

நமக்கு அறிவியல் வரலாறு சார்ந்த ஆய்வு விவாதங்களில் ஆர்வம் உண்டு.அறிவியல் என்பது இயற்கை நிகழ்வுகளின் விளக்கம் எனில் வரலாறு என்பது மனித சமுதாயத்தின் நிகழ்வுகளில் விள்க்கம் எனலாம்.
இப்பதிவுக்கு மீளாய்வு செய்ததை வெளியிடலாமா என நமக்கு பெரும் தடுமாற்ற‌ம் ஏன் என்பதை விளக்கத்தின் போது படிப்பீர்கள்.நாம் சொல்லும் பல பன்முக நடுநிலை கருத்துகள் பல மத்வாதிகளின் பிரச்சாரங்களுக்கு எதிர் வினையாவது தவிர்க்க முடிவதில்லை.

சரி பதிவுக்கு வருவோம்.சகோ ஓசூர் இராஜனின் பதிவின் சாரம் என்ன? 
1.ஔரங்கசீப் என்னும் முகலாய மன்னர் ,இந்துத்வவாதிகளால் தீயவராக சித்தரிக்கப்படுவது தவறு.

2.ஔரங்கசீப் ஒரு பல் மதத்தவரையும் நண்பர்களாக கொண்ட ,ஆதரித்த ஒரு மன்னன்.

3.ஔரங்கசீப் தனது கச் சிற்றரசின் அரசி அலயத்தில் மான்பங்கம் செய்யப் பட்டதால் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தார்.
 
 
இந்த மூன்று விடயங்களையும் ஆய்வுக்கு எடுப்போம்.
முதல் விடயம் மிக இயல்பான ஒன்று.. ஔரங்கசீப்பை இஸ்லாமிய மதவாதிகள் புகழ்பாடுவதும்,இந்துத்வவாதிகள் இக்ழ்வதும் அனைவரும்
அறிந்தது.

ஔரங்கசீப்பின் வரலாற்றில் வாரிசுப் போரில் த்னது சகோதரர்களைக் கொன்றது,தந்தையை சிறையில் இட்டது போன்ற விடயங்கள் வரலாற்றுப் பாட புத்கங்களில் படித்து இருக்கிறோம்.

ஔர‌ங்க‌சீப் ப‌ல் போர்க‌ள் புரிந்து இந்திய‌ துணைக‌ண்ட‌த்தின் பெரும்ப‌குதியை ஆண்டார் என்ப‌தால் போர் புரிப‌வ‌ர்க‌ள் அனைவ‌ராலும் பாராட்ட‌ப்ப‌ட‌ மாட்டார்க‌ள் என்ப‌தும் இய‌ல்பே.

இன்னொரு முக‌லாய‌ ம‌ன்ன‌ன் அக்ப‌ர் இஸ்லாமிய‌ ம‌த்வாதிக‌ளால் தூற்ற‌ப்ப‌டுவ‌து அவ‌ர் புதிதாக் ஒரு ம‌த‌ம்(தீன் இலாஹி) ஆர‌ம்பித்த‌துதான்.ம‌த்வாதிக‌ள் ஒருவ்ரை ஒருவ‌ர் வன்முறையற்று விம‌ர்சிக்கும் போது ந‌டுநிலையாள‌ர்க‌ள் க‌ண்டு கொள்ள‌‌ வேண்டிய அவ‌சிய‌ம் இல்லை.

ஔரங்கசீப் பற்றிய பல விவரங்கள் சர்சைக்குறியவையே.ஆகவே புகழ்வதும் இகழ்வதும் அவரவர் நிலைப்பாடு.
**********

இரண்டாம் விடயம் ஔரங்சீப்புக்கும் சில காஃபிர் அரசர்கள் நண்பர்களாக் இருந்தனர் என்ற விடயத்தை எடுபோம்.
 

ஒரு பெரும் நிலப்பரப்பை ஆளும் அரசன் தனக்கு விசுவாசமான் பலரை பொறுப்புகளில் அமர்த்தினால் மட்டுமே நிர்வாகம் செய்ய இயலும்.ஆகவே ஒரு குறிப்பிட்ட இன‌த்தவர் மட்டுமே ஆளும் வர்க்கம் எனில் அரசு சீக்கிரம் கவிழ்ந்து விடும்.ஆகவே ஒவ்வொரு இன‌த்திலும் எந்த ஆட்சி வந்தாலும் ஜால்ரா அடிக்கும் ஆட்களை கண்டறிந்து அவர்களை அரவனைப்பது பல் காலமாக உள்ள நடைமுறை.
ஒரு எ.கா வேண்டுமெனில் நம் நாட்டின் முன்னாள் அதிபர் அப்துல் கலாம் இந்துத்வ சக்திகளுக்கு மிகவும் பிடித்தவர். அது போன்ற சிலருக்கு ஔரங்கசீப் சிற்றரசர்களாக பதவி அளித்து நிர்வாகம் நடத்தி இருந்தால் அது சாத்தியமான் ஒன்றே.ஒருவன் அனைவருக்கும் கெட்டவன் ஆக முடியாது,. சிலருக்கு நல்லவன்,சிலருக்கு கெட்டவன் இதுதான் அரசியல் ஹா ஹா ஹா!.

*********************
மூன்றாம் விடயமாக சகோ ஓசூர் இராசன் ஏன் காசி விஸ்வதநாதர் ஆலயம் ஔரங்கசீப்பால் ஏன் இடிக்கப்பட்டது என்பதை விள்க்குகிறார்.
அவர் பதிவிலேயே படிக்க வேண்டுகிறேன்.நான் சொல்ல வருவது என்ன வெனில் சகோ ஒசூர் இராசன் சொலவது முன்னாள் ஒரிசா ஆளுநர் ஃபிசாம்பர் நாத் பாண்டே எழுதிய புத்த்கத்தில் உள்ள விடயம்தான்.


சகோ ஓசூர் இராசன் இதில் கூறியது பாதி உண்மை.கோயிலை இடித்ததை கூறியவர் அவ்விடத்தில் மசூதி கட்டியதை மறைத்து விட்டார்.அது இன்றுவரை பிரச்சினையாக உள்ளது.
இந்துத்வ சார்புடைய ஐரொப்பிய எழுத்தாளர் கொன்ரட் இது பற்றி விவாதிக்கிறார்.

இப்போது சகோ ஓசூர் இராசன் என்ன செய்து இருக்கிறார் எனில் ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து மசூதி கட்டியதை நம் வஹாபி சகோக்கள் ஆதரவுடன் நிரூபித்து இருக்கிறார்.
சரியான உள் குத்து பதிவு

ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்ததை நம் மூமின் சகோக்களை ஒத்துக் கொள்ள வைத்து விட்டீர்களே தலை ஓசூர் இராசன்!!!!!!!!!.
 

அயோத்திக்கு அடுத்து காசி விஸ்வதார் கோயிலை பிரச்சினை ஆக்க இந்துத்வ சக்திகள் முயல்வதும் அனைவரும் அறிவோம்


அடுத்து பாபர் மசூதிக்கும் இதே போல் ஓசூர் இராசன்  செய்வாரா என்பது பொறுத்து பார்க்க வேண்டும்!. !


சூப்பரா உள்குத்து போடூரீங்க தலை ஓசூர் இராசன்


நம் மூமின் சகோக்களுக்கு இபோது ஓசூர் இராசன் பதிவு என சொல்கிறது என்பது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.

இதனால்தான் குரான்

"சிந்திக்க மாட்டீர்களா"!!!!!!!!!!!!!!!

என கூறுகிறது.

******************
 
நாம் என்ன சொல்கிறோம் ?

1947ல் இந்தியா என்னும் மத சார்பற்ற ,ஜன‌நாயக நாடு உருவானதில் இருந்து முந்தைய புராதன சின்னங்கள் பாதுகாக்கப் படவேண்டும்.அதற்கு முன்னால் நடந்தவற்றுக்கு யாரும் பொறுப்பாக முடியாது.

வரலாற்றின் தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதோ,பரிகாரம் செய்வதோ தேவையற்ற‌து. இறந்த மனிதர்களை விட வாழும் மனிதர்களே முக்கியம்.

நமது நாட்டின் அரசியமைப்பு இன்னும் மனித உரிமைகள் அடிப்படையில் சீர்திருத்தப் படவேண்டும்.அனைவருக்கும் இலவச கல்வி,சுகாதாரம் வாழ்வாதாரம் உறுதிப் படுத்தும் ஒரு ஆட்சி முறை உருவாக வேண்டும். ‌

இந்த விதத்தில் சிந்திகாமல் மதம் சொல்வது மட்டுமே சரி ,அதன் அடிப்படையில் ஆட்சி அதிகாரம் கைப்பற்றுவோம் என்னும் சக்திகள் கால ஓட்டத்தில் காணாமல் போவது உறுதி.
நன்றி.******************

39 comments:

 1. இதுக் குறித்து நானும் யோசித்தேன்.. ஆனால் உங்களின் விளக்கமே போதுமானது !!!

  இந்துத்வாவாதிகளும் - இஸ்லாமியவாதிகளும் மாறி மாறி சண்டையிட்டு கொள்வதால் மதம் துறந்தோருக்கும், நடுநிலையாளருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை ... !

  // 1947ல் இந்தியா என்னும் மத சார்பற்ற ,ஜன‌நாயக நாடு உருவானதில் இருந்து முந்தைய புராதன சின்னங்கள் பாதுகாக்கப் படவேண்டும்.அதற்கு முன்னால் நடந்தவற்றுக்கு யாரும் பொறுப்பாக முடியாது. //

  இதையே தான் நானும் வழிமொழிகின்றேன் .... !

  //வரலாற்றின் தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதோ,பரிகாரம் செய்வதோ தேவையற்ற‌து. இறந்த மனிதர்களை விட வாழும் மனிதர்களே முக்கியம்.
  நமது நாட்டின் அரசியமைப்பு இன்னும் மனித உரிமைகள் அடிப்படையில் சீர்திருத்தப் படவேண்டும்.அனைவருக்கும் இலவச கல்வி,சுகாதாரம் வாழ்வாதாரம் உறுதிப் படுத்தும் ஒரு ஆட்சி முறை உருவாக வேண்டும். ‌//

  இதைச் சொன்னால் நம்மை இந்துத்வாதிகாள் எனப் பட்டம் கட்டி விட்டார்கள் ... இந்துத்வாதிகள் நம்மை என்ன பட்டம் கட்டினார்களோ எனக்குத் தெரியவில்லை ... !

  //இந்த விதத்தில் சிந்திகாமல் மதம் சொல்வது மட்டுமே சரி ,அதன் அடிப்படையில் ஆட்சி அதிகாரம் கைப்பற்றுவோம் என்னும் சக்திகள் கால ஓட்டத்தில் காணாமல் போவது உறுதி.
  நன்றி//

  அண்ட சராசரம் எவ்வளவு பரந்து விரிந்தது .. ஆனால் அவற்றை படம் பிடித்து ஒரு புகைப்படம் ஆக்கிவிடுகின்றோம். அதற்காக அந்தப் புகைப்படம் தான் அண்டசராசரம் என்பது போலத் தான் இவர்களின் வாதமும் .. எல்லாம் மாறும் .. மாற்றம் ஒன்றே என்றும் மாறதது ...

  நன்றிகள் சகோ.

  ReplyDelete
 2. வாங்க சகோ இக்பால் செல்வன்,

  ஔரங்கசீப் என்பவன் ஒரு மன்னன்.அக்கால் மன்னர்கள் பெரும்பான்மையோர் போலவே போர் பிரியனாகவும்,மதத்தை தனக்கு சாத்கமாக பயன்படுத்துப்வனாகவும் இருந்ததில் வியப்பில்லை.அவனை உத்தம புத்திரன் என்பதோ அல்லது சைத்தான் கி பச்சா என்பதோ தேவையற்ற‌து.


  ஔரங்கசீப் படையெடுத்து கொள்ளை அடித்தது தவறு போல் இராசராசன் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் மேல் ஆகிரமிப்பு செய்ததும் தவறு என கூறும் நடுநிலை நம்மிடம் உள்ளது.


  சகோ ஓசூர் இராசன் கோயிலை இடித்தது மட்டும் கூறி அங்கு மசூதி கட்டியதை மறைக்கும் செயல் மட்டுமே நாம் இங்கு ஆவணப் படுத்துகிறோம்.


  மத்வாதிகள் வரலாற்றை கூறுகிறேன் என்று இப்படி பாதி உண்மைகளையும்,பொய் பிரச்சாரங்களையும் மேற்கொள்வது எதிர்வினைகளை மட்டுமே ஏற்படுத்தும்.
  நன்றி இன்னும் படியுங்கள் விக்கி பிடியாவில்

  http://en.wikipedia.org/wiki/Aurangzeb

  Thank you

  ReplyDelete
 3. இந்துமதம் இந்திய மதமா?
  இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது?

  அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்

  >> மேலும் படிக்க


  .

  ReplyDelete
 4. வணக்கம் சகோ தமிழன்,

  இந்து மதத்தை பற்றி நாமும் அறிவோம்.அது பற்றி பதிவிட்டால் த்யங்காமல் வந்து விவாதியுங்கள்.ஆனால் இப்பதிவில் சகோ ஓசூர் இராசன் மூமின்களை ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆல்யத்தை இடித்து மசூதி கட்டியதை ஒத்துக் கொள்ள‌ வைத்த புத்திசாலித்தனத்தை வியக்கிறேன்.

  இது இந்துத்வ‌த்தின் ச‌தியாக் இருக்க்லாம்!!!!!!!!!!!

  சிந்திக்க‌ மாட்டீர்க‌ளா!!!!!!!!!!!!

  ந‌ன்றி

  ReplyDelete
 5. அவரவர் பார்வைக்கேற்ப வரலாற்றை வளைப்பது நல்லதல்ல.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ முரளி,

   வரலாறு,அறிவியல் இரண்டுமே மதம் அரசியல் சக்திகளால் தங்களுக்கு இசைவாக வளைக்க முயற்சிக்கப் படுபவை.எனினும் இது நெடுங்காலத்திற்கு முடியாது.

   நன்றி

   Delete
 6. நேற்று நடந்த அவுரங்கசீப்பு வரலாற்றையே சோற்றுக்குள் மறைப்பவர்கள் இருக்கும்போது,1400 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறுகளை எத்தனை பேர்கள் மறைத்தார்களோ. வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே.....நன்றி சகோ. சார்வாகன்.

  இனியவன்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இனியவன்,
   ஔரங்கசீப்பின் வரலாற்றின் பெரும்பகுதி சரியாக ஆவணப் படுத்தப் பட்டு உள்ள‌து. அது அனைத்தும் சர்ச்சைக்குறிய விதத்திலேயே உள்ள‌து.தக்காணத்தை பிடிக்க 26 வருடம் போர் நட்த்தினார் என்றால் என்ன நடந்து இருக்கும் என்பதை ஊகிப்பது இயல்பே.போர் எனபது கொள்ளை அடிக்க மட்டுமே.

   ஔரங்கசீப் பற்றி நியாயப் படுத்தல் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்?

   அப்புறம் சகோ இக்பால் பதிவில் உங்களின் பின்னூட்டம் அபாரம்,நோன்பும் பூமியின் இடம் ,கால வேறுபாடும் அற்புதமான சிந்த்னை.வாழ்த்துக்கள்.

   நன்றி

   Delete
 7. ஓசூர் ராசன் சோழர்களையே இஸ்லாமியர்களாக்கியவர், அவுரங்கசீப்பை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? அங்கே கல்வெட்டு இருக்கிறது, இங்கே ஆதாரம் உண்டு அளந்து விடுவார், பாருங்கள். இஸ்லாமியர்களைத் தவிர வேறு யாரும் இவருடைய புளுகுகுகளை நம்புவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இராபின்,

   ஒரு பொது தள்த்தில் சர்ர்சைக்குறிய கருத்து அளிப்பவர்கள்,அதன் சான்றுகள் சரிபார்க்கும் படி அளிக்க வேண்டும்.

   வரலாற்று திரிபு எப்படி செய்வது என்பதற்கு அப்பதிவும் ஒரு எ.கா.

   நன்றி

   Delete
 8. http://dharumi.blogspot.in/2011/02/472.html

  http://dharumi.blogspot.in/2011/02/479-co.html

  இந்த இரு பதிவுகளையும் மேற்கோள் காட்டி சொன்னதையே திருப்பி அப்பதிவில் சொல்லியுள்ளேன்... அவர்கள் காதில் இதெல்லாம் விழவா போகிறது. செவிடன் காதுகளில் சங்கொலி ........

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா
   வாருங்கள்.சங்கொலி செவிடர்களை தவிர அனைவருக்கும் கேட்கிறது அல்லவா!!.நமக்கு அது போதும்.
   ஹா ஹா ஹா

   நன்றி

   Delete
 9. ஔரங்கசீப் தன் சகோதரர்களை கொன்றுவிட்டு தந்தையை சிறையில் அடைத்து ஆட்சி பிடித்ததால், யாரையும் நம்புவதில்லை. எல்லா அரசியல், போர், பொருளாதாரம் திட்டங்களைக் குறித்து யாருடைய ஆலோசனையுமின்றி தானே முடிவெடுத்தார். அதுவே பிறகு எமனாக மாறிவிட்டது. வரலாற்றில் இவர் போன்ற பல நபர்களை நாம் பார்த்திருப்போம். Hitler க்கும் இதே முடிவுதான் நேர்ந்தது. உதாரணமாக தற்காலத்தில் வாழும் ஜெயலலிதாவின் நிலையும் இது தான்.

  ReplyDelete
  Replies
  1. சகோ குட்டி பிசாசு,
   சரியாக சொன்னீர்கள்.வரலாற்றில் ஔரங்கசீப் போல் பலர் உண்டு.அக்காலத்தில் அப்படித்தான்.ஆனால் இக்காலத்தில் அதனை நியாய்ப் படுத்துபவர்கள்தான் பிரச்சினை.
   நன்றி

   Delete
 10. எந்த பதிவுக்கு எதிர் பதிவு இதுவோ, அந்த பதிவில் இட்ட அதே கமென்ட் இங்கேயும்

  நானூறு வருட வரலாறில் இவ்வளவு கைவைத்தல் இருக்கும் போது , அதனை விட பழையதில் எந்த அளவிற்கு உண்மைகள் ( மட்டும் ) இருக்கும்?

  ஹிட்லர் ஏறக்குறைய சமகாலத்தர் என்ற வகையில் அவரது பல விஷயங்கள் மறுதலிக்க பட்டுவிட்டன. ஒரு வேளை ஹிட்லரின் காலம் ஐநூறு வருடங்களுக்கு முன் என்று இருந்தால்,

  கேள்விகளை மட்டுமே கேட்க தெரிகிறது

  ReplyDelete
 11. சகோ ஷர்புதீன் வாங்க,
  எக்காலத்திலும் சாதரண மனிதர்கள் மதம் இனம் வேறுபாடின்றி இணைந்தே வாழ்ந்தனர்.மதப் போர்வையில் தங்கள் செயல்களை நியாய்ப்படுத்துவது எப்போதும் ஆளும் வர்க்கத்தின் செயலே.

  ஆன்மீகவாதிகள் இப்போதிய வாழ்வின் எதார்த்த சிக்கல்களை தங்கள் தனிப்பட்ட வாழ்வில் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை குறித்து மட்டும் (உண்மையை))எழுதினால் நலமாக் இருக்கும்.

  தவுகீத் கோஷ்டிகளின் சண்டையை பார்த்தால் தனிப்பட்ட விமர்சனங்களை பார்த்தாலே கொள்கைகளை தங்கள் வாழ்வில் எப்படி கடைப்பிடிக்கிறார்க்ள் என்பது எளிதில் புரிந்து விடுகிறது.இதில் உலகுக்கே உபதேசம்.!!!

  ஏதோ காஃபிர்கள் இந்தியாவில் அதிகம் இருப்பதால் இந்த கோஷ்டி சண்டை சிரியா,இராக் போல் வன்முறையாக மாறவில்லை!!!!!!!!!.

  தற்போதைய வாழ்வில் ஒருவரும் தங்கள் கொள்கையை வைத்து வாழவே முடியாது.சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு பிழைப்பு வாதம் மட்டுமே செய்கிறோம்.எதர்த்தத்தை புரிந்து கொள்வோம்.

  இன்னும் 50 ஆண்டுகளில் வாழும் சூழல் இன்னும்கடினம் ஆகும்.இதில் மதரீதியான பிரிவினைகள் மூன்றாம் உலக்ப் போரை நோக்கியே இட்டு செல்லும்.

  இதில் மதவாதிகளின் பங்கு மிக முக்கியமானது.

  நன்றி

  ReplyDelete
 12. // சார்வாகன் said ….23 July 2012 08:59
  உண்மை கூறிய காஃபிர் அறிவியலாளர்களில் எவர் மூமின் ஆனார் என்ற தகவல்களையும் சகோக்கள் அளிக்க வேண்டுகிறேன்.நன்றி /////

  சார்வாகனுக்கு இதோ பதில். தந்திருப்பது நதியில் சில துளிகளே. சிந்திப்பவர்களுக்கு இது போதுமானது.

  விஞ்ஞானிகள் ஏன் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்?
  முகம்மது நபி அவர்களைப்பற்றியும், தற்போதே கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் 1400 வருடத்துக்கு முன்னரே திருக்குரானில் வெளிப்பாடாகி இருப்பதையும் கண்டு வியக்கும் உலகளாவிய விஞ்ஞானிகள்.

  சுட்டிகளை சொடுக்கி விடியோ காணவும்

  1.>>>>> Top Scientists Comments on Scientific Miracles in the Quran <<<<<


  2.>>>>> NASA confirmed islam is The correct Religion <<<<<


  3.>>>>> a Scientist explains why he become a muslim, interesting <<<<<

  4.>>>>> 52 Great Famous People Converted to Islam 2010,2011 <<<<<

  5.>>>>> Glenn Beck admits islam is the truth <<<<<

  6.>>>>> A Priest rejects christ's and appreciate IslamAn consistent Roman Catholic Priest rejects christ's salvation, yet apprectiate Islamic values and teachings <<<<<

  7.>>>>> Scientist converted to islam after reading Quran. <<<<<

  8.>>>>> American Scientist converts to Islam <<<<<

  9. >>>>> Christian Professor converts to Islam.Professor Fidelma O'Leary is an Irish former Catholic who embraced Islam.. Islam is the fastest growing religion in the world. Islam is going to dominate many Places in USA and Europe in the next few years, and is now a fiery revival sweeping much of the planet from Africa to Asia to Latin America to Europe to USA. The number of Europeans, Americans, Latinos and Africans converting to Islam is growing rapidly <<<<<

  10 >>>>> Czech Scientist Woman Converted to Islam <<<<<

  11. >>>>> Science students in america convert to islam <<<<<

  12. >>>>> Top American Surgeon embraced Islam - "I was trying very hard to be a Christian" <<<<<

  13. >>>>> Dr.Maurice Bucaille ( why i'm muslim) <<<<<

  14. >>>>> German scientist and his wife converted to Islam <<<<<

  15. >>>>> An American scientist explains how he found a new way of life .American Scientist converts to Islam <<<<<

  ReplyDelete
 13. // சார்வாகன் said ….23 July 2012 08:59
  உண்மை கூறிய காஃபிர் அறிவியலாளர்களில் எவர் மூமின் ஆனார் என்ற தகவல்களையும் சகோக்கள் அளிக்க வேண்டுகிறேன்.நன்றி /////

  சார்வாகனுக்கு இதோ பதில். தந்திருப்பது நதியில் சில துளிகளே. சிந்திப்பவர்களுக்கு இது போதுமானது.

  விஞ்ஞானிகள் ஏன் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்?
  முகம்மது நபி அவர்களைப்பற்றியும், தற்போதே கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் 1400 வருடத்துக்கு முன்னரே திருக்குரானில் வெளிப்பாடாகி இருப்பதையும் கண்டு வியக்கும் உலகளாவிய விஞ்ஞானிகள்.

  சுட்டிகளை சொடுக்கி விடியோ காணவும்

  16. >>>>> Czech Scientist Woman Converted to Islam <<<<<

  17. >>>>> Scientist from Czech Converts To Islam <<<<<


  18. >>>>> Science students in america convert to islam <<<<<


  19. >>>>> Anatomy : Scientist converted to islam after reading Quran. <<<<<


  20. >>>>> Scientist's Comments On The Qur'an <<<<<

  21. >>>>> Scientific Truth In The Quran: Earths Atmosphere .In this video one shall see how the scientific fact that the atmosphere protects Earth was revealed in the glorious Quran more than 1400 years before scientists discovered it. According to recent science discovery the atmosphere acts like a protected roof from x-rays and wide variety of dangers that would make like impossible on earth if there was no atmosphere. <<<<<

  22. >>>>> The Qur'an Leads The Way To Science .Scientific observation introduces man to the mysteries of creation, and ultimately, to God's eternal knowledge, wisdom and power. As stated by Albert Einstein, "science without religion is lame", which is to say, that science, unguided by religion, cannot proceed correctly, but rather, wastes much time in achieving results, and worse, is often inconclusive. Islam is a religion of reason that encourages science. Watch this film to see how the Qur'an leads the way to science by calling on people to reflect upon and examine the signs of creation around them. <<<<<

  .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ,
   நம் மூமின் சகோக்களுக்கு இன்னும் குரானில் அறிவியல் என்னும் மாயை விலக்வில்லை.அது ஒரு வார்த்தை விளையாட்டு மட்டுமே.யாரேனும் ஒரு குரான் அறிவியலை இப்பதிவில் கூறப்பட்ட செய்முறை விள்க்கத்தோடு விளக்கினால் நலம்.

   மத அறிவியல் பிரச்சாரத்தை சரி பார்ப்பது எப்படி?செயல்முறை விளக்கம்&காணொளி
   http://aatralarasau.blogspot.com/2012/05/blog-post_05.html

   மத வி(அ)ஞ்ஞானிகள் : பகுதி 1 மௌரிஸ் புகைல்

   http://saarvaakan.blogspot.com/2011/01/blog-post_11.html

   மத வி(அ)ஞ்ஞானிகள் : மௌரிஸ் புகைல் பகுதி 2
   http://saarvaakan.blogspot.com/2011/01/2.html

   மத வி(அ)ஞ்ஞானிகள் :கெயித் மூர்.
   http://saarvaakan.blogspot.com/2011/01/blog-post_5123.html   உண்மை கூறிய காஃபிர் அறிவியலாளர்களில் எவர் மூமின் ஆனார் என்ற தகவல்களையும் சகோக்கள் அளிக்க வேண்டுகிறேன்.நன்றி

   Delete
 14. வாங்க சகோ உண்மைகள்,

  அப்பாடா நம் பதிவுக்கு மூமின் பிரச்சாரகர்கள் வந்தாலே மகிழ்ச்சி.உங்களிடம் ஒரு வேண்டுகோள்.குரானில் அறிவியல் இருக்கும் ஒரு வசனத்தை நமது செய்முறை விளக்கத்தின் படி விளக்க கூறினேன்.அப்படி செய்யாமல் (குரானில் சொல்லியபடி)வெட்டி ஒட்டுகிறீர்கள்.ஒரு குரான் வசனம் கொடுங்கள் sample பார்க்கலாம்.
  எனினும் குரானில் அறிவியல் என்பது ஒருவித மனநோய் என்பதே நம் கணிப்பு.

  குரனோசைன்ஸோஃபோபியா ஹி ஹி.

  இந்த பதிவைப் படியுங்கள்.

  ************

  நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா?

  ‘குர்-ஆனில் விஞ்ஞானம்’ காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு
  http://www.answering-islam.org/tamil/authors/andy/fallacies.html
  **********
  இன்னும் இது குறித்து விவரம் அறிய மிக்க ஆவலக் உள்லென்.இங்கு அனைவரும் நல்ல சுகம்.அது போல் தங்களின் நலமும் நாடுகிறேன்.

  சீக்கிரம் பதில் இடவும்.

  நன்றி

  ReplyDelete
 15. ஹா ஹா ஹா
  சகோ உண்மைகள் நம்மை பற்றி தெரியாமல் இங்கு வந்து விட்டார் என்பது தெரிகிறது.மத அறிவியல் வந்த வரலாற்ரை அவ்ருக்கு அளிக்கிறேன்.நாம் அளித்த சுட்டிகள் சகோ உண்மையின் சுட்டிகளுக்கு பதில் அளித்து விட்டன.
  சுட்டிக்கும் சுட்டிக்கும் சரியாப் போச்சு,போயிந்தே,இட்ஸ் கான்!!!!!!!!!!!!!


  மதத்தில் அறிவியல் எப்படி யார் கொண்டு வருகிறார்கள்?.
  http://saarvaakan.blogspot.com/2011/06/blog-post_08.html

  நன்றி

  ReplyDelete
 16. சகோ.சார்வாகன்,

  நல்லப்பதிவு,சத்ரபதி சிவாஜி ,கடைசி வரைக்கும் அவுரங்க சீப்பை தாளிச்சு எடுத்த வரலாற்றை கூட மறைப்பார்கள்.

  ReplyDelete
 17. சகோ ஓசூர் இராஜன் ஒரு இஸ்லாமிய மத பிரசாரி. இஸ்லாம் என்றாலே பொய் புரட்டு திரிப்பு.
  குரானில் விஞ்ஞானமா!!! மத வெறி கூடி பைத்தியம் ஆக்கிவிட்டதா?

  ReplyDelete
 18. உலக மக்கள் தொகை குறைப்பில் ஒளரங்கசீப் முக்கிய பங்கு வகித்தாக தெரிவிக்கிறது நியூயார்க் டைம்ஸ் . அவனது ஆட்சியில் 4.6 மில்லியன் பேரை போட்டுதள்ளி 23 இடத்தில் உள்ளான் ஒளரங்கஜேப். இவனை மாவோ, ஸ்டாலின், ஜெங்கிஸ்கான் மிஞ்சி விட்டார்கள்.

  ஒளரங்கஜேப் மதம் மாறும் ஆணுக்கு 4 ரூபாயும் பெண்ணுக்கு 2 ரூபாயும் அளித்தானாம்.இது 1 மாத சம்பளமாம் அக்காலத்தில். போரில் தோற்றவனுக்கு ஒரே வாய்ப்பு மதமாற்றம் இல்லாவிடில் ஆள் காலி. ஆனால் இதெல்லாம் மதத்தை விட அவனது ஆட்சியினை தக்க வைக்கவே என தோன்றுகிறது. தனது மூத்த சகோதரனான தாராவை போட்டு தள்ள இளைவனான மூராத்துடன் கூட்டணி வைக்கையில் தனது நோக்கம் 'இசுலாம்தான், சுல்தான் ஆவது அல்ல' என பொய் சொல்லிவிட்டு கடைசியில் அவனையும் போட்டு தள்ளிவிட்டனாம். இதெல்லாம் முகலாயரே குறித்து வைத்துள்ளார்கள். காசி கோயில் கதை மாதிரி புருடா அல்ல!

  நம்மூரில் இந்துதுவா குருப்புகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என ஆளுக்குஆள் இஷ்டத்துக்கு வரலாற்றினை மாற்றி எழுதுவது போல பாக்கி'களும் செய்து வருவது தெரிந்ததே. இது குறித்து பாகிஸ்தான் எழுத்தாளர் எழுதிய சுவாரஸ்ய கட்டுரை இது

  மேலும் சூபி மதத்தை கடுமையாக எதிர்க்கும் இந்த வகாபிகள் தர்க்காவில் புதைக்கப்பட்ட சூபியான ஒளரங்கசீப்பை இவ்வாறு சிங்காரிப்பது ஏனோ புரியவில்லை!

  ReplyDelete
 19. // சார்வாகன் said ….23 July 2012 08:59
  உண்மை கூறிய காஃபிர் அறிவியலாளர்களில் எவர் மூமின் ஆனார் என்ற தகவல்களையும் சகோக்கள் அளிக்க வேண்டுகிறேன்.நன்றி /////

  என்று கேட்டிருந்ததற்கு

  சார்வாகனுக்கு இதோ பதில். தந்திருப்பது நதியில் சில துளிகளே. சிந்திப்பவர்களுக்கு இது போதுமானது.

  விஞ்ஞானிகள் ஏன் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்?
  முகம்மது நபி அவர்களைப்பற்றியும், தற்போதே கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் 1400 வருடத்துக்கு முன்னரே திருக்குரானில் வெளிப்பாடாகி இருப்பதையும் கண்டு வியக்கும் உலகளாவிய விஞ்ஞானிகள். சுட்டிகளை சொடுக்கி விடியோ காணவும்

  என‌ 22 சுட்டிக‌ள் அளிக்க‌ப்ப‌ட்டது.

  ஆனால் அதற்கு பதிலாக இப்பொழுது

  //சார்வாகன் said வாங்க சகோ உண்மைகள்,

  அப்பாடா நம் பதிவுக்கு மூமின் பிரச்சாரகர்கள் வந்தாலே மகிழ்ச்சி.உங்களிடம் ஒரு வேண்டுகோள்.குரானில் அறிவியல் இருக்கும் ஒரு வசனத்தை நமது செய்முறை விளக்கத்தின் படி விளக்க கூறினேன்.அப்படி செய்யாமல் (குரானில் சொல்லியபடி)வெட்டி ஒட்டுகிறீர்கள்.ஒரு குரான் வசனம் கொடுங்கள் sample பார்க்கலாம். //
  என்று சார்வாகன் பதில் இருக்கிறது.

  //ஒரு குரான் வசனம் கொடுங்கள் sample பார்க்கலாம்.//

  நான் த‌ந்துள்ள‌ சுட்டிக‌ளில் உள்ள‌ விடியோக்க‌ளை கண்டு செவிம‌டுத்தால் ஒன்றென்ன‌ எத்தனையோ குரானில் அறிவியல் இருக்கும் ப‌ல‌ வசனங்களை விஞ்ஞானிகளின் வாய் மூலமாக உமது வழியில் செவியாலும் பார்வையாலும் உணரலாம்.


  சார்வாகன் வழியில் // எனினும் குரானில் அறிவியல் என்பது ஒருவித மனநோய் என்பதே நம் கணிப்பு. //

  சார்வாகனைப்போன்று மனநோய் கண்டிருப்பவர்களே இவ்வாறு குரானை கணிப்பார்கள் என்பது யாவரும் அறிந்ததே.


  // சார்வாகன் said… July 23, 2012 8:42 PM
  ஹா ஹா ஹா
  சகோ உண்மைகள் நம்மை பற்றி தெரியாமல் இங்கு வந்து விட்டார் என்பது தெரிகிறது.மத அறிவியல் வந்த வரலாற்ரை அவ்ருக்கு அளிக்கிறேன்.நாம் அளித்த சுட்டிகள் சகோ உண்மையின் சுட்டிகளுக்கு பதில் அளித்து விட்டன.
  சுட்டிக்கும் சுட்டிக்கும் சரியாப் போச்சு,போயிந்தே,இட்ஸ் கான்!!!!!!!!!!!!! //


  சார்வாகன் இஸ்லாமிய‌ போபியா உட‌ன் ம‌ன‌ நோயும் கொண்ட‌லைவ‌து யாவ‌ரும் அறிந்ததொன்று.

  நான் த‌ந்துள்ள‌ 22 சுட்டிக‌ளால் மூக்குடைந்திருக்கும் சார்வாகன் இங்கு வழக்கம் போல் அந்த‌ர் அடிப்ப‌தை ந‌ன்றே காண‌முடிகிற‌து.

  இங்கு ம‌ட்டுமில்லாம‌ல் வேறு ப‌ல‌ த‌ள‌ங்க‌ளிலும் சார்வாக‌ன் செம‌த்தியாக‌ வாங்கி மூக்குடைந்து நிற்ப‌தையும் வாச‌க‌ர் பெரும‌க்க‌ள் அறிவார்க‌ள்.

  .

  ReplyDelete
 20. வாங்க சகோ உண்மைகள்,

  உங்களுக்கு அமைதி உண்டாவதாக.

  உங்கள் மார்க்க சகோக்கள் கொடுக்கும் அனைத்து வித அடிகளையும் வாங்கி காஃபிர்களாகிய எங்களுக்கு பயம் வந்து விட்டது.அனைத்து விவாதங்களிலும் நீக்களே வெற்றி பெற்று வருவது அனைவரும் அறிவோம்.இன்னும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

  குரான் விள்க்கம் சொல்வது நாமும் அறிவோம் ஒரு சேம்பிள்

  "(இஸ்லாமிய விமர்சன பதிவு இடும்)காஃபிர்களை கண்ட இடத்தில் (விவாதம் செய்து,வெட்டி ஒட்டி பின்னூட்டம் இட்டு,மைனஸ் ஓட்டு போட்டு) வெ(ர)ட்டுங்கள்(குரான் 9.5)

  என்னும் வழியில் குரானின் அறிவியல் விள்க்கம் அழகிய முறையில் செயல்படுவது புரிகிறது.

  எனினும் கேள்வி கேட்பதை மட்டும் நிறுத்த மாட்டோம்.

  சிவனின் பாட்டில் குற‌றம் கண்டுபிடித்த நக்கீரன் பரம்பரை நாம் .

  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

  1.நீங்கள் உண்மையிலேயே குரானில தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளதாக நம்புகிறீர்களா?

  சொல்லுங்கள் ஆம்/இல்லை.
  [இல்லை எனில் சரி மத பிரச்சாரத் தொழிலில் இது இயல்பு எனஎடுத்துக் கொள்ளலாம்.]

  2.ஆம் எனில்.குரானில் மொத்தம் 114 சூராக்களில் 6436 வசனங்கள் உள்ளன.இதில் எத்த‌னை வசனங்களில் அறிவியல் உண்டு?

  3. ஒரே வசனத்தில் பல அறிவியல் கருத்துகள் வருமா?இல்லை ஒரு வசன‌த்திற்கு ஒரு கருத்துதான் வருமா?

  4. குரானில் அறிவியலை கண்டு பிடித்தவர் முதன் முதலில் காஃபிர் மௌரிஸ் புகைல்தான் கண்டுபிடித்தவர். சரி/தவறு

  5.சில இஸ்லாமிய பிரச்சாரகர்கள் பரிணாம கொள்கையும் குரானில் கூறப்பட்டுள்லது என பிரச்சாரம் செய்வது சரியா?

  6. குரானில் மட்டும் அறிவியல் வருமா இல்லை ஹதிதுகளிலும் வருமா?

  7.இன்னும் எவ்வள்வு நாட்களுக்கு குரானில் அறிவியல் வரும்?

  8. வருங்கால் கண்டுபிடிப்பு ஏதேனும் கூற முடியுமா?

  (கேள்விகள் தொடரும்)

  டிஸ்கி
  உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.கொஞ்ச நாளைக்கு இப்படியே தொடர்வோம்.

  நன்றி சகோ

  ReplyDelete
 21. //மேலும் சூபி மதத்தை கடுமையாக எதிர்க்கும் இந்த வகாபிகள் தர்க்காவில் புதைக்கப்பட்ட சூபியான ஒளரங்கசீப்பை இவ்வாறு சிங்காரிப்பது ஏனோ புரியவில்லை!//

  ஓ ! இதுவேறையா .. அப்போ அவுரங்கசீப்பும் ஒரு காபிர் தானா !!! ஹை ரொம்ப சந்தோஷம் .... !!!

  ReplyDelete
 22. @ சார்வாகன் - உங்கள் பதிவுகளுக்கு கனடாவில் இருந்து தமிழ்மண ஒட்டு போடமுடியவில்லை .. உங்கள் பதிவு .ca வுக்கு வந்துவிடுகின்றது. இவற்றை சரி செய்ய முடியுமா என்றுப் பாருங்களேன் !!!!

  ReplyDelete
  Replies
  1. சகோ இக்பால் செல்வன்,
   அன்புக்கு நன்றி,ஓட்டு விடயத்தில் நம்க்கு நம்பிக்கை இல்லை.உங்களின் பின்னூட்டமும்,தொடர்ந்து பதிவுகள் இடுதலையே விரும்புகிறேன்.

   நன்றி

   Delete
 23. வேதத்திற்கு விளக்கம் சொன்னவராலேயே ஒரு புண்ணாக்கையும் கண்டுபுடிக்க முடிய வில்லை,இதில் வேறு அறிவியல் புதைந்து கிடக்கிறதாம்...விளக்கம் தந்தவரே வேதத்தை எழுத இரவில் விளக்கு இல்லாமல் தவித்திருப்பார்.ஆஹா..இவ்வாறு சிரமமாக இரவின் பொழுது உள்ளதே குத்து விளக்கில் சரிவர பார்க்க முடிவதில்லையே,இதற்கு மாற்றமாக ஒளியை உண்டாக்கும் நவீன முறையை கண்டுபிடிக்க வேதவரிகளை இறைவா எனக்குத் தந்தருள் என துவா கேட்டு மக்கள் பயன்படும் வகையில் எதாவது முயற்சி எடுத்திருந்தாலாவது பராட்டலாம். சாதாரண குத்து விளக்கைகூட கண்டுபிடித்துத் தர இயாலாத வேதவரிகளில் தான் அறிவியல் உள்ளதா? அல்லது அய்வேலைத் தொழுகையிலாவது அறிவியல் வசனத்திற்கு விளக்கம் கூறி இதை கண்டுபிடித்து மக்களுக்கு பயன் உண்டாக்க,தொழுகை நடத்தும் ஹஜரத்மார்களுக்கு அறிவைத்தந்திருந்தால் இந்நேரம் முமீன்கள் எத்தனையோ கண்டுபிடிப்புகளை உருவாக்கித் தந்திருப்பார்களே 1400 ஆண்டுகளாக ஏன் முடியவில்லை? இன்னும் குரானில் அறிவியல் இருக்கு ஆனா அறிவியல் புத்தகம் இல்லை,"வரும் ஆனா வராது" என்று குரானை சிரிப்பு குரானாக்கிவிடாதீர்கள். சிந்தித்துப்பார்க்கமாட்டீர்களா?
  இனியவன்....

  ReplyDelete
  Replies
  1. சகோ இனியவன்,

   குரானில் அறிவியல் என்ற பெயரில் காஃபிர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் செயலை அனுபவிக்க வேண்டும்.ஆதரிக்க வேண்டும்.

   நாம் கேள்வி கேட்க கேட்க அவர்கள் விளக்க விளக்க அனைவரும் கவலையை மறந்து கலகலப்பு ஆகிறோம்.கைகலப்பு அல்ல!

   ஆகவே குரான் அறிவியல் தொண்டினை காஃபிர்கள் விமர்சிக்க கூடாது.ஆனால் நம் சகோக்களிடம் சந்தேகம்(சகட்டு மேனிக்கு ) கேட்கலாம்.சகோ உண்மைகளை கோபப்படுத்தாதீர்கள்.

   அவர்தான் தெளிவாக சுட்டி கொடுக்கிறாரே!!!!!!இன்னும் அள்ளி அள்ளி கொடுப்பார்!

   இன்னும் குரான் அறிவியல் நிறைய சுட்டி(எனக்கு) வேணும் .அவர் கொடுப்பார்

   நீங்கள் கொடுப்பீர்களா?????????? இந்த காஃபிர்களே இப்படித்தான்.

   சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!!!!!

   நன்றி

   Delete
 24. இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் குரானில் 1400 வருடங்களுக்கு முன்பே அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது.

  இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப விருத்தியால் கண்டறியப்பட்ட எத்தனையோ விஞ்ஞான உண்மைகளை அல் குரானில் 1400 வருடங்களுக்கு முன்னரே அழுத்தமாக சொல்லியிருப்பது அந்த அற்புதங்களில் ஒன்று எனலாம்.


  இங்கே சொடுக்கி >>>>> குர்ஆனின் அற்புதங்கள் <<<<<< காணவும்.

  .
  .

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ உண்மைகள்,
   முதல் கேள்விக்கு குத்து மதிப்பாக பதில் சொல்லி இருக்கிறீர்கள்.சரி முதல் கேள்வியையே விவதிப்போம்.

   நான் கேட்டது குரானில் தற்போதைய அறிவியல் கருத்துகள் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ள்தா என்பதே?


   நீங்கள் கூறுவது

   //இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப விருத்தியால் கண்டறியப்பட்ட எத்தனையோ விஞ்ஞான உண்மைகளை அல் குரானில் 1400 வருடங்களுக்கு முன்னரே அழுத்தமாக சொல்லியிருப்பது அந்த அற்புதங்களில் ஒன்று எனலாம்.//

   உங்கள் பதிலில் இருந்து நம்க்கு எழும் கேள்விகள்

   1.இருபதாம் நூற்றாண்டு[பொ.ஆ 1900_2000] கண்டுபிடிப்பு மட்டும் குரானில் இருக்கிறதா?

   2. அதுக்கு முந்தையது இருக்காதா?.1900 _ 2000 எனில் 1400 வருடத்திற்கு முன் பொ ஆ 500 _ 600 .அபோது முகமது(சல்) அவ்ர்களும் காஃபிரே.அப்புறம் எப்புடி?????????

   3.சரி இப்போது வருடம் 2012 எனிம் 1400 வருடம் முன்பு பொ ஆ.612
   அபோது குரான் எவவ்வள்வு சதவீதம் இறங்கியது? குரான்(டார்வினின் கொள்கையாக்கம் போல்) படிப்படியாக 23 வருடங்களாக[610_622] இறங்கியது அனைவரும் அறிவோம்

   4. மிக தெளிவாக என்பதும் அழுத்தமாக என்பதும் ஒன்றா?யார் எவ்வளவு அழுத்தினால் அறிவியல் வரும்?

   5. குரானில் அறிவியல் வருவது ,பிள்ளையார் பால் குடிப்பது,சிலையில் இரத்தம் வடிகிறது என்பது போல்தானே?

   முதலில் 22 சுட்டி கொடுத்துவிட்டு இபோது வாஞ்சூர் அய்யாவின் தளத்தில் இருந்து ஒரே சுட்டி கொடுத்தால் எப்படி?அவரும் நிறைய சுட்டிகளை பின்னூட்டத்தில் வாரி வழங்குவார. ஒருவேளை??????? இருக்காது....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

   இன்னும் நிறைய குரான் அறிவியல் சுட்டிகள் வேண்டும்!!!!!!!!!!!!!!!!!

   இது விளம்பரம்

   என் மகிழ்ச்சிக்கு காரணம் குரான் அறிவியல்.அப்படியே படிப்பேன்!!!!டொட்டட‌ய்ங்

   நன்றி

   Delete
 25. நல்ல கேள்விகள் கேட்டுள்ளீர்கள் சகோ.சார்வாகன். மேலும் சகோ. கொடுத்த அறிவியல் அற்புதங்களில் ஹாரூன் யஹ்யாவின் விளக்கம் இருக்கிறது,அறிவியல் அறிஞர்களின் விளக்கம் இருக்கிறது, மற்றும் சுற்றுமுள்ள அறிவியல் விளக்கங்கள் எல்லாம் இருக்கிறது,ஆனால் நம்ம முகம்மது அதாவது விளக்கம் தருவதற்கென்றே வந்த முகம்மது தந்த அறிவியல் விளக்கம் மட்டும் காணவில்லையே தலைவா???

  இனியவன்....

  ReplyDelete
 26. வாங்க சகோ இனியவன்,

  காஃபிர்கள் அதிகம் சிந்திக்கிறோம் என்பது உங்கள் பதிலில் இருந்து புரிகிறது.ஆனால் பாவம் மத பிரச்சாரத்தில் பலரும் பெருமித போதையில் தலைகால் புரியாமல் அலைகிறார்.இவர்கள் மாதிரி ஆட்களை உருவாக்குவதே இந்த மத புத்தக அறிவியல் பிரச்சாரத்தின் நோக்கம்.

  ஆனால் (ஆங்கிலம் நீங்கலாக)தமிழில் வஹாபிகள் பிரசாரம் விமர்சிக்கப்பட்டது போல் வேறு மொழிகளில் இல்லை என நினைக்கிறேன்.தமிழ் பதிவுலகில் மத அறிவியல் விம்ர்சித்தே பல்ர் பதிவர்கள் ஆனோம்.அடியேனும் அதில் ஒன்று.
  இதில் என்ன பக்க விளைவு எனில் மத அறிவியலை விமர்சிக்க மீண்டும் அறிவியலை தெளிவாக படிக்க ஆரம்பித்து விட்டோம்!!

  மத(ட) அறிவியல் ரொம்ப பிடிக்கும்,அப்படியே ப(க)டிச்சுடுவேன்!!!!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  பாருங்கள் சகோ உண்மைகள் (எதையோ அழுத்தி) அறிவியல் காட்டுறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

  அவர் வருவாரா?????????

  நன்றி

  ReplyDelete