Friday, July 20, 2012

விலையே உன் விலை என்ன?


வணக்கம் ண்பர்களே,

இப்பதிவில் விலை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம்.விலை என்றால் என்ன என தெரியாதா? அப்படியென்றால் நிங்கள் காட்டில் வசிப்பவராகத்தான் இருக்க வேண்டும் என எண்னுகிறீர்களா நன்றி.

வாழ்வில் மிக இயல்பாக பயன்படுத்தும் பல விடயங்களின் அடிப்படைகள் நாம் அறியாதவை. மனிதர்கள் முதலில் காடுகளில் வாழ்ந்தனர். அப்போது சிறு குழுக்களாக வாழ்ந்தனர்.வேட்டைக்கு சென்று விலங்குகளை  கொன்று அதனை உண்டனர். விலங்கின் தோல்களே ஆடை ஆயிற்று.

அப்போது எதற்கும் விலை கிடையாது.வேட்டைக்கு செல்பவர்களில் பலர் அவ்வப்போது உயிர் இழப்பதுதான் உணவின் ஒரே விலை.

அதன் பிறகு மனிதன் விவசாயம் அறிந்ததால் ஒரே இடத்தில் வாழ முற்பட்ட போது தனக்கு தேவைப்பட்ட அனைத்தையும் தனது குழுவால் மட்டும் உற்பத்தி செய்ய இயலாது என்பதை அறிந்தான்.பிறகு பண்ட மாற்று முறை வந்தது.

இதிலும் ஒரு மாட்டுக்கு எவ்வளவு தானியம் சமம் என்னும் சிக்கல்கள் வந்தது.பணம் என்பது ஒவ்வொன்றின் மதிப்பை குறிக்கும் அளவாக ஏற்றுக் கொள்லப் பட்டது.


சரி பதிவின் மையக் கருத்தான விலை என்பதற்கு செல்வோம்

விலை என்பதின் வரையறுப்பு என்ன?

ஒரு குறிப்பிட்ட அளவு பொருள் அல்லது சேவையின் மதிப்பு.


சரி விலை என்றால் மதிப்பு இது எப்படி நிர்ணயிக்கப் படுகிறது.உலகின் பொருளாதாரமே இக்கேள்விக்குள் அடங்கி விடுகிறது.இது சுலபமான கேள்வி அல்ல.

ஒரு அளவுக்கு கூறினோம் எனில் இம்மதிப்பு தேவையை பொறுத்து நிர்ணயம் செய்யப் படுகிறது.

ஒரு பொருளை உற்பத்தி செய்ய உங்களுக்கு 10 ரூபாய் ஆகிறது என வைத்துக் கொள்வோம். இத்ர செலவுகள் இலாபத்தோடு சேர்த்து 15ரூ என விலை நிர்ணயம் செய்வது சரியான எளிமையான முறையாக தோன்றினாலும் இப்படி நடைமுறையில் முடியாது.

அப்பொருளுக்கு என்ன விலை தர நுகர்வோர் தயாராக இருக்கிறாரோ அதுவே விலையாகும். சில சமயம் இலாபமாகவும் பல் முறை நட்டமாகவும் விவசாயிகளுக்கு வருவது இதனால்தான்.

சரி உற்பத்தி செய்பவர்களுக்கு நட்டம் வரும் போது வியாபாரிகளுக்கு எப்படி இலாபம் வரும். வியாபரிகள் பல பொருள்களை விற்பதால்  ஒரு பொருளின் விலை நட்டம் பிற பொருள்களில் இலாபமாக இருக்கும் படி பார்த்துக் கொள்வர.

சரி தேவை எப்படி ஏறும்,இறங்கும் எனில் இது பல சமூக,அரசியல்  காரணிகளைக் கொண்டது.ஒரு தேவையற்ற  பொருளை செயற்கையாக இன்றியமையாதது போல் விளம்பரம் செய்து இலாபம் ஈட்டவும் இயலும். இன்றியமையா உணவுப் பொருளை அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி செயற்கைத் தேவை ஏற்படுத்தி விலை ஏற்றவும் முடியும்.

இதில் பல விடயம் உண்டு எனினும் விலை என்பது ஒரு மதிப்பு ,இது தேவையால் நிர்ணயம் செய்யப் படுகிறது.ஒரே பொருள் உற்பத்தி ,வியாபாரம் செய்பவ்ர்களுக்கு எப்போதும் இலாபம் வரும் என்பது நிச்சயமில்லை.

இப்படி செய்தால் இலாபம் வரும் என்பது சுதந்திர சந்தை பொருளாதாரத்தில்[free market]  உறுதியாக கூற இயலாது.

அப்படியானால் சந்தைப் பொருளாதாரம் உற்பத்தியாளருக்கு சாதகமானது இல்லை எனில் நுகர்வோருக்கும் சாதகமாகவும் எப்போதும் இருக்காது.

ஆகவே மாற்று பொருளாதார முறைகள் உருவாக வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோமா ?

ஹா ஹா ஹா

நாளை நடப்பதை யாரறிவார்?

"சூழலுக்கு ஏற்ற மாற்றம் உருவானால் மட்டுமே தப்புவோம் என்பது அறிவியல்"

காணொளி பாருங்கள்
5 comments:

 1. அறிவியல்தான் வல்லுநர் என்று நினைத்தால் பொருளாதாரத்திலும் தூள் கிளப்புகிறீர்கள் நண்பரே!!

  ReplyDelete
 2. தமிழ் மணம் வாக்குப் பட்டை எங்க காணோம் சார்!

  ReplyDelete
  Replies
  1. சகோ முரளி ,
   அனைவருமே மேலாண்மையியல்(மேனேஜ்மென்ட்) பற்ரி ஒரு பாடமாவது கல்லூரியில் படித்து இருப்போம்.அதில் உள்ளதுதான் இது, கொஞ்சம் காணொளியோடு தமிழில் எழுதினேன்.

   பார்க்க்கும்,படிக்கும் விடயங்களை எளிய தமிழில் பகிர்கிறோம் அவ்வளவுதான்.
   Thanks

   Delete
 3. பொருளாதார நிபுணர் சார்வாகனுக்கு என் ஓட்டு எப்பொழுதும் உண்டு.நல்ல பதிவு நண்பரே பேசாம அரசியலில் நுழைந்து பிரதமராகிவிடுங்களேன் நாடு உருப்பட ஒரு நல்ல ஆலோசகர் பஞ்சமாம்.

  ReplyDelete
 4. சகோ இனியவன்,

  ஏன் இந்த கொலைவெறி?.நாம் ஏதோ கொஞ்சம் படிக்கும் விடயங்களில் புரிவதை நேரம் கிடைப்பின் எளிய தமிழில் எழுதுகிறோம்.அவ்வளவுதான்.

  பிரதமரா ஹா ஹா ராகுல்காந்தியை தயாரக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.அதுவரை தற்காலிகமாக மன்மோகனே நீடிப்பார்.காங்கிரசின் இளைய சகோ பாஜக ,காங்கிரசை விட மோசமான் நிலையில் உள்ளதால் அடுத்த தேர்தலில் ராகுல் பிரதமர் ஆவாரா என பார்க்க வேண்டும்.

  ஜன நாயகத்தில் ஒரு பரம்பரை அரசாட்சி

  நன்றி

  ReplyDelete