Friday, July 27, 2012

பரிணாமம்,அறிவார்ந்த வடிவமைப்பு முறையாக இலவச கல்வி படிக்கலாம் வாங்க!!!!!!!!


வணக்கம் நண்பர்களே,

உயிரின‌ தோற்றம்,பரவல் பற்றிய இப்போதைய அறிவியல் கொள்கை பரிணாமக் கொள்கை என்பதும் அனைவரும் அறிவோம்.அது பற்றிய தகவல்களை நம் தளத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறோம்.

பரிணாமத்திற்கு மாற்றாக அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்னும் கொள்கையாக்கத்தையும் பரிணாம கொள்கை மறுப்பாளர்கள் முன் வைக்கிறார்கள்.இது குறித்தும் அவ்வப்போது   பதிவுகள் இடுகிறோம்.

இப்போது  பரிணாம கல்வி ,பரிணாம் விமர்சன அறிவார்ந்த வடிவமைப்பு கல்வி இரண்டுமே இலவசமாக கற்கும் கற்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


பரிணாம கொள்கை கற்பிப்பவர் பேரா முகம்மது நூர் டியூக் பல்கலைகழகம்,USA. பரிணாம்,Genetics அடிப்படையில் கற்பிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.காணொளியில் பேரா நோர் விள்க்குகிறார்.பாருங்கள்.


http://www.biology.duke.edu/noorlab/noor.htmlCourse Syllabus
 • Evidence for evolution
 • Introduction to basic genetics
 • Recombination and genetic mapping simple traits
 • Complications to genetic mapping
 • Genes vs. environment
 • Basic population genetics and Hardy-Weinberg
 • Gene flow, differentiation, inbreeding
 • Natural selection and genetic drift
 • Molecular evolution
 • Evolutionary applications and misapplications
 • Adaptive behaviors and species formation
எந்த தகுதியும் தேவையில்லை,இது இலவச,இணைய வழிக் கல்வி.இது இல்லாமல் இன்னும் பல பாடங்கள் கற்பிக்கப்படுகிறன.அவ்ற்றிலும் ஆர்வம் உள்ளோர் இணையலாம்.


இங்கே பதிவு செய்யுங்கள்,வாழ்த்துக்கள்.
****************

சரி அறிவார்ந்த வடிவமைப்பு பற்றியும் இலவச ,இணையக் கல்வி உண்டு அதையும் கற்க விரும்புவோர் கற்கலாம்.நாம் பரிணாம‌ம் விமர்சனம் தவறென்று சொல்லவில்லை.தவறாக பரிணாமத்தை விம்ர்சிகாதீர்கள் என்வே கூறுகிறோம்.அறிவியல்ரீதியான ஒவ்வொரு விமர்சன‌த்திற்கும் பரிணாம ஆய்வாளர்கள்(ஹி ஹி ஆதரவாளர்கள் அல்ல) பதில் அளித்தே ஆகவேண்டும்.சரியான புரிதல் இல்லா பரிணாம ஆதரவாளனை விட‌ பரிணாம மறுப்பாளனே மேல் என்பது நம் அனுபவரீதியான உணர்தல்.இது டார்வினியம் மற்றும் அறிவார்ந்த வடிவமைப்பு என்னும் பெயரில் நடத்தப்படுகிறது.ஏன் பரிணாமம் என்று சொல்லாமல் டார்வினியம் என்று சொல்கிறார்கள் என பல முறை விவாதித்து இருக்கிறோம்.அறிவார்ந்த வடிவமைப்பு என்பது படைப்புக் கொள்கையில் இருந்து வழிநடத்தப் பட்ட பரிணாமம் வரை ஏற்கும் விதத்தில் உள்ளதால் டார்வினின் இயற்கைத் தேர்வை விட இக்கொள்கையாக்கம் அதிக பொருந்தும் விள்க்கம் அளிப்பதாக இக்கொள்கையாளர்கள் கூறுகின்றனர்.


இங்கே பதிவு செய்யுங்கள்.

Course outline


இது ஒரு கிறித்தவ அமைப்பு நடத்தும் ட்ரினிட்டி பல்கலை கழக்த்தினால் நடத்தப்படுகிறது.பேரா டாம் வுட்வர்ட் இந்த பரிணாம் &அ.வ விவாதங்களில்,அதிகம் பங்கெடுத்தவர்.அவரின் காணொளி ஒண்று.
ஆகவே ஆர்வம் உள்ளோர் இணைய வேண்டுகிறேன்.இந்த கல்விக்கு விண்ணப்பத்தில் உங்களின் கிறித்தவ  ஆலயத்தின் பெயர்,முகவரி,கிறித்த‌வ மத குருவின் பெயர் என்று கேட்பது எதற்கு என்று தெரியவில்லை.கிறித்தவர்களுக்கு முன் உரிமை கொடுக்கப்படுவது போல் தெரிவதால் இதனை தவிர்த்து  நாம் பரிணாம கல்வியில்  மட்டும் இணைந்து விட்டோம்.

கல்வியிலும் மதம் பார்ப்பது கண்டனத்துக்கு உரியது.நாம் ஏன் பரிணாம‌ எதிர்பாளர்கள் (பெரும்பானமையோர் ) மதவாதிகள் என கூறுகிறோம் என்பது இப்போது அனைவருக்கும் புரியும்.

எனினும் கிறித்தவர் அல்லாத கற்கும் ஆவல் உள்ளவர்களுக்கும் கற்பிப்பார்கள் எனவே தோன்றுகிறது.ஆகவே  மின்னஞ்சல் மூலம் விளக்கம் பெற்று இணையலாம்.


தமிழர்கள் இரண்டையும் படித்தால் தமிழ்பதிவுலகில் பரிணாம் vs அறிவார்ந்த வடிவமைப்பு புதிய பரிமாணம் எடுக்கும் .இக்கல்வி தமிழ் மொழியில் கூட வழங்கும் சூழல் வரலாம்..

சபாஷ் சரியான போட்டி(போராட்டம்!!!) ஹா ஹா ஹா

நன்றி


18 comments:

 1. தகவல்களுக்கு மிக்க நன்றிகள் ! உயிரியலில் பரிணாமம் ஒரு பாடமாக நாங்கள் படித்தாலும் முழுப் பரிணாமத்தையும் கற்க எனக்கு ஆசை இருந்தது .. அதிலும் அறிவார்ந்த வடிவமைப்பைக் கற்கவும் ஆசை இருந்தது . இரண்டும் இலவசமாக .. வெரி வெரி தாங்கஸ் ப்ரோ...

  கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா .... !!!

  ReplyDelete
 2. இயல்பாகவே கிருத்தவ கல்லூரிகளில் கிருத்தவர்களுக்கு முன் உரிமை உண்டு !!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ
   இதே போல் தமிழிலும் பிறகு முயற்சிப்போம்.நாம் சிலர் இணைந்தே முன்னெடுக்க முடியும். யோசிப்போம்.

   பரிணாம எதிப்பிலும் வித்தியாசம் காட்டும் மதவாதிகளின் செயல்கள் நகைப்புக்குறியது.
   நன்றி

   Delete
 3. புதியனவற்றை முன்னெடுத்து வழங்கும் அமெரிக்காவில் தற்போது இலவசக்கல்வியை இணையத்தில் வழங்க பலர் முனைப்புடன் செயல்படுவது நல்ல செய்தி. பில்கேட்ஸின் கேட்ஸ் பவுண்டேசன் உதவியுடன் ஹார்வேடு& MIT அளிப்பது EdX.

  www.nytimes.com/2012/05/03/education/harvard-and-mit-team-up-to-offer-free-online-courses.html/?_r=1

  மேலும் இது குறித்து வந்த செய்தி குறிப்புகள்

  http://www.nytimes.com/2012/07/18/education/top-universities-test-the-online-appeal-of-free.html

  கணனி மொழியியல்
  http://www.nytimes.com/2012/03/28/technology/for-an-edge-on-the-internet-computer-code-gains-a-following.html?pagewanted=all

  ReplyDelete
 4. எட்டாம் நூற்றாண்டின் முகம்மதுவுக்கு மாறாக 21-ம் நூற்றாண்டின் முகம்மது அறிவியலாளரிடையே பரிணாமத்தின் இருப்பு பற்றி விவாதமே கிடையாது என சொல்வதை முமின்கள் கவனிப்பார்களா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ
   தகவல்களுக்கு நன்றி
   கண்ணை மூடிக்கொள்பவர்கள்க்கு எதுவும் தெரியாது புரியாது.
   T

   Delete
 5. வணக்கம் சகோ. பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி. இனிமே நா படிச்சி பாசாயி.. இதெல்லாம் நடக்கிற காரியமா? குருவா நீங்களே எங்களுக்கு இருக்கும் போது இனியொரு கல்வி எமக்குத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் முயற்சி செய்கிறேன் நல்லா இருங்க சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ இனியவன்,

   தமிழன் என்று நிரூபிக்கிறீர்களே.எல்லாம் அவன் பார்த்துக் கொள்வன் என்றே நாம் பல் விடயங்களை இழந்து விட்டோம்.

   என்னதான் சொல்கிறரகள் என்றாவது பாருங்களேன்,இக்கல்வியை தமிழ் ப‌டுத்தும் ஆவல் உண்டு.பலர் இணைந்தால் மட்டுமே சாத்தியம்.ஆகவே இணைவது நல்லது.

   நன்றி

   Delete
 6. வணக்கம் நண்பரே,
  Murphy's blog law யின் படி நமக்கு நேரமில்லாத போது மற்றவர்கள் பதிவு போடுவார்கள், நாம் பதிவு போடும்போது மற்றவர்களுக்கு நேரமிருக்காது.
  அறிவு பெறுவது என்பது முற்றிலும் விலையில்லாமல் இருப்பது நல்லதே. அதற்கு இணையம் பெரும் உதவியாக உள்ளது.
  பரிணாமம் பாடதிட்டத்தில் சேர்ந்து விட வேண்டியதுதான். செய்திக்கு நன்றி.

  ReplyDelete
 7. வணக்கம் சகோ,
  என்ன செய்வது.நேரம் கிட்டுவது கடினமே.வாழ்க்கை போராட்டத்தில் இதெல்லாம் இயல்பே .தமிழர்கள் பலரிக்கல்வியில் இணைவது நல்லது.அக்கல்வி குறித்து தமிழ் படுத்த ஆவண செய்ய உங்களின் உதவியும் தேவைப்படும்.
  நன்றி

  ReplyDelete
 8. இணைந்து விட்டேன் நண்பா ஆலோசனைக்கு நன்றி.

  இனியவன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ இனியவன்,

   வாழ்த்துக்கள்,அக்கல்வி பற்றி நம் பதிவுகளிலும் விவாதிப்போம்.ஒருவேளை தேர்வு ,அசைன்ன்மென்ட் கொடுப்பார்கள் எனில் எல்லாம் கலந்துரையாடி (கொஞ்சம் மாற்ற‌ங்களுடன்)எழுதி விடுவோம். தமிழன்டா,நண்பேன்டா ஹி ஹி

   நன்றி

   Delete
 9. வணக்கம் சகோ. அருமையான பயனுள்ள பதிவினை இரு சாராருகும் அளித்து பெருமை தேடிக் கொண்டீர்கள். பொதுவாக மூமின்கள் தங்களுக்கு சாதகமான பதிவை மட்டுமே பதிவிட்டு அதையே பின்பற்றும்படி அறிவுறுத்துவார்கள்,ஆனால் இரண்டும் கற்பதுதான் சிறந்த முறை என்பதை நியாயமான முறையில் எடுத்துச் சொல்லி புரியவைத்தலுக்கு மிக்க நன்றி.நானும் கல்வி கற்க இணைந்துவிட்டேன்.

  ReplyDelete
 10. வணக்கம் சகோ யாசிர்,

  கல்வி கற்கும் ஆவலுக்கு பாராட்டுகள்,வாழ்த்துகள்

  அறிவியலை விமர்சிக்க அதனை கற்க வேண்டும்,மாற்று கருத்துகளையும் அதே சிந்தனையில் சீர் தூக்கி பார்க்க வேண்டும்.

  ஒரு கருத்தில் சிறிது குழப்பம் எனில் இன்னொரு கருத்து சரிபார்க்கப் படாமலேயே ஏற்றுக் கொள்ளப் படாது.

  டார்வினியம் தாண்டி பரிணாம‌ம் எவ்வள்வோ வளர்ந்து விட்டாலும் ,பரிணாம் எதிர்பாளர்கள் டார்வின் சொன்னது மாறிவிட்டது ஆகவே படைப்புக் கொளகை சரி என்பது சிரிக்க மட்டுமே முடியும்.

  பாருங்கள்

  டார்வின் சொன்னது மட்டுமே பரிணாமம் அல்ல!

  மார்க்ஸ் சொன்னது மட்டுமே பொது உடமை அல்ல!

  வஹாபிகள் சொல்வது மட்டுமே இஸ்லாம் அல்ல!

  அதையும் தாண்டி .........................

  இது எப்புடீ!!!!!!!!

  அடிக்கடி வாங்க!

  நன்றி சகோ

  ReplyDelete
 11. //டார்வின் சொன்னது மட்டுமே பரிணாமம் அல்ல!

  மார்க்ஸ் சொன்னது மட்டுமே பொது உடமை அல்ல!

  வஹாபிகள் சொல்வது மட்டுமே இஸ்லாம் அல்ல!

  அதையும் தாண்டி .........................

  இது எப்புடீ!!!!!!!!//

  செம செம ....

  ReplyDelete
 12. நல்ல தகவல். நாமும் சேருகிறோம்.

  ReplyDelete
 13. \\இதே போல் தமிழிலும் பிறகு முயற்சிப்போம்.நாம் சிலர் இணைந்தே முன்னெடுக்க முடியும். யோசிப்போம்.//

  இதை நான் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். என்னைப்போல் ஆங்கிலம் என்றாலே காத தூரம் ஓடும் ஆசாமிகளுக்கு இதுபோன்ற முயற்சிகள் தான் உங்களின் நீரோட்டத்தில் என்னையும் சேர்க்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ செங்கொடி,

   நாமும் பரிணாமம் கற்கும் மாணவர்தான்,எனினும் கற்பதை நம் சகோதரர்களுடன் பகிர்வதை விரும்புகிறோம்.பரிணாம கல்வி முறையாக மூலகூறு அறிவியல் அடிப்படையில் அறிதல் பல தவறான புரிதல்களை நீக்கும். பரிணாமம் அறிவது பகுத்தறிவை வளர்க்கும்.மூட நம்பிக்கை ஒழிக்கும்.

   இக்கல்வி அக்டோபர் 10ல் தொடங்குவதாக தகவல் நன்றி!!!

   Delete