Saturday, December 29, 2012

அண்டவெளி ஊடுருறுவல் துளை [worm hole] என்றால் என்ன?






வணக்கம் நண்பர்களே,
சகோ ஜெனில் வார்ம் ஹோல்[worm hole] பற்றி ஒரு பதிவு எழுத முடியுமா என ஒருமுறை பின்னூட்டத்தில் கேட்டு இருந்தார். சரி உருப்படியாக எழுதுவோம் என கொஞ்சம் விவரங்கள் தேடி பதிவிடுகிறேன்.

முதலில் இதற்கு சரியான தமிழ்பதம் என்ன என யோசித்து அண்டவெளி ஊடுறுவும் துளை எனப் பெயரிட்டேன். விக்கிடியாவில் உள்ள பெயர் நம்க்குப் பிடிக்கவில்லை. சரி பின்னூட்டங்களில் இதனை விவாதிப்போம்.

வார்ம் ஹோல் என்றால் என்ன? விக்கிபிடியாவில் இருந்து வரையறை செய்வோம்.
In physics, an Einstein-Rosen Bridge (or wormhole) is a hypothetical topological feature of spacetime that would be, fundamentally, a "shortcut" through spacetime.

இது ஐன்ஸ்டின்[Albert Einstein ] ,ரோசன்[Nathan Rosen ]  ஆகியோரின் வெளிநேரம்[spaceime] பற்றிய‌ 1935 ஆம் வருட‌ கருதுகோள் ஆகும். வெளிநேரம் ஊடே செல்லும் குறுக்கு வழி ஆகும். இதன் மூலம் ஒளியை விட வேகமாக பயணிக்க இயலும். இது கருதுகோள் மட்டுமே என்பதால் பரிசோதிக்கக் கூடிய சான்றுகள் இதுவரை இல்லை.

ஒரு எளிய எ.கா எனில் பூமியின் மேற்பரப்பு வளைந்து இருப்பதால் ,இரு தொலை தூர ஊர்களுக்கு சுரங்கம்  வெட்டி,அதன் மூலம் நேர் கோட்டில் பயணம் செய்தால் சீக்கிரம் சென்று விட முடியும் அல்லவா அது போல்தான். ஒளியும் [ஈர்ப்பு விசையால்]வளைந்து பயணம் செல்லும் என்பதும் நாம் அறிந்ததே.


Wormhole illustration

A beam of light traversing a path between two points in curved space-time can take longer to complete the journey than a hypothetical spaceship taking advantage of a wormhole’s shortcut connection between the two distinct regions of space-time.

கொஞ்சம் கற்பனைக் குதிரையை தட்டி எழுப்புங்கள். அதாவது இந்த பிரபஞ்சமே ஒரு ஏதோ ஒரு வடிவத்தில் பல பரிமாணங்களில் உள்ளது. அதில் எல்லைப் புள்ளிகள் ஒன்றுக் கொன்று இடையே ,இந்த வார்ம் ஹோல்களால் இணைக்கப் பட்டு உள்ளன. ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு ஒளியைவிட வேகமாக பயணிக்க முடியும்!!.

அது எப்படி? நிரூபிக்க முடியுமா? என கேட்காதீர்கள்!!. நான் சொன்ன‌ விவரங்கள் இப்போதைய அறிவியலின் கருதுகோள்கள்.

கருதுகோள் அடிப்படை சான்றுகள் இல்லாமல் வைக்க முடியுமா? வார்ம் ஹோல் இருக்கா இல்லையா,அதை சொல் நண்பா என்கிறீர்களா!!!.

அதாகப் பட்டது ஆல்பட்ர் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கொள்கையானது ஈர்ப்பு விசை,காலம்,நேரம் போன்றவற்றை தொடர்பு படுத்தி சில வகைக் கெழு சமன்பாடுகள்[differential equations] ஆக்கியது.


அச்சமன்பாடுகளின் தீர்வுகள் பல. அதில் ஒன்றே பெருவிரிவாக்க கொள்கை,பிரபஞ்சம் விரிவடையும் போதும் அதன் எல்லைப் புள்ளிகளுக்குள் பயணிக்கும் குறுக்கு வழி இருக்கும் என்பதும் இந்த தீர்வின் நீட்சியே!!.


அப்போ வார்ம் ஹோல்  என்பது ஐன்ஸ்டினின் பொது சார்பியல் சமன்பாடுகளின் ஒரு தீர்வு அல்லது விளக்கம் அப்படினு மட்டுமே சொல்கிறேன் சகோ!!
See this!!



இந்த பொது சார்பியல் சமன்பாடுகளைக் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்!! ஹி ஹி


இந்த சமன்பாடுகள் தவறென்று ஒதுக்கப் படாதவரை வார்ம் ஹோல்ஸ் உண்டு என அறிவியல் தேடுகிறது.அவ்வளவுதான்!!

கருந்துளை,வார்ம் ஹோல் இரண்டுமே ஐன்ஸ்டினின் சமன்பாடுகளின் நீட்சி விளக்கமே. கருந்துளை என்பது இப்போது உண்டு என சான்றளிக்கிறார்கள். 

கருந்துளை பற்றிய நமது முந்தைய பதிவு.

http://aatralarasau.blogspot.com/2011/10/black-hole-18.html

ஆகவே வார்ம் ஹோல் என்பதும் உண்மை ஆகுமா? என்பதை காலம் பதில் சொல்லும்.

நன்றி!!

Monday, December 24, 2012

குழு கணிதம்: பரிணாமத்தின் அடிப்படை பகுதி.1




வணக்கம் நண்பர்களே,

நாம் பரிணாம சிந்தனையாளர் என்ற வகையில் அது குறித்து கற்கும் விடயங்களை தமிழ் பதிவுலகில் பகிர்ந்து வருகிறோம். பரிணாமம் என்பது 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு செல் உயிரில் இருந்து ... 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பரிணமித்த மனிதன்(ஹோமோ சேஃபியன்) வரை கோடிக் கணக்கான உயிரிகளின் வரலாறு.

பரிணாமத்திற்கு அறிவியல் உலகில் ஒருமித்த ஏற்புக் கருத்து இருந்தாலும், பொதுமக்களிடையே இதன் ஏற்புத்தன்மை அவர்களின் மதம்சார் நம்பிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. அறிவியல் என்பது சான்றுகளின் மீதான விளக்கம் என்பதைப் புரிந்தால் பரிணாமத்தையும் ஏற்பதில் சிக்கல் இல்லை.

அறிவியல் ஒவ்வொரு நிகழ்வையும் ,அதன் காரணிகளாக பகுத்து , அவற்றின் இடையே தொடர்புகளை வரையறுத்து விளக்க முனைகிறது. தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் இந்த விதிகள்,விளக்கம் மாறலாம்.அறிவியலின் அடிப்படை சான்றுகள் சான்றுகள் சான்றுகள் மட்டுமே!!.

இப்போது நாமாகவே ஏதோ ஒன்றை கற்பனை செய்து கொண்டு அதற்கு சான்றுகள் தேடுவது மிகக் கடினம்.கிரக நிலைகளுக்கு ஏற்ப மனிதனின் வாழ்க்கை சூழல் மாறுகிறது என்பதே சோதிடத்தின் அடிப்படை. இதற்கு சான்றுகள் உன்டா என நிரூபிப்பது மிக கடினம். சிலர் '' சோதிடர் '' முறைப்படி சொன்னது எனக்கு பலித்தது என்பார். சிலர் பலிக்கவில்லை என்பார்தர்க்க ரீதியாக[Logical reasoning] சில விவாதங்கள் செல்லும் என்றாலும் அது முடிவுக்கு வராது.ஆகவே நாம் எப்போதும் சான்றுகள் அடிப்படையிலான விவாதங்களையே விரும்புகிறோம்.

இப்போது நிரூபிப்பதின் சிக்கல் புரியும். எனினும் இந்த .கா கூறியது இதில் இருந்து குழு கணிதம் என்பதை ஆரம்பிக்கவே.

ஒரு குழு [எண்கள்,உயிரிகள்,பொருள்கள்] போன்றவற்றின் மீது ஒரு செயல் சூழல் சார்ந்து என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதே குழு கணிதம். பரிணாமம்,மேலாண்மையியல் உள்ளிட்டு பல பயன்பாடுகள் உள்ள துறை இது.

ஒரு பொருளை புதிதாக தயாரித்து வெளியிட்டால், அது எப்படி ஏற்கப்படும் என சில கருத்துக் கணிப்பு செய்து அதன் அடிப்படையில் அப்பொருளைத் தயாரித்து வெளியிடுவது நாம் அறிந்ததே.இப்படி பல விடயங்கள் நமது வாழ்வின் பயன்பாட்டில் இருந்தாலும் நாம் அதனை உணர்வது இல்லை.

பரிணாம எதிர்ப்பு மதவாதிகள் கணிதரீதியாக அதிகம் விமர்சிப்பது இல்லை.கிரியேசன் ரிசர்ச் இதற்கும் சில ஆய்வகம் வைத்து ,சில ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுகின்றனர். இதில் வில்லியம் டெம்ஸ்கி பல கட்டுரைகள் எழுதி இருந்தாலும சான்றுகளின் அடிப்படையில் நிராகரிக்கப் பட்டன.
**
குழு கணிதம் பரிணாமத்தில் குழு மரபியல் (கணிதம்)[Population genetics] எனப்படுகிறது.

Population genetics is the study of allele frequency distribution and change under the influence of the four main evolutionary processes: natural selection, genetic drift, mutation and gene flow. It also takes into account the factors of recombination, population subdivision and population structure. It attempts to explain such phenomena as adaptation and speciation.
Population genetics was a vital ingredient in the emergence of the modern evolutionary synthesis. Its primary founders were Sewall Wright, J. B. S. Haldane and R. A. Fisher, who also laid the foundations for the related discipline of quantitative genetics.
Traditionally a highly mathematical discipline, modern population genetics encompasses theoretical, lab and field work.
குழு மரபியல் கணிதம் என்பதை , ஒரு ஜீனின் மாற்ற வீதம்[allele frequency] பரிணாம காரணிகளான் இயற்கைத் தேர்வு[natural selection], சீரற்ற மரபு விலகல்[Random genetic drift],ஜீனோம் மாற்றம்[mutation],மற்றும் ஜீன் ஓட்டம்[gene flow] ஆகியவற்றால் எப்படி மாறுகிறது என்பதாகும்.இது ஒரு உயிரி,சூழலுக்கு ஏற்ப தகவமைத்தலையும்[adaptation], பல சிற்றினங்களாக[speciation] பிரிதலையும் நன்கு விளக்குகிறது.இன்னும் ஒரு முக்கிய விடயம் குழும்ரபியல் ஒரு உயிரிக் குழுவின் உள் நடக்கும்  சிறுமாற்றங்கள் அதாவது சிறு பரிணாமம்[micro evolution]  பற்றியே அதிகம் விளக்குகிறது.

குழு மரபியலுக்கு தேவையான பரிணாம அடிப்படைகள் ஏற்கெனெவே கற்று இருக்கிறோம். அச்சுட்டிகளும் இப்பதிவில் கொடுத்து இருக்கிறோம். 

இயற்கைத் தேர்வு நமக்கு நன்கு பரிச்சயமான விடய்ம்தான், சூழலுக்கு பொருந்தும் மாற்றங்கள் பரம்பரைரீதியாக கடத்தப் படும்.

பரிணாம செயலாக்கம் பற்றிய கேள்விகளும் பதில் விளக்கங்களும்


சீரற்ற மரபுவிலகல்:  இது ஜீனோம் மாற்றத்தில் சூழல் சாராத சீரற்ற மாற்றம், ஒரு குழுவில் எப்படி ஜீனோம் ரீதியாக வித்தியாசங்கள் ஏற்படுகின்றன என்பதை கூறுகிறது.


ஒரு உயிரி சில சிற்றினங்களாக பிரிதலும் ஏற்கெனவே விவாதித்து அறிந்து இருக்கிறோம்.

பரிணாமம் பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும் என நெடுநாள் ஆசை உண்டு. கொஞ்சம் வித்தியாசமாக கணிதம் சார்ந்தே எழுத வேண்டும் என ஒரு முயற்சி. இதனை விமர்சித்து நல்வழிப்படுத்த நம் பதிவை தொடர்ந்து படிக்கும் நண்பர்களை வேண்டுகிறேன்.


நன்றி!!!
(தொடரும்)


Saturday, December 22, 2012

குஜராத் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?




வணக்கம் நண்பர்களே,
கடந்த மாதம் முதல் நடைபெற்ற குஜராத்,ஹிமாச்சல்பிரதேஷ் சட்ட மன்றத்  தேர்தல் முடிவிகள் வெளிவந்துள்ளன. குஜராத்தில்  திரு நரேந்திர மோடி தலைமையில் பா.. வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்து உள்ளது. ஹிமாச்சல் பிரதேசில் பா.. வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இப்பதிவில் குஜராத் தேர்தல் முடிவுகளை அலசுவோம். குஜராத் என்றதுமே ப்போது முதலில் ஞாபகம் வருவது 2002 கோத்ரா மதக் கலவரமே. இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெற்ற மோசமான மதக் கலவரம் என்பதும், அதில் ஆளும் மோடி அரசு பாரபட்சமாக நடந்தது என்பதே குற்றச்சாட்டு. வழக்குகளில் சரியாக நீதி கிடைக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

ஆயினும் 2002க்கு பிறகு மதம் சார் வன்முறைகள் நடக்கவில்லை என்பது ஆறுதலான விடயம். இந்தியா ஒரே நாடு என்றாலும் பிற மாநிலங்களில்நடக்கும் விடயங்கள் நமக்கு ஊடகம் மூலமாக மட்டுமே தெரிகிறது.ஊடகங்கள் பக்கச்சார்பு உடையவை என்னும் போது சரியாக நிலவரம் தெரியாது.மோடி ஊழல் கறை படியாதவர்,பாரபட்சமின்றி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்பதன் நிரூபணமே இந்த வெற்றி என ஆதரவாளர்கள் கூறுகின்றார்.இல்லை சிறுபான்மையினர் அங்கே அஞ்சி வாழ்கிறார் என எதிர்குரலும் கேட்கிறது. இதனை நாம் சரி பார்க்க எப்படி முடியும்??? வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது.

சரி முதலில் முடிவுகளைப் பார்த்து விடுவோம்.


Seats 2012
Percentage 2012
Voters 2012
Seats 2007
Percentage 2007
BJP
115
47
26,009,988
117
49.12
Congress
61
39
21,278,648
59
38
GPP
2
4
956,053
-
-
Others
4
9
5,236,916
6
12.88
Total
182
100
54,000,000
182
100

காங்கிரஸ்,பாஜகவிற்கு சுமார் 5 மில்லியன் ஓட்டுகள் அல்லது 8% வித்தியாசம்  இருக்கிறது.இது சென்ற தேர்தல் முடிவில் இருந்து அதிக வித்தியாசம் இல்லை எனப்புரியும். கேசுபாய் படேல் 4% ஓட்டினைப் பிரித்தார் என்றாலும் அவர் பாஜக அல்லது காங்கிரசின் ஓட்டைப் பிரித்தாரா அல்லது அவரின் இனத்தவரை கட்சி வேறுபாடின்றி ஈர்த்தாரா எனக் கூற இயலாது.

எனினும் மோடியின்  மூன்றாம் முறை வெற்றி அவரை குஜராத் மக்கள் விரும்புவதையே காட்டுகிறது.

ஜனநாயகம் என்பது மற்ற அரசியல் அமைப்புகளை விட சிறந்த முறை என்றாலும், இதிலும் மக்கள் பொருளாதார ரீதியாக பிரிவதை விட இன மதரீதியாக பிரிவது தவிர்க்க முடிவது இல்லை.

பொருளாதாரரீதியாக மக்கள் பிரிவதை விட இனரீதியாக பிளவு படுத்தல் அரசியல்வாதிக்கு எளிதில் பலன் தருகிறது.





இந்த ஓட்டுக்கள் மத இனரீதியாக பிரிந்ததையும்  ஓட்டு சதவீதம் மாறாமை காட்டுகிறது. காங்கிரஸ் அதிகம் தலித்,ஆதிவாசி மற்றும் சிறுபானமையினர் ஓட்டுகளைப் பெற்றும் இருப்பதும் சொல்ல முடியும். குஜராத்தில் தலித் மக்கள் 35 இலட்சம்[7%],ஆதிவாசிகள் 74 இலட்சம்[14.7%] ,சிறுபான்மையினர் 46 இலட்சம் [9%] உள்ளனர்.

எனினும் அனைவரும் தங்களுக்கு வாக்களிப்பதாக பாஜக,காங்கிரஸ் கூறுகின்றனர்.பாஜக ஒரு படி மேல் சென்று குஜராத்தில் சிறுபான்மையினரின் கல்வி,வேலைவாய்ப்பு ,நாட்டின் சராசரியை விட அதிகம் எனக் கூறுகிறது.


- In terms of literacy level, Muslims in Gujarat stood at 73.5 percent as compared to the national average of 59.1. While the figure for the urban males was 76, it was 81 for those living in rural areas as compared to the national average of 70 and 62 respectively in similar category. [The Sachar Committee report : Appendix table 4.1, Page No. 287]

- Even Muslim women in the urban areas of Gujarat have average literacy rate 5 point higher than the national average whereas their counterparts in rural areas of Gujarat fare even better with a literacy rate of 57 percent as compared to the national average of 43 in similar category. [The Sachar Committee report : Appendix table 4.1 b, Page No. 289]
-Also in Gujarat, a greater percentage of Muslims have attained primary, secondary and higher secondary level education compared to the national average and compared to other states. Against the national average of 60.9% (and 42.2% in UP), Gujarat had 74.9% Muslims at the primary level while the percentage is 45.3 at Secondary level as compared to national average of 40.5% and 29.2% in UP. [The Sachar Committee report : Appendix table 4.6 & 4.7, Page No. 295-296-297-298]
-The average years of secondary schooling for Muslim children between age 7 and 16 years is higher in Gujarat at 4.29 years compare to the national average of 3.26 years. The figures in West Bengal, UP and Bihar are 2.84, 2.60 and 2.07 years respectively. The truth is that the Muslim children in Gujarat are benefiting from equal opportunities to access secondary schooling as other children. [The Sachar Committee report : Appendix table 4.2, Page No. 290-291]

The other aspect is the economic well being of Muslims in Gujarat. Here also, the Sachar Committeedispels the myth.
- In terms of per month per capita income, Muslims in the urban areas of Gujarat earn an average Rs 875 which is more than the national average of Rs 804. In contrast, it is Rs 662 in UP, Rs 748 in West Bengal, Rs 811 in Punjab, Rs 803 in Andhra Pradesh and Rs 837 in Karnataka. [The Sachar Committee report : Appendix table 8.2, Page No. 364]
- The story is similar in rural Gujarat where the per capita monthly income of the Muslims 20-25% more than the Muslims living in the rural areas of most other states. It is on an average Rs 668 as compared to the national average of Rs 553. [The Sachar Committee report : Appendix table 8.3, Page No. 365]
- In terms of people living below poverty line, Gujarat had 54% Muslims living below it in 1987-88 while the figure stood at 34% in 2004-2005 showing a healthy pace of improvement. [The Sachar Committee report : Appendix table 8.5, Page No. 367]
- Even in terms of share of Muslims in state employment, i.e, government jobs, it is 5.4% in Gujarat while it is 2.1% in West Bengal, 3.2% in Delhi and 4.4% in Maharashtra. [The Sachar Committee report : Appendix table 9.4, Page No. 370]



இப்படி எல்லாம் உண்மையாக இருந்தால் நன்மைதான். வெற்றி பெற்ற முதல்வர் மோடி தேசிய அரசியல் மீது கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசியல் என்பது இன்னும் அதிக பன்முகத் தன்மை கொண்டது.கோத்ரா சம்பவம் குறித்து பாரபட்சம் அற்ற நீதியோ,மன்னிப்போ கேட்கும் எண்ணம் திரு மோடியிடம் இல்லை.அதனைக் கடந்து,மறக்க வேன்டும் எனவே கோருவது புரிகிறது.இந்திய பிரதமர் ஆகவேண்டும் எனில் இன்னும் பல இன,மொழி,மத மக்களின் அபிமானம் பெற்றால் மட்டுமே முடியும்.


Manmohansingh04052007.jpgLK Advani.jpgPrakashkarat.JPG
LeaderManmohan SinghLal Krishna AdvaniPrakash Karat
PartyCongressBJPCPI(M)
AllianceUPANDATF
Leader since22 May 20041 June 200411 April 2005
Leader's seatAssam
(Rajya Sabha)
GandhinagarNone
Last election218 seats, 35.4%181 seats, 33.3%59 seats, 7.7%
(w/ Left Front)
Seats won26215979
Seat changeIncrease80Decrease17Decrease30
Popular vote153,482,356102,689,31288,174,229
Percentage37.22%24.63%21.15%
SwingIncrease3.96%Decrease4.88%Decrease1.06%

பாராளுமன்ற தேர்தலில் உள்ள 543 இடங்களில் 272 இடங்கள் பெற்றால் வெற்றி என்னும் போது பாஜக மட்டும் தனியாக 200 இடங்கள் பெற்று கூட்டணி கட்சிகள் 70+ இடங்கள் பெற்றால் மட்டுமே சாத்தியம். கூட்டணி தேர்தலுக்கு பிறகு கிடைக்கும் வாய்ப்புள்ள கட்சிகள், வங்காள திர்ணாமுல் காங்கிரஸ்,பீஹார் ஜதா(நிதிஷ் குமார்),தமிழ்நாடு அதிமுக, ஒரிசா பட்நாயக்,உத்தர் பிரதேஷ் பகுஜன் சமாஜ் போன்றவை உள்ள.


எனினும் அரசியலில் எதுவும் நடக்கும். மோடியின் குஜராத் வெற்றி 2014 பாராளுமன்ற தேர்தலை ஒரு பரபரப்பு மிகுந்ததாக மாற்றியது மட்டும் உண்மை!!!

இன்னும் நிறைய விடயங்கள் சொல்ல நினைப்பது உண்டு.பின்னூட்டத்தில் தொடர்வோம்!!!.

நன்றி!!