Tuesday, December 31, 2013

புத்தாண்டில் இன்பமாக வாழ வாத்துகிறோம்

வணக்கம் நண்பர்களே,

2014ல் இருந்து பதிவுலகில் தொடர்ந்து இயங்க வேண்டும் அதாவது குறைந்த பட்சம் மாதம் இரு பதிவுகள் என்னும்  என்னும் உறுதி மொழியோடு இவ்வருடத்தின்  கடைசிப் பதிவினை இடுகிறேன்.
****
நம் மதிப்பிற்குறிய இயற்கை அறிவியலாளர் அய்யா  திரு நம்மாழ்வார் மறைவுக்கு அஞ்சலி . இயற்கையோடு இணைந்த வாழ்வினை நோக்கி மனித சமூகம் சென்றாகவே வேண்டும்.அதற்கான அவரின் பங்களிப்பு அளப்பரியது. அவரின் குடும்பம்,நண்பர்களுடன் அவரின் இழப்பை பகிர்கிறோம்.

***
ஆம் ஆத்மி கட்சியின் திடீர் விசுவரூபம் நம்மை எந்த அளவு வியப்பில் ஆழ்த்துகிறதோ அதே அளவு அதன் திட்டங்கள் பற்றிய சாத்தியக் கூறுகள் பற்றியும் யோசிக்க வைக்கிறது. எனினும்  சாதி,மதம் ,இனம்,மொழி சாரா புதிய கட்சி,புதிய நடைமுறைகள் இந்தியர்களுக்கு தேவைதான். அவர்கள் நன்கு மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள்.


இரு பாடல்களைப் பகிர்ந்து பதிவினை முடித்து விடுவோம்!!!
முதல் பாடலில் திடீர் பணக்காரன்,முறையற்ற வழியில் சம்பாதித்து விட்டு , கடவுள் கொடுத்ததாக ஆடிப்பாடுகிறான்.இரண்டாவது பாடல் உண்மையான இன்பம் என்றால் என்ன எனக் காட்டுகிறது

அனைவரும் இன்பமாய் வாழ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

நன்றி!!!

Saturday, November 30, 2013

தலைவர்களும், தொண்டர்களும், அப்பாவிகளும்வணக்கம் நண்பர்களே,
கடந்த சில நாட்களில் நடந்த சில சம்பவங்கள் குறித்து எழுத வேண்டும் எந்த் தோன்றியது.இப்பதிவில் குறிப்பாக 
1. திரு சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு,
2.திரு தருண் தேஜ்பால் மீதான பாலியல் முறைகேடு வழக்கு

என்பதைப் பற்றியும் இது போன்ற கடந்த சில வரலாற்று நிகழ்வுகள் சார்ந்து பரிணாம பார்வையில் சிந்திப்போம்.

முதலில் திரு சங்கரராமன் வழக்கில், காஞ்சி வரதராஜபுர பெருமாள் கோவில் மேலாளர் ஆக பணியாற்றியவர். காஞ்சி மடத்தில் நடந்த நிதி,பாலியல் முறைகேடுகளைக் கண்டித்து கடிதம் (புனை பெயரில்)எழுதி கண்டித்து வந்தவர். அவரது கொலை(September 3, 2004) வழக்கில் குற்றம் சாட்டபட்ட சென்ற வார (27-Nov-2013) தீர்ப்பின் படி அனைவருமே விடுதலை ஆனார்.
அந்த வழக்கில் நடந்த முக்கிய திருப்பங்கள் காலக் கணக்கின் படி இங்கே படியுங்கள்.


தெஹல்கா ஊடக பொறுப்பு ஆசிரியர் திரு தருண் தேஜ்பால், பணியாற்றிய சக பெண் பத்திரிக்கையாளருக்கு   பாலியல் தொல்லை கொடுத்தமைக்கு கைது செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. தெஹல்கா ஊடகம், கிரிக்கெட் சூதாட்ட முறைகேடுகள் ,பாஜக தலைவர் பங்காரு இலட்சுமணண் கையூட்டு பெறுதல், கோத்ரா கலவரத்தை ரசித்து வர்ணித்த பாபு பஞ்ரங்கி போன்றவற்றை அம்பலப் படுத்திய நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.


திரு சங்கரராமன் வழக்கில் அவர் எழுதிய கடிதங்கள் அடிப்படை என்றால்,திரு தேஜ்பாலின் வழக்கில் அவர் தெஹல்ஹா நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்திரிக்கு மன்னிப்பு கேட்டு அனுப்பிய மின் அஞ்சல் காரணம்.
நிற்க கொஞ்சம் பொதுவாக சில விடயங்களை அலசி விட்டு மீண்டும் இந்த இரு சம்பவங்களுக்கும் வருவோம்.

மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் முதன்மை நோக்கம் சூழலுக்கு தகுந்தப்டி உயிர் வாழ்தலே. உயிர் வாழ்தலுக்கான போட்டியில்  உயிரினங்களுக்கிடையே சண்டை ஏற்படுவது மிக இயல்பானது.

உயிரின‌ங்கள் உணவு,நீர்,இருப்பிடம், பாலியல் துணை போன்றவற்றுக்கு சண்டையிட்டு ,உயிர் பலி ஏற்படுவதும் மிக இயல்பான விடயம் ஆகும். அந்த உயிரினங்களுக்கு ஒவ்வொடு நொடியும் உயிர் வாழ்வதே பெரிய சிக்கல் ஆகும்.

உடனே எறும்புகள், தேனீக்கள் போன்ற்வை ஒற்றுமையாக வாழ்வது இல்லையா என எதிர்க் கேள்வி கேடகலாம் என்றாலும், பெரும்பான்மை உயிர்கள் எப்படி வாழ்கின்றன என்பதைப் பொறுத்தே சிந்திக்க வேண்டுகிறேன்.

விலங்குகளின் வாழ்க்கை போராட்டத்தை அறிந்தாலே ஆண்டவனின் அற்புதப் படைப்பு அல்ல உயிரின‌ங்கள் எனப் புரிந்து விடும்.

மனிதனின் ஒரு விலங்கு என்பதால் இயற்கை வளங்களின் மீதான நுகர்வு போட்டியில் சக மனிதர்கள், இயற்கையுடன் போட்டியிட்டு பாதிப்பை ஏற்படுத்துவது அனைவரும் உணரும் விடயம்.

விலங்குகளின் தேவைகள் மிக குறைவு ஆனால் மனிதன் அறிவு மிக்கவன் என்பதால் அவனது ஆசைக்கு எல்லையில்லை.

வலிமை வாய்ந்தவர்கள் பிற மனிதர்களைக் கட்டுப்படுத்தி அவர்களின் உழைப்பை சுரண்டி வாழ உருவாக்கியதே பரம்பரை மன்னராட்சி, கடவுளின் பிரதிநிகளாம் மத குருக்கள்.

மன்னன்,மதகுருக்களின் கூட்டணி மக்களை ஏய்த்துப் பிழைத்தது. இவர்களின் வீணான கொள்கைகளால்,ஆசைகளினால் எழுந்த போர்கள் ,உயிர்ப் பலிகள் கோடிக்கோடி.

காலப் போக்கில் மன்ன‌ராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி,பொது உடமை போன்ற ஆட்சி முறைகளும் வழக்கத்தில் வந்தாலும் அதிலும் ,சர்வாதிகார போக்கும், சுரண்டும் மனப்பானமை கொண்ட த்லைவர்கள் உருவாகி மன்னன்+ மத குரு கூட்டணியின் ஏமாற்றுத் தனங்களுக்கு சற்றும் குறையாத பாதிப்புகளை ஏற்படுத்தினார்கள்.


நல்ல தலைவர் என்றால் சுய‌தேவைகள் ,மிகக் குறைவாக கொண்டவர்,வெளிப்படையானவர்,சாதி,மத,இனம்,மொழி,குடும்பம்  சாராமல் அனைவரையும் ஒன்று போல் பாவிப்பவர், அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதரம், சுயமரியாதையுடன் கூடிய பாதுகாப்பு வழங்குபவர் என வரையறுக்கலாம். 

இப்படிபட்ட மனிதர்கள் வரலாற்றில் மிக மிக...மிக அபூர்வம்.அப்படி இருப்பவர்கள் சொந்த குடும்பம்,நண்பர்களினால் முதுகில் குத்தப்ப்படும் வாய்ப்பே அதிகம்.

நல்லவன் தேவையில்லை,(மாற்றுத் த்லைவனை விட)நல்லவன் என தலைவனை பெரும்பான்மை  நினைத்தால்(நினைக்க வைத்தால்) போதும் என்பதே இபோதைய அரசியல் சிந்தாந்தம்!!!

கடந்த நூற்றாண்டில் ஊடகமும் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு ஆற்ற ஆரம்பித்தது.ஒரு தலைவனின் பிம்பத்தை கட்டி அமைப்பதில் ஊடகங்களின் பங்கு மிக அதிகம். ஊடகங்களும் அரசியல்,மதம் போல் மக்க்ளை ஏமாற்றி சுரண்டும் அமைப்பு ஆன‌தில் வியப்பு இல்லை.
ஆகவே அரசியல் தலைவர்கள்,மதத் தலைமைகள் பதவி, பணம் போன்றவற்றுக்கு ஆசைப்படுபவர்களாக இருப்பதும், வெளியில் ஒரு வேடமும் உள்ளே ஒரு வேடமும் தரிப்பவர்களே அதிகம்.

மதங்களுக்கு,அவை சொல்லும் கதைகளுக்கு மத புத்தகங்களுக்கு சான்றுகள் இல்லை என்றாலும் மதம் என்பது ஒருவரின் அடையாளம் சார் வாழ்வு முறை என்பதால், மதம் என்பதை பலரால் கைவிட முடியவில்லை.

மதம், மதகுருக்கள் எது செய்தாலும் சரி என்னும் போக்கு ஒரு நம்பிக்கையாளனின் மிக இயல்பான  செயல் ஆகும்.

அவர் அப்படி  செய்யவில்லை!! இல்லை எனில் ,அவர் ஏன் அப்படி செய்தார்? என விளக்கியே  பணம் சம்பாதிப்பதே மத பிரச்சாரகர்களின் முக்கிய பணி ஆகும்.இராமர் கோயில் விவகாரம் பாஜவை இந்தியாவை ஆளும் கட்சியாக மாற்றிய என்பது, மத நம்பிக்கை எவ்வளவு வல்லமையான ஆயுதம் என்பதை அறியலாம்.

ஆகவே மத குரு எப்படி இருந்தாலும் எதார்த்த‌ நோக்கு அடியார்கள் கைவிட மாட்டார்கள் அதே போல் அரசியல் த்லைவன் எத்த‌னை வழக்கில் சிக்கினாலும்,கையும் களவுமாய்ப் பிடிபட்டாலும் எதார்த்த‌ நோக்கு தொண்டர்களும் விட்டுக் கொடுக்க மாட்டர்கள்.


இதில் இன்னொரு விடயமும் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும், மத தலைமைக்கோ, பிரச்சாரகருக்கோ மதம் என்பது பிழைப்புவாதம் மட்டுமே.இவர்களுக்கு நம்பிக்கை உண்மையில் இருக்காது. அதே போல் அரசியல் தலைமைக்கோ,பிரச்சாரகர்களுக்கும் தங்களின் சித்தாந்ததிலும் நம்பிக்கை இருக்காது.

இந்த சம்பவங்கள் போல் பல சம்பவங்கள் வரலாற்றில் பார்க்கலாம். மத த்லையை விமர்சித்தால் மரண தண்டனை என்பது இன்னும் உள்ள நாடுகளும் உண்டே!!!


ஊடகங்கள் ,அரசியல் தலைகளின் அடியாள்களாக,தரகர்களாக மாறி மாற்றுக் கட்சியினரின் அயோக்கியத் தனங்களை மட்டும் பிரச்சாரம் செய்கிறார். இவர்களும்  ,தன் மதத்தின் குறைகளை மறைத்து பிற மதங்களை தூற்றும் மத பிரச்சாரகன் போன்றவர்களே.

ஆகவே அயோக்கியத் தலைவர்கள் அரசியல்,மதம் மற்றும் ஊடகங்களில் உண்டு.அவர்களை கண்ணை மூடி(ஹி ஹி சில சமயம் திறந்தும்) ஆதரிக்கும் எதார்த்தவாத தொண்டர்களும் உண்டு.

இதில் அடங்காத அப்பாவிக் கூட்டம் ஒன்று உண்டு. மேலே சொன்ன சம்பவங்களில் திரு சங்கரராமன், பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் இருவருமே அந்த அப்பாவிகள்.

திரு சங்கரராமன் மதம்,கடவுள். கட்டுப்பாடு , தர்மநியாயங்கள் போன்ற்வற்றை நம்பினார். அதற்காக குரல் கொடுத்தார்.குரல் நசுக்கப்பட்டது.

தெஹல்காவிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க அவர் ,மேலதிகாரியிடம் முறையிட  அவரின் குரலும் நசுக்கப்பட்டு அது ஒரு மன்னிப்பு மின் அஞ்சலாக மட்டுமே முடிந்தது. அது வெளிவந்து  தெஹல்காவின் ஊடக தரகு வேலையில் பாதிக்கப்பட்டோரின் எதிர்வினையாகி மட்டுமே வழக்கு நடக்கிறது.இதில் தேஜ்பால் தண்டிக்கப்படுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. சில வருடம் சங்கராமன் வ்ழக்கு போல் இழுத்தால் இதுவும் இன்னொரு தரகு வேலையில் மறக்கடிக்கப்படும்.அப்புறம் வழ்க்கு அவ்வளவுதான்!!!.

ஆத்திக மதகுரு தப்பிக்க நாததிக அரசியல் தலைமை உதவி செய்தது எதைக் காட்டுகிறது???
இதுவரை எத்த‌னை அரசியல்,மத,ஊடக தலைமைகள் இந்தியாவில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கின்றன? ஆகவே இந்த நிகழ்வுகள் ஏதோ விதி விலக்கு அல்ல!!!

மதம் அரசியல்,ஊடகம் பிழைப்புவாதம் மட்டுமே!!!

ஆகவே மதம் அரசியல், பணியாற்றும் இடத்தில் அப்பாவிகளாக இருப்பதை தவிர்ப்பது நன்று!!

பலருக்கு மதம்,அரசியலில் நேரடியாக பாதிக்கப்ப‌டாமல் இருக்கலாம் என்றாலும்,பணியாற்றும் இடங்களில் நடக்கும் பாலியல் முறைகேடுகள் தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம்.

இப்படித்தான் செய்ய வேண்டும் என சொல்வது கடினம்.ஆனால் பாலியல் முறைகேடுகளை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிடுதல் நல்லது.

உங்களின் வாழ்வு,சுய மரியாதையை காப்பாற்றும் வகையில் அனைவரிடமும் பழகுங்கள் என்று மட்டுமே சொல்ல விழைகிறேன்.


நன்றி!!

Sunday, November 10, 2013

(உண்மையான!) ஆ(நா)த்திகர்களுக்கு ஆதரவாக சில விளக்கங்கள்!!!!வணக்கம் நண்பர்களே,
 சமீபத்தில் படித்த இந்த பதிவு நம்மை சிந்திக்க வைத்தது.

சகோ காமக்கிழத்தன் சில் கேள்விகளை ஆத்திக சகோக்களுக்கு கேட்டு இருக்கிறார்.

அந்தக் கேள்விகளின் மீதும், நாம் சரி என்று சான்றுகளின் அடிப்படையில் எண்ணும் விளக்கங்களை பதிலாகவும் இப்பதிவில் அளிக்கிறோம்.

அதற்கு முன் ஆத்திகம் என்னும் இறை நம்பிக்கை,நாத்திகம் என்னும் இறை மறுப்பு இரண்டையும் கொஞ்சம் நன்கு புரிவோம்.
ஏற்கெனவே புதிய நாத்திகம்[newatheism] என்பதன் விளக்கப்பதிவு ஒன்று இட்டு இருக்கிறோம். இப்பதிவு அதன் தொடர்ச்சியாக நாம் கருதுவதால் , விரும்பும் சகோக்கள் அத்னையும் படிக்கலாம்.

கணிதத்தில் நிகழ்த்கவு(probability) கோட்பாடு நாம் படித்து இருக்கலாம். ஒரு நாணயத்தை சுண்டினால் தலை விழலாம் அல்லது பூ விழலாம். ஒன்று விழுந்தால் இன்னொன்று நிச்சயம் விழாது. இது போன்ற நிகழ்வுகள் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்வுகள் என்கிறோம்.

ஷோலே படம் பார்த்த நண்பர்கள், அதில் நண்பர்கள் தர்மேந்திரா,அமிதாப் பச்சன் முடிவெடுக்க நாணயத்தை சுண்டுவதை வ்ழக்கமாக கொண்டு இருப்பர். ஒரு சமயம் நாணயம் செங்குத்தாக நின்று விடும்.[ இந்த நாணயம் சுண்டுதல்+ஷோலே பற்றி தொடர்ந்தால் நம் பதிவு திரைமணத்தில்தான் வரும் ஆகவே சிந்திக்கும் திசையை மாற்றுவோம்]

இது நிகழும் வாய்ப்பு இருப்பின் நிச்சயம் நிகழும். இதை ஏன் சொல்கிறோம் எனில் ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்வுகள் என சொல்லும் நிகழ்வுகள் மிக மிக அபூர்வம். அந்த இரு(அல்லது மேற்பட்ட) நிகழ்வுகளுக்கும் பொதுவான சில விடயங்களும் உண்டு. அதில் ஆத்திகம் நாத்திகமும் அடக்கம்.

அதாவது ஒரே வரியில் சொல்ல வேண்டும் எனில்

ஆத்திகமும்,நாத்திகமும் ஒன்றை ஒன்று முற்றும் விலக்கும் நிகழ்வுகள் அல்ல!!


இதனைப் புரிய கீழ்க்கண்ட விள்க்கப் படத்தை பார்க்கவும்.Does not claim Proof exist- (கடவுளுக்கு) நிரூபணம் உண்டு என சொல்வது இல்லை.
Does claim Proof exist- (கடவுளுக்கு) நிரூபணம் உண்டு என சொல்வது உண்டு.
Does believe in god- கட்வுள் நம்பிக்கை உண்டு.
Does not believe in god- கட்வுள் நம்பிக்கை இல்லை
Gnostic Theist -ஆன்மீக அறிவு சார் ஆத்திகம்.
[கடவுளுக்கு நிரூபணம் உண்டு என்பதை மதபுத்த‌கங்களின் மூலம்(அல்லது தனிப்பட்ட தேடலில்) கற்றுணர்ந்து, நம்பிக்கை கொண்டோர்’]

Gnostic Atheist -ஆன்மீக அறிவு சார் நாத்திகம்.
[கடவுளுக்கு நிரூபணம் இல்லை என்பதை மதபுத்த‌கங்களின் மூலம்(அல்லது தனிப்பட்ட தேடலில்) கற்றுணர்ந்து, நம்பிக்கை மறுப்போர்.]

Agnostic Theist - எதார்த்தவாத ஆத்திகர்.
கடவுளுக்கு நிரூபணம் இல்லை ஹி ஹி எதுக்கும் ஆத்திகனாக‌வே இருக்கிறேன்

Agnostic Atheist - எதார்த்தவாத நாத்திகர்.
கடவுளுக்கு நிரூபணம் இல்லை   ஆகவே  நாத்திகனாக‌வே இருக்கிறேன்.

இதில் நம்நிலை என்பது இன்னும் இடைப்ப்ட்ட நிலை போல் தோன்றுகிறது.
கடவுள் என்று எதை சொல்கிறார்கள், நிரூபணம் எனெதை சொல்கிறார்கள் என்பதும் இந்த நான்கு வகை பிரிவினருக்கு வேறுபடும் என்பதால் ஆத்திகம் நாத்திகம் என எளிதில் வரையறுப்பதின் சிக்கல் புரியும்.

இரண்டுக்கும் இடைப்பட்ட , அல்லது இரண்டும் ஒன்றான,அல்லது இரண்டுக்கும் சேராத நிலையும் உண்டு.

கணிதத்தில் இதனை ஃப்ஜ்ஜி(இது வேற Fuzzy logic ஹி ஹி!!!) லாஜிக் என்பார். நிகழ்த்கவு கோட்பாட்டின் மாற்றுக் கோட்பாடாக சிக்கலான முடிவெடுக்கும்(decision making) பிரச்சினைகளில் பயன்படுத்தப்படும்.

என்ன சகோ குழப்புகிறீர்கள்?அதெப்படி இடைநிலை இருக்க முடியும் என்போர் மத வாதிகளின் பரிணாம எதிர்ப்புக் கொள்கையான இடைநிலை பொது முன்னோரின் படிமங்களை(transitional fossils) மறுப்பவர் போன்றோரே!!!

இது நாத்திகரும், ஆத்திகரும்  ஒன்றுபடும் ஒரு வாதத்தின் எடுத்துக் காட்டு ஆகும். இப்போது அவரின் கேள்விகளுக்கு செல்வோம்.அவரின் கேள்விகள் நீல வண்ணத்தில் உள்ளன‌!!

1.//நாத்திகர்கள் வேண்டாம். கடவுள் இருக்கார்னு நம்பவும் முடியல; நம்பாம இருக்கவும் முடியலஎன்று பூசி மெழுகுகிற ரெண்டும் கெட்டான்கள்எட்டி நின்று வேடிக்கை பார்க்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமேயான கேள்வி இது.//

இப்படி மிகச்சரியாக பிரிக்க முடியாது என்பதை மேலே விள்க்கி இருக்கிறோம்.. ஆகவே புதிய நாத்திகர்களாகிய நாங்களும் பதில் அளிப்போம்!!!

2.//மகான்களையும் அவதாரங்களையும் ஆன்மீகங்களையும் மகா மகா பெரியவர்களையும் துணைக்கு அழைக்காமல் உங்கள் சுய அறிவுகொண்டு பதில். சொல்லுங்கள்.//

இது சமீப‌ கால்ங்களாக தமிழர்களுக்கு நகைச்சுவை விருந்து அளிக்கும் மத விவாதங்களின் ஒப்பந்த கட்டுப்பாடு போல் உள்ளது. ஒரு விவாத வல்லுனர் போடும் க‌ட்டுப்பாடுகளாவன.

a). மத புத்தகத்தின் என்னுடைய இப்போதைய  மொழி பெயர்ப்பும்,இப்போதைய நிலைப்பாடு மட்டுமே சரி. முந்தைய விடயங்களை பேசக் கூடாது.

b). துணைப் புத்தகங்களில் நான் சொல்லும் பகுதிகள் மட்டுமே ஏற்கப்படும், என விளக்கம் மட்டுமே சரி!!!

இப்படி விவாதக் கட்டுப்பாடுகள் போடுவதில் இருந்தே அவரின் மத புத்த்கங்களின் நிலை அனைவரும் புரிய முடியும். அதே போல் சகோ காமகிழத்தன் கட்டுப்பாடுகள் போடுவதும் நாத்திக ஆத்திக ஒற்றுமையை விளக்கும் சான்றாக நாம் முன்வைக்கிறோம்.

விவாதத்தில் இரு புறக் கருத்துகளையும் வைக்க இருவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்பட வேண்டும். அனைத்து கருத்துகளும் ஆவணப் படுத்தப்பட வேண்டும்.இப்படி கட்டுப்பாடுகள் விதித்துவிட்டு பதில் அளிக்காதவரை முட்டாள் என திட்டுவது சரியா?

3.//கடவுளை 100% நம்புகிறவரா நீங்கள்?//

இதையும் பதிவின் தொடக்கத்தில் விளக்கி இருக்கிறோம். 100% என்பது இயற்கையில்  கிடையாது என்பது வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி(thermodynamics second law)!!!
http://en.wikipedia.org/wiki/Second_law_of_thermodynamics

4.//
நீங்கள் வேண்டிக்கொண்டதால் கடவுள் உங்களை மனிதனாகத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, உங்கள் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து  இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான் சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியாது.//

கடவுள் என்பது மனிதனின் உருவாக்கம் என்பதால் கடவுளும் மனித பண்புகள்,உணர்வுகள் கொண்டவ்ராகவே அறியப்படுகிறார்.
நாம் நமது குழந்தையை பெற்று எடுத்து வளர்க்க அதனிடம் அனுமதி பெறுவது இல்லை,பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இன்பமாக வாழ்வது இல்லை. இது கடவுளுக்கும் பொருந்தும் அல்லவா!!!!???

5.//ஆசை...இன்னும் வாழ வேண்டும்என்னும் பேராசைதான் காரணம். //
இதைத்தான் பரிணாம அறிவியலும் சொல்கிறது வாழ்வதற்கான போட்டியில், சூழலுக்கு ஏற்ப தலைமுறைரீதியாக  தகவமைக்கும் உயிர்கள் வாழ ,பிற அழிய வாழ்வு தொடர்கிறது.

நானும் என் தந்தையும் ஒன்றே என்கிறார் விவேகானந்தர். நான் இறந்தாலும் என் சந்ததி மூலம் வாழ்கிறேன் என்னும் அவரது கருத்து உயிர்களுக்கு இறப்பில்லை என்பதை சொல்வதாக நான் கருதுகிறேன்.

இன்பம் துன்பம் இரண்டும் சார்பியல் நோக்கு உடையவை. நம்க்கு முன் வாழ்ந்த 99% உயிர்கள் மறைந்துவிட்டன. ஹோமோ சேஃபியன்களாககிய நாம் தோன்றி 2 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. பூமியின் 350 கோடி உயிரின வரலாற்றில் இது எத்த்னை சத வீதம்?இதில் ஒரு மனிதனின் பிறப்பு வாழ்க்கை,இறப்பு என்பது என்ன விளைவு? பிரப்ஞ்சம் மனிதனுக்காவே படைக்கப்பட்டது என்னும் பார்வை கொண்ட நாத்திகரின் கேள்விதான் இது. மீண்டும் நாத்திகர் ஆத்திகர் ஒற்றுமை!!!

பிறப்பு,இறப்பு என்பதும் பரிணாம நிகழ்வுகளே!!!!

கடவுள் என் ஒருவர் இருப்பார் என்றால் அவரும் பரிணாம வளர்ச்சி அடைவார் என்றே கூறுகிறோம். மத புத்த்கங்களின் காலரீதியான‌  மொழி பெயர்ப்புகள், விள்க்கங்கள் இதையே உறுதிப் படுத்துகின்றன்.

6// ஆதியும் அந்தமும் இல்லாதவர்; என்றும் இருப்பவர். எந்தவொரு கெடுதியும் இவரை அணுகாது; அணுகவும் முடியாது, அணு முதல் அண்டம்வரை அனைத்தையும் ஆள்பவர் இவரே என்பதால்.

ஆனால்,
மானுடப் பதர்களான நமக்கு மட்டும் அற்ப ஆயுள். அதிலும் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல். இனி என்ன ஆவோம் என்று தொடர்ந்து சிந்திக்கவே இடம் தராத கொடூரச் சாவு.
இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகக் கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்?//

நாத்திகர்கள் அறியா விடயத்தை ஆத்திகர்கள் சொல்ல வேண்டும்மத புத்த்கம்& மகான் சொல் சாராமல் சொல்ல வேண்டும் என்பது ஒரு நீச்சல் வீரனின் கை கால்களைக் கட்டி கல்லோடு சேர்த்து கடலில் தள்ளி நீச்சல் அடி என்பது போல் ஆகும்.

நமக்கு அறிவியல் ஏற்படுத்தி உள்ள மாதிரிகள் சார்ந்த கணிப்புகளால்[model based predictions] பிரபஞ்சம் 1370 கோடி ஆண்டுகள் முன் பெரு விரிவாக்கத்தினால் உருவானது என் அறிகிறோம்.

இதனை ஒளிப்படிமங்கள் மூலம் மாதிரி வரையறுத்த‌னர். அதற்கு முன்னால் என்றால் சான்றுகள் இபோது இல்லை. ஒருவேளை கிடைத்தால் அதுவும் விளக்கப்படலாம், அப்போது அதற்கு முன்னால் என்ற கேள்வியும் வரும்.

அறியா விடயங்கள் அறிவியலில் இருப்பது போல் ஆத்திகத்திலும் இருப்பதில் தவறில்லை!!

முதல் செல் எப்படி வந்தது? பெரு விரிவாக்கம் முன்பு என்ன நடந்தது? இதற்கு நாத்திகர்கள் விடையளிக்க முடியாமையால் கடவுள் உண்டு என சொல்லும் ஆத்திக பெருமான்களை கண்டிருக்கிறோம் அல்லவா?

நாத்திக சகோவின் கேள்வியும் அப்படித்தான் ஹி ஹி!

இதுவும் நாத்திக ஆத்திக ஒற்றுமையே!! 

7.//
தனக்கொரு நீதி; தன்னால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஒரு நீதி என்றிருக்கும் இந்த வஞ்சகரையா நீங்கள் இத்தனை காலமும் வழிபட்டீர்கள்? இனியும் வழிபடப் போகிறீர்கள்?//

வணங்குவது என்ப்து பலன் கிடைக்கும் ,நினைத்து நடக்கும் என்பதற்கு மட்டும் அல்ல. இது சமூக,குடும்ப  ஒற்றுமை சார் நிகழ்வு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இதில் மனோ தத்துவரீதியான காரணங்களூம் உண்டு.

மதம் என்பதை தந்தை மீதான ஈர்ப்பு என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட்

மதம்,வழிபாடு என்பது ஒருவரின் அடையாளம் ஆகி விட்டது.ஆகவே மதத்தில் என்ன் குறை இருந்தாலும் அதனை வேறுவழியில்லவிட்டால் நீக்கி,மாற்றுக் கருத்து சொல்லியே மதத்தினைக் காப்பாற்றுகிறார்கள்.

தமிழகத்தில் பெரியார் மதிக்கப் பட்டாலும் அவரின் நாத்திகம் ஏன் இபோதைய தலைமுறையிடம் எடுபடவில்லை என்றால் அவரின் இயக்க நாத்திகம் இந்து மத மறுப்பு இயக்க்மாகவே இருந்தது. திராவிட இயக்கத்தின் பிரச்சாரங்களை ஆபிரஹாமிய மத பிரச்சாரகர்கள் கையில் எடுப்பது எதிர்வினைகளை மட்டுமே ஏற்படுத்தி இந்து மதம் புத்துணர்ச்சி பெற்றது.
ஆகவே மதம் ,கடவுள் ஆதாரம் உள்ளதா என்பதை விட இன்னொரு மதத்தினரின் பிரச்சாரம் மாற்று மதத்திற்கும் நிலைப்பட உதவுகிறது.

அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துகிறேன் என்பதுதான்!!!

ஆகவே இப்படி கேள்வி கேட்டு வழிபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆகவே வழிபாட்டில் சமத்துவம் இருக்க வேண்டும்.அனைவரும் பிறப்பு சாராமல் மத குரு ஆகவேண்டும் போன்றவற்றையும், மதம் சார் பிரச்சாரகர்களின் தந்திர உத்திகளையும், மதம் ,சாதி சார் அரசியலின் அபாயத்தினையும் அம்பலப் படுத்துவதே சால சிறந்தது.அறிவியல் சார்,சான்றுகளின் அடிப்படையிலான சிந்தனையை வளர்ப்பதே முக்கியம்.

இயற்கையின் பல விந்தை முடிச்சுகளுக்கு பதில் தேடுகிறோம்.இத்தேடல் ஒரு தொடர்கதை என்பதால் விடையில்லா கேள்விகள் எப்போதும் இருக்கும்.


இப்படி விடையில்லாக் கேள்விகளின் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆத்திகர்,நாத்திகர் இருவரின் செயலும் தவறு என்றே கூறுகிறோம்.

மதம் மறுக்க மத புத்தகம் படியுங்கள்,அதன் மீதான மாற்று விமர்சன‌ங்களையும் படியுங்கள்!!

ஐன்ஸ்டினின் கடவுளின் பக்தர்கள் அறிவியல் படியுங்கள், அதனை  னைவருக்கும் பகிருங்கள்!!

http://en.wikipedia.org/wiki/Religious_views_of_Albert_Einstein

மதம் சார் ஆட்சி,சட்டம் அனைவரும் எதிர்ப்போம்!!!


கேள்வி நல்லதுதான்,ஆயினும்( பல மாற்றுக் கருத்துகள் உள்ளடக்கிய)  பல‌ பதில்களையே எதிர்நோக்குகிறோம்!!!அதில் அதிகம் பொருந்துவதை மட்டுமே இப்போது ஏற்க முடியும்!!என்பதே சரியான நிலைப்பாடு!!

நன்றி!!!

Friday, November 8, 2013

தமிழ் மலையாளம் அரபி எழுத்தில் இருக்கிறதா?வணக்கம் நண்பர்களே,

நமது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய இந்து தத்துவஞான சிந்த்னையாளரும், பிரபல எழுத்தாளரும் ஆன சகோதரர் ஜெயமோகன் இந்து தமிழ் நாளிதழில் தமிழ் எழுத்தினை ஆங்கில எழுத்துருவில் எழுதினால் நல்லது என எழுதியதும், அது பல எதிர்வினைகளை தமிழ் பதிவுலகு உள்ளிட்டு தமிழ் உலகில் ஏற்படுத்தியது என்பதை அறிவோம்.

ஒரு மொழியின் எழுத்துரு என்பது அதன் உடல் போன்றது. எழுத்துருக்கள் சார்ந்து ஒரு மொழி பல பிரிவாகியுள்ளதும் வரலாறு. கிரந்த எழுத்துருவில் எழுதப் பட்ட மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவை தனித்த மொழிகளாயின என்பது நாம் அறிந்த எடுத்துக் காட்டு ஆகும்.

தமிழ் கிரந்த எழுத்துருவில் இந்தியாவின் பெரும்பான்மை மொழிகளை எழுத முடியும் என்றாலும், பல சம நூல்கள் தமிழ் கிரந்தத்தில் இருந்தாலும் யாரும் தமிழ் கிரந்தத்தில் எழுத முன் வருவது இல்லை.

வேதங்கள் கூட பின் தோன்றிய தேவ நாகரி எழுத்துருவில் மட்டுமே எழுதப் படுகின்றன.

இதில் நாம் சொல்வது ஒரே எழுத்துரு பல மொழிகளை சரியாக எழுத முடியும் என்றாலும் கூட அது ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை என்பதுதான்.இதற்கு மொழிப் பற்று,அரசியல் உள்ளிட்டு பல காரணங்கள் உண்டு.

இப்போது ஆங்கிலத்தில் ஏன் சரியாக தமிழை  எழுத முடியாதது ஏன் என்பதை விள்ங்குவோம்.

தமிழில் 12 உயிர் எழுத்து, 18 மெய் எழுத்துகள் உண்டு. இவை இணைந்து 12*18=216 உயிர் மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன.

ஆங்கிலத்தில் 5 உயிர் எழுத்துகளும்,21 மெய் எழுத்துகளும் உண்டு. இவற்றின் ஒப்பீட்டை கீழே உள்ள ஒப்பீடு விளக்குகிறது.

தமிழ்
ஆங்கிலம்
தமிழ்
ஆங்கிலம்

உயிர் எழுத்து
உயிர் எழுத்து
மெய் எழுத்து
மெய்
எழுத்து
1
a
க்
k
2
ā
ங்
3
i
ச்
c
4
ī
ஞ்
ñ
5
u
ட்
6
ū
ண்
7
e
த்
t
8
ē
ந்
n
9
ai
ப்
p
10
o
ம்
m
11
ō
ய்
y
12
au
ர்
r
13


ல்
l
14


வ்
v
15


ழ்
16


ள்
17


ற்
18


ன்

12
7
18
10

தமிழ் உயிர் எழுத்துகளில் ம், உயிரெழுத்துகளில் 10 மட்டுமே குழப்பம் இல்லாமல் ஆங்கில எழுத்துகளில் குறிக்க முடியும்(saffron color). ஆகவே ஒருவேளை ஆங்கில எழுத்துருவில் எழுத வேண்டும் என்றால் இன்னும் புதிய எழுத்துருக்கள்(blue color) தேவை.

இந்த எழுத்துருக்கள் தமிழர் அல்லாதோர் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்னும் போது இந்த முயற்சி தேவையற்றது ஆகிறது.

ஆகவே திரு ஜெயமோகனின் கருத்தான தமிழை ஆங்கிலம் அறிந்த எவரும் எளிதில் படிக்க ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்னும் கருத்தும் தவறாகிறது.

சரி தமிழ் வேறு எழுத்துருவில் எழுதப் பட்டு இருக்கிறதா என கொஞ்சம் தேடியதில். தமிழ் மலையாளம் அரபியில் சில நூற்றாண்டுகளாக எழுதப் பட்டதும்,பிறகு அது வழக்கொழிந்து போனதும் அறிய முடிந்தது.

இதன் காரணம் என்ன ? 
அரபியில் 28 எழுத்துகள் மட்டுமே உண்டு. அரபி எழுத்துருவில் எழுதப்படும், உருது, பெர்சிய மொழிகளுக்கு கூட இன்னும் எழுத்துகள் சேர்த்தே பயன் படுத்துகின்றனர். அதே போல் தமிழை,மலையாளத்தில்  அரபி எழுத்துருவில் எழுத  சில எழுத்துகள் சேர்க்கப்பட்டன.


இதனை பிற அரபி எழுத்துரு பயன்பாட்டாளர்கள் அறிந்து பயன்படுத்தாமையால் மட்டுமே வழக்கு அழிந்து போனது.

அரபியில் எழுதப் பட்ட தமிழ் அரவி எனப்பட்டது. விக்கி பாருங்கள்.

 
அரபியில் எழுதப் பட்ட மலையாளம் அரபி மலையாளம் எனப்பட்டது. விக்கி பாருங்கள்.

ஆகவே முடிவாக என்ன சொல்கிறோம்?

1. ஐரோப்பிய,மத்திய கிழக்கு எழுத்துருக்கள் இந்திய மொழிகளில் உள்ள‌ ஒலி அமைப்புக்களுக்கு ஏற்றது அல்ல.ஒருவேளை புதிய எழுத்துகள் உருவாக்கினால் அது அனைவருக்கும் பலன் அளிக்காது.


2. ஒரு எழுத்துரு சில மொழிகளுக்கு பொருந்தினாலும் கூட சமூக,அரசியல் காரணங்களுக்காக ஏற்கப் படுவது இல்லை. கன்னடம் ,தெலுங்கு மொழி எழுத்துருக்கள் மிக மிக ஒத்த எழுத்துரு என்றாலும் கூட ஒன்றுபட முடியவில்லை.

3.இந்திய மொழிகள் அனைத்தையும் தமிழ் கிரந்தத்தில் எழுதினால் தமிழர்கள் அனைத்து இந்திய மொழிகளையும் எளிதில் கற்க ஏதுவாக இருக்கும் என்பதால் அனைத்து இந்திய மொழிகளையும் தமிழ் கிரந்தத்தில் எழுத நாம் பரிந்துரை செய்கிறோம்.

பின் குறிப்பு

ஏன் தமிழ் கிரந்தம் என பதிவில்சொல்கிறோம் என்றால் சிலர் தமிழில் 4,4 த இல்லையே என கதை சொல்வதை தவிர்க்க மட்டுமே!!

நன்றி!!!!