Saturday, November 30, 2013

தலைவர்களும், தொண்டர்களும், அப்பாவிகளும்வணக்கம் நண்பர்களே,
கடந்த சில நாட்களில் நடந்த சில சம்பவங்கள் குறித்து எழுத வேண்டும் எந்த் தோன்றியது.இப்பதிவில் குறிப்பாக 
1. திரு சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு,
2.திரு தருண் தேஜ்பால் மீதான பாலியல் முறைகேடு வழக்கு

என்பதைப் பற்றியும் இது போன்ற கடந்த சில வரலாற்று நிகழ்வுகள் சார்ந்து பரிணாம பார்வையில் சிந்திப்போம்.

முதலில் திரு சங்கரராமன் வழக்கில், காஞ்சி வரதராஜபுர பெருமாள் கோவில் மேலாளர் ஆக பணியாற்றியவர். காஞ்சி மடத்தில் நடந்த நிதி,பாலியல் முறைகேடுகளைக் கண்டித்து கடிதம் (புனை பெயரில்)எழுதி கண்டித்து வந்தவர். அவரது கொலை(September 3, 2004) வழக்கில் குற்றம் சாட்டபட்ட சென்ற வார (27-Nov-2013) தீர்ப்பின் படி அனைவருமே விடுதலை ஆனார்.
அந்த வழக்கில் நடந்த முக்கிய திருப்பங்கள் காலக் கணக்கின் படி இங்கே படியுங்கள்.


தெஹல்கா ஊடக பொறுப்பு ஆசிரியர் திரு தருண் தேஜ்பால், பணியாற்றிய சக பெண் பத்திரிக்கையாளருக்கு   பாலியல் தொல்லை கொடுத்தமைக்கு கைது செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. தெஹல்கா ஊடகம், கிரிக்கெட் சூதாட்ட முறைகேடுகள் ,பாஜக தலைவர் பங்காரு இலட்சுமணண் கையூட்டு பெறுதல், கோத்ரா கலவரத்தை ரசித்து வர்ணித்த பாபு பஞ்ரங்கி போன்றவற்றை அம்பலப் படுத்திய நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.


திரு சங்கரராமன் வழக்கில் அவர் எழுதிய கடிதங்கள் அடிப்படை என்றால்,திரு தேஜ்பாலின் வழக்கில் அவர் தெஹல்ஹா நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்திரிக்கு மன்னிப்பு கேட்டு அனுப்பிய மின் அஞ்சல் காரணம்.
நிற்க கொஞ்சம் பொதுவாக சில விடயங்களை அலசி விட்டு மீண்டும் இந்த இரு சம்பவங்களுக்கும் வருவோம்.

மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் முதன்மை நோக்கம் சூழலுக்கு தகுந்தப்டி உயிர் வாழ்தலே. உயிர் வாழ்தலுக்கான போட்டியில்  உயிரினங்களுக்கிடையே சண்டை ஏற்படுவது மிக இயல்பானது.

உயிரின‌ங்கள் உணவு,நீர்,இருப்பிடம், பாலியல் துணை போன்றவற்றுக்கு சண்டையிட்டு ,உயிர் பலி ஏற்படுவதும் மிக இயல்பான விடயம் ஆகும். அந்த உயிரினங்களுக்கு ஒவ்வொடு நொடியும் உயிர் வாழ்வதே பெரிய சிக்கல் ஆகும்.

உடனே எறும்புகள், தேனீக்கள் போன்ற்வை ஒற்றுமையாக வாழ்வது இல்லையா என எதிர்க் கேள்வி கேடகலாம் என்றாலும், பெரும்பான்மை உயிர்கள் எப்படி வாழ்கின்றன என்பதைப் பொறுத்தே சிந்திக்க வேண்டுகிறேன்.

விலங்குகளின் வாழ்க்கை போராட்டத்தை அறிந்தாலே ஆண்டவனின் அற்புதப் படைப்பு அல்ல உயிரின‌ங்கள் எனப் புரிந்து விடும்.

மனிதனின் ஒரு விலங்கு என்பதால் இயற்கை வளங்களின் மீதான நுகர்வு போட்டியில் சக மனிதர்கள், இயற்கையுடன் போட்டியிட்டு பாதிப்பை ஏற்படுத்துவது அனைவரும் உணரும் விடயம்.

விலங்குகளின் தேவைகள் மிக குறைவு ஆனால் மனிதன் அறிவு மிக்கவன் என்பதால் அவனது ஆசைக்கு எல்லையில்லை.

வலிமை வாய்ந்தவர்கள் பிற மனிதர்களைக் கட்டுப்படுத்தி அவர்களின் உழைப்பை சுரண்டி வாழ உருவாக்கியதே பரம்பரை மன்னராட்சி, கடவுளின் பிரதிநிகளாம் மத குருக்கள்.

மன்னன்,மதகுருக்களின் கூட்டணி மக்களை ஏய்த்துப் பிழைத்தது. இவர்களின் வீணான கொள்கைகளால்,ஆசைகளினால் எழுந்த போர்கள் ,உயிர்ப் பலிகள் கோடிக்கோடி.

காலப் போக்கில் மன்ன‌ராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி,பொது உடமை போன்ற ஆட்சி முறைகளும் வழக்கத்தில் வந்தாலும் அதிலும் ,சர்வாதிகார போக்கும், சுரண்டும் மனப்பானமை கொண்ட த்லைவர்கள் உருவாகி மன்னன்+ மத குரு கூட்டணியின் ஏமாற்றுத் தனங்களுக்கு சற்றும் குறையாத பாதிப்புகளை ஏற்படுத்தினார்கள்.


நல்ல தலைவர் என்றால் சுய‌தேவைகள் ,மிகக் குறைவாக கொண்டவர்,வெளிப்படையானவர்,சாதி,மத,இனம்,மொழி,குடும்பம்  சாராமல் அனைவரையும் ஒன்று போல் பாவிப்பவர், அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதரம், சுயமரியாதையுடன் கூடிய பாதுகாப்பு வழங்குபவர் என வரையறுக்கலாம். 

இப்படிபட்ட மனிதர்கள் வரலாற்றில் மிக மிக...மிக அபூர்வம்.அப்படி இருப்பவர்கள் சொந்த குடும்பம்,நண்பர்களினால் முதுகில் குத்தப்ப்படும் வாய்ப்பே அதிகம்.

நல்லவன் தேவையில்லை,(மாற்றுத் த்லைவனை விட)நல்லவன் என தலைவனை பெரும்பான்மை  நினைத்தால்(நினைக்க வைத்தால்) போதும் என்பதே இபோதைய அரசியல் சிந்தாந்தம்!!!

கடந்த நூற்றாண்டில் ஊடகமும் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு ஆற்ற ஆரம்பித்தது.ஒரு தலைவனின் பிம்பத்தை கட்டி அமைப்பதில் ஊடகங்களின் பங்கு மிக அதிகம். ஊடகங்களும் அரசியல்,மதம் போல் மக்க்ளை ஏமாற்றி சுரண்டும் அமைப்பு ஆன‌தில் வியப்பு இல்லை.
ஆகவே அரசியல் தலைவர்கள்,மதத் தலைமைகள் பதவி, பணம் போன்றவற்றுக்கு ஆசைப்படுபவர்களாக இருப்பதும், வெளியில் ஒரு வேடமும் உள்ளே ஒரு வேடமும் தரிப்பவர்களே அதிகம்.

மதங்களுக்கு,அவை சொல்லும் கதைகளுக்கு மத புத்தகங்களுக்கு சான்றுகள் இல்லை என்றாலும் மதம் என்பது ஒருவரின் அடையாளம் சார் வாழ்வு முறை என்பதால், மதம் என்பதை பலரால் கைவிட முடியவில்லை.

மதம், மதகுருக்கள் எது செய்தாலும் சரி என்னும் போக்கு ஒரு நம்பிக்கையாளனின் மிக இயல்பான  செயல் ஆகும்.

அவர் அப்படி  செய்யவில்லை!! இல்லை எனில் ,அவர் ஏன் அப்படி செய்தார்? என விளக்கியே  பணம் சம்பாதிப்பதே மத பிரச்சாரகர்களின் முக்கிய பணி ஆகும்.இராமர் கோயில் விவகாரம் பாஜவை இந்தியாவை ஆளும் கட்சியாக மாற்றிய என்பது, மத நம்பிக்கை எவ்வளவு வல்லமையான ஆயுதம் என்பதை அறியலாம்.

ஆகவே மத குரு எப்படி இருந்தாலும் எதார்த்த‌ நோக்கு அடியார்கள் கைவிட மாட்டார்கள் அதே போல் அரசியல் த்லைவன் எத்த‌னை வழக்கில் சிக்கினாலும்,கையும் களவுமாய்ப் பிடிபட்டாலும் எதார்த்த‌ நோக்கு தொண்டர்களும் விட்டுக் கொடுக்க மாட்டர்கள்.


இதில் இன்னொரு விடயமும் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும், மத தலைமைக்கோ, பிரச்சாரகருக்கோ மதம் என்பது பிழைப்புவாதம் மட்டுமே.இவர்களுக்கு நம்பிக்கை உண்மையில் இருக்காது. அதே போல் அரசியல் தலைமைக்கோ,பிரச்சாரகர்களுக்கும் தங்களின் சித்தாந்ததிலும் நம்பிக்கை இருக்காது.

இந்த சம்பவங்கள் போல் பல சம்பவங்கள் வரலாற்றில் பார்க்கலாம். மத த்லையை விமர்சித்தால் மரண தண்டனை என்பது இன்னும் உள்ள நாடுகளும் உண்டே!!!


ஊடகங்கள் ,அரசியல் தலைகளின் அடியாள்களாக,தரகர்களாக மாறி மாற்றுக் கட்சியினரின் அயோக்கியத் தனங்களை மட்டும் பிரச்சாரம் செய்கிறார். இவர்களும்  ,தன் மதத்தின் குறைகளை மறைத்து பிற மதங்களை தூற்றும் மத பிரச்சாரகன் போன்றவர்களே.

ஆகவே அயோக்கியத் தலைவர்கள் அரசியல்,மதம் மற்றும் ஊடகங்களில் உண்டு.அவர்களை கண்ணை மூடி(ஹி ஹி சில சமயம் திறந்தும்) ஆதரிக்கும் எதார்த்தவாத தொண்டர்களும் உண்டு.

இதில் அடங்காத அப்பாவிக் கூட்டம் ஒன்று உண்டு. மேலே சொன்ன சம்பவங்களில் திரு சங்கரராமன், பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் இருவருமே அந்த அப்பாவிகள்.

திரு சங்கரராமன் மதம்,கடவுள். கட்டுப்பாடு , தர்மநியாயங்கள் போன்ற்வற்றை நம்பினார். அதற்காக குரல் கொடுத்தார்.குரல் நசுக்கப்பட்டது.

தெஹல்காவிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க அவர் ,மேலதிகாரியிடம் முறையிட  அவரின் குரலும் நசுக்கப்பட்டு அது ஒரு மன்னிப்பு மின் அஞ்சலாக மட்டுமே முடிந்தது. அது வெளிவந்து  தெஹல்காவின் ஊடக தரகு வேலையில் பாதிக்கப்பட்டோரின் எதிர்வினையாகி மட்டுமே வழக்கு நடக்கிறது.இதில் தேஜ்பால் தண்டிக்கப்படுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. சில வருடம் சங்கராமன் வ்ழக்கு போல் இழுத்தால் இதுவும் இன்னொரு தரகு வேலையில் மறக்கடிக்கப்படும்.அப்புறம் வழ்க்கு அவ்வளவுதான்!!!.

ஆத்திக மதகுரு தப்பிக்க நாததிக அரசியல் தலைமை உதவி செய்தது எதைக் காட்டுகிறது???
இதுவரை எத்த‌னை அரசியல்,மத,ஊடக தலைமைகள் இந்தியாவில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கின்றன? ஆகவே இந்த நிகழ்வுகள் ஏதோ விதி விலக்கு அல்ல!!!

மதம் அரசியல்,ஊடகம் பிழைப்புவாதம் மட்டுமே!!!

ஆகவே மதம் அரசியல், பணியாற்றும் இடத்தில் அப்பாவிகளாக இருப்பதை தவிர்ப்பது நன்று!!

பலருக்கு மதம்,அரசியலில் நேரடியாக பாதிக்கப்ப‌டாமல் இருக்கலாம் என்றாலும்,பணியாற்றும் இடங்களில் நடக்கும் பாலியல் முறைகேடுகள் தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம்.

இப்படித்தான் செய்ய வேண்டும் என சொல்வது கடினம்.ஆனால் பாலியல் முறைகேடுகளை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிடுதல் நல்லது.

உங்களின் வாழ்வு,சுய மரியாதையை காப்பாற்றும் வகையில் அனைவரிடமும் பழகுங்கள் என்று மட்டுமே சொல்ல விழைகிறேன்.


நன்றி!!

11 comments:

 1. சங்கரராமன் குற்றம் செய்யதா நபராக இருந்தால் கடவுள் அவருக்கு செர்க்கத்தை தருவார். ஜெயந்திரர் குற்றவாளியாக இருந்தால் அவருக்கு நரநெருப்பை தண்டனையாக தருவார். ஒன்றை நீங்கள் விரும்பலாம் கடவுள் அதற்க்கு மாறாகவும் நீங்கள் ஒன்றை வெறுக்கலாம் கடவுள் அதற்க்கு மாறாகவும் நடந்து கொள்ளலாம். அவனே அணைத்தும் அறிந்தவன் என்பதால் கடவுறை நம்புபவர்கள் சான்றுகளின் அடிப்படையிலான தீர்ப்பையும் நம்பி ஏற்றுக்கொண்டுதான்! ஆகவேண்டும் வாழ்க சனநாயகம்!! மன்னிக்க, சங்கரராமனின் ஆன்மா!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ ஆன்ட்,
   உங்களின் மார்க்க அறிவு புல்லரிக்க வைத்தாலும், இப்போது கருத்து சொல்ல முடியாது!!!!

   இருந்தாலும் வாழ்த்துக்கள்!!!

   நல்லா வருவீங்க!!!

   நன்றி!!!

   Delete
  2. இந்த தளத்தையும் இறையில்லா இஸ்லாம் தளத்தையும் ரிசானா நபிக் தலைதுண்டிப்பு சம்பவமே அறிமுகப்படுத்தியது. ரிசானா குறித்து கூறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே இது அமைந்தது. தீர்ப்பு குறித்து நீதிதுறையின் செயல்பாட்டடை குற்றம் கூற வழியில்லை அதே வேளை குற்றம் நடக்க வில்லை என வாதிட வில்லை. சங்கரராமனின் குடும்பத்தினரே சாட்சியம் அளிக்காத நிலையில் தங்கள் குடும்ப உறுப்பினருக்காக மற்றவர்கள் சாட்சி கூறுவார்கள் என்றும் அதன் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்று விட்டது ஏற்புடையதல்ல. மீண்டும் விசாரனை நடந்தாலும் இவர்கள் அப்போதும் உறுதியாக இருப்பார்கள் என கூற இயலாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் அதோடு தொடர்பில் உள்ளவர்களை எதிர்பது என்பது தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது என்பது இந்த வழக்கு ‌சொல்லும் சேதி! கடவுளை நம்புவதாக கூறபவன் உண்மையில் நம்பவில்லை என்பதற்கு இது எடுத்துக் காட்டு.

   Delete
 2. ////மத தலைமைக்கோ, பிரச்சாரகருக்கோ மதம் என்பது பிழைப்புவாதம் மட்டுமே.இவர்களுக்கு நம்பிக்கை உண்மையில் இருக்காது. அதே போல் அரசியல் தலைமைக்கோ,பிரச்சாரகர்களுக்கும் தங்களின் சித்தாந்ததிலும் நம்பிக்கை இருக்காது.////
  ஆம் இவர்கள் உங்களை போன்ற பகுத்தறிவாளர்கள் .உங்களை போன்ற பகுத்தறிவாளர்களும் இப்படித்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள் .ஆனால் சிலர் சிக்கிக் கொள்கிறார்கள் .மத நம்பிக்கையே ,பெரும்பானமையான மக்களை நெறிமுறைகளுடன் வாழ வைக்கிறது

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ அஸ்ஸலாமு அலைக்கும். நலமா?
   நீங்கள் சொல்வதில் ஒரு சின்ன திருத்தம்.

   /மத நம்பிக்கையே ,பெரும்பானமையான மக்களை (மதம் வரையறுக்கும்) நெறிமுறைகளுடன் வாழ வைக்கிறது /

   மூமின்களுக்கு முக்மது(சல்) அவர்கள் ஒரு முழுமையான வாழ்வின் மாதிரி (குரான் 68.4&33.20என்பதால் அவர் செய்தது அனைத்தும் மூமின்களுக்கு சரியாக தெரியம். தெரிந்தால் மட்டுமே முஸ்லீம்.

   ஆனால் காஃபிர்களூக்கு அவர் அப்ப்டி தெரிவது இல்லை என்பது சுடும் உண்மை.

   ஆகவே ஒழுக்கத்தின் வரையறை சார்பியல் சார்ந்தது!! மதம் சார்ந்து,கொள்கை சார்ந்து வித்தியாசப்படும்.

   நன்றி!!

   Delete

 3. ///நல்ல தலைவர் என்றால் சுய‌தேவைகள் ,மிகக் குறைவாக கொண்டவர்,வெளிப்படையானவர்,சாதி,இனம்,மொழி,குடும்பம் சாராமல் அனைவரையும் ஒன்று போல் பாவிப்பவர், அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதரம், சுயமரியாதையுடன் கூடிய பாதுகாப்பு வழங்குபவர் என வரையறுக்கலாம்.////
  இதற்கு ஒரே எடுத்துக் காட்டு முஹம்மது நபி[சல் ]அவர்கள்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,

   மீண்டும் முதலில் இருந்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   அண்ணன் யூதக் கைக்கூலி என சுன்னத் ஜமாத் சகோக்கள் சொல்வது போல்,நீங்கள் இந்துத்வ கைக்கூலியோ என் நான் ஐயப் படுகிறேன். ஏதாவது கருத்து சொல்லி என்னை குரான்,ஹதித் அடிப்படையில் இஸ்லாம்,முகமது(சல்) அவர்களை விமர்சனம் செய்ய வைப்பதால் சொல்கிறேன்.

   பாவம் சங்கரராமன் அய்யா, அப்பாவியாய் கொலை செய்யப் பட்டார். அதைப் பத்தி எதுவும் சொல்லாமல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
   அவர் என்ன மூமினா!!!

   வாழ்க வளமுடன் நன்றி!!!

   Delete
  2. நம்ம இப்பு "மத" என்ற வார்த்தையை மட்டும் லாவகமாக ஒதுக்கிட்டாரு.

   ///சாராமல் அனைவரையும் ஒன்று போல் பாவிப்பவர், அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதரம், சுயமரியாதையுடன் கூடிய பாதுகாப்பு வழங்குபவர் என வரையறுக்கலாம்.////

   ஏனென்றால் முகமது மற்றும் அவரது ரசிகர் மன்றத்தினர் மத அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது, தனது மதத்தை சாராதவர் வாழவே கூடாது என்ற அடிப்படையில் செயலாற்றுவது, தனது மதத்தை சாராதவர்களை மனிதனாகவே மதிக்காமல் இருப்பது. பாதுகாப்பு வேண்டுமானால் ஜிஸ்யா வரி கட்ட சொல்வது என்று எல்லா விதமான பாகுபாடையும் பார்ப்பதை இப்புவும் ஆதரிப்பதால்தான் "மத" என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிரார்.

   Delete
 4. சர்ர்வாகன்:
  தற்பொழுது நான் எழுதியுள்ள " பாலியல் தொழில் குற்றம் என்று இந்தியாவில் சட்டத்தை மாற்றுங்கள்-முதலில்! " விபசாரம் இந்தியாவில் குற்றம் இல்லை என்று இருந்தது; நேற்று அதை யாரோ மாற்றி prostitution is illegal என்று எழுதியுள்ளார்கள். என் பின்னூடத்திலும் இருவர் எழுதியுள்ளார்கள்.
  நீங்கள் இதைப் பற்றி ஒரு முறை எனது பழைய பதிவில் மறுமொழி இட்டீர்கள்.


  உங்களிடம் வேறு சுட்டி இருந்தால் என் பதிவுக்கு வந்து அதை பின்னூட்டமாக எழுதுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் நம்பள்கி,
   நம் சட்டம் ஒரு கழுதை மாதிரி முன் சென்றால் கடிக்கும்,பின் சென்றால் உதைக்கும்.

   விபசாரம் குற்றம் இல்லை ஆனால், எந்த வழிகளில் அது நடக்குமோ அதெல்லாம் குற்றம் ஹி ஹி.

   காவல்துறையும்,வழக்கறிஞர்களும் வாழ வேண்டாமா?
   http://news.bbc.co.uk/2/hi/talking_point/debates/south_asian_debates/1459792.stm
   In India it is not illegal to have sex for money. But the law does prohibit certain activities connected with the trade such as pimping, trafficking, brothel keeping and soliciting for sex.

   Thank you

   Delete
  2. பின்னூட்டத்திற்கு நன்றி!

   Delete