Wednesday, January 30, 2013

சார்பியலின் அடிப்படை லோரன்ஸ் மாற்றி சமன்பாடு[Lorrenz Transformation]
வணக்கம் நண்பர்களே,

ஃபெர்மி தொலைநோக்கி கருப்பு பொருளை கண்டுபிடிக்குமா பதிவில் , நமது அன்புக்கும்,பாசத்துக்கும் உரிய மாப்பிள்ளை, ஆன்மீக செம்மல், தமிழ்மண  கீதோபதேசிகர் ஜெயதேவ் தாஸ் ஐன்ஸ்டினின் பொது சார்பியலின் கணித சமன்பாடுகளை பின்னூட்டத்தில் விளக்க சவால் விட்டார். அதாவது ஐன்ஸ்டினின் பொது சார்பியல் சமன்பாடுகள் அடிப்படையில் ஈர்ப்பு விசை, இடப் பெயர்ச்சி எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதே கேள்வி. நியுட்டனின் விதியின் படி சுலப‌மாக கண்க்கிட முடியும் என்றாலும் ,ஐன்ஸ்டினின் விதிப்படி எப்படி என்பது மிகவும் அருமையான கேள்வி.

நியுட்டனின் விதி எளிய சூத்திரம் படம் பாருங்கள்!!


ஈர்ப்பு விசை காணும் சூத்திரம் படங்களில் விளக்கப்பட்டது. பூமியை நோக்கி விழும் பொருள் 'g' என்னும் முடுக்கத்தில் பூமியை நோக்கி விழுகிறது, தூரத்திற்கும்,நேரத்திற்கும் உள்ள தொடர்பினை இப்படி கூறலாம்.

g=GM/R^2=9.81 m/s^2

Distance s = 1/2 g t2     

Velocity v = g t
  

நியுட்டன் விதி பற்றி சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் விவாதிப்போம்.

***

ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கொள்கை பிரபஞ்சத்தை கால வெளி அமைப்பாக[space time structure] வரையறுக்கிறது. அந்த கால வெளியின் அமைப்பை சமன்பாடுகள் ஊடாக ,அதில் ஏற்படும் மாற்றமே கால&இடப்பெயர்சி என வரையறுக்கிறது.

நமக்கு எதையும் மேலே சொன்னது போல்  பொத்தாம் பொதுவாக, பட்டும் படாமல் மேலோட்டமாக  சொல்வதில் விருப்பம் கிடையாது.

தெளிவாக புரிந்து கணக்கீடு செய்யும் வண்ணம் மட்டுமே விளக்கம் வேண்டும் என்பதும், வரும் மாறுபட்ட கருத்துகள் ஆவணப் படுத்தி ஒவ்வொன்றுக்கும் வரி விடாமல் பதில் அளிக்க வேண்டும் என்பதும் நம் கொள்கையே!!.

ஆகவே சார்பியல் பற்றி கணிதரீதியாக விளக்கும் ஒரு முயற்சி, தொடர்ந்து எழுதுவேனா என்பதை விட, ஒவ்வொரு பதிவிலும் ஒரு குறிப்பிட்ட அடிப்படை விடயத்தை விளக்குவது என முடிவு செய்து இருக்கிறேன்.

இந்த பதிவில் கால வெளி என்றால் என்ன என்பதையும் ,அதன் மீது செய்யப்படும் லோரன்ஸ் மாற்றம் பற்றியும் அறிவோம்.

ஒரு வகுப்பில் பாடம் எடுப்பது என்றால் அதில் உள்ள மாணவர்கள் ஏற்கெனெவே இப்பாடத்துக்கு  தெவையான அடிப்படை விடயங்கள் அறிந்து இருப்பார்கள் என்னும் நம்பிக்கையில் மட்டுமே பாடத்தை தொடங்குகிறோம்.

ஆனால் ஒரு பொதுவான இணையத்தில் கணிதரீதியாக சொல்ல முயலும் போது இந்த நம்பிக்கை கொள்ள இயலாது. எனினும் ஒரு 10வது படித்தவர் புரிந்து கொள்ளும் அளவில் எழுத வேண்டும் என்பதே நம் முயற்சி , வழக்கம் போல் விவாதித்து, சீர் திருத்தி ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.

சந்தேகங்கள் எதனையும் பின்னூட்டத்தில் கேளுங்கள்!!. இயன்ற வரை பதில் அளிப்பேன்!.

சரி முதலில் கால வெளி என்றால் என்ன என அறிவோம்.

காலம் என்றல் நேரம், வெளி என்றால் இடம். ஒரு இடத்தை எப்படிக் குறிப்போம். ஜி.பி. எஸ் பயன்படுத்தும் காலம் என்பதால் பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தை அதன் அட்சக் கோடு ,தீர்க்க கோடு [Latitude and Longitude ] வெட்டும் இடம் எனவும், இதில் காலமும் மாறும் என்பதை நாம் அறிவோம்!!.

இதன் அடிப்படை  க்ராஃப் தாள்[Graph Sheet] எனப்படும் வரைபடத்தாளில்  புள்ளிகள் குறித்தல். இவை  கார்டிசியன்[Cartesian] ஆயத் தொலைகள் என்ப்படும். க்ராஃப் தாள் இரு பரிமாணம் கொண்டது அதாவது இரு செங்குத்தான அச்சுகளை[X,Y] அடிப்படையாக கொண்டு, புள்ளியின் செங்குத்து தூரங்கள் அளவில் புள்ளிகள் குறிக்கப் படுகின்றன‌.
      
 
இரு பரிமாணம்                                                 முப்பரிமாணம்


இப்போது லோரன்ஸ் மாற்றம் பற்றி மட்டுமே அறிய முயல்வோம்!!

சார்பியலைப் பொறுத்தவரை அடிப்படை என்னவெனில் நமக்கு நாம் 100% நல்லவர்கள், நம்மிடம் எப்படி பிறர் நடப்பதாக நினைக்கிறோமோ அது சார்ந்தே  அவர்கள் பற்றிய மதிப்பீடு வருகிறது!!

அது போல் பிரப்ஞ்சத்தில் உள்ள  ஒரே இயகத்தில் உள்ள தளத்தின்[plane] ஒவ்வொரு புள்ளிக்கும் ,[தள] ஆதாரப் புள்ளி சார்ந்து  முப்பரிமாண ஆயத்தொலைகள் 3, கால அளவு உண்டு.

Space Time ST=[x,y,z,t]


எ.கா ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் உங்கள் இருக்கையின் S6, 36 என்றால் இரயிலில் உங்கள் இடம் குறிக்கிறது.

இப்போது இன்னொரு இயக்கத்தில் உள்ள  தளத்தின் புள்ளிகள் வேறு கால்வெளியில் இருக்கும்.

ST1=[x',y',z',t']

இப்போது ஒரு இயக்க தளத்தில் இருந்து இன்னொரு  இயக்க தளத்தின் இயக்கம் கணக்கிடும் போது  கால வெளியின் மாற்றம் லோரன்ஸ் மாற்ற சமன்பாடுகள் ஆகும்.மேலெ காட்டப் பட்டுள்ள தளத்தை[Frame or Plane] எடுப்போம். இதில் நிலையான தளம் இரயில் ப்ளாட்ஃபார்ம் என எடுப்போம், நகரும் தளம் இரயில் என எடுப்போம்.

எளிதாக இருக்க இரயில் 'X' திசையில் மட்டும் நேராக செல்வதாக எடுப்போம்.

இப்போது லோரென்ஸ் சமன்பாடுகள்  இப்படி இருக்கும்!!!!


                                          
Direct Transformation                                         Reverse Transformation

இதில் என்பது v இரயிலின் வேகம், c என்பது ஒளியின் வேகம் ஆகும்.
 c=3x10^8 m/s[ approx]


c = 299,792,458 ± 1.2 m/s


நீங்கள் நிற்கும் இடத்தை ஆரம்ப புள்ளி[Origin] எனக் கொண்டால் 10 வினாடி கழித்து
இரயில் இயக்கம்  உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

x=0,y=0,z= 0, t=10 , v=108 km/hour எனில் x',y',z',t'=?

v=30m/sec

x'=-300.0000000001 mts[ - indicates direction]
y'=0
z'=0
t'=10.00000000000001

இப்போது இரயிலில் இருந்து உங்கள் இயக்கம் கணக்கிட்டால்

x'=0
y'=0

z'=0
t'=10

x=300.0000000001 mts[ - indicates direction]
y=0
z=0
t=10.000000000000011

Approximate calculations!!


வியப்பாக இல்லை!!

உங்களுக்கு 10 வினாடி இரயிலில் உள்ளவருக்கு உங்களைப் பொறுத்து சிறிது மாறுபட்டு வருவது சார்பியலின் அடிப்படை.

வித்தியாசம் மிக குறைவாக இருப்பதால் இரயில் ஒளியின் வேகத்தில்  60% செல்கிறது என எடுப்போம்.
v=0.6 c


x'=-6*c/0.8=--7.5*c mts=-21.6*10^8 mtsy'=0z'=0t'= 10/0.8=12.5 seconds!!!


இன்னும் நிறைய விடயம் உண்டு என்றாலும் இப்போது இத்தோடு நிறுத்துகிறேன்!

வரும் கேள்விகளை ,பதில்களை அடுத்த பதிவாக்குகிறேன்

இந்த சூத்திரம் எப்படி வந்தது?. இதைக் கொண்டு ஒளியின் வேகத்தை மீறவே முடியாது என நிரூபிக்க முடியும் என்பதையும் அடுத்த பதிவில் பர்ப்போம் லோரன்ஸ் மாற்ற சமன்பாடுகள் புரிந்தத என்பது மட்டுமெ நம்து கேள்வி!!

விவாதிப்போம்!!

நன்றிMonday, January 28, 2013

சவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்!!!வணக்கம் சவுதி தொண்டர்களே ,

தமிழ்மணமே அதிரும் வண்ணம் நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாய் அழகாய் தாவா பணி ஆற்றுவதற்கு வாழ்த்துக்கள்.

உங்களின் ஆன்மீக குரு அண்ணன் பி.ஜே அவர்கள் சகோதரி ரிசானா நஃபீக்கின் மரண தண்டனை குறித்து வழக்கம் போல் பொய் சொல்லி இருப்பதை நாம் அம்பலப் படுத்துகிறோம்.


அதாவது ரிசானா நஃபீக் கொல்லப்பட்டதாக சொன்ன குழந்தைக்கு சவுதி அரசு போஸ்ட் மார்ட்டம் செய்யவில்லை. தண்டனை அவள் புரியாமல் கையொப்பமிட்ட ஒப்புதல் வாக்குமூல அடிப்படையில்தான் வழங்கப்பட்டது.Nafeek was 17 years old when she arrived to work in Saudi Arabia on 4 May 2005. It is alleged by her parents that her passport was forged to adjust the year of birth to 1982,[3] to avoid rules stopping those under the age of 18 being recruited in Sri Lanka for work abroad. She began work as a domestic helper in Dawadamissa, about 400 kilometres from Riyadh.
[edit]Infant's death

On 22 May 2005, her employer's four-month-old child Naif al-Quthaibi died while in Nafeek's care. Nafeek was accused of murdering the child by smothering him following an argument with his mother.[4] Nafeek claimed that she believed the baby had choked on a bottle by accident during feeding.[5][6][7][8] The baby's parents and Saudi police insisted that Nafeek was guilty of murder.[9]
It was revealed that the Dawdami police failed to take the dead infant for a postmortem to determine for certain the cause of its death.[10]Rizana Nafeek Sentence to Death Without a Postmortem Report ASIAN TRIBUNE


ஆகவே இறந்த குழந்தைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப் பட்டது என அண்ணனிடமோ அல்லது சவுதி அரசிடமோ தகவல் வாங்கி அத்னை பதிவிட 
வேண்டுகிறோம்.

இதற்கிடையில் அண்ணன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு சவுதிக்கு ஆதரவாக  எழுதிய கட்டுரையில் குழந்தைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ததாக குறிப்பிடுகிறார்.


டில்லியில் கொலை செய்யப் பட்ட பெண் பற்றி அவதூறு பேசும் பி.ஜே!
போஸ்ட் மார்ட்டம் நடந்ததாக பொய் கூறும் பி.ஜே!!எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட அறிவுஜீவிகளை மிருக புத்திரன் என்பது,  அவர் மிருகங்கள்  மனிதனைப் பிரசவிக்கும் என நம்புவதைக் காட்டுகிறது. இதற்கு குரான் ஹதிதில் ஆதாரம் உண்டா எனவும் நிரூபிக்க வேண்டுகிறோம்.
மீண்டும் நினைவுறுத்துகிறோம்.

1. குழந்தையின் போஸ்ட் மார்ட்ட அறிக்கை.

2. மிருகங்கள் மனிதனை பெற்று எடுப்பதற்கு குரான்,ச‌ஹீஹ் ஹதித் ஆதாரம் காட்ட வேண்டும்.

அண்ணன் ஏற்கெனெவே கூறிய பொய் ஒன்று!!

பி.ஜே. பொய் சொன்னாரா?


சவாலை ஏற்க தயாரா சவுதி சட்ட ஆதரவாளர்களே??

நன்றி!!

Sunday, January 27, 2013

எகிப்தில் உயிரின் விலை மிக மலிவு!!!
வணக்கம் நண்பர்களே,
மனிதர்கள் அனைவரும் மகிழ்சியாக, சுற்றம் நட்போடு சகல வளங்களும் பெற்று வாழ விரும்புகிறோம். வாழும் நாடுகளின் சூழல், இயற்கை வளங்கள் சார்ந்து பொருளாதார,சமூக ஏற்றத் தாழ்வுகள் இருப்பது கண்கூடு. இந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதரம்,சமூகப் பாதுகாப்பு, இயற்கை சூழல் மேம்பாடு என்பதை நோக்கி போராடும் எவரையும் நாம் ஆதரிக்கிறோம். இது அல்லாமல் சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்த, [மத] சட்டங்களைப் பயன் படுத்தி மனித உயிர்களை கொல்லும் எதனையும் எதிர்க்கிறோம்.

மத்தியக் கிழக்கில் தினமும் உயிர்கள் இன மோதல்,அரசுக்கு எதிரான போராட்டம் என உயிர்கள் பலியாவது ஒரு வழக்கமான நிகழ்வு ஆகிவிட்டது.ஆனால்  எகிப்து நாட்டில் நடந்த சில நிகழ்வுகளில் உயிர்கள் பலியானது கொஞ்சம் வித்தியாசமான விடயம்.இப்படியும் நடக்கிறதே என்ற வருத்தத்தோடு இத்னைப் பகிர்கிறோம்.


கடந்த வரும் பிப்ரவரி 1,2012ல் எகிப்து கெய்ரோவில் நடந்த கால்பந்து போட்டியில் இரு அணிகள்[Port Said-based al-Masry and the Cairo-based al-Ahly.] மோதின‌.
இதில் அல்‍_மேஷ்ரி வெற்றி பெற்றதும் ,அல்_மேஷ்ரி ஆதரவாளர்கள் எதிர் குழுவான அல்_அஹ்லி ஆதர்வாளர்களை கடுமையாக மைதானத்தில் தாக்க ஆரம்பித்தனர். இந்த மோதலில் 74 பேர் இறந்தனர்.

காவல்துறையால் வன்முறையை கட்டுப் படுத்த முடியவில்லை, சில நாட்களுக்கு கெய்ரோவில்  தொடர்ந்த வன்முறை, போராட்டங்களுக்கு  பின் 73 பேர் கைது[ எப்புடி ஒரு உயிருக்கு ஒரு உயிர் 74 பேருக்கு 73 பேர்!!] செய்யப் பட்டனர்.நேற்று இதற்கான நீதி மன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது . இதில் 21 பேருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது. மீதி 52 பேருக்கு மார்ச் 9,2013ல் வழங்கப்படும்.

இந்த தீர்ப்பு வந்ததும் கொலை செய்யப்பட்டவ்ர்களின் குடுமப்ங்கள் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாட, தண்டனை வழங்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கொதித்து சிறைச்சாலையை தாக்கி  அதில் காவல் துறை சுட்டு 30 போராட்டக்காரர்களும் ,2 காவல் அதிகாரிகளும் பலி ஆயினர்!!.


சரி இது இப்படி இருக்க ,சர்வாதிகாரி முபாரக் ஆட்சியின் மீதான வெறுப்பினால் ஆட்சிக்கு வந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் மோர்ஸி இதனை உணராமல் மத சார்ந்து அரசியல்மைப்பை மாற்ற முயல்கிறார். இதனை எதிர்க்கும் பொதுமக்கள் மேல் வன்முறை பிரயோகிக்கப் படுகிறது. இதிலும் சூயஸ் ல் நடந்த போராட்டத்தில் 7 பேர் இறந்தனர். முபாராக்கிற்கு எதிராக புரட்சி வெடித்து இரு ஆண்டுகள் ஆகி நிலைமை மோசமான‌து மட்டுமே மிச்சம்!!நான் சொல்வது என்ன?

1. விளையாட்டு என்பதை விளையாட்டாக பார்க்கத் தெரியாத சமூகங்கள். இருப்பது சரியல்ல!!. இந்தியாவிலும் சில நடந்து இருக்கிறது.ஆயினும் இந்த அளவு இல்லை. சிறு நாடுகளில் சிறு பிரச்சினையும் அதிக உயிர்களை பலியாக்குகிறது!!. விளையாட்டு வினையாகக் கூடாது!!

2. கலவரத்தை அடக்கத் தெரியாத காவல்துறை சரியாக குற்றவாளிகளை கைது செய்ததாம்!. அதுவும் சரியாக 74 பேருக்கு 73 பேர்.[ கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்,உயிருக்கு உயிர், இறைவனின் சட்டமாம்!!]

3. இதற்கு உயிர் இழந்தவர்களின் குடும்பங்களை சமாதானப் படுத்தவே இத்தண்டனை. அதனையும் கொண்டாடுகிறார்!!. மனித நேயம் வாழ்க!!

4. தண்டனை வழங்கியவர்கள் குடும்பத்தினர், இன்னும் இருக்கும் சட்ட வழிகளை [மேல் முறையீடு உள்ளது!!]பின்பற்றாமல் சட்டத்தை கையில் எடுத்து அதிலும் 30 பேர் பலியாக உயிர் என்பது விளையாட்டா?

உயிர் இழந்த அனைவருக்கும் நம் அஞ்சலி!!. எகிப்தில் அமைதி திரும்பட்டும்!
இப்படி நடக்கும் நாடுகளின் வழியில் இந்தியாவை கொண்டு செல்ல விரும் நம் சகோக்களை பார்த்து நகைக்க மட்டுமே முடியும். இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில் 10000ல் ஒருவர் கொலை குற்றவாளி என்றால் கூட
வருடத்தில் 120,000 கொலைகள் நடக்கும் வாய்ப்பு ஆனால் அப்படி இல்லையே!!

நம் மக்களின் இயல்பு அப்படி, அதற்காக அனைத்துமே நம் சமுகத்தில் சரி என்பது அல்ல,சாதி,மத ,இன உயர்வு தாழ்வு,ஒடுக்குமுறைகள், பொருளாதார பிரச்சினைகள்,ஊழல் உண்டு அதனை நம் மக்கள் பொறுமையாக சகித்து ஜனநாயக முறையில் மட்டுமே மாற்ற முயல்கிறார்.

நாம் சமூகத்தில் நடக்கும் தவறுகளை ஒத்துக் கொண்டு அதற்கு சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்வு காணவேண்டும். வேண்டிய சட்டத் திருத்தங்களுக்கும் ஆக்கபூர்வமான விவாதங்கள்,விளக்கம் ,மக்களின் பங்களிப்பு சார்ந்து முன் எடுத்து நாகரிக மக்களின் இந்தியா அமைப்பதே நம் கடமை!!.

நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த குடியரசு தினத்தில் இதனை உறுதி எடுப்போம்!

அனைவருக்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக,மதசார்பற்ற இந்தியா நாட்டின்  குடிமகனாக பெருமை கொண்டு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித் திருநாடு!!

நன்றி!!!
Friday, January 25, 2013

STAR WARS விளையாட்டுக்கு எதிராக இஸ்லாமிய மதவாதிகள் போராட்டம்!!

6117ba250cவணக்கம் நண்பர்களே,
 ஏதோ விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமை மிக கேவலமாக சித்தரித்து  இருப்பார்கள் போலத் தெரிகிறது ,ஆகவேதான் மூமின்கள் இப்படி போராடுகிறார்கள் என்ற எண்ணம் கொண்ட தமிழர்கள் இருக்க்லாம்.

ஸ்டார் வார்ஸ் லேகோ கேம் ஒன்று இஸ்லாமிய மதவாதிகளை கோபப் படுத்தி உள்ளது. ஆஸ்திரியாவில் பல துருக்கி முஸ்லிம்கள் வாழ்கின்றார். அந்த விளையாட்டில் வரும் ஒரு கோட்டை துருக்கியில் உள்ள ஹேகியோ சொஃபியா மசூதி போல் இருக்கிறதாம் ஹி ஹி!! . ஆகவே த்டை கோரி வழக்கு!!

ஆஸ்திரியாவுக்கு துருக்கியில் இருந்து பிழைப்பு தேடி வந்து  பொருளாதார நிலையில் முன்னேறி, குடியுரிமை,சம உரிமை போன்ற விடயங்கள் பெற்றும் சிந்தனை போகும் விதம் பாருங்கள்!!


Hagia Sophia (/ˈhɑːɪə sˈfə/; from the Greek:Ἁγία Σοφία [aˈʝia soˈfia], "Holy Wisdom"; Latin:Sancta Sophia or Sancta SapientiaTurkish:Ayasofya) is a former Orthodox patriarchal basilica, later a mosque, and now a museum in Istanbul,Turkey. From the date of its dedication in 360 until 1453, it served as an Eastern Orthodox cathedral and seat of the Patriarchate of Constantinople,[1] except between 1204 and 1261, when it was converted to a Roman Catholic cathedral under the Latin Empire. The building was a mosque from 29 May 1453 until 1931, when it was secularized. It was opened as a museum on 1 February 1935.[2]


[ compare two pictures!!]

இந்த மசூதி ஒரு சர்ச் ஆக இருந்து ,மசூதி ஆகி[How??],பிறகு அருங்காட்சியகம் ஆக்கப் பட்டது! இதுற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை!!!

இதுபோல்தான் விசுவரூபம் பிரச்சினை என்பது என் அனுமானம்!!

தமிழர்களுக்கு திராவிட அரசியலின் தாக்கத்தால் மதச்சார்பின்மை ஓவெர் டோஸ் ஆகிவிட்டது.  விசுவரூபம் சில விமர்சனங்கள் படித்ததில் அது ஒரு தீவிரவாதிக் குழு பற்றிய படம் எனத் தெரிகிறது.அதற்கு தீர்வும் சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது. எனினும் படத்தில் என்ன பிரச்சினை என்பதை பார்த்த பிறகு மட்டுமே அலச முடியும்!!

ஆகவே விசுபரூப பிரச்சினையில்  உண்மை அறிய  முயற்சிப்போம் மத்வாதிகளின் தந்திரங்களை முறியடிப்போம் நன்றி!!!
Thanks to
http://whyevolutionistrue.wordpress.com/2013/01/24/turkish-muslims-butthurt-about-legos-jabba-the-hut-castle-files-suit-for-defamation/

Thursday, January 24, 2013

நான் கமல் அவர்களை ஆதரிக்கிறேன்!!!

I Support Kamal Haasan


வணக்க நண்பர்களே,
இந்திய ஜன்நாயக ,மதசார்பற்ற நமது நாட்டின் சட்டங்கள் மட்டுமே நம்க்கு முதன்மையானது.நமது சமூகத்தில் எழும் சிக்கல்களை சட்டம் மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும்.

கருத்துகளின் வடிவம் புத்தகம்,பேச்சு,பதிவுகள்,திரைப்படம் என பல வகைகளில் வெளிவருகின்றன. இவற்றில் வாழும் நாட்டின் சட்டங்களுக்கேற்றபடி மட்டுமே அனுமதிக்கலாம். சில கருத்துகள் தடை செய்யப் படுகின்றன என்றாலும் அவை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே!!

அந்த வகையில் விஸ்வரூபம் நாட்டின் தணிக்கை சட்டங்களின் படி அனுமதி பெற்ற ஒன்று.ஆகவே படத்தை எதிர்ப்போர் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கிறார்கள் என்றால் தணிக்கை சட்டங்களில் வேண்டி மாற்றங்கள் குறித்து ஆக்க பூர்வமான விவாதம் நடத்தி தேவையான மாற்றம் கொண்டு வரட்டும்.

அதை விட்டு தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற தொனியில் செயல்படுவதும்,அதற்கு அரசு செவி சாய்ப்பதும் தவறான முன் உதாரணங்களையே ஏற்படுத்தும்.

இப்போது கூட எதிர்க்கும் மதத் தலைவர்கள் நீதிமன்றம் சென்று மட்டுமே தங்களின் வாதங்களை முன் வைக்க வேண்டுகிறோம். தேவையில்லாமல் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசு பாரபட்சம் காட்டாமல் ஒடுக்குவதே நாகரிக‌ சமூகத்தை காப்பாற்றும் வழியாகும்.

நான் கமல் அவர்களை இந்த விடயத்தில் ஆதரிக்கிறேன்.

என் கருத்தை ஆதரிக்கும் பதிவர்கள்  ஒரு பதிவிட்டு ஆதரவு காட்டுவது எதிர்காலத்தில் பலர் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்களை தவிர்க்கும்!!

நன்றி!!

Movie's Review

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் நெதன்யாகு ஆட்சி அமைப்பாரா?Isrel Primie Minister Benjamin Nethanyahuவணக்கம் நண்பர்களே,

நேற்று இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் வெளியாயின.இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடு என்பதால் அதன் 120 மக்கள் அவை[Knesset] உறுப்பினர்கள் கட்சிகளின் ஓட்டு சதவீத அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். ஒரு கட்சி உறுப்பினர்களை பெற குறைந்த பட்சம் 2% ஓட்டு பெற வேண்டும். 61 உறுப்பினரை பெறும் கட்சிக் கூட்டணி[தனியாக ஆட்சி அமைக்கும் சாத்தியம் மிக குறைவு]யில் இருந்து பிரதமர்,மந்திரிகள் நியமிக்கப்படுவர்.


அதிபரும் இந்த 120 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டாலும், அது ஒருமுறை மட்டுமே வகிக்கக்கூடிய,7 வருடத்திற்கான, அதிகார பலம் அற்ற பதவி.இப்போதைய‌ இஸ்ரேல் அதிபர் சைமன் பெரஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு தேர்ந்த்டுக்கப் பட்டார்.


இஸ்ரேல் அரசியலில் வலதுசாரி,இடதுசாரி என இரு பிரிவுகள் உண்டு. வலதுசாரிகள் இஸ்ரேல் யூதருக்கே என்னும் கொள்கை, தீவிர உலக்மயமாக்கல் கொள்கை  எனலாம்,இடதுசாரிகள் பால்ஸ்தீனம் பிரிவதையும், இஸ்ரேலி அரபுக்களின் உரிமை ,உள்ளிட்டு இடது சாரி பொருளாதாரக் கொள்கையும் முன்னெடுக்கிறார்.

சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற வலதுசாரிக் கூட்டணியின் தலைவர்,லிகுத் கட்சியை சேர்ந்த திரு பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி நடத்தி வந்தார்.நேற்று நடந்த தேர்தலில் லிகுத் கட்சி+மற்றும் இஸ்ரேல் பெயிட்னு[இஸ்ரேல் எங்கள் தாய்வீடு]கட்சிக்கு 31 இடம் மட்டுமே கிடைத்தது.சென்ற தேர்தலில் கிடைத்த 42 இடங்களை விட 11 இடங்கள் குறைவாகும். ஆட்சி அமைக்க இன்னும் 30 இடங்கள் தேவை!!

வலது சாரிக் கட்சியான ஹெபயித் ஹெயகுடி 11 இடங்களும், தீவிர யூத அடிப்படைவாத ஷாஸ் 11 இடங்கள் மற்றும் யுனைட்டெட் தோரா யூதம் 7 இடங்களும் சேர்த்து 31+11+11+7=60 இடங்கள் வருகிறது.மத்திய இடது கட்சினரின் யேஷ் அடிட் 19 இடங்களும்,தொழிலாளர் கட்சி 15 இடங்களும் ஹட்னுவா 6 இடங்கள்,மெரட்ஸ் 6 இடங்கள், மற்றும் கடிமா 2 இடங்கள் சேர்த்தால் 19+15+6+6+2 =48.


இஸ்ரேலி அரபுக்களும் 3 கட்சிகள் நடத்தி மொத்தம் 12 இடம் பெற்று இருக்கின்றார்கள். எனினும் இவர்களை ஒப்புக்கு சப்பாணி போலவே வலது இடது,இரு அணியும் சேர்த்துக் கொண்டதே இல்லை!!!.

Israeli election results graph

Yair Lapid celebrates (23 January 2013)
Yair Labid
யேஷ் அடிட் சென்ற வருடம் தொடங்கிய கட்சி என்பதும் நெதன்யாகுவுக்கு எதிராது அல்ல என்பதும் அதன் தலைவர் யாயிர் லாபிட் கூறுவதில் இருந்து தெரிகிறது.

இஸ்ரேலில் அனைத்து மாணவர்களும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என கட்டாயம் உண்டு.யூதர்களில் சில அடிப்படை மத்வாதிகள் தங்களின் மதக் கொள்கைக்கு விரோதமானது என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.இதுவரை இஸ்ரேல் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை என்றாலும் யேஷ் அடிட் இதனை அமையும் அரசுக்கு ஆதரவு அளிக்க நிபந்த்னை ஆக்கலாம்.

[ நம் ஊரில் கப்பலில் ஏறி போரில் சண்டை போட ஆள் எடுப்பதால், கடல் தாண்டக்கூடாதுன்னு சொல்லி இருக்கு என சொல்லி தப்பித்தவர்கள், இப்போது பணம் தேடி கடல் மீது பறக்கும் பரம்பரையாக மாறியது ஞாபகம் வருகிறது.] 

ஆகவே நெதன்யாகு ஆட்சி அமைத்தாலும் அவருக்கு இந்த ஆட்சி மிகுந்த சவாலாகவே இருக்கும்.

பாலஸ்தினததை பொறுத்த்வரை வலது சாரிகளுக்கு அதைப் பற்றி நினைக்கவே பிடிக்காது என்றாலும் யேஷ் அடிட் இரு நாட்டு தீர்வு என்ற கொள்கை உடையவர் என்பதும்,இதனை பேசி சுமுகமாக தீர்க்க ஏதேனும் செய்வார் என்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நல்லதே நடக்கட்டும்!!. இஸ்ரேலின் ஜனநாயக ஆட்சிமுறைக்கு பாராட்டும், மத்தியக் கிழக்கு பிரச்சினைகள் தீர முயற்சிகள் முன்னெடுக்க வாழ்த்துகிறோம்!!.

நன்றி!!

  
  

Sunday, January 20, 2013

ஃபெர்மி தொலைநோக்கி கருப்பு பொருளை கண்டுபிடிக்குமா???


Fermi all-sky map
The full sky is seen in the Fermi telescope map; gamma-ray sources abound along the central, galactic plane


வணக்கம் நண்பர்களே,

அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளின் மீதான [அள்வீட்டு] சான்றுகளின் பொருந்தும் விளக்கம் என்ற புரிதல் மட்டுமே அதன் பன்முகத் தனமையை சரியாக அறிய முயல்வதின் அத்தாட்சி.அறிவியலின் விளக்கங்கள் கிடைக்கும் சான்றுகளுக்கு ஏற்றபடி மாறும் என்பதும், எந்த விதியும் நிரந்தரம் அல்ல.ஒவ்வொன்றும் எல்லைகளுக்கு உடப்ட்டது, எல்லைகளைத் தாண்டும் போது புதிய விளக்கம் வருவதே அறிவியலின் பரிணாம வளர்ச்சி ஆகும்.அந்த வகையில்  பி.பி.சி ல் படித்த ஒரு கட்டுரையின் தமிழாக்கத்தை இப்பதிவில் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

கருப்பு பொருள் என்பது ஈர்ப்பு விசையின் அறியாக் காரணி என்பதே இப்போதைய‌ அறிவியல் கருதுகோள். அதாவது நெடுந்தூர விண்மீன் திரட்டு[கால்க்சி]களின் ஈர்ப்பு விசையினால் நிகழும் அசைவுகளை ஐன்ஸ்டினின் விதி கொண்டு  அள்விடும் போது வரும் தவறின் காரணி கருப்பு பொருள் அளிக்கும் ஈர்ப்பு விசை என்பதே கருதுகோள்.

அதாவது எளிமையாக சொன்னால் ஈர்ப்பு விசை அளவிடும் போது 10 நியுட்டன் வருகிறது. ஐன்ஸ்டினின் விதிப்படி கண்க்கிட்டல் 8 நியுட்டன் வருகிறது. இந்த மீதி 2 நியுட்டனை ஈர்ப்பு விசையாக அளிப்பது கண்ணுக்கு புலப்படா, இபோது உள்ள பொருள்களில் இருந்து வித்தியாசமான கருப்பு பொருள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.பிரபஞ்சத்தில் 25% கருப்பு பொருள் இருப்பதாகவும் கணக்கிடுகிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Dark_matter

தமிழ் திரைப் படங்களில் காரை காலில் கட்டி நாயகன் நிறுத்துவதை பார்த்து இருப்பீர்கள்,ஆனால் கயிறு நாயகனின் பின்னால் உள்ள மரத்தில் கட்டப்பட்டு இருக்கும் .அப்படி!! ஹி ஹி. தமிழர்களுக்கு திரைப்படம் சொல்லி விளக்கினால் எளிதில் புரியும் .


இங்கே சூப்பர் ஸ்டார் கயிறு கட்டி ஜீப்பை நிறுத்துவதில் மறைந்து என்ன இருக்கிறது என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரியும் என்னும் தத்துவ தாத்பரியம் மட்டும் அல்லாமல்,ஈர்ப்பு விசையின் காரணி கண்ணுக்குத் தெரியா கயிறால் கட்டி இருக்கும் ஒரே ஏக இறைவன் இடியப்ப பூதனார் என்பதன் ஆணித்தர‌மான நிரூபணமும் ஆகும்.

இவர்தான் அவர்!!!


அவரின் அறிவார்ந்த ஈர்ப்பு விசைக் கொள்கை!!!
http://en.wikipedia.org/wiki/Intelligent_falling

1930ல் இருந்து இந்த கருப்பு பொருளை உறுதிப்படுத்த முயற்சிகள் முன் எடுக்கப் படுகின்றன.

சரி ஐன்ஸ்டினின் விதிப்படி ஈர்ப்பு விசை கணக்கிட்டால்தானே வித்தியாசம் வருகிறது, அளவீட்டு சான்றுகளுக்கேற்ப புதிய ஈர்ப்பு விசைக் கொள்கை வடிவமைக்கலாமே என்று கேட்பவர்களுக்கு வாழ்த்துக்கள், அம்முயற்சிகளும் நடக்கின்றன.


இப்பதிவில் சொல்லும் ஒரே விடயம் ஃபெர்மி தொலை நோக்கி எனப்படும் அதி ஆற்றல் காம்மா[இது வேற!!] கதிர்களை காணும் கருவி இப்போது கருப்பு பொருள் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது.


பிரப்ஞ்சத்தை இத்தொலை நோக்கி மூலம் பார்க்கும் போது பதிவில் காட்டப் பட்ட படம் போல் மத்தியில் அதிக  Gamma ஒளியும்,மத்தியில் இருந்து ஓரங்களுக்கு குறைந்து வருவது போன்ற படம் கிடைத்தது.

இது கருப்பு பொருள் இருக்கும் சாத்தியத்தை குறிக்கிறது என சில அறிவியலாளர்கள் வாதிடுகின்றார்.

Fermi has been a tremendous success at examining some of the most high-energy processes in the cosmos, publishing a catalogue filled with details of the spinning neutron stars known as pulsars, and a wide array of "active galactic nuclei" - probably supermassive black holes.

But outside the Fermi team, the focus shifted in early 2012, when a pair of papers on the Arxiv preprint server suggested hints of dark matter within Fermi's data, which are publicly available.

எனினும் இன்னும் ஆணித்த‌ரமாக நிரூபிக்க பல படிகள் செல்லவேண்டும்.
ஐன்ஸ்டினின் விதி மாறுமா,இல்லை கருப்பு பொருளை ஃபெர்மி தொலைநோக்கி உறுதி செய்யுமா என்பதை காலம் முடிவு செய்யும்

http://fermi.gsfc.nasa.gov/

http://en.wikipedia.org/wiki/Fermi_Gamma-ray_Space_Telescopeநன்றி!!

Saturday, January 19, 2013

விண்வெளி உயிரிகள் இலங்கையில் கண்டுபிடிப்பா?meteorite1

Thanks to
வணக்கம் நண்பர்களே,

பூமியைத் தவிர விண்வெளியில் வேறு உயிர்(ரி)கள் உண்டா என்னும் கேள்வி மதம்,தத்துவம்,அறிவியல் சார் தேடலை ஊக்குவிக்கும் விடயம். சென்ற மாதம் டிசம்பர் 29,2012ல் இலங்கை கிராமம் போலனாருவா[ பெயர் சரியா?]ல் விழுந்த விண்கல்லில் நுண்ணுயிர் படிமங்கள் இருப்ப்தாக இரு இலங்கையர் ஒரு பிரிட்டனை சேர்ந்த அறிவியலாளர்கள் ஜோர்னல் ஆஃப் காஸ்பாலஜி ஆய்வு சஞ்சிகையில் கட்டுரை இட்டு இருக்கின்றனர். இதுவே கட்டுரை FOSSIL DIATOMS IN A NEW CARBONACEOUS
METEORITE

1.N. C. Wickramasinghe,2. J. Wallis , D.H. Wallis and 3.Anil Samaranayake

1.Buckingham Centre for Astrobiology, University of Buckingham, Buckingham, UK
2.School of Mathematics, Cardiff University, Cardiff, UK
3.Medical Research Institute, Colombo, Sri Lanka

ABSTRACT

We report the discovery for the first time of diatom frustules in a carbonaceous meteorite that 
fell in the North Central Province of Sri Lanka on 29 December 2012.  Contamination is 
excluded by the circumstance that the elemental abundances within the structures match 
closely with those of the surrounding matrix.   There is also evidence of structures 
morphologically similar to red rain cells that may have contributed to the episode of red rain 
that followed within days of the meteorite fall.  The new data  on  “fossil” diatoms provide
strong evidence to support the theory of cometary panspermia.


எனினும் இது பல அறிவியல் ஆய்வாளர்களால் சந்தேகத்துடன் ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப் படுகிறது. பிரபல பரிணாம ஆய்வாளர் மெயர்[PZ Myers] இதனை தவறான சான்று என மறுக்கிறார். விண்கல்லில் உள்ள நுண்ணுயிர் படிமங்கள் பூமியில் இருப்பவை என்கிறார். அவரின் பதிவு சுட்டி.

Chandra Wickramasinghe replies…and fails hardசெய்தியை மட்டுமே இப்பதிவில் தெரிவிக்கிறேன்.ஒருவேளை இது உண்மை ஆகும் என்றால் வரும் பதிவுகளில் அலசுவோம்.வழக்கம் போல் பின்னூட்டங்களில் இக்கட்டுரை பற்றியும் விவாதிப்போம்.

நன்றி!!!

Wednesday, January 16, 2013

இனவெறி குடியுரிமை சட்டங்கள்!!
வணக்கம் நண்பர்களே,

அறிவியல் வளர்ச்சியால் உலகம் சுருங்கி வரும் விளைவுகளில் ஒன்றுதான்.ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்து குடியுரிமை பெறும் நிகழ்வு ஆகும். அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் இரண்டாம் உலகப் போரின் காயங்களை ஆற்றும் வண்ணம் ,அதற்கு மருந்திடும் வகையில் பல வேற்று நாட்டவருக்கு குடியுரிமை வழங்க முன் வந்தார்கள்.

வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில் மக்க்ள் குழுக்களை ,பொருளதார முன்னேற்றத் திட்டங்களுக்காக நாடு விட்டு நாடு கொண்டு சென்றதன் பிரச்சினைகளின் மிச்ச்சங்கள் நம் கண்முன்னே இலங்கை மலையகத் தமிழர்கள்,தென் ஆப்பிரிக்க தமிழர்கள் ஃபிஜித் தீவு இந்தியர்கள் என‌ விரிகிறது.

இப்படி புலம் பெயர்ந்தவர்களுக்கு சுதந்திரம் பெற்ற நாடுகள் சரியான குடியுரிமை வழங்கவில்லை, அரசியல் அமைப்பு சட்டங்களில் உரிமைகள் வழங்கப் படவில்லை என்பதே பல இனசிக்கல் போராட்டங்களுக்கு காரணம் ஆயிற்று.

இப்பதிவின் நோக்கம் இது அல்ல!!.

குடியுரிமை வழங்கும் சில நாடுகளின் வரையறைகளில் உள்ள இனவெறியை அம்பலப் படுத்துவதே நம் நோக்கம்.

1. அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் தமிழர்கள் உட்பட பல்ருக்கு குடியுரிமை தந்து,சம் உரிமை வழங்கினாலும் அமெரிக்க ஹிஸ்பனோ இனத்த்வரையும்,ஐரோப்பிய நாடுகள் ரோமா இனத்தவரையும் ஒதுக்குகின்றன.யூதர்கள் போல் ரோமா இனத்த‌வரும் ஹிட்லரால் கொன்று குவிக்கப் பட்டாலும் யாரும் கண்டு கொள்வது இல்லை. நண்பர் கலையரசன் ரோமா இன மக்களைப் பற்றி எழுதிய பதிவு.


2. ஆஸ்திரேலியா,நியு ஜிலந்து போன்ற நாடுகளில் கூட கடந்த நூற்றாண்டில் வெள்ளை இனத்வருக்கே முன்னுரிமை வழங்கப் பட்ட‌து.


எனினும் இப்போது இன வேறுபாடின்றி கல்வி,திற்மை கொண்டோரை குடியுரிமை அளித்து ஏற்கிறது.கன்டா இதில் பாரபட்சம் அற்ற நாடு எனக் கூறலாம்.குடியுரிமை அளிப்பவர்கள் தங்கள் நாட்டுக்கு பலன் இருப்பதால் மட்டுமே அளிக்கிறார். புலம் பெயர்பவர் ஈட்டும் செல்வம் பெருமளவு நாட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப் படுகிறது.குடியுரிமை கோரி செல்பவருக்கும் இதில் பலன் இருப்பதால் இது இருவருக்கும் பலன் அளிக்கிறது.

3. வளரும் நாடுகளில் இருந்தே ,வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு புலம் பெயர்வது இயல்பே.இது சமூக,கலாச்சாரங்கள் கலந்து புதிய சமூக நடைமுறைகள் அமலுக்கு வர உதவுகிறது. இந்தியாவுக்கு குடியுரிமை வேண்டி இலங்கை தமிழர்கள், வங்க தேசகாரர்கள் முயற்சி செய்கின்றனர்..

 ***
பொதுவாக குடியுரிமை& பல நடைமுறை சிக்கல்கள் பற்றி சொல்லி விட்டோம்.மத்தியக் கிழக்கு நாடுகள் இரண்டின் குடியுரிமை வழங்கும் விதத்தை பார்ப்போம்.

உலகம் செல்லும் திசைக்கு எதிர் திசையில் செல்வது மத்தியக் கிழக்கின் வழக்கம்.அங்கு நிகழும் அரசியல்,சமூக சிக்கல்கள் உலகையே வளர்ச்சியை நோக்கி செல்ல விடாமல் செய்கிறது என்றால் மிகையாகாது.

இதில் இரு நாடுகளின் குடியுரிமை பற்றி பார்க்கப் போகிறோம்!!.

1.இஸ்ரேல் 2.சவுதி அரேபியா

இஸ்ரேல் இந்த நூற்றாண்டின் மிக வியப்பான நாடு. "சாமி கொடுத்த இடம்" என சொல்லி உலகம் முழுதும் இருந்து வந்த யூதர்கள்  கொஞ்சம் இடத்தை விலை கொடுத்து வாங்கியும்,இன்னும் கொஞ்சம் அடித்துப் பிடுங்கி, ஐ.நா ஆதரவோடு ஒரு நாட்டை கட்டி அமைத்தார்கள்.யூதர்கள் எங்க பாட்டன் சொத்துன்னு இஸ்ரேலை சொல்கிறார்கள்.[ஹி ஹி மேலே போட்ட படத்துக்கு தொடர்பு வந்து விட்டது!!!]

இஸ்ரேலின் எதிர்க் கோஷ்டி சவுதி அரேபியா இஸ்ரேலின் இரட்டை சகோதரன் போல் "சாமி கொடுத்த சட்டம்" என சொல்லி,வாஹாபியம் கொண்டு ஆட்டோமன் பேரரசை வெள்ளையர் உதவியுடன் உடைத்து ஒரு நாட்டை இபின் சவுத் வம்சத்தினர் உருவாக்கினர்.போட்டிக் குழுக்களை நாட்டை விட்டு உதைத்து விரட்டி விட்டனர். எண்ணெய் வளத்தை மேலைநாடுகளுக்கு வாரி வழங்குவதும், மத ஆதரவு போக்கினால் இபின் சவுதின் வம்சம் ஆட்சியை நிலைநிறுத்தியது. 

சவுதி சொல்கிறது சட்டம் என்கையில்[ பொருத்த்மாக படம் ஹி ஹி]


இஸ்ரேல் யூதர்களுக்கானது என்றாலும் யூதர்கள் யார் என்பது அவர்களுக்கே உள்ள ஒரு சிக்கல்.பல் மொழி பல் இனம் என்பதால் ஒன்றுபடுதல் மிக கடினமான ஒன்றே. அண்டை நாட்டு எதிரிகள் மட்டும்தான் இஸ்ரேலை ஒன்றுபடுத்துகிறார்கள்.

இஸ்ரேலுக்கு மேற்கு கரையையும் தன்னோடு சேர்க்க ஆசை.சேர்த்தால் யூதர்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்.நடப்பது ஜனநாயகம் என்பதால் யூதர்களின் எண்ணிக்கையை எப்படியாவது அதிகரிக்கும் கட்டாயம் வந்ததாலும், யூதப் பெண்கள் சுதந்திரமானவர்கள் என்பதால் அதிக குழந்தைகள் பெற மறுப்பதாலும்[2010 population growth rate 1.9%], பாலஸ்தீனர்கள் என்ன கஷ்டம் வந்தாலும் கடமையே கண்ணாக‌ ,மக்கள் தொகையை பெருக்கி[population growth rate 3.4%] வருவதாலும் ,தங்கள் ஆதரவாளர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்த்னர்.

யூத மதத்தினர் உலகில் மிக குறைவு. கிறித்தவ மதம் சார்ந்தோருக்கு குடியுரிமை வழங்னால் பிற்காலத்தில் இன சிக்கல் வரும். ஹி ஹி கிறித்தவர்களுக்கு அஞ்சியே யூதர்கள் ஐரோப்பாவில் இருந்து மத்திய கிழக்கு  வந்த்னர். அவர்கள் அழைத்து வரப் படவில்லை.கட்டாயத்தால் இழுத்து வரப் பட்டார்கள்.
யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க  எப்படியாவது யூதர்களைக் கண்டுபிடித்து குடியுரிமை வழங்க முடிவு செய்தனர்.


அவர்களின் மதபுத்தகத்தில் தொலைந்து போன யூத இனம்[lost tribe] என சில கதைகள் உண்டு. அதற்கு பொருந்தும் வண்ணம் சில் இனத்த்வரைக் கண்டு பிடித்து குடியுரிமை வழங்கி வருகின்றனர். இந்தியாவில் கூட மேகாலயா மாநில ஆதிவாசி இனக்குழுவைச் ச்ர்ர்ந்த ஆயிரக் கண்க்கானோருக்கு குடியுரிமை வழங்கி இருக்கிறது.

ஆகவே இஸ்ரேலுக்கு குடிபெயர யூத இனத்தை சேர்ந்த்வன்/ள் என நிரூபித்தால் போதுமானது. அது எப்படி சரிபார்ப்பார்கள் என்றால் விக்கிபிடியாவில் படித்துக் கொள்ளுங்கள் பின்னூட்டங்களின் சரி செய்கிறேன்.

யூதர்கள் எங்கு இருந்தாலும் இஸ்ரேல் வந்து தங்கலாம்,குடியுரிமை பெற்றுக் கொள்ள்லாம், மெற்கு கரையை ஆக்கிரமித்து வீடு கட்டிக் கொடுக்கப்படும் என இஸ்ரேல் கருமமே கண்ணாக பாலஸ்தீனர்களின் இடங்களை ,வந்தேறும் குடியினருக்கு அளித்து வருகிறது.

இதுவே இஸ்ரேலிய குடியுரிமையின் நிலைஆகும்.!!

**
இஸ்ரேலின் இரட்டை சகோதரன் சவுதி ஏன் குடியுரிமை வழங்க முன்வருகிறது?

கடந்த சில வருடங்களாக சவுதி பிற நாட்டவ்ருக்கு குடியுரிமை வழங்க முன்வருவது வியப்பான செய்திதான்.

சவுதி பெண்கள் அதிகம் மஹர் கேட்பதால் மட்டுமே முதிர் கன்னிகள் சவுதியில் அதிகம், மஹர் ஏன் அதிகம் எனில் ஆண்கள் எந்த நேரமும் விலக்கு செய்து விடலாம்,இன்னும் சில திருமணம் செய்யலாம் என்பதால் ஒரு பிடிப்பு.பணம் இருக்கும் சவுதிகள் அந்நாட்டின் 4 மனைவிகள் வரை ஒரே சமயத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பதை அமல் படுத்துவதால்,பல் மத்திய தர வர்க்க சவுதிகளுக்கு சவுதி பெண்கள் கிடைப்பது இல்லை.

ஆகவே சவுதி ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களை மணமுடிக்க அனுமதி தரும் போது,பெண்களுக்கும் அனுமதி தரவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

சரி  சவுதியை திருமணம் முடித்தால் வேற்று நாட்டவர் குடியிரிமை பெறுவாரா?

இல்லை.சவுதி ஆணை மண முடிக்கும் பெண்ணுக்கு திருமணம் நிலைக்கும்  வரை குடியுரிமை உண்டு.பெண்ணை மணமுடிக்கும் வேற்று நாட்டு ஆணுக்கு குடியுரிமை கிடைக்காது.

ஆனால் குழந்தைகளுக்கு குடியுரிமை கிட்ட சில நிபந்த்னைகளுடன் கூடிய வரைமுறைகள் வகுத்து உள்ளனர். 


A)குழந்தை ஆணாக இருந்தால் 10 புள்ளியில் 7 புள்ளி பெற வேண்டும்.
எப்படி?

அ) மேஜர்[வயது] ஆகும் போது சவுதியில் வசிக்க வேண்டும்=1 புள்ளி

ஆ) கல்வியில் பள்ளிப் படிப்பு முடித்து இருக வேண்டும்[சுமார் 12 வது]=1 புள்ளி

இ) தாயின் தந்தை, தந்தையின் தந்தை சவுதிகளாக இருக்க வேண்டும்=6 புள்ளி

இ1) தாயின் தந்தை மட்டுமே சவுதியாக இருந்தால்= 2புள்ளி மட்டுமே

ஈ) சவுதி சகோதரன்,சகோதரி இருப்பின் [இது எப்படி என்றால் தாயின்முந்தைய திருமணம் அல்லது ஏற்கெனவே குடியுரிமை பெற்றும் இருப்பவர்கள்] =2 புள்ளி

மொத்தம்= 10 புள்ளிகள். 
**
B). சவுதி பெண்,பிற ஆண் தம்பதிகளுக்கு பிறந்த பெண் 22 புள்ளியில் 17 புள்ளிகள் பெற்றல் மட்டுமே சவுதி குடியுரிமை பெற முடியும்.
அது என்ன?
அ) சவுதியில் பிறந்து இருந்தால்=2 புள்ளி

ஆ)ஏதேனும் ஒரு உறவு(தந்தை,தாய்,சகோத்ரன்)சவுதி ஆக‌ இருப்பின்=2 புள்ளி

இ) கல்வியில் பட்டப் படிப்பு முடித்து இருக வேண்டும்.=2 புள்ளி

ஈ) குடியுரிமை கோரும் பெண் திருமணத்துக்கு முன் சவுதியில் 10 ஆண்டுகள் வசித்தால்=2 புள்ளி.

உ) திருமணத்தின் பின் ஒவ்வொருவருடத்துக்கும் ஒரு புள்ளிவீதம் அதிக படசம்=10 புள்ளிகள்

ஊ) ஒரு குழந்தைக்கு 2புள்ளிகள் வீதம் இரு குழந்தைகள் வரை அதிக பட்சம்=4 புள்ளிகள்.
மொத்தம் 22 புள்ளிகள்;

ஹி ஹி குடியுரிமை கோரும் பெண்ணின் கணவன் சவுதியாக இல்லாவிட்டால் ,குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப் படும் 

ஏழு மலை தாண்டி,ஏழு கடல் தாண்டி 100 கி.மீ ஆழத்தில் உள்ள எறும்பின் கண்ணை நோண்டி ஆடாமல்,அசையாமல் வந்தால் குடியுரிமை கிட்டும் ஹி ஹி!!!

மேலே சொன விடயங்களில் இருந்து தற்காலிகமாக இந்த தலைமுறையில் மட்டும் திருமண உறவை அங்கீகரித்து, அடுத்த தலைமுறையினர் சவுதிகளுக்கிடையே மட்டுமே மண உறவு கொள்ள கட்டாயம் இருப்பது புரியும். அப்படி செய்யாத பட்சத்தில் குடியுரிமை இழப்பர்.

இதில் சரி தவறு நாம் சொல்லவில்லை. இரு நாடுகளுமே தங்களின் சுய பிரச்சினைகளுக்கக குடியுரிமை வழங்குகின்றன.அதே சமயம் இனத் தூய்மை என்னும் கருத்தாக்கம் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

இதுதான் சுடும் உண்மை. இதைப் புரியாமல் கண்ணைமூடிக் கொண்டு எதையும் ஆதரிப்போரே சிந்திக்க மாட்டீர்களா???
நன்றி!!!

Friday, January 11, 2013

இயந்திரங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தால்!!? காணொளிநண்பர் ஒருவர் அறிவார்ந்த வடிவமைப்பு பற்றிய பதிவில் பின்னூட்டம் இடும் போது ஒருவேளை ஒரு தூரத்தில் உள்ள கோள் ஒன்றில் இயந்திரங்கள்( இயந்திர மனிதர்களின் ) மட்டும் நாகரிகம் இருந்தால் அதனை வடிவமைப்பு அல்லது பரிணாமம் என்று எப்படி தீர்மானிப்பீர்கள் என்று கேட்டு இருந்தார்.

இது நம்மை சிந்திக்கத் தூண்டியது என்றாலும் இதற்கு நான் பதில் கூறுவதை விட இக்காணொளி அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே சில செய்திகளை கூறும் என நம்புகிறேன்.காணொளியின் தமிழாக்கம் அதாவது கதை சுருக்கம்

இது எதிர்காலத்தில் சுமார் 100+ ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை. ஒரு புகழ் பெற்ற பரிணாம ஆய்வாளர். அவருக்கு பல எதிர்ப்புகள் படிமங்களின் மீது கேள்வி+சந்தேகம் ஆக வருகிறது.அதனை நிரூபிக்க படிமங்களை தேடும் பணியில் உள்ளார். சில படிமங்களை சான்றாக கண்டுபிடித்து பலரின் முன் வைக்கும் போது இன்னொரு பரிணாம் எதிர்ப்பு ஆய்வாளர்(He looks like a missing link between human and chimpanzee. That is really funny!!!!!!!) குரங்கும் டைனோசாரும் ஒன்றாக இருக்கும் சான்று முன் வைத்து பரிணாம ஆய்வாளர் கூறுவது த்வறு என்று நிரூபித்து விடுகிறார்.

இதனால் மன்ம் உடைந்து பூமியை விட்டு வேறு கிரகத்திற்கு குடும்பத்தோடு குடி பெயருகிறார். அந்த கிரகத்திற்கு சென்றது அங்கே உயிர்வாழும் சூழல் இருந்தாலும் அங்கே இருந்தா டாக்ஸிக்(Toxic) நீர் பருக ஏற்றதாக இல்லாததால் தான் கொண்டுவந்த மிக சிறிய‌ இயந்திரங்களை[micro robots] நீரை சுத்திகரிக்க அந்த டாக்ஸ்சிக் நீரில் போடுகிறார்.நீர் சுத்தமாகி பயன் படுத்துகிறார்கள்.ஆனால் அந்த சிறு இயந்திரங்கள் பரிணம்ம வளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றது.அதுவும் வேகமாக  நடந்து இயந்திரமனிதன் வரை வளர்ச்சி அடைகின்றன.

அவை ஆய்வாளர் & குழுவை கார்பன் (Organic Robots) இயந்திர மனிதர்கள் என்று இயந்திர மனித ஆய்வாளர்கள் கைது செய்து அழைத்து சென்று ஆய்வு நடத்துகிறார்கள்.பரிணாம ஆய்வாளருடன் ஒரு இயந்திர மனிதனையும் பூமியில் இருந்து கூட்டி சென்று இருந்ததை கவனித்தனர் அக்கிரக இயந்திர ஆய்வாளர்கள்.

அவர்கள் மேல் விசாரணை நடக்கிறது. அதில் என்ன நடந்தது? பூமிக்கு திரும்பி வந்தார்களா ?.பரிணாம கொள்கை  நிரூபித்தார்களா என்பதை மின் திரையில் காண்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மெதுவாக ஒரு 10 நிமிடம் காணொளியை லோட் செய்து பிறது பார்க்கவும்.அதி அடர்த்தி காணொளி என்பதால் கொஞ்சம் மெதுவாகவே தரவிறக்கம் ஆகும்http://en.wikipedia.org/wiki/Futurama_(season_6)
Futurama Season 6 Episode 9 ~ A Clockwork Origin

Saturday, January 5, 2013

மந்திர தந்திர சவால் :சணல் இடமறுக்கு காணொளி!!வணக்கம் நண்பர்களே,

சென்ற பதிவில் மந்திர தந்திர விளம்பர பதிவின் மீது நமது விமர்சனம்,எச்சரிகை விடுத்தோம். அதாவது ஏதேனும் உடல்ரீதியாக உணவு,தொடுதல் போன்றவை இல்லாமல் ஒருவரின் சிந்தனைகளை ,இன்னொருவரால் கட்டுப்படுத்த முடியாது என்பதை அனைவரும் அறிதல் நன்று. இதுவரை இப்படி ஒரு சம்பவம் ஒருவரின் மந்தில் இருப்பதை அறிதல்,அறிந்து கட்டுப்படுத்தல் என்பது சாத்தியம் இல்லை என்பது மட்டும் அல்ல,மத புத்த்கம் படித்து எதிர் இறை சக்திகளை[சாத்தான்,பேய்,ஜின் ...] விரட்டுவோம்,யாகம் செய்து இயற்கையை கட்டுப்படுத்தல் என்பதும் மோசடியே.

 

அரசியலில் இருக்கும் பெரிய தலைகளே இப்படி யாகம் செய்து வெற்றி நாடுவோம் என்பதும், சோதிடர்களின் ஆலோசனை கேட்டு பல செயல்கள் செய்வதுமாக இருக்கும் போது சாமன்ய மக்களும் என்ன செய்வார்கள்??

இப்படி கடவுள் என்னிடம் மட்டும் பேசினார், மந்திரம் போட்டு நல்லது/கெட்டது செய்ய முடியும் என பிதற்றி வருபவர்கள் அக்காலம் முதல் இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களின் தொழிலும் அரசியல்,மதம் சார்ந்து செழிக்கிறது. இதை தவறு எனப் பரிசோதித்து பார்த்தால் புரிந்துவிடும்.

இந்த மோசடி வேலைகளை அம்பலப்படுத்த  பல சிந்தனையாளர்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார். அதில் நமது இந்திய கேரள‌ மாநில பகுத்தறிவு இறைமறுப்பாளர் திரு சணல் இடமறுக்குவின் ஒரு செயலை பதிவாக்குகிறோம்.


மதவாதிகளில் வித்தியாசம் செயல்களில் இருக்காது,ஒரேவித்தியாசம் என்னவெனில் பெரும்பான்மையாக,சிறுபான்மையாக இருக்கும் போது பேசும் வசனம் வித்தியாசப்படும் என்பது மட்டுமே.

மத்தியப் பிரதேச முன்னால் முதல்வர் உமாபாரதி 2008ல் அவரின் அரசியல் எதிரிகள் மந்திரம் மூலம் தன்னைக் கட்டுப்படுத்துவதாக கூறி அது பரபரப்பு செய்தி ஆனது.


Everything started, when Uma Bharati (former chief minister of the state of Madhya Pradesh) accused her political opponents in a public statement of using tantrik powers to inflict damage upon her. In fact, within a few days, the unlucky lady had lost her favorite uncle, hit the door of her car against her head and found her legs covered with wounds and blisters.

உடனே புகழ்பெற்ற இந்தி தொலைக்காட்சியான இந்தியா டிவி [India TV] இது தொடர்பாக சணல் இடமறுக்குவை ஒரு விவாதத்தில்[Tantrik power versus Science] பங்கு கொள்ள செய்தது.

அதில் சுரீந்தர் சர்மா என்னும் மந்திரவாதியும் கலந்து கொண்டார். இடமறுக்குவுடன் விவாதம் செய்த சர்மா,மந்திரம் மூலம் ஒருவருக்கு மரணம் உள்ளிட்டு எதனையும் ஏற்படுத்த முடியும் என கூறினார்.

அதுவும் மூன்று நிமிடத்தில் யாரையும் கொல்ல முடியும் என சர்மா கூறியதும்,என்னை கொல்ல முடியுமா என அமைதியாக கேட்டார் இடமறுக்கு.

சர்மாவுக்கு அப்போது ஏதேனும் மழுப்பலாக நம் சகோக்கள் போல் சொல்லி ஓடத் தெரியாமல் சவாலுக்கு ஒத்துக் கொண்டார்.

 

நாம் எப்போதும் சொல்வது மத விளம்பரம் செய்பவர்களுக்கு அது ஒரு மோசடி என‌த் தெரியாமல் செய்தால் சீக்கிரம் மாட்டிக் கொள்வார்கள்.ஷர்மா உயிர் போய்விடும் என்றால் யாரும் பரிசோதிக்க வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் இப்படிக் கூறி இருக்க்லாம்.

 
நரகபயம் அற்ற நாத்திகர் இடமறுக்கு சவாலுக்கு தயார் என்றதும்,சுரீந்தர் ஷர்மா மந்திரம் போட்டு கொலை செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார்.

 
மூன்று நிமிட‌ம் ம‌ந்திர‌ம் போட்டும் ஒன்றும் ந‌ட‌க்க‌வில்லை, 5 நிமிட‌ம் ஆன‌து,ம்ம்ம்கூம் ஒன்றும் இல்லை, க‌த்தி எடுத்து ம‌ந்திர‌ம் போட்டு மிர‌ட்டி,இட‌ம‌றுக்குவின் உட‌லில் தட‌வியும் ஒன்றும் ந‌ட‌க்க‌வில்லை.

 

இறுதியில் ஷ‌ர்மா தோல்வி என‌ தொலைக்காட்டி அறிவித்த‌து. காணொளி பாருங்க‌ள்.என்ன‌து இந்தி தெரியாதா!!. பேச்சை விட‌ செய‌லே இக்காணொளியில் முக்கிய‌ம் என்ப‌தால் பாருங்க‌ள் புரியும்!!

ஆகவே நண்பர்களே இந்த கடவுள்,மந்திரம் மாயம்,பேய்,ஜின்,சாத்தான்,சொர்க்கம்,நரகம் என்பது எல்லாம் பரிசோதனைக்கு உட்படாத புருடாக்கள் மட்டுமே!!.

 

 

 
 Sanal Edamaruku: Tantra Challenge Part 2

Sanal Edamaruku: Tantra Challenge Part 3 

இப்படி புருடாக்கள் விட்டு கல்லா கட்டும் ஆசாமிகளிடம் எச்சரிக்கை!!

இப்படி மந்திர தந்திர மோசடிகளை அம்பலப் படுத்தி வரும் திரு ஜேம்ஸ் ராண்டி அவர்களின் தளம். படியுங்கள் பயன் பெறுங்கள். சில முக்கிய கட்டுரைகள் தமிழாக்கம் செய்வோம்.
http://en.wikipedia.org/wiki/James_Randi
James Randi (born Randall James Hamilton Zwinge; August 7, 1928)[2] is a Canadian-American stage magician and scientific skeptic

[3][4] best known for his challenges to paranormal claims and pseudoscience.[5] Randi is the founder of the James Randi Educational Foundation (JREF). Randi began his career as a magician named The Amazing Randi, but after retiring at age 60, he was able to devote most of his time to investigating paranormal, occult, and supernatural claims, which he collectively calls "woo-woo".[6]


நன்றி!!