Friday, January 25, 2013

STAR WARS விளையாட்டுக்கு எதிராக இஸ்லாமிய மதவாதிகள் போராட்டம்!!

6117ba250cவணக்கம் நண்பர்களே,
 ஏதோ விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமை மிக கேவலமாக சித்தரித்து  இருப்பார்கள் போலத் தெரிகிறது ,ஆகவேதான் மூமின்கள் இப்படி போராடுகிறார்கள் என்ற எண்ணம் கொண்ட தமிழர்கள் இருக்க்லாம்.

ஸ்டார் வார்ஸ் லேகோ கேம் ஒன்று இஸ்லாமிய மதவாதிகளை கோபப் படுத்தி உள்ளது. ஆஸ்திரியாவில் பல துருக்கி முஸ்லிம்கள் வாழ்கின்றார். அந்த விளையாட்டில் வரும் ஒரு கோட்டை துருக்கியில் உள்ள ஹேகியோ சொஃபியா மசூதி போல் இருக்கிறதாம் ஹி ஹி!! . ஆகவே த்டை கோரி வழக்கு!!

ஆஸ்திரியாவுக்கு துருக்கியில் இருந்து பிழைப்பு தேடி வந்து  பொருளாதார நிலையில் முன்னேறி, குடியுரிமை,சம உரிமை போன்ற விடயங்கள் பெற்றும் சிந்தனை போகும் விதம் பாருங்கள்!!


Hagia Sophia (/ˈhɑːɪə sˈfə/; from the Greek:Ἁγία Σοφία [aˈʝia soˈfia], "Holy Wisdom"; Latin:Sancta Sophia or Sancta SapientiaTurkish:Ayasofya) is a former Orthodox patriarchal basilica, later a mosque, and now a museum in Istanbul,Turkey. From the date of its dedication in 360 until 1453, it served as an Eastern Orthodox cathedral and seat of the Patriarchate of Constantinople,[1] except between 1204 and 1261, when it was converted to a Roman Catholic cathedral under the Latin Empire. The building was a mosque from 29 May 1453 until 1931, when it was secularized. It was opened as a museum on 1 February 1935.[2]


[ compare two pictures!!]

இந்த மசூதி ஒரு சர்ச் ஆக இருந்து ,மசூதி ஆகி[How??],பிறகு அருங்காட்சியகம் ஆக்கப் பட்டது! இதுற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை!!!

இதுபோல்தான் விசுவரூபம் பிரச்சினை என்பது என் அனுமானம்!!

தமிழர்களுக்கு திராவிட அரசியலின் தாக்கத்தால் மதச்சார்பின்மை ஓவெர் டோஸ் ஆகிவிட்டது.  விசுவரூபம் சில விமர்சனங்கள் படித்ததில் அது ஒரு தீவிரவாதிக் குழு பற்றிய படம் எனத் தெரிகிறது.அதற்கு தீர்வும் சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது. எனினும் படத்தில் என்ன பிரச்சினை என்பதை பார்த்த பிறகு மட்டுமே அலச முடியும்!!

ஆகவே விசுபரூப பிரச்சினையில்  உண்மை அறிய  முயற்சிப்போம் மத்வாதிகளின் தந்திரங்களை முறியடிப்போம் நன்றி!!!
Thanks to
http://whyevolutionistrue.wordpress.com/2013/01/24/turkish-muslims-butthurt-about-legos-jabba-the-hut-castle-files-suit-for-defamation/

43 comments:

 1. விஸ்வரூபம் படம் பார்த்த ஒருவரின் கருத்து:

  //
  Jegaveeraphandian - Portklang,மாலத்தீவு
  2013-01-25 07:49:31 IST
  நேற்றுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். கமலஹாசன் எனும் ஒரு தமிழனை அநியாயமாக பழிவாங்கிவிட்டதை மனசாட்சியின்படி உணருகிறேன். அந்த களத்தூர் கண்ணம்மா பாலகனுக்கு மிகப்பெரிய அநியாயம் இழைக்கப் பட்டுள்ளதை படத்தைப் பார்த்த மனசாட்சியுள்ள முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்கள். கலையையே தன் மூச்சக எண்ணி புதியப் புதியப் பரிணாமங்களை தமிழ்த் திரைப்படத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஓர் உண்மையான கலைஞனை அனாவசியமாக ஒரு தரப்பினர் வேண்டுமென்றே pali படத்தைப் பார்த்தபின்பு உணரமுடிகிறது....//
  http://www.dinamalar.com/district_detail.asp?id=633630

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் விஜய்,
   படத்தின் விமர்சனங்கள் நன்றாகவே வருகின்றன.சர்ச்சைக்குறிய விடயம் எதுவும் இல்லை.ஆனால் மதம் கொண்டு ஐம்புலன்களையும் அடைத்து இருப்போருக்கு புரியாது!!

   இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது தமிழர்களுக்கு நல்லது!!!

   நன்றி!!!

   Delete
 2. //எனினும் படத்தில் என்ன பிரச்சினை என்பதை பார்த்த பிறகு மட்டுமே அலச முடியும்!! ஆகவே விசுபரூப பிரச்சினையில் உண்மை அறிய முயற்சிப்போம்//

  சார்வாகன், அப்படியே கமல், இஸ்லாமை எதிர்த்து படம் எடுத்திருந்தால் கூட அதில் என்ன பிரச்சனை? மத நம்பிக்கைக்களை கேள்வி கேட்பதே தவறு என்ற நிலையை அல்லவா இஸ்லாமியர்கள் உருவாக்க முயல்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில், ஒரு "Da Vinci code" நூல் வரமுடியுமா? அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள்? மாற்று கருத்துகளே இல்லாத ஒரு மோசமான உலகிற்கு, ஒரு மோசமான கால கட்டத்திற்கு நம்மை இட்டு செல்ல முயல்கிறார்கள் இவர்கள்.

  ReplyDelete
  Replies

  1. சகோ கணேசன்.
   மதங்களை விமர்சிப்பதில் தவறே இல்லை!!மத புத்கத்தில் இருக்கும் ஒவ்வா கருத்துகளை அப்படித்தான் தூக்கி எறிய முடியும்!!

   ஆயினும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே திரைப்படம் எடுக்க முடியும். நம் நாட்டு மக்கள் இன்னும் அதிக பக்குவம் அடைய வேண்டும்.!!

   இந்த முரட்டுத்த்னமான மதவெறி,மேன்மைப் பிரச்சாரம் சவுதி இறக்குமதி.எண்ணெய் தீர்ந்தால் அரபி பிச்சை எடுப்பான்,அப்போது இவர்களும் திருந்தி விடுவார்கள்.


   நடக்கும் சகோ!!

   நன்றி!!

   Delete
  2. கணேசன் ,
   ///இஸ்லாமிய நாடுகளில், ஒரு "Da Vinci code" நூல் வரமுடியுமா? அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள்? மாற்று கருத்துகளே இல்லாத ஒரு மோசமான உலகிற்கு, ஒரு மோசமான கால கட்டத்திற்கு நம்மை இட்டு செல்ல முயல்கிறார்கள் இவர்கள்.////
   ஒருபக்கம் மலேசியாவில் வெளியாகிவிட்டது என்று பெருமை அடிக்கிறார்கள் .இன்னொருபக்கம் இஸ்லாமியனாடுகளில் வரமுடியுமா?எனிட கேள்வி?

   இஸ்லாத்தில் பெரியார் வரவாய்ப்பில்லை .பெரியாரைப் போன்றோரும் வரவாய்ப்பில்லை .ஒருவேளை பெரியார் முஸ்லிமாக பிறந்து இருந்தால் அதனுடைய கடவுள் கொள்கையில் திருப்தி அடைந்திருப்பார் .இங்கே சல்மான் ருஷ்டி ,தஸ்லிமா போன்ற கருவறை -கழிப்பறை ஆசாமிகளே தோன்ற வாய்ப்பு உள்ளது .
   மருதநாயகம் படம் வெளியிட கமலகாசன் மறுத்தது ஏன்?
   இந்தியாவில் இந்திய சட்டத்தால் நிமிடமொரு கற்பழிப்பு ,கொலை கொள்ளை அதனால் பல மக்கள் பரிதவிப்பு இவற்றுக்கெல்லாம் கண்ணீரை தொலைத்தவர்கள் ரிசானாவுக்கு கடலாக கண்ணீரை கொட்டுவது எதனால் ?கணேசன் சொல்லுவார் என்ற நம்புகிறேன்.
   இந்தியாவில் அற்புதம் புரிந்த கர்கரேயை பற்றி கவலைப்படாத கமல் ஆப்கான் தீவிரவாதம் பற்றி இந்தியாவில் படம் காட்டுவதும் தேசபக்தியா? இதுவரை அவரது வருமானத்தையும் அதற்க்காக் கட்டிய வருமானவரியையும் மக்கள் மத்தியில் வைப்பது தேசபக்தியா?

   Delete
 3. மாற்றுக் கருத்தையும் விமர்சனங்களையும் சகிக்க முடியாதவர்கள் எல்லாம் சமத்துவ ஜனநாயக நாட்டுக்கு லாயக்கில்லை !

  ReplyDelete
  Replies
  1. சகோ இக்பால்,
   அவர்களின் இரட்டை வேட போக்கை அனைவரும் தெரிந்து கொள்ள இம்மாதிரி வாய்ப்புகள் தொடர்து வருவது நன்மைதானே.நமக்கு வேலை சுலபம்!!.

   மூமின்களுக்கு திருடத் தெரிந்தாலும் ஒளிக்கத் தெரியாத அறிவாளிகள்.சும்மா சவுதி சொல்லிக் கொடுப்பதை செய்கிறார்கள் அங்கே ஃப்யூஸ் போனர் இங்கே சுவிட்ச் ஆஃப் ஆகும்.

   ஆக்சன் இங்கே டைரக்சன் சவுதியில் என்பதை சிந்திக்க மாட்டீர்களா!!

   புலி வருது புலி வருது கதையாய் நாளை மூமின்கள் உண்மையான பிரச்சினை சொன்னாலும் யாரும் கண்டு கொள்ளா சூழல் வந்தாலும் வரும்!!

   ஏக இறைவன் மிக மிக பெரியவன் ஹி ஹி!!
   நன்றி!!

   Delete
  2. உங்களுக்கு வர வர சவுதி மேல கட்டுக்கடங்காத பாசம் அதிகரிச்சுகிட்டே வருது. கொஞ்சம் கவனிச்சுகோங்க. அப்புறம், தூர்தர்ஷனில் இந்திய குடியரசு தின அணிவகுப்பை பார்த்திருக்கிறீர்களா? வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள், இந்தியனாக பிறந்ததில் பெருமிதம் கொள்வீர்.

   Delete
  3. சமத்துவம் அற்ற உங்களது இன்டர்நெட் கருத்துக்களால் சமுதாயத்துக்கு ஒன்றும் ஆதாயம் இல்லை

   Delete
 4. இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பும் யூத பார்ப்பன (ஐ.டி. பீல்டு) சதிகளில் ஒன்றுதான் இந்த ஸ்டார் வார்ஸ் லோகோ கேம். பாதிக்கப்பட்டவர்கள் அழகிய முறையில் வழக்கு போட்டுள்ளார்கள். வெள்ளைக்காரன் என்பதால் இந்த அழகிய முறை. மேலும் இந்தச் செய்தி வானவர்களுக்கும், ஜின்னுக்களுக்கும் சென்றிருக்கும், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

  அந்த சர்ச் அழகிய முறையில் மசூதியாக மாற்றப்பட்டிருக்கிறது. சுல்தான் மெஹ்மத் சர்ச்சை வலம்வரும்போது அங்குள்ள கிருத்துவர்கள் சர்ச்சை மசூதியாக மாற்ற வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று கெஞ்சியபோது சுல்தான் மறுத்துவிட்டார். அதனால் கிருத்துவர்கல் சாரை சாரையாக தற்கொலை செய்துகொண்டனர். மேலும் கிருத்துவர்களின் தற்கொலைகளை தடுக்க சுல்தான் அந்த சர்சை மசூதியாக்கிவிட்டார்.

  ஆனால் ஐநூறு வருடம் கழித்து வந்த பெயர்தாங்கி முஸ்லிமான முஸ்தாபா கேமல் அட்டாடர்க் அதனை கோடூரமான முறையில் அருங்காட்சியமாக மாற்றிவிட்டார். இதுதான் சரித்திர உண்மை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ நரேன்
   நலமா?? கொஞ்சம் தலையை அடிக்கடி காட்டுங்க.ம்ம்ம்ம்ம்ம்

   அப்புறம் தமிழ்மண்மே தாவாவினால் அதிர்கிறது.

   உலகம் முழுதுமே இப்படி எடக்கு மடக்கான் தாவாவினால் அதிர்கிறது என்பதே நம் பதிவு!!.

   மூமின் சர்ச்சை திருடி மசூதி ஆக்கலாம்!!

   ஆனால் யாரும் அம்மசூதி போல் விளையாட்டுப் பொம்மை கூட செய்யக் கூடாது என்பதே தாவா தத்துவம் ஆகும்!!

   லோகநாயகர் படத்தில் தலிபானை காட்டுகிறாராம். ஹி ஹி நம்ம தாவா சகோக்களுக்கு பொத்துக் கொண்டு வந்து விட்டது!!

   ஆகவே தலிபான்களின் ஆட்சியே உண்மையான இஸ்லாமிய ஆட்சி என்பது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது!!

   நன்றி!!

   Delete
 5. Movie review

  The wait is over. Kamal Hassan's biggest-ever film Viswaroopam, which has been delayed for one or the other reason, has seen the light of day in foreign countries but not in Tamil Nadu and other Southern states as the High Court has stayed the release after several Muslim groups raised objection. After a gap of three years, Kamal Hassan is back with Viswaroopam, which is written, directed and produced by himself. The film was supposed to be directed by Selvaraghavan but as the director walked out of the film due to other commitments, Kamal took the responsibility of directing the film. The film is simultaneously made in Tamil, Telugu and Hindi. It is made with the budget of Rs 95 crore, which is the second highest budget Tamil film after Rajinikanth's blockbuster Endhiran. What does the multilingual action-thriller has to offer? A reader named Praveen Kumar from New Jersey reviewed the film, as the movie was not released here.

  Read on for the review... The movie starts in America. Viswanath (Kamal Hassan), who will be seen as Kathak trainer, is surrounded by girls and one among them is Andrea Jeremiah. This makes Dr Nirupama (Pooja Kumar) to doubt on her hubby's character and hires a detective, who gets killed by Al-Qaeda group. The Al-Qaeda is planning to plant a Nuclear Bomb in New York and Kamal Hassan is well-aware of it. How? He has a past where he has a connection with the terrorist group, which is headed by Omar (Rahul Bose). Will the terrorist organisation succeed in their mission? What role does Kamal play? Is he a terrorist or an undercover agent? To know all these, you should watch the film. The story of the film begins on a slow note but it is gripping. The first half is entirely shot in the US, and keeps you engaged and generate a lot of curiosity. When it comes to second half, the narration is dragging at parts but gets interesting with Kamal Hassan's past getting revealed. Continue reading on the slideshow...

  Read more at: http://entertainment.oneindia.in/tamil/reviews/2013/viswaroopam-movie-review-102953.html

  ReplyDelete
 6. //இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது தமிழர்களுக்கு நல்லது!!!//

  தமிழ்மணத்தைக் கடித்து,சார்வாகனைக் கடித்து இப்ப கமலையும் கடித்து விட்டார்களே:)

  இணைய ஊடகங்களில் தெறிக்கும் கருத்துக்களையே பொது ஊடகங்களில் இயங்கும் இஸ்லாமிய தலைகளும் வெளிப்படுத்துகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோ இராசந்ட,

   நீங்க ரொம்ப அப்பாவியாக இருக்கீங்க!! இவர்கள் அனைவருமே சவுதியில் இருந்து செய்யப்படும் மதப்பிரச்சாரத்தின் ஒரே குழு ஆட்கள் எனப் புரியவில்லையா!!

   மிக சிறுபானமையினரான இவர்கள் மட்டுமே சமூகத்தை பிரதிபலிப்பதாக காட்டி, தங்கள் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி.

   எண்ணெய் வற்றினால், இங்கே மத்வாதிகளின் தொந்தி வற்றினால் எல்லாம் நின்று பழைய மாதிரி அப்துல் சம்து,லத்தீப் காலம் போல் திரவிடம் பேசி அமைதியாகி விடுவார்கள்.

   பரிணாமத்தில் நிறுத்திய நிலைத் தன்மை கோட்பாடு இங்கே நினைவு கூறுங்கள்.

   குறுகிய கால அதிவேக மாற்றம், அதிக கால மிக குறைவு மாற்றம்.
   இப்போது அதிவேகம் மாற்ற குறுகிய காலம் அவ்வளவுதான்!!

   யூதமும்,கிறித்தவமும், நம்ம நாட்டு சனாத்ன தர்மம் சில நூற்றாண்டுகள் முன் இதை விட மூர்க்கமாக இருந்தவை,விமர்சித்தால் சங்குதான்!!.இப்போது சாதுவாகி இருந்த இடம் தெரியலை!! சாமி மட்டும் கும்பிட்டுக்கோ என சொல்லும் அள்வுக்கு வந்து விட்டன‌

   இஸ்லாம் கடந்த 50+ வருடங்களாக மட்டுமே நடுநிலையாக ஆய்வு செய்யப்பட்டு விமர்சிக்கப் படுகிறது.
   ஆகவே விமர்சனத்தின மூர்க்கமாக எதிர்ப்பது இயல்பே!!

   மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது!! நம் பதிவுலக்த்திலேயே மத அறிவியல்,பரிணாம எதிர்ப்புக்கு சவக் குழி நாம் தோண்டவில்லையா!!

   இதுவும் கடந்து போம்!!


   நன்றி!!

   Delete
  2. அருமையான பதில் சார்வாகன்!
   அலி சினா "FROM BELIEF TO ENLIGHTENMENT" என்ற தலைப்பில் ஓரு சிறப்பான கட்டுரை எழுதியிருப்பார், அந்த கட்டுரை ஏனோ நினவிற்கு வருகிறது.

   Delete
 7. //எண்ணெய் வற்றினால், இங்கே மத்வாதிகளின் தொந்தி வற்றினால் எல்லாம் நின்று பழைய மாதிரி அப்துல் சம்து,லத்தீப் காலம் போல் திரவிடம் பேசி அமைதியாகி விடுவார்கள்.//

  எண்ணைக்கும்,மதப்பிரச்சாரத்திற்கும் தொடர்பு,ஆதாரமிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.முன்பு இஸ்லாமியர்கள் கல்வியைக் கோட்டை விட்டு வியாபாரத்தில் ஊன்றியவர்கள்.அதனால் சிலருக்கு தொந்தி வந்துமிருக்கலாம்:)
  அப்துல் சமது,லத்தீப் காலத்தில் தி.மு.கவுக்கு உழைத்தே வீணாகிப் போனவர்கள் இஸ்லாமியர்கள்.அவர்களும் வாழ்க்கையில்,அரசியலில்,சமூக சிந்தனைகளில் முன்னுக்கு வரவேண்டும்.அதே நேரத்தில் கமலின் விஸ்வரூபத்தில் உருவான கலாச்சார தீவிரவாதிகளை பின் தள்ளுவதும் அவசியமான ஒன்று.

  மனுஷ்ய புத்திரன் என்ன ஒரு சிந்தனைவாதி!இஸ்லாமியர்கள் சார்ந்தும் கூட சில சமயம் ஊடகங்களில் கருத்து பதிவு செய்கிறார்.அவரையும் கூட கொச்சைப்படுத்தும் விதமாக மதப்பிரச்சார கலாச்சார தீவிரவாதி கட்டுரை போடுகிறார்.இதனை எதிர்க்கும் வலிமையில்லாத சூழலில் அல்லது பயத்தில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்கும் சேர்ந்து நாம்தான் கருத்து பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சகோ இராசநட ,
   சரியாக சொன்னீர்கள், ஆமாம் நான் சாதாரண முஸ்லிமின் குரலாக வஹாபிகளின் கூச்சலுக்கு பதில் சொல்கிறேன். விசுவரூபத்தில் கூட சில நடுநிலைக் குரல்கள் கேட்டது மகிழ்ச்சி.நாம் வஹாபிகளை எதிர்க்கும்போது மட்டுமே இக்குரல்கள் வெளிவரும்!!

   இந்த வஹாபிகளுக்கு சவுதி தாவா மையத்தின் கொள்கையாக்கம் மூலமே பயிற்றுவிக்கப் படுவதால் பொருள் உதவி வருவதால் மட்டுமே வளர்கிறது. சவுதி படுத்தால் வஹாபியம் படுக்கும். அமீரகத்தில் கூட வஹாபியத்தை அனுமதிப்பது இல்லை. தங்கள் தனித்துவ கலாச்சாரம் கெட்டு விடும் என அச்சமே காரணம்.

   இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியே வஹாபியத்தின் அடிப்படையில் அகண்ட அரபுலகம்(?) அமைக்கும் முயற்சிக்கு மேலை நாடுகள் முட்டுக் கட்டை எப்படியும் பொடும். மாலியில் செய்ததை எகிப்துய எல்லையை சதாம் உசேன் போல் தாண்டினால் செய்வார்கள்.எகிப்தில் வஹாபிய்ம் நிலை கொள்வதே கடினமாக் இருக்கிறது.

   நம் தமிழர்களுக்கு இது புரிவது இல்லை. வினவு கட்டுரை படித்தேன். மனுஷ்ய புத்திரன் மீதான பி.ஜேவின் கடுஞ்சொற்களுக்கு கண்டனங்கள். வினவும் வஹாபிய சிந்த்னையின் சிக்கலைப் புரிவது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதையே காட்டுகிறது!!.

   இபோதே இப்படி என்றால் பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால்
   எப்ப்டி என்பதால் மட்டுமே விமர்சிக்கிறோம்!!

   நன்றி!!

   Delete
 8. விளம்பரமா? அரசியலா? ஒன்னும் புரியல ...

  நன்றி

  www.padugai.com

  thanks

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பரே,
   அரசியல் விளம்பரம் or விளம்பர அரசியல்
   நன்றி!!

   Delete
 9. காபிர் சார்வாகன்,

  நீங்கள் காபிர் என்பதை நன்றாக காட்டிவிடுகிறீர்களே!
  இந்து மதம் போன்ற காபிர்களின் மதங்களிலும், காபிர்களின் அறிவியலிலும்தான் வெளி கிரகங்களில் உயிர்கள் சாத்தியம். அதுவும் வெளி கிரகங்களில் மனிதர்களா! இது இஸ்லாத்துக்கோ அல்லது இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் கண்டுபிடித்த காககககேவுக்கோ அடுக்குமா?

  அந்த அடிப்படையே ஆட்டம் காணும்போது, ஸ்டார்வார்ஸ் மாதிரியான காபிர் திரைப்படங்களில் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. வெளி கிரகங்களில் மனிதர்கள் போன்ற அறிவுள்ளவர்கள் இருப்பதும், பூமியை விட்டு வெளியேற மனிதர்களால் முடிவதும் (எரிகற்கள் வந்து தடுக்கும். காககககே இதற்காக ஒரு வசனத்தையே எறக்கியிருக்கிறார். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு ஹதீஸ் இலவசம்) போன்ற விஷயங்கள் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துவதால், மூமின்களை வெறியாட்டம் ஆடவைத்து நாட்டில் மத நல்லிணக்கத்தை குலைக்க ஸ்டார் வார்ஸ் பாசிட்டுகளும், தம்பலவ ஜியோனிஸ்டு பாசிட்டுகளும் முயற்சி செய்கிறார்கள்.

  இஸ்லாமியர்களின் மத உணர்வை புரிந்துகொண்டு உடனே ஸ்டார் வார்ஸ், ஸ்டார் டிரக், ஸ்டார் என்று ஆரம்பிக்கும் எல்லா படங்களையும் உடனே தடை செய்ய வேண்டும் என்று தவ்ஹீத் அண்ணன் போராட்டத்தில் எறங்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம். இதில் சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் போன்ற ஹராத்துகளும் இருக்கின்றன என்பது கூத்தாடிகளுக்கு எதிராக அப்பவே காககககே எறக்கித்தள்ளியிருக்கிறார் என்பதை அறிந்து மூக்கு மேல் விரலா விரல் மேல் மூக்கா என்று அதிசயிக்கிறோம் அல்லவா? காககககே போதுமானவர். (அல்லாஹ் போதுமானவர் என்று சொல்லி சொல்லி அலுத்து போச்சுங்கண்ணா. அல்லாஹ் போதுமானவர்ன்னு சொல்லிட்டு ஏண்டா காபிர்கள்ட்ட வந்து இட ஒதுக்கீடு கேக்குறீங்கன்னு போட்டு தள்றாய்ங்க)

  காபிர் நரேனும் வந்திருக்கிறார் (மின்னலு மாதிரி அவரே ஓடியும் விடுகிறார்)

  எதுக்கும் இருக்கட்டுமின்னு இங்கண ஒரு பிட்டு போட்டுக்கிறேன்.
  நபிவழியில் செல்லும் உலகம்! இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள்!

  பார்த்து நீங்களும் நபிவழிகளை பாராட்ட வாங்க...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மார்க்க மேதை இ.சா ஸலாம்,
   அது என்ன வசனம் அண்ணன் சு.பி பூமியைத் தவிர வேறு கிரகத்தில் விலங்குகள் உண்டு ஆனால் மனித்ன் மட்டுமே பூமியின் என தாவா செய்தாரே!

   இந்த மூமின்களோடு ஒரே குஷ்டமப்பா!!

   உங்க பதிவு படித்தேன் .அப்பாலிக்கா வருகிறேன்!!

   நன்றி!!

   Delete
 10. அப்புறம் மருதநாயகம் படத்தை யாரை கேட்டு வெளியிடவில்லை ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இப்பூ,

   நல்லா நாக்கை பிடுங்கும் படி கேளுங்க!! [எப்போதும் போல்] நான் உங்க கட்சி. பிரச்சினை சுமுகம் ஆயிட்டு போல் தெரியுது!!.

   அப்புறம் கோபித்துக் கொண்டு போய்விட்டீர்கள், கண்டுபிடிக்க பதிவு போட எண்ணினேன்.

   ஏக இறைவன் உங்களை என்னிடம் அனுப்பி வைத்து விட்டான்.அவனுக்கே எல்லாப் பதிவும்,பின்னூட்டமும்!!

   திட்டுங்க சகோ திட்டுங்க!! இந்த காஃபிர்களே இப்படிதான்!!

   நன்றி!

   Delete
  2. ///அப்புறம் கோபித்துக் கொண்டு போய்விட்டீர்கள், கண்டுபிடிக்க பதிவு போட எண்ணினேன்.///
   நான் ஏன் கோபித்துக் கொள்ளப்போகிறேன் ?

   Delete
 11. முமினுக பண்ணுற சேட்டைகளைக்கூட பொறுத்துக்கலாம்... நீங்க கிடைச்ச கேப்புல, வைரஸ்ஸை டெலஸ்கோப் வைச்சே பாத்த கமலை "எதார்த்தமான மனித நேய கலைஞன்" அப்படின்னு புரச்சிமணி பதிவுல அடிச்சு விட்டீங்களே அதைத்தாங்க தாங்க முடியல! :)

  (ஆன ராசநட ரொம்ப சந்தோசப்படிருப்பாரு!)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ நந்தவனம்,

   ஹி ஹி பதிவுலக் அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா!!

   நம்ம் நபி (சல்) அவர்களையே உலகின் அருட்கொடை, இறுதி தூதர் என புகழ்வது இல்லையா அது போல்தான்!!.

   இந்த மூமின்களால் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு!!.


   நாயர் பிடித்த புலிவால்!!

   லோகநாயகரு படம் எப்படி மொக்கையா!! பரவாயில்லையா!! அதுவேற ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   நன்றி!!

   Delete
 12. இப்படித்தான் ஈழ தமிழர்களும் LTTE'க்கு பரணி பாடிக்கொண்டு இருந்தார்கள்..
  அது மாதிரியே இந்த முல்லா கூட்டத்துக்கும் ஒரு வழி கிடைத்தால் நல்லது...

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் வெத்து வேட்டு,
   உலக அரசியலின் போக்கு எப்படியோ அதன் படி மட்டுமே அரசியல் இயக்கங்கள் செல்ல முடியும். புலிகள் கதை முடிந்தது எதிர்த்திசையில் சென்றதால்!.

   நம் சகோக்கள் சும்மா உதார் விடுவார்களே தவிர ஒன்றும் செய்ய மாட்டார்கள். தமிழ்நாட்டில் நிகழ்ந்த கோவை குண்டு வெடிப்பு தவிர்த்து வேறு எந்த மத கலவரமும் நிகழவில்லை. நிகழக் கூடாது என்பதே நம் விருப்பம்!!

   ஏதோ பிரச்சினை இல்லாமல் சென்றால் நல்லது.
   நன்றி!!

   Delete
  2. ஈழத்தமிழர்களை ஏன் இங்கு இழுக்கின்றீர்கள். ஒடுக்கப்பட்டோம் அதற்கெதிராக போராடினோம். உங்களுக்கென்ன வந்தது.......

   Delete
 13. //லோகநாயகரு படம் எப்படி மொக்கையா!! பரவாயில்லையா!//

  இன்னும் பார்க்கவில்லை சகோ. எங்க ஏரியாவில் சனி ஞாயிறு மட்டும் ஒரு ஷோ போடுகிறார்கள். அதுக்கு வேற 1 மணி நேரம் பயணம். ஆக பொதுவாக தியேட்டருக்கு போய் தமிழ் சினிமா பார்ப்பதில்லை. கடைசியாக தியேட்டரில் பார்த்து நொந்த படம்... எந்திரன். இந்த விடயத்தில் எம்புட்டு பின்தங்கி இருக்கேன்னு பாருங்க... கமல் டிடிஎச் மாதிரி நெட்பிளிக்ஸ் அல்லது அமேசானில் வெளியிட்டால் தேவலை!

  ReplyDelete
  Replies
  1. சகோ நந்தவனம்,

   நம் சகோக்கள் அவ்வபோது பதிவுலகில் பீதியை கிளப்பினால்தான் நம்க்கும் நல்லா பொழுது போகுது!! ஹி ஹி.

   அடுத்து நம்மை காதலர் தின ஆதரவு பதிவு போட வைப்பார்களா??!!

   நாளை நடப்பதை யார் அறிவார்?

   நன்றி!!

   Delete
 14. மூமின்களின் ஆசீர் வாதத்தில் மொக்கைப் படமும் இனி சக்கைப் போடு போடும் என்று எதிர் பார்க்கலாம்.

  ReplyDelete
 15. //தமிழர்களுக்கு திராவிட அரசியலின் தாக்கத்தால் மதச்சார்பின்மை ஓவெர் டோஸ் ஆகிவிட்டது//
  இது முக்கியமான உண்மை சகோ.
  திராவிட கட்சிகளால் மதச்சார்பின்மை என்று இஸ்லாம் பற்றி மூடநம்பிக்கைகளே தமிழர்களிடம் பரப்பபட்டன. இதை இஸ்லாமிய மதவெறியர்கள் தங்களுக்கு சாதகமா பயன்படுத்துகிறார்கள். முஸ்லீம்கள் ஏமாத்தமாட்டாங்க என்று ஒரு படு பொய் பிரசாரம். ஒவ்வொரு மதத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் இந்துவோ, கிறிஸ்தவனோ, யூதனோ, பௌத்தனோ தங்க மதத்தவங்க ஏமாத்தமாட்டாங்க நல்லவங்க என்று தம்பட்டம் அடிப்பதில்லை.
  இஸ்லாமியர்களில் கெட்டவர்கள் அதிகம். லண்டனில் உள்ள தமிழ் இஸ்லாமியர்கள் தங்களை தமிழர் என்றோ அல்லது இந்தியர் இலங்கையர் என்றோ தான் அறிமுகபடுத்துகின்றனர்.(அது தான் மிகவும் சரியானது, உண்மையானது)இஸ்லாமியர்கள் என்று தங்களை அறிமுகபடுத்தினால் மற்றவர்கள் கெட்டவர்கள் என்று நினைத்துவிடுவார்கள் என்பதே காரணம்.ஆனா தமிழகத்தில் தங்களை சவூதி இஸ்லாமியர்களாகவும் தமிழர்களிடம் தக்கியா செய்யும் போது மட்டும் தங்களை தமிழர்களாகவும் சொல்லி கொள்வார்கள்.

  ReplyDelete
 16. //GanesanJanuary 25, 2013 at 12:17 PM
  அப்படியே கமல், இஸ்லாமை எதிர்த்து படம் எடுத்திருந்தால் கூட அதில் என்ன பிரச்சனை?//

  மிக மிக சரியான நியாமான ஜனநாயக கருத்து. பாராட்டுகள் கணேஷ்சன்

  ReplyDelete
 17. @நந்தவனத்தான்! நானே விஸ்வரூபம் படம் பார்க்க முடியலையேன்னு கவலையில இருக்குறேன். கராத்தே சண்டை போட்டு சாக வைச்சு அரபிக்கடலில் கலக்கி விட்ட வைரஸ் பற்றி சொல்லிகிட்டிருக்கீங்களே!வைரஸ் ஏதாவது முட்டை போட்டா அதை வச்சுத்தான் இந்த தீவிரவாதப் பசங்களை இனி அடக்கனும்:)

  ReplyDelete
 18. @நந்தவனத்தான்!விஸ்வரூப பக்கோடா செஞ்சு கொடுத்தும் கூட பல் வலிங்கீறீங்க!எனக்கு பல்லு கெட்டியா இருந்தும் பக்கோடா கிடைக்க மாட்டீங்குது.

  தமிழர்கள் கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம்,சேட்டன்கள் சுமார் 5 லட்சம்ன்னு படம் பார்க்க விடாம செஞ்சுபுட்டானுக தேச துரோகிகள்.நஷ்டம் கமலுக்கு மட்டுமல்ல!இந்திய அன்னிய செலவாணிக்கும் கூட.

  ReplyDelete
 19. ராஜ நடராஜன்,
  அப்படியெனில் வேலைதராத நாட்டுக்கு வெளிநாட்டு சென்று அன்னியசெலவானியை அள்ளி குவிக்க்ரானே முஸ்லிம்கள் அதைவிடவா வருமானவரி பொய்கணக்கு காட்டும் கமலின் அன்னியசெலவானி தந்துவிடப்போகிறது .
  அவர்கள் வெளிநாடு சென்றதால் வேலை வாய்ப்பு மற்றவர்களுக்கு அதிகரிக்கவில்லையா? அவர்கள் வெளிநாட்டில் சமபாதிப்பதால் அந்த பணத்தை இத்தியாவில் செலவழிப்பதால் மேலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   நலமா? என்ன சகோ பதிவினை விட்டு வேறு ஏதோ பேசுகிறீர்கள்.

   1. துருக்கியில் உலகின் அருட்கொடை, இறுதி தூதர் நம்து உயிரினும் மேலான நபி(சல்) அவர்களின் அழகிய வழியில் வழிகேடர்களின் கிறித்தவ தேவாலாயம் ,ஏக இறைவனின் மசூதியாக மாற்றப் பட்டது.[சகோ நரேன் அழகிய முறையின் மார்க்க விள்க்கம் கொடுத்த்மைக்கு அவருக்கு நம் நன்றிகள்.காஃபிர்களே மூமின்களை விட நன்கு தாவா செய்கிறோம். மறுமையில் இதற்கான கூலி[ஹி ஹி ஹூரி] கிடைக்குமா? ]

   2. அதனை முஸ்லிம் பெயர் தாங்கி முனாஃபிக் முஸ்தஃபா கமால் பாஷா ஒரு அருங்காட்சியகமாக மாற்றியதை நினைத்து நெ(?)ஞ்சு துடிக்கவில்லையா?. பெயர்தாங்கியாக இருந்தாலும் மீண்டும் வழிகெட்ட கிறித்த்வர்களுக்கு கொடுக விரும்பவில்லை என்றாலும் ,மூமின்களால் கைப்பற்றப் பட்ட எதுவும் அவர்களுக்கு எப்போதும் சொந்தம் ஆகும் என்பதை மறந்த முனாஃபிக்கை அல்லாஹ் நரகத்தில் போட்டு தோலை மாத்தி மாத்தி கருக்க துவா செய்யுங்கள்!!

   3. உலகளாவிய கிலாஃபா அமையும் போது இது மீண்டும் மசூதி ஆக்க இறைவன் நாடுவான் என்பதையும் விளக்குங்கள்!!!

   3. அந்த மசூதி போலவே ஸ்டார் வார் கணிணி விளையாட்டு தயாரித்து ஏக இறைவனின் மார்க்கத்தை களங்கப்படுத்தும் காஃபிர்களை என்ன செய்வது?
   இந்தியாவிலும் இது விளையாடுவதாக தகவல் இருக்கிறது ஆகவே
   இந்தியாவின் மார்க்கத் திருவிளக்கு,அண்ணன் இடம் சொல்லி போராட்டம் நடத்த்வே வேண்டுகிறோம்!!


   இஞ்சி இடுப்பழகா!!

   நன்றி!!!

   Delete
 20. கணேசன் ,
  ///இஸ்லாமிய நாடுகளில், ஒரு "Da Vinci code" நூல் வரமுடியுமா? அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள்? மாற்று கருத்துகளே இல்லாத ஒரு மோசமான உலகிற்கு, ஒரு மோசமான கால கட்டத்திற்கு நம்மை இட்டு செல்ல முயல்கிறார்கள் இவர்கள்.////
  ஒருபக்கம் மலேசியாவில் வெளியாகிவிட்டது என்று பெருமை அடிக்கிறார்கள் .இன்னொருபக்கம் இஸ்லாமியனாடுகளில் வரமுடியுமா?எனிட கேள்வி?

  இஸ்லாத்தில் பெரியார் வரவாய்ப்பில்லை .பெரியாரைப் போன்றோரும் வரவாய்ப்பில்லை .ஒருவேளை பெரியார் முஸ்லிமாக பிறந்து இருந்தால் அதனுடைய கடவுள் கொள்கையில் திருப்தி அடைந்திருப்பார் .இங்கே சல்மான் ருஷ்டி ,தஸ்லிமா போன்ற கருவறை -கழிப்பறை ஆசாமிகளே தோன்ற வாய்ப்பு உள்ளது .
  மருதநாயகம் படம் வெளியிட கமலகாசன் மறுத்தது ஏன்?
  இந்தியாவில் இந்திய சட்டத்தால் நிமிடமொரு கற்பழிப்பு ,கொலை கொள்ளை அதனால் பல மக்கள் பரிதவிப்பு இவற்றுக்கெல்லாம் கண்ணீரை தொலைத்தவர்கள் ரிசானாவுக்கு கடலாக கண்ணீரை கொட்டுவது எதனால் ?கணேசன் சொல்லுவார் என்ற நம்புகிறேன்.
  இந்தியாவில் அற்புதம் புரிந்த கர்கரேயை பற்றி கவலைப்படாத கமல் ஆப்கான் தீவிரவாதம் பற்றி இந்தியாவில் படம் காட்டுவதும் தேசபக்தியா? இதுவரை அவரது வருமானத்தையும் அதற்க்காக் கட்டிய வருமானவரியையும் மக்கள் மத்தியில் வைப்பது தேசபக்தியா?

  ReplyDelete
  Replies
  1. //ஒருவேளை பெரியார் முஸ்லிமாக பிறந்து இருந்தால் அதனுடைய கடவுள் கொள்கையில் திருப்தி அடைந்திருப்பார்//
   ஹா ஹா. வேடிக்கையான பதில். நல்ல நகைச்சுவை உணர்வு உங்களக்கு. பெரியார் இருக்கட்டும். முகமது ஆபிரகாமின் மதத்தை சீர்திருத்த வந்தார். நாம் முகமதின் மதத்தை சீர்திருத்தவேண்டிய நேரம் இப்போது என்று ட்வீட் செய்தவருக்கு, என்ன நேர்ந்தது பாருங்கள்.
   http://riyadhbureau.com/blog/2012/12/turki-alhamad-arrested


   //இங்கே சல்மான் ருஷ்டி ,தஸ்லிமா போன்ற கருவறை -கழிப்பறை ஆசாமிகளே தோன்ற வாய்ப்பு உள்ளது //
   ருஷ்டி, தஸ்லிமா ஆகியோர் எவ்விதத்தில் கழிவறை ஆட்கள் என்று தெளிவுபடுத்த முடியுமா? இஸ்லாமை விமர்சித்ததனால் இவர்கள் கேவலமானவர்களா? அல்லது வேறு காரணம் உண்டா?

   //இந்தியாவில் இந்திய சட்டத்தால் நிமிடமொரு கற்பழிப்பு ,கொலை கொள்ளை அதனால் பல மக்கள் பரிதவிப்பு இவற்றுக்கெல்லாம் ...//
   இந்தியாவில் பல தீமை இருக்க தான் செய்கிறது. அவற்றை களையத்தான் வேண்டும். இந்திய கலாச்சாரத்தில் உள்ள ஆணாதிக்க உணர்வு ஒழிக்கப்படவேண்டும். நாம் குழந்தைகளை வளர்க்கும் முறை மாற வேண்டும். இவையெல்லாம் செய்யப்படவேண்டிய வேலைகள். நம்மிடம் உள்ள தவறை நாம் உணர்வதுதான் நாம் திருந்துவதற்கு முதல்படி. சரி இப்போது உங்கள் முறை. இஸ்லாமியர் மாற்று கருத்துகளுக்கு பதிலாய் வன்முறையை தான் முன்வைக்கின்றனர், இது மாற வேண்டும் என்று சொல்லும் வாய்ப்பு உங்களது. சொல்ல தயாரா?

   Delete
 21. சார்வா ////நமக்கு குரான், புஹாடி,முஸ்லிம் மடும் ஒரு அள்வுக்கு படித்து இருப்பதால் இவர்கள் சொல்லும் பொய்களை அதில் இருந்து மறுப்பேன்.ஆனால் காஃபிர் காஃபிர்தான்,மூமின் மூமின்தான் என மார்க்க ரீதியாக நெத்தி அடி, செருப்படி மரண அடி கொடுத்து நிரூபித்தீர்கள்!!////

  கேள்விக்கான பதிலில் ஆதாரபூர்வமற்றது என்று சொல்லப்பட்ட பின் கேள்வியை மட்டும் எடுத்து காட்டி ,ஷியாக்களின் நூலில் உள்ள ஹதீதை வைத்துக் கொண்டு செருப்படி ,காயடி என்று உளறுவது மட்டும் ரொம்ப கண்ணியமான பேச்சா? கமல் என்ற ஜட்டினாயகனை பற்றி உண்மை சொன்னால் ,பலமனைவியரும் பலவைப்பாட்டிகளும் வைத்துள்ள கமல் தனது மகளுடன் ஆபாசமாக இருக்கும் போட்டோவை காட்டி பீஜே விமர்சித்தால் ஒரு மத தலைவரை பொய்யான செய்தியை கொண்டு விமர்சிப்பது மனித தன்மையா?பீஜே வை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   1.///கேள்விக்கான பதிலில் ஆதாரபூர்வமற்றது என்று சொல்லப்பட்ட பின் கேள்வியை மட்டும் எடுத்து காட்டி ,ஷியாக்களின் நூலில் உள்ள ஹதீதை வைத்துக் கொண்டு செருப்படி ,காயடி என்று உளறுவது மட்டும் ரொம்ப கண்ணியமான பேச்சா? /
   மார்க்கமேதை இ.சா எனக்கு செருப்படி,மரண அடி கொடுத்ததாகவே கூறினேன்.
   சரியா!!. என் மேல் கொண்ட அன்புக்கு நன்றி!!. ஷியாக்கள் சொல்வதை காஃபிர்கள் மேற்கோள் காட்டக் கூடாது என நான் நினைக்கவில்லை. ஷியாக்கள் குரான் 4.3 முத்தா வகைத் திருமணத்தை ஆதரிக்கிறது எனவும் சொல்கின்றனர்.
   அனைத்து பிரிவுகளையும் ஏதோ ஒருவக்யில் ஒன்றுபடுத்தி மதத்தை சீரமைக்காமல் 1400+ வருடம் இருந்தது மிகப் பெரிய த்வறு. பாருங்கள் தமிழ்நாடு தவுகீத் அமைப்புகளே 10 இருக்குமா?. ஆகவே பாக்க்ரைப் பத்தி அண்ணன் சொல்வதோ, அண்ணனை பத்தி செங்கிஸ்கான் சொல்வதோ காஃபிர்கள் பயன்படுத்துவோம்!!
   **
   2.//ஜட்டினாயகனை பற்றி உண்மை சொன்னால் ,பலமனைவியரும் பலவைப்பாட்டிகளும் வைத்துள்ள கமல் தனது மகளுடன் ஆபாசமாக இருக்கும் போட்டோவை காட்டி பீஜே விமர்சித்தால் ஒரு மத தலைவரை பொய்யான செய்தியை கொண்டு விமர்சிப்பது மனித தன்மையா?//

   கம்ல்ஹாசன் ஒரு நடிகர்,நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு செய்வது எதுவும் சட்டரீதியாக தவறு இல்லை. ஆனால் அவரை பி.ஜே இப்படி பேசியதை பல் முஸ்லிம் சகோக்களே கண்டிக்கின்றனர். பி.ஜே இந்நேரம் அமெரிக்கா ஆக இருந்தால் பல் கோடி டாலர் நட்ட ஈடு கொடுக்க நேர்ந்து இருக்கும்!!

   ஷியாக்களின் ஆதர பூர்வ ஹதிதை ,சுன்னிகள் ஏற்காமல் போவது பற்றி காஃபிர்கள் ஏன் கவலைப் படவேண்டும். அந்த ஹதிதில் த்வறு என்று கூட சொல்லவில்லை. உடல்நிலை சரியில்லாமலிருக்கும் தந்தையை மாரில் சாய்த்து ஆறுதல் கொடுத்தார் என்வே பொருள் கொள்கிறேன்.

   மாக்சிம் கார்க்கியின் தாய் என்னும் கதையில், சிறையில் வாடும் தந்தையின் பசி போக்க ,உயிர் காப்பாற்ற மகள் அவருக்கு பாலூட்டுவாள்.இது தவறா??

   முலைப் பால் ஊட்டி உறவு ஆக்குதல் நபி(சல்) காலத்து வழக்கம் என்பதும் அறிந்த விடயமே.

   யாரும் யாரையும் இழிவு படுத்த முடியாது.

   முகம்து(சல்) என ஒருவர் இருந்து இருப்பார் என்பதே நான் சந்தேகப் படுகிறேன்.

   அப்ப்டியே யூதர்களின் மூசா போல், கொஞ்சம் 6ஆம் நூற்றாண்டு அரபி பழக்க வழக்கம் இணைத்து உருவாக்கப் பட்டவர் என்றே நினைக்கிறேன்.

   மூசாவிற்கும், முகம்து(சல்) 90% ஒற்றுமை உண்டு!!
   அவ்வளவுதான்!!

   நன்றி!!


   Delete
  2. சகோ இப்பூ,
   /பீஜே வை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?//
   நான் விமர்சிக்கவில்லை,அவரின் ரிசானா நஃபீக்கின் விள்க்கம் குறித்த தவறுகளுக்கு விளக்கம் கேட்கிறேன்!!

   அது செய்திகளுக்கு முரண்படுகிறது!!

   ஷரியாவின் பல்வகைகளுள் ஒன்று வஹாபிய ஹானாஃபி, அது இந்தியாவில் இல்லை என்னும் போது ஏன் தேவையில்லாமல் சவுதி அரசுக்கு வக்கால்த்து வாங்க வேண்டும்?

   பி.ஜே வின் தனிப்பட்ட‌ வாழ்வு எனக்கு தேவை இல்லாதது.

   நன்றி!!

   Delete