Friday, November 27, 2015

இந்த புதிய குரான் விளக்கம் வன்முறையைத் தடுக்குமா(ம்!)?


வணக்கம் ந‌ண்பர்களே,
நேற்று சி. என். என் தொலைக்காட்சியில் ஆய்வு குரான்(STudy Quran) என்ற ஒரு புத்தம் புதிய குரான் விளக்கம் பற்றி ஒரு செய்தி ஓளிபரப்பு ஆனது. அது பற்றியே இந்தப் பதிவு.குரான் என்பது முசுலீம்களின் மதப் புத்தகம் என்பதும், பொ.ஆ 610 முதல் 632 வரை அரேபியாவின் மெக்க,மதினா நகரங்களில்,திரு முகமது என்ற இறைதூதருக்கு அரபி மொழியில் வழங்கப்பட்ட‌ட செய்தி என்பது அவர்களின் நம்பிக்கை.அரபி அல்லாத குரான்கள், குரான் விளக்கமாக மட்டுமே கருதப் படுகின்றன.

உலகில் அதிகம் மதிக்கப்படும், விமர்சிக்கப்படும் புத்தகம் இதுதான் என்றால் மிகையாகாது.குரானை நம்புவோர் அதில் உள்ள ஒவ்வொரு சொல்லும், ஏக இறைவனின் மாற்றமில்லா இறுதி வாக்கு என்பதால் அதனை அப்படியே ஏற்கின்றனர்.ஆனால் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தினர்,முன்னாள முசுலிம் ஆகியோர் அதில் உள்ள வன்முறை சார் வசனங்க‌ளை சுட்டி அதனை விமர்சிக்கின்றனர்.
குரான் உலகின் பெரும்பான்மை மொழிகளில் , விளக்க உரைகள் உண்டு. ந‌மது தாய்த் தமிழிலும் 20க்கும் மேற்பட்ட குரான் விளக்க உரைகள் உன்டு.


இந்தப் பதிவில் சி என் என் தொலைக் காட்சி தரும் தகவல் அடிப்படையில் மட்டுமே விவாதிப்போம். நமது சொந்தக் கருத்துகளை பின்னூட்டங்களில் மட்டுமே நாகரிகமாக விவாதிப்போம்.இதுதான் தொலைகாட்சி செய்தியின் சுட்டி .
http://www.cnn.com/2015/11/25/living/study-quran-extremism/index.html

இது அப்புத்த்கத்தின் அமேசான் தள இனைப்பு
http://harperone.hc.com/studyquran/
http://www.amazon.com/The-Study-Quran-Translation-Commentary/dp/0061125865

இது அமெரிக்க பல்கலைக் கழக மத ஆய்வாளர்களான 
Seyyed Hossein Nasr (Editor-in-Chief), University Professor of Islamic Studies at the George Washington University,Caner

K. Dagli (General Editor), Associate Professor of Religious Studies at the College of the Holy Cross,

Maria Massi Dakake (General Editor) is Associate Professor of Religious Studies at George Mason University,

Joseph E. B. Lumbard (General Editor) is Assistant Professor in the Department of Arabic and Translation Studies at the American University of Sharjah 
,Mohammed Rustom (Assistant Editor), Associate Professor of Islamic Studies at Carleton University.

ஆகியோரால் மொழி பெயர்க்கப்ப்ட்டது.ஒவ்வொரு வசனத்திற்கும் அடிக்குறிப்பு (foot note)விள்க்கம் அளித்து இருப்பதாக‌ செய்தி சொல்கிறது.

இது விமர்சனத்திற்கு உள்ளாகும் வசனங்களுக்கு ,மாற்றுப் பொருள் அளிக்கிறதாம்.ஷியா,சுன்னி பிரிவு சார் தனித் தனி விளக்கமும் இருக்கிறது.எனினும் இது அதிக முசுலிம்களால் ஏற்கப்ப்டாது என்பது ந‌மது கணிப்பு.
ஏன்?
1. இந்ந்த மாற்று விள்க்கம் சரி என்றால் கமுந்தைய 1400 வருட விளக்கங்கள் தவறாகி விடும்.மத குருக்கள்,அடிப்படைவாதிகள் பிடியில் இருந்து புத்தக விளக்கம் கல்வியாளர்கள் கையில் செல்வதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏதேனும் ஃபத்வா கூட வரலாம்.

2.இந்ந்த புத்த்கத்தில், மூல அரபி வசனங்கள் இடம் பெறவில்லை.ஆங்கிலம் மட்டும்தான் என்பதாலும்,மொழிபெயர்பாளர்கள் மேலை நாட்டவர் என்பதாலும் இது இசுலாமிய ஆய்வு சார் மேலை நாட்டு பல்கலைக் கழகங்கள் தாண்டி படிக்கப்ப்டாது.

3. ஏற்கெனவே அகமதியா மற்றும் குரான் மட்டும் பிரிவினரின் விளக்க உரைகளும் இப்படித்தான் இருக்கிறது. நாமும் குரான் 4.34 வசனம் மனைவியை அடிக்க சொல்லவில்லை என்னும் குரான் மட்டும் பிரிவினரின் விளக்கம் சார்ந்து ஒரு பதிவு இட்டோம்.
http://saarvaakan.blogspot.com/2011/04/434.html
ஜிஹாத் என்னும் புனிதப் போரை , மன‌தின் தவறான எண்ணங்களுக்கு எதிரான போராட்டம் என விளக்கம்  தருகிறார்கள். http://www.muslim.org/islam/jihad.htm
அகமதியா, குரான் மட்டும் பிரிவினர் ,முசுலீம்களில் சிறுபான்மை என்பது குறிப்பிடத் தக்கது.

என்றாலும் மனிதர்களுக்கு சமாதானம் ஏற்படுத்தும் இப்படி முயற்சிகள் பாராட்டப் படத் தக்க‌வைதான்.நமது இதயம் மாற்று விள்க்கம் பெரும்பான்மையினரால் ஏற்கப்பட விரும்பினாலும்,அறிவோ வாய்ப்பு குறைவு என்பதையே இயம்புகிறது.

எப்படி இருந்தாலும், மதம் சார் சட்டங்கள் தூக்கி எறியப் படும் வரை, மதகுருக்கள் அரசியல் செல்வாக்கு அழியும் வரை இப்படிப்பட்ட முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.

ந‌ன்றி!!!நன்றி!!! நன்றி!!!

Tuesday, October 20, 2015

மாட்டுக் கறி தடைக்கு முன்னால்!!!!!!!!!!!!!!!!

வணக்கம் ந(அ)ண்பர்களே,
மீண்டு(ம்) பதிவு எழுத ஆசை.ஆயிரம் கதை சொல்லி  ஆட்சி பிடித்த  மதம் சார் கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்,மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் , மத வெறியை தூண்ட முயற்சித்து வருகிறது.

மாட்டுக் கறி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதல் இடம் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா? அல்லது எதிர்க்கும் அரசின் ஆதரவாளருக்கு தெரியாதா?

http://beef2live.com/story-world-beef-exports-ranking-countries-0-106903

World     10,200,000
Rank     Country     2015            Change
1     India                   2,400,000     23.53%
2     Brazil                  2,005,000     19.66%
3     Australia             1,590,000     15.59%
4     United States      1,098,000     10.76%
5     New Zealand        555,000        5.44%


இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல, மதங்களின் தொகுப்பு.

யார் முசுலீம், கிறித்த்வர் அல்லாதவரோ அவருக்கு  இந்து சட்டம் செல்லும்   என மட்டுமே நமது அரசியல் அமைப்பு சட்டம் வரையறுக்கிறது.

இந்து என்பதன் வரையறுப்பு பற்றி தெரியாது என நீதிமன்றத்தில் சொல்கிறது ஆளும் இந்ந்துத்வ அரசு.
http://www.thehindu.com/news/national/govt-does-not-have-info-on-definition-of-hindu/article7750000.ece

 Union Home Ministry does not know the definition of the word ‘Hindu’. In reply to an RTI query by Neemuch resident Chandrashekhar Gaur, the Ministry said it does not know the definition of the word Hindu.

“To my query under RTI about the meaning and definition of the word Hindu in the light of the Indian Constitution and the law, the Home Ministry in its reply on July 31 said the Central Public Information Officer (CPIO) doesn’t have information regarding it,” said Mr. Gaur, a resident of Neemuch district in Madhya Pradesh.

Mr. Gaur had also sought to know on what grounds a community was considered Hindu, and why Hindus were considered to be a majority community.

The government’s reply was baffling, he said.

“If the government doesn’t know the meaning and definition of the word Hindu, on what basis did it enact the Hindu Marriage Act?” he questioned.

இந்த சூழலில் இந்ந்துக்களின் உணவு இது என வரையறை செய்ய இயலுமா?

உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம்.உலக முழுதும் பல்வேறு உனவுப் பழக்க முறைகள் உண்டு.
காலம் காலமாக வ்ழக்கத்தில் இருது வரும்,பிடிக்கும் உணவை சாப்பிட எவருக்கும் உரிமை உண்டு.
மாட்டுக் கறி உண்ணுதல் சுமார் 10,000 வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது.சிந்து சமவெளி நாகரிகத்தில் கூட இந்த வழ்ழக்கம் இருப்பதகா அகழ்வாய்வு சான்றுகள் குறிப்பிடுகின்றன.

http://beef.sabhlokcity.com/2013/07/archaeological-evidence-of-beef-eating-in-india-indus-valley-vedic-period-etc/

பவுத்தம்,சமணம் ஆகியவற்றின் தாக்கத்தினால்தான் , மாமிச உணவு தவிர்த்தல் இந்தியாவில் வழக்கத்திற்கு வந்தது.வேத கால மதத்தில் பலியிடுதலும், சோமபானம் (அந்தக் கால சரக்கு) படைத்தலுமே வழிபாடு ஆக இருந்தது.

தாவர உணவு மட்டுமே சாப்பிடுவேன். அது உடலுக்கு நல்லது என பிரச்சாரம் செய்வேன் என்று சொல்வதும் ஒருவரின் உரிமை. ஆனால் ஆடு ,கோழி, பன்றி, எருமை சாப்பிடுவேன் ஆனல் யாரும் பசு, எருது மட்டும் சாப்பிடக் கூடாது என்பது சரியல்ல.

மாட்டுக் கறி பிரச்சினைக்கு முன்பு,அதாவது மாற்று மதத்தின‌னருக்கு உணவுக் கட்டுப்பாடு விதிக்கும் முன்பு

1. யார் இந்து என்பதை சரியாக வரையறுக்க வேண்டும். வேண்டும் எனில் மாட்டுக் கறி சாப்பிடாதவர் மட்டுமே இந்து என வரையறை செய்யலாம்.

2.இந்துக்கள் அனைவருக்கும் ஒரே உணவுப் பழ‌க்கம் கொண்டு வர வேண்டும்.ஒன்று அனைத்து இந்துக்களும் சைவ உணவு ,அல்லது  ஆடு ,கோழி, பன்றி, எருமை கரி சாப்பிட வேண்டும்.

3. இந்துக்களில் ஒரே சாதியில் திருமணம் செய்ய தடை வேண்டும். சாதி விட்டு சாதி மட்டுமே திருமணம் முடிக்க வேண்டும்.

4.அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும்.

5.சமீபத்திய‌ சேச சமுத்திரம தேர் எரிப்பு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம்.

யாரேனும் விவரம் அறிந்த(??) இந்துத்வ ஆதரவாளவர் (ஒருவேளை) இருந்தால் பசு மாட்டு இறைச்சி உண்ணக் கூடாது என சொல்லும் வேத வசனம் குறிப்புகள் தரவும்.

ந‌ன்றி!!!!!!!!!!!