Saturday, September 21, 2013

திரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி?


வணக்கம் நண்பர்களே,

குஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 26ல் திருச்சியில் பா.ஜ.க வின் இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார். அவரை தமிழகத்தில் நுழைய வேண்டாம் என பல இயக்கங்கள் போராட்டம் என முயற்சிகள் எடுக்க்கும்வேளையில் இந்த எதிர்ப்பு சரியானதா ,எதிர்ப்பை எப்படி சரியாக முறையாக காட்டுவது என நம் சிந்தனைகளைப் பகிர்கிறோம்.[ஹா ஒன்னு மறந்துட்டேன் சிந்திக்க மாட்டீர்களா அப்பாடா!!!]

திரு நரேந்திர மோடி நல்லவரா கெட்டவரா என்ற விவாதம் தேவையற்றது என்பதை நாம் அறிவோம். ஏன் எனின் நல்லவன் ,கெட்டவன் என்பது ஒருவரின் சார்பியல் பார்வை சார்ந்தது.ஆகவே ஒருவருக்கு நல்லவராக தெரிபவர் இன்னொருவருக்கு கெட்டவ்ராக தெரியலாம்.இதற்கு திரு மோடி போன்ற மனிதன் மட்டும் அல்ல, பல கடவுள் அவதாரங்கள், கடவுளின் தூதர்கள்(என சொல்லப்படுபவர்கள்) கூட அடங்குவர்.ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒருவரின் செயல் ,இன்னொரு கால கட்டத்தில் வேறுவிதமாக நோக்கப்படுவது இயல்பே!!!.

திரு நரேந்திர மோடியின் ஆதரவு குழுவினர் சொல்வது என்ன?

1. திரு மோடியின் ஆட்சியில் குஜராத் முன்னேறியது போல் மொத்த  இந்தியாவையும் முன்னேற்றும் வல்லமை கொண்டவர்.

2. கங்கிரசுக்கு மாற்று பாஜக(மோடி) மட்டுமே

3. 2001ல் நடந்த கலவரம் பாஜகவிற்கு தொடர்பு இல்லை. 2001க்கு பிறகு சிறுபான்மையினரும் மதிக்கும் வண்ணம் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

சரி
திரு நரேந்திர மோடியின் எதிர்க் குழுவினர் சொல்வது என்ன?

1.2001 குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கு உண்டு.கலவ்ரத்தில் போது சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை

2. மோடி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மதத்தினர்,உயர் சாதி அல்லாதோர் நலன் பாதிக்கப்படும்,இரண்டாம் த்ர குடிமக்களாக நடத்தப் படலாம்.
3. குஜராத் பிற மாநிலங்களை விட  முன்னேறி உள்ளது என சொல்வது கட்டுக் கதையே..

இதில்  உண்மை எது,பொய் எது எதற்கு சான்று இருக்கிறது என்பதையும் நாம் அலசப் போவது இல்லை.

ஏன் எனில் நாம் ஆதரவாளரோ அல்லது எதிர் குழுவினரோ இல்லை!!!!

தமிழகத்தில் மோடியின்  திருச்சி வருகையை  எதிர்ப்பவர்கள் யார்?

தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகளான அதிமுக,திமுக,காங்கிரஸ்,தேமதிக,பாமக் போன்றவை அமைதியாக இருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள்,புதிய தமிழகம் கூட எதிர்ப்பது போல் தெரியவில்லை.மோடி வருகைக்கு நடுநிலை எடுப்பதின் காரணம் தேர்தல் கூட்டணி அல்லது,மோடி அரசு அமைத்தால் ஆட்சியில் பங்கு போன்றவை காரணமாக இருக்கலாம்.

சரி வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் யார்?


I. இடதுசாரி இயக்கங்கள்

II. (தேர்தலில் ப்ங்கேற்காத‌)திராவிட இயக்கங்கள்

III. முஸ்லீம் கட்சிகள்

I.இதில் இடது சாரிகளில் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள், மேலே சொன்ன நடுநிலைக் கட்சிகளில் கூட்டணி வைத்து சில இடங்களை வென்று இருக்கின்றன.2001 ல் நடந்த பிரச்சினைக்கு இன்றும் மோடியை குற்றம் சொல்வோர்(வலது, இடது பொது உடமைக் கட்சிகள்),பாஜகவுடன் கூட்டணி கண்ட இரு கழகங்களை ஏன் அதற்காக விமர்சிப்பது இல்லை?.ஆகவே தேர்தலில் பங்கேற்கும் தமிழக இடதுகளின் எதிர்ப்பு ஒரு மோசடி மட்டுமே!!!

தேர்தலில் பங்கேற்காத இடது சாரிக் குழுக்கள் தேர்தல் பாதை திருடர் பாதை என்கிறார். அனைத்தும் மாற வேண்டும் என்கிறார்.

மாற்றம் என்பது இயல்பாக ,சிறிது சிறிதாக சூழல் சார்ந்து நிகழ வேண்டும். அப்படி நிகந்தால் மட்டுமே நிலைக்கும்.

ஒருவேளை இவர்களின் கையில் ஆட்சி என்றால் மட்டும் நியாயமாக நல்லாட்சி தருவார்கள் என எப்படி உறுதியாக நம்ப முடியும்?. அதுவும் ஜன்நாயகம் தேர்தல் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

ஜனநாயகத்தில் தேர்தல்தான் அரசியல்வாதிகளுக்கு ஒரு கடிவாளம். அய்யன் திருவள்ளுவர் கூறிவிட்டார்

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்


கடந்த 50 வருடங்களில், பல ஒடுக்கப்பட்ட சாதியினரே ஆதிக்க சாதியாக பரிணாம வளர்ச்சி பெற்றதை பார்க்கிறோம். ஏன் அன்று ஒடுக்கப்பட்டவன் இன்று ஒடுக்குபவன் ஆகிறான்? ஏன் ஒரு ஏழை பணக்கார முதலாளி ஆனாலும் அவனும் ,ப்ரம்பரை மேட்டுக் குடி ஆள் போலவே சிந்த்னை,வாழ்வுமுறை கொள்கிறான் என்பதை அனைவரும் உணர முடியும்.

இந்த வகையில் இந்த தீவிர இடதுசாரியினர் மட்டும் எப்போதும் உத்தம புத்திரர்களாக இருப்பார்கள் என்பதை நாம் நம்பத் தயாராக இல்லை.

முதலில் ஜனநாயகத்தில் வாசலாகிய தேர்தலை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இவர்கள் குறித்து கொஞ்சம் யோசிக்கலாம்.அதுவரை நமது இளைய சமூகத்தை இவர்களின் பிரச்சாரத்தில் இருந்து பாதுகாப்பது நல்லது.ஏன் எனில் இவை வன்முறை நோக்கி நகரும் அபாயம் உள்ளவை.

இவர்களின் மோடி எதிப்பு அவர்களின் கொள்கைப் பிரச்சாரம் மட்டுமே!!
ஒரு ஊராட்சி ஒன்றிய தலைவராகி கூட மக்கள் பணி செய முடியும் என நிரூபித்து பிறகு புரட்சி செய்ய அன்போடு நமது காம்ரேடுகளை வேண்டுகிறோம்.

**
II.

பெரியாருக்கு பிறகு கொள்கையிலும், செயல்களிலில் சூம்பிப் போன தேர்தலில் பங்கேற்காத திராவிட இயக்கங்கள்  என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

இளைய த்லைமுறைக்கு இறைமறுப்பையோ, சுயமரியாதையையோ,பெண் விடுதலையையோ கற்றுக் கொடுக்காமல் பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே சிந்திப்பதால் எதார்த்தம் புரிவது இல்லை.

இன்றைய பார்பனீயத்தில் பல ஆதிக்க சாதியினரும், அதீத மதப் பிரியர்களும் அடக்கம் என்பதை உணர மறுப்பவர்கள்.

இவர்களின் மோடி எதிர்ப்பு இந்துத்வ அதாவது பிராமண எதிர்ப்பு மட்டுமே.

அதாவது மோடி உயர்சாதியினரின் விசுவாசி ஆகவே எதிர்க்கிறோம் என்பதுதான் இவர்களின் எதிர்ப்பு. நாளை  ஒருவேளை மோடி பிராமணரை எதிர்த்தால் சூத்திர மோடி வாழ்க என சொல்வார்கள் என உறுதியாக நம்பலாம்.
**
III
முஸ்லீம் கட்சிகள் சிறுபான்மையாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு,பெரும்பான்மை என்றால் ஒரு நிலைப்பாடு என்பது 1400 வருடங்களாக,உலக முழுதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கோட்பாடு ஆகும்.

உலக முழுதும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் ஷரியா மீதான ஆட்சி, உலகளாவிய இஸ்லாமிய பேரரசான கிலாஃபா அமைப்போம் என்னும் நோக்கில் பல லட்சிகள் செயல் பட்டு வருகின்ற. பல் ஆயுதப் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இதில் மத்தியக் கிழக்கில் முதன்மை இடம் பெறும் கட்சி இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி ஆகும்.ஜனநாயக ரீதியாக ஆட்சியைப் பிடித்து ,ஷரியா ஆட்சி கொண்டுவருவதே அதன் நோக்கம் ஆகும்.

அந்த வகையில் பாஜக என்பதை இந்து சகோதரத்துவ கட்சி எனலாம்.இரண்டின் நோக்கம் செயல்பாடுகள் ஒன்று என்றாலும் நமது சகோக்கள் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி சரி,ஆனால் பாஜக(இந்து சகோதரத்துவ கட்சி) சரியல்ல என்பார்கள்.

நமது சகோக்களுக்கு மோடி முஸ்லீமாகவும், பாஜக  இஸ்லாமியக் கட்சியாக் இல்லை என்பது மட்டும்தான் வருத்தமே தவிர வேறொன்றும் இல்லை.
அப்படி மட்டும் இருந்தால் மோடி ஏன் அப்படி செய்தார் என விளக்கம் அளித்து இணையத்தை கதி கலங்கை வைப்பார்கள் என்பது உறுதி!!!!

நாளையே மோடி ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு இந்தியாவில் ஷரியா மீதான்  இஸ்லாமிய ஆட்சியை அமைப்போம் என்றால் மகிழ்ச்சி அடைவார்களா இல்லையா என்பதை நடுநிலை காஃபிர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆனால் தாடி வைத்து இருக்கும் திரு மோடி மூமின்கள்  கொடுத்த குல்லாவை ஏற்க மறுத்ததால்  மட்டுமே மூமின்கள் எதிர்க்கிறார்கள்.

முசாஃபர் நகரில் கூட கோத்ரா போல்தான் நடவடிக்கை சரியாக இல்லை என்றாலும் திரு அகிலேஷ் யாதவ் குல்லா போட்டதால் மூமின்கள் பிரச்சினை ஆக்கவில்லை என்பதை சிந்திக்க மாட்டீர்களா???
 
அப்புறம் சகோ ஓசூர் இராசனின் நகைச்சுவைப் பதிவில் இந்த தேவையான மாற்றங்களை செய்து படிக்க அன்புடன் வேண்டுகிறென்.
அகண்ட பாரதம்= கிலாஃபா
இந்துத்வ =இஸ்லாம்
ஆர்.எஸ்.எஸ்=ஜிஹாதிகள்
மோடி=இஸ்லாமியவாதிகள்
ஷாகா=தாவா

அப்போதும் பொருந்தும் ஹி ஹி!!!
சரி நாமும் மோடிக்கு மாற்று வேண்டும் என்வே சொல்கிறோம் ஏன்?

/அது  மூன்றாம் உலகபோராக  மாறுவதை நிச்சயம் தடுக்க முடியாது. ஏனென்றால், மூன்றாவது உலகப்போர் இந்தியாவை மையமாக வைத்தே நடக்கும் என்று  நாஸ்டர்டாம் என்பவர் எப்போதோ கணித்து சொல்லி உள்ளாராம்.!  /
நாஸ்ட்ராடாமஸ் என்ன சொல்லி இருக்கிறான் என சரியாக இங்கே படியுங்கள் ஹி ஹி!!!

"Religion named after the seas (Hindu Mahasagar - Indian Oceanwill be victoriousAgainst the sons of the Caliph's adalat or rule."

http://www.scribd.com/doc/37994695/Hindu-Destiny-in-Nostradamus-pa-Part-1
********


இந்தியா  ஒரு ஜனநாயக,இன,மத சார்பற்ற, அரசியல் அமைப்பு கொண்ட நாடு.சட்டம் அமல் படுத்துவதில் குறைகள் இருக்கலாமே தவிர உலகின் பல நாடுகளின் பாகுபாடான சட்டங்களை விட நமது  அரசியல் அமைப்பு ச‌ட்டம் சிறந்தது என்பதை நாம் உறுதியாக ஏற்கிறோம்.

இந்த சிறந்த  அரசியல் அமைப்பு சடங்களை ஒழுங்காக அமல்படுத்தும் அரசியல் த்லைவர்களோ, அரசு அதிகாரிகளோ மிக மிக குறைவு என்பதுதான் நம‌து சிக்கல்.அதிகரிக்கும் மக்கள் தொகை எந்த ஒரு முன்னேற்றும் திட்டத்தையும் செயல் அற்றது ஆக்குகிறது.

ம்க்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் போது,இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவன‌ங்களால் தொடர்ந்து சுரண்டப்படும் போது , காங்கிரசின் வெளிநாட்டு,பொருளாதார கொள்கைளை அப்படியே சுவீகாரம் செய்த பாஜக (மோடி) என்ன செய்ய முடியும்?

குஜராத் சில அம்சங்களில் பிற மாநிலங்களை விட முன்னேறினாலும்,இன்னும் சில அம்சங்களில் பின்தங்கி உள்ளதும் கண்கூடு. குஜராத்துக்கு பொருந்துவது மொத்த இந்தியாவுக்கும் பொருந்துமா?

தமிழகத்தை பொறுத்தவரை  பாஜக ஒரு சில இடங்கள் தவிர செல்லாக் காசுதான்.ஏதேனும் ஒரு கழகம் ,அதற்கு தேர்த்லுக்கு முன்னோ,பின்னோ ஆதரவு அளித்தால் மட்டுமே பலன் உண்டு.

இதில் மோடி திருச்சி வந்தாலும், தமிழகம் முழுதும் சுற்றினாலும் பலன் இல்லை.இதற்கு கொடுக்கப்படும் எதிர்ப்பு தேவையற்ற விளம்பரம் தருகிறது.

ஆக்க பூர்வமாக மோடி எதிர்ப்பாளர்களுக்கு நாம்  ஒரு யோசனை சொல்கிறோம்

ஆகவே தேர்தலில் நம்பிக்கை உள்ள மோடி எதிர்ப்பாளர்கள், இரு கழகங்களும் தேர்தலுக்கு முன்னும்,பின்னும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என அக்கட்சி தலைகள் உறுதி அளிக்க வேண்டும் என ஒரு முயற்சி முன்னெடுக்கலாம். அப்படி அளித்தால் மட்டுமே ஓட்டு என கருத்தியல் ரீதியாக போராட்டம் தொடங்கலாம்.

இப்படி உறுதி அளித்து பிறகு மாறிவிடுவார்கள் என்றால் வேறு கட்சிகளுக்கு வாக்கு அளிக்கலாம்.அடுத்த தேர்தல்களில் தண்டிக்கலாம்.

இது மட்டுமே மோடியை சரியாக முறையாக எதிர்க்கும் வழி ஆகும்.



நன்றி!!!!