Saturday, March 29, 2014

ஆரிய திராவிட கருத்தியல்கள் ஆய்வின் படி சரியா?


வணக்கம் நண்பர்களே,

இந்தியாவில்,குறிப்பாக நம் தமிழகத்தில் ஆரியர்,திராவிடர் என்ற கருத்தியல் மீது அடிக்கடி விவாதங்களைக் கேட்கிறோம். அரசியலில்  இந்த கருத்தியல் மிகுந்த தாக்கம் செலுத்துகிறது என்பதை நாம் அறிவோம்.
இப்பதிவில் அதற்கு வரலாற்று, அறிவியல் ரீதியான சான்றுகள் உண்டா என்பதை அறிய முயற்சி செய்வோம்.
 ***

ஆரிய திராவிட கருத்தியல் என்றால் என்ன?

இதனை ஆரியர்  ஊடுருவல் கொள்கை(Aryan invasion theory) எனவும் பலரால் அழைக்கப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரிகம்( பொ., மு (3300–1300) பூர்வகுடிகளாகிய திராவிட இனத்தவருடையது.இவர்களின் உருவ அமைப்பு ,கருப்பு நிறம், உயரம் குறைவானவர்கள்,சிவனை வழிபட்டவர்கள்,தமிழ்க் குடும்ப மொழிபேசியவர்கள்.

ஆரியர் என்போர் மத்தியக் கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள், இரான்,அரபு,ஐரோபியர்கள் உடன் நெருங்கிய ,உருவ,மொழித் தொடர்பு கொண்டவர்கள். சம்ஸ்கிருத குடும்ப மொழி பேசியவர்கள்.குதிரை பயன்படுத்தியவர்கள்.இவர்களின் வருகை பொ..மு 1500 ல் இருந்து தொடங்கியது. இவர்கள் திராவிடர்களைத் தோற்கடித்து தெற்கே விரட்டினர்.வேதங்களில் வரும் தேவர் அசுரர் போர் என்பது ஆரிய திராவிட போரை குறிக்கிறது.

பிறகு மத,மொழி,இனக் கலப்பு நிகழ்ந்து அவை சாதிகளாக பரிணமித்தன‌. இன்றுவரை தொடர்கிறது.

***

இதற்கு மாற்றுக் கருத்து(out of india theory) இந்துத்வ சிந்தனையாளர்களால் முன் வைக்கப்படுகிறது.


இந்திய மக்கள் அனைவருமே ஆரியர்கள்.இந்தியாவில் இருந்துதான் ஆரியர்கள் மத்திய கிழக்கு,ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் மூலம்.இந்தியர்களின் உருவ அமைப்பு வேறுபாடுகளுக்கு காரணம் தட்ப வெப்ப நிலை, வாழும் சூழல் மட்டுமே. இந்திய ஆரியர் திராவிடக் கருத்தியல் ஆங்கிலேயரின் திக் கோட்பாடு. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்சி சரஸ்வதி நதி நாகரிகம்( 3300 B.C. and 2700 B.C) எனவும் கூறுகின்றனர். மேலும் துவாரகையில் பொ..மு 10000 லேயே(அதற்கும் முன்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆல் என்றும்) நாகரிகம் இருந்தது எனவும் நிறுவ முயல்கின்றனர் 


மேலே சொன்ன இரு கருத்தியல்களின் வரையறையை முடிந்தவரை எளிமையாக சொல்லி இருக்கிறேன். ஏதேனும் விட்டுப் போய் இருந்தால் பின்னூட்டங்களில் நண்பர்கள் கூறலாம்,பதிவில் இணைத்து விடுகிறேன்.


ஆய்வு முடிவுகள் என்பது உணர்ச்சிகளாலோ அல்லது விருப்பு வெறுப்பு சார்ந்தோ இருந்தால் அவை நீடிக்க இயலாது.தொடர்ந்து கிடைக்கும் சான்றுகள் அடிப்படையில் ஆய்வின் முடிவுகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் நலம்.

வரலாறு ஆவணப்படுத்தல் என்பது கடந்த இருநூற்றாண்டுகளில் நடந்த விடயங்களை ஒரு அளவுக்கு ஆதார பூர்வமாக சொல்ல இயலும். காலத்தின் முன்னோக்கி செல்ல செல்ல சான்றுகள் அரிதாக கிடைப்பதால், அதனை  மிகச்சரியாக சொல்வதில் சிக்கல்கள், சில சான்றுகளின் மேல் வைக்கப்படும் மாறுபட்ட கருத்துகள், முரண்படும் விளக்கங்கள்…….… இது எவ்வளவு கடினமான பணி என்பதை விளக்குகிறது.

பழங்கால வரலாற்று நிகழ்வுகளை அகழ்வாய்வுகள்,மொழியியல் ஒப்பீடு  போன்றவற்றால் வரையறுப்பதுதான் நடைமுறை.ஒரு கடந்த கால  விடயம் நடந்து இருக்கும் சாத்தியம் பற்றி மட்டுமே சான்றுகள் மீதான விளக்கமாக கூற இயலும்.

இப்பதிவில் அகழ்வாய்வுகள்  பற்றி விவாதிக்காமல் மொழியியல் ஒப்பீடு  ,மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பதை மட்டும் சொல்லிவிடுவோம்.

சமஸ்கிருதம் ஒரு  இந்தோ ஐரோப்பிய மொழி என்பதும், திராவிட மொழிக் குடும்ப மொழிகளை விட ஐரோப்பிய மொழிகளுக்கு நெருங்கியது என்பது மொழியியல் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் ஒருமித்த கருத்து ஆகிவிட்டது. இதனை மறுக்கும் ஆவாளர்கள் குறைவு.


மேலே சொன்ன இணைய தள‌ கருத்தின்படி மத்திய ஆசியாவில் தோன்றி இந்திய மத்திய கிழக்கு, ஐரோப்பிய பகுதிகளுக்கு பரவியது 
Map of migratory routes
இந்திய ஐரோப்பிய குடும்ப மொழிகள் என்பது அறிய முடியும். சிந்து சமவெளி நாகரிகம் ரிக் வேதம் குறிப்பிடும் மொழியோ, நாகரிகமோ அல்ல, அதற்காக திராவிட மொழி,நாகரிகம் என்றும் கூற இயலாது என்பதே இப்போதைய ஆய்வுகளின் முடிவு.

 சிந்து சமவெளி எழுத்துகள் ,மொழி இன்னும் அறிய இயலாத, வகைப்படுத்த இயலாத விடயமாக உள்ளது. அந்த எழுத்துகள் அரபி,ஹீப்ரு போல் வலம் இருந்து இடமாக எழுதப் பட்டன என்பது மட்டுமே ஒருமித்த கருத்தாக உள்ளது.

 Iravatham Mahadevan published a corpus and concordance of Indus inscriptions listing 3,700 seals and 417 distinct signs in specific patterns. The average inscription contains five signs, and the longest inscription is only 17 signs long. He also established the direction of writing as right to left


சிந்து சமவெளியில் குதிரை பயன்பாடு இல்லை.
குதிரைப் பயன்பாடு என்பது ரிக் வேதத்தில் பல இடங்களிலும், (கிளுகிளு!!!!) அசுவ மேத யாகம் பற்றி பல இந்து புராணங்களிலும் குறிப்பு வருகிறது.


மொழியியல் ஆய்வுகளின் படி சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்பது மட்டும் ஆரியர் திராவிடர் கருத்தியலுக்கு ஆதாரம் ஆகிவிடுமா என்றால்,குறைந்த பட்சம் எதிரானது அல்ல என சொல்ல முடியும்.

****
பாருங்கள் பரிணாம கொள்கையின் படி மனிதன்(ஹோமோ சேஃபியன்) பரிணமித்தது கிழக்கு ஆப்பிரிக்காவில் என்பது பெரும்பான்மை ஆய்வாளர்களின் கருத்து ஆகும். அதில் இருந்து சுமார் 50000 ஆண்டுகளுக்கு முன் உலக முழுதும் பரவினார் என்பதும் பெரும்பான்மை ஆய்வியல் முடிவு ஆகும்.

குழுவாக இடப்பெயர்வு நடக்கும் என்பதும்,இடப்பெயர்வு பல தலைமுறையாக நடக்கும் என்பதால், ஒரு இட்த்திற்கு சில  குழுக்கள் வந்து வசிப்பதும், அந்த இடம் நோக்கி இன்னும் சில குழுக்கள் வரூவதும், வாழ்வதற்காக வசதி வாய்ப்புகளுக்கான போட்டி ஏற்படுவதும் மிக இயல்பான விடயம்.

1.ஆப்பிரிக்காவில் இருந்து மத்தியக் கிழக்கில்  வசித்த குழு மக்கள் தொகை அதிகரிப்பில் பல குழுக்கள் ஆகி, இடம் பெயர்ந்து இந்தியா, ஐரோப்பா நோக்கி செல்லும் சாத்தியம் அதிகமா?

2. இந்தியாவில் ( ஹி ஹி பிரம்மாவின் உடலில் இருந்து) மனிதன் தோன்றி,இதர பகுதிகளுக்கு செல்லும் சாத்தியம் அதிகமா?
Verse 13
brAhmaNo asya mukhamAseet | bAhoo rAjanya: krta: |
ooru tadasya yad vaishya | padbhyAm shoodro ajAyata || 12 ||
(asya) His (mukham) mouth (Aseet) became (brAhmaNa:)
the Brahmin, (bAhoo) his arms (krta:) were made (rAjanya:)
Kings. (yad) what were(asya ooru) his thighs, (tad) they were
made into (vaishya:) the merchants, (padbhyAm) and from his feet
(shoodro) were the servants (ajAyata) born.
புருஷனின் முகம்(mukham)  பிராமணன் (brAhmaNo)ஆனது
புருஷனின் கை(krta:)  சத்திரியன்(rAjanya)  ஆனது
புருஷனின் தொடை(ooru) வைசியன்(vaishya)  ஆனது
புருஷனின் பாதம்(padbhyAm) சூத்திரன் (shoodro) ஆனது

3. ஆப்பிரிக்காவில் உருவான  மனித இனம், இந்தியா வந்து இங்கிருந்து ஐரோப்பா வரை பரவினார் என்பதும் சில இந்துத்வ ஆதரவு ஆய்வாளர்களின் கருத்தியல் ஆகும்.இது சாத்தியமா?


மொழிரீதியாக சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்பதும்,சிந்து சமவெளி நாகரிகம் வேத கால நாகரிகத்திற்கு முந்தையது என்பதும், ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் பூமியின் பிற பகுதிகளுக்கு பரவியது என்ற பெரும்பான்மை ஆய்வு முடிவுகள் எதன் சாத்தியத்தை வலியுறுத்துகின்றன என்பதை சிந்திக்க மாட்டீர்களா?
  ***
இப்பதிவில் நாம் கூற வந்த விடயமே வேறு!!!

இந்த அகழ்வாய்வு சான்றுகள் மட்டும் அல்லாமல், நிகழ்கால சான்றாக மரபணு ஒப்பீட்டு ஆய்வுகளும் வரலாற்றை கட்டமைக்க பயன்படுகின்றது.

மரபணுரீதியாகவே ஆபிரிக்காவில் இருந்து எப்படி மனித பரவல் நிகழ்ந்தது என்ற ஆய்வினை நடத்திய ஸ்பென்சர் வெல்ஸ்(Spencer Wells) மதுரைக்கும் வந்து தமிழர்களின் மரபணுவும் பழமையான ஒன்று என் கண்டறிந்தது கூட சொல்ல முடியும்.


ஆரியர் வருகைக்கு முன்பே சாதி இருந்தது என்பது திராவிட மேன்மை கருத்தியலின் புரட்டுகளையும் வெளிக் கொண்டு வருகிறது. நாம் நல்லவர்கள், அவர்கள் கெட்டவர்கள் என்ற பார்வை கொள்வது நிச்சயம் நல்ல விளைவைத் தராது. மனிதப் பரவலில் ,முன் வந்தான் ,பின் வந்தான் என்பது வரலாற்று நிகழ்வை அறியவும்,யாரும் எந்த இடத்திற்கும் நிரந்தர சொந்தக் காரன் அல்ல என்பதை உணர மட்டுமே என்பதை வலியுறுத்துகிறேன்.


எந்த அளவுக்கு பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்துத்வ கொள்கை மனித விரோதமோ,அதே அளவு  ஆரியர் வருகையே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்னும் திராவிட கருத்தியலும் மனித விரோதமே!!!!!.

இன்னும் இந்தியர்களின் மரபணுக்களை ஆய்வு செய்த பல ஆய்வாளர்கள்(இதில் குமாரசாமி தங்கராஜ் என்னும் தமிழரும் இருக்கிறார்) கூறும் கருத்தானது,

Most Indian groups descend from a mixture of two genetically divergent populations: Ancestral North Indians (ANI) related to Central Asians, Middle Easterners, Caucasians, and Europeans; and Ancestral South Indians (ASI) not closely related to groups outside the subcontinent.
1.      இந்தியாவில் உள்ள மக்கள் குறைந்த பட்சம் இரு வித்தியாசமான‌  இனக்குழுவாக பிரிக்கலாம்.
a)ஐரோப்பியர்,மத்திய கிழக்கினர்,மதிய ஆசியர்கள்  ஆகியவர்களுக்கு நெருங்கிய ஆதி வட இந்தியர்கள்.


b) இவர்களில் இருந்து மாறுபட்ட இனக்குழுவினருக்கு(அதாவது ஆப்பிரிக்கர்கள்) நெருங்கிய ஆதி தென்னிந்தியர்கள்.

தமிழர்கள் கருப்பின மக்கள் என தோழர் கலையரசன் பல பதிவுகள் எழுதி இருக்கிறார். அவைகளைப் படிக்க பரிந்துரைக்கிறேன்.


ஆனால் இவை எல்லாம் 4000 வருடத்திற்கு முந்தைய சூழல் மட்டுமே. அதன் பிறகு இனக்கலப்பு  சுமார் 2000 ஆண்டு முன்பு வரை அதிகம் நிகழ்ந்தது.

எடுத்துக் காட்டு என்றால் வேதங்களைத் தொகுத்த  வியாசர் பராசர முனிவருக்கும், மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். திருதராட்டிரன்,பாண்டு,விதுரன் ஆகிய மூவருக்கும்  உயிரியல் தந்தை(biological father) வியாசர்.

 அருச்சுனனுக்கும் ,நாகர் குலப் பெண்ணுக்கும் பிறந்தவன் அரவான், பீமனுக்கும் அரக்கர் குலப் பெண்ணுக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.கிருஷ்னனின் மகன் பிரத்யும்னன் தன்னை வளர்த்த மாயாவதி என்னும் பணிப்பெண்ணை மணம் முடித்தான்( ஹி ஹி இதுதான்  கிளுகிளு இரதி நிர்வேதம் கதையின் அடிப்படை!!!).


அரச குடும்பங்களில் கலப்பு இருக்கும் போது பிற சொல்லத் தேவை இல்லை!!!


ஆகவே ஆரியர் வருகையின் பிறகும் இனக்கலப்பு இயல்பாக இருந்தது என்றால் சாதி உயர்வு தாழ்விற்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை!!! ரிக் வேதத்தில் 10வது காண்டத்தில்தான் வர்ணம் பற்றிய குறிப்பு முதலில் வருகிறது. அதன் பிறகு சடங்குகள் சாதிரீதியாக வரத் தொடங்குகிறது.வேதங்கள் தொகுக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆனது என்பதை சிந்தித்தால் கணக்கு சரியாக வரும்.


அதன் பிறகு அமலுக்கு வந்த சாதி அமைப்பு, சாதிரீதியாக மட்டுமே திருமணத்தை வலியுறுத்தியது.

சாதி எப்படித் தோன்றியது  என்பது குறித்து இன்னும் ஒருமித்த கருத்து நான் அறிந்த வரை இல்லை. அரசு இழந்த பவுத்தர்கள் தாழ்த்தப்பட்டவர் ஆக்கப் பட்டார்கள் என அம்பேத்கார் கூறுகிறார்.

ஆகவே 2000 வருடம் சாதி ரீதியாக , அகமண முறை அமலில் இருந்தாலும், சாதிப்பெருமை,தூய்மை பேசும் பெருந்தலைகள் மேன்மை பாராட்டினாலும், இந்திய மக்கள் கலப்பின மக்கள்தான்.


ஆகவே ஆரியர்  வருகை,அதற்கு முந்தைய ஆப்பிரிக்க இனத்தவர் இங்கு வந்து வாழ்ந்தமை  எல்லாம் பழைய கதை. அனைவரும் ஒன்றோடு ஒன்றாக 2000 வருடம் கலந்து விட்டோம்.
Between 4,000 and 2,000 years ago, intermarriage in India was rampant. Figure by Thangaraj Kumarasamy
அதன் பிறகு தோன்றிய சாதிக் கட்டமைப்பு  2000 வருடமாக இன்றுவரை நீடித்தாலும், ஆயிரம் கதை சொன்னாலும் உண்மையை மறைக்க முடியாது.

ஆகவே நமது முந்தைய உண்மையான வரலாறான  இனக் கலப்பு மணங்கள் முன்னெடுத்து, வலுவான சந்ததியை உருவாக்க முயற்சி செய்வதே இந்தியா வல்லரசு மட்டும் அல்லாமல் நல்லரசு ஆகும் ஒரே வழி!!!!

 திராவிடர் எனப்படும் ஆப்பிரிக்கர்களுக்கு நெருங்கிய இனக்குழுக்கள் முந்தி வந்தமையும்,அதன் பிறகு ஐஅரோப்பிய மத்திய ,கிழக்கு ஆசிய  மக்களுக்கு நெருங்கிய இனக்குழுக்களும் வந்திருக்கும் சாத்தியம் அதிகம்.சான்றுகள் அதனை சுட்டினாலும், அதன் பிறகு 2000 வருடம் நடந்த இனக்கலப்பில் ,ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டனர்.சாதி என்னும் மனித விரோத அமைப்பு மனிதர்களை கூறு போடாலும் நமது மரபணுவில் பொதிந்த உண்மைகள் சாதி அமைப்பு என்பது   போலி என்பதை நிரூபிக்கிறது.


எதிர் விவாதம் செய்ய விரும்பும் நண்பர்கள் தங்கள் தரப்பு சான்றுகளை சுட்டி வாதங்களை வைக்க வேண்டுகிறேன்.அதாவது

)சமஸ்கிருதத்தில் இருந்தே மொழிகள் தோன்றின,

)இந்தியாவில் மனிதன் தோன்றினான்,

) சிந்து சமவெளி நாகரிகம்தான் வேத கால சரஸ்வதி நாகரிகம்((அதுதான் இது செந்தில் பாணி)

)ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்து மத்திய கிழக்கு போய் ஐரோப்பா சென்றான்.

) மரபணு ஆய்வுகள் சதிக் கோட்பாடு.

ஊ) சொந்தமாக ஏதேனும்………………..

இக்கருத்துகள் ஏதேனும் சிலவற்றின் மீது சான்று ரீதியாக முன் வைக்கலாம்.
அதை விட்டு ஆரிய திராவிட கருத்தியலுக்கு 100% ஐயந்திரிபர நடந்த போது எடுத்த காணொளி மூலம் விளக்க முடியாமையால்  மாற்றுக் கருத்தான வேத கால நாகரிகமே உண்மை என நகைச்சுவை பண்ணக் கூடாது!!!!காணொளி கிடைத்தநித்தி விடயத்தையே இந்துத்வர்கள் போலி என்கிறார் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் (வாரணாசித் தொகுதியை மோடியிடம் ஏமாந்த) முரளி மனோகர் ஜோஷி தலைமையில் துவாரகையை தேடுகிறேன் எனத் தோண்டி புரளிகள் கிளம்பியதுதான் மிச்சம், ஒரு செம கட்டையை(மரம் சகோ) எடுத்து அது 20000+ வருடம் பழமை என கதை விட்டனர்.இனி மோடி வந்தால் சொல்லவே வேணாம்!!!

(பிற மத வழிபாட்டுத் தலம்) இடிக்க,(ஆதாரம் வேண்டித்)  தோண்ட இந்துத்வர்களுக்கு ஓட்டு போடுங்கள்!!! ஹி ஹிநன்றி!!!