Thursday, August 22, 2013

புதிய நாத்திகம்[New Atheism] என்றால் என்ன?


வணக்கம் நண்பர்களே,
நாம் ஒரு இறைமறுப்பாளர் என்பதை வெளிப்படையாக சொல்கிறோம். ஆத்திகம் ,நாத்திகம் குறித்த விவாதங்களில் ஈடுபாடு காட்டுகிறோம். நாத்திகம் என்பது ,(கடந்த+நிகழ் கால) சான்றுகளின் அடிப்ப‌டையில் கருதுகோள்களை பரிசோதித்து ஏற்றல் என்பதும், கிடைக்கும் எதிர்கால சான்றுகளுக்கேற்பவும் அவசியம் எனில் முடிவுகளை மாற்றுவது என்ப‌தே வரையறுப்பாக ஏற்கிறோம்.

ஆத்திகம் என்பது இயற்கைக்கு மேம்பட்ட சக்தி(கள்) பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நிகழ்வையும் கட்டுப்படுத்துவதாகவும்,அதனை சில குறிப்பிட்ட வகைகளில் பணிந்து வணங்கினால்,சில செயல்களை செய்யும் மனிதர்களுக்கு நல்ல வாழ்வு இம்மை+மறுமையில் கிட்டும் என பொதுவாக கூறலாம்,என்றாலும் நாத்திகம்,ஆத்திகம் இரண்டிலும் பல கிளைகள் உண்டு.இதில் நமது நாத்திகம் மேலே சொன்ன நிலைப்பாடு ஆகும்.

நாம் நாத்திகர் என்பது மட்டும் அல்லாமல் இயற்கையை பாழ்படுத்தாத எளிய வாழ்வு, அனைவருக்கும் குறைந்த பட்ச‌ வாழ்வாதாரம், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு. பொது சமூக சட்டம்,அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதர உத்திரவாதம் போன்ற நடைமுறைகளையும் வலியுறுத்துகிறோம்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் நாத்திகம் என்பது சர்வ ரோஹ நிவாரணி அல்ல. ஒருவர் நாத்திகர் ஆகி விட்டால் அவர் அக்மார்க் உத்தமர், எந்தப் பிரச்சினையையும் ஊதித் தள்ளி விடுவார் என்பது எல்லாம் பொய். ஒரு நாத்திகருக்கும்,பிறருக்கு உள்ள சமூக,சட்டம் சார்ந்த வாழ்வியல் சிக்கல்கள் இருந்தே தீரும்.

அரசியல் இயக்கம் சாராத நாத்திகருக்கு யாரையும் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமோ, அன்றே அவர் கூறினார்  போன்ற விடயங்களில் இருந்து விலகலாம் என்பதுதான் ஒரே இலாபம்.கோயிலில் காணிக்கை ,மதகுரு தொந்தரவு போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

நாத்திக அரசியல் சமூக இயக்கங்களில் கூட, அதன் தலைவர்களை யாரேனும் வசை பாடும் போது இழிவு செய்து விட்டார்கள் என கோபம் கொள்வார்கள்.

அது அவசியம் இல்லை என்பதே நம் கருத்து.

விமர்சித்தால் மறுப்பு,ஆக்க/ஆதார‌ பூர்வமாக கொடுங்கள்.கருத்தினை கருத்தால் எதிர் கொள்வதே சால சிறந்தது. தமிழகத்தை பொறுத்த வரை நாத்திகர் என்றால் திராவிட இயக்கத்தவர் என்று அனைவரும் எண்ணுவது புதிய நாத்திகர்களாக அறிவித்துக் கொள்ளும் நமக்கு வியப்பையே தருகிறது.

திராவிட இயக்கத்தை பொறுத்த வரை தந்தை பெரியாருக்கு பிறகு சரியான பாதையில் பரிணமிக்கவில்லை எனவே கூறுகிறோம். தந்தை பெரியார் அவர் கூட வாழ்ந்த காலத்தின் சமூக சிக்கல் சார்ந்து, அவர் அறிந்த வரை எடுத்த சில முடிவுகள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதை நாம் ஏற்பது இல்லை.ஒரு வரலாற்று நிகழ்வு பார்ப்போம்.
தந்தை பெரியாருக்கும்,அண்ணல் அம்பேத்காருக்கும் திரு முகமது அலி ஜின்னா கொடுத்த அல்வாக் கதை பற்றி நாம் அறிவோம். அது இருவருக்குமே ஒரு வரலாற்று சறுக்கல்தான். அதன் பிறகு அண்ணல் முஸ்லீம் அரசியல் என்பது உலகளாவிய கிலாஃபா சார்ந்தது என்பதை உணர்ந்து ,காங்கிரஸ் +இந்துத்வ இயக்கங்களுடன் ஒரு தீர்வு நோக்கி பயணித்து ,இரட்டை வாக்குரிமை கோரிக்கை கைவிட்டு, அரசியல்,கல்வி, ,வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பதில் மட்டுமே திருப்தி அடைந்தார். இதுதான் அப்போது சாத்தியமான ஒரே அமைதித் தீர்வு என்பதை அண்ணல் உணர்ந்ததால் மட்டுமே ஏற்றார்.திரு.ஜின்னா போல் நேரடி செயல் நாள் [Direct Action Day)என அழைப்பு விடுத்து பல்லாயிரக் கண்க்காரின் சமாதி மேல் நின்று நினைத்ததை சாதிக்கும் விருப்பம் அண்ணலிடம் இல்லை. நேரடி செயல் நாள் பற்றி இங்கே படியுங்கள்.

அம்பேத்கார் கண்ட தீர்வுகள் தலித் மக்களுக்கு  முழுமையாக பலன் அளிக்கவில்லை என்றாலும் தாழ்த்தப் பட்டவர்களின் நிலை கடந்த 50+ ஆண்டுகளில் முன்னேற்றப் பாதை நோக்கியே செல்கிறது. 
பெரியார் கூட அதில் பட்ட சூட்டில் கொஞ்சம் வெளிப்படையாக இஸ்லாமை ஆதரிக்கும் போக்கை கைவிட்டார். ஆனால் இதனை பெரியாரின் சீடர்களாக சொல்பவர்கள் மறந்து விட்டார்கள்.  
ஜின்னாவின் அல்வாக் கதை அறிய விரும்புபவர்கள் இங்கே படிக்கலாம்.

த‌ந்தை பெரியாரின் சில வரலாற்று சறுக்கல்களை விமர்சிக்கிறோம் என்பதற்காக அவரை முழுமையாக எதிர்க்கிறோம் என்பது அல்ல, அவரின் சாதி மறுப்பு,பெண் விடுதலை,இறை மறுப்பு போன்றவற்றை நிச்சயம் ஏற்கிறோம். அவற்றை இக்காலத்துக்கு ஏற்றபடி விளக்குவதையும் செய்கிறோம்.

எவரையும் அவரின் செயல்கள்(சான்றின் அடிப்படையில்) மட்டுமே விமர்சிக்கிறோம்,ஏற்கிறோம்,இக்கால சூழலுகு எவ்வள்வு பொருந்துமோ அதை மட்டுமே ஏற்கிறோம். யார் மீதும் அதீத பற்றோ,வெறுப்போ கொள்ள அவசியம் இல்லை என்பதே நாம் கூறுகிறோம்.

நாம் பார்ப்பனர் மட்டும் அல்ல ஆதிக்க சாதி, வஹாபி/கிறித்தவ  பிரச்சாரகர்களையும் அதே வீரியத்துடன் எதிர்க்கிறோம். பெரியார் காலத்தில் ஆதிக்க சாதியினரின் சாதிக் கட்சிகளின் எழுச்சி, உலகளாவிய கிலாஃபா அமைக்க போராடும்  கொள்கை பிரச்சாரம் இருந்தாலும் அது குறித்த பெரியாரின் கருத்துகளை அறிய முடியவில்லை..ஆங்கிலேயரிடம் ஆட்டோமான் அரசின் படுதோல்வியை எதிர்த்த கிலாஃபத் இயக்கம்  நடந்த போது(1921)  பெரியார் காங்கிரசில் இருக்கிறார். ஒருவேளை அப்போது நாத்திகராக  இருந்து இருந்தால் எதிர்ப்பு காட்டி இருப்பாரா என ஆருடம் சொல்ல நாம் விரும்புவது இல்லை.

யாரையும் எக்காலத்துகும் பொருந்தும் கருத்துகளை அன்றே கூறினார் என ஏற்பது இல்லை. ஒருவர் கூறியது இப்போதைய சான்றுகளின் படி சரி அல்லது தவறு என மட்டுமே முடிவெடுப்போம் எனவே கூறுகிறேன். சக(கோ) நாத்திகர் என்பதற்காகவும் எதையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் அவசியம்  புதிய நாத்திகர்களுக்கு இல்லை.

புதிய நாத்திகம் என்றால் என்ன? 

New Atheism is the name given to the ideas promoted by a collection of modern atheist writers who have advocated the view that "religion should not simply be tolerated but should be countered, criticized, and exposed by rational argument wherever its influence arises."[1]

மதம் எங்கெல்லாம் மூக்கை நுழைக்கிறது அங்கெல்லாம் மதத்தை சகிப்பது அல்ல,அதனை மறுத்து ,விமர்சித்து,அதன் சான்றற்ற தன்மையை அறிவு சார்ந்து வெளிப்படுத்துவதே புதிய நாத்திகம்!!!.
கடவுள் இல்லை என் நிரூபிக்க முடியுமா என்றால் ,மத புத்த்கம் சொல்லும் குணங்கள் கொண்ட கடவுள் இருக்க முடியாது என ஆக்க பூர்வமாக எடுத்து உரைக்கும் புத்தகம் அவசியம் படியுங்கள்!!!


மத புத்கம் வந்த கதைகளுக்கோ, அவற்றில் சொன்ன நிகழ்வுகளுக்கோ மொழியியல்,அகழ்வாய்வு சான்றுகள் இல்லை என்றே சொல்கிறோம்

பிரஞ்சம் தோன்றியது 1370 கோடி ஆண்டு முன்பு,

பூமி தோன்றியது 500 கோடி ஆண்டுகள் முன்பு,[நன்றி மாப்ளே ஜெயதேவ் தாஸ்]

ஒரு செல் உயிரி தோன்றியது 350 கோடி ஆண்டு முன்பு,

ஆப்பிரிக்காவில் மனிதன்[ஹோமோ சேஃபியன்] தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகள் முன்,

அங்கிருந்து உலகம் முழுதும் பரவினான்,

விவசாயம் செய்து ஒரிடத்தில் வசித்தது 20,000 ஆண்டுகள் முன்,
நாகரிகம் உருவானது  10,000 ஆண்டுகள் முன்,

மதங்கள் தோன்றியது இதன் பின்னர் மட்டுமே,

மதபுத்தகம் அனைத்துமே  உருவானது   கடந்த 7000 வருடம்,

உலகின் பழமையான எழுத்துமுறை சுமேரியன் க்யூனிஃபார்ம் பொ.ஆ.மு 3200.
இந்தியாவின் எழுத்தில் பழமையானது பிராமி எழுத்து முறை.மொழி ரீதியாக முதல் எழுத்து சான்றுகளை இந்த விக்கிபிடியாவில் பாருங்கள்.

இந்த சான்றுகளின் அடிப்படை வரலாற்றில் அனைத்து மத ,இன,மொழிப் பெருமைகள் காணாமல் போகிறது என்பதை வலியுறுத்துகிறோம்.

பரிணாமத்தை மறுக்கும் மத வியாதிகள் பரிணாமம் பொய் என மத புத்தகம் சொல்கிறது எனக் கூட உறுதியாக சொல்ல தயங்குவதை பல விவாதங்களில் நிரூபித்து இருக்கிறோம். இது மதவாதிகள் எப்பாடுபட்டாவது,எதை செய்தாவது தங்களுக்கு அடையாளமாக விளங்கும் மதத்தை காப்பாற்ற முயல்வது நன்கு புரியும்.
**
இபோது எதார்த்த நடைமுறை வாழ்வு பற்றி யோசிப்போம்.

நாத்திகர் மட்டும் அல்ல,அனைவருக்கும் பாரபட்சம் அற்ற மனித உரிமை மீதான பொது சமூக,குற்றவியல் சட்டம் உலக முழுதும் வேண்டும் என்கிறோம். மதம்,இனம் சார் கொள்கைகள் அரசினால் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறோம். 

பழைய  பஞ்சாங்க நாத்திகர்கள் இந்து மதத்தை மட்டும் விமர்சித்து , பிற மதங்களுக்கு ஜால்ரா போடுவதை நாத்திகம் என சொல்வது நகைப்புக்கு உரியது!!!

உண்மையை சொன்னால் இந்து மதம் என்பது பல மதங்களின் சங்கமம், ஒருவர் சட்டவிரோதம் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் வழிபட இந்து மதம் உரிமை அளிக்கிறது. உபநிஷத்துகளின் தத்துவரீதியான வாதங்கள் சான்றில்லாதவை என்றால் கூட அவற்றின் பொதிந்து இருக்கும் அறிவார்ந்த சிந்த்னை என்னை மலைக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் பல(30) உபநிஷத்துகளின் மொழிபெயர்ப்பு தருகிறேன். அவசியம் அனைவரும் படித்து அலச வேண்டுகிறேன்.


இந்த உபநிஷத்துகள் 1914ஆம் வருட மொழி பெயர்ப்பு.சில மத புத்தகங்களின் இதே சம‌கால மொழிபெயர்ப்புகளை தவறு என ஒதுக்கிறார்,கருத்தினை திருத்தி மீள் மொழியாக்கம் செய்யும் ஏமாற்று வேலைகளையும் சிந்தியுங்கள்!!!.

உபநிஷத்து படியுங்கள் என்பதால் உடனே சில பட்டம் கிடைக்கும் என்பதை அறிவேன்.

நம்மைப் பொறுத்த‌வரை உபநிஷதுகளோ,இதர மத புத்தக்ங்களோ சொல்லும் கருத்திற்கு,நிகழ்விற்கு  சான்று இருக்கிறதா,அறிவார்ந்த வாதம் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கிறோம்.

மதம் விமர்சிக்க ,முதலில் மத புத்தகம் வித்தியாசமான மொழி பெயர்ப்புகள் சார்ந்து படித்தால் மட்டுமே,மதம் என்பது அரசியல் ஆதிக்கம் பெற உருவாக்கப்பட்ட கட்டுக் கதைகள் எனப் புரியும். 

இதில் திரு சேசாசலம் என்னும் பெரியார்தாசன் என்னும் சித்தார்த்தர் என்னும் அப்துல்லாஹ் இந்துமத விமர்சனம் செய்த அள்வுக்கு வேறு மதங்களை விமர்சிக்கவில்லை.

அவர் எழுதிய  இந்திய மரபும் பார்ப்பன திரிபும்  என்னும் நூலில் இருந்து சில வரிகள் தருகிறேன்.

""ஆரண்யகங்கள் என்ன சொல்கிறது என்றால், இந்தப் பிரபஞ்சம் எதிலேயிருந்து வந்தது? ஒருத்தன் சொன்னான் பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது. நல்லா கவனிச்சீங்கன்னா புரியும். கொஞ்சம் கடினமான செய்திதான் இது. பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது. பக்கத்துல ஒருத்தன் நின்னான். இவன் சொக்காய புடிச்சு, கோமணத்த புடிச்சு இழுத்து, நீரு எதுல இருந்து வந்தது; அப்புறம் பிரபஞ்சம், நீரில இருந்து வந்ததுன்னா, நீரு எதுல இருந்து வந்தது. பக்கத்துல இருந்தவன் ஏதாவது ஒண்ணு சொல்லிட்டு போவனுமில்ல, நீர் நெருப்பிலே இருந்து வந்ததுன்னு அவன் போயிட்டான்.

இவரு ஒரு ஆரண்யக தத்துவ ஞானி. முதல் ஞானி பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது என்றார். பக்கத்துல இருந்தவர் கேட்டார் நீர் எதுல இருந்து வந்ததுன்னு? நீர் நெருப்புல இருந்து வந்ததுன்னார். நெருப்பு எதுல இருந்து வந்ததுன்னு, பக்கத்துல இருந்தவன் சொக்காய புடிச்சு இழுத்தான். அவன் சொன்னான் கருமுட்டையிலேயிருந்து வந்ததுன்னு. இவங்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பறதா, இல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரியை இங்கேயே கொண்டு வந்து இவங்களை அமுக்கிறதா? இதெல்லாம் ஒரு தத்துவமாம். இது என்னா மசுருக்கு உதவும்.""

இதே கருத்தை திரு அப்துல்லாவின் இப்போதைய மதத்திலும்,பிற மதங்களிலும் காட்ட முடியும். [ஹி ஹி சகோக்கள் வந்தால் வித்தை காட்டுவோம்]

இதில் சேஷாசல,பெரியார் தாச,சித்தார்த்த அப்துல்லா பிரச்சினையில் , திராவிட பஞ்சாங்க நாத்திகர்களும், வஹாபிகளும் ஒருவருக்கொருவர் கை துக்கி விட்டு என் மீசையில் மண் ஒட்ட்டவில்லை என்பது நல்ல நகைச்சுவை.

ஒருவர் முஸ்லீம் ஆகிவிட்டால் ,அவரின் வாழ்வு ஷரியாவின் படியே நிர்ணயிக்கப்படும் என்றாலும், சிறுபான்மை என்பதால் வஹாபிகள் ஷரியாவுக்கு விரோதமான  அவரின் உடல் தானத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட, திராவிட  நாத்திகம் ,மதம் மாறினாலும் நாத்திகன் நாத்திகன் தான் என்பது ம்ம்ம்ம்ம்ம்ம் மனோகரா படத்தில் "சந்தேக மில்லை" பாடலில் வரியான " வரும் குலத்தில் பிறந்தவள் குடி கெட்டாலும் குணம் போகாதே மணம் போகாதே " என்பதை ஞாபகப் படுத்துகிறது பாடலைக் கண்டு களியுங்கள்.

(போலி நாத்திகர் +மத வியாதி) இருவரும் பாடுகிறார்!!!!!!!!!!!
உண்மையான‌ நாத்திகத்தை யாரும் இழிவு படுத்த முடியாது.அதனை விமர்சனம் என்றே ஏற்கிறோம்.திராவிட பஞ்சாங்க நாத்திகர்கள் தங்களின் நிலைப்பாட்டினால் தேவையற்ற விமர்சனத்திற்கு ஆளகிறார்கள்.

புதிய நாத்திகர்களை விமர்சிக்கிறீர்களா ,மிக்க நன்றி!!.

சான்றுகள் அடிப்படையில்  வைக்கப்படும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதில் அளிக்கிறோம்.

நன்றி!!!