Showing posts with label ஆவணப் படம். Show all posts
Showing posts with label ஆவணப் படம். Show all posts

Sunday, January 20, 2013

ஃபெர்மி தொலைநோக்கி கருப்பு பொருளை கண்டுபிடிக்குமா???


Fermi all-sky map
The full sky is seen in the Fermi telescope map; gamma-ray sources abound along the central, galactic plane


வணக்கம் நண்பர்களே,

அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளின் மீதான [அள்வீட்டு] சான்றுகளின் பொருந்தும் விளக்கம் என்ற புரிதல் மட்டுமே அதன் பன்முகத் தனமையை சரியாக அறிய முயல்வதின் அத்தாட்சி.



அறிவியலின் விளக்கங்கள் கிடைக்கும் சான்றுகளுக்கு ஏற்றபடி மாறும் என்பதும், எந்த விதியும் நிரந்தரம் அல்ல.ஒவ்வொன்றும் எல்லைகளுக்கு உடப்ட்டது, எல்லைகளைத் தாண்டும் போது புதிய விளக்கம் வருவதே அறிவியலின் பரிணாம வளர்ச்சி ஆகும்.



அந்த வகையில்  பி.பி.சி ல் படித்த ஒரு கட்டுரையின் தமிழாக்கத்தை இப்பதிவில் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.





கருப்பு பொருள் என்பது ஈர்ப்பு விசையின் அறியாக் காரணி என்பதே இப்போதைய‌ அறிவியல் கருதுகோள். அதாவது நெடுந்தூர விண்மீன் திரட்டு[கால்க்சி]களின் ஈர்ப்பு விசையினால் நிகழும் அசைவுகளை ஐன்ஸ்டினின் விதி கொண்டு  அள்விடும் போது வரும் தவறின் காரணி கருப்பு பொருள் அளிக்கும் ஈர்ப்பு விசை என்பதே கருதுகோள்.

அதாவது எளிமையாக சொன்னால் ஈர்ப்பு விசை அளவிடும் போது 10 நியுட்டன் வருகிறது. ஐன்ஸ்டினின் விதிப்படி கண்க்கிட்டல் 8 நியுட்டன் வருகிறது. இந்த மீதி 2 நியுட்டனை ஈர்ப்பு விசையாக அளிப்பது கண்ணுக்கு புலப்படா, இபோது உள்ள பொருள்களில் இருந்து வித்தியாசமான கருப்பு பொருள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.பிரபஞ்சத்தில் 25% கருப்பு பொருள் இருப்பதாகவும் கணக்கிடுகிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Dark_matter

தமிழ் திரைப் படங்களில் காரை காலில் கட்டி நாயகன் நிறுத்துவதை பார்த்து இருப்பீர்கள்,ஆனால் கயிறு நாயகனின் பின்னால் உள்ள மரத்தில் கட்டப்பட்டு இருக்கும் .அப்படி!! ஹி ஹி. தமிழர்களுக்கு திரைப்படம் சொல்லி விளக்கினால் எளிதில் புரியும் .


இங்கே சூப்பர் ஸ்டார் கயிறு கட்டி ஜீப்பை நிறுத்துவதில் மறைந்து என்ன இருக்கிறது என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரியும் என்னும் தத்துவ தாத்பரியம் மட்டும் அல்லாமல்,ஈர்ப்பு விசையின் காரணி கண்ணுக்குத் தெரியா கயிறால் கட்டி இருக்கும் ஒரே ஏக இறைவன் இடியப்ப பூதனார் என்பதன் ஆணித்தர‌மான நிரூபணமும் ஆகும்.

இவர்தான் அவர்!!!


அவரின் அறிவார்ந்த ஈர்ப்பு விசைக் கொள்கை!!!
http://en.wikipedia.org/wiki/Intelligent_falling

1930ல் இருந்து இந்த கருப்பு பொருளை உறுதிப்படுத்த முயற்சிகள் முன் எடுக்கப் படுகின்றன.

சரி ஐன்ஸ்டினின் விதிப்படி ஈர்ப்பு விசை கணக்கிட்டால்தானே வித்தியாசம் வருகிறது, அளவீட்டு சான்றுகளுக்கேற்ப புதிய ஈர்ப்பு விசைக் கொள்கை வடிவமைக்கலாமே என்று கேட்பவர்களுக்கு வாழ்த்துக்கள், அம்முயற்சிகளும் நடக்கின்றன.


இப்பதிவில் சொல்லும் ஒரே விடயம் ஃபெர்மி தொலை நோக்கி எனப்படும் அதி ஆற்றல் காம்மா[இது வேற!!] கதிர்களை காணும் கருவி இப்போது கருப்பு பொருள் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது.


பிரப்ஞ்சத்தை இத்தொலை நோக்கி மூலம் பார்க்கும் போது பதிவில் காட்டப் பட்ட படம் போல் மத்தியில் அதிக  Gamma ஒளியும்,மத்தியில் இருந்து ஓரங்களுக்கு குறைந்து வருவது போன்ற படம் கிடைத்தது.

இது கருப்பு பொருள் இருக்கும் சாத்தியத்தை குறிக்கிறது என சில அறிவியலாளர்கள் வாதிடுகின்றார்.

Fermi has been a tremendous success at examining some of the most high-energy processes in the cosmos, publishing a catalogue filled with details of the spinning neutron stars known as pulsars, and a wide array of "active galactic nuclei" - probably supermassive black holes.

But outside the Fermi team, the focus shifted in early 2012, when a pair of papers on the Arxiv preprint server suggested hints of dark matter within Fermi's data, which are publicly available.

எனினும் இன்னும் ஆணித்த‌ரமாக நிரூபிக்க பல படிகள் செல்லவேண்டும்.
ஐன்ஸ்டினின் விதி மாறுமா,இல்லை கருப்பு பொருளை ஃபெர்மி தொலைநோக்கி உறுதி செய்யுமா என்பதை காலம் முடிவு செய்யும்

http://fermi.gsfc.nasa.gov/

http://en.wikipedia.org/wiki/Fermi_Gamma-ray_Space_Telescope



நன்றி!!

Friday, January 11, 2013

இயந்திரங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தால்!!? காணொளி



நண்பர் ஒருவர் அறிவார்ந்த வடிவமைப்பு பற்றிய பதிவில் பின்னூட்டம் இடும் போது ஒருவேளை ஒரு தூரத்தில் உள்ள கோள் ஒன்றில் இயந்திரங்கள்( இயந்திர மனிதர்களின் ) மட்டும் நாகரிகம் இருந்தால் அதனை வடிவமைப்பு அல்லது பரிணாமம் என்று எப்படி தீர்மானிப்பீர்கள் என்று கேட்டு இருந்தார்.

இது நம்மை சிந்திக்கத் தூண்டியது என்றாலும் இதற்கு நான் பதில் கூறுவதை விட இக்காணொளி அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே சில செய்திகளை கூறும் என நம்புகிறேன்.காணொளியின் தமிழாக்கம் அதாவது கதை சுருக்கம்

இது எதிர்காலத்தில் சுமார் 100+ ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை. ஒரு புகழ் பெற்ற பரிணாம ஆய்வாளர். அவருக்கு பல எதிர்ப்புகள் படிமங்களின் மீது கேள்வி+சந்தேகம் ஆக வருகிறது.அதனை நிரூபிக்க படிமங்களை தேடும் பணியில் உள்ளார். சில படிமங்களை சான்றாக கண்டுபிடித்து பலரின் முன் வைக்கும் போது இன்னொரு பரிணாம் எதிர்ப்பு ஆய்வாளர்(He looks like a missing link between human and chimpanzee. That is really funny!!!!!!!) குரங்கும் டைனோசாரும் ஒன்றாக இருக்கும் சான்று முன் வைத்து பரிணாம ஆய்வாளர் கூறுவது த்வறு என்று நிரூபித்து விடுகிறார்.

இதனால் மன்ம் உடைந்து பூமியை விட்டு வேறு கிரகத்திற்கு குடும்பத்தோடு குடி பெயருகிறார். அந்த கிரகத்திற்கு சென்றது அங்கே உயிர்வாழும் சூழல் இருந்தாலும் அங்கே இருந்தா டாக்ஸிக்(Toxic) நீர் பருக ஏற்றதாக இல்லாததால் தான் கொண்டுவந்த மிக சிறிய‌ இயந்திரங்களை[micro robots] நீரை சுத்திகரிக்க அந்த டாக்ஸ்சிக் நீரில் போடுகிறார்.நீர் சுத்தமாகி பயன் படுத்துகிறார்கள்.ஆனால் அந்த சிறு இயந்திரங்கள் பரிணம்ம வளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றது.அதுவும் வேகமாக  நடந்து இயந்திரமனிதன் வரை வளர்ச்சி அடைகின்றன.

அவை ஆய்வாளர் & குழுவை கார்பன் (Organic Robots) இயந்திர மனிதர்கள் என்று இயந்திர மனித ஆய்வாளர்கள் கைது செய்து அழைத்து சென்று ஆய்வு நடத்துகிறார்கள்.பரிணாம ஆய்வாளருடன் ஒரு இயந்திர மனிதனையும் பூமியில் இருந்து கூட்டி சென்று இருந்ததை கவனித்தனர் அக்கிரக இயந்திர ஆய்வாளர்கள்.

அவர்கள் மேல் விசாரணை நடக்கிறது. அதில் என்ன நடந்தது? பூமிக்கு திரும்பி வந்தார்களா ?.பரிணாம கொள்கை  நிரூபித்தார்களா என்பதை மின் திரையில் காண்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மெதுவாக ஒரு 10 நிமிடம் காணொளியை லோட் செய்து பிறது பார்க்கவும்.அதி அடர்த்தி காணொளி என்பதால் கொஞ்சம் மெதுவாகவே தரவிறக்கம் ஆகும்



http://en.wikipedia.org/wiki/Futurama_(season_6)
Futurama Season 6 Episode 9 ~ A Clockwork Origin

Monday, December 3, 2012

அடுத்த கிரக அறிவு மிக்க மனிதர்கள் பூமிக்கு வந்தார்களா?



வணக்கம் நண்பர்களே,
பெரும்பானமை மதங்களில் மனிதனுக்கு மேம்பட்ட அறிவு மிக்க மனிதர்கள்( உயிரினம்) பூமிக்கு வந்து தகவல் பரிமாற்றம் செய்ததாக அவற்றின் மத புத்தகங்கள் கூறுகின்றன.

பரிணாமக் கொள்கையின் படி மனித நாகரிகம் என்பதே 20,000 ஆண்டுகளுக்குள் மட்டும் என்பதும்,அதற்கு முன் விலங்கோடு விலங்காக வாழ்ந்தான் என்பதை மதவாதிகளால் சீரணிக்க முடிவதில்லை.

எப்படியாவது மனிதன் தோன்றிய காலம் தொட்டு மிக நாகரிகமாக,அறிவோடு வாழ்ந்தான் என்பதையும்,மனிதன் ஒரு சிறப்பு படைப்பு என்பதைக் காட்ட முனைகிறார்கள்.

இந்த வகையில் ஒரு சதிக் கோட்பாடுத்தான் வெளிக் கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வது,பறக்கும் தட்டுகள் போன்ற கட்டுக் கதைகள். இதற்கு சான்றாக சில பழங்கால கட்டுமான சின்னங்களையும் காட்டி நம்பும் படி கதை சொல்வர்.இப்பதிவில் அப்படி சில கட்டுக் கதைகளை அறிவியல் துணை கொண்டு பொய் என நிரூபிக்கிறார்கள். பாருங்கள்!!!

இதில் ஒரு முக்கியமான புராதன சின்னம் ,புமாபுங்கு[pumapunku] எனப்படும் தென் அமெரிட்க்க பொலிவியாவில் உள்ள‌ இடம் ஆகும்.இங்கே உள்ள கட்டுமானங்கள் கிரானைட்டால்,வேற்றுக் கிரக வாசிகளால் கட்டப்பட்டது என கதை சொல்கிறார்கள். அது உண்மையா என காணொளி அலசுகிறது.


http://ancientaliensdebunked.com/references-and-transcripts/puma-punku/


எகிப்திய பிரமிடுகளைப் பற்றியும் அதன் மந்திர தந்திர சக்திகளைப் பற்றியும் பல கதைகள் உண்டு.அவற்றை இக்காணொளி அலசுகிறது.
http://ancientaliensdebunked.com/references-and-transcripts/the-pyramids/

பால்பேக் மர்ம மோசடி: கிழக்கு லெபனானில் அலெக்சாண்டரால் பொ.மு.ஆ 4ஆம் நூற்றாண்டில்  கட்டப்பட்ட புராதன கட்டமைப்பு உண்டு. அதன் கீழ் சுமார் மிகப் ப்ழமையான[9000 பொ.ஆ.மு] ஒரு கட்டமைப்பும் உண்டு.இது பாகால் [Baal] என்ப்படும் பழைய மத்திய கிழக்கு கடவுளின் கோயில் ஆகும்.இதில் விண்கலம் புறப்படும் அமைப்பு இருப்பதாக கதை கிளம்பியது. இதனை காணொளி அலசுகிறது



http://ancientaliensdebunked.com/references-and-transcripts/baalbek/

இன்கன் கட்டுமானம் என்ப்பரும் பெரு நாட்டில் உள்ளவற்றில் கல்லை உருக்கும் தொழில்நுடபத்தில் 1500 C.E கட்டப் பட்டதாக ஒரு புரளியை இக்காணொளி அலசுகிறது.



பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பாலீநீசியன் தீவுகளில் ஒன்றான‌ Easter தீவில் உள்ள சில பெரிய சிலைகள் வெளிக்கிரக வாசிகளால் கட்டப்படதாக ஒரு புரளியை இக்காணொளி அலசுகிறது.






பொறுமையாக காணொளி பார்த்து கருத்திட வேண்டுகிறேன். இது இல்லாமல் இன்னும் பல கட்டுக் கதைகளையும் அறிவியல் சான்றுகளின் மூலம் த்கர்த்து எறிவதை அறியுங்கள்.

இன்னும் கூட பல‌ வெளிக்கிரகவாசி கட்டுக் கதைகள் சான்றில்லாத புரளிகளே. 



இப்போதைய  அறிவியல் சான்றுகளின் படி.

1. வேற்று கிரக வாசிகள் பூமியுடன் இதுவரை  எந்த தொடர்பும் கொள்ளவில்லை.

2. பூமியில் இருந்தும் யாரும் விண்கலத்தில் வேற்றுக் கிரகமும் செல்லவில்லை!!

ஆகவே மாயன் நாட்காட்டி போன்ற கட்டுக்கதைகளை  நம்பாமல் ,அனைவரும் மகிழ்வாய் வாழ, மனித குலத்தின் சிக்கல்களை தீர்க்க ஆவண செய்வோம்!!!

நன்றி 

Saturday, October 6, 2012

ஹோமோ சேபியன்கள் யார்? மனித பரிணாமம் குறித்த காணொளி

வணக்கம் நண்பர்களே,
 பரிணாமம் குறித்த கடந்த‌ (எதிர்)பதிவில் மனித பரிணாமம் குறித்த பல தவறான புரிதல்களை விளக்க முயன்றோம். எதிர் பதிவுகளில் எதிர்வினையாற்றுவதே முக்கிய கடமையாகிவிடுவதால் பலருக்கு சில எளிய அடிப்படைகளை விளக்க முடிவது இல்லை.

காணொளி மூலம் பார்க்கும் போது பல விடயங்கள் எளிதாக புரியும்.அவ்வகையில் மனித பரிணாமம் குறித்த ஒரு விளக்க காணொளி சமீபத்தில் பார்த்ததை கொஞ்சம் விளக்கங்களுடன் பகிர்கிறோம்.பல அடிப்படை விடயங்கள் முதல் பல படிமங்கள் பற்றிய விபரங்கள், சமீபத்திய ஆய்வுகள் என பல அம்சங்களையும் அழகாக எடுத்து சொல்கிறது. மொத்தம் பத்து ப்குதிகளைக் கொண்டது.ஒவ்வொரு ப‌குதிக்கும் சில குறிப்புகளை தருகிறோம். ஆங்கிலம் அறியாதோர் கூட பார்த்து புரிய ஏதுவாக இருக்கும் என நம்புகிறோம்.


பகுதி1

1.1. நாம் யார் என்னும் கேள்வியின் விடையின் முதல் பகுதி 1859ஆம் சார்லசு டார்வின் எழுதிய origin of species என்னும் புத்தகத்தின் மூலம் கிடைத்தது .உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரு செல் உயிர்களில் இருந்து பரிணாம வளர்ச்சியால் கிளைத்து தழைத்தன என்பதும், இது நடக்க காரணம் இயற்கைத் தேர்வே[natural selection] என்பதையும் பல சான்றுகள்,வாதங்களுடன் விளக்கினார் டார்வின்.
 *****
 1.2.விடையின் இரண்டாம் பகுதி தொல் மனிதவியல் [paleoanthropology] துறையிடம் இருந்துவந்தது. கிடைத்த படிம்ங்களை, ஒப்பீட்டு அளவுகள்,கால பரிசோதனை மூலம்மனித பரிணாம மரம்[hominid evolution tree அமைக்கப்பட்டது.


A).ஹோமோ சேபியன் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன தோற்றம் _ இன்று வரை

B). ஹோமோ நியாண்டர்தால் 3 இலட்சம் ஆண்டுகள் முதல் 30,000 ஆண்டுகள் முன்புவரை

C). ஹோமோ ஹைடெல்பெர்ஜெனெசிஸ் 8 இலட்சம் ஆண்டுகள் முதல் 3 இலட்சம் ஆண்டுகள் முன்பு வரை.


D). ஹோமோ எரக்டஸ் 19 இலட்சம் ஆண்டுகள் முதல் 70,000 ஆண்டுகள் முன்புவரை.முதன்முதலில் நெருப்பின் பயன்பாடு, சமூக அமைப்புடன் வாழ்ந்த மனித இனம்.இந்தியா,சீனா  உள்ளிட்ட பல இடங்களில் இதன் படிமங்கள் கிடைத்தன.

E). ஹோமோ ஹீபிலஸ் 25 இலட்சம் ஆண்டுகள் முதல்14 இலட்சம்  ஆண்டுகள் முன்புவரை.முதல் கல் கருவி  பயன்படுத்தியவர் .

F) ஆஸ்ரலோபிதெகஸ் ஆஃப்ரிகனாஸ்  30 இலட்சம் ஆண்டுகள் முதல்20 இலட்சம்  ஆண்டுகள் முன்புவரை.

G)ஆஸ்ரலோபிதெகஸ் ஆஃப்ரான்சிஸ்   38 இலட்சம் ஆண்டுகள் முதல் 29 இலட்சம்  ஆண்டுகள் முன்புவரை. இதில் லூசி எனப்படும் படிமம் மனித பரிணாம வரலாற்றையே மாற்றி அமைத்தது.

.....



*****
1.3.விடையின் மூன்றாம் பகுதி  மரபியல்  ஆய்வில் இருந்து வந்தது. மனித ஜீனோம் குறியீடுகள்[சுமார் 320 கோடி நுயுக்ளியோடைடுகள்) ஆவணப்படுத்தப் பட்டது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.அது பல பரிணாம செயலாக்கங்களுக்கு விளக்கம் அளித்தது. தலைமுறைரீதியான ஜீனோம் மாற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டன. 

1.4 இறுதிப்பகுதி மானுடவியல்[anthropology] எனப்படும்நடைமுறை வாழ்வில்  மனித உடல்,மனம் ,அறிவு குறித்த ஆய்வுகள்.இதன் மூலமே மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி அங்கிருந்தே உலக முழுதும் பரவினான் என்பது கண்டறியப்பட்டது. உலகின் பழமையான வாழும் மனித இனம் புஷ்மேன்[bushmen] எனப்படும் ஆப்பிரிக்க நாட்டவர்.இவர்கள் பேசும் மொழியே[khoslan] தொன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் ,இது பல ஒலிவகைகளைக் கொண்டது.

மனித இனம் முதலில் வேட்டையாடியே பிழைப்பு நடத்தினர்,விவசாயம் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
 ....
பகுதி2
இரண்டாம் பகுதியில் பூமியில் உயிரின வரலாற்றில் கால ரீதியான பிரிவுகளை விளக்கி, மனிதப் படிம்ங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளைக் காட்டுகின்றனர்.
.....

பகுதி 3.பரிணாம செயலாக்கம் என்பதை ஜீனோமின் அடைப்படையில் விள்க்குகின்றார்கள். ஒவொரு உயிரினமும் இனவிருத்தி செய்யும் போது ஆண்,பெண் ஜீனோம்(குரோமோசோம்கள்) இணைந்து புதிய உயிர் தோன்றுகிறது. ஜீனோம்கள் இணைவின் போது  நிகழும் தவறுகள்(சிறு மாற்றங்கள் mutations) கொஞ்சம் விதியாசமான் வாரிசை உருவாக்குகிறது. நீண்ட கால்த்தில் இது பலவகையான் உயிர் இனங்களை[species] உருவாக்குகின்றன. இதில் சூழலுக்கு பொருந்துபவை மட்டுமே வாழ்கின்றன.மற்றவை அழிகின்றன[natural selection].
...
பகுதி 4.&6 மீண்டும் மனித முன்னோர்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு பற்றி விளக்குகிறார்.

பகுதி 5.புவியியல் காலக் கணக்கீட்டு அடிப்படைகளையும்,அப்போதைய புவி சூழல்களையும்  விளக்குகிறார் 
...
இதர பகுதிகளிலும் மனித பரிணாமம் குறித்த பெரும்பானமை அறிவியல் விடயங்கள் விளக்குகிறார். இக்காணொளி போல் மனித பரிணாமத்தை தெளிவாக விளக்கிய காணொளி  இதுவரை கண்டது இல்லை.இக்காணொளியை தயாரித்த ப்ளாக் ரைடர்[Black Ryder] ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றிகள்  பல.

அனைவரும் கண்டு மகிழ்க.

நன்றி







Wednesday, June 27, 2012

செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா?





வணக்கம்  நண்பர்களே,

 மிகப் பெரிய பேரண்டத்தில்[universe] உள்ள பல கோடி பெருவெளித்திரள்களில்[galaxies] ,பால்வீதிமண்டலம் என்னும் நமது  பெருவெளித்திறளில் உள்ள பல கோடி நட்சத்திர மண்டலங்களில் நமது சூரிய குடும்பமும் ஒன்று.

 நமது சூரியக் குடும்பத்தில் நமக்கு அருகில் உள்ள கோள் செவ்வாய்,பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இரு துணைக் கோள்கள்(நிலவு) உண்டு. செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருப்பது தான். இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடுதான்.

 நேஷனல் ஜியோகிராபிக் செய்தியில் செவ்வாயில் உட்பகுதியில் பெருங்கடல்கள் இருப்பதாக கூறுகிறது.இது செயற்கைக்கோள்களின் மூலம் செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்ததில் தெரிய வந்ததாக் கூறுகின்றனர்.


அதுவும் பூமியின் அளவு நீர் இருக்கலாம் என கூறப்படுவது வியப்பு அளிக்கிறது.



Mars could have entire oceans' worth of water locked in rocks deep underground, scientists say.

The finding suggests that ancient volcanic eruptions may have been major sources of water on early Mars—and could have created habitable environments.

According to a new study, Martian meteorites contain a surprising amount of hydrated minerals, which have water incorporated in their crystalline structures.

In fact, the study authors estimate that the Martian mantle currently contains between 70 and 300 parts per million of water—enough to cover the planet in liquid 660 to 3,300 feet (200 to 1,000 meters) deep.

"Basically the amount of water we're talking about is equal to or more than the amount in the upper mantle of the Earth," which contains 50 to 300 parts per million of water, said study leader Francis McCubbin, a planetary scientist at the University of New Mexico in Albuquerque.

தண்ணீர் இருப்பதால் உயிர்கள் அங்கும் இருக்கலாமா என்றால் இப்போது அது குறித்து எதுவும் சொல்ல இயலாது.தண்ணீர் என்பது பூமிக்கு மட்டும் பொதுவான ஒன்றல்ல என்பது மட்டும் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

 பல பிரபஞ்ச  அறிவியலாளர்கள் பூமியைப் போல் உயிர்கள் வாழக் கூடிய சூழல் உள்ள பல கோள்கள் இருக்கலாம் என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.

இக்காணொளிக‌ள் செவ்வாயில் உயிர்கள் இருக்கலாமா என்பது அலசுகிறது.கண்டு களியுங்கள்.



Watch Is There Life on Mars? on PBS. See more from NOVA.


நன்றி!!!!!!!!!!!!!!

Saturday, March 31, 2012

DNA வின் கதை:காணொளி




வணக்கம் நண்பர்களே ,

தமிழர்கள் ஆவண்ப்படம் பார்க்கும் வழக்கம் ஏற்படுத்திக் கொள்வது பல் விதங்களில் பயன்படும்.நமது செல்லில் உள்ள DNA என்னும் அமில கட்டமைப்புத் தொகுப்பில் நம்மைப் பற்றிய பல விடயங்கள் உள்ளது என்பதை அறிவோம்.. இக்காணொளிகள் DNA பற்றிய பெரும்பாலான் விடயங்களை அருமையாக விள்க்குகின்றன.

இந்த காணொளிகள் ஐந்து பகுதிகள் உடையது.

பகுதி 1;டி என் ஏவின் வடிவமைப்பு எப்படி ஒரு இரட்டை சுருள்[double helix] போல் உள்ளது என்ற ஆய்வுத் தேடலை விவரிக்கிறது. James D. Watson,  Francis Crick.  ஆகியோர் இக்கண்டுபிடிப்பிற்காக் 1953ல் நோபெல் பரிசு பெற்ற்னர்.இக்கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது,இன்னும் சிலரின் பங்களிப்பு மறக்கப்பட்டது ஏன் என்பதை முதல் பகுதி விள்க்குகிறது.

பகுதி 2 ,இந்த  DNA வில் சிறிது மாற்றி அமைத்து மருத்துவம் செய்ய இயலுமா என்ற ஆய்வுகள் குறித்து விள்க்குகிறது.மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் உற்பத்தி,பயோடெக்னால்ஜி என்னும் புதிய துறை  உருவாதல் பற்றியும் விள்க்குகிறது.

பகுதி 3 ல் க்ரெய்க் வென்ட்டர் உள்ளிட்ட சில அறிவியலாளர்கள் மனிதனின் ஜீனோமை ஆவணப்ப்டுத்தும் முயற்சி 13 வருடங்களக் நடைபெற்றது பற்றி கூறுகிறது.இதில் ஜேம்ஸ் வாட்சனின் பங்கு பற்றியும் கூறுகிறது.

ப்குதி 4ல் கேன்சர்[cancer] எனபடும் கட்டுப்படாத அபரித திசு வளர்சி நோயை குண்ப்படுத்த முடியுமா என்ற ஆய்வுகள் பற்றி விள‌க்குகிறது.

புகுதி 5: இது கொஞ்சம் விவகாரமான விடயம்.க‌ருவில் வடிவமைக்கப்பட்ட மனிதன்[Genetically engineered human/anaimals],விலங்குகள் உருவாக்குதல் பற்றி விவாதிக்கிறது. இது இப்போதும் அறிவியல் உலகில் விவாதத்தில்  தொடரும் விடயம்.

காணொளி பாருங்கள்.இது குறித்த கருத்துகளை விவாதிப்போம் !!!!
நன்றி















Sunday, February 5, 2012

டேவிட் அட்டன்பரோவின் வியக்க வைக்கும் உயிர் புவியியல் காணொளிகள்


வண்க்கம் நண்பர்களே
சகோதரர் இராஜநடராஜன் நம் தளத்திற்கு பல விதங்களில் ஊக்கமும் ஆக்கமும் தருபவர்.அவர் டேவிட் அட்டன் பரோவின் லிவிங் சீர்ஸ் என்ற காணொளிகளை இடும் படி கேட்டுக் கொண்டார்.இணையத்தில் கிடைத்த Living Planet  1984 காணொளி வரிசை அளிக்கிறேன்.

இந்த டேவிட் அட்டன்படோ தேசத் தந்தை "காந்தி" திரைப்பட இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் சகோதரர்.இவர் எடுத்த பல ஆவணத்திரைப்ப்டங்கள் மிகவும் புகழ் பெற்றவை.இயற்கையின் பல பரிமாணங்களை அற்புதமாக் படமாக்கியுள்லது உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.இத்திரப்ப்டங்கள் பற்றி பல் விளக்கங்கள் எழுத விரும்பினாலும் பணியின் காரணமாக் நேரம் இல்லை.கண்டு களியுங்கள் நன்றி.




1.The Living Planet-The Building of the Earth

2.The Living Planet-The Frozen Worls

1.The Living Planet-The Northern Forests




4. The Living Planet - Jungle



5. The Living Planet - Seas of Grass


6. The Living Planet - The Baking Deserts




7. The Living Planet - The Sky Above




8. The Living Planet - Sweet Fresh Water




9. The Living Planet - The Margins of the Land






10. The Living Planet - Worlds Apart




11. The Living Planet - The Open Ocean





Thursday, December 22, 2011

குறை வெப்ப அணு இணைப்பு ஆற்றல்[Cold Fusion] முறை சாத்தியமா?




அணு உலை குறித்த சூடு பறக்கும் வாதங்களும்,விள்க்கங்களும் நடப்பதை அனைவரும் அறிவோம்.அணு உலையின் பாதுகாப்பு,கதிர்வீச்சின் பாதிப்பு, கழிவுகளை புதைத்தல் என பல பரிமாணம் கொண்ட பிரச்சினை அது. வேறு விதமான  அணுவில் இருந்து ஆற்றல் பெறும் முறைகள் சில  பற்றி இப்பதிவில் அறிவோம்.

அணுக்கரு எனப்படும் நுயுக்ளியஸை பிளக்கும் போது [Nuclear fission] அதில் இருந்து ஆற்றல் வெப்பக் கதிர்வீச்சாக வெளிப்படுகிறது.இந்த வெப்பத்தை பயன் படுத்தி மின்சாரம் தயாரிப்பதுதான் அணு உலைகள்.ஒரு அணுவை பிளப்பது எப்படி ஆற்றல் அளிக்கிறதோ அதே போல் இரு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கருக்களை இணைத்து[Nuclear fusion] ஒரு மொத்த(பெரிய) அணுக்கரு அமைக்கும் போதும் வெப்ப ஆற்றல் கிடைக்கிறது. இது அணு பிளப்பிற்கு எதிரான வினை என கூறலாம்.

இயற்கையில் சூரியன் [உட்பட்ட நட்சத்திரங்கள்] இவ்விதத்திலேயே [நமக்கு] ஆற்றல் அளிக்கிறது.செயற்கை முறையில் அணு இணைப்பு ஆற்றல் முறையின் எடுத்துக் காட்டு எனில் ஹைட்ரஜன் குண்டு என கூறலாம்.

இரும்பை விட குறைந்த அணு எடை கொண்ட தனிமங்களின் அணு இணைப்பு ஆற்றல் தருகிறது. அதிகமான் அணு எடை கொண்ட தனிமங்களின் அணு இணைப்பு ஆற்றலை உள்வாங்குகிறது[consume].

இந்த அணு இணைப்பிற்கான சூழலை பூமியில் உருவாக்குவது மிக் கடினமானதாக கருதப்படுகிறது. ஹைட்ரஜன் போன்ற எளிய தனிமத்தின் அணுக்கருக்களை இணையச் செய்வதற்கும் மிகுதியான ஆற்றல்[வெப்பம்]  தேவைப்படுகிறது. மின்சார உற்பத்திக்காக இணைவு ஆற்றலை உற்பத்தி செய்யும் நோக்குடன் கட்டுப் படுத்தப்பட்ட இணைவு(Controlled Nuclear fusion] ஆராய்ச்சியானது 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு வகையான‌ குறை வெப்ப அணு இணைவு[cold fusion] என்பது பற்றியே இப்பதிவு. அதாவது அணுக்கரு இணைப்பு என்பது குறைந்த வெப்பநிலையில்,ஆய்வு சூழலில் ஏற்படுத்த முடியும் என்பதும் இதில் இருந்து வெப்ப ஆற்றல் பெற முடியும் என்பதே இக்கொள்கையாகும்.

இதன் பயன் பாடுகளாக‌

1. சுற்று சூழலை மாசு படுத்தாத ஆற்றல்.

2. பாதுகாப்பானது.

3கடல் நீரில் இருந்து இதனை செய்ய‌ முடியும் என்பதால் அதிக ஆற்றல் குறைந்த செலவில் பெற இயலும்

4. அணு உலைகளின் கழிவுகளின் மறு பயன் பாடு





மார்ச் 23 ,1989 ல் இரு அறிவியலாளர்கள் Dr. Stanley Pons  Dr. Martin Fleishman தங்கள் ஆய்வில் இதனை நிரூபித்ததாக கூறினாலும் இதுவும் ஆதாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

இப்படி பல நன்மைகள் இருந்தாலும்.இதுவரை அறிவியல் உலகில் இம்முறைகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இப்போது இது குறித்து சில விவாதங்கள்,ஆய்வுகள்  வெளிவருகிறது.இந்தியாவிலும் கூட பாபா அணு ஆய்வகம் இதில் ஈடுபாடு காட்டுவதாக் தெரிகிறது.

இம்முறை வெற்றி பெற்றால் மனித சமுதாயத்திற்கே நன்மை எனினும் நிரூபிக்கப்படும் வரை எதுவும் அறுதியாக கூற இயலாது.


இன்னும் சிலர் இம்முறையை வேண்டுமென்றே அறிவியல் உலகம் ஒதுக்குவதாகவும் கூறிவருகின்றனர்.அது பற்றிய காணொளி பாருங்கள்.நாம் என்ன சொலவது வாய்மையே வெல்லும்,மனித சமுதாயத்தின் நன்மை பயக்கும் அறிவியலை  மட்டும் வளர்ப்போம்!!!!!!


http://coldfusionnow.org/

http://en.wikipedia.org/wiki/Cold_fusion

http://www.lenr-canr.org/Collections/BARC.htm