Wednesday, June 27, 2012

செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா?

வணக்கம்  நண்பர்களே,

 மிகப் பெரிய பேரண்டத்தில்[universe] உள்ள பல கோடி பெருவெளித்திரள்களில்[galaxies] ,பால்வீதிமண்டலம் என்னும் நமது  பெருவெளித்திறளில் உள்ள பல கோடி நட்சத்திர மண்டலங்களில் நமது சூரிய குடும்பமும் ஒன்று.

 நமது சூரியக் குடும்பத்தில் நமக்கு அருகில் உள்ள கோள் செவ்வாய்,பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இரு துணைக் கோள்கள்(நிலவு) உண்டு. செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருப்பது தான். இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடுதான்.

 நேஷனல் ஜியோகிராபிக் செய்தியில் செவ்வாயில் உட்பகுதியில் பெருங்கடல்கள் இருப்பதாக கூறுகிறது.இது செயற்கைக்கோள்களின் மூலம் செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்ததில் தெரிய வந்ததாக் கூறுகின்றனர்.


அதுவும் பூமியின் அளவு நீர் இருக்கலாம் என கூறப்படுவது வியப்பு அளிக்கிறது.Mars could have entire oceans' worth of water locked in rocks deep underground, scientists say.

The finding suggests that ancient volcanic eruptions may have been major sources of water on early Mars—and could have created habitable environments.

According to a new study, Martian meteorites contain a surprising amount of hydrated minerals, which have water incorporated in their crystalline structures.

In fact, the study authors estimate that the Martian mantle currently contains between 70 and 300 parts per million of water—enough to cover the planet in liquid 660 to 3,300 feet (200 to 1,000 meters) deep.

"Basically the amount of water we're talking about is equal to or more than the amount in the upper mantle of the Earth," which contains 50 to 300 parts per million of water, said study leader Francis McCubbin, a planetary scientist at the University of New Mexico in Albuquerque.

தண்ணீர் இருப்பதால் உயிர்கள் அங்கும் இருக்கலாமா என்றால் இப்போது அது குறித்து எதுவும் சொல்ல இயலாது.தண்ணீர் என்பது பூமிக்கு மட்டும் பொதுவான ஒன்றல்ல என்பது மட்டும் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

 பல பிரபஞ்ச  அறிவியலாளர்கள் பூமியைப் போல் உயிர்கள் வாழக் கூடிய சூழல் உள்ள பல கோள்கள் இருக்கலாம் என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.

இக்காணொளிக‌ள் செவ்வாயில் உயிர்கள் இருக்கலாமா என்பது அலசுகிறது.கண்டு களியுங்கள்.Watch Is There Life on Mars? on PBS. See more from NOVA.


நன்றி!!!!!!!!!!!!!!

31 comments:

 1. என்றாவது ஒரு நாள் புவியிலிருந்து மனிதன் இன்னொரு கிரகத்தில் குடியேறுவது மட்டும் நிச்சயம் அல்லவே நண்பரே?

  ReplyDelete
 2. சகோ.சார்வாகன்,

  நல்லப்பகிர்வு, ரொம்ப நாளாகவே சொல்லப்பட்டுவருகிறது, அப்படி எனில் இத்தனை நாளாக உறுதி இல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார்களா?

  நிலவில் கூட நீர் இருக்கிறது என சந்திராயன் செயற்கைகோள் படங்கள் சொல்வதாக சொன்னார்கள்.

  பூமிக்கே உயிரினம் பிரபஞ்ச வெளியில் இருந்து வந்திருக்கலாம்னும் கூற்று இருக்கும் போது ,கண்டிப்பாக பிரபஞ்சத்தில் எங்கேனும் உயிரினம் இருக்கவே செய்யும். இதற்காகவே ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் சிக்னல் வருகிறதா என அலசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு அமைப்பு இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்திலும் நிறுவப்பட்டுள்ளது என முன்னர் படித்தேன்.

  ReplyDelete
 3. S.E.T.I. பற்றியும் எழுதுங்கள்.
  ERICH VON DANIKEN நூல்கள் 3/4 வாசித்திருக்கிறேன். அவரின் கருத்துகள் பற்றியும் தெரிந்தால் சொல்லுங்கள்.

  ஒரு ஆர்வம்தான்...1

  ReplyDelete
 4. we known very little, unknown is................. thats the mattar

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு சகோ. NATGEO சேனலில் பல நிகழ்ச்சிகள் போடுகின்றார்கள். எங்கே நம்மாளுங்க அதெல்லாம் பார்க்கிறாங்க ஒன்னு சண்டிவி, சீரியல் இப்படி போகுது.. இல்லை என்றால் பீஸ் டிவி, யோகா டிவி, எனப் போய்விடுகின்றது. கொஞ்ச நேரமாவது இந்த NATGEO போன்ற சேனல்களைப் பார்க்கலாம் அல்லவா ????

  ReplyDelete
 6. சகோ வரலாற்றுப் பதிவுகள்,

  வேறு கிரகங்களில் குடியேறும் நாள் வந்தால் அனைவருக்கும் நன்மைதான்.எனினும் நம் பூமியையும்,ஒருவேளை இன்னும் சில கிரகங்கள் கிடைத்தாலும் கூட அவ்ற்றின் இயற்கை சூழலை பாழ் படுத்தக் கூடாது.கருத்துக்கு நன்றி

  ***********
  சகோ வவ்வால்

  பூமியில் முதல் செல் உயிர் எப்படி தோன்றியது என்பது இன்றுவரை சரியாக உறுதியாக விடை அளிக்கப் படாத கேள்வி.ஒருவெளை செவ்வாயில் ஒரு செல் உயிர்கள் இருந்தால் கூட இப்பிரச்சினைக்கு விடை கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.உயிர்கள் செவ்வாயிலோ,பிற கிரகங்களிலோ இதுவரை இருப்பதற்கான சான்று இதுவரை கிட்டவில்லை என்பதே உண்மை.

  சிவபாக இருந்ததால் நம்ம ஆட்கள் செவ்_வாய் என்று பெயர் வைத்தார்களா.சிகப்பு இருக்கு வாய் எங்கே?

  ஹா ஹா ஹா

  நன்றி
  *************
  வாங்க தருமி அய்யா
  நாம் எதையாவது தேடும் போது கிடைக்கும் ஈடுபாடுள்ள விவரங்களை பகிர்கிறோம்.இது தவிர நம் சகோக்களின் கேள்விகளுக்கு விடையளிக்கிறோம்.உங்களின் விருப்பத்தையும் தேடிப்பார்க்கிறேன்.காணொளியோடு விவரங்கள் கிடைத்தால் பகிர்வோம்

  நன்றி
  **********

  வாங்க சகோ ஷர்புதீன்
  நீங்கள் சொல்வது முற்றும் உண்மை.அறிந்தது கொஞ்சம்,அறியாதது அதிகம்.அறிந்ததைக் கொண்டு அறியாதவை அறிய முடியுமா?
  அனைத்தும் முடியாது!!!!!!!!!!!,எனினும் தேடல் தொடரும்.

  ஒரு தொடர் இயக்கத்தின் சிறு பகுதியே நம் வாழ்வு

  நன்றி
  ********

  வாங்க சகோ இக்பால் செல்வன்

  இந்த ஆதங்கம் நமக்கும் உண்டு சகோ.பாருங்கள் பதிவுலகிலேயே ஒரு புது திரப்படத்திற்கு குறைந்த பட்சம் 20+ பதிவுகள் வருகின்றது.அது போல் ஒரு மாற்று சிந்தனை,அறிவியல் என குறைந்த பதிவுகளே வருகிறது.அதற்காக கவலைப் படாமல் நீங்களோ ,நம் போன்றவர்களோ இன்னும் அதிக பதிவுகள் இடுவோம்.

  நன்றி
  ***********
  சகோ சுவனப் பிரியன்
  நான் தண்ணீர் செவ்வாயில் இருக்கிறது என்று மட்டும் கூறினேன் ,அது யாருடைய வாய் என்று கண் மூக்கு வைத்து கருத்து போட ஆரம்பித்து விட்ட்டீர்கள் .அங்கேதான் நிக்கிறார் சகோ சு.பி!!!!!

  வாழ்த்துக்கள்.

  நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.நல்லா இருங்க!!!!!!!

  இயற்கைச் சூழலுக்கு ஏற்ற உயிரின‌ங்கள் மட்டுமே வாழும் என்றால் பரிணாமக் கொள்கை [அதுவும் குறிப்பாக டார்வின் தாத்தாவின் இயற்கைத் தேர்வு]வந்து விடும் இது ஹராம்!!!. அதனால் தீர்ப்பை[கருத்தை] மாற்றிச் சொல்லுங்கள்.

  நம் பதிவுப் பக்க்ம் அடிக்கடி வந்த தாக்கம் என நினைக்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
 7. //இயற்கைச் சூழலுக்கு ஏற்ற உயிரின‌ங்கள் மட்டுமே வாழும் என்றால் பரிணாமக் கொள்கை [அதுவும் குறிப்பாக டார்வின் தாத்தாவின் இயற்கைத் தேர்வு]வந்து விடும் இது ஹராம்!!!. அதனால் தீர்ப்பை[கருத்தை] மாற்றிச் சொல்லுங்கள்.//

  :)

  ReplyDelete
 8. //பல பிரபஞ்ச அறிவியலாளர்கள் பூமியைப் போல் உயிர்கள் வாழக் கூடிய சூழல் உள்ள பல கோள்கள் இருக்கலாம் என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.//

  I think the idea of considering only planets having similar situations as earth only are livable has to be reconsidered..Because scientists have found micro organisms living in sulfuric acid (http://www.mineraltown.com/news/ferroplasma_microorganisms_live_in_sulfuric_acid.htm) .. So livable condition does NOT directly mean only earth like conditions.. For example a planet with only CO2 and sulfuric acid may evolve living beings which do not breathe or breathe CO2.. I think evolution can work in that way too...

  ReplyDelete
 9. ஜெனில்,

  பூமியைப்போல என ஆய்வது முதல் சாய்ஸ், ஏன் எனில் மனிதனுக்கு தேவையானதை தேடுவதே முதல் நோக்கம்.

  சல்பர், திரவ நைட்ரஜன், அம்மோனியா, கார்பன்டை ஆக்சைடு சூழலிலும் உயிர்கள் இருக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றது.

  சல்பர் அதிகம் உள்ள ஆழ்கடல் எரிமலை முகத்தில் சில உயிர்கள் இருப்பதை பூமியில் உள்ள கடலிலேயே கண்டுப்பிடித்துள்ளார்கள்.எனவே வேற்றுக்கிரகத்திலும் இருக்கும்.வளிமண்டல ஆக்சிஜன் தேவை இல்லாத சல்பர் டை ஆக்சைடு மூலம் வாழும் பேக்ட்ரீயாக்கள் பூமியிலேயே உண்டு.

  சார்வாகன் முதல் தேர்வை தேடுவதை சொல்லி இருக்கிறார்.

  ReplyDelete
 10. வாங்க சகோ கோவி,
  நம்ம சகோ சு.பி கருத்து பார்த்து அதிர்ந்து விட்டீர்களா!.சேம் சைட் கோல் போடும் அவரின் சிறப்பு அம்சமே அதுதான்!.

  நன்றி
  ********

  சகோ ஜெனில்
  நம் நண்பர் வவ்வால் சொன்னதுதன் நம் கருத்தும் எனினும்.பூமியின் இபோதைய சூழல் மட்டுமே நம்க்குத் தெரியும்.இந்த 4.5 பில்லியன் ஆண்டு புவியியல் வர்லாற்றில் என்ன நட்ந்தது என பல் அனுமானங்கள் இருப்பினும் அதனை எல்லாம் ஆய்வுப் பூர்வமாக மிகச் சரியாக அறிய முடியவில்லை.வாழும் பூமிக்கே இப்படி எனில் நாம் அறியா பல உயிர்வாழ் சூழல் பிரபஞ்சத்தில் பல் இடங்களில் இருக்கலாம்.

  அறிந்தவற்றை வைத்து அறியாதவற்றை அறிய முயல்கிறோம்.வேறு வழியில்லை!

  இயற்கையில் பல விடயங்களில் ஒன்று விடையே இருக்காது,அல்லது பல விடைகள் இருக்கும்.ஒரே ஒரு சரியான விடை என்னும் விடயங்கள் மிக குறைவே.

  ஆகவே ஒருவேளை பூமியின் (இப்போதைய அல்லது கொஞ்சம் அறிந்த) சூழல் இருக்கும் இடம் ஒன்றில் ஒரு செல் உயிர் கண்டு பிடிக்கப்பட்டாலே அது மனித வரலாற்றின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஆகி விடும்.

  ஆனால் எதுவும் உறுதிப் படுத்தப் படும் வரை எதுவும் சொல்ல இயலாது.
  அனைத்தும் அனுமானங்களே!

  பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!!!!!!!!.

  நன்றி

  சகோ வவ்வால்
  கலக்கலான பின்னூட்டம்.மிக்க நன்றி.ச

  ReplyDelete
 11. //ஆகவே ஒருவேளை பூமியின் (இப்போதைய அல்லது கொஞ்சம் அறிந்த) சூழல் இருக்கும் இடம் ஒன்றில் ஒரு செல் உயிர் கண்டு பிடிக்கப்பட்டாலே அது மனித வரலாற்றின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஆகி விடும்.//

  Once that is done... most of the creationists mouth will be shut down... If said in tamil AAPPU KEERI VIDUM :)

  ReplyDelete
 12. @sarvakan
  @Vavaal

  I agree with ur thoughts

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ஜெனில்
   அடிக்கடி வாங்க!

   Delete
 13. சகோ சார்வாகன்!

  //இயற்கைச் சூழலுக்கு ஏற்ற உயிரின‌ங்கள் மட்டுமே வாழும் என்றால் பரிணாமக் கொள்கை [அதுவும் குறிப்பாக டார்வின் தாத்தாவின் இயற்கைத் தேர்வு]வந்து விடும் இது ஹராம்!!!. அதனால் தீர்ப்பை[கருத்தை] மாற்றிச் சொல்லுங்கள்.//

  ஹா..ஹா..நீங்கள் சொல்லும் அந்த இயற்கையை அதாவது செவ்வாய், புதன், போன்ற கிரகங்களின் தட்ப வெப்ப நிலை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பதே உங்களையும் என்னையும் படைத்த இறைவன் அல்லவா! டார்வின் தாத்தாவுக்கும் ஆத்திகத்துக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம் உள்ளது. சரியான புரிதலுக்கு வந்து விட்டால் நீங்க நம்ம பக்கம் வந்துடுவீங்க..கோவி கண்ணனும் ஓடி வந்து விடுவார்:-)

  ReplyDelete
  Replies
  1. ஸலாம் சகோ சுவனன்,
   //டார்வின் தாத்தாவுக்கும் ஆத்திகத்துக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம் உள்ளது. //
   உங்களின் இக்கருத்து மிக சரியானது.டார்வின் தாத்தா 15ஆம் நூற்றாண்டு கதோலிக்கத் துறவி திரு வில்லியம் பாலே அவர்களின் இயற்கை ஆன்மீகவியல் என்னும் புத்தக்த்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டவர்.அப்புத்தக்த்தில் இயற்கையின் மகத்துவங்களே இறைவனின் படைப்புக்கு அத்தாட்சி என பல் தர்க்கரீதியான வாதங்கள் பாலேவினால் முன் வைக்கப் பட்டன.
   இன்றும் நீங்கள் உட்பட்ட பல ஆன்மீகவாதிகளின் வாதங்கள் திரு பாலேயின் கருத்துகளை ஒட்டியே வருகின்றன.

   பாலேயின் இயற்கையின் மகத்துவங்கள்,ஆடம் ஸ்மித்தின் முதலாளித்துவ பொருளாதார போட்டி,மால்த்துசியனின் மக்கள் தொகை கோட்பாடு போன்றவை டார்வின் மற்ரும் வால்லஸ் அவர்களின் இயற்கைத் தேர்வு என்ற கோட்பாட்டை வரையறுக்க வடிவமைக்க உதவியாக இருந்தது.திரு பாலேயின் புத்தகத்தை விமர்சித்து டார்வின் தாத்தா எழுதிய விமர்சனம்

   http://darwin-online.org.uk/content/frameset?itemID=A142&viewtype=text&pageseq=1

   Delete
  2. மற்றபடி சகோ நரேன் உங்களுக்கு பதில் சொல்லி விட்டார்.இன்னும் ஆக்கபூர்வமாக விவாதிப்போம்.
   நான் ஆத்திகன் ஆவதா? ஹா ஹா ஹா ,சகோ கோவியுமா!!!!!!!!!

   உங்களின் இறை நம்பிக்கை போல் இந்த நம்பிக்கை கொள்ளவும் உள்ள உரிமையை ஆதரிக்கிறேன். ஹி ஹி ஹி!
   நன்றி சகோ

   Delete
 14. நல்ல பதிவு நண்பரே,

  அருமையான காணொளி. முதல் காணொளி வேலை செய்யவில்லை.
  முன்பு பார்த்த ஒரு காணொளியில் கார்ல் சாகான், மனிதனின் வான்வெளி பயணங்களை, மனிதனின் முதல் கடல பயணங்களுக்கு ஒப்பிடுகிறார். அதனால் வான்வெளி பயணங்களால் அறிவையும் செய்திகளையும் பெற முடியும் என்கிறார். மேலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்தால் அவ்வாறு பெறலாம்.

  நண்பர் சு.பி. பதிவை படித்தேன். அங்கு எங்கே வேற்று கிரகத்திற்கு ஆதாராம் இருக்கிறது. வெறும் வானம் என்று தானே சொல்லியிருக்கிறது. இதை வைத்து வேற்று கிரகவாசிக்கு முடிச்சு போடுகிறார்.
  ///////
  ஹா..ஹா..நீங்கள் சொல்லும் அந்த இயற்கையை அதாவது செவ்வாய், புதன், போன்ற கிரகங்களின் தட்ப வெப்ப நிலை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பதே உங்களையும் என்னையும் படைத்த இறைவன் அல்லவா!
  /////
  ஆகையால், மனிதன், வேற்று கிரகவாசிகளை படைப்பது இறைவன் அல்ல, இறைவனால் உண்டாகப்பட்ட தட்ப வெப்ப நிலைதான். அதனால் தட்ப வெப்ப நிலைதான் நமது கடவுள், அதற்கு ஒரு ஓ போட்டு வணக்கம் செலுத்துங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ நரென்,
   நண்பர் சு.பி ந் குரான் வசன‌ங்களையும் கொஞ்சம் ஆய்வு செய்து விட்ட்டொம் எனினும் மத புத்தக விடயம் சலிப்பு தட்டுவதால் அதை விட்டு அறிவியல்,தர்க்க ரீதியாக விவாதம் மட்டும் கொஞ்ச நாள் செய்யலாம் என முடிவு.

   அறிவியலை ஒட்டியே மத புத்தக விளக்கம் ம் அளிப்பது நல்ல விடயமே.அறிவியலின் இன்றியமையாமையை,மாற்றம் என்பதை அவர்களும் ஏற்பதையே காட்டுகிறது.வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கைக்கு முதல் படியாகவே வேற்ரு கிரகங்களிலும் உயிர்கள் இருக்கலாம் என்னும் சகோ சு.பி ன் கருத்தை பார்க்கிறேன்

   நன்றி

   Delete
 15. தண்ணீர் இருப்பதால் உயிர்கள் அங்கும் இருக்கலாமா என்றால் இப்போது அது குறித்து எதுவும் சொல்ல இயலாது.தண்ணீர் என்பது பூமிக்கு மட்டும் பொதுவான ஒன்றல்ல என்பது மட்டும் உறுதி படுத்தப்பட்டுள்ளது.


  ஆர்வமாக படித்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் !

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இராஜராஜேஸ்வரி

   நடக்கும் அறிவியல்,வரலாற்று நிகழ்வுகளில் மிகச் சரியாக உறுதிப்படுத்தப் பட்ட விடயங்களை மட்டுமே பகிர்வதும்,அது குறித்த ஆக்கபூர்வமான் விவாதங்களை அளிப்பதுமே நம்மால் இயன்ற சிறு தமிழ்ப் பணி.
   கருத்துக்கு நன்றி

   Delete
 16. ERICH VON DANIKEN கருத்துகள் பற்றி விக்கீபீடியாவில் பார்த்தேன். அவரது நூலில் மிகவும் பிடித்த சில அம்சங்கள் பொய் என்று தெரியவந்தது. ஏமாற்றம் ...

  விட்டு விடுங்கள் அவ்ரை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா
   இந்த யு எஃப் ஓ என்னும் அமைப்புகள்,இன்னும் பல போலி அறிவியல்,உறுதிப்படாத கருத்துகளை ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது வழக்கம்.

   எனினும் நீங்கள் த்வறு என்று கூறியபின்தான் அந்த மனிதர் என்னவெல்லாம் கூறினார் என ஆர்வம் பிறக்கிறது.ஹி ஹி

   நன்றி

   Delete
 17. //வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச்செய்திருப்பதும்......(குரான்)
  பூமியில் என்று தெளிவாக படைக்கப்பட்ட செய்தியை சொன்ன அல்லாஹ், மற்ற இடங்களில் என்று பொதுவாக வானங்களில் என்று சொன்னது ஏன்? இன்னும் படைக்கவில்லையா?அல்லது படைத்த இடத்தின் பெயர் தெரியவில்லையா? இனிமேல்தான் படைப்பான் எனில் எந்த இடம் என்பதை மார்க்க அறிஞரிடம் கேட்டுச் சொல்லுங்களேன், விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கும் அல்லவா. தான் படைத்த(?)அல்லது படைக்கப்போகிற இடத்தைக்கூட தெளிவாக சொல்ல முடியாத துப்பு கெட்ட அல்லாவுக்கு தட்பவெட்ப‌ நிர்ணயம் செய்ய என்ன தகுதி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இனியவன்

   ஹா ஹா ஹா சகோ சுவனன் அவருடைய கருத்தை அறிவியல் முரண்பாடு இன்றி வலியுறுத்துவதில்தெளிவாக இருக்கிறார்.இதற்கு முடிந்தவரை அறிவியல்,தர்க்கரீதியாகவே பதில் அளிக்க வேண்டும்.

   நாம் கேட்கும் கேள்விகளுக்கு நம்மைத்தான் திருப்பி கேள்வி கேட்பார்கள்.


   செந்திலின் வாழைப்பழ காமெடி,

   வடிவேலுவின் "என்ன கையைப் பிடித்து இழுத்தியா " போன்ற விடயங்கள் பிடித்தவர்கள் மட்டுமே விவாதிக்க முடியும்.

   அவர்களின் வாதங்களை இப்படி நகைச்சுவையாகவே பார்க்கிறேன்விவாதத்தை அனுபவியுங்கள்,எல்லாம் சும்மா விளையாட்டு ஹா ஹா ஹா

   நன்றி

   Delete
 18. இரண்டு படமுமே We are facing techincal difficulties சொல்வதால் மழை பேஞ்சு நிலமெல்லாம் சேறு மாதிரி தெரியும் முதல் படத்துக்கு கமெண்டுடறேனே!
  அதென்ன நீரால் சேறான பகுதியா அல்லது நடுவில் நெற்றிக்க்ண்ணை காட்டும் உள்ளே எரிமலையா?

  எரிமலைன்னு சொன்னதும் நீங்க முன்பு போட்ட ஆட்டன்பரோ ஒரு எரிமலை வெடித்து எரிந்து முடிந்த பின் எப்படியிருக்கும்ன்னு ஒரு எரிமலை குகைக்குள் போய் அதில் வடியும் நீருக்குள்ளும் உயிரினங்கள் எப்படி வாழ்கிறதென்று விளக்கினார்.இன்னுமொரு வேறு காணொளியில் நீரின் அடிமட்டத்தில் உயிரினங்கள் எப்படி தோன்றுகின்றன என்பதை காணமுடிந்தது.

  அது ஒற்றை செல்லா இல்லையா என்று நீங்களும் சகோ.சுவனப்பிரியனையும் கூட அழைத்துக்கொண்டு போய் பார்த்தால் தேவலை:)

  நிறைய ஆய்வுகள் நிகழ்வதை இந்த கணினி யுகத்தில் காணமுடிகிறது.கூடவே நாசாவும் நடைமுறை சாத்தியங்களை கண்டறிய முயல்கிறது.செவ்வாயில் இறங்கும் வரை முன்னேறிய சாத்தியங்கள் இன்னும் வளரும்.21ம் நூற்றாண்டிலிருந்து 22ம் நூற்றாண்டு அதை நோக்கிய பயணமாகவே இருக்கும்.

  இது மாதிரி விசயங்களில் கிளி ஜோஸ்யம் சொல்றதுன்னா எனக்கு ரொம்ப பிரியம்:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இராஜநட‌
   இரு காணொளிகளுமே தெரிகிறதே.முதல் காணொளி பிபி எஸ் தளத்திலும்,இடண்டாம் காணொளி யுட்யூப் தளத்திலும் எடுக்கப்பட்டது.இங்கே பார்த்துக் கொள்ள‌வும்.

   http://video.pbs.org/video/1114436021/

   http://www.youtube.com/watch?v=bi4nMJvOeAo

   நம்ம சகோ சுவனன் நம்மை சுவனத்திற்கு அழைத்து செல்ல விரும்புகிறார்.அவரைப் போய் எரிமலைப் பக்கம் கூட்டி செல்ல சொல்கிறீர்களே!


   எரிமலையா(நரகம்!?),சுவனமா?

   எது வேண்டும்?

   ஹா ஹா ஹா

   இப்பதிவின் மேன் ஆஃப் தெ போஸ்ட் சகோ சுவனப் பிரியன்தான்.கலக்கி விட்டார்

   **********
   அப்புறம் " அவள் அப்படித்தான் திரைப்படம் யு ட்யூபில் வந்து விட்டது பாருங்கள்.

   http://www.youtube.com/watch?v=jJR5Fl377vM

   நன்றி

   Delete
 19. திரு இனியவன்!

  //பூமியில் என்று தெளிவாக படைக்கப்பட்ட செய்தியை சொன்ன அல்லாஹ், மற்ற இடங்களில் என்று பொதுவாக வானங்களில் என்று சொன்னது ஏன்? இன்னும் படைக்கவில்லையா?அல்லது படைத்த இடத்தின் பெயர் தெரியவில்லையா? இனிமேல்தான் படைப்பான் எனில் எந்த இடம் என்பதை மார்க்க அறிஞரிடம் கேட்டுச் சொல்லுங்களேன், விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கும் அல்லவா.//

  பூமியில் நாம் வாழ்ந்து வருவதால் ஐயத்திற்கிடமின்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பூமியைத் தாண்டி வானம் என்ற சொல்லுக்கே சூரிய குடும்பம் என்றுதான் அர்த்தம் செய்து கொள்கிறோம். மற்ற கோள்களுக்கெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு என்ன பெயர் என்பது அன்றைய அரபுகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இவ்வாறு பல கோள்கள் சூரியனை மையமாக வைத்து சுழன்று வருகிறது என்று இன்றும் பலர் நம்புவதில்லை. அன்றைய மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். எனவேதான் அதன் பெயர்களைக் குறிப்பிடாமல் பொதுவாக வானம் என்று கூறுகிறான். இந்த அளவு இன்றைய அறிவியலோடு அன்றைய வசனம் ஒத்துப் போவதே பெரிய விஷயம் இல்லையா?

  ReplyDelete
 20. ஸலாம் சகோ சுவனன்,

  சூப்பர் சகோ விடாதீங்க சகோ இனியவனை(நம்மை விட்டுடுங்க!!!!!!!)

  ஹா ஹா ஹா

  நன்றி

  ReplyDelete
 21. சகோ.சார்வாகன்,

  ஆகாயம்னு சொல்லிட்டா அது பிரபஞ்சம் னு சு.பி சொல்லிட்டார் அப்படியே வழக்கம் போல பூமியை விரித்தான் எனவே பூமி விரிவடையுது!!?? வானத்தை விரித்தான் எனவே பிரபஞ்சம் விரிவடையுது என சொல்லுவாரே அதையும் சொல்லி இருக்கலாம் கூடுதல் காமெடி கிடைத்து இருக்கும் :-))

  ------

  சு.பி ,

  இப்படிலாம் நீங்க சப்பைக்கட்டு கட்டுவதால் தான் இந்துத்துவாக்களும் கட்டுறாங்க, 1400 வருஷம் முன்னர்னு நீங்க பெருமைப்பட்டுக்கிறாப்போல 3000 வருஷம் முன்னரே அண்டம், பிரபஞ்சம் எல்லாம் இந்து புராணத்தில இருக்குன்னு சொல்வதை நீங்க ஏத்துப்பீங்களா?

  இதுக்கே ரொம்ப டீடெயிலா ஈர் ஏழு பதினான்கு லோகம்னு கணக்கெல்லாம் சொல்லி முப்பத்தி முக்கோடி தேவர்கள்னு சென்சஸ் எடுத்து புராணம் போட்டு இருக்காங்க :-))

  அப்போ மட்டும் நீங்க செல்லாது சொன்னால் எப்பூடி, எனவே எல்லா மத புராணங்களும் செல்லாது என்பதே பொது நியதி :-))

  அதை சொன்னா காபீர் னு சொல்லுவிங்க :-))

  ReplyDelete
 22. நண்பர் சு.பி.

  //இன்றைய அறிவியலோடு அன்றைய வசனம் ஒத்துப்போவதே பெரிய விடயம் இல்லையா?//

  ஹி..ஹி...எப்படியாவது அறிவியலோடு ஒத்துப்போறதுக்கு ஒத்துப்போறீங்க புரியுது. அதுபோகட்டும் நம்ம அண்ணன் பி.ஜே.கூறுகிறார் "இதில் தான் வாழ்வீர்கள் என்பது பூமியைத்தவிர வேறு எங்கும் மனிதர்கள் வாழமுடியாது என்று குரான் கூறுவதாக வசனம் (7;10)விளக்கத்திற்கு,எழுதப் படிக்காத முகம்மதுக்கு இதில் தான் வாழ்வீர்கள் என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்?எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால்தான் அன்றைய நிலையில் இதனைக் கூறமுடியும் என்று இந்த வசனத்திற்கு தனது குரான் விளக்க உரையில் குறிப்பு எண் 175ல் பக்கம் 1017ல் கூறிவிட்டாரே இதை எப்படி எடுத்துக் கொள்வது?

  சகோ. வவ்வால்.
  சரியாச் சொன்னீங்க சப்பைக்கட்டு கட்டினாத்தான் வியாபரம் நடக்கும். மேலும் 3000 ஆண்டுகளாக மற்றமதங்கள் கூறுவதையும் கேட்டால் நம்ம தலைதான் சுற்றும்.

  ReplyDelete
 23. //3000 வருஷம் முன்னரே அண்டம், பிரபஞ்சம் எல்லாம் இந்து புராணத்தில இருக்குன்னு சொல்வதை நீங்க ஏத்துப்பீங்களா? //

  ஏத்துப்பாங்க. ஏன்னா அதுவும் ‘நம்ம நபி’ ஒருத்தர் சொன்னதாத்தான் இருக்கும் !!

  ReplyDelete