Wednesday, June 13, 2012

அமேசானை காப்பாற்றுங்கள்!!!!: காணொளி


வணக்கம் நண்பர்களே!,

இயற்கை அன்னை நமக்கு அளித்த அரும்பெரும் செல்வங்களும் ஒன்றுதான் காடுகள்.காடுகளே மழை காலத்தே பெய்ய உதவுகின்றன.

காடுகள் அக்கால்த்தில் நிறைய இருந்ததால்தான் "மாதம் மும்மாரி பொழிகிறதா?" என கேட்க முடிந்தது.இயற்கையை அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் சுரண்டி,வருவது வருங்கால‌ சந்ததியை அழிவை நோக்கி கொண்டு செல்கிறது என யாரும் உண்ர்வது இல்லை.

இப்படி காடுகளை அழித்த்தல் என்பது பல உயிரினங்களையும்[bio diversity] அழிக்கிறது.இப்பதிவில் உலகைன் மிகப்பெரிய காட்டுப்பகுதியான அமேசான் பற்றியும் அதனை அழிவில் இருந்து காக்க நடை பெறும் போராட்டங்கள் பற்றியும் அறிவோம்.

அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.

மீதி விவரங்கள் காணொளியில். கண்டு களியுங்கள்.வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.
Part1



Part2


Part 3


http://en.wikipedia.org/wiki/Amazon_rainforest

Thanks google and wikipidia

5 comments:

  1. //வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.//

    ஒரு தோட்டத்தையே அதுவும் எனது உழைப்பில் வீட்டில் உருவாக்கியுள்ளேன். அதிகம் தேக்கு மரங்கள்.

    ReplyDelete
  2. காட்டையே உருவாக்கிய‌ ஜாதவ் பயங்(jadav payeng) போல நிறைய காடுகளை உருவாக்க வேண்டும்.

    சார்ந்து வாழும் உலகில் காடு இல்லாமல் மனிதன் இல்லை என்பது அனைவருக்கும் புரிய வேண்டும்.

    காணொளி பகிர்விற்கு நன்றி சார்வாகன்

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே.

    கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயம் அமேசானை காப்பாற்ற வேண்டியது. அல்-ஜசீரா தொலைக்காட்சி இந்த காணொளிகளை ஒளிப்பரப்பவது சிறப்பானது. பூமியில் உள்ள வளங்கள் எல்லாம் இறைவன் மனிதன் பயன்படுத்த வைத்துள்ளான், அதனால் அதை மனிதனின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தும்போது ஏற்படும் பாதங்கங்களை இறைவன் பார்த்துக்கொள்வான் என்ற கொள்கைகள் இருக்கும்போது, இவ்வகையான காணொளிகள் அவசியம்.

    மேலும் இதையும் பாருங்கள்....
    http://www.thehindu.com/opinion/editorial/article3529171.ece

    தென்கொரியா 100% புத்த மதத்திலிருந்து 55% சதவிதம் கிறித்துவ நாடாக மாறியதன் விளைவுகள் தான் இது என்று நினைக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  4. அதிகரிக்கும் வெப்பத்தால் பூமி அழிவுப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இவ் வேலையில் எல்லோருக்கும் நினைவூட்டும் வகையில் இப் பதிவு அமைந்து விட்டது. வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க உறுதிகொள்வோம். நன்றி

    ReplyDelete
  5. வாங்க சகோ சுவனப் பிரியன்
    கருத்திற்கு நன்றி.தோட்டம் உருவாக்கியமைக்கு பாராட்டுகள்.
    நன்றி
    ***********
    வாங்க சகோ கல்வெட்டு
    எதுவும் இருக்கும் வரை அதன் அருமை தெரிவது இல்லை.நம்மை காப்பாற்றும் இயற்கையின் ஒரு கொடைதான் காடு என்பதை உண்ராமல் அதனை அழிப்பவனை என்ன சொல்வது?
    கருத்துக்கு நன்றி
    ***********
    வாங்க சகோ நரென்
    உங்களுக்கும் நேரமின்மை பிரச்சினை வந்து விட்டதா ஹா ஹா ஹா!.மத்வாதிகளின் (பிடி)வாதம் நாம் அறியாததா?.நாம் இருக்கும் பிரச்சினைகளை முதலில் ஒத்துக் கொண்டு அதனை சீர் செய்ய விழைகிறோம்.அவர்கள் நியாயப்படுத்தி பிரச்சினையை பெரிதாக்குபவர்கள்.

    காடுகள் அழிவதும்,சுற்றுசூழல் பாழ்படுவதும்,இதனால் மனிதன் உட்பபட்ட அனித்து உயிர்களும் பாதிக்கப்படுவது உண்மை.

    இதனை கவன‌த்தில் எடுக்க்காவிட்டால் சீக்கிரம் இறுதி(அவர்களுக்கு மறுமை ஹி ஹி!!!) நாள் வரும் என நாம் உறுதி கூறுகிறோம்.

    மத புத்தகமும் கூறுகிறது!

    "வரும் கோபத்திற்கு தப்பிக்கும் வழியை காட்டுபவன் யார்?"

    நன்றி
    *********
    வாங்க சகோ இனியவன்

    இந்த புவி வெப்பமயமாதல் கூட பரிணாம கொள்கை போல் எதிர்ப்பை சந்திக்கிறது.வெப்பமய்மாதம் உண்மைதான் ஆனால் மனிதன் செயல் இத்ற்கு காரணம் இல்லை என விதண்டாவாதம் பேசி வாதிடுகின்றனர்.

    இது பற்ரி கூட சில பதிவுகள் எழுதலாம் எனினும் நேரம் கிடப்பது இப்போது அரிதாக உள்ளது.முயற்சிப்போம்.

    அடிக்கடி வாங்க
    நன்றி

    ReplyDelete