Friday, June 22, 2012

தென் கொரியாவின் பரிணாம எதிர்ப்பு எதை நோக்கி செல்கிறது?
வணக்கம் நண்பர்களே ,

பரிணாமம் என்னும் உயிரின தோற்ற வளர்ச்சி கொள்கை பற்றிய விளக்க பதிவுகள் ,விவாதங்களில் நாம் ஈடுபட்டு வருவது அறிந்த விடயம்.உலகில் பரிணாம கொள்கையை எதிர்க்கும் ஒரே ஆய்வு(?) குழு டிஸ்கவரி இன்ஸ்டியூட் எனப்படும் கிறித்தவ படைப்புக் கொள்கையாளர்களின் அமைப்பு ஆகும்.பிற பரிணாம எதிர்ப்பு மைப்புகள் எல்லாம் இந்த அமைப்புகளின் கட்டுரைகளை எடுத்து பயன் படுத்துபவை என்பதை நாம் நம் பதிவுகளில் ஆவணப்படுத்தி இருக்கிறோம்.

தென் கொரியாவில் பள்ளி அறிவியல் பாடத்திட்டத்தில் பரிணாம கொள்கையின் சில ஆதாரங்கள் நீக்கப்பட்டது கடந்த மாத செய்தி.இது குறித்து நேட்சரும்[nature] ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது.

 டைனொசரில் இருந்து பறவை என்பன் சான்றான ஆர்க்கியாப்டிரிக்ஸ்,குதிரையின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றின் சான்றுகள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

நாம் பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கை,பாடத்திட்டம் என்பது அரசியல் கொள்கை என்பதால் இது ஒரு பிரச்சினையே இல்லை என்பதை வலியுறுத்துகிறோம்.

உடனே பரிணாம் எதிர்ப்பு சகோக்கள் தென் கொரியாவில அறிவியலாளர்களே இல்லையா? பாடத்திட்ட குழுவில் இருப்பவர்களும் அறிவியல் மேதைகள்தான் ,முட்டாள்கள் அல்ல‌ என வாதிடுவார்கள். இது உலகம் முழுதும் பரிணாம் எதிர்ப்பு பரவுவதை காடுகிறது என சொல்வது இயல்பே.

நாம் ஒரு செயல் நடக்க சில காரணிகள் தேவை,அது போல் பரிணாம எதிர்ப்பு அரசியலுக்கும் சில காரணிகள் தேவை.அதனை வரையறுத்து அது தென் கொரியாவுக்கு பொருந்துமா என பார்க்கப் போகிறோம்.

இது தென் கொரியாவுக்கு மட்டுமல்ல பெரும்பாலான பரிணாம எதிர்ப்பு
நாடுகளுக்கும் பொருந்தும்.
  
1. ஆபிரஹாமிய மதம் சார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் பெரும்பானமையாக இருக்க வேண்டும்.

2.மதம் அரசியலை கட்டுப்படுத்தும் சூழ‌ல் நிலவ வேண்டும்.

புத்த மதத்தினர் பெரும்பானமையினராக இருந்த தென் கொரியா கடந்த இரு நூற்றாண்டுகளில் கிறித்தவ்ர்கள் பெரும்பானமை நாடாக மாறிவிட்டது.உலகில் அதிக சுவிசேஷக‌ர்கள் உள்ல இரண்டாம் நாடு தென் கொரியா.[முதல் நாடு அமெரிக்கா]

http://www.korea4expats.com/article-Christianity-in-Korea.html


உலகின் மிகப் பெரிய தேவாலயம் ஃபுல் காஸ்பல் சர்ஸ் 7.5 இலட்சம் உறுப்பினர்களை கொண்டது 90 களில் அதன் போதகர் திரு பால் யாங்கி சோ நம் சென்னை மெரினாவில் ஒரு கூட்டம் நடத்தினார்.

http://en.wikipedia.org/wiki/Yoido_Full_Gospel_Church

தென் கொரிய மக்கள் 40% பரிணாம கொள்கை மீது நம்பிகை அற்று இருக்கின்றனர்.அமெரிகாவிலும் இதே 40% என்பது குறிப்பிடத் தக்கது.தென் கொரியாவின் பள்ளி அறிவியல் பாட புத்தகங்களில் சில பரிணாம் சான்றுகளை நீக்கியது அங்கு கிறித்தவ மத வளர்ச்சியையும்,அதன் அரசியல் செல்வாக்கை காட்டுகிறது என்பதுதான் நம் கருத்து.

தென் கொரியாவின் புகழ் பெற்ற பரிணாம ஆய்வாளர் Dayk Jang, an evolutionary scientist at Seoul National University இது அறிவியலாளர்களை கலக்காமல் எடுக்கப்ப்ட்ட முடிவு என கருத்து தெரிவிக்கிறார்.


http://ncse.com/news/2012/06/creationist-success-south-korea-007434

பரிணாமம் என்பது உயிரினங்களின் வரலாறு. வரலாற்றை மறைப்பவன்,மறப்பவன் சரியான முன்னேற்ற பாதையில் பயணிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கை அறிவியல் ரீதியாகவே தவறு என நிரூபிக்கப்பட வேண்டும்.அரசியல் குறுக்கு வழியில் அல்ல.


இதற்கு ஒரு எ.கா பார்க்க வேண்டுமானால் நமது அண்டை நாடு பாகிஸ்தான்தான்.அங்கே பள்ளி வரலாற்று பாடப் புத்தகங்களில் அரபியன் முகமது பின் காசிமின் படை எடுப்புக்கு பிறகே அங்கு நாகரிகம் வந்ததாகவும் அதற்கு முன் நாகரிகமற்ற காட்டு மிராண்டிகள் வாழ்வதாக்வும் சிதரிக்கின்றன.

A Text Book of Pakistan Studies claims that Pakistan "came to be established for the first time when the Arabs under Mohammad bin Qasim occupied Sindh and Multan

[இதே பாணியில் எழுதப்பட்ட சிந்து நதிக்கரையினிலே [ஆசிரியர் முகமது ஹசன்]என்ற  தமிழில் ஒரு வரலாற்று நாவல் உண்டு.]


A study by Iftikhar Ahmad of Long Island University published in Current Issues in Comparative Education in 2004 drew five conclusions from content analysis of the social studies textbooks in Pakistan.
 1. First, the selection of material and their thematic sequence in the textbooks present Islam not simply as a belief system but a political ideology and a grand unifying worldview that must be accepted by all citizens.
 2. Second, to sanctify Islamic ideology as an article of faith, the textbooks distort historical facts about the nation's cultural and political heritage.
 3. Third, the textbooks offer a biased treatment of non-Muslim citizens in Pakistan.
 4. Fourth, the main objective of the social studies textbooks on Pakistan studies, civics, and global studies, is to indoctrinate children for a romanticized Islamic state as conceptualized by Islamic theocrats.
 5. Fifth, although the vocabulary in the textbooks underscores Islamic virtues, such as piety, obedience, and submission, little is mentioned about critical thinking, civic participation, or democratic values of freedom of speech, equality, and respect for cultural diversity.

நேரமினமையால் மொழி பெய‌ர்க்கவில்லை,விவாதம் வந்தால் மொழி பெயர்ப்போம், பாகிஸ்தான் பள்ளிப் பாடத்திட்டம் பற்றி சில பதிவுகள் எழுதலாம்.ஹி ஹி ஹி!!!!!!!!!!


இதனால் இந்திய வெறுப்பு அவர்கள் மனதில் ஊறிவிட்டது .அந்த வெறுப்பு அவர்களை அமெரிக்காவின் அடிமை ஆக்கியது,இப்போது நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாக வன்முறை,பொருளாதார சிக்கலில் காட்டுமிராண்டி நாடாகவே ஆகிவிட்டது.

ஆகவே பள்ளி பாடத் திட்டம் என்பது எதை வேண்டுமானாலும் அரசியல் செல்வாக்கு பலம் இருந்தால் மாற்றலாம் ,ஆகவே தென் கொரிய ,பாகிஸ்தான் நிகழ்வுகளில் வித்தியாசம் ஒன்றுமில்லை,இதனை மத அரசியலின் வெளிப்பாடாகவே நாம் பார்க்கிறோம்.

தென் கொரியா மதவாதிகளின் பிடியில் இருந்து விடுபடவும்,உலகெங்கும் ஜன்நாயகம் ,மத சார்பின்மை,மனித உரிமைச் சட்டங்கள் அமல் படுத்தும் போராட்டத்தில் நாமும் குரல் கொடுப்போம்.

டிஸ்கி: பரிணாம் எதிர்ப்பில் என்ன எழுதுவார்கள் என நம்க்குத் தெரிந்தாலும் எதிர்ப்புக் கட்டுரை வந்த பின் மறுபுக் கட்டுரை வெளியிடவே  விரும்புகிறோம்.

நன்றி

28 comments:

 1. உலகம் தட்டை என்று நம்பியவர்களால் எழுதப்பட்டது பைபிள். புகைவண்டி ஒரு பிசாசு என்று சொன்னவர்கள பைபிளை நம்பியவர்கள், பெண்களை விச்சுகள் என்று கொலை செய்த பாரம்பரியம் கொண்டவர்கள்.

  இன்று இவர்கள் உருண்டையாக மாறிப்போன உலகில் வெக்கமில்லாமல் வாழவில்லையா?

  அறிவியல் இவர்களின் அரசியலுக்கு அப்பாற்பட்டது.

  ReplyDelete
 2. மதங்கள் அரசியல் மற்றும் கல்விசார் நிலைகளில் ஊடுறுவும் போது இப்படியான செயல்கள் நடக்கவே செய்கின்றன. இலங்கையில் கூட இப்படியான பௌத்த மதம் சார் நம்பிக்கைகள் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதே போல இந்தியாவில் கூட பிஜேபி அரசு இருக்கும் போது தமது நம்பிக்கைகளை பள்ளி புத்தகங்களில் இணைக்க முற்பட்டதையும் நாம் மறக்கக் கூடாது. பாகிஸ்தான் பள்ளிகளில் நடக்கும் தகவல்கள் குறித்து எழுதினால் நன்றாக இருக்கும்.

  தென் கொரியாவின் இந்த செயல் வருத்தமளிக்கின்றன. பரிணாம கொள்கையையே தற்சமயத்துக்கு ஏற்றுக் கொள்ளும்படியான ஒரே கொள்கையாக இருக்கின்றன. இதில் விவிலியத்தைப் புகுத்துவது அவர்களை பின்னோக்கி போகச் செய்துவிடும் என்பதில் ஐயமில்லை... !

  ReplyDelete
 3. புத்த மதத்தினர் பெரும்பானமையினராக இருந்த தென் கொரியா கடந்த இரு நூற்றாண்டுகளில் கிறித்தவ்ர்கள் பெரும்பானமை நாடாக மாறிவிட்டது.உலகில் அதிக சுவிசேஷக‌ர்கள் உள்ல இரண்டாம் நாடு தென் கொரியா.//

  கொரியன் ஒருவர், என்னுடைய பக்கத்து சீட்டில் டோக்கியோவிலிருந்து பெய்ஜிங் பயணம் செய்தார், அப்போதே இயேசுதான் கடவுள்னு பிரச்சாரம் ஆரம்பித்தார், கொரிய நாகரிகத்தின் வயதை விட ஏசுவின் கம்மின்னு சொன்னேன், மிரள மிரள பார்த்தார்.

  இந்த ஆபிரகாமிய மதங்களின் கடவுள், தூதர் நம்பிக்கைகள் ஆறாயிரரம் வருடம் தாண்டி பயனிக்கமுடியாது, ஆதாமின் வயது இவர்களின் கதைப்படி ஆறாயிரம்தான் வரும். ஆனால் பல மில்லியன் ஆண்டுக்கு முன்னரே கடவுள் ஆதாமை படைச்சிட்டாருன்னு இப்ப அவங்களே கண்டுபிடிச்சிக்குவாங்க.

  ReplyDelete
 4. கடவுளோட தூதுவர் எல்லாருமே மத்திய கிழக்கு நாடுகளில் இருக்காங்களேன்னு கேட்டா அதுக்கு ஒரு சப்பைக்கதை என்னிக்கு அவங்கள கேள்வி கேக்கிறாங்களோ அப்பதான் தெளிவு பிறக்கும்.

  ReplyDelete
 5. தென்கொரியா மட்டுமல்ல பல நாடுகளிலும் கிறிஸ்துவத்தையும் நவீனத்துவத்தையும் (தவறாக) இணைத்து ஏற்றுகொள்கிறார்கள். கிறிஸ்துவராக மதம் மாறினால், வெள்ளைக்காரர்களாக ஆகிவிடுவோம் என்றும் கருதுகிறார்கள்.
  ஆனால் வெள்ளைக்காரர்களின் முன்னேற்றத்துக்கும் செல்வச்செழிப்புக்கும், அவர்கள் அறிவியலை துணைக்கொண்டதுதான் காரணம் என அறிவதில்லை. இந்த பரிணாமவாதிகள் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்துதான் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பதும் தெரிவதில்லை.மதம்மாற்றுபவர்களோ, செல்வச்செழிப்புக்கு ஏசுதான் காரணம் என்றும் பணம் மற்றும் பொருட்களை தானமாக கொடுத்து அதனை உறுதிப்படுத்தி மதம் மாற்றி இவர்களை திரும்பவும் பிற்போக்க்க்கு தள்ளுகிறார்கள்.

  ReplyDelete
 6. பரிணாமவாதிகள் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்துதான்

  என்பதை

  பரிணாமஎதிர்ப்பு வாதிகள் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்துத்தான்
  என்று படித்துகொள்ளவும்

  (ஆஷிக் பதிவு படிச்ச வென)

  ReplyDelete
 7. தமிழ் கிறிஸ்துவம்- பைபிள் ஒளியில்

  அருமையான பதிவு. நேர்மையான அகழ்வாராய்ச்சிகள் ஆபிரஹாம் முதல் சாலமன் வரை அனைத்துமே தவறு. ஜெருசலேமில் சாலமன் காலத்திற்குப் பிறகு தான் மக்கள் குடியேற்றமே நடைபெற்றன. இவற்றை சொல்லும் நூல் - The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts எழுதியவர்Finkelstein, Israel, and Silberman, Neil Asher, , Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8 இஸ்ரேல் தலை நகர்- டெல் அவிவ் பல்கலைகழக அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்.
  பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்?

  http://devapriyaji.wordpress.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/

  சொல்லப் பட்ட வரலாறே பொய், பின் என்ன அறிவியல் எனத் தேடுவது.
  பைபிள் பற்றிய நல்ல ஆய்வு நூலகள் இணைப்பு
  http://newindian.activeboard.com/t48956165/topic-48956165/
  பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டுள்ளது என்றதாம்.

  ReplyDelete
 8. வாங்க சகோ கல்வெட்டு
  நலமா? மதம் என்பதை காலத்திற்கு ஏற்ற ஒழுக்க விழுமியங்களை போதித்து மனித நேயம் வளர்கும் தனிபட்ட மனிதனின் ஆன்மீக தேடல் எனில் அதற்கு யாரும் எதிரி அல்ல.ஆனால் மத புத்தக மதங்கள் அனைத்துமே தங்கள் புத்த்கத்தில் எழுதி உள்ளதை அனைவரும் ஏற்றே ஆக வேண்டும் என அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி நிலை நிறுத்த முயல்வதுதான் சிக்கல்.பரிணாம எதிர்ப்பு என்பதும் அதன் ஒரு பகுதிதான்.

  மதம் ,அரசியல் கலக்க கூடாது. உலக் முழுதும் ஜனநாயகம்,மத சார்பின்மை,மனித உரிமை சட்டங்கள் இதற்கு எதிரான எதனையும் எதிர்க்கா விட்டால் நாமும் ஒரு நாள் பாதிக்கப்படுவோம்.
  நன்றி
  ********
  வாங்க சகோ இக்பால் செல்வன்,
  பரிணாம கொள்கை மட்டுமல்ல ஒவொவொரு அறிவியல் கொள்கையும் மிகுந்த சோதனைகளை தாண்டியே ஏற்கப்படுகிறது.பரிணாமம் எவ்வள்வோ படிகளை தாண்டி விட்டது. டார்வினில் இருந்தா பல மாற்றங்களையும் கண்டது.இன்னும் வளர்ச்சி பெறும்.

  பாவம் பரிணாம எதிர்ப்பு மத வாதிகள் 150+ வருடம் எதிர்பார்த்து வெறுத்து போய் அறிவியலில் முடியாததை சாதிக்க அரசியலில் இறங்கி விட்டனர்.

  நன்றி
  ********
  வங்க சகோ குகுடுப்பை
  தென் கொரியாவுக்கு கெட்ட காலம் பொறக்குது கெட்ட காலம் பொறக்குதுன்னு நல்லா அழுத்தி சொல்லுங்க.இந்த மத பிரச்சாரகர்களிடம் மாட்டினால் தாவு தீர்ந்து விடும்.எடுத்தவுடன் வெட்டி விட வேண்டும்.எடக்கு மடக்கா இயேசு என்பவர் வாழ்ந்ததன் சம் கால ஆதாரம் என்ன என்று கேட்டால் மூச்சு வராது?.

  நன்றி
  ***
  வாங்க இ.சா

  கிறித்த்வம் தொடக்கம் முதல் இன்று வரை அன்பு மார்க்கம் என்பது தவறான் கருட்து.ஒரு 1000 வருடம் முன் மதம் வைத்ததுதான் சட்டம்,மத விரோத நாட்டை போர் தொடுத்து அழித்தல்,இன்குசிஷன் என்று இப்போதைய நம் சகோக்களுக்கு பல விதத்திலும் குருவாக விள்ங்கினர்.மதம் பல பிளவு பட்டு,அரசியல் அதிகாரத்தை இழந்ததால் அன்பு மார்க்கம் வேறு வழி இல்லாமல் ஆனது. இப்படி பரிணாம் எதிர்ப்பு,மதத்திற்கு சலுகைகள்,என சில விடயங்கள் அரசியல் அழுத்தம் மூலம் சாதிக்கின்றனர்.

  பரிணாமம் உண்மை எனில் ஆதம் ஏவாள் கதை பொய் ஆகிவிடும்.

  இன்னும் நம்ம ஆஸிக் பதிவுக்கு எல்லாம் போறீங்க????????.ஹா ஹா ஹா
  சரி அவர் எழுத எழுத நம்க்கு ஊக்கமும் ஆக்கமும் பிற்க்குது

  நன்றி

  ReplyDelete
 9. சகோ.சார்வாகன்,

  சரியா சொன்னீங்க, இது பக்கா அரசியலே. இதை வைத்து பரிணாமவாதம் பொய் என்றால்,நாளை குஜராத்தின் மோடி அரசு பாடத்திட்டத்தில் முகம்மது நபி ஒரு இந்துனு எழுதி வச்சுட்டா உடனே அதையும் உண்மைனு நம்பிடுவாங்களா இந்த மதவாதிகள்.

  அப்போ முரளிமனோஹர் ஜோஷி மத்திய மனித வள அமைச்சரா இருந்த போது ஒரு பாடத்திட்டம் கொண்டு வந்தப்போது எதிர்த்தது இந்த இஸ்லாமிய மதவாதிகள் தானே , அது மட்டும் ஏன்?

  எனவே பாடத்திட்ட அரசியலை வைத்து அது தான் உண்மைனா அப்புறம் எதுக்கு அறிவியல் ஆய்வுகள்?

  ReplyDelete
 10. வாங்க சகோ தேவப் பிரியா,
  அருமையான தகவல் சுட்டிகள்.இந்த மத வாதிகள் வரலாற்று சான்றுகள்,அகழ்வாய்வு பற்றி விவாதிப்பது இல்லை.மத புத்தக்த்தில் அறிவியல்,பரிணாம் எதிர்ப்பு என்று கொக்கு தலையில் வெண்னெய் வைத்து கடவுளை காட்ட முடிபவர்கள்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  வாங்க சகோ வவ்வால்

  மதவாதிகள் வினோதமான ஜந்துக்கள்.இடம் ,காலம்,ஏவல் தகுந்தப்டி மாற்றி மாற்றி கூறுவதில் அவர்களை மிஞ்ச ஆளே கிடையாது.

  அவர்கள் சிறுபானமையினராக இருக்கும் இந்தியாவில் ஜனநாயகம்,மத சார்பின்மை,மத சமூக் சட்டங்கள் மட்டும் மத அடிப்படை,குற்றவியல் சட்டங்கள் மனித உரிமை அடிப்படையில் ,மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பார்கள்.

  சரி இதே போல் அவர்களின் மத பெரும்பானமையாக உள்ள நாடுகளில் ஜனநாயகம்,மத சார்பின்மை,பிற மத சிறுபானமையினருக்கு சிற்ப்பு சமூக சட்டம்,இட ஒதுக்கீடு எதிர்ப்பார்கள்.

  இந்த இரட்டை வேடப்போக்கு இருப்பதாலேயே பல வன்முறைகள்,இன மோதல்கள் என பல நாடுகள் வாழ தகுதியற்றதாக் மாறிக் கொண்டு இருக்கின்றன.
  Most failed countries of world 2011
  see here

  http://www.foreignpolicy.com/articles/2011/06/17/2011_failed_states_index_interactive_map_and_rankings

  நன்றி

  ReplyDelete
 11. நல்ல பதிவு சகோ, வரலாற்று திரித்தலை பரிணாம எதிர்ப்பு வெற்றியாக கருதும் கூட்டத்திற்கு நல்ல சாட்டை அடி.

  டைனசர் வாழ்ந்த காலங்கள் மில்லியன் ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டும், இவங்க இன்னும் ஒலகம் தோன்றி வெறும் 6000 ஆண்டு தான் ஆச்சுன்னு துண்டைப் போட்டு தாண்டுறாங்கெ

  ReplyDelete
 12. மத நம்பிக்கைகளை அறிவியல் உண்மைகளாக்க அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுகின்றார்கள்!பாட திட்டங்கள் மாற்றப்படுகின்றன.இயேசு,நபிகள் என்று யாரும் பிறக்கவில்லை என்று நாளை நாம் ஒரு கல்வி நிருவநத்தில் பாடத்திட்டமாக கற்பித்தால் ஏற்றுகொள்வார்கள் எனில் நமக்கு சம்மதமே!!

  ReplyDelete
 13. சிறந்த சிந்தனையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் கொரிய மக்களை வாழ்த்தி வரவேற்போம்.

  ReplyDelete
 14. நண்பரே,
  அருமையான பதிவு.

  first things first...
  ////சுவனப் பிரியன் said...
  சிறந்த சிந்தனையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் கொரிய மக்களை வாழ்த்தி வரவேற்போம்////

  ஆகவே கொரியர்களின் சிறந்த சிந்தனைப்படி நோக்கி அடியெடுத்து வைக்க, நண்பர் சுவனப்பிரியன் கிறித்துவத்தை நோக்கி அடியெடுத்து வைப்பார் என்று நம்புவோமாக.


  இதை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ஒரு டிராப்ட் போட்டிருந்தேன். அதை ஒத்தே இந்த பதிவு உள்ளது.

  கொரியாவில் இருக்கும் கிறித்துவர்கள் fanaticஆக இருக்கிறார்கள். புத்த ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. உலகம் அழியும் நேரம் என்று கூட்டங்கள் போட்டு கூட்ட தற்கொலைகள் நடந்த சம்பவங்களும் உண்டு. தற்போது அங்கு அதிபராக இருக்கும் லீ மூங்க் பாக், ஹூண்டாய் கம்பெனியின் முதன்மை அதிகாரியாக இருந்தவர். தீவிர கிறித்துவவாதி.

  ஆகையால் அவர் ஆட்சியில் பாட புத்தகங்களில் கிறித்துவ கொள்கைகளுக்கு ஆதரவாக மாற்றங்கள் செய்ததில் ஆச்சரியமில்லை. இதை அங்குள்ள அறிவியலாளர்கள் எதிர்கொள்வார்கள் என நம்புவோமாக.

  நண்பர் குடுகுடுப்பை சொல்வதைப்போல விமானத்திலும் அல்ல, குக்கிராமங்களிலும் கொரியர்கள் மனமாற்றம் செய்ய வந்துவிட்டார்கள்.

  ReplyDelete
 15. வாங்க சகோ கோவி கண்ணன்
  படைப்புவாதிகள் 6 நாள் படைப்பு, ஏழாம் நாள் ஓய்வு என [கையில் கிடைப்பவரை!!!]அடித்துக் கூறுகிறார்கள்.நம் சகோக்கள் நாளை காலம் என்று மாற்றிப் போட்டுத் தாக்கும் அழகே அழகு.

  பரிணாமம் ஒரு அறிவியல் கொள்கை,அறிவியல் சார்ந்து ,சான்றுகளின் அடிப்படையில் விமர்சிக்கப்படுவதை வரவேற்கிறோம்.ஆனால் இதுவரை நாமே பதில் சொல்ல முடியாத விமர்சனம் உலக அளவிலும் கண்டது இல்லை.

  பரிணாமத்தை எதிர்ப்பவர்கள் தங்களின் மாற்று அறிவியல் கருத்தை போதிப்பதை நான் ஆதரிக்கிறேன்.ஆனால் கடவுள் 6 நாள்(காலம்?) படைத்தார் என்பதை தவிர என்ன சொல்ல முடியும்?

  நன்றி
  _____________

  சகோ இராசின் வாங்க‌
  இயேசு என்பவர் புத்தகங்கள் சொல்ல்லும் கால் கட்டத்தை வாழ்ந்து அதில் உள்ள சம்பவனக்கள் போல் வாழ்ந்தார் என்பதற்கு சம கால ஆதாரங்கள் கிடைஅயாது.இபுத்தகங்கள் அனைத்தும் பிறகே எழுதப்பட்டன.மொழி பெயர்ப்பிலும் சித்து வேலை செய்து விடுவார்கள்.

  திரு முகமதுக்கும் இதே போல்தான் ,இவர் குறித்து ஆய்வுகள் இபோது அதிகம் நடக்கின்றன.அகழ்வாய்வுகளை மத்தியக் கிழக்கு நாடுகள் அனுமதிப்பது இல்லை.அனுமதித்தால் பல உண்மைகள் வெளிவரும்

  நன்றி
  _______________

  சகோ சுவனன்,

  வாங்க பாகிஸ்தானுக்கும் வாழ்த்து சேர்த்து சொல்லியதாக எடுத்துக் கொள்கிறேன்.பலுசிஸ்தானில் இருந்து பஞ்சாபிகளை வெளியேற்றி விட்டனர் அம்மாநிலத்தவர்.

  சரி அவர்களை விடுங்க.எப்படியாவது மாதம் ஒரு பரிணாம விமர்சன பதிவு கொண்டு வாருங்கள்.வந்தால்தான் நமக்கு எழுதவே ஆர்வம் வருகிறது.என்னை ஊக்குவிக்கும் சுவனன்& சகோக்களுக்கு நன்றி
  _______
  சகோ நரேன்
  நலமா நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள்.பால் யாங்கி சோதான் உலக‌ அசெம்ளி ஆஃப் காட் சர்ச்களின் தலைவர்.இவருடைய சர்சின் அருகேதன் கொரிய பாராளுமன்றமே இருக்கிறது .ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
  அப்புறம் அண்ணன் "கொரிய சோ"[சோ என்றாலே ஹி ஹி அங்கும் அப்புடி] அரசை கட்டுப் படுத்துகிறார்.
  நன்றி

  ReplyDelete
 16. //ஆனால் வெள்ளைக்காரர்களின் முன்னேற்றத்துக்கும் செல்வச்செழிப்புக்கும் அவர்கள் அறிவியலை துணைக்கொண்டதுதான் காரணம் என அறிவதில்லை. இந்த பரிணாமவாதிகள் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்துதான் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பதும் தெரிவதில்லை//

  shakirbinu சொன்னது அவ்வளவும் சிறந்த உண்மைகள்,

  ReplyDelete
 17. தென் கொரியாவில் கிறித்தவர்கள்தான் பெரும்பான்மையினரா ? புதிய தகவல்

  ReplyDelete
 18. கொரியர்களுடன் கடந்த ஒரு மாதமாக பழகும் வாய்ப்பு அமைந்துள்ளது. நிறைய கற்றுக் கொண்டு இருக்கேன்.

  ReplyDelete
 19. ராபின், கருப்பையா, சார்வாகன் தூண்ட
  பதில் யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே
  இங்கே
  http://isakoran.blog.com/2012/06/24/exodus/
  தேவப்ரியா சாலமன்

  ReplyDelete
 20. பரிணாமம் நிரூபிக்கப்படவில்லை என்பதையே திரும்பத்திரும்ப சொல்லி மனதை தேற்றிக் கொள்ளும் மதவாதிகளால் இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது. நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி.

  இனியவன்.

  ReplyDelete
 21. //பரிணாம் சான்றுகளை நீக்கியது அங்கு கிறித்தவ மத வளர்ச்சியையும்...//

  அடடா ...! அப்போ இஸ்லாமிய மத வளர்ச்சியில்லையா ...?

  //////சுவனப் பிரியன் said...
  சிறந்த சிந்தனையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் கொரிய மக்களை வாழ்த்தி வரவேற்போம்////

  ஆகவே கொரியர்களின் சிறந்த சிந்தனைப்படி நோக்கி அடியெடுத்து வைக்க, நண்பர் சுவனப்பிரியன் கிறித்துவத்தை நோக்கி அடியெடுத்து வைப்பார் என்று நம்புவோமாக.//

  i second it!!!!!!!!!!!

  ReplyDelete
 22. //ஆகவே கொரியர்களின் சிறந்த சிந்தனைப்படி நோக்கி அடியெடுத்து வைக்க, நண்பர் சுவனப்பிரியன் கிறித்துவத்தை நோக்கி அடியெடுத்து வைப்பார் என்று நம்புவோமாக//

  நாத்திகர்களை இஸ்லாத்தில் இணைப்பது சற்று சிரமமான காரியம். கிறித்தவராகவோ இந்துவாகவோ பவுத்தராகவோ உள்ள ஒரு ஆத்திகரை இஸ்லாத்தை ஏற்கச் செய்வது வெகு சுலபம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இனி நாங்களே தடுத்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது. அரசாங்கங்களே பயந்து கொண்டிருக்கிறது இந்த மத மாற்றங்களை நினைத்து. எனவே ஒரு இடத்தில் கிறித்தவத்தின் வளர்ச்சி என்பது மறைமுகமான இஸ்லாமிய வளர்ச்சி என்ற பொருள் கொள்ளலாம்.

  ReplyDelete
 23. //நாம் பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கை,பாடத்திட்டம் என்பது அரசியல் கொள்கை என்பதால் இது ஒரு பிரச்சினையே இல்லை என்பதை வலியுறுத்துகிறோம்.//

  அறிவியல் கொள்கை சார்ந்து நிறைய ஆய்வுகளும்,கட்டுரைகளும்,காணொளிகளும் காணக்கிடைக்கின்றன.பாடத்திட்டம் என்பது கருணாநிதி,ஜெயலலிதா மாதிரி அரசியல் கொள்கை.

  மனித குளோனிங் வரை நெருங்கி விட்ட கொரியாவின் கொள்கைகளையும் சேர்த்து ஏற்றுக்கொள்வார்களா கொரிய பாடத்திட்டத்திற்கே பட்டாசு கொளுத்தும் மதவாதிகள்?

  ReplyDelete
  Replies
  1. அருமை சகோ இராஜநடராஜன்
   நன்றி

   Delete
 24. //கொரியர்களின் சிறந்த சிந்தனைப்படி நோக்கி அடியெடுத்து வைக்க நண்பர் சுவனப்பிரியன் கிறித்துவத்தை நோக்கி அடியெடுத்து வைப்பார் என்று நம்புவோமாக.//

  ஈராக்கிலிருந்து அகதியாக வந்த அரபிகள் பலர் கிறித்துவத்துக்கு மாறிய போது நானும் வரவேற்றேன். காரணம் இஸ்லாமிய அரபிகள் பகுத்தறிவுவாதியாக சிந்தனைவாதிகளாக மாறுவது நடக்க தக்க விடயமல்ல. கிறித்துவத்துக்கு அவர்கள் மாறுவதன் மூலம் எல்லா மனிதர்களையும் அரபு அடிமைகளாக மாற்றியே தீர வேண்டும் என்கின்ற வெறிதனம் போய் மற்ற மனிதர்களையும் மதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் வருமே என்கின்ற அடிப்படையில்

  ReplyDelete
 25. சகோ குயிக்ஃபாக்ஸ்,

  வெள்ளைகாரர்களில் பெரும்பானமையான அறிவியலாளர்கள் கடந்த சில நூற்றாண்டுகளில் தோன்றி இருக்கிறார்கள்.அவர்கள் எதனையும் ஆவணப்படுத்துவதால்தான் தொடர்முயற்சியின் பலனால் அறிவியல் கண்டு பிடிப்புகள் நிகழ்ந்தன.நாம் இதனை செய்ய மறந்து விட்ட்டொம்.

  வெள்ளைக்காரர்களிலும் சிலர் மத புத்தக்த்தில் அறிவியல் என உளரவில்லையா?

  ஆனால் இபோதைய சூழலில் அனைத்து நாடுகளில்லும் அறிவியலாளர்கள் உருவாக முடியும்.அர்ப்பணிப்பு,ஈடுபாடு,உழைப்பு மட்டுமே தேவை.

  மதம் அறிவியல் தொடர்பற்றவை.அப்படி இருப்பதுதான் இரண்டுக்கும் நல்லது.
  நன்றி
  ______

  வாங்க சகோ தமிழானவன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  ________
  சகோ ஜோதிஜி வணக்கம்
  கொரியர்களுடன் பழகுகிறீர்களா ,ஜாக்கிரதை

  நன்றி
  ________
  வாங்க சகோ கருப்பையா
  கருத்துக்கு நன்றி
  _______
  வாங்க சகோ இனியவன்,

  நாம் பரிணாமம் பற்றிய எந்த விமர்சன‌த்திற்கும் பதில் விளக்கம் கொடுக்க தயாராகவே இருக்கிறோம்.அவர்களால் எவ்வள்வு முடியுமோ விமர்சிக்கட்டும்.நாமும் தயார்.

  உண்மையில் அறிவியல் சார்ந்த விமர்சனங்களை வரவேற்கிறோம்.

  நன்றி
  _________
  வாங்க தருமி அய்யா
  நம்ம சகோ சுவனப் பிரியனை விட்டு கிறித்தவ்த்தை ஒரு வழி பண்ணலாம் என பார்க்கிறீர்களா.ஏற்கெனவே இஸ்லாமை அவரும் ,பி.ஜேவும் விளக்கம் அளிக்கிறேன் என்று உண்மையெல்லாம் போட்டு உடைத்து விட்டார்கள்.

  அதற்காக அவர்களை பாராட்ட தமிழில் சொற்களே இல்லை.[அரபியில் இருக்கிறதா என அவர்களைத்தான் கேட்க வேண்டும்].

  விவாதத்தை அனுபவிக்கனும்.ஆராயக் கூடாது.

  நன்றி
  --------
  வாங்க சகோ சுவனன்,
  இஸ்லாம் பரவுபவது பற்ரி விவாதிக்க மக்கள் தொகை அதிகரிப்பு பதிவில் விவாதிக்க வேண்டும் பரிணாமம் பற்றிய பதிவில் அல்ல.

  உங்களுக்கு ஒரு செய்தி
  நம்ம் பாகிஸ்தான் பாடத்திட்டம் பற்றிய இனறைய செய்தி.
  Pak kids taught 'A' for Allah, 'B' for 'bandook
  http://www.ndtv.com/article/world/pak-kids-taught-a-for-allah-b-for-bandook-235405?pfrom=home-topstories

  நன்றி

  ReplyDelete
 26. வெள்ளைக்காரர்களிலும் சிலர் மத புத்தக்த்தில் அறிவியல் என உளரிகொட்டயிருக்காங்க சகோ. ஆனா சாதாரண வெள்ளைக்காரர்கள் பொதுவா அத கேலியாக தான் பார்க்கிறங்க. ஆனா இந்த அரபி கூட்டத்தை எடுத்தா மத புத்தகத்தில் அறிவியல் கண்டுபிடிப்பு என ஒன்று உளரினா மற்றவங்வெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு சொல்லபட்ட உண்மை உண்மை என்று கோரஸ் பாடுவாங்க.

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete