Monday, December 3, 2012

அடுத்த கிரக அறிவு மிக்க மனிதர்கள் பூமிக்கு வந்தார்களா?வணக்கம் நண்பர்களே,
பெரும்பானமை மதங்களில் மனிதனுக்கு மேம்பட்ட அறிவு மிக்க மனிதர்கள்( உயிரினம்) பூமிக்கு வந்து தகவல் பரிமாற்றம் செய்ததாக அவற்றின் மத புத்தகங்கள் கூறுகின்றன.

பரிணாமக் கொள்கையின் படி மனித நாகரிகம் என்பதே 20,000 ஆண்டுகளுக்குள் மட்டும் என்பதும்,அதற்கு முன் விலங்கோடு விலங்காக வாழ்ந்தான் என்பதை மதவாதிகளால் சீரணிக்க முடிவதில்லை.

எப்படியாவது மனிதன் தோன்றிய காலம் தொட்டு மிக நாகரிகமாக,அறிவோடு வாழ்ந்தான் என்பதையும்,மனிதன் ஒரு சிறப்பு படைப்பு என்பதைக் காட்ட முனைகிறார்கள்.

இந்த வகையில் ஒரு சதிக் கோட்பாடுத்தான் வெளிக் கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வது,பறக்கும் தட்டுகள் போன்ற கட்டுக் கதைகள். இதற்கு சான்றாக சில பழங்கால கட்டுமான சின்னங்களையும் காட்டி நம்பும் படி கதை சொல்வர்.இப்பதிவில் அப்படி சில கட்டுக் கதைகளை அறிவியல் துணை கொண்டு பொய் என நிரூபிக்கிறார்கள். பாருங்கள்!!!

இதில் ஒரு முக்கியமான புராதன சின்னம் ,புமாபுங்கு[pumapunku] எனப்படும் தென் அமெரிட்க்க பொலிவியாவில் உள்ள‌ இடம் ஆகும்.இங்கே உள்ள கட்டுமானங்கள் கிரானைட்டால்,வேற்றுக் கிரக வாசிகளால் கட்டப்பட்டது என கதை சொல்கிறார்கள். அது உண்மையா என காணொளி அலசுகிறது.


http://ancientaliensdebunked.com/references-and-transcripts/puma-punku/


எகிப்திய பிரமிடுகளைப் பற்றியும் அதன் மந்திர தந்திர சக்திகளைப் பற்றியும் பல கதைகள் உண்டு.அவற்றை இக்காணொளி அலசுகிறது.
http://ancientaliensdebunked.com/references-and-transcripts/the-pyramids/

பால்பேக் மர்ம மோசடி: கிழக்கு லெபனானில் அலெக்சாண்டரால் பொ.மு.ஆ 4ஆம் நூற்றாண்டில்  கட்டப்பட்ட புராதன கட்டமைப்பு உண்டு. அதன் கீழ் சுமார் மிகப் ப்ழமையான[9000 பொ.ஆ.மு] ஒரு கட்டமைப்பும் உண்டு.இது பாகால் [Baal] என்ப்படும் பழைய மத்திய கிழக்கு கடவுளின் கோயில் ஆகும்.இதில் விண்கலம் புறப்படும் அமைப்பு இருப்பதாக கதை கிளம்பியது. இதனை காணொளி அலசுகிறதுhttp://ancientaliensdebunked.com/references-and-transcripts/baalbek/

இன்கன் கட்டுமானம் என்ப்பரும் பெரு நாட்டில் உள்ளவற்றில் கல்லை உருக்கும் தொழில்நுடபத்தில் 1500 C.E கட்டப் பட்டதாக ஒரு புரளியை இக்காணொளி அலசுகிறது.பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பாலீநீசியன் தீவுகளில் ஒன்றான‌ Easter தீவில் உள்ள சில பெரிய சிலைகள் வெளிக்கிரக வாசிகளால் கட்டப்படதாக ஒரு புரளியை இக்காணொளி அலசுகிறது.


பொறுமையாக காணொளி பார்த்து கருத்திட வேண்டுகிறேன். இது இல்லாமல் இன்னும் பல கட்டுக் கதைகளையும் அறிவியல் சான்றுகளின் மூலம் த்கர்த்து எறிவதை அறியுங்கள்.

இன்னும் கூட பல‌ வெளிக்கிரகவாசி கட்டுக் கதைகள் சான்றில்லாத புரளிகளே. ப்போதைய  அறிவியல் சான்றுகளின் படி.

1. வேற்று கிரக வாசிகள் பூமியுடன் இதுவரை  எந்த தொடர்பும் கொள்ளவில்லை.

2. பூமியில் இருந்தும் யாரும் விண்கலத்தில் வேற்றுக் கிரகமும் செல்லவில்லை!!

ஆகவே மாயன் நாட்காட்டி போன்ற கட்டுக்கதைகளை  நம்பாமல் ,அனைவரும் மகிழ்வாய் வாழ, மனித குலத்தின் சிக்கல்களை தீர்க்க ஆவண செய்வோம்!!!

நன்றி 

33 comments:

 1. வணக்கம் சகோ.

  இப்பொழுதுதான் தங்களின் இப்பதிவுக்கு முன்பு கேள்வியும் நானே பதிலும் நானே என்ற பதிவில் மாயன் தமிழர்களா என்ற தலைப்பின் ஒரு பகுதியைத் தான் படித்துக் கொண்டிருந்தேன்,அதற்குள் தாங்கள் பதிவிட்டுவிட்டீர்கள் நன்றி....அப்பதிவில் பல அதிசயத்தக்க படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன,அவைகள் உண்மையா அல்லது புனையப்பட்டதா? என்று தெரியவில்லை,இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை படித்ததும் அலசுவோம்..

  ReplyDelete
  Replies
  1. சகோ இனியவன் வாங்க,
   இந்த வெளிக்கிரக வாசி விண்கலத்தில் வந்தான், பூமியில் இருந்தே அன்றே ஆகாயம் சென்றான் என்ற இரண்டுக்குமே இதுவரை சான்றுகள் இல்லை.இவை சதிக் கோட்பாடு மட்டுமே.

   http://en.wikipedia.org/wiki/Ancient_astronauts

   மாயன் விவரத்தில் கூட ,அதே அளவு அறிவியல் முன்னேற்றம் சம் காலத்தில் நம் நாட்டிலும் இருந்து இருக்கிறது.ஆர்யபட்டா,பாஸ்கரா ஆகியோரின் புத்தகங்களில் கணிதம்,அண்டவியல் போன்றவை நன்கு அலசப்பட்டு உள்ளதும். அதில் பல் இப்போது உறுதிப்ப்டுத்தப் பட்டது.

   http://en.wikipedia.org/wiki/Aryabhata

   http://en.wikipedia.org/wiki/Bh%C4%81skara_II
   எனினும் உண்மையை மிகைப்படுத்திக் கூறுவது எவ்வகையிலும் பயன் அளிக்காது.
   ஒரு உண்மை என்பது சான்றுகளால்,பரிசோதிக்கும் வகையில் மட்டுமே ஏற்கப்பட வேண்டும்.

   மனித அறிவுக்கு எட்டா விடயம் என் சதிக் கோட்பாட்டாளர்கள் வைக்கும் சான்றுகள் ,ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் நிற்காது. அவர்கள் ஒரு விடயம் பொய் ஆனால் அடுத்த விடயத்திற்கு தாவி விடுவர்.

   நன்றி!!!

   Delete
 2. அடடே, உங்களுக்கு உண்மையைக் கூட எழுத வரும் போலிருக்கே!! ஆனா ஒன்னு Charcoal Wagon, உம்மைப் போல variety ஆக எழுதுபவரைப் பார்த்ததேயில்லை. எந்த இரண்டு பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமப் பாத்துக்கிறீங்க, அதுதான் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நீங்க பதிவை categorize பண்ணனும்னா எத்தனை பதிவு இருக்கோ அத்தனை பிரிவு போடணும். ஹா...........ஹா..........ஹா.......

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ தாசு,

   அப்படியா ,வெரைட்டி வேண்டும் என எழுதுவது இல்லை. பெரும்பாலும் இறைமறுப்பு, அறிவியல்,இயற்கை மேம்பாடு என்ற விடயங்கள் சார்ந்து மட்டுமே இத்தளத்தில் எழுத வேண்டும் என ஆசை.

   எனினும் பதிவுலக்,நிகழ்கால பரபரப்புகளை மீள் பார்வை செய்வதும் தவிர்க்க முடிவது இல்லை.

   பரிணாமத்திலும் ஒவ்வொரு உயிரினத்திலும் பலவகைகள் சீரற்ற வகையில்(ரேன்டமாக) தோன்றுவதும் அதில் சூழலுக்கு பொருந்துபவை நீடித்து வாழ்வதும்தானே இயற்கைத் தேர்வு.

   பலவகைப் பதிவுகளில் சில நன்கு பலரால் படிக்கப்படுவதும் இதன் நீட்சிதானே!!!


   நன்றி

   Delete
 3. \\பரிணாமக் கொள்கையின் படி மனித நாகரிகம் என்பதே 20,000 ஆண்டுகளுக்குள் மட்டும் என்பதும்,அதற்கு முன் விலங்கோடு விலங்காக வாழ்ந்தான் என்பதை மதவாதிகளால் சீரணிக்க முடிவதில்லை.\\

  என்னைக்கு நீங்க இதன்படி, அதன்படி என்று சொல்லிட்டீங்களோ, அப்பவே அது relative truth ஆயிடுச்சு. இப்போ இ .பி .கோ. இன்னின்ன செக்ஷன் படி நீ குற்றவாளி என்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அவன் Absolute sense-ல் குற்றவாளியா இல்லையா என்று தெரியாது, அந்த சட்டத்தால் குற்றவாளி என்று அர்த்தம். நாகரீகம் 20,000 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்தது என்பதை ஒரு வரலாற்று நிகழ்வாகச் சொல்லாமல், இந்த தியரிப் படி என்று சொல்லும் போதே, அது புருடா Absolute Truth அல்ல, வெறும் ஊகம் என்றாகிவிட்டது..

  சிந்திக்கவே மாட்டீர்களா?

  ஹா..........ஹா........ஹா.......ஹா........ஹா.......

  ReplyDelete
  Replies
  1. சகோ தாசு,

   நீங்கள் குறிப்பிட்ட வாக்கியம் இரு பகுதிகளைக் கொண்டது.
   1. மனிதனின்நாகரிக வரலாறு 20,000 ஆண்டுகள் மட்டுமே.

   2. (பல)மதவாதிகள் இதனை மறுக்க முயல்கின்றனர்.

   இதில் முதல் விடயம் அறிவியலின் பெரும்பானமை தொல் மனிதவியல் [Paleoanthropology]ஆய்வாளர்களின் கருத்து.

   http://en.wikipedia.org/wiki/Paleoanthropology
   http://www.sciencemag.org/content/282/5393/1446.full
   The latest evidence suggests, for example, that hunter-gatherers in the Near East first cultivated rye fields as early as 13,000 years ago.* But for centuries thereafter, they continued to hunt wild game and gather an ever-decreasing range of wild plants, only becoming full-blown farmers living in populous villages by some 8500 B.C. And in some cases, villages appear long before intensive agriculture (see p. 1442). “The transition from hunters and gatherers to agriculturalists is not a brief sort of thing,” says Bruce Smith, an expert on agricultural origins at the Smithsonian Institution's National Museum of Natural History in Washington, D.C. “It's a long developmental process”—and one that did not necessarily go hand in hand with the emergence of settlements.

   இரண்டாம் விடயம் குறைந்த பட்சம் நம் தமிழ் பதிவுலக ஆத்திகர்களின் கருத்தே.


   நன்றி

   Delete
 4. நீங்களும் நானும் இருக்கும் போது, வந்தார்களா... என்ற கேள்வி எப்படி வந்தது?

  ReplyDelete
  Replies
  1. சகோ இராவணன் வெளி சொல்லி விடாதீர்கள் பரம இரகசியம். ஹா ஹா ஹ‌
   நன்றி!!!

   Delete
 5. சகோ. சார்வாகன்,

  அருமையான பதிவு.

  இப்ரஹிம், ஜெயதேவ் தாஸ் போன்றவர்கள் உங்களுக்கு நன்றாகவே கம்பெனி தருகிறார்கள் :)))

  தஞ்சை பெரிய கோயிலை எப்படி கட்டினோம் என்று நமக்கு சொல்லித்தர்ப்படவில்லை. ஆனால் ஒரு வெள்ளைக்காரன் வந்து ஆவணப்படம் எடுக்கும்வரை எப்படி என்று பரவலாக தெரியாது.

  மனித ஆற்றல் அதிசியதக்கது. நாம் நமது முன்னோர்கள் ஒன்றுமறியாதவர்கள் என்று நினைப்பதுதான் தவறு. இருக்கின்றவற்றை வைத்து அந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். சிந்து சமவெளி நாகரிகம், நகரமைப்பு கொண்டது என்று புர்ந்தாலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நமது மக்கள் நம்மைப் போலத்தான் இருந்தார்கள் என தெரியவருகிறது.

  இப்போது டிஸ்கவரி, ஹிஸ்டரி தொலைக்காட்சிகள் எல்லாம் தமிழ் பேசுவதால், அதை மக்கள் கூர்ந்து கவனித்தாலே அனைத்தும் புரிந்துவிடும். மானிடம் நேயதான் அனைத்திலும் ஓடும் சாரம்சம்.

  ancientaliensdebunked தளத்தை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாஙக சகோ நரென்,
   பெரும்பாலும் இந்த சதிக் கோட்பாடுகளின் சான்றுகள் பரிசோதனைக்கு நிற்காது. ஆனால் பரப்புரையாளர்கள் குறுகிய காலத்தில் புகழ் அடைவதையே விரும்புவர். தவறு என சில ஆண்டுகளில் நிரூபிக்கப்படு போது ,வேறு சதிக் கோட்பாடு பிரபலம் ஆகும்.

   யார் சொல்வதையும் உண்மையா,சாத்தியமா என தேடி,பரிசோதித்து பார்க்க ஆரம்பித்தால் மட்டுமே உருப்பட முடியும்!!
   நன்றி!!

   Delete
 6. சகோ சார்வாகன்.

  நம்ம மரவெட்டி மரஒட்டி அருள் படையாச்சி பதிவு ஒன்று போட்டிருக்கிறார், முடிந்தால் அங்கு மறுமொழியிடவும். கடும் நேரமின்மையால் நம்மால் முடியவில்லை

  நன்றி

  ReplyDelete
  Replies

  1. சகோ நரேன்,
   அவர் நமது பின்னூட்டங்களை வெளியிட மறுக்கிறார். அருளுக்கு மரபியல் ஆய்வுகள் பதில் சொல்லும்.
   ஒரு முதுமொழி உண்டு

   " பள்ளன் முத்தினால் படையாச்சி ". அதாவது இருவரும் நெருங்கிய இனத்தார்.
   அதை மரபியல் ஆய்வுகளும் சொல்கின்றன.

   http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf

   ***
   read this
   http://kandiyar.hpage.co.in/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_67310087.html
   தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சியின்போது பண்டைய வேளாண் மரபினரிடமிருந்து நில உடைமையை பறி முதல் செய்து,அரசுடைமையாக்கி பாளையப்பட்டுக்களுக்கும்,பார்ப்பனருக்கும்,அரியநாயகம் அழைத்து வந்து குடியேற்றிய அவனது உறவினருக்கும் வழங்கப்பட்டது.உழவர்கள் கொத்தடிமை ஆக்கப்பட்டனர்.இவரது பதினெண்குடியைச் சார்ந்த பஞ்சசாதி என வழங்கப்படும் தச்சர்,கொல்லர்,கற்கொல்லர்,தட்டார்,கன்னார் வகுப்பினர் பெருந்தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டனர்.இவர்கள் ஐவரும் ஒன்று சேரக்கூடாது என்று நாயக்கர் தடை விதித்ததை ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.இதனிடையே புதிய குலங்கள் பல தோன்றி தமிழகத்தில் சாதிக்குழப்பம் ஏற்படலானது.

   ஒவ்வொரு சாதியினரும் தம்மை வலங்கை,இடங்கை எனப் பிரித்துக்கொண்டு,தமது சாதிதான் உயர்ந்தது எனச்சொல்லி கிளர்ச்சி செய்து,தனது சாதிக்கு கொடியும்,சிறப்பும் அரசிடம் வேண்டிப் பெற்று வந்திருக்கின்றனர்.

   மேலும் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும்,மற்ற இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி,தற்கால வேளாளர் என்போர் ஏரெழுபது,திருக்கைவளக்கம்.வேளாளர்புராணம்,சதகங்கள் போன்ற நூல்களை எழுதினர்.

   பள்ளி வகுப்பினர் தம்மை படையாச்சி எனவும்,வன்னியகுல சத்திரியர் எனவும் கூற முற்பட்டனர்.தம் கூற்றுக்கு ஆதரவாக 'சிலைஎழுபது' என்ற நூலை தோற்றுவித்தனர்.

   ஈழவர் என்றும்,பின்னர் சாணார் என்றும்,தற்போது நாடார் என்றும் அழைக்கப்படும் மக்கள் 'வலங்கைமாலை' 'சாணார் குலமரபு காத்தவர் சாணார் விதர்ப்ப வினாவிடை' 'நாடாரும்,நாயக்கர் மன்னர்களும்' போன்ற நூல்களையும் எழுதினர்.

   செங்குந்தர் என்று தம்மை உயர்வாகக் கூறி வரும் கைக்கோள நெசவாளர் 'ஈட்டிஎழுபது' என்ற நூலை எழுதினர்.

   மறவர் 'வான் எழுபது' என்ற நூலையும்,சேனைத்தலைவர் சேனைகுலத்தார் பட்டயம்,சேனைத் தலைவர் மரபு காத்தல்' என்ற நூலையும் எழுதினர்.

   இவ்வாறே வைசிய புராணம்,கருணீகர் புராணம் என்ற நூல்களும் தோன்றின.

   திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியின் போது வெளியிடப்பட்ட குறிப்பில் பள்ளன்(பாண்டியன்) என்று உள்ளது.ஆனால் இது பள்ளர் இனத்தவரின் ஒரு பிரிவையே குறிக்கிறது.

   தெய்வேந்திர பள்ளன், சோழிய பள்ளன், பாண்டிய பள்ளன், கொங்கு பள்ளன் போன்ற பிரிவுகள் பள்ளர் இனத்தில் உண்டு.அதனால் அக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நபர் பாண்டிய பள்ளர் பிரிவைச் சார்ந்தவர் என்பது தெளிவாகிறது.இது அவர் பாண்டியர் வம்சத்தவர் என்று கூறுவதாகக் கருத இயலாது.
   *******
   ஆகவே சாதி பெயரும், மேல் ,கீழ் நிலை என்பதும் அடிக்கடி மாறி இருகின்றன என்பதும் அறிய முடியும். சாதி குறித்த ஆய்வுகள் மரபியல் சார்ந்து வர வேண்டும்.

   நன்றி!!

   Delete
 7. மிகவும் நல்ல பதிவு. ஒவ்வொரு சதிக் கோட்பாடும் உடைக்கப்பட்டு விட்டதே. ஆனால் கூட சதியினை நம்புவோர் உளரே பலர். மற்றக் கிரகங்களில் உயிர் இருக்கக் கூடும், ஆனால் அவை வந்தது என்பதற்கான ஆதாரம் ஒன்றுமில்லை. ஆகையால் ஆதாரம் கிடைக்கும் வரை இருக்கலாம் என்றே நம்புகின்றேன். மற்றபடி ஏனையக் கட்டுகதைகள் நம்பும்படி இல்லை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ வாங்க,
   முதல் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!!!

   Delete
 8. My comment on
  http://citukuruvi.blogspot.com/2012/12/blog-post.html

  வணக்கம் நண்பரே,

  //உலகத்தில் எந்த மூலையிலும் எந்தவொரு நிகழ்விலும் சியோனிஸ்டுகளின் பங்களிப்பு இல்லாமலில்லை. அவர்களின் பங்கினை எந்தவொரு அடையாளத்திலாவது விட்டுச் செல்லாமலுமில்லை. இவர்கள் தங்கள் மதத்தில் தீவிர போக்குடையவர்களாகவும் காணப்படுகிறார்கள் என்பதற்கு சில ஆதாரங்களை இந்தப் பதிவிலும் தருகிறேன்.//

  இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. யூதர்களின் மொத்த மக்கள் தொகை வெறும் 2 கோடிக்கும் குறைவு.உலக மக்கள் தொகையில் வெறும் 0.2% மட்டுமே.

  //இந்த 666 குறிப்பிடுவது என்ன என்று பார்க்கும் போது இது பைபிளில் சொல்லப்படும் ஒரு வசனத்தினை மையமாகக் கொண்டுள்ளமை தெரியவருகிறது. இதுதான் அந்த வசனம்...//

  அப்படியா மனுதர்மத்தில் எழுதி இருப்பதை உண்மை என ஏற்றால் இதையும் ஏற்கலாம். யாரோ எதற்கோ எழுதி வைத்ததை ந்ம்பிக்கையோடு மத புத்கத்தில் சேர்த்து சாமி கும்பிடுவதில் ஆட்சேனை இல்லை. அதில் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை என்பது சரியல்ல.பைபிளின் படி உலகம் தோன்றி 7000 வருடம்தான் ஆகிறது.இது சரி எனில் 666 ஆம் சரி!!
  **
  //ஆனால் இன்றைய அறிவியல் உலகம் குறித்த ஒரு தினத்தினை (21.12.2012) பிரதானமாகக் காட்டி அன்றுடன் உலகம் அழியும் என்று திடமாகச் சொல்கின்றது.//
  புல்லரிக்க வைக்கிறீர்கள் அய்யா!!.எந்த அறிவியல் மேதை, கழகம் கூறியது?சுட்டி தரவும்.
  ***
  இப்ப நான் ஒரு சுட்டி தருகிறேன். அதிலும் இந்த 666 பற்றி இஸ்லாம் என சதிக் கோட்பாடு சொல்கிறார்கள். இதைப் பற்றி எழுதுவீர்களா!!!
  http://waitingforjesus.com/whois666.html
  http://www.youtube.com/watch?v=iku8YzLFPpE
  எதை வேண்டுமானாலும் எழுதிக் குழப்பலாம் என்பதைக் காட்டவே கூறுகிறேன்.

  ஹிட்லர் யூதர்களை ஏன் கொன்றார் என்றால், இராஜபக்சே ஏன் தமிழர்களைக் கொன்றான், குஜராத்தில் முஸ்லிம்கள் ஏன் கொல்லப்பட்டார் என்வும் கேட்கலாம்.

  இனப்படுகொலைகளை நியாயப்படுத்துவது மனித நேயம் அல்ல!!!
  பொது தளத்தில் வெளியிடும் போது ஒரு இனத்தை விமர்சிக்கும் கருத்துகளை தவிர்ப்பது நலம்.
  பாலஸ்தீன இஸ்ரேல் குறித்து கொஞ்சமாவது படியுங்கள். வரலாறு,அறிவியல் சார்ந்து எழுதும் போது மூலச்சுட்டிகள் கொடுப்பதே சரி!!
  பின்னூட்டம் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.
  அவசியம் எனில் மறுப்பு பதிவு வெளியிடுவேன்.

  நன்றி
  **********

  ReplyDelete
 9. ///ஹிட்லர் யூதர்களை ஏன் கொன்றார் என்றால், இராஜபக்சே ஏன் தமிழர்களைக் கொன்றான், குஜராத்தில் முஸ்லிம்கள் ஏன் கொல்லப்பட்டார் என்வும் கேட்கலாம்.///

  ராஜபக்சே ,தமிழீழம் கேட்டதால் கொன்றான்.
  குஜராத்தில் தேர்தலில் வெல்ல ஹிந்து ரயில்பயணிகளைக் கொன்று அதை வழக்கம் போலவே முஸ்லிம்கள் தலையில் போட்டு பின்னர் முஸ்லிம்களைக் கொன்றனர் .

  ஹிட்லர் ஏன் யூதர்களைக் கொன்றான் ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ மூமின் இப்பூ,

   பிற தளங்களில் இடப்படும் பினூட்டம் சில சமயம் அவர்கள் வெளியிடாமல் போவதால் நம் பதிவில் ஒரு பிரதி இடுகிறோம். ஆகவே அவர்களின் பதிவுக்கு பதில். உங்களுக்கு அல்ல. எனினும் பரவாயில்லை.
   //ராஜபக்சே ,தமிழீழம் கேட்டதால் கொன்றான்.
   குஜராத்தில் தேர்தலில் வெல்ல ஹிந்து ரயில்பயணிகளைக் கொன்று அதை வழக்கம் போலவே முஸ்லிம்கள் தலையில் போட்டு பின்னர் முஸ்லிம்களைக் கொன்றனர் .

   ஹிட்லர் ஏன் யூதர்களைக் கொன்றான் ?//

   அப்படியே இஸ்லாமின் கொள்கை விளக்கத்தை நபி(சல்) அவர்களின் வழியை அருமையாக எடுத்து சொல்கிறீர்கள்.

   ஹிடல்ருக்கு இஸ்லாம் மிகவும் பிடிக்கும்!!
   ["The only religion I respect is Islam. The only prophet I admire is the Prophet Muhammad." (Hitler, quoted by Ahmed Huber; Kevin Coogan, "The mysterious Achmed Huber: Friend to Hitler

   Adolf Hitler on Islam and the Muslims

   abridged from an essay by Sean “Suhaib” Jobst
   24 April 2006 ]

   இன்றும் சில மூமின்கள் ஹிட்லரை போற்றுவதும், அவன் செய்த இனப்படுகொலைகளை நியாயப் படுத்துவதும் உண்டு. கீழே உள்ள சுட்டி பாருங்கள்.
   http://thebodyoftruth.wordpress.com/2012/09/20/uk-pakistani-muslims-openly-express-support-for-adolf-hitler-and-the-holocaust/

   இரண்டாம் உலக்ப் போரில் ஹிட்லரின் கூட்டாளிகள் அரபுக்களே!!!


   வாழ்க வளமுடன்!!!
   நன்றி

   Thank you

   Delete
 10. ///தெய்வேந்திர பள்ளன், சோழிய பள்ளன், பாண்டிய பள்ளன், கொங்கு பள்ளன் போன்ற பிரிவுகள் பள்ளர் இனத்தில் உண்டு.அதனால் அக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நபர் பாண்டிய பள்ளர் பிரிவைச் சார்ந்தவர் என்பது தெளிவாகிறது.இது அவர் பாண்டியர் வம்சத்தவர் என்று கூறுவதாகக் கருத இயலாது. ////

  தென் கேரளாவில் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களை பாண்டிகாரர்கள் என்று இப்போதும் கூறுகிறார்கள் .அங்கெ பள்ளன் என்பதில் அடைப்புக்குள் பாண்டியன் என்று குறிப்பிட்டிருப்பது பாண்டி நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியப்படுத்தவே ..அதனால் சோழிய பல்லன் கொங்குபள்ளன் என்று இருந்தார்கள் அர்த்தம் அல்ல. தேவேந்திரபள்ளன் என்று தனியாக இல்லை . பள்ளர்களே தேவேந்திரர்கள் .
  பள்ளர் என்று தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்டங்களில் மட்டுமே கூறுவார்கள்

  ReplyDelete
 11. 2 லட்ச ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த படிமங்கள் மனிதன் சிம்பன்சி போலவே இருந்தான் என்று சான்றுகள் அடிப்படையில் சொல்லுகிறீர்கள்.நீதி கட்சியலிருந்து தோன்றிய திக திமுகஅதிமுக வெல்லாம் பரிணாமம் பெற்று மாறிவிட்டன.நீதி கட்சி அழிந்துவிட்டது.ஆனால் சிம்பன்சி இன்னும் ஏன் இருக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. சிம்பன்சி இன்னும் ஏன் இருக்கிறது?

   http://sandwalk.blogspot.com/2012/10/why-are-chimps-still-chimps.html

   If humans evolved from chimps, why are there still chimps? The two major misconceptions this question reflects are that evolution is (1) always linear and (2) innately progressive. The common depiction of evolution as a linear progression throughout which ape-like creatures become more like modern humans is a gross simplification (see Gould, 1989, for further discussion of the iconography). Along these lines, we encourage educators to find images of human and ape family trees in which the human–chimp common ancestor is depicted as an illustration, rather than those that use photographs of chimps to represent this common ancestor – reinforcing the very misconception we are trying to avoid. As we discussed, much of evolution results in a pattern known as cladogenesis; this involves processes that have given rise to the tree-like pattern of the diversity of life. Moreover, evolution does not necessarily equate to progress, as change is not always progressive (Ruse, 1996). It is incorrect to speak of living organisms as more (or less) evolved than other living organisms. Chimps are just as evolved as humans. The lineages leading to chimps and humans split from one another some 6 million years ago; since then, each has taken its own path.

   Delete
 12. நல்ல முயற்சி சார்வாகன் ,
  காணொளி பார்க்க வசதியின்மையால் அதை பார்க்கவில்லை.
  நம்பிக்கை எதுவாகினும் உண்மை மட்டுமே வெல்ல வேண்டும். சதியை உடைக்க வேண்டும்.
  எனக்கு ஒரு சந்தேகம். பூமியைத்தவிர ஏழு கோள்கள் இருந்ததது என்றும் அதன் நிறம்,சுழற்சி,அவை குறிக்கும் தனிமங்கள் மேலும் பலவற்றை எவ்வாறு நமது முன்னோர்கள் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே கண்டுபிடித்திருப்பார்கள் என விளக்க முடியுமா?
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. சகோ புரட்சிமணி,
   //நம்பிக்கை எதுவாகினும் உண்மை மட்டுமே வெல்ல வேண்டும். சதியை உடைக்க வேண்டும்.//
   ஆம் சகோ!!!
   எந்த ஒரு செய்தியும் பரிசோதனையை தாங்கி நின்றால் மட்டுமே உண்மை.ஆகவே எதையும் மக்கள் பரிசோதித்து பார்த்தாலே பல் சமூக,தனிப்பட்ட சிக்க்லில் இருந்து விடுபட முடியும்.
   அந்தவகையில் இதுவரை வேற்றுக் கிரக வாசிகள் பூமிக்கு வந்து போனதாகவோ, நம்பூமியில் இருந்து அங்கே சென்றதாகவோ சான்றுகள் இல்லை!!!!.

   இந்த மாயன்,பிரமிடுகள் என கிளம்பும் செய்திகள் சதிக் கோட்பாடு மட்டுமே!!!
   ***
   //எனக்கு ஒரு சந்தேகம். பூமியைத்தவிர ஏழு கோள்கள் இருந்ததது என்றும் அதன் நிறம்,சுழற்சி,அவை குறிக்கும் தனிமங்கள் மேலும் பலவற்றை எவ்வாறு நமது முன்னோர்கள் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே கண்டுபிடித்திருப்பார்கள் என விளக்க முடியுமா?//
   நல்ல கேள்வி. நம் முன்னோர்கள் புவி மையக் கோட்பாடு கொண்ட கோள்களின் இயக்கம் கண்டுபிடிக்கும் சூத்திரம் கண்டறிந்து இருந்தார்கள்.இது கிரேக்க அறிஞர் டாலமியின் கொள்கை போன்றது.

   சோதிடத்தில் இம்முறையே இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. இதுவும் சரியாக கோள்களின் இயக்கம் கணிக்கும். எப்படி எனில் ஒரு சான்றுக்கு பல் விள்க்கம் சாத்தியம், ஆனால் சூரிய குடும்பம் தாண்டி சென்றால் மட்டுமே இம்முறை தவறு ஆகும்.இல்லை எனில் போதுமானது!!!

   http://en.wikipedia.org/wiki/Indian_astronomy

   எனினும் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது நல்ல கேள்வி. சான்றுகள் இல்லாமல் யாரும் விளக்க முடியாது.கொஞ்சம் தேடி ஒரு பதிவு இடுகிறேன்.

   நன்றி!!!

   Delete
  2. நல்ல கேள்வி . ஒரு வேலை இப்படி இருக்கலாம் . பூமி உருண்டை என்று கிரேக்கர்கள் முன்னமே கண்டு கொண்டார்கள் .
   அடிவானத்தில் கப்பல் மறைவதை வைத்து துருவ நச்சதிரத்தின் கோணத்தை வைத்து அதை எளிதில் கண்டு கொள்ளலாம் . அது மட்டும் இல்லாமல் வானத்தை ஆராய்வது மனிதர்களுக்கு எப்போது கிளர்ச்சியூட்டும் ஒரு செயலாகவே இருந்துள்ளது . வால் நச்சதிரம் வந்தால் தலைவர்கள் இறப்பார்கள் என்ற நம்பிக்கை .. அதனால் மனிதர்கள் எப்போதும் வானத்தை கூர்ந்து கவனிக்க தவறியது இல்லை .அது மட்டும் காரணம் அல்ல விவசாயம் கண்டு பிடிக்க பட்ட பின்னர் அப்போது அவர்கள் வசம் இருந்த ஒரே காலண்டர் வானம் மட்டுமே ..
   கடலில் திசை காட்டவும் மாறும் பருவகாலங்களை புரிந்து கொள்ளவும் வானத்தையும் அதில் உள்ள நச்சத்திரத்தையும் மட்டுமே நம்பி இருந்தார்கள் ......

   சரி அப்படி இருக்கும் போது அதில் உள்ள கிரகங்களை எப்படி பிரித்து அறிவது .?
   முடியும் தொடர்ந்து வானத்தை கவனித்தவர்கள் நச்சத்திரங்கள் நிலையாக ஒரே இடத்தில் இருப்பதி புரிந்து கொண்டார்கள் (அது வெகு தூரத்தில் இருப்பதால் அவ்வாறு தெரியும் ) ஆனால் சில நச்சத்திரங்கள் அவ்வாறு இல்லாமல் இடம் மாறுவதை கண்டவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள் இவைகள் நச்சத்திரங்கள் அல்ல கிரகங்கள் என்று தொடர்ந்து கவனித்தால் அவற்றின் நகர்வில் உள்ள கால ஒழுங்கை வைத்து இவைகள் பூமியை குறிப்பிட்ட கால அளவுகளில் சுற்றி வருகிறது என்று கணக்கிட்டார்கள் .( அது கூட தவறுதான் என்று இப்போது நம் எல்லாருக்கும் தெரியும் ) சூரியனையும் சந்திரனையும் ஒரு கிரகமாக நினைத்து அவற்றையும் பூமியை சுற்றி வர விட்டு விட்டார்கள் .
   பூமியில் நடக்கும் எந்த செயலுக்கும் வானத்தில் உள்ள நச்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளது என்று பண்டைய மனிதன் நம்பினான் அதனால் அதற்க்கு முக்கியத்துவம் குடுத்து அதை ஆராய்ந்தான் .

   Delete
 13. http://en.wikipedia.org/wiki/Dogon_people

  ReplyDelete
 14. இப்ராஹிம் நானா,
  //2 லட்ச ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த படிமங்கள் மனிதன் சிம்பன்சி போலவே இருந்தான் என்று சான்றுகள் அடிப்படையில் சொல்லுகிறீர்கள்.நீதி கட்சியலிருந்து தோன்றிய திக திமுகஅதிமுக வெல்லாம் பரிணாமம் பெற்று மாறிவிட்டன.நீதி கட்சி அழிந்துவிட்டது.ஆனால் சிம்பன்சி இன்னும் ஏன் இருக்கிறது?//

  ரொம்ப சரி. போட்டு தாக்குங்க நானா.

  நீதிக்கட்சி அழிஞ்சிரிச்சி.
  ஆனா, திமுக அதிமுக நீதிக்கட்சியிலிருந்தும் வருது. திகவிலிருந்தும் கொஞ்சம் வருது. திகவிலிருந்து திமுக வந்தது. திமுகவிலிருந்து அதிமுக வந்தது. திகவும் இருக்கு. அதிமுகவும் இருக்கு. நீதிகட்சி போனமாரி சிம்பன்ஸி, மனுசனுக்கு முந்திய இனம் காலின்னு காபிருங்க சொல்வாங்க.. நம்பாதீங்க.

  அது கெடக்குது. இப்ப நம்ம இஸ்லாத்தையே பாத்தீஹண்ணா, காககககே உருவாக்குன இஸ்லாம் ஒன்னு. அதிலேர்ந்து சுன்னி ஷியான்னு ரெண்டு பிரிஞ்சிச்சி. ஷியாவிலேர்ந்து இன்னும் பன்னிரண்டு பதிமூனு வந்திச்சி. அதில முன்னாடி இருந்தது ரெண்டு காலி.
  ஆனா ஒரிஜினல் இஸ்லாத்து இப்ப இருக்கா? நம்ம ஏ சி சண்முகம் புதிய நீதிகட்சி ஒன்று ஆரம்பிச்சி, பழைய நீதிகட்சிக்கு உசிர் கொடுக்க பாக்குறார். (நம்ம பிஜே இதுதான் ஒரிஜினல் இஸ்லாத்துன்னு சொல்றமாரி) ஆகற வேலையா?

  ReplyDelete
  Replies
  1. பகடுவுக்கு என்னவோ ஆயிட்டுபோல

   Delete
 15. My comment on
  http://puratchithamizan.blogspot.com/
  வணக்கம் அய்யா!!

  இக்காலத்திலும் இப்படி ஒருவர் பொதுதளத்தில் கருத்து தெர்விக்க முடியும் என்பது நமக்கு வியப்பாக இருக்கிறது.

  எந்த மனிதனும் இன்னொருவரை விட பிறப்பால் எந்த வகையிலும் உயர்ந்த்வன் அல்ல.
  // குறிப்பா தலித்துக்கள் தங்கள் பெண்களை திருமணம் செய்துகொல்வதை எந்த சாதியினரும் விரும்புவதில்லை ஏன் தெறியுமா? எங்கள் வீட்டுப் பெண்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாலும் அதர்க்கு பதிலாக அந்த கணவனை ரத்தம் சிந்த வைத்துவிடுவார்கள் இதே தலித் இனத்தில் உள்ள ஒருவனை எதுவும் கேட்க்கமுடியாது மீறிகேட்டால் அவன் மீது என் சாதிபெயரை சொல்லிஅழைத்தான் என்று வழக்கு தொடர்ந்து விடுவார்கள்.//


  இது உங்களின் தனிப்பட்ட கருத்தாக ,உங்களின் குடும்பத்தில் கடைப்பிடிக்கலாம். அதிலும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு செல்லாது.

  உங்கள் சாதியைக் கூட வெளியில் பெருமையாக் சொல்ல முடியாது நண்பரே,ஆண்ட சாதிகள் என்று சொல்பவர்கள் கூட இட ஒதுக்கீடு வேண்டாம் என சொல்வது இல்லை!!

  ஆகவே தலித்தை திருமணம் செய்தால் மட்டும்வேறு சாதிப் பெண் கண்ணீர் சிந்துவாள் என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்லவர்,கெட்டவர் எல்லா சாதி மதத்திலும் உண்டு.


  ஆகவே இப்பதிவில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களுக்கும் கடும் கண்டனம்.

  நீங்கள் ஒரு 50 வருடம் முன்னால் பிறந்து இருக்க்லாம்.இப்போது நடக்கும் சூழல் வேறு!!!

  கலப்புத் திருமணம் என்பது நடப்பது காலத்தின் கட்டாயம்!!!
  காலம் உங்களை மாற்றும்!!!

  நன்றி

  ReplyDelete
 16. சாறு///பிற தளங்களில் இடப்படும் பினூட்டம் சில சமயம் அவர்கள் வெளியிடாமல் போவதால் நம்சாறு பதிவில் ஒரு பிரதி இடுகிறோம். ஆகவே அவர்களின் பதிவுக்கு பதில். உங்களுக்கு அல்ல.////
  அங்கெ வெளியிட்டாலும் அதற்கும் இதே பின்னூட்டம் போட்டால் நீங்கள் பதில் சொல்லவேண்டும் அல்லவாபொதுவில் வைத்த பிறகு இது அவர்க்கு என்று பிளேட்டை புடுங்குவது சரியில்ல .
  ஹிட்லர் ஏன் யூதர்களைக் கொன்றான் ?//

  எனது கேள்வி ஹிடலர் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றுவிட்டு கோபம் அடங்காமல் இன்னும் சிலரை விட்டுவைக்க காரணம் ,இவர்கள் எப்படிப்பட்ட கொடுமைக்காறாக்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக என்று கூறுகிறார்.தெரித்தால் சொல்லுங்கள் இல்லையெனில் தெரியாது என்று சொல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,

   ஹி ஹி

   ஒருவன் இன்னொருவரை வெறுக்க அவன் மனநிலையே காரணம்.

   கசாப் & தீவிரவாதிக் குழு ஏன் பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியர்களைக் கொன்றார்கள்?

   ஏன் இஸ்லாமிய பிரிவுகளுக்குள் வன்முறைகள் அதிகம்??

   இதன் பதிலே ஹிட்லருக்கும பொருந்தும்!!!

   நன்றி!!!

   Delete
  2. சாறு ////கசாப் & தீவிரவாதிக் குழு ஏன் பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியர்களைக் கொன்றார்கள்?

   ஏன் இஸ்லாமிய பிரிவுகளுக்குள் வன்முறைகள் அதிகம்??////

   இவற்றுக்கெல்லாம் காரணம் என்னவென்று உலகம் அறியும்

   ///ஒருவன் இன்னொருவரை வெறுக்க அவன் மனநிலையே காரணம்.///

   காரணம் இல்லாமல் மனம் தனது நிலைபாட்டை முடிவு செய்யாது .தனி மனிதனே இன்னொருவனை வெறுக்க காரணம் இருக்க வேண்டும்
   ஒரு சமுதாயத்தையே ஒரு நாட்டின் அதிபர் வெறுக்க காரணம் என்ன?

   நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படிப்பவன் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருந்து லட்சகணக்கான மக்களை கொல்ல ,சதாம் ஹுசைன் திட்டமிட்டிருந்தார்,அதனால்தான் அதன் மீது போர் தொடுத்து இராக்கை கைப்பற்றியதாக என்று அமெரிக்க வரலாறு எழுதிவைக்கும் ,விக்கிபீடியா சொல்லும் ஆனால் அதுதான் உண்மையா?

   ஹிட்லர் யூதர்களை கொல்ல காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் இல்லையெனில் தெரியாது என்று சொல்லுங்கள்

   Delete
  3. சகோ இப்பூ,
   //காரணம் இல்லாமல் மனம் தனது நிலைபாட்டை முடிவு செய்யாது .தனி மனிதனே இன்னொருவனை வெறுக்க காரணம் இருக்க வேண்டும்
   ஒரு சமுதாயத்தையே ஒரு நாட்டின் அதிபர் வெறுக்க காரணம் என்ன?//

   நம் நாட்டு விடயங்களைப் பேசி அதில் இருந்து ஹிட்லரை புரிவோமே!!!

   நீங்கள் சொல்வது உண்மை எனில் கசாப் இந்தியாவை வெறுக்கவும் ,காரணம் இருக்கும் அல்லவா!!

   கோவையில் குண்டு வைத்தவர்கள் கோவை மக்க்ளை வெறுக்க காரணம் என்ன??
   *******

   எதையும் நான் முஸ்லிம், நல்லவன் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு!!

   எந்த சமுதாயத்திலும் நல்வர்,கெட்டவர் இருப்பது இயல்பு. எந்த மனிதனும் சிலருக்கு நல்லவன்,சிலருக்கு கெட்டவன் ஆகவும் இருப்பதும் இயல்பே!!!.

   ஒரு விடயம் நடக்க சூழலே காரணி!!

   முதல் உலகப்போரில் தோற்ற ஜெர்மனி மக்க்ளுக்கு ஒரு பலியாடு தேவைப்பட்டது.

   ஹிட்லர் யூதர்களை பலியாடாக காட்டி அரசியல் தலைவன் ஆனான்.

   முஸ்லிம்களை பலியாடாக ஆக்கி இந்துத்வம் இந்தியாவை ஆள முயல்கிறது!!

   முஸ்லிம்களில் மிக சிறுபான்மையினராகிய இப்ராஹிம்,பி.ஜே போன்ற வஹபிகளின் கருத்துகள், நடவடிக்கைகளே இந்துத்வ சக்திகளை வளர்க்கும்!!
   உடனே என்ன கருத்து என் தெரியாமல் கேட்க கூடாது!!!

   மூமின்கள் பெரும்பான்மை என்றால் அனைவருக்கும் ஷாரியா, சிறுபான்மை என்றால் சிற(ரி)ப்பு சட்டம் என்பதை அனைவரும் உணர்ந்து விட்டார்கள்.

   ஆப்பசைக்கும் குரங்கின் செயலே வஹாபி பிரச்சாரம்!!!

   இதுதான் உண்மை!!

   நன்றி!!!

   Delete
 17. The Science of the Dogon by Laird Scranton
  http://www.goldenageproject.org.uk/966.php

  ReplyDelete