Wednesday, November 28, 2012

பேரண்டம் தோன்றிய காலம் எப்படி கண்டு பிடித்தார்கள்???photo of Edwin Hubble looking into telescope
 

பேரண்டம்  தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனது என்று பலருக்கு தெரியும்.இளைய பூமி கொள்கையாளர்களை[Young earth creationist] தவிர மற்றவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர்.சரி இதனை எப்படி கணக்கிட்டார்கள் என்பதை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.

பேரண்டத்தின் தோற்றத்தை விளக்கும் இப்போதைய அறிவியல் கொள்கை பெரு விரிவாக்க கொள்கை எனப்படும் ஃபிக் பேங் (big bang theory) கொள்கையாகும்.அதாவது 13.8 பில்லியன்  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு புள்ளியில் இருந்து விரிவடைந்து இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதும்,இன்னும் இப்பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் இக்கொள்கையின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த விரிவடைதலை நிரூபித்தவர் திரு எட்வின் ஹூபிள் அவர் தொலை நோக்கியின் மூலம் செய்த ஆய்வுகள் மூலம் பிற காலக்ஸிகள்(தமிழ் சொல் என்ன?) நம்மிடம் இருந்து விலகி செல்கின்றன என்று கண்டறிந்தார்.ஹூபிளின் ஆய்வு முடிவுகளின்படி நமக்கு(பூமிக்கு) தூரத்தில் உள்ள காலக்ஸிகள் வேகமாக விலகுவதும்,அருகில் உள்ளது மெதுவாக விலகுவதையும் வரை படத்தில் இருந்து அறியலாம்.ஏன் இப்படி ?காணொளியில் காட்டப்படும் பலூன் விரிவடைவதை யோசித்தால் புரியும்.இவரின் ஆய்வுகள் சிவப்பு விலக்கம்[red shifts] பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

அந்த தொடர்புகளை ஒரு வரைபடமாக (பூமியில் இருந்து)தூரம்(d) அதன் விலகி செல்லும் வேகம்(V) ஆகியவற்றின் தொடர்பாக வரைந்தார்.இதற்கு தோராயமாக ஒரு நேர்கோட்டு சமன்பாடு[linear equation] அமைத்தார் இது ஹூபில் விதி எனப்படுகிறது.அந்த மாறிலி(H0) ஹூபில் மாறிலி(constant) எனப்படுகின்றது
v = H0 x d

1/H0=d/v==meter/(meter/sec)=time
graph of recession velocity as function of distance 
for distant galaxies 

ஆகவே ஹூபில் மாறிலியின் தலைகீழி(reciporocal) பிரபஞ்சத்தின் வயது ஆகும்.ஹுபில் மாறிலி வரை படம்,அதன் ஆயத் தொலைவுகள் மூலம் H0 = 71 km/s/mpc . என கணக்கிடப்பட்டது.இதனை கணக்கிட கணிணி கணித மென்பொருள்கள் தேவை.

1mpc=One megaparsec = 3.086×1019 kmH0=71/ 3.086×1019 s-1= 2.30×10−18 s−1

Time=Age of the universe=1/H0=4.35×1017 seconds or 13.8 billion years.

இது ஒரு தோராய முறை ஏனெனில் ஹூபில் மாறிலி கணக்கிடுவதில் உள்ள தவறின்(error) அளவையும் சேர்க்க வேண்டும்.அந்த அளவு நமக்கு தேவையில்லை நமக்கு தெரிய வேண்டியதெல்லாம்.

1. ஹூபில் பூமியில் இருந்து காலக்ஸிகள் நகரும் வேகம் ,தூரம் ஆகியவற்றை கணித்தார்.

2.அதற்கு ஒரு சமன்பாடு அளித்தார் (ஹூபில் விதி)

3. ஹூபில் மாறிலியின் தலை கீழி பிரபஞ்சத்தின் வயது ஆகும்(ஏன்,எப்படி என்று கொஞ்சம் சிந்தியுங்கள்!!!!!!!!!!!!)http://en.wikipedia.org/wiki/Age_of_the_universe

http://imagine.gsfc.nasa.gov/YBA/M31-velocity/hubble-more.html


 இது நாம் ஏற்கெனவே சென்ற வருடம் எழுதிய பதிவு. சகோ இக்பால் தொன்மங்களின் வயது கண்டறிவது பற்றிய பதிவு கண்டவுடன் ,இதையும் பகிரலாம் என தோன்றியது. சான்றுகள் மூலமே அறிவியல் விள்க்கம் வரும். எதையும் ஒருவர் சான்றுகள் இன்றி அறிவியலில் சொல்ல முடியாது.

இங்கு கூட பாருங்கள்.ஒளிப் படிமங்கள் i.e  தொன்மை கால ஒளியின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டது. 

இங்கே பருங்கள் பல விண்மீன் திரட்சிகளின்[galaxies] பெயர்களோடு அவற்றின் விலகும் வெகம் கணித்தலை,ஹூபில் மாறிலி கண்டுபிடித்தலை ஒரு பாடத்திட்ட ஆய்வு ஆக‌ செய்யும் வாஷிங்டன் பல்கலைக கழக சுட்டி.http://www.astro.washington.edu/courses/labs/clearinghouse/labs/HubbleLaw/hubbles_law_procedure.html
காணொளி பாருங்கள் இன்னும் தெளிவாக புரியும்.சந்தேகம் இருந்தால் விவாதிப்போம் நன்றி

26 comments:

 1. சார்வாகன்.
  நல்ல பதிவு.ஆனா இதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு?

  __________ புக் படிச்சா போதாதா?
  அதுல ""எல்லாமே"" போட்டிருக்குமே?
  படியுங்கள் _________புக் .படித்து இன்புறுங்கள்.

  போர்ன் காணொளி பாருங்கள் இன்னும் தெளிவாக புரியும்.சந்தேகம் இருந்தால் விவாதிப்போம் நன்றி!
  :-)))))))

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ
   முட்டாப் பையன்,
   நாம் எல்ல புத்த்கமும் படிப்போம்.அலசுவோம். எல்லாக் காணொளியும் பார்ப்போம்.கருத்துகளுக்கு நன்றி.

   Delete
 2. Galaxy
  விக்கிப்பீடியாவில் விண்மீன் பேரடை என்றும் விண்மீன் திரள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். http://ta.wikipedia.org/s/27a


  விக்சனரியில் - விண்மீன் மண்டலம்; விண்மீன் திரள் என்று குறிப்பிட்டுள்ளார்கள் http://ta.wiktionary.org/s/fbx

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ குறும்பன்,
   காலக்சி என்பதற்கு விண்மீன் திரட்சி என்பதே இப்பதிவு முதலில் எழுதப்பட்ட போதே சகோ கோவி கண்ணன் கூறினார்.அனைவரும் அதையே சொல்கிறீர்கள். மாற்றி விடுகிறேன். மிக்க நன்றி!!

   Delete
 3. விண்மீண் மண்டலம், அல்லது விண்வெளி மண்டலம் என்பது தான் சரியாக இருக்கும் .. !

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இக்பால்,
   மாற்றிவிடுகிறேன். நன்றி!!

   Delete
 4. வணக்கம் சகோ,

  நல்ல பதிவு. அய்ன்ஸ்டீனிற்கு பிறகு ஹூபிள் வந்தவுடன் தான் அறிவியல் வானியலில் விரிவடைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.காலக்ஸி என்பதை "பால்வீதி" என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் சரியாக நினைவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சகோ இனியவன்,
   நம்து விண்மீன் திரட்சியின் (கால்க்சியின்) பெயர் பால்வீதி மண்டலம்.இது போல் பலப்பல விண்மீன் திரட்சிகள் பேரண்டத்தில் உண்டு.
   நன்றி!!!

   Delete
 5. சகோ. சார்வாகன்,

  எனக்கு ஒரு சந்தேகம்.
  பிரபஞ்சத்திற்கு எல்லை உண்டா? உண்டென்றால் எல்லையை தாண்டி அடுத்து ஏதோ ஓன்று அல்லது திறந்த வெளி இருக்கிறது என்று அர்த்தமாகிவிடும். எல்லை இல்லைஎன்றால் infinity ஆகிவிடுமே?
  (If it is a stupid question, I am sorry my friends.)

  ReplyDelete
  Replies

  1. சகோ ஏலியன்,
   இது உண்மையில் நல்ல கேள்வி.நாம் நம்து தொலைக்கோள்கள் மூலம் எடுத்த தொன்ம ஒளிச் சான்றுகளின் அடிப்படையில்,ஹூபில் விதியின் படி பேரண்டத்தில் அளவை கணித்து உள்ளனர்.
   அதன்படி நாம் அளவிட முடிந்த பேரண்டத்தின் அளவு 46–47 billion light-years


   http://en.wikipedia.org/wiki/Observable_universe

   The age of the universe is about 13.75 billion years, but due to the expansion of space humans are observing objects that were originally much closer but are now considerably farther away (as defined in terms of cosmological proper distance, which is equal to the comoving distance at the present time) than a static 13.75 billion light-years distance.[2] The diameter of the observable universe is estimated at about 28 billion parsecs (93 billion light-years),[3] putting the edge of the observable universe at about 46–47 billion light-years away.[4][5]

   நமது பேரண்டத்திற்குள் இருப்பதிலேயே 96% கருப்பு ஆற்றல்,கருப்பு பொருள் அறிய இயலவில்லை. ஆகவே நம்து பேரண்டம் மட்டும் உள்ளதா? இன்னும் பல் உண்டா?பேரண்டத்திற்கு வெளியே என்ன விடை தெரியா கேள்விகளே!!!
   கருப்பு பொருள்,ஆற்றல் பற்றிய நம்து பதிவு.பாருங்களேன்!!
   http://aatralarasau.blogspot.com/2012/04/dark-matter-energy.html

   பேரண்டத்தில் 70% கருப்பு ஆற்றலும் 25% கருப்பு பொருளும் இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.மீதம் உள்ள 5% தான் அனைத்து வெளித்திரள்களும்[galaxy],விண்மீன்கள்[stars],கோள்கள் சேர்ந்த அளவு.அதில் பூமி ஒரு தூசி.

   நன்றி!!

   Delete
 6. //ஹூபில் மாறிலியின் தலை கீழி பிரபஞ்சத்தின் வயது ஆகும்(ஏன்,எப்படி என்று கொஞ்சம் சிந்தியுங்கள்!!!!!!!!!!!!)///

  velocity = Hubble's constant X Distance

  so, Velocity/Distance = Hubble's Constant

  is we reciprocate on both sides Distance / Velocity = 1 / H

  As we know Time = Distance / Velocity

  So reciprocal of Hubble's constant 1/H = Time to travel the distance

  Which is Age of Universe.

  ReplyDelete
  Replies
  1. Dear bro Jenil
   You are smart.I will write about wormhole shortly.
   Thank you

   Delete
 7. பிற காலக்ஸிகள்(தமிழ் சொல் என்ன?)

  கோள்கள்!

  ReplyDelete
  Replies
  1. சகோ இராசநட,
   காலக்சிக்கு விண்மீன் திரள் அல்லது திரட்சி என்பது ஒருமித்து ஏற்கப்பட்டது.
   நன்றி!!

   Delete
 8. சாறு,ஒரு சிறு புள்ளியில் இருந்து விரிவடைந்தது பிரபஞ்சம் உண்டானது என்றால் ,இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றால் பிரபஞ்சத்திற்கு அப்பாலும் இடம் இருக்கிறதா இல்லையா?
  அந்த புள்ளி எதில் இருந்தது?அதற்கு சான்றுகள் கொடுத்துள்ளார்களா?
  13.8 பில்லியன் ஆண்டுகள் என்பது அனுமானமா?அல்லது திட்டவட்டமா?
  இளைய பூமி கொள்கையாளர்கள் இதை மறுக்க என்ன சான்றுகள் வைக்கின்றனர்?

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   நம்க்கு ஆயிரம் பின்னூட்டம் வந்தாலும் அதெல்லாம், ஒரு மார்க்க(மான) பின்னூட்டத்திற்கு ஈடாகுமா? அங்குதான் நிற்கிறீர்கள்.
   அஸ்ஸலாமு அலைக்கும்!!

   1//சாறு,ஒரு சிறு புள்ளியில் இருந்து விரிவடைந்தது பிரபஞ்சம் உண்டானது என்றால் ,இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றால் பிரபஞ்சத்திற்கு அப்பாலும் இடம் இருக்கிறதா இல்லையா?//
   சரியாக சொன்னால் சான்றுகளின் அடிப்படையில் பேரண்டத்தில் உள்ள விண்மீன் திரள்கள் அனைத்தும் ஒன்றில் இருந்து மற்றொன்று விலகி செல்வது உண்மை. இது விரிவடைதலையே குறிக்கிறது என ஒருமித்த அறிவியலில் கருத்து உண்டு.

   இப்போது விரிவடைதால் இதற்கு முன்பு என்ற கணிப்பே பிக் பேங் என்ப்படும் பெரு வெடிப்புக் கொள்கையின் படி ஒரு புள்ளியில் இருந்து விரிவடைந்து இருக்க்லாம் என்பதே.

   நமது பேரண்டத்திலேயே 95% நமக்கு சரியாக் தெரியவில்லை. பேரண்டத்திற்கு வெள்யே, இன்னும் பல பேரண்டங்கள் உள்ளனவா இல்லை, என்ன என சான்றுகள் இல்லை!!!
   ***
   //அந்த புள்ளி எதில் இருந்தது?அதற்கு சான்றுகள் கொடுத்துள்ளார்களா?/
   நான் கூறியபடி புள்ளியில் இருந்து என்பது கணிப்பு.சான்றுகள் மூலம் உறுதிப் படுத்தப்ப்டாத விடயம்.

   இன்னும் கூறினால் காலக்சிகள் தோன்றிய கால கட்டம்,விதம் கூட சான்றுகள் இல்லை.
   http://www.thestar.com/news/world/article/1294823--discovery-of-huge-black-hole-raises-doubts-about-how-galaxies-are-formed
   AUSTIN, TEXAS—University of Texas astronomers have discovered what might be the universe’s largest black hole, a finding experts said could lead to a better picture of how galaxies and black holes are formed.

   The so-called supermassive black hole is the mass of approximately 17 billion suns. What makes it so unique is that it contains 14 per cent of its galaxy’s mass. Most black holes usually have less than 1 per cent of their respective galaxies’ mass.

   UT astronomy professor Karl Gebhardt and postdoctoral fellow Jonelle Walsh are part of a team of researchers led by Remco van den Bosch that used the Hobby-Eberly Telescope at the McDonald Observatory to locate the black hole in galaxy NGC 1277, located 220 million light-years away from Earth in the Perseus constellation.

   The team’s discovery is set to appear in the journal Nature on Thursday.

   அந்த புள்ளி ப்ளாக் ஹோல் எனப்படும் கருந்துளையாக் இருக்கலாம் என்பது பல ஆய்வாளர்களின் கணிப்பு.மேலே காட்டிய சுட்டி பாருங்கள்.

   ***
   3./13.8 பில்லியன் ஆண்டுகள் என்பது அனுமானமா?அல்லது திட்டவட்டமா?/
   ஹூபிலின் விதியின் படி கணிப்பு.எனினும் இதற்கு மாறான சான்று இதுவரை இல்லை!!.
   ***

   4.//இளைய பூமி கொள்கையாளர்கள் இதை மறுக்க என்ன சான்றுகள் வைக்கின்றனர்?//

   எல்லாம் நம்ம ஏக இறைவன் அல்லாஹ் அனுப்பி மூதல் ஓரிறைக் கொள்கையாளர் அண்னன் இப்லீசும், யூதர்களும் மாத்தி கெடுத்த பழைய வேதம் பைபிள்தான் சகோ. அதில் ஆதம்(அலை)@ஹோமோ எரக்டசு படைக்கப்பட்டது 7000 வருடம் என போட்டு இருக்குதாம்.ஹா ஹா ஹா

   நன்றி!!!

   Delete
 9. சாறு ///நமது பேரண்டத்திலேயே 95% நமக்கு சரியாக் தெரியவில்லை. பேரண்டத்திற்கு வெள்யே, இன்னும் பல பேரண்டங்கள் உள்ளனவா இல்லை, என்ன என சான்றுகள் இல்லை!!!////

  மத நம்பிக்கை உங்களை பொறுத்தவரை 100%பொய் .

  மத நம்பிக்கைக்கும் உங்களது பரிணாம கொள்கைக்கும் 5%வித்தியாசமே உள்ளது.
  மக்களை ஒழுங்கு படுத்துவது மத நம்பிக்கையா ?நாத்திகமா ?என்று நோக்கினால் மத நம்பிக்கையே .இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்க முடியாது.ஆக மதநம்பிக்கைக்கு வாருங்கள் மக்களை நெறிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

  இப்போது நாம் வலைத்தளத்தில் சந்திக்கிறோம் ,விவாதிக்கிறோம் .இவற்றைத்தான் அறிவியலாக ஏற்றுக் கொள்ள முடியும் .450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் தோன்றியது ,மனிதன் 2 லட்ச ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினான் என்பதெல்லாம் உங்களது கருத்துப்படி மத நம்பிக்கையை மிஞ்சும் கற்பனை .
  பிரபஞ்சம் தோன்றியது பற்றி ஹூப்ளியின் கருத்தை வெளியிட்டீர்கள் .மனிதன் 2 லட்ச ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினான் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்?அதாவது மனிதன் தோன்றியதை அல்ல .2 லட்ச கற்பனை ஆண்டுகளை எங்ஙனம் கண்டு பிடித்தார்கள்?
  ஒரே கிளையில் தோன்றிய இரு வேறு மிருகங்கள் மனிதனும் குரங்கும் என்றால் மனிதனின் பரிணாம படங்களை குரங்குகளாக காட்ட வேண்டும்?
  ஏன் அந்த குரங்குகள் மனிதனிலிருந்து பரிணமித்திருக்கக் கூடாதா?ஆகவே படத்தை மாற்றி போடுங்கள் ,மனிதனிலிருந்து குரங்கு வந்தது என்று.

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   //மத நம்பிக்கை உங்களை பொறுத்தவரை 100%பொய் .

   மத நம்பிக்கைக்கும் உங்களது பரிணாம கொள்கைக்கும் 5%வித்தியாசமே உள்ளது.//
   மத நம்பிக்கை என்பது மனிதனின் விடை தெரியா கேள்விகளுக்கு ஒரு விடை என்றே நான் கூறுகிறேன். விடை தெரியா கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நம்மால் அறிய இயலும் எல்லைகள் கால ரீதியாக விரிவடைந்தாலும்,அறியப்பட வேண்டியவை பலப்பல.ஆகவே அனைத்தையும் ஒருபோதும் அறிய முடியாது.
   மத நம்பிக்கைகள்,மத புத்தகங்கள் தனிப்பட்ட மனிதர்களின் சில காரணங்களுக்காக தோற்றுவிக்கப் பட்டன எனவே கூறுகிறோம்.ஒரு அறிய இயலா அனைத்தும் அறிந்த,எப்போதும் வாழும்,படைப்பு,காத்தல்,அழித்தல் செய்யும் ஒரு சக்தி இருப்பதனை பரிசோதித்து அறிய முடியவில்லை எனவே ,ஏற்பது இல்லை என கூறுகிறோம்.
   இயற்கை ஒரு தொடர் இயக்கத்தில் இருக்கிறது. அதில் பூமி, மனிதர்களின் பங்கு வரலாறு மிக மிக சிறிய அளவே என்பதையும் சான்றுகள் மூலம் அறிகிறோம்.
   உயிரினங்கள் கிளைத்து தழைத்தது பரிணாமத்தால் என அறிவியல் சான்றுகளின் மூலம் விள்க்குவதையும் ஏற்கிறோம்.பரிணாமம் வைக்கும் சான்றுகள் அறிந்தவரை சரியாக தெரிகிறது.
   பரிணாமத்திலும் சில தேடல் சார் கேள்விகளும் உண்டு.அதையும் கூர்ந்து நோக்குகிறோம்.பரிணாமம் நாத்திக கொள்கை அல்ல!!.இப்போதைய உயிரின தோற்ற பரவல் கொள்கை அவ்வளவுதான்.மத நம்பிக்கைக்கு முரணும் அல்ல!!
   ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட சக்திக்கு எந்த தேடலும் பலன் அளிகக்காது!!
   ஆகவே பரிணாமத்தையும் மதநம்பிக்கையும் ஏன் ஒப்பிட வேண்டும்?
   இயற்கைக்கு மேம்பட்ட சக்திக்கும் மத நம்பிக்கைக்கும் தொடர்பு இருப்பது சான்றுகள் மூலம் அறியவே விரும்புகிறோம்
   *******************
   //மக்களை ஒழுங்கு படுத்துவது மத நம்பிக்கையா ?நாத்திகமா ?என்று நோக்கினால் மத நம்பிக்கையே .இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்க முடியாது.ஆக மதநம்பிக்கைக்கு வாருங்கள் மக்களை நெறிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.//
   ஒழுங்கு,அதாவது ஒழுக்கம் என்பது என்ன என்பதின் வரையறை சார்ந்து உள்ளது. நமக்கும்,சக மனிதனுக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பதே ஒழுக்கம் என்பது நம் கருத்து.
   ஆகவே மத நம்பிக்கை உள்ளவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்பது தவறு. மனிதர்கள் பல் வகை இயல்புகள் கொண்டவர்கள். அவரவர் இயல்புக்கேற்ப ,வாழும் சூழல் சார்ந்து நல்லவர்களாகவோ,கெட்டவர்களாகவோ அறியப்படலாம்.
   மக்கள் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களைப் பின்பற்றினாலே போதுமானது.அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதாரம் கொடுத்து,சட்டமும் பாரபட்சமின்றி செயல்பட்டாலே சமூகத்தில் ஒழுங்கு வந்து விடும்.
   இதற்காகவே சில முயற்சிகளை முன்னெடுக்கிறோம்.
   (contd)

   Delete
  2. சகோ இப்பூ,
   //இப்போது நாம் வலைத்தளத்தில் சந்திக்கிறோம் ,விவாதிக்கிறோம் .இவற்றைத்தான் அறிவியலாக ஏற்றுக் கொள்ள முடியும் .450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் தோன்றியது ,மனிதன் 2 லட்ச ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினான் என்பதெல்லாம் உங்களது கருத்துப்படி மத நம்பிக்கையை மிஞ்சும் கற்பனை .//
   வலைத்தளம்,கணிணி என்பது போல் அனைத்தையும் உணர முடியுமா?.
   இவை தொழில் நுடபம்,அல்லது பொறியியல் என்னும் அறிவியல்.ஒரு விடய்ம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை அறிவதை என்ன பெயர் கொண்டு அழைப்பது??
   காலரீதியாக சான்றுகள் கொண்டே,அச்சான்றுகள் எப்படி நடந்து இருக்கும் என விள்க்குவதே அறிவியல் கொள்கைகள்.

   பூமின்யின் மிக பழமையான் பாறைகளின் வயதை ரேடியோ கார்பன் டேட்டிங் தொழில் நுடப்ம் மூலம் அறியலாம். சகோ இக்பாலின் இப்பதிவு பாருங்கள்.
   தொன்மங்களின் வயதை எப்படி கணிக்க முடிகின்றது.
   http://www.kodangi.com/2012/11/Radiocarbondating.html#.ULlzf4Npey4
   ******
   //பிரபஞ்சம் தோன்றியது பற்றி ஹூப்ளியின் கருத்தை வெளியிட்டீர்கள் .மனிதன் 2 லட்ச ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினான் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்?அதாவது மனிதன் தோன்றியதை அல்ல .2 லட்ச கற்பனை ஆண்டுகளை எங்ஙனம் கண்டு பிடித்தார்கள்?//

   இதுவும் சகோ இக்பாலின் பதிவில் விளக்கி இருக்கிறார். கிடைத்த ஹோமோ சேஃபியனின்[மனிதன்] படிமங்களில் பழமையானது 2இலட்சம் ஆன்டுகளுக்கு முந்தையவை.இந்த படிம்ங்களை ஆய்வு குறித்து எவரும் பரிசோதிக்க இயலும்.
   *****
   //ஒரே கிளையில் தோன்றிய இரு வேறு மிருகங்கள் மனிதனும் குரங்கும் என்றால் மனிதனின் பரிணாம படங்களை குரங்குகளாக காட்ட வேண்டும்?
   ஏன் அந்த குரங்குகள் மனிதனிலிருந்து பரிணமித்திருக்கக் கூடாதா?ஆகவே படத்தை மாற்றி போடுங்கள் ,மனிதனிலிருந்து குரங்கு வந்தது என்று.//
   இந்த குரங்கில் இருந்து மனிதன் அப்படியே நடந்து உருமாறும் படம் பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.

   அப்படம் தவறு. மனிதன், சிம்பன்சி ஒரே முன்னோரில் இருந்து சுமார் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். அம்முன்னோர் அதிகம் சிம்பன்சி போலவே இருந்ததாக படிமங்களில் இருந்து அறிய முடிகிறது.மனிதர்களில் சுமார் 20+ இனங்கள் தோன்றி மிஞ்சியது ஹோமோ சேஃபியன்(நாம்) மட்டுமே!!

   ஆகவே ஒரு ஹோமோ சேஃபியன்(இப்போதைய மனிதன்) படிமம் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கிடைத்தால், சிம்பன்சி மனிதனில் இருந்து தோன்றியதாக கருத்த இயலும்.

   நம்ம ஏக இறைவன் அல்லாஹ் கூட [ஓய்வு நாளானா]சனிக்கிழமை மீன் பிடித்த யூதர்களை குரங்காக பன்றியாக மாற்றி விட்டதை மனதில் வைத்துதானே கேட்கிறீர்கள். ஹி ஹி
   /5:60. “அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக./

   நன்றி!!!!

   Delete
 10. வணக்கம் சகோ,

  //நம்ம ஏக இறைவன் அல்லாஹ் கூட [ஓய்வு நாளானா]சனிக்கிழமை மீன் பிடித்த யூதர்களை குரங்காக பன்றியாக மாற்றி விட்டதை மனதில் வைத்துதானே கேட்கிறீர்கள். ஹி ஹி//

  ஏன் சகோ. இப்ப‌ எல்லாம் ச‌னிக்கிழ‌மைக‌ளில் யாரும் மீன் பிடிப்ப‌தில்லையோ? இல்ல‌ இப்ப‌ இருக்கிற‌ குர‌ங்குக‌ளும்,ப‌ன்றிக‌ளும் ஏற்கனவே ச‌னிக்கிழ‌மைக‌ளில் மீன் பிடித்தவ‌ர்க‌ளா?..ம்ம்ம்...குரானை எழுதிய‌வ‌ருக்குத்தான் வெளிச்ச‌ம்!!!!!!

  ReplyDelete
  Replies
  1. சகோ இனியவன்,
   மத புத்த்கங்கள் என்பவை ஒரு குழுவினரின் அரசியல்,பொருளாதார நலர்களுக்காக இன்னொரு குழுவை இழிவுபடுத்தி எழுதி இருப்பதை நன்கு உணர முடியும்.

   இழிவு படுத்த எழுதியது, வேதத்தில் எழுதப் பட்டடதால் அவர்கள் இழிவானவர்களே என காலப்போக்கில் மாறிவிடும்.ஏன் எனில் வேதம் இறை வழங்கியது . ஹிஹி

   நன்றி!!!

   Delete
 11. சாறு ,2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த படிமங்களின் அடிப்படையில் சிம்பன்சியிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறியுள்ளீர்..சிம்பன்சியிளிருந்து இன்றைய மனித உருவம் மாற்றம் அடைய படிப்படியாக நடந்துள்ளது என்றால் அந்த சிறு சிறு மாற்றங்கள் எவ்வளவு காலம் இடையே நடந்துள்ளது? அதாவது ஒவ்வொரு மாற்றமும் ஏற்பட எவ்வளவு காலம் பிடித்தது என்பதை படிமங்கள் மூலம் அறிந்துள்ளார்களா?

  ////அப்படம் தவறு. மனிதன், சிம்பன்சி ஒரே முன்னோரில் இருந்து சுமார் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். அம்முன்னோர் அதிகம் சிம்பன்சி போலவே இருந்ததாக படிமங்களில் இருந்து அறிய முடிகிறது.///

  60 லட்ச ஆண்டுகளுக்கு முன்னர் ,ஒரே முன்னோரிலிருந்து கிளைத்த மனிதன்,சிம்பன்சி போலவே இருந்தான்.இன்று மனிதனாக பகுத்தறிவு பெற்றவனாக பரிணமித்து விட்டான் .ஆனால் சிம்பன்சி இப்போது இருக்கிறது அல்லவா?அவைகள் ஏன் 60 லட்ச ஆண்டுகளாக சிம்பன்சியாகவே இருக்கின்றன.
  மேலும் ,இப்படி ஒரே கிளையில் தோன்றிய மற்ற உயிரினங்கள் ஏதும் உள்ளனவா?அவைகளில் பரிணாம மாற்றங்கள் ஏற்பட்டதற்கு படிமங்கள் கிடைத்துள்ளதா?
  மற்ற அனைத்து உயிரினங்களும் ஒரே மாதிரியான அறிவை பெற்றிருக்கும் பொழுது மனிதன் மட்டும் சிறந்த அறிவை எங்ஙனம் பெற முடிந்தது?
  ///ஆகவே மத நம்பிக்கை உள்ளவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்பது தவறு. மனிதர்கள் பல் வகை இயல்புகள் கொண்டவர்கள். ///
  நாத்திகர்கள் அனைவரும் தவறு செய்பவர்கள் அல்ல .விக்தாசாரத்தின் அடிப்படையில் பார்த்தால் அதிகம் தவறு செய்பவர்கள் நாத்திகர்களே .மக்களை பல தவறுகள் செய்ய விடாமல் தடுப்பது ஆன்மிகமே .ஆன்மிக தலைவர்களில் பலர் நாத்திகத்தை நம்புவதால் தவறு செய்வதில் நாத்திகர்களை விஞ்சி நிற்கிறார்கள் என்பது வேறு.ஆனால் பெரும்பான்மையான மக்கள் நாத்திகர்களைவிட நல்ல மனம் படைத்தவர்கள்
  ///இழிவு படுத்த எழுதியது, வேதத்தில் எழுதப் பட்டடதால் அவர்கள் இழிவானவர்களே என காலப்போக்கில் மாறிவிடும்.ஏன் எனில் வேதம் இறை வழங்கியது . ஹிஹி////
  யாரயும் இழிவு படுத்தி குர்ஆனில் எழுதப்படவில்லை .அவர்கள் செய்த இழிவான செயல்கள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.நபி ஸல் காலத்தில் துவக்கத்தில் இருந்தே அவர்கள் கொடுத்த இடையூறுகள் ,கொடுமைகளைத்தவிர வேறொன்றும் கூறப்படவில்லை.
  நான் கேட்கிறேன் யூதர்களை லட்சகணக்கில் ஹிட்லர் கொல்ல அவசியமென்ன?காரணங்களை வரலாறு மூடி மறைக்கக் வேண்டிய அவசியமென்ன?ஹிட்லருக்கு அடங்காத கோபம் வர காரணம் சொல்லபப்ட வேண்டாமா?

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ ம்னித பரிணாமம் குறித்த உங்களின் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதில் ஆமாம்,
   பல் படிம்ங்கள் கால்ரீதியாக, அமைப்புரீதியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அனைத்தையும் இங்கே பார்க்க்லாம். மனித பரிணாமம் குறித்த உலகின் முதனமை ஆய்வுக் கழகம்.
   http://humanorigins.si.edu/
   ***
   //பெரும்பான்மையான மக்கள் நாத்திகர்களைவிட நல்ல மனம் படைத்தவர்கள்//

   ஆனால் அல்லாஹ் அப்படி நினைக்கவில்லையே!!சம்யம் வந்தால் அல்லாஹ்,முக்மது(சல்) ஆகியோரை கழட்டி விட்டு விடுகிறீர்கள்.
   அல்லாஹ்,முக்மது(சல்) ஆகியோரின் கருத்துப் படி ஆயிரம் பெரில் ஒருவருக்கு மட்டுமே சுவனம், மீதி 999 பேருக்கு நரகமே!!!
   //3348. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
   அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி, 'ஆதமே!" என்பான். அதற்கு அவர்கள், 'இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்" என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், 'நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம்(அலை) அவர்கள், 'எத்தனை நரகவாசிகளை?' என்று கேட்பார்கள். அதற்கு அவன், 'ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)" என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்" (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹுஅக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)" என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)" என்று கூறினோம். உடனே அவர்கள், 'சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) 'அல்லாஹ் அக்பர்" என்று கூறினோம். அவர்கள், 'சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), 'அல்லாஹு அக்பர்" என்று கூறினோம். அப்போது அவர்கள், 'நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போன்றே (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்" என்று கூறினார்கள்.
   என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
   Volume :4 Book :60//

   முக்மது(சல்) சொல்வதையே மறுப்பதால் நீங்களும் நரக்மே பெறுவீர்க்ள்.
   ஹி ஹி
   ****
   //நான் கேட்கிறேன் யூதர்களை லட்சகணக்கில் ஹிட்லர் கொல்ல அவசியமென்ன?காரணங்களை வரலாறு மூடி மறைக்கக் வேண்டிய அவசியமென்ன?ஹிட்லருக்கு அடங்காத கோபம் வர காரணம் சொல்லபப்ட வேண்டாமா?//

   சரியான கேள்வி. ஹிட்லரின் உலகப் போரில் கூட்டாளிகள் அரபுக்கள் என்பதால் நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டு.

   மிக்க நன்றி!!!

   Delete
 12. கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆவதற்கு காரணம் தவளைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததுதான் என்று சுற்றுசுழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் அதிகமாக பெருகிவருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால் தண்ணீரில் மிதக்கும் கொசுக்களின் லார்வாக்களை அவை சாப்பிட்டுவிடும். அண்மையில் டெல்லியில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  நபி (ஸல்) அவர்கள் தவளையை கொள்வதை தடை செய்தார்கள்
  நூல்:தாரமீ(1914)

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவளைகளை கொள்வதை தடை செய்துள்ளார்கள் என்று மேற்கொண்ட ஆதாரப்பூர்வமான செய்தி தெளிவுபடுத்துகின்றது.

  அப்படியானால் தவளைகளின் காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹுடைய தூதர் அவர்கள் தவளையைக் கொள்ள வேண்டாம் என்று கட்டளையை பிறப்பித்துள்ளார்கள்.
  தவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அப்போதுள்ள மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் உண்மைபடுத்துகின்றன...

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   மூமின்கள் முக்மது(சல்) அவர்களின் எந்த செய்லையும் நியாயப் படுத்துவார்கள் என்பதற்கு நீங்களும் விதிவிலக்கா??

   முக்மது(சல்) தவளையை கொல்வதை தடை செய்தது அது கொசு உருவாத்லை தடுத்தலே என்னும் அறிவியல் சார் விள்க்கம் அருமை என்றாலும்.

   அரபி அறிந்த உண்மையான அரபுலக மூமின்கள் உண்மையான காரணத்தை விள்க்குகிறார். தவளை கத்துவது படைப்பவர்களுள் சிறந்தவரான அல்லாஹ்வை புகழ்வதே.

   எகிப்தில் இதுக்கும் ஒரு ஃபத்வா கொடுத்து இருக்கிறார்கள்.
   http://www.raymondibrahim.com/from-the-arab-world/new-frog-fatwa-amphibians-sacrosanct-croaking-praises-allah/
   New ‘Frog Fatwa’: Amphibians Sacrosanct, Croaking Praises Allah

   by Raymond Ibrahim on July 3, 2012 in From The Arab World, Islam


   inShare
   by Raymond Ibrahim • Jul 3, 2012 at 3:16 am
   Cross-posted from Jihad Watch


   Safe from the forces of jihad.
   Following the presidential victory of the Muslim Brotherhood’s Muhammad Morsi, the very first fatwa to appearby Egypt’s highest fatwa council addresses—not social, political, or economic issues in Egypt—but rather frogs. Specifically, it bans Muslims from hunting and killing frogs to sell to those nations that dine on the amphibians. As the fatwa explains, according to Islam’s prophet Muhammad as recorded in a hadith, a frog’s “croaking is praise [to Allah].” Accordingly, “a number of jurists [fuqaha] have relied on this [hadith] to forbid the eating of frogs, under the notion that ‘that which is banned from being killed, is forbidden from being eaten.’”

   Unlike the many other fatwas dealing with animals, including cartoon characters—such as the fatwa to kill Mickey Mouse—this frog fatwa is ostensibly humanitarian. Yet, in reality, it only proves how enslaved Muslim societies are to the random words of their prophet—a prophet who, on one occasion ordered the killing of all black dogs because they are “devils,” while making frogs sacrosanct for praising Allah with their croaks—a prophet who, to non-Muslims, was just a 7th century Arab, whose words, obvious reflections of a 7th century mentality, millions of people still cling to today—and, hence, a prophet who is at the heart of the international dilemma widely known as “radical Islam.”
   ***

   முகமது(சல்) அவர்கள் பரிந்துரைத்த ஒட்டக மூத்திரம் , ஏன் பிரபலப் படுத்தலாமே!!!

   நன்றி!!!

   Delete
  2. சகோ இப்பூ,
   முக்மது(சல்) எறும்பைக் கொல்லக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்.நடக்கும் போது பாத்து நடங்கோ!!.

   5247

   Narrated Abdullah ibn Abbas: The Prophet (peace_be_upon_him) prohibited to kill four creatures: ants, bees, hoopoes, and sparrow-hawks.
   Sunan abu dawud book 41

   http://www.searchtruth.com/book_display.php?book=41&translator=3&start=0&number=5241


   நன்றி!!

   Delete