Monday, November 5, 2012

இணைய சுதந்திரம் வாழ்க!!!!!!!!!!!!!!!!


வணக்கம் நண்பர்களே,
இணைய தளம் என்பது சாமான்ய மக்களும் தங்களின் கருத்துகளை பகிர,விவாதிக்க ஒரு ஆக்கபூர்வமான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என்பதும்,உலக அளவில் பல ஆட்சி மாற்ரங்களையே ஏற்படுத்தி உள்ள சக்தி ஆகும். கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் இணைய சுதந்திரத்தை முடக்கும் செயல்களுக்கு வித்திடலாம் என தோன்றுகிறது.

கருத்துகளை கருத்துகளால் மட்டுமே எதிர் கொள்ள வேண்டும் என்பதும்,சான்றுகளின் அடிப்படையிலான உண்மை மட்டுமே வெல்லும்,நீடித்து நிற்கும் என்பதில் நமக்கு மாற்று கருத்தில்லை.

இந்தவகையில் தருமி அய்யாவின் பதிவில் இருந்து சில விடயங்களை நம் பதிவிலும் இட்டு கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறோம்.
இதன் பிறகு வருபவை தருமி அய்யாவின் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.அவருக்கும் உங்களுக்கும் நம் நன்றிகள்!!.
****************************

I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’


”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.இந்துவில் வந்த தலையங்கமும் இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

************

8 comments:

 1. சார்வாகன்,
  இந்த கைது அரசியல்வாதிகளுக்கும் ஊடங்கங்களுக்கும் தேவை. இதை விட அசிங்கமா ஆபசாமாக எழுதிய ஊடங்களை ஒன்னும் செய்வதில்லை. காரணம், ஊடங்கங்களை கட்டிப் போட அரசாங்க விளம்பரங்கள் ஒன்று போதும்.

  இப்போ எல்லா சூத்திரப் பயல்களும் படிக்கிறான்; எழுதறான்; விவாதிக்கிறான்; ஊடங்களை தோலுரிக்கிறான். சும்மவா சொன்னான் மனு; சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் படிப்பைப்க் கொடுக்காதே என்று...! அதனால் தான் பெரியார் என்றாலே எரிகிறது!

  பாரதியைப் பற்றிய புளுகு மூடைகளுக்கு ஏன் யாரும் எதிர் பதிவு கூட எழுதுவதில்லை? சாயம் வெளுதாச்சு.

  பின்குறிப்பு: சூத்திரன் என்றால் பார்ப்பனர் அல்லாத பலருக்கு கோபம் வருகிறத. அப்படி திட்டவேண்டுமானால் பெரியாரைத் திட்டுங்கள்; அவர் சொன்னதைத் நான் மேற்கோள் தான் காட்டியிருக்கிறேன்...!

  ReplyDelete
 2. இப்போ ஞானியை தாக்கி பலர், குறிப்பாக குழந்தை பதிவர், எழுதவதன் காரணம்; ஞானி பெரியாரை மதிக்கிறேன் என்று சொன்னதால் தான் என்று நினைக்கிறன்; தவறாக இருந்தால் மன்னிக்கனும். ஞானியை இதற்கு முன்பு அவர் தாக்கி எழுதியிருக்கிறாரா??

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் நம்பள்கி,
   நம் மக்கள் கொஞ்சம் முன்னேறிவிட்டால் ஆண்டவன், மீண்டவன் என பெருமை பேசுவார்கள்.ஆனால் காலம் காலமாய் எபோதும் முன்னேறி இருப்பவன் பஞ்சப்பாட்டு பாடுவான். இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே!!.
   *************
   பாரதி பற்றி முதலில் திரு மணிமாறன் எழுத்தில் படித்தேன்,பிறகு உங்களின் கருத்து அருமை.
   *********
   பாரதி மட்டும் அல்ல,அக்கால்த்தில் பல தலைகள் எல்லாமே வெள்ளைகாரனை எதிர்ப்பது போல் ,பாவலா காட்டினார்கள் என்பதே நம் கருத்து. உண்மையாக எதிர்த்வர்கள் காணாமல் போனார்.இப்போ நம்ம அரசியல் கட்சிகள்போல்தான் பிழைப்புவாதம்.
   ************
   பெரியாருக்கு பாவலா காட்டுவது பிடிக்காது ,நேரடியாக சொல்லிவிடுவார், அதுதான் அவரின் சிறப்பு.பெரியாரை பல வேடதாரிகளுக்கு பிடிக்காமல் இருப்பதில் வியப்பு இல்லை.
   *************
   குழந்தை ஒரு நகைச்சுவை இயக்கத்தை தூக்கி பிடித்த‌வுடன் பின்னூட்டம் போடக்கூட பிடிக்காமல் வந்து விட்டேன்.

   நன்றி

   Delete
 3. சகோ.சார்வகன்,

  நன்று, நானும் இப்போ தான் பதிவிட்டேன்.

  ReplyDelete
 4. வாங்க நண்பர் வவ்வால்
  ஏதோ நம்மால் முடிந்தது!!!

  வெள்ளைக்காரன் ஆட்சியிலும் விமர்சித்தால் போட்டுத் தாக்கி விடுவான் என என் தாத்தா சொல்லி இருக்கிறார்!!!!!!அப்போதும் போட்டுக் கொடுக்கவும் ஆள் இருந்தாராம்!!!!!!!!

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
  நன்றி

  ReplyDelete
 5. எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 6. நானும் பதிவு விட்டேன் ......

  ReplyDelete
 7. இன்றே அனைவரும் பதிவிட ஆரம்பித்து விட்டீர்களா? நல்லது ...ஒன்றுபட்டால் நமக்குண்டு எழுத்துரிமை, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் சிறையே.

  ReplyDelete