Saturday, November 17, 2012

(சான்றுகளை) சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!!


 வணக்கம் நண்பர்களே,

நிகழ்வின் சான்றுகளை சீர்தூக்கி பார்த்து அலசி,பொருந்தும் விளக்கம் அளிப்பதே அறிவியல். இந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது ஒரு உண்மையை அறிய விரும்புவரின் கடமை ஆகும்.. நாம் பார்த்த  சில காணொளிகளை இப்பதிவில் பகிர்கிறோம். நம் பதிவுகளில் ஏற்கெனவே விவாதித்த பல விடயங்களை எளிமையாக விளக்குகிறது.

முதல் காணொளி எளிமைப்படுத்தபடாத சிக்கலான வடிவமைப்பு[irreducible complexity] என்னும் பரிணாமத்தின் எதிர் வாதம் பற்றியது இதை நாம் ஏற்கெனவே இப்பதிவில் விளக்கி இருக்கிறோம்.இரண்டாம் காணொளி விடை தெரியா கேள்விக்கு வித்தகனே காரணம் என நம் ஆத்திக சகோக்கள் கூறுகின்றனர்.

நாம் விடை தெரியா என்பது விளக்க ஏதுவான சான்றுகள் இல்லை என்பதால் மட்டுமே. விடை தெரியா கேள்வியின் காரணியாக இயற்கைக்கு மேம்பட்ட சக்தியை சுட்டும் நம் சகோக்கள் அதனையும் சான்றுகள் மூலம் நிரூபிக்க இயலாது என்பதை அறிந்தாலும் அலட்டிக் கொள்வது இல்லை.

அதாவது ஒரு அறிவு வாய்ந்த சக்தி,எந்த தேவையுமற்ற எப்போதும் இருக்கும், எதையும் சூன்யத்தில் இருந்து உருவாக்க முடியும்.அதுவே கடவுள்(கள்) என பெயர் இடுகின்றார். ஆண்டவன் கட்டளை என பல சட்ட திட்டங்கள் போடுபவர்கள், கடவுளை நிரூபிக்க முடியுமா என்றால், கடவுள் இல்லை என நிரூபிக்க முடியுமா என ப்ளேட்டை திருப்பி போடுவார்கள்.அப்படி யார் நிரூபணம் கொடுக்க வேண்டும் என்பதை இக்காணொளி விளக்குகிறது.
மூன்றாம் காணொளி பூமியின் வரலாற்றை விளக்குகிறது. புவியியலும்,பரிணாமமும் இரட்டையர் என்றால் மிகையாகாது.பொறுமையாக பாருங்கள்.

நான்காம் காணொளி பகுத்தறியும் சிந்தனை என்பதைப் பற்றி எப்படி சான்றுகளை சீர்தூக்கிப் பார்த்து பொருந்தும் விளக்கம் அளிப்பது என்பதை விள்க்குகிறது. சிறிய காணொளி
ஐந்தாம் காணொளி ஏன் பல இயற்கைக்கு மேம்பட்ட சக்திகளை ஏதோ ஒருவகையில் வசப்படுத்துவேன் என்பவர்கள் வெளிப்படையாக பேசுவதில்லை என்பதும்,எதையும் தெளிவாக பேசுவதில்லை என்பதையும் அலசுகிறது. நம் பதிவு விவாதங்களை படிக்கும் நண்பர்கள் இதனை உணர முடியும்.

பாருங்கள் ஆக்க பூர்வமாக கருத்து பரிமாற்றம் செய்வோம்.

நன்றி!!!!!!!!!!!!!!!

11 comments:

 1. சார்வாகன், Urgent, எல்லா வீடியோக்களையும் ஒண்ணாப் போட்டீங்கன்னா யாரும் படிக்க/பார்க்க மாட்டர்கள்; கிரகிக்க முடியாது; பகுதிகளா பிரித்து போடவும்...

  ReplyDelete
  Replies
  1. நண்பர் நம்பள்கி,
   இக்காணொளியில் உள்ள அனைத்துமே ஏற்கெனெவே நம் பதிவில் அலசிய விவரங்கள்தான் இவை சும்ம ரெஃபெரென்ஸ் மாதிரி . எனினும்வரும் காலத்தில் நீங்கள் கூறியது போல் சிறிது சிறிதாக பதிவிட முயல்கிறேன்.
   கருத்துக்கு நன்றி

   நன்றி

   Delete
 2. ஆம் சகோ, ஒன்று ஒன்றாக போடுங்கள். ஒரு காணொளியை மையப்படுத்தி பதிவேற்றுங்கள் .. too much of anything good for .... !??? ஏனெனில் தமிழர்கள் மகா சோம்பேறிகள்.

  ReplyDelete
  Replies
  1. //ஏனெனில் தமிழர்கள் மகா சோம்பேறிகள்.//

   அது எப்படீங்க, கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க?

   Delete
  2. ஐயா ! பாம்பின் கால் பாம்பறியாதா என்ன ? அவ்வ்வ்

   Delete
  3. நண்பர் இக்பால்
   வரும் காலத்தில் நீங்கள் கூறியது போல் சிறிது சிறிதாக பதிவிட முயல்கிறேன்.
   கருத்துக்கு நன்றி

   வணக்கம் கந்தசாமி அய்யா,
   வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 3. My comment on
  http://suvanappiriyan.blogspot.com/2012/11/blog-post_2882.html
  குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!
  சகோ சு.பி
  நல்ல பதிவு
  எனினும் சில விவரங்கள்.

  1.குதிரை என அரபி மூலத்தில் இருக்கிறதா? இப்படி செயல் செய்யும் எதையும் இதற்கு பொருத்தலாம் அல்லவா?

  2. அரபி மூலத்தில் சத்தியமாக என இருக்கிறதா ?

  3. நீங்கள் அண்ணன் பி.ஜே மொழியாக்கம் காட்டுகிறீர்கள் ,அல்லாஹ் 5 ஆம் வசனத்தில் ஒரே ஒருமுறை சத்தியம் செய்கிறார். இங்கே பாருங்கள்.

  //100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
  100:2. பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
  100:3. பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
  100:4. மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
  100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
  100:6. நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
  100:7. அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
  100:8. இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.//

  இங்கே 1,5 வசனங்க்களில் இருமுறை அல்லாஹ் சத்தியம் செய்கிறான். குதிரை அடைப்புக் குறியில் வருகிறது.

  ஆகவே சத்தியம் மூல மொழியில் இருக்கிறதா,மொழியாக்கத்தில் சத்தியம் எத்த்னை முறை போடலாம்? அல்லாஹ் ஏன் சத்தியம் செய்ய வேண்டும்?

  4.// குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்'/

  குர்ஆன் 16:8 கோவேறு கழுதை படைப்பா? அல்லது................????
  அறியாதவற்றை இனி படைப்பான் என்றால் எப்போது, இந்த வசன்ம் என்ன கூறுகிறது??
  5. //அன்றைய அரபுகள் பார்க்காத எத்தனையோ வாகனங்களை இன்று பார்த்து அனுபவித்து வருகிறோம். அன்றைய காலத்தில் இது போன்ற முன்னேற்றம் ஏற்படும் என்று எவருமே சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.//
  அல்லாஹ் &முகமது(சல்) உட்பட ஹி ஹி

  நம் கேள்விகளுக்கு எப்படியாவது[சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை!!] பதில் சொல்லாவிட்டல் கிடைக்கும் சுவனக்கன்னிகளின் [ஹூரி] எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விடும்.

  நன்றி

  5.

  ReplyDelete
 4. வணக்கம்
  முயற்சிக்கிறேன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 5. .நான்.................. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை மும்பையில் நடத்தவிடமாட்டேன். மீறினால், வாங்கடே/பிரபோர்ன் கிரிக்கெட் ஸ்டேடிய பிட்சை கொத்தி குதறி பெயர்த்து சேதப்படுத்துவேன்..! ஹா....ஹா.....ஹா......
  ஆனால்.................. மும்பை தொடர் குண்டு வெடிப்பின் சூத்ரதாரி என்று கோர்ட் மரண தண்டனை அறிவித்து 'பயங்கரவாதி' என்று இந்தியா தேடி வரும்... தாவூத் இப்ராஹிமின் 'நேரடி சம்பந்தி'யான பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டடை என் வீட்டுக்கே வரவழைத்து, விருந்து எல்லாம் போட்டு கவுரவித்து... "ஜாவித், நான் உனது ஆட்டத்தின் ரசிகன்டா கண்ணா" என்று கூடி கொஞ்சி குலாவிக்கொண்டே சொல்லுவேன்..! ஹி..ஹி..ஹி......
  ஆனால்.................. சுமார் 900 பேர் கொல்லப்பட்ட மும்பை கலவர வழக்கில், ஜஸ்டிஸ் ஸ்ரீ கிருஷ்னா அறிக்கை வந்து... 'சிவசேனைதான் கலவரத்துக்கு மூல காரணம்' என்று கையும் கலவரமா பிடிச்ச போது... என்னுடைய சிவசேனை எம்பி மாதுக்கர் என்பவரை ஜெயிலுக்கு அனுப்பிட்டு... நான் மட்டும் தப்பிச்சிகிட்டேன்...! ஹோ....ஹோ....ஹோ....
  நான்.................... யார் தெரியுமா..?
  குளூ:- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கடவுள்'...!
  இப்போ நீங்களே கண்டுபிடிங்க...!

  https://plus.google.com/u/0/101423137068653176551/posts

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இப்பூ,
   ஸலாம். இது தெரியாதா. இன்னும் த்கவல் சொல்கிறேன்.
   சிவசேனா என்பது மும்பையில் தமிழர்களுக்கு எதிரான மராட்டி இனவாத இயக்கமாகவே ஆரம்பிக்கப் பட்டது.

   நாளடைவில் பாபர் மசூதி சார் அரசியலில் இந்துத்வ கொள்கையையும் ஏற்றுக் கொண்டது. மும்பை கல்வரங்களை விசாரிட்த கிருஷ்னா கமிசன் அறிக்கை குப்பைக்கு சென்றது.

   இன்னும் தாக்கரே &கோ மைக்கேஎல் ஜாக்சனை அழைத்து விழா நடத்தியதை விட்டு விட்டீர்களே,
   **********
   ஆனாலும் சகோ இப்பூ ,தமிழ்மணம் முழுதும் இருக்கிற முனாஃபிக் தாவாவாதிகள் யாருமே இதை கண்டுக்கலை. உண்மையான் த்வாவாதி உங்களுக்கு மட்டுமே தெரியுது,புரியுது.
   அவர்களுக்கு தீபாவளித் துப்பாக்கிதான் வில்லன்.நிஜ துப்பாக்கி வில்லன்களைக் கண்டால் பயம்.

   எனினும் பால் தாக்க்ரே, மோடி போன்றவர்களையும் படைத்தது அல்லாஹ்தானே??
   அல்லாஹ்வே மிக சிறந்த சதிகாரன்!!!
   நன்றி!!!

   நன்றி!!!

   Delete
 6. வணக்கம் சகோ,
  சான்றுகள் எத்தனை தந்தாலும் ஏற்க மறுப்பவர்கள் தான் மதவாதிகள்.அதிலும் மூமின்கள் மறுத்துதான் ஆகவேண்டும் இல்லையேல் மறுமை என்ற என்றும் வாழும் கற்பனை எதிர்பார்ப்பு,சொர்க்கம் கிடைக்காமல் போய்விடும் என்கிற பேராசை,நிந்தனை செய்தால் தண்டனை பயம் இவைகளைத் தாண்டி அவர்களால் சிந்திக்க வாய்ப்பில்லை.

  //4.// குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்'//

  ம‌னித‌ர்க‌ள் ப‌ய‌ண‌த்திற்காக‌ ஏறிச் செல்ல‌க் கூடிய‌தாக‌ அல்லாவின் க‌ண்டுபிடிப்பு இந்த‌ வில‌ங்கின‌ங்க‌ள் ம‌ட்டுமே! இத‌ற்கு மேல் தெரியாத‌தால் நீங்க‌ள் அறியாத‌வ‌ற்றை இனி ப‌டைப்பான் என்று பொதுவாக சொல்லிவிட்டால்,இனி என்னென்ன‌ உல‌கில் ப‌ய‌ணிக்க‌ ஏதுவாக‌ வில‌ங்கின‌ங்க‌ள் இருக்கின்ற‌தோ அவைக‌ளைக் குறிப்பிடுவ‌தாக‌ அமைந்துவிடும் அல்ல‌வா!அத‌ற்காக‌த்தான் இந்த‌ முன்னெச்ச‌ரிக்கை ஏற்பாடு. மூமின்க‌ள் பில்ட‌ப் செய்வ‌துபோல் ந‌வீன‌ ராக்கெட் வ‌ரை சிந்திக்கின்ற‌ திற‌ன் அல்லாவுக்கு ஏது? விலங்கினங்களிலேயே அதைத் தாண்டி சிந்திக்க அல்லது படைக்க வக்கில்லாதவனுக்கு நவீனங்களைப்பற்றிய அறிவு இல்லை என்பதே உண்மை.

  ReplyDelete