Thursday, November 8, 2012

பிராமணாள் மெஸ் மட்டும் இல்லாமல் போனால் போதுமா?? இன்னும் நிறைய இருக்கு தோழர்களே!!


நாம் யார் எது சொன்னாலும் அது சரியா என பரிசோதித்து ஏற்பதையே பகுத்தறிவு என்கிறோம். மனிதனின் எண்ணம்,சொல் ,செயல் மூன்றும் ஒரே மாதிரி உள்ளவர்களே சரியாக இருப்பதாக சொல்ல இயலும். வெளிப்படையாக ஒரு நோக்கத்திற்காக  செயல் செய்வது ஒன்று , எதற்கோ செய்து விட்டு ஏதோ ஒரு விளக்கம் அளிப்பது மற்றொன்று.

எதற்கு இந்த அடித்தளம் சகோ என்கிறீர்களோசில பகுத்தறிவுப் பதிவுகளில் "பிராமணால் மெஸ் " என பெயர் வைத்த கிருஷ்னய்யர் என்பவரை கடையை மூடி ஓட வைத்ததை பெருமை பாராட்டி எழுதியதை படித்த விளைவுதான்.

அவர் பெயரே கிருஷ்னய்யரா அல்லது கிருஷ்னன் பெயரோடு சாதிப் பெயர் சேர்த்தாரா த் தெரியவில்லை.சாதிப்பெயர்  பெயரில் சேர்ப்பதோ,இல்லை நிறுவனங்களில் பயன்படுத்துவதோ விர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.சரி சாதிப் பெயரை எதிர்த்த நாத்திக தோழர்களுக்கு நன்றி சொல்லப்போகிறேனா என்றால் இல்லை. அவர்களின் விளக்கத்தில் நமக்கு நம்பிக்கை இல்லை.

சரி என்ன விள்க்கம் சொல்கிறார்கள்.

1. பிராமணர்,ஷத்ரியர்,வைசியர் ,சூத்திரர் என்பது வர்ணங்கள்.

2. இந்த வர்ணத்தில் இருந்தே அனைத்து சாதிகளும் உருவாகின.

ஆகவே வர்ணத்தை மட்டும் எதிர்க்கிறோம்.சாதிகளை எதுவும் சொல்ல மாட்டோம் என்கிறார்கள்.அதாவது கிருஷ்னன் "அய்யர் மெஸ் என்று பெயர் வைத்து இருந்தால் எதிர்க்க மாட்டோம்  என பூடகமாக சொல்கிறார்கள்.இது தெரியாமல் கிருஷ்னய்யர் இவர்கள் சாதியையே எதிர்ப்பதாக் தவறாக கருதி கடையை மூடி விட்டு போய் விட்டார்.

சாதிப் பிரிவுகள் எப்படித் தோன்றின என்பது குறித்த வரலாற்று ஆய்வாளர்களில் ஒருமித்த கருத்து இல்லை.
http://en.wikipedia.org/wiki/Caste_system_in_India
http://en.wikipedia.org/wiki/History_of_the_Indian_caste_system

The origins of the Jati caste system are lost in history and folklore. Many scholars believe that the modern Jatis represent ancient tribal and occupational affiliations that have evolved and specialised over time. A question had remained whether or not castes are genetically distinct, and whether genetic differences between groups might partly explain their origin. These genetic studies have so far failed to achieve a consensus, possibly because of the developing nature of genotyping science and technologies.[1][2]

வர்ணம் என நான்கு பிரிவுகளில் இருந்தே  னைத்து சாதிகளும் தோன்றின என எப்படி சொல்கிறர்கள் என நமக்கு புரியவில்லை.பண்டைய புராணங்கள் மட்டுமே அப்படிக் குறிப்பிடுகின்றன.அதை ஏற்கலாமா?? அம்பேத்காரின் ஆய்வுகளின் படி அசோகரின் ஆட்சிக்குப் பிறகு வீழ்த்தப்பட்ட பவுத்த சமயத்தினரே தலித் ஆகிறார் என குறிப்பிடுகிறார்.

நம்க்கு வரும் கேள்விகள்

1.இந்தியாவில்[தமிழ்நாட்டில்] உள்ள அனைத்து [அல்லது பெரும்பான்மையான] சாதிகளும் ஏதோ ஒருவகையில் நான்கில் ஒரு வர்ணத்தோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்களா?

2. பல சாதிகளின் பெயர்கள்,மொழிகள் மாறி வந்துள்ளன.வர்ணம் மாறாமல் அனைத்து சாதிகளுமே எப்போதும் தொடர்கின்றனவா?

குறிப்பாக அரசர்கள் பலரின் சாதியோ,வர்ணமோ கூட சரியாக அறியமுடிவது இல்லை.

நம்மைப் பொறுத் வரை சாதி என்பது அகமண முறை கொண்ட இனக்குழுக்கள்.


முதலில் வலிமை கொண்ட இனக்குழுக்கள் ஆட்சியைக் கைப்பற்றி ,தங்கள் வசம் போர்,சட்டம் ஒழுங்கை வைத்த்ன. மதகுருக்கள் ஆள்பவனுக்கு சாதகமாக புராணக் கதைகள் கதைகள் எழுதி இன்னும்  ஆண்டவன் அவன் அனுப்பிய புருஷன் என புகழ் பாடினர்.


ஆகவே இனக்குழுக்கள்  வர்ணமாக வகைப்படுத்தப் பட்டு இருக்கலாம் என்பதே நம் கருத்து.சாதி உயர்வு தாழ்வு வர்ணத்தினால்(திணிக்கப்பட்ட தொழிலினால்) வந்தது.

சாதி ஒழிய வேண்டும் எனில் சமுகத்தில் பெரும்பான்மை கலப்பு திருமணங்கள்தத்து எடுத்தல் மட்டுமே தீர்வு தரும்.

சரி சாதியின் வரலாறு குறித்து இன்னொரு சமயம் அலசுவோம்.

அதாவது வர்ணம் என்னும் தொழில் சார்ந்த விடயத்தை ஒழித்தால் சாதி உயர்வு தாழ்வு ஒழியும் என்பதை கொள்கை அள்வில் ஏற்கிறோம்.

ஆனால் பிராமணாள் மெஸ் மட்டும் ஒழித்தால் போதுமா? இதோ இன்னும் இரு வர்ணங்கள் தருகிறோம்.


திரு விஜயகாந்த் நாயகனாக நடித்து. மறைந்த திரு திலகன் நடித்து "சத்ரியன்" என ஒரு திரைப்படம் வந்ததுயாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே!!
ஆண்ட பரம்பரை என கூறும் சாதித்த்லைவர்களை யாரும் கண்டிக்கவில்லையே!!
பல் சாதியினர் தங்கள் வர்ணத்தையும் சேர்த்து புகழ் பாடுகிறார். அதை என்ன செய்வது?
சரி கரூரில் கரூர்வைஸ்யா வங்கி உண்டு.இதுவரையில் யாரும் போராட்டம் நடத்தவில்லையே!!!

இந்தியா முழுதும் வைஸ்யா வங்கியும் உண்டு.இங்கும் அப்படித்தான்.


ஆகவே  ஒரு ஆதிக்க சாதியினர் இன்னொரு ஆதிக்க சாதியை எதிர்ப்பது சாதி ஒழிப்பு அல்ல!!!ஆகவே பிராமணாள் மெஸ் எதிர்த்த தோழர்களே ,என்ன செய்யப் போகிறீர்கள்!!!!!!!!இராமன் பரசுராமன் மோதலில் சம்புகனுக்கு என்ன இலாபம்!!!!!!!!!!!!!!

சாதிப்பெயர் அனைத்திலும் தவிர்ப்போம். 


டிஸ்கி:
பரிணாமத்தின் படி மனித இன‌மே ஆப்பிரிக்க குரங்கு வகைகளில் இருந்து பரிணமித்து உலக முழுதும் பரவியவையே.ஆகவே மரபணுரீதியாக அனைவருக்கும் தொடர்பு உண்டு. இன்னும் தமிழக,இந்திய  சாதியினரிடையே நடத்தப்பட்ட பல மரபணு ஆய்வுகளின் படியும் வர்ண ரீதியான முடிவுகள் எட்டப்படவில்லை.
அனைவரும் முடிந்தால் இந்த ஆய்வுக் கட்டுரைகளை படிக்க வேண்டுகிறேன்.
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf

Thus, the caste populations of Tamil Nadu are characterized by a high levels of heterozygosity and almost similar allele frequency profiles. This suggests that these populations might have a common ancestry or probably experienced very high gene flow during the period of their coexistence. The above finding is substantiated by moderate genetic differentiation irrespective of the social diversity of the caste groups
and their varying migration periods.

http://blogs.discovermagazine.com/gnxp/2011/03/genetics-as-the-myth-buster-indian-edition/
ஆகவே வர்ணப்பிரிவு என்பது இல்லை அல்லது மாறிவிட்டது.

நன்றி  

78 comments:

 1. நல்ல பதிவு
  எனக்கும் இது போல் ஒரு சந்தேகம் நீண்ட நாட்களாக உண்டு. சாதி ஒழிப்பு வர்ணபிரிவு ஒழிப்பு
  என்று ஒரு பிரிவினரை எதிர்ப்பதோடு பெரும்பாலும் நின்று விடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஆதிக்க சாதியை எதிர்த்தவர்களி்லே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினர் தங்களின் ஆதிக்கத்தை மற்ற பிறரின் மீது காட்ட தலைப் படுகின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. வானம் எனக்கொரு போதி மரம்

   சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

   சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

   தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

   பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

   இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குலுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

   அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது?

   நல்லையா தயாபரன்

   Delete
 2. //சாதி ஒழிய வேண்டும் எனில் சமுகத்தில் பெரும்பான்மை கலப்பு திருமணங்கள், தத்து எடுத்தல் மட்டுமே தீர்வு தரும்//

  இதற்கு இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் போல் இருக்கிறது :(
  கீழே இன்றைக்கு தட்ஸ் தமிழில் வந்திருக்கும் செய்தியை பாருங்கள்

  http://tamil.oneindia.in/news/2012/11/08/tamilnadu-love-torches-village-164351.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் கரிகாலன்,
   பதிவை சரியாக் புரிந்தமைக்கு நன்றி.9ஒரு) வர்ணத்தை மட்டும் ஒழிப்போம்,சாதியை கண்டு கொள்ளமாட்டோம் என்பது எனக்கு முரணாக் தெரிகிறது.

   நன்றி!!!

   Delete
 3. வவ்வால் ஒரு பக்கம் நீங்க ஒரு பக்கம் ஒவ்வொன்றையும் தோண்டி நொங்கெடுத்துக் கொண்டேயிருக்குறீங்க.

  ஆனால் எங்கேயிருந்து தான் குழப்பமாகயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் ஜோதிஜி,
   நலமா. இப்பதிவில் பகுத்தறிவு தோழர்களின் மீது இருகுற்றசாட்டுகளை வைக்கிறோம்.
   1. நாத்திகம்,சாதி ஒழிப்பில் வரலாறு,அறிவியல் கண்ணோட்டம் இல்லை.

   2. வர்ணம் எதிர்ப்போம, சாதி பிறகு பார்க்க்லாம் என்பது முரண்.சரி அதிலும் பிராமணர் தவிர பிற வர்ணப் பெருமைகளையாவது எதிர்க்கலாமே என்றே கேட்கிறோம்.

   நாம் தொடங்குவது மனிதத்தில் மட்டுமே.

   நன்றி!!

   Delete
 4. வணக்கம் சகோ,

  //சாதி ஒழிய வேண்டும் எனில் சமுகத்தில் பெரும்பான்மை கலப்பு திருமணங்கள், தத்து எடுத்தல் மட்டுமே தீர்வு தரும்//

  உண்மைதான் சகோ.இதைத்தான் பெரியாரும் சொல்லிக் கொண்டே இருந்தார். இதில் என்ன வேடிக்கை எனில் காதல் திருமணம் செய்து கொண்ட சிலர் கூட தன் பிள்ளைகளுக்கு காதலில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இதை எங்கே போய் சொல்வது??

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் இனியவன்,
   இன்றைய இந்த இரட்டை வேடப்போக்கினால்தான் தமிழ்நாட்டில் பெரியாருக்கு பின் நாத்திகம்,சாதி ஒழிப்பின் வீர்யம் குறைந்தது.
   நன்றி

   Delete
 5. வணக்கம் சார்வாகன், நீங்களும் மற்றவர்கள் போலவே சுருக்கியே புரிந்து கொண்டீர்கள். பகுத்தறிவு, இறைமறுப்பு போன்றவை பெரியாரின் இயக்கம் தொடங்கிய ஆரம்பகாலத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கள். ஏறக்குறைய 80 வருடங்கள் முன்பு முக்கால்வாசிப்பேர் படிப்பில்லா தற்குறிகளாக இருந்தனர். எல்லாப் பதவியிலும் இரண்டிலும் ஒருவர் பார்ப்பனராக இருந்தனர். பார்ப்பன எதிர்ப்பும், பகுத்தறிவும் இந்நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது. இப்போது பகுத்தறிவு என்ற சொல்லை மதவாதமும் பயன்படுத்துகிறது. அதனால் பகுத்தறிவு சண்டைக்கு வரவில்லை. ஜாதிக்கொடுமை நீங்கத்தான் இஸ்லாமைத் தழுவச் சொன்னார் பெரியார். அதற்காக அவர் இஸ்லாமை முழுமையாக அறிந்து கொண்டு அதைச் சொல்லவில்லை. ஜாதி எதிர்ப்பாகத் தொடங்கிய இயக்கம்தான் அவருடையது. அதனால்தான் அவர் மற்ற மதத்தை பெரியதாக விமர்சிக்கவில்லை. ஜாதிக்கொடுமை நீங்க வேறு மதத்தை தழுவிக்கொள்ள வலியுறுத்தினார். மற்ற மதத்தை விமர்சித்துத் தன் மேதமையைக் காட்டிக் கொள்வதை விட தாழ்த்தப்பட்டவர்களின் ஜாதிக் கொடுமை நீங்கிட அவர் அப்படிச் சொன்னார் அவ்வளவே. மற்ற மதங்களை விமர்சிக்காதது பாரபட்சம் அல்ல அது அரசியல்தான். அவர் தன்னை பகுத்தறிவின் முழுமை என்று சொல்லிக் கொள்ளவில்லை. வர்ணாசிரம தர்மம் என்ற பெயர் புழக்கத்தில் இல்லையே தவிர அது நடைமுறையில் இருக்கிறது. அதன் தலைவர்களாகப்பார்ப்பனர்களே இருக்கிறார்கள். இன்று வரை ஜாதியின் அடையாளமாகப் பூணூல் அணிகிறவர்கள் அவர்களே. ஜாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்கிறவரும் அவரே அதிகம். ஏன் எல்லாரும் பிராமணர் என்று சொல்லாமல் பார்ப்பனர் என்று சொல்கிறோம் ? அதுதான் காரணம்.

  பெரியார் திகவினர் எல்லா ஜாதிக்கும் எதிராகப் போராடி வருகின்றனர். கடந்த இரட்டைக்குவளை முறைக்கு எதிராக தாங்கள் இருக்கும் பகுதிகளில் அவ்வப்போது இது போன்று நடத்துகிறார்கள். கலப்புத் திருமணம் செய்து வைக்கிறார்கள். சென்ற மாதம் மேட்டுப்பாளையத்தில் கவுண்டர் ஜாதிக்கெதிராகப் போராட்டம் நடத்தினார்கள். இதெல்லாம் ஃபேஸ்புக் தாண்டி வெளிவராத செய்திகள். தற்போது பிராமணாள் கஃபேயை எதிர்த்த செய்தி மட்டும் ஊடகங்களில் வெளிவந்து, எல்லோரும் கேட்கிறார்கள். ஏன் பிராமணரை மட்டும் எதிர்க்கிறீர்கள் என்று. மற்ற ஜாதிக்காரர்களை எதிர்த்தால் கொன்று விடுவார்கள், அப்பாவி பிராமணர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்ற துணிச்சல் என்கிறார்கள். பிராமண எதிர்ப்பு மட்டுமே ஊடகத்தில் வெளியாகி விவாதப் பொருளானதன் ரகசியம் என்ன ? எந்த ஜாதிப் பெயர் வைத்தாலும் கேவலம்தான். மற்ற ஜாதியுடன் உள்ள பெயர்களிலெல்லாம் கடை இருக்கிறது அதை எதிர்க்கவில்லையே என்றால் எல்லா இடத்திலும் போராட்டம் நடத்தாதாலேயே அது ஆதரிக்கப்படுகிறது என்று ஆகிவிடுமா ? இதே கடை கிருஷ்ணய்யர் கஃபே என்று இருந்த வரை எதிர்க்கப்படவில்லை. பிராமணர் கஃபே என்று மாற்றப்பட்டது. பின்பு பலமுறை கேட்டுக் கொண்டும் அவர்கள் மறுத்ததால்தான் போராட்டம் நடைபெற்றது. பெரியார் திகவினர் ஜாதியத்தின் அடிப்படையை எதிர்த்தார்கள். ஜாதிய எதிர்ப்பின் ஒரு அங்கம்தான் இது என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வங்க நண்பர் தமிழானவன்,
   தந்தை பெரியார் ஒரு சகாப்தம்.தன் வாழ்நாளில் பல மாற்றங்களை தைரியமாக் செய்ய முயற்சித்து அதில பல்வற்றில் வெற்றியும் கண்டவர். தமிழ்நாட்டில் பெரும்பான்மையோர் சாதிப்பெயர் தங்களின் பெயரில் தவிர்த்தது அவ்ரின் சாத்னை ஆகும்.
   இங்கு நான் சொல்வது.இபோதைய சூழலில் நடப்பது பற்றி
   1. தி.க தோழர்களுக்கு சாதி குறித்த வரலாறு,அறிவியல் கண்ணோட்டம் இல்லை.

   2.பிராமணர்களை மட்டுமே எதிர்க்க துணிபவர்கள் ஏனைய சாதியினரை கண்டுகொள்வது இல்லை.

   பிராமணர்கள் மதம் மூலம் மக்களை சுரண்டினர் என்பதை ஏற்கிறென். இது எப்படி சாத்தியம் ஆன‌து என்றால் அரசர்கள் அவர்களுக்கு அளித்த ஆதரவுதான்.பிராமணர்களின் தவறுக்கு ஆண்டவர்களும் உடந்தைதான்!!
   அது யார் என்றே தெரியவில்லை!!

   ஆண்டவனும் தெரிவது இல்லை. ஆண்ட பரம்பரையினரும் யார் என‌த் தெரியவில்லை!!!

   ஆகவே ஆண்ட பரம்பரை என்பதே சாதியின் உச்சம்,இப்படிப் பெருமை பேசும் சாதியினரும் விமர்சிக்கப்ப்பட வேண்டும்.

   மரபணுரீதியாக தமிழர்களில் சாதி வித்தியாசம் கிடையாது.அதாவது தமிழக மக்கள் அனைவரும் ஒரே இனம் அல்லது ஜீன் கல்ப்பு மிக அதிகம் நடந்து உள்ளது.

   இந்த ஒரு விடயம் சாதிப் பெருமையை மண்ணாக்கி விடும்!.

   ஆகவே சாதி எதிர்ப்பும் வரலாறு,அறிவியல்ரீதியாக் முன்னெடுக்கபட வேண்டும்.
   வர்ணப்பெயர்கள் மட்டுமல்ல சாதிப் பெயர்களே பயன்பாட்டில் இல்லாமல் போக வேண்டும்.

   நன்றி

   Delete
  2. @தமிழானவன்
   உங்கள் கருத்துக்கள் அருமை
   //ஜாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்கிறவரும் அவரே அதிகம்//
   ஆனால் இது தவறு. இன்றும் பல திருமண பத்திரிக்கைகளில் அந்த நடு வர்ணத்தினர் அதிக அளவில் ஜாதி பேரை போட்டுக்கொள்கின்றனர்.
   ஒரு சந்தேகம் தலித் என்று கூட சிலர் தங்கள் பெயருடன் போடுகின்றனரே இது சரியா தவறா ?

   Delete
  3. சார்வாகன் நான் சொல்ல வந்தது இதுதான், மற்ற ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக திகவினர் பல்வேறு போராட்டங்கள், மாநாடுகள் நடத்துகிறார்கள். அவை செய்தியாக வெளிவரவில்லை. இது மட்டும் பெரிய விவாதப் பொருளானது ஏன் என்று பார்த்தால் தெரியும். ஆதிக்க ஜாதிகள் செயல்படுத்துகிறார்கள். பார்ப்பனர்கள் கருத்து ரீதியாக கட்டிக் காக்கிறார்கள். ஜாதிப்பெயர் வைத்துக் கொள்கிறவர்கள் அவரவரையும் அடுத்தவரையும் கேவல்ப்படுத்திக்கொள்கிறார்கள். நன்றி !

   Delete
  4. புரட்சி மணி, மற்ற ஜாதியினரும் போட்டுக்கொள்வதுண்டு, என்னதான் ஜாதிப்பெருமை பேசினாலும் வெளியே போட்டுக் கொள்ளத் தயங்குவார்கள். பெரும்பாலும் மற்ற ஆதிக்க ஜாதிகளில் இந்தத் தலைமுறை கிராமத்துப் பெண்கள் அறவே ஜாதி உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் சின்மயி, அனுஜா ஐயர், ஜனனி ஐயர் என்று நகரத்துப் பெண்களுக்குக் கூட அந்தப் போலிப் பெருமிதம். சில தலித்களும் கூட தங்களுக்குள் பிரிவுகளிடனடிப்படையில் கீழ் மேல் ஜாதி பார்ப்பவர்கள்தான். தலித் என்றா போடுகிறார்கள். அது ஜாதிப்பெயரா அது ஒடுக்கப்பட்டவரின் குறியீட்டுப்பெயர்தானே ?

   Delete
 6. http://mukundamma.blogspot.in/2012/11/blog-post.html

  இதையும் படிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தமிழானவன்,
   இப்பதிவு படித்தேன். இப்படி ஒவ்வொரு சாதி மேட்டிமை பேசும் செயலும் வெளிக் கொண்டுவரப் பட்டு விமர்சிக்கப் பட வேண்டும்.
   இதைத்தான் சொல்கிறோம்.

   பிராமணர்களை மட்டும் விமர்சித்து சாதி ஒழிப்பு செய்ய முடியாது.பெரியார் காட்டிய சுயமரியாதைத் திருமணம் இந்த தலைமுறையில் எத்தனைபேர் செய்கிறார்?
   நன்றி

   Delete
 7. Hi, i accept the subjects and point put forth on the write-up. But the line
  //மதகுருக்கள் ஆள்பவனுக்கு சாதகமாக புராணக் கதைகள் கதைகள் எழுதி இன்னும் ஆண்டவன் அவன் அனுப்பிய புருஷன் என புகழ் பாடினர்.// seems to be an assumption. I also heard such things at lot of places, but is there a proof..

  ReplyDelete
  Replies

  1. வாங்க நண்பர் யுவா,
   மத்வாதிகள் எபோதும் ஆளும் வர்க்கத்தின் புகழ்பாடும் செயலை செய்வதே உலக முழுதும் நடைபெற்ற‌ நிகழ்வு.

   http://en.wikipedia.org/wiki/Devaraja
   Devarāja" is the Hindu-Buddhist cult of deified royalty in Southeast Asia.[1] It could be simply described as Southeast Asian concept of divine king. The concept viewed the monarch to possess transcendental quality, the king as the living god on earth, the incarnation of the supreme god, often attributed to Shiva or Vishnu. The concept is closely related to Indian concept of Chakravartin (universal monarch). In politics, it is viewed as the divine justification of a king's rule. The concept was institutionalized and gain its elaborate manifestations in ancient Java and Cambodia, where monuments such as Prambanan and Angkor Wat were erected to celebrate the king's divine rule on earth.   இராமாயணத்தில் சம்புகன் கொல்லப்பட்டது, மகாபாரதத்தில் ஏகலைவன் கதை,அரசர்கள் அவதாரங்களாக போற்றப்படுதல் போன்றவை படித்ததே இல்லையா????

   இந்தியாவில் வர்ண ,சாதி உயர்வு தாழ்வே இருந்தது இல்லை என்பதும் பொய்,
   பிராமணர்கள் மட்டுமே அதன் காரணம் என்பதும் பொய்.ஆள்பவர்களை திருப்தி படுத்தவே பிராமணர்கள் என்னும் மத குருக்கள் புராணக் கதைகளை எழுதினர் என்பதே உண்மை.


   நன்றி

   Delete
  2. http://en.wikipedia.org/wiki/Manusm%E1%B9%9Bti
   Some other features of Varn classification are as follows: [42]
   1. Division of society into four varnas. Out of these only the first three, namely, Brahmins, Kshatriya and Vaishya, are collectively known as dwija (twice-born) are entitled to upanayan and the study of the Vedas. Shudras as well as women of dwija varnas, who had no use of learning Vedas because of kind of their responsibilities, were advised not to study of Vedas. However, Shudras could qualify to upper class by remaining clean, with observing polite behaviour and company of other three varnas.[43]

   2. Assigning different duties and occupations for different varnas. According to Manusmriti, if a person of lower caste desires to adopt the occupation of a higher caste, he'll have to qualify for it by acquiring knowlwdge of Vedas.

   3. Treating Brahmins as superiors, because they had all the knowledge of Vedas and Shudras as inferiors, who had no knowledge of Vedas.

   4. Treating women as unequal. Women, that is, even women belonging to Brahmin, Kshatriya and Vaishya varna are not entitled to upanayan and the study of the Vedas. For them, marriage is equivalent to upanayan and service of their husbands is equivalent to the study of the Vedas in the gurukul. Even if the husband is morally degraded, engaged in an affair with another woman and is devoid of knowledge and other qualities, the wife must treat him like a god. This is done to avoid the breaking of families. Besides, women are not considered fit for being free and independent. They are to be protected in their childhood by father, in youth by husband and in old age by son. They should never be allowed by their guardians to act independently. A woman must never do anything even inside her home without the consent of her father, husband and son respectively. She must remain in control of her father in childhood, of husband in youth and of son after the death of her husband. However, they are given equal right in the parental properties by Manu to empower them.

   5. In fact, this system of graded inequality seems to be the very essence of the varna-vyavastha. Whether it is the choice of names, nor the manner of greeting, or the mode of entertaining guests, or the method of administering oath in the court, or the process of taking out the funeral procession, at each and every step in life, from birth to death, this system of graded inequality is to be applied and observed.

   6. Prohibiting inter-marriage between different varnas. According to Manusmriti, a dwija ought to marry a woman of his own varna. A woman of the same varna is considered best for the first marriage.

   7. Manu seems to be disapproving of pratiloma relationship more than the anuloma relationship, because he describes Chandalas as the lowest of the low castes.

   8. Granting divine and religious sanction to varna-vyavastha. Manu gives divine and religious sanctions to the varna-vyavastha by claiming divine origin for the varnas as well as for the Manusmriti and demanding obedience of it.

   9. Many Indians reject this varna-vyavastha which was advised 10,000 years ago, because it is irrational in present times as society has become cosmopolitan. The perceived unjust and undemocratic advices, are being opposed by some to be changed to democratic and attached with human values of liberty, equality and fraternity.

   Delete
 8. சார்வாகன்,

  நல்ல கேள்விகள் கேட்டு இருக்கிங்க.

  இதற்கு பெரியாரிஸ்ட்டுகள் சொல்லும் பதில் என்னவெனில் வர்ணாசிரமத்தின் மேல் அடுக்கில் பிராமணர்கள் உள்ளார்கள் அவர்களை மாற்றிவிட்டால் அடுத்த அடுக்கில் உள்ள உள்ள மற்ர வர்ணங்களை மாற்றிவிடலாம் என்பதே.

  ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதே கசப்பாண உண்மை. இரண்டாம் அடுக்கில் உள்ள வர்ணம் ,மூன்றாம் அடுக்கை அடக்க ஆசைப்படுகிறது. மூன்று நான்கை அடக்க ஆசைப்படுகிறது.

  இதனை தேவர் ஜயந்தி நடக்கும் போதெல்லாம் நடக்கும் கலவரங்கள் மூலமே அறியலாம்.

  எனவே இந்த வர்ண எதிர்ப்பினை தனி நபர் முன்னின்று நடத்தினாலும் அவருக்கு பின்னால் உள்ளவர்கள் அதனை அவர்கள் சார்ந்த வர்ண குழுவினரை மேம்பட்டவர்களாக வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள்.

  அரசு சில சட்டங்களை தயவு தாட்சயன்மின்றி நடை முறைப்படுத்த வேண்டும். புதிதாக கூட சட்டம் போட தேவையில்லை இருப்பதை செயல்ப்படுத்தினாலே இப்படி வர்ணாசிரம நிறங்கள் கலைக்கப்படும்.தேவைப்படின் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

  கரூர் வைஸ்யா வங்கி என பெயர் வைத்துள்ளார்கள், இப்படி வைத்தால் பதிய மாட்டேன் என ரிஜிஸ்ட்ரார் கம்பெனி மறுத்திருக்க வேண்டும், தானே வேறு பெயர் வைத்திருப்பார்கள்.

  மதச்சார்பற்ற நாடு என சட்டம் சொல்லும் நாட்டில் தி இந்து என ஆங்கில நாளேடு இருக்கிறது.

  எப்பொழுது செக்கியூலர் நாடு என அறிவித்தார்களோ அப்பொழுதே இது போன்ற வர்ணாசிரம ,மத பெயர்களை பொதுவில் வைக்க தடை செய்திருக்க வேண்டும்.

  அது எப்படி சுதந்திரத்துக்கு முன்னரே வச்ச பேரு என்றால், இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியாவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என பெயர் மாற்றவில்லையா அது போல இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் சில சீர் திருத்தங்களை கொண்டு வந்திருக்க வேண்டும்.

  பெரி

  பெரியாரின் பெயரில் இயங்கும் இயக்கம் வர்ணாசிரமத்தினை முழுதாக நீக்கும் என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பது மூடத்தனமே, ஏன் எனில் அதில் இப்பொழுது உள்ளவர்கள் ,அவர்களுக்கு அடுத்த அடுக்கு வர்ணாசிரமத்தை விட உயர்ந்தவர்கள் என நினைப்பவர்களே :-))

  ------------

  ஜோதிஜி,

  ஹி..ஹி ஏதோ பொழுது போகாம எதையோ எழுதினால் இப்படில்லாம் சொல்லிக்கிட்டு :-))

  ----------

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் வவ்வால்,
   அரை குறை வைத்தியம் மிக ஆபத்தானது என்றே கூறுகிறோம்.
   //இதற்கு பெரியாரிஸ்ட்டுகள் சொல்லும் பதில் என்னவெனில் வர்ணாசிரமத்தின் மேல் அடுக்கில் பிராமணர்கள் உள்ளார்கள் அவர்களை மாற்றிவிட்டால் அடுத்த அடுக்கில் உள்ள உள்ள மற்ர வர்ணங்களை மாற்றிவிடலாம் என்பதே.//

   இது ஒரு அரைகுறை வைத்தியம். கொக்கு தலையில் வெண்னெய் வைத்து பிடிக்கும் உலகமகா தந்திரம்.

   பிராமணர்கள் மோசம் ,விட்டுவிடுவோம்.ஏன் பிறர் தங்களின் சாதிப்பெயர்களை ,பெருமைகளை இப்போது விட்டுவிடக் கூடாது?

   எவரும் செய்ய த்யாராக இல்லை என்பது கசப்பான உண்மை சகோ!!.இந்த எதார்த்தம் புரிய வேண்டும்.அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதாரம் உறுதி செய்யும் அரசியல் அமைப்பு வரும் வரை சாதி இருக்கும்.

   சாதி ஒழிக்க வரலாறு,அறிவியல் கண்ணோட்டம் அவசியம்,சில சாதியினரின் பழக்க வழக்கங்களை கிண்டலடித்து ஒன்றும் செய்ய முடியாது.

   //பெரியாரின் பெயரில் இயங்கும் இயக்கம் வர்ணாசிரமத்தினை முழுதாக நீக்கும் என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பது மூடத்தனமே, ஏன் எனில் அதில் இப்பொழுது உள்ளவர்கள் ,அவர்களுக்கு அடுத்த அடுக்கு வர்ணாசிரமத்தை விட உயர்ந்தவர்கள் என நினைப்பவர்களே :‍))//
   பிராமணர்கள் ஆளும் வர்க்கத்தை அண்டிப் பிழைத்தனர் என்றால் ,ஆளும் வர்க்கம் பெரும்பானமையை சுரண்டியது என்றால் யார் முதல் குற்ற‌வாளி??


   இதைத்தான் நாம் கூறுகிறோம்.செய்வதைத் திருந்த செய்.இல்லாவிட்டால் ஒதுங்கு!!

   நன்றி

   Delete
 9. முதலில் சாதி ஒழியட்டும்.. எல்லோருக்கும் அறிவியல் கண்ணோட்டம் நிலை என்றும் வராது. தேவையில்லை.
  அதற்கு முதலில் பார்பனியம் ஒழிய வேண்டும். அதன் பின் வரும் அடுக்குகளுக்கு உள்ளார்ந்த பலம் எவ்வழியிலும் இல்லை. எந்த மத, தத்துவ பின்புலமும் இல்லை. அதனால் கீழே உள்ள அடுக்கு தானாக விழும். அய்யாவின் சிந்தனை ஆழமானது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ எஸெஸ்கே,
   ஒவ்வொரு சாதிக்கும் இபோது தத்துவ பின்புலமாக "ஆண்ட பரம்பரை வீழ்ந்தது எப்படி" என திரைக்கதை வசனம் எழுதிக் கொடுக்க ஆட்கள் உண்டு.

   ஆகவே சாதி ஒழிப்பு என்பதை தனிப்பட்ட வாழ்விலும் ஒவொருவரும் காட்ட முன்வர வேண்டும். சாதிப் பெயர் தவிர்த்தல்,கலப்பு திருமணம்,தத்து எடுத்தல் போன்றவை ஊக்குவிக்கப்ப்ட்டால் மட்டுமே சாத்தியம்.

   நன்றி!!

   Delete
 10. வணக்கம் நண்பா,
  மிகவும் அருமையான் பதிவு.
  இதற்குத் தான் நான்
  ஜாதியை ஒழிப்பது எப்படி?
  http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012_10_01_archive.html
  என்று பதிவிட்டேன். தற்பொழுது இட ஒதுக்கீட்டில் ஜாதியை விட முடியாது இருப்பினும் எதிர்காலத்தில் விட்டு விட வேண்டும்.
  பகுத்தறிவாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. உங்களுக்கு ?
  நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் புரட்சிமணி,

   அது என்னமோ குறிப்பிட்ட வர்ணம் ஒழிப்போம்,சாதீயம் அப்புறம் பார்த்துக்க்லாம் என்பது சரியாக படவில்லை. இட ஒதுக்கீடு என்பது ஆட்சி அதிகார குழுவில் அனைத்து சாதியினரும் இடம் பெற செய்தாலும், பலர் அங்கு எதையும் எடுத்து செய்ய இயலாதவ்ர்களாகவே இருக்கின்றனர்.
   அண்ணல் அம்பேத்கார் கூட தான் நினைத்த மாற்றங்களை அரசியல் அமைப்பு சட்டத்தில் கொண்டுவர முடியவில்லை என்னும் கருத்தையே கொண்டு இருந்தார்.

   இட ஒதுக்கீடு ஒரு தொடக்கம் மட்டுமே. ஒரு வேளை அனைவருக்கும் குறைந்த படச வாழ்வாதாரம், காதல் திருமணம் மட்டுமே இயல்பாக நடைமுறைக்கு வந்தால் சாதி இல்லாமல் போகும்.

   இன்னும் நீண்ட நாள் ஆகும்!!எனினும் இப்போதே அனைவரும் சாதிப் பெயர்களை பயன்படுத்துவது தவிர்ப்பதே நல்லது எனவே கூறுகிறோம்

   நன்றி!!

   Delete
 11. முதலில் வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் மனுஸ்ருமிதியை தடை செய்தாலே சாதி வெறியை குறைத்து விடலாம். கடவுள் பெயரால் உயர்ந்தவராக காட்டப்படும் பார்ப்பனர்களின் தகுதியை சமூகத்தில் கீழிறக்கி விட்டால் மற்றவை தானாக இறங்கி விடும். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் போகலாம்.

  வன்னிய பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக தலித் கிராமமே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

  November 8, 2012

  தர்மபுரி மாவட்டம் செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்.

  இவர் நத்தம் காலணியைச் சேர்ந்த இளவரசனை காதலித்தார்.

  இளவரசன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

  எனவே, திவ்யா வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

  இதனால் திவ்யாவின் தந்தை நாகராஜ், இளவரசன் வீட்டுக்கு சென்று தன் மகளை தன்னுடன் அனுப்பிவிடுமாறு கேட்டுள்ளார்.

  அதற்கு மறுத்துவிட்ட இளவரசன், திவ்யா இப்போது என் மனைவி இனி அவள் என்னுடன்தான் இருப்பாள் என்று உறுதியாக கூறிவிட்டார்.

  இதனால் மனமுடைந்த நாகராஜ் உறவினர்கள் தன்னை கேலி செய்வார்கள் என்று அஞ்சி புதன்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டார்.

  இதனையடுத்து செல்லம்பட்டியைச் சேர்ந்தவர்கள் நாகராஜின் உடலை வைத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தீ வைத்து எரித்தனர்

  அதே ஆத்திரத்தோடு, நத்தம் காலணி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும், பொருட்களையும் அடித்து நொறுக்கி, குடிசைகளுக்கு தீ வைத்தனர்.

  இதில் குடியிருப்புகள் மொத்தமும் எரிந்து சாம்பலானது.

  http://tamil.oneindia.in/news/2012/11/08/tamilnadu-love-torches-village-164351.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ சுவனப்பிரியன்,
   நீங்களும் தி.க தோழர்களின் கருத்தையே வலியுறுத்துகிறீர்கள். சாதி ஒழிப்பு என்பது ஒவ்வொருவரும் முன்னெடுத்து செய்ய வேண்டியது.சாதிப் பெயர் பயன்பாடு தவிர்ப்பு மிக அவசியம்.

   மனு ஸ்மிருதி ஒரு மனித விரோத கொள்கை நூல் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. சாதி உயர்வு தாழ்வுக்கு அது வித்டிட்டது என ஏற்றால் கூட ,இபோதைய சாதி பிரச்சினைகள் செய்வோர் அதைப் படித்தவர்களாக் இருப்பது சாத்தியமற்றது. பரம்பரையாக நாம் உயர்ந்தவர்,அவர்கள் தாழ்ந்தவர் என்னும் கருத்தே பரவுகிறது.இதுதான் இப்போதைய மனுஸ்மிருதி!!

   "ஒரு மனித்னை இன்னொரு மனிதனிடம் இருந்து மேலானவனாக காட்டும் எந்த புத்தகமும் தடை செய்யத் தக்கதே"

   பரிணாமம்&மரபியல் சார் அறிவியல் அறிந்தாலே அனைவரும் ஓர் இனம் என்பது புரிந்துவிடும்.கொடுத்த சுட்டிகளில் நன்கு விளக்கி இருப்பார்கள்.சாதி மேட்டிமைகள் காணாமல் போய்விடும்.

   நன்றி

   Delete
  2. மனுஸ்ருமிதியை தடை செய்தால் இசுலாமியர்களிடையே எப்படி சாதி வெறி குறையும் என சுவனபிரியர் விளக்கினால் தன்யனாவேன்! :)

   Delete
  3. சார்வாகன்
   //"ஒரு மனித்னை இன்னொரு மனிதனிடம் இருந்து மேலானவனாக காட்டும் எந்த புத்தகமும் தடை செய்யத் தக்கதே"//
   வாழபழத்துல ஊசி? :) :)

   Delete
 12. சார்வாகன்,
  இன்று வந்த ஹீரோ ஹோண்டா ஐயர் விளம்பர்ததுக்கு ஏன் இப்போ மற்ற ஜாதி குதிக்கணும். இது வர்ணத்தை குறிக்கவில்லையே? இதற்க்கு தி. க. வின் பதில் என்ன? இப்போ ஏன் எங்க ஜாதிப் பெயரையும் மோட்டார் பைக்குக்கு வைப்பீர்களா என்று கேட்க வேண்டும்?

  இந்த முட்டாள் தனத்தை எடுத்துக் காட்டத் தான் இந்த பதிவை எழுதினேன்.
  பிராமணாள் ஹோட்டல் என்று பெயர் வைத்தால் தப்பில்லை! லிங்க் கீழே; http://www.nambalki.com/2012/10/blog-post_5909.html

  இதை எழுதினதிற்கு காரணம் ஒன்று தான் பிராமனம் தப்பு (வர்ணம்) ஜாதிப் பெயரும் தப்பு என்று குரிப்பத்ர்க்காகாக. அப்படிதான் இருக்கு கிருஷ்னையார் மெஸ்; நாயுடு ஹால்.

  ஒரு மருத்துவர் ஒரு நோயாளியிடம் இப்படி சொன்னா எப்படி இருக்கும்?

  சொறி தான் உடம்புக்கு தீங்கு; சிரங்கு இருந்தால் தப்பில்லை...!?

  பி

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் நம்பள்கி,
   நம்ம தி.க தொழர்கள் இப்படியே சேம் சைட் கோல் போட்டே பெரியார் ஏற்றிய சுயமரியாதை தீயை பெரும்பான்மை அணைத்து விட்டார்கள்.புகை மட்டுமே மிச்சம்.சாதிப்பெயர் கூடாது என்றால் கூடாதுதான்.எந்த சாதியும் இதில் அடக்கம்.
   வர்ணம் பெயர் மட்டும் தப்பு,சாதி அப்புறம் பாக்கலாம் என்றாலே சாதி எதிர்ப்பு என்பது சிரிப்புக்கு உள்ளாகி விடும்.இதற்கு சும்மா இருக்கலாம்!!!

   சரியாக‌ சொன்னீர்கள் சொரி என்ன ? சிரங்கு என்ன?

   நன்றி!!!

   Delete
  2. @சார்வாகன்
   //அது என்னமோ குறிப்பிட்ட வர்ணம் ஒழிப்போம்,சாதீயம் அப்புறம் பார்த்துக்க்லாம் என்பது சரியாக படவில்லை.//
   உண்மைதான் நண்பா இது காமெடியாதான் தெரியுது

   @
   //பிராமனம் தப்பு (வர்ணம்) ஜாதிப் பெயரும் தப்பு என்று குரிப்பத்ர்க்காகாக. அப்படிதான் இருக்கு கிருஷ்னையார் மெஸ்; நாயுடு ஹால்.

   ஒரு மருத்துவர் ஒரு நோயாளியிடம் இப்படி சொன்னா எப்படி இருக்கும்?

   சொறி தான் உடம்புக்கு தீங்கு; சிரங்கு இருந்தால் தப்பில்லை...!?//
   நம்பள்கி கலக்கல்

   Delete
 13. சகோ.சார்வாகன்!நலமா?

  பிராமண சொல்லுக்கான போராட்டம் பெரியாரில் துவங்கி பின் தி.மு.க ஆட்சிக்கட்டில் ஏறிய துவக்கத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களோடு முடிந்து விட்டது.அதே சொல் கலைஞர் தனது சுய அரசியலுக்கான சொல்லாக அவ்வப்போது பயன்படுத்தியதோடு ஜாதிக்கட்சிகள் துவங்கிய பின் தமிழகத்தில் ஜாதிகள் மறுபடியும் சிம்மாசனம் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டது.பிராமணன் என்ற ஒற்றைச் சொல்லுக்காக வேண்டியே ஏழை பிராமணனும் பாதிக்கப்பட்டுள்ளான்.

  தற்போதைய சூழலில் பிராமண துவேசம் விட்டு அடுத்த தளத்தில் உயர் சாதியாகவும்,திரைப்படம் மூலமாகவும் சாதி பிரிவினைகள் வளர்வதை தடுப்பது அவசியம்.தலித்திய தலைவர்களாக சிலர் உருவாகியிருந்தாலும் கூட தேர்தல் கூட்டணி,அரசியல் சமரசங்களில் தோற்றுவிட்டார்கள்.இதில் ப.ம.க போன்ற கட்சிகள் சாதி எண்ணிக்கை வாக்கெடுப்பு தேவையென்று வேறு குரல் கொடுக்கிறார்கள்.

  ஒரு புறம் திரைப்படங்கள் சாதிப்பெயர் தலைப்புக்களை வைத்தாலும் கூட கலப்பு திருமணத்தையும்,காதல் திருமணங்களை ஆதரிப்பதை அடிப்படியாக கொண்டவை.ஆனால் சமூக யதார்த்ததில் எவரும் காதல்,கலப்பு திருமணங்களை வரவேற்கவில்லை.சிலர் துணிந்து கலப்பு திருமணங்களை செய்து கொண்டிருந்தாலும் கூட பொருளாதார சிக்கல்,உறவினர் நல்லது,கெட்டதுகளில் கலந்து கொள்வதிலான சமூக முறுகல் நிலை போன்றவற்றால் தோற்றும் போய் விடுகிறார்கள்.மேலும் கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போதான குழப்பங்கள் உருவாகின்றன.பள்ளி சான்றிதழ் துவங்கி வங்கிப்பெயர் வரை எங்கும் சாதி நிறைந்திருக்கிறது.கிராமத்து வாழ்க்கையின் நலன்கள் ஒருபுறமிருக்க சாதிமுறையை கட்டறுக்காமல் வைத்திருப்பதில் கிராமங்களுக்கு முக்கிய பங்குண்டு.அப்படியிருந்தும் கலப்பு திருமணங்களை ஊக்குவித்து அதிகார பூர்வமாக திருமணம் செய்து வைத்து குடும்பம் நடத்த உதவி புரியும் கிராமத்து சமூக அக்கறை கொண்ட இளைஞர்களும் இருக்கிறார்கள்.ஆனால் சாதிய முகப்பூச்சுக் கொண்டவர்களின் எதிர்ப்பும் இவர்களுக்கு உண்டு.நகரங்கள் இவைகளுக்கு மாற்றாக இருந்தாலும் நகர வாழ்க்கையும் பிரச்சினைகளுக்குட்பட்டது.

  பெரியாருக்கு பின் தி.க கயிறு இழுக்கும் போட்டி கட்சிகளாக மாறிவிட்டாலும் கூட சமூக போராட்டங்களாக களத்தில் நின்று குரல் கொடுக்கும் செயல் வரவேற்க தக்கது.தனிமனித ஈகோக்களும்,முரண்பாடுகளும் இருந்தாலும் கூட சமூக தளத்தில் கம்யூனிஸ்டுகளும்,திராவிட கழகங்களுமே மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பவர்கள்.ஆனால் பழம் சாப்பிட்ட கட்சிகள் என்னவோ தி.மு.கவும்,அ.தி.மு.கவுமே.மற்ற மாநிலங்களை விட சாதியம் குறித்த அக்கறையும்,விழிப்புணர்வும் பெரியாரின் உழைப்பால் தமிழகத்தில் உருவாகியிருந்தாலும் கூட அடுத்த மாநிலங்களை விட சாதியம் வேறூன்றிக் கொண்டதும் தமிழகமே.

  இந்த பின்னுட்டத்தை இணைக்கும் வினாடிகளில் சகோ.சுவனப்பிரியனின் பின்னூட்டம் கண்ணில் பட்டது.


  ReplyDelete
 14. வாங்க நண்பர் இராஜநட,
  //தற்போதைய சூழலில் பிராமண துவேசம் விட்டு அடுத்த தளத்தில் உயர் சாதியாகவும்,திரைப்படம் மூலமாகவும் சாதி பிரிவினைகள் வளர்வதை தடுப்பது அவசியம்.//
  நாம் பிராமணர்களை உயர்வாகவோ,தாழ்வாகவோ சொல்லவில்லை.பிறப்பினால் எவரும் எந்த விதத்திலும் மேன்மை அடைய முடியாது. சாதி என்பதைத் தவிர்க்க ஆக்கபூர்வமாக் என்ன செய்ய வேண்டும்?.குறைந்த படசம் இன்னும் பலரை சாதிரீதியாக் ஒடுக்குதல் நிகழ்கிறதே என வெட்கப்பட வேண்டும்.

  என்னமோ ஒரு கிருஷ்னய்யர் பிராமணாள் பேர் வைத்ததை தடுத்து பெரிய சாத்னை போல் காட்டுவது எரிச்சல் வருகிறது.
  ஹோண்டா ஐயர் வந்தாச்சு என்ன செய்வது?

  நான் எப்போதும் சொல்வது ஆதிக்க சாதி எனப்படும் சாதியில் பிறந்த சாமான்ய ஏழை மக்களை கருத்து ரீதியாக சாதி ஒழிப்பிற்காக் வென்றெடுக்காமல் எதுவும் செய்ய முடியாது.
  ஒபமாவைத் தலைவராக அமெரிக்க வெள்ளையின மக்கள் ஏற்கும் பக்குவம் போல் நம்க்கு எப்போது வரும்?

  பெரியார் காலத்தில் ஆங்கிலெய ஆட்சி,அதில் பிராமணர்கள் அரசு பதவிகளில் அதிகம் இருந்த்னர். இன்னும் பல மேன்மை காட்டும் நடைமுறைகளையும் பின்பற்றினர்.ஆகவே எதிர்த்தார். இப்போது அரசு பதவிகளில் அவர்களின் தாக்கம் குறைந்து விட்டது.அச்சகர் பணி அனைவருக்கும் என்பது மட்டுமே பிராமண‌ர்கள் சார்ந்த சமூக மாற்றத்தில் நடக்க வேண்டிய ஒரு விடயம்.

  எனினும் பல ஆதிக்க ஆண்ட பரம்பரை கதை சொல்லி சாதி தலைவர்கள் உருவாகி விட்டார். இவர்களை விமர்சிக்காமல் இன்னும் புராணக் கதைகளையே புலம்பலாமா!!


  நன்றி!!!

  ReplyDelete
 15. //மதச்சார்பற்ற நாடு என சட்டம் சொல்லும் நாட்டில் தி இந்து என ஆங்கில நாளேடு இருக்கிறது. //

  சரியான புரிதலாக தெரியவில்லை (அ) சரியான வாதமாக எடுத்து வைக்கப்பட்டதாக தெரியவில்லை.
  அரசியலமைப்பு சட்டப்படி மத சார்பற்ற நாடு என்றுதான் உள்ளதே தவிர, மதமில்லாத நாடு என்றோ, மத எதிர்ப்பு நாடு என்றோ இல்லை.
  அதன் படி பார்த்தால் இந்த பெயர் தவறு இல்லை.

  இதே நாட்டில் தான் முஸ்லிம் லீக், கத்தோலிக் சிரியன் பேங்க், என்று தொடங்கி பல அமைப்புகள், நிறுவனங்கள் உள்ளன.

  மக்கள் பெரும்பான்மையினர் 'டிப்ளமாடிக்' ஆக உள்ள, அந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ள கறுப்பினத்தவரை சேர்ந்த ஒருவரை அதிபராக தேர்ந்தெடுத்த, பல்வேறு நாட்டவருக்கும், இனத்தவருக்கும் (பெரும்பாலான நேரங்களில்) சம வாய்ப்பினை வழங்கும், ஆனானப்பட்ட அமெரிக்கா ஒன்றும் தன்னை மதத்திற்கு அப்பாற்பட்டதாகவோ, கடவுள் இல்லா பகுத்தறிவு வாத நாடாகவோ கூறுவதில்லையே. எ கா : அவர்களது கரன்சிகளில் உள்ள "In God we trust" வாக்கியம்.

  முடிவான தீர்வு மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய (வறட்டு வாதமில்லாத) சிறந்த தீர்வு எது? அது எங்கே இருக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. சகோ,
   மதம் என்பதும் சாதி என்பதும் வேறு விடயங்கள் என்பது நம் கருத்து.ஒரு சில மதங்களைத் தவிர பிற மதங்களுக்கு மாற முடியும்.ஆனால் சாதி அல்லது இனம் என்பது ஒரே தலைமுறையில் மாறுதல் கடினம்.

   ஆகவே தி ஹின்டு,கத்தோலிக் பேன்க் ,முஸ்லீம் லிக் போன்ற்வைகளின் விவாதம் இப்போது வேண்டாமே!!.
   ********
   சரி தீர்வு என்றால் நம் கையில்தான் இருக்கிறது. ஏன் இப்போது பெரும்பானமியான் மக்கள் சாதியை அகமண திருமணம் மூலம் பாதுகாப்பது நல்லது என நினைக்கிறார். எல்லோரும் சாதியை விடுக் கொடுக்கமல் இருக்கும் போது நாம் மட்டும் கல்ப்பு மணம் செய்தல் வரும் தலைமுறை பாதிக்கப்படும்,இட ஒதுக்கீட்டில் பிரச்சினை வரலாம் என்பதுதான்.

   ஆகவே முதலில் சாதிப் பெயரை பயன்படுத்துதல் தவறு என்பதை முதலில் அனைவரும் ஏற்பதில் தொடங்கலாம்.

   அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதரம் உறுதி செய்தல்,அனைவருக்கும் இலவச கல்வி,சுகாதார்ம் என்ற இலக்கினை நோக்கி செல்லும் போது அனைவரின் வாழ்க்கைத் தரமும் ஒரு அளவுக்கு சமம் ஆகி விடும். அப்போது காதல் கலப்பு திருமணங்கள் எளிதில் நடை பெறும். அதற்காக இபோது கலப்பு திருமணம் செய்யக் கூடாது என்றில்லை. சூழலுக்கேற்ற மாற்றத்தை சாதி ஒழிப்புக்கு சாதக்மாக மாற்றுவதே நம் கடமை.

   இத்னை நடைமுறைப்படுத்த அனைவருக்கும் பங்கு உண்டு.

   ஆகவே முதலில் சாதிப்பெயர் பயன்படுத்துவதை எதிர்ப்பதில் பாரப்ட்சம் காட்டுவது சாதியை வளர்க்கும் என்றே கூறுகிறோம்.

   நன்றி

   Delete
 16. @சார்வாகன்
  /மரபணுரீதியாக தமிழர்களில் சாதி வித்தியாசம் கிடையாது.அதாவது தமிழக மக்கள் அனைவரும் ஒரே இனம் அல்லது ஜீன் கல்ப்பு மிக அதிகம் நடந்து உள்ளது//

  சத்தியம் இது. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சாதி ரீதியான மரபியல் ஆய்வு இதைத்தான் சுட்டுகிறது. அவ்வாய்வு முடிவுப்படி தமிழக பிரமாணர்கள் வட இந்திய பிரமணர்களைவிட பிற சாதியினருடம் மரபணு ரீதியாக ஒத்துப்போகிறார்கள் என்கிறது. பெரியாரின் இயக்கம் சாதி ஒழிப்பினை விட பிராமண ஒழிப்பு இயக்கம் ஆதலால் திராவிட இயக்கத்தின் ஆணிவேரையே அசைத்துவிட்டது அவ்வாய்வு முடிவு.

  மேலும். உயர் சாதியிலிருந்து கீழ்சாதி நோக்கி போகும் போது ஐரோப்பிய மரபணுக்களின் கலப்பு குறைகிறதாம், (பிராமணரிலிருந்து தலித் நோக்கி போகும் போது) இவ்வாய்வை உண்மையாக கருதினால், தென்னக பிராமணர்களும் திராவிடரே அல்லது தமிழரே! என்னைப் பொறுத்தவரை ஒழிக்கப்பட வேண்டியது பார்ப்பானியம் மட்டுமல்ல தேவரியம், தலித்தியம், கவுண்டமாரியம், பிள்ளைமாரியம் என்ன எல்லா ஒட்டு மொத்த சாதியமும்தான்!

  @வவ்வால்
  //மதச்சார்பற்ற நாடு என சட்டம் சொல்லும் நாட்டில் தி இந்து என ஆங்கில நாளேடு இருக்கிறது. //

  இதைவிட முக்கிய பிரச்சனைகள் இந்த மதசார்பற்ற நாட்டில் இருக்கிறது. இன்னமும் பொது சிவில் சட்டமில்லை. மத ரீதியான சலுகைகள் எதற்கு மத சார்பற்ற நாட்டில்?

  இதெல்லாம் செய்யாமல் பெயர்களை மட்டும் திருத்தி என்ன ஆகப்போகிறது? பாவக்காயை பலாப்பழம் என அழைத்தால் இனிக்காவா போகிறது?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் நந்தவனம்,
   தமிழக சாதிகள் மீதான மரபியல் ஆய்வுகளை ஆவணப்படுத்தும் அவா உண்டு.எனினும் சார்பற்று செய்யவேண்டும் என் எண்ணுகிறேன்.மரபியல் ஆய்வுகளில் நீங்கள் கூறியது போல் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியுமா என்றால் 90% சொல்லலாம்.சேம்பில் அள்வு பொறுத்து முடிவுகள் சிறிது மாறும் என்பதால் சொல்கிறேன்.

   இன்னும் ஒரு விடயம் என்ன்வெனில் ஜீனோமில் ஒரு சாதிக்குள்ளேயே இருக்கும் உள்வித்தியாசமும்,வீச்சும் பிற சாதிகளின் ஜீனோமுடன் இணைவதும்,ஜீனோமை வைத்து ஒரு குறிப்பிட்ட சாதி எனவே அறிய முடியாது.

   இதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி பரிணாமம் இனவெறியை ஒழிக்கவே பங்காற்றுகிறது தவிர வளர்க்க அல்ல!!.

   நம்க்கு அறிவு இருப்பது உண்மை எனில் நாம் நமது பிரச்சினைகளை ஒத்துக் கொண்டு அனைவரும் சுமுகமாக் வாழ வழி தேட வேண்டும்.
   மக்கள் தொகைப் பிரச்சினை,இயற்கை சீற்றங்கள்,எரிபொருள் இல்லாமல் போதல் ,உணவு,நீர் என பல் பிரசினைகள் வரும் கால்த்தில் முன்னிலை வகிக்கும்,அப்போது இந்த இன முறுகல்கள் பெரிய சிக்கலில் ஆழ்த்தி விடும்.

   ஆகவே ஒரு குழுவை மட்டும் குற்றம் சாட்டாமல் புரிய வைப்பதே சரியான வழி ஆகும்.

   நன்றி

   Delete
 17. அருமையான பதிவு சகோ. எனது எண்ணத்தில் கூட இவை எழுந்தவை தான் ... !

  வருணம் மட்டுமில்லை, அனைத்து சாதியப் பெயர்களையும் தவிர்ப்பது மிக நல்லது என்பேன் ... !!! இல்லை என்றால் எதனையும் எதிர்க்காமல் விட்டுவிடுங்கள் எக்கேடாக போகட்டும் என .. ஒரு குறிப்பிட்ட சாதியை, மதத்தை மட்டும் எதிர்ப்பது நியாயமான ஒன்றே அல்ல !

  சாதிய முறைத் தோன்றலில் பழங்குடிகள் மற்றும் பழங்குடிகள் - வந்தேறிகள் கலப்பு முறையால் எழுந்த புதிய இனங்கள் போன்றவற்றின் அடிப்படையிலேயே எழுந்திருக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம். அதனை பின்னர் வளர்ந்து வந்த பார்ப்பனம் / பார்ப்பனம் சார் அரசுகள் வருணக் கோட்பாட்டில் அடக்கி இருக்க வேண்டும்

  கேரளத்தில் இருக்கும் ஈழவர்கள் கூட ஒருக் காலத்தில் பௌத்தர்களாக இருந்தவர்கள் எனவும், பின்னர் பௌத்தம் அழியும் போது தாழ்த்தப்பட்டவர்களாக மாற்றமடைந்தனர் எனவும் ஒரு கட்டுரை வாசித்தேன் .. !

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் இக்பால்,
   அதே .சாதி குறித்து நிறைய வரலாறு+அறிவியல் அறிய வேண்டி உள்ளது என்பதே உண்மை.அறியாமல்,புரியாமல் ஒழிக்க முடியாது.ஒரேயடியாக சட்டம் போட்டு உடனே ஒழிக்க முடியாது ஆனால் மாறும் சூழலை சாதி ஒழிப்புக்கு ஏற்ற வகையில் கொண்டு செல்ல பலரும் பாடுபட்டால் மட்டுமே சாத்தியம்.
   நன்றி

   Delete
 18. சகோ!உங்களுக்கு பின்னூட்டமிட்ட பின் விடுதலை தளத்தின் கட்டுரை வாசிக்க நேர்ந்தது.இதில் நுண்ணரசியலும் கலந்திருப்பதாகவே விடுதலை கட்டுரை பிரதிபலிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சகோ இராசநட
   நுண்ணரசியல் அல்ல வெறும் அரசியல். ஹி ஹி
   நன்றி

   Delete
 19. அய்யா !தாங்கள் மெத்த படித்தவர் போல் தெரிகிறது ஆனால் அவர்கள் கூறும் விஷயம் புரியவில்லையா ....................ஒன்றாய் இர்ருந்த சமுகத்தில் மானிடகுலமுன்னேற்றத்தினால் உழைப்பு பிரிவினை ஏற்பட்டது இயல்பு இது தான் உலகம் முழுக்க நடைபற்றது ஆனால் இந்தியாவில் மட்டுமே அது பிறப்பின் அடிபடையில் என ஒரு இறுகிய தன்மை பெற்றது இதற்க்கு முழுமையான பொறுப்பு மனுடர்மதிற்க்கும் வேதங்களும ஆகும் இதை உருவாக்கியதும் பரப்பியதும் பாதுகாத்தும் பார்ப்பனீயம் ஆகும்....................... தலைமை ஏற்பவனும் அத்தலய்மையை ஏற்று நடபவனும் ஒன்றல்ல..................... பார்பனியம் என்பது ஒரு ஒடுக்கும் வர்க்க தத்துவம் ............இன்று வரை அதனை தலைமை ஏற்று நடத்துவது பார்பனரே இன்றும் சமூக மாற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் கோர்ட்டுக்கு செல்வதும் யார் பூர்வகுடி மக்களின் தெய்வங்களை பாரபனியாபடுதுவது யார் பூர்வகுடி மக்களின் மொழிகளை நீச பாஷைஅது கடவுளுக்கு புரியாது என்று இகழ்வது யார் பூர்வகுடி மக்கள் அழுக்கனவர்கள் என்று சொன்னது யார் சித்த மருத்துவம் முறையை அழித்திட துடிப்பது யார் ஒடுக்கப்பட்ட மக்களின் வகுப்பு வாரி உரிமைக்கு எதிராக நிற்பது யார் இன்று அம்பேத்கரும் பெரியாரும் போராடாவிட்டால் நான் உங்களுடன் இந்த விவாதத்திற்கே வந்திரருக்க முடியாது என்பதே உண்மை !

  ReplyDelete
  Replies
  1. @கறுத்தான்
   //ஒன்றாய் இர்ருந்த சமுகத்தில் மானிடகுலமுன்னேற்றத்தினால் உழைப்பு பிரிவினை ஏற்பட்டது இயல்பு இது தான் உலகம் முழுக்க நடைபற்றது ஆனால் இந்தியாவில் மட்டுமே அது பிறப்பின் அடிபடையில் என ஒரு இறுகிய தன்மை பெற்றது இதற்க்கு முழுமையான பொறுப்பு மனுடர்மதிற்க்கும் வேதங்களும ஆகும் இதை உருவாக்கியதும் பரப்பியதும் பாதுகாத்தும் பார்ப்பனீயம் ஆகும்..//

   மிகவும் அருமையாக கூறி உள்ளீர்கள்.

   //இன்று வரை அதனை தலைமை ஏற்று நடத்துவது பார்பனரே //
   இது தவறு. பிராமணன் ஒதுங்கிவிட்டான். நீங்கள் எந்த கிராமத்திற்கு சென்றாலும் அங்கு அந்த "நாடு" வரனத்தினர்தான் பிரச்னைக்கு வழி வகுக்கின்றனர்.

   Delete
  2. நண்பரே,
   /அம்பேத்கரும் பெரியாரும் போராடாவிட்டால் நான் உங்களுடன் இந்த விவாதத்திற்கே வந்திரருக்க முடியாது என்பதே உண்மை !//

   நானும்தான் அவர்களை நன்றியோடு நினைவு கூறுகிறேன். ஆனால் இப்போதைய சூழலில் சாதியம் எதிர்ப்பதில் பாரப்ட்சம் பார்க்க கூடாது என்வே சொல்கிறேன்.
   சரி பிராமணர்களை மட்டும் விமர்சிக்கிறோம் என வைப்போம்,பிற சாதி அமைப்புகள் ,கட்சிகள் ஆகியவை கண்டுகொள்ளாமல் இருப்பது சாதி எதிர்ப்பை சரியான திசைக்கு எடுத்து செல்லாது!.

   அடிக்கடி வாங்க .நிறைய பேசுவோம்.

   நன்றி

   Delete
 20. மிக அருமையான தேவையான பதிவு சகோ. ஒரு சாதியை மட்டும் எதிர்பது தான் பகுத்தறிவா:)
  ஜாதி ஒழிய வேண்டும் எனில் ஜாதி ஒழிப்பு என்பதை தனிப்பட்ட வாழ்விலும் ஒவொருவரும் காட்ட முன்வர வேண்டும். சமுகத்தில் பெரும்பான்மை கலப்பு திருமணங்கள் வேண்டும் எனற உங்க கருத்தை ஸ்ராங்காக சிபார்சு செய்கிறேன்.
  //இபோதைய ஜாதி பிரச்சினைகள் செய்வோர் அதைப் மனு ஸ்மிருதி படித்தவர்களாக் இருப்பது சாத்தியமற்றது//
  அது தான் உண்மை.

  மனுஸ்ருமிதியை தடை செய்வதன் மூலம் எப்படி ராவுத்தர்,தக்கினி,லப்பை,மரைக்காயர் ஜாதி வேறுபாடுகள் எப்படி ஒழியும் என்பதையும் சுவன சுவாமிகள் தெரிவித்திருக்கலாம்.

  //என்னைப் பொறுத்தவரை ஒழிக்கப்பட வேண்டியது பார்ப்பானியம் மட்டுமல்ல தேவரியம், தலித்தியம், கவுண்டமாரியம், பிள்ளைமாரியம் என்ன எல்லா ஒட்டு மொத்த சாதியமும்தான்//
  சகோ நந்தவனத்தானின் அருமையான கருத்து.

  //ஜாதிக்கொடுமை நீங்கத்தான் இஸ்லாமைத் தழுவச் சொன்னார் பெரியார்//
  நண்பர் தமிழானவன் இதை சொல்லும் போது தான் நம்ப முடியவில்லை.பெரியார் சொன்னதை கேட்டு இஸ்லாமைத் தழுவியிருந்தா இப்போ நிலமை எவ்வளவு மோசமானதாயிருக்கும். கழுத்தில் கடுமையான வலி என்பதிற்காக கழுத்தையே வெட்ட சொன்ன ஆலோசனை தான் இது.
  //அதற்காக அவர் இஸ்லாமை முழுமையாக அறிந்து கொண்டு அதைச் சொல்லவில்லை//
  இஸ்லாமிய மதவாதி சொல்ல வேண்டியதை பெரியார் சொல்லியுள்ளார்.தான் அறியாத அபாயகரமான மத விடயத்தை மற்றவர்களை தழுவ சொல்வது மதத்தை நிராகரிக்கும் பகுத்தறிவுவாதியின் செயல் அல்ல.


  ReplyDelete
  Replies
  1. சகோ வேகநரி,
   நல்ல கருத்து.நீங்கள் கூறியவற்றை ஏற்கென‌வே நன்கு விவாதித்து இருக்கிறோம்.
   நன்றி

   Delete
  2. வேகநரி, பெரியார் சொன்னது சரி என்பதல்ல, பெரியார் சொன்ன காரணம் அது என்றேன். ஜாதிக்கொடுமையை கழுத்து வலியுடன் ஒப்பிடலாமா ? இஸ்லாத்தில் அனைவரும் ஒன்றாக வழிபாடு நடத்த உரிமை உண்டு. இந்து மதத்தில் அது இல்லை. இஸ்லாத்தின் ஜன்நாயக்த்தன்மயுடன் ஒப்பிட்டு அவர் அதில் இணையச் சொல்லவில்லை. ஜாதிக்கொடுமையிலிருந்து தப்ப அதைச் சொன்னார். அவ்வளவே. கடவுள் இல்லை என்ற பெரியார் ஆலய நுழைவுப் போராட்டங்களில் ஈடுபட்டது பகுத்தறிவுக்கு முரண்பட்ட செய்லதான் அல்லவா ? அது போலவே அவர் இஸ்லாமைப் பரிந்துரைத்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். அது ஜாதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் அதை சொன்னார். எல்லாரையும் இஸ்லாமுக்கு மாறுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் சும்மாயிருக்கவில்லையே தொடர்ந்து ஜாதியை எதிர்த்து வந்தார். அதே நேரம் இஸ்லாமை விட புத்த மதத்தை உயர்த்திப்பிடித்த பெரியார் அதில் கூட இணையவில்லை. மற்றபடி பகுத்தறிவுக்கான விளக்கததைச் சொல்லியாச்சு. 80 வருடங்களுக்கு முன்பிருந்த அறிவிலிகளிடம் விழிப்புணர்வூட்ட பகுத்தறிவு என்ற சொல் பயன்பட்டது. இப்போது எல்லாருமே பகுத்தறிவுவாதிகள்தான்.

   Delete
 21. //முடிவான தீர்வு மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய (வறட்டு வாதமில்லாத) சிறந்த தீர்வு எது? அது எங்கே இருக்கிறது?//

  இதற்கு நிரந்தர தீர்வு இஸ்லாம்தான் என்று ஒரே போடாக பெரியார் போட்டாரே! மறந்து விட்டீர்களா?

  //மனுஸ்ருமிதியை தடை செய்வதன் மூலம் எப்படி ராவுத்தர்,தக்கினி,லப்பை,மரைக்காயர் ஜாதி வேறுபாடுகள் எப்படி ஒழியும் என்பதையும் சுவன சுவாமிகள் தெரிவித்திருக்கலாம்.//

  ராவுத்தரும் லெப்பையும் பள்ளியில் தோளொடு தோள் நின்று இறைவனை வழிபடுவார். ராவுத்தர் தனது மகளை லெப்பைக்கு கொடுப்பார். யாரும் அரிவாளை தூக்கிக் கொண்டு வெட்ட வர மாட்டார். நீ தொடையில பிறந்தாய் என்று லெப்பை ராவுத்தரை பார்த்து சொல்ல மாட்டார். ராவுத்தர் லெப்பையை பார்த்து சொல்ல மாட்டார். அடுத்து குர்ஆனில் லெப்பையோ ராவுத்தரோ எந்த சாதி பெயரும் இல்லாததினால் அது இஸ்லாத்தில் இல்லை என்று விளங்கும். ஹோட்டல்களில் சிரட்டைகளில் தேனீர் வழங்கப்பட மாட்டாது. மலம் தின்ன வைக்கப்பட மாட்டாது.

  நாடார், பார்ப்பான், தலித், தேவர், படையாச்சி என்ற சாதி பட்டியலில் மேலே சொன்ன அனைத்தும் இன்று வரை நடந்தேறி வருகிறது. இதற்கு அச்சாரமாக உள்ளது மனுஸ்ருமிதி. இப்போ விளங்கிடுத்தா....


  ReplyDelete
  Replies
  1. //இதற்கு நிரந்தர தீர்வு இஸ்லாம்தான் என்று ஒரே போடாக பெரியார் போட்டாரே! மறந்து விட்டீர்களா?//

   பெரியார் பிற்காலத்தில் சொன்னது இது "பார்ப்பானுக்குப் பயந்து முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது."

   பார்ப்பான் சாணியாம், முஸ்லிம் மலமாம்! பெரியார் சொன்னது,நான் சொல்லவில்லை! ஆக இருவரும் ஒன்றுதான் என்பது பெரியாரின் அனுபவக்கருத்து!

   Delete
  2. சகோ சு.பி& நந்தவனம்

   விக்கிரமாதித்த‌னும் வேதாளமும் கதைக்கு முடிவே இல்லையா???

   நன்றி

   Delete
  3. //பெரியார் பிற்காலத்தில் சொன்னது இது "பார்ப்பானுக்குப் பயந்து முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது."//

   இதனை பெரியார் எந்த கூட்டத்தில் அல்லது பத்திரிக்கையில் சொன்னார். சுட்டி தர முடியுமா?

   Delete
 22. //இஸ்லாமிய மதவாதி சொல்ல வேண்டியதை பெரியார் சொல்லியுள்ளார்.தான் அறியாத அபாயகரமான மத விடயத்தை மற்றவர்களை தழுவ சொல்வது மதத்தை நிராகரிக்கும் பகுத்தறிவுவாதியின் செயல் அல்ல.//

  பெரியார் இஸ்லாத்தை விளங்காதவர் அல்ல. ஆதி முதல் அந்தம் வரை அலசி விட்டுத்தான் இந்த முடிவை எடுத்தார். பெரியாரின் முடிவை மற்றவர்களும் பின்பற்றியிருந்தால் இன்று தமிழகம் சாதிகளற்ற சமூகமாக இந்தியாவுக்கே ஒரு எடுத்துக் காட்டாக மிளிர்ந்திருக்கும். தற்போதும் ஒன்றும குறைந்து விடவில்லை. மாதத்திற்கு குறைந்தது 100 பேர் அவர்களாகவே முன் வந்து இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். இது தொடர்ந்தால் இன்னும் 20 வருடங்களில் சாதிகளற்ற சமூகத்தை தமிழகத்தில் பார்க்கலாம். அந்த நேரத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே தனித்து விடப்படுவர். மற்ற சாதிகள் எல்லாம் இஸ்லாத்தில் ஐக்கியமாகி விடும்.

  http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3

  ReplyDelete
  Replies
  1. சகோ சுவனன்,
   ஒரு மாதத்திற்கு 100 பேர்கள் என்றால் வருடம் 12*100=1200
   20 வருடத்தில் 20*1200=24,000.
   தமிழ்நாட்டின் மக்கள் தொகை இப்போது 7 கோடி எனில் 20 வருடம் கழித்து 10 கோடி. காஃபிர்கள் 90% எனில் 9 கோடி
   ம்கூஉம் வேகம் பத்தாது!!!!!!!!!!.

   எவ்வளவு மாற்ற வேண்டும் எனில் 9 கோடி/(20*12)=3.7இலட்சம் பேர் மாதம் மாறனும்.

   இன்ஷா அல்லாஹ்

   நன்றி!!


   Delete
 23. தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ள எனது கேள்வி.
  தமிழகத்தில் குறிப்பாக செங்கல்பட்டுக்கு தெற்கே ராவுத்தர், தக்கினி, லப்பை, மரைக்காயர் ஜாதி வேறுபாடுகள் இல்லை என்று சுவனம் சொலவது உண்மையா?

  ReplyDelete
  Replies
  1. என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் டாக்டர், சுவனபிரியன் உண்மையை தவிர வேறு எதையாவது பேசி கண்டுள்ளீரா?

   இனியும் சந்தேகமிருப்பின் இந்த தொடுப்பை பாரும் http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17800

   Delete
  2. விட்டுப்போன இன்னொரு தொடுப்பு http://www.maattru.com/2011/12/blog-post_6584.html

   Delete
  3. திரு நம்பள்கி!

   ராவுத்தர்-குதிரை வியாபாரி

   மரைக்காயர்- மரக் கலம் அதாவது போட் செய்வது மற்றும் கடல் சார்ந்த தொழில் செய்வோர்

   தக்கினி- உருது முஸ்லிம். வட நாட்டிலிருந்து இஙகு வந்து குடியேறியவர்கள். இவர்களின் தாய் மொழி உருது.

   லெப்பை- பள்ளி வாசலில் புரோகித தொழில் செய்து வருபவர்.

   இவை அனைத்துமே தொழில் ரீதியான புரிந்து கொள்வதற்காக அடையாளப் பெயர்களே! இதில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இல்லை. இந்த அனைத்து பிரிவுகளும் எனது குடும்பத்தில் உள்ளனர். பெண் கொடுத்து பெண் எடுத்து வருகின்றனர். இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அனைத்தும் ஒன்றே. இந்த பிரிவு பெயர்கள் அரபு நாடுகளில் கிடையாது. இதிலிருந்தே இது தமிழ் நாட்டு மதம் மாறிய முஸ்லிம்களின் வழக்கம் என்பது விளங்கும். இந்து மதத்திலிருந்து மாறும் போது இந்த அடைமொழியும் பெயர் மாறி வந்திருக்கலாம்.

   Delete
  4. சுவனப்பிரியன் .தக்னிகள் என்பவர்கள் தக்காணபூமியிலிருந்து வந்தவர்கள் ,பட்டாணி என்றால் பட்டான் மாநிலத்திலிருந்து வந்தவர்கள்

   கடற்கரை வழியாகவந்த அரபு மக்கள் கரையை அடைந்ததும் அடைந்துவிட்டோம் என்றோ மகிழ்ச்சியில் சொல்லக்கூடிய அரபு வார்த்தை லெப்பைக் ,லெப்பைக் என்பது .
   அதனால் அரபுகளை அவர்கள் கூறிய வார்த்தைகளைவைத்து லெப்பைகள் என்றார்கள்.அவர்களை பின்பற்றி மதம்மாறியவர்களையும் அதேபோன்று வழக்கில் வந்தது.கடற்கரை முஸ்லிம்கள் மரைக்காயர்கள் என்றும் லெப்பைகள் என்றும் சொல்லப்படுகிரறாக்கள் .

   Delete
 24. //தமிழகத்தில் பார்க்கலாம். அந்த நேரத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே தனித்து விடப்படுவர். மற்ற சாதிகள் எல்லாம் இஸ்லாத்தில் ஐக்கியமாகி விடும்.//

  இந்தியாவை இசுலாமிய மயமாக்க வேண்டும் எனும் எண்ணத்துடன்தான் ஜின்னா அம்பேத்கரையும் பெரியாரையும் ஆதரித்து வந்தார். பார்ப்பனர் ஒழிந்தால் இந்து மதம் அழியும் அனைவரும் இசுலாமியார் ஆவார்கள் என்பது ஜின்னாவின் பகல்கனவு. ஆனால் அம்பேத்கார் முமின்களின் இந்த சதியை உணர்ந்து கூட்டணியிலிருந்து முதலில் விலகினார். ஏனெனில் அம்பேத்கரின் கனவு பிராமணர்களும் இந்துமதமும் அழிவது அல்ல, ஆனால் தலித்துகள் முன்னேற்றமே ஆகும். அவர் இந்து மதத்திற்கு இசுலாம் எந்த விதத்திலும் சிறந்தது இல்லை என்பதினால்தான் புத்த மதத்தை தழுவினார்.

  ஆனால் பெரியார் திராவிடஸ்தான் கிடைக்க ஜின்னா அருள் புரிவார் என நம்பி வந்தார். ஆனால் காபிர்களுடன் கூட்டணி சேர பாகிஸ்தான் பகுதி மக்களிடம்(காபிர்கள் என்றால் அசிங்கம் பிடித்தவர்கள் என்பது முமின்களின் நம்பிக்கை) எழுந்த எதிர்ப்பினால் பெரியாரை கைவிட்டார் ஜின்னா. பெரியார் முமின்களின் சதியையும் திருட்டுத்தனத்தையும் பிற்காலத்தில் உணர்ந்து அவர்களின் உண்மை சொருபத்தை பற்றி விடுதலையில் தலையங்கம் தீட்டி தீர்த்துக்கொண்டார்!

  இந்த சதி ஆசை மீண்டும் துளிர்த்துள்ளது போலும்!

  ReplyDelete
 25. நண்பர் நந்தவனம்,
  உலகே இஸ்லாமிய மயமாக் வேண்டும் என்பது தோன்றிய காலம் முதல் இன்றைய சுவனப் பிரியனின் இலட்சியமாக் இருக்கும் போது அதற்கு ஜின்னாவும் விதி விலக்கு இல்லையே. ஆகவே இது முஸ்லிம்களின் சதி அல்ல அல்லாவின் கட்டளை.ஆகவேதான் நாம் எபோதும் முஸ்லிம்களை விமர்சிப்பது இல்லை.மதம் கொள்கை சார்ந்தே விமர்சிக்கிறோம்.
  **********
  ஜின்னா முதலில் காங்கிரஸ் கடையில்தான் இருந்தார்.அவருக்குஅங்கு மத சார்பற்ற விற்பனைப் பிரிவில் பணியாற்றினார். அங்கு எதிர்காலம் இல்லை என்றதும்,முஸ்லீம் லீக் கடைக்கு வந்து விட்டார். பெரியார், அம்பேத்கார் போன்ற காங்கிரஸ்*இந்துமத் எதிர்பாளர்களை ப்யன்படுத்தினார்.

  இத்னை பெரியார்,அம்பேத்கார் உணர்வதற்குள் ஜின்னா த்னது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார். காங்கிரசிலும் பாகிஸ்தான் பிரியட்டும் ஆனால் எவ்வள்வு இடம் கொடுப்பது என்பதே சிக்கல் தவிர, திராவிட நாடு,புத்திஸ்தான் போன்ற்வைகள் கொள்கை அளவில் கூட இல்லை.மொழி வாரியாக ஆந்திரா,கர்நாடக,கேரளவை பிரித்ததே திராவிட நாட்டுக்க்கு சாவு மணி அடிக்கவே.

  ஹைதராபாத நாடு உருவாகாமல் இருக்க அதனை பிரித்து தெலுங்கு மக்களை ஆந்திரப் பிரதேஷ் மாநிலமாக உருவாக்கினர்.

  ஜின்னா,அம்பேத்கார்,பெரியார் ஆகியோரின் கூட்டணிகள் சில வருடங்களுக்கு தொடர்ந்தது,முறிந்ததும் வரலாறு.இங்கே படியுங்கள் சில கடிதங்கள் கூட ஆவணமாக உண்டு.
  http://archive.worldhistoria.com/the-historic-meeting-of-ambedkar-jinnah-and-periy_topic18973.html
  சிறிய நாடுகளில் இனச்சிக்கல்கள் பெரிய வன்முறை,போர்களாக் உரு வெடுக்கும் என்பது நம் கருத்து.ஆகவே இந்தியா ஒரே நாடாக உருவானது நன்மையே.


  நன்றி!

  ReplyDelete
 26. சகோ சார்வாகன்!

  //உலகே இஸ்லாமிய மயமாக் வேண்டும் என்பது தோன்றிய காலம் முதல் இன்றைய சுவனப் பிரியனின் இலட்சியமாக் இருக்கும் போது அதற்கு ஜின்னாவும் விதி விலக்கு இல்லையே. ஆகவே இது முஸ்லிம்களின் சதி அல்ல அல்லாவின் கட்டளை.ஆகவேதான் நாம் எபோதும் முஸ்லிம்களை விமர்சிப்பது இல்லை.மதம் கொள்கை சார்ந்தே விமர்சிக்கிறோம்.//

  இது குர்ஆன் இடும் கட்டளை அல்ல. நமது சகோதரர்களின் நலனுக்காக நானாக விரும்பி எடுத்த முடிவு.

  'இம் மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.'
  -குர்ஆன். 2:256

  இந்த வசனத்தின் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள எந்த வற்புறுத்தலும் கூடாது என்கிறது இஸ்லாம். 'இது தவறு. இது சரி' என்று நமது நண்பர்களுக்கு எடுத்து சொல்லலாம். அவர் ஏற்றுக் கொள்வதும் ஏற்காமல் இருப்பதும் இறைவன் புறத்திலும் அந்த மனிதரின் தனிப்பட்ட விருப்பத்திலும் உள்ளது.

  இதற்காக திட்டமிட்டு இதே வேலையாக இருக்க வேண்டும் என்று குர்ஆன் எங்களுக்கு கட்டளையிடவும் இல்லை. இஸ்லாமிய ஆட்சியை அமைப்பது என்பதும் குர்ஆனின கட்டளை அல்ல. பலரால் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

  ReplyDelete
 27. சகோ சுவனப் பிரியன்,
  சரி நீங்களாகவே அப்படி செய்கிறீர்கள் என்றாலும் ஏன்?
  குரானின் படி இப்போது அல்லாவினால் ஏற்கப்படும் ஒரே சரியான மார்க்கம் இஸ்லாம் மட்டுமெ. நிராகரிப்போருக்கு அல்லாஹ் நரகமே அளிப்பார் சரியா? அழகாக் குரானில் கூறுகினான்.
  ****************
  3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

  3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
  ***********

  ஆகவே அண்டவன் கட்டளையை நிறைவேற்றுகிறீர்கள். எனினும் ஒருவர் இஸ்லாமை ஏற்பதால் கடவுளுக்கு எந்த பயனும் இல்லை என்னும் வசன‌த்தை நீங்கள் காட்டும் முன் நானே கூறிவிடுகிறேன்.

  /49:17. அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக./

  குரானின் மீது நான் எப்போதும் வைக்கும் எதிர்வாதம் அது இரு வெவ்வேறு பொருளில் அடிக்கடி பேசுகிறது என்பதால் மத (அரசியல்)வாதிகளால் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்த‌ப் படுகிறது என்பதுதான்.

  சில சமயம் அல்லாஹ் இணை வைத்தாலோ,நிராகரித்தாலோ கோபப்படுவார்,அப்புறம் நீ என்னை கும்பிடாட்டி எனக்கு நஷ்டம் இல்லை,ஆனால் நரகத்தில் போட்டு எபோதும் வதைப்பேன் என்வும் அன்போடு கூறுவார். அதுவும் பல் மடங்கு நெருப்பில் தோலை மாற்றி மாற்றி கருக்குவார்!!
  ********
  எங்களைப் பொறுத்த்வரை இஸ்லாம் என்பது குரான்,ஹதித் போன்ற சில புத்தக்ங்களின் மீதான விள்க்கம்,வாழ்வியல் நடைமுறைகள்.அவ்வள்வுதான்.

  பிடிப்பவர்கள் மதம் பின்பற்றுவதை நாம் எதிர்க்கவில்லை.ஆயினும் மத பிரச்சாரத்தில்,மதம் சார் அட்சிமுறை சட்டங்களில் சில கேள்விகள்,சந்தேகங்கள் எழுப்புகிறோம்.உலக‌ முழுதும் ஒரே மதம் வருதல் என்பது சாத்தியமற்றது. மதங்களின் கொள்கைகளும் காலம்,சூழலுக்கேற்ப மாறும்.
  ***********
  ஆத்திக நாத்திக விவாதம் மிகப் பழமையானது, இது சுவன‌ப்பிரியன் சார்வாகனுக்கு அப்பாலும்,நெடுங்காலம் தொடரும்.

  நன்றி

  ReplyDelete
 28. //mukundamma.blogspot - இப்பதிவு படித்தேன். இப்படி ஒவ்வொரு சாதி மேட்டிமை பேசும் செயலும் வெளிக் கொண்டுவரப் பட்டு விமர்சிக்கப் பட வேண்டும்//
  இந்திய தமிழர்கள் தங்கள் ஜாதி வெறியை வெளிபடையாக காட்ட தக்க அளவு மோசமான நிலையா அமெரிக்காவில் நிலவுகிறது என்பதை சகோ நந்தவனத்தான் தன் தெரிவிக்க வேண்டும்.
  வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் ஜாதி வேறுபாடுகளையும் காவி கொண்டு தான் வெளிநாடுகளுக்கு வந்தார்கள் என்பதை மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதை அவர்கள் வெளியே காட்ட முடியாத நிலை.வெளிநாடுகளில் பல தமிழர்கள் பிள்ளையின் பிறந்த தின கொண்டாட்டம் பிரமாண்டமாக நடத்துவது தங்கள் அந்த தங்களது உயர் அந்தஸ்தை காட்டுவதற்காக போட்டி போட்டுகொண்டு கடையில் சந்தித்தவர்கள் ரெயில் நிலையத்தில் சந்தித்தவர்களை எல்லாம் அழைத்து அதிக கூட்டம் வந்த சிறப்பான பிறந்த தினம் நாங்க நடத்தியது தான் என்று பெருமை படுறாங்க. தனது பகட்டை காட்டுவதற்காக வெளிநாடு என்கிறபடியால் ஜாதி வெறியை காட்ட முடியாம எல்லோரிடமும் ஒன்றாக இருந்து சாப்பிடுகிறார்கள். பிறந்த நாள் விழா போட்டிக்காக அந்த நேரம் ஜாதி பார்பதை தியாகம் செய்கிறார்கள்.
  நான் அமெரிக்காவில் வசிப்பவனாக வைத்து கொள்வோம், நான் தாழ்த்தபட்ட ஜாதி, ஒருவர் தனது பிள்ளையின் பிறந்தநாள் விழாவுக்கு என்னை அழைக்கிறார். எனக்கு விரும்பிய உணவுகளை சாப்பிட தாராளமான பொருளாதார வசதி அமெரிக்காவில் எனக்கு இருக்கிற நிலையில் இவரின் பிள்ளையின் பிறந்தநாள் விழாவுக்கு ரெயினிலோ, பஸ்சிலோ டிக்கட் வாங்கி போய் தனி இடத்தில் வேறுபடுத்தி சாப்பாடு சாப்பிட்டு, தனியாக இடத்தில் கைகழுவ எனக்கு என்ன மூளை பழுதாகிவிட்டதா?

  ReplyDelete
  Replies
  1. சகோ வேகநரி, அந்த பதிவில் திட்டி பின்னூட்டம் இட்டுள்ளேன்.ஆனால் இது அரிதாக நடக்கும் சம்பவம் என நினைக்கிறேன். குறிப்பாக இந்தியாவிலிருந்து ஆச்சாரத்தை கடைபிடிக்கும் பெரிசுகள் யாராவது வந்திருந்தன் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம், இல்லையெனில் அவர்கள் மனநோயாளிகளாகத்தான் இருக்கவேண்டும். எனக்கு பரிச்சயமான முற்பட்ட சாதி அன்பர்கள் எனக்கு தெரிந்த வகையில் இப்படி நடந்ததில்லை. அவர்கள் வீட்டிலும் எனது வீட்டிலும் விவகாரமில்லாமல் தான் உணவு உண்டிருக்கிறோம் (நான் பசு மாமிசமுண்ணுபவன் என அவர்கள் அறிந்திருந்த போதும்!). ஆனால் இட ஒதுக்கீடு மற்றும் பெரியார் குறித்து அவர்களுடன் விவாதித்தது உண்டு ( இணையத்தில் பெரியாரை குறை சொன்னாலும் அவர்களுடன் பெரியாரை ஆதரித்து சண்டை போட்டிருக்கிறேன்). ஆனால் எந்த விதமான ஒதுக்கீட்டையும் சந்தித்தது இல்லை.இதுவரை நான் கண்ட ஒதுக்கீடு எல்லாமே வெள்ளையரிடமிருந்துதான் வந்திருக்கிறது. இனரீதியான ஒதுக்கீடு சட்டப்படி குற்றம் என்பதால் ரொம்ப விவரமாக அதை செய்வார்கள்.

   Delete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. சார்வாகன் ;/////குரானின் மீது நான் எப்போதும் வைக்கும் எதிர்வாதம் அது இரு வெவ்வேறு பொருளில் அடிக்கடி பேசுகிறது என்பதால் மத (அரசியல்)வாதிகளால் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்த‌ப் படுகிறது என்பதுதான்////
   ஆசிரியர் ,மாணவனிடம் கூறுகிறார்.,தம்பி நன்றாக படி ,அதிகமாக ஸ்கோர் பண்ணினால்தான் மெரிட்டில் நல்ல காலேஜில் இடம் கிடைக்கும், நீ டாகடராகவோ இஞ்சினியராகவோ,கலைக்டராகவோ வரமுடியும் .பெரிய பங்களா வீடுவில் வசிக்க முடியும்,காரில் உலவ முடியும் .ஆனால் படிக்காவிட்டால் நான் பனிஸ்மென்ட் தருவேன் அது சாதரணமாக இருக்காது உன்னால் தாங்கிக் கொள்ளமுடியாதவாறு இருக்கும் .நீ படித்தால் உனக்குத்தான் லாபம் எனக்கும் அதில் ஒன்றும் கிடையாது ,எனக்கும் ஒன்றும் கிடைக்காது. உன்னிடமிருந்து எனக்கு எந்த தேவையும் இல்லை

   சார்வாகன் ,இந்த ஆசிரியர் இரு வெவ்வேறு பொருளில் பேசுகிறாரா?

   Delete
  3. சகோ இப்ராஹிம்,

   அல்லாஹ்=ஆசிரியர்

   ஆசிரியர் கூறுகிறார்.

   என்னைத் தவிர வேறு ஆசிரியர்களே உனக்கு இருக்க கூடாது.அப்படி இருந்தால் நிரந்தரமாக் ஒரே வகுப்பில் இட்டு தேர்ச்சி தர மாட்டேன்.

   இந்த வகுப்பில் உள்ள முனுசாமிதான் என (இறுதி) பிரதிநிதி அவன் என்ன செய்வானோ அதன் படி மட்டுமே செய்ய வேண்டும்.முனுசாமி,ஆசிரியர் இருவருக்கும் மரியாதை த்ர வேண்டும். ஹி ஹி

   "5:92. இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்."

   மாணவன் விள்ங்குவானா!!!!!!!!!!

   சிந்திக்க மாட்டீர்களா

   நன்றி

   Delete
  4. சார்வாகன் ஆசிரியர்;முனுசாமி கிளாஸ் லீடர் ,முதல் ரேங் மாணவன் உங்கள்ளுக்கு தெரியாதவற்றை அவனிடம் கேட்டுக் கொள்ளுங்கள் .வகுப்பறையில் அவனுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதோடு நில்லுங்கள் .

   கொக்கு போல பொறுமையாக இரு என்று சொன்னால் ,கொக்கு போல பறக்க முடியுமா? என்று சார்வாகன் கேட்கமாட்டார் யென்று நம்புகிறேன்

   Delete
 30. பிராமனாள் கபெவுக்கும் வைசிய பாங்க என்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு
  ஆதிக்க சக்திகள் காலத்தில் பிராமணாள் கபேயில் பஞ்சமர் நீங்கலாக என்ற போர்டு மாட்டப்பட்டிருந்தது .சானார் ,சக்கிலியர் ,பள்ளர் ,பறையர்,துளுவர் என்ற ஐந்து சாதி களும் இந்த பஞ்சமர் என்ற வார்த்தையில் அடக்கம் .

  இவர்கள் மட்டுமே சுத்தமாக தயாற்பன்னியிருப்பார்கள் என்று மக்கள் உணர்ந்துகொண்டு வரவேண்டும் என்ற நோக்கமும் உண்டு

  வைசிய பாங்க் என்றால் அது வர்ணத்தில் ஒன்று என்று பலருக்கு தெரியாது .
  "பள்ளர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று சொனால் அது சாதீயமா?இல்லை அந்தசாதியினரிடம் உள்ள தாழ்மை உணர்வை களையும் முயற்சியே

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்ராஹிம்,
   நாம் அந்த கால்த்தில் தந்தை பெரியார் எதிர்த்ததன் காரணம் அதுவே அறிவோம். இப்போது தி,க வினர் பிராமணரை எதிர்க்கும் அள்வு, பிற சாதிக் கட்சிகலை எதிர்க்க மறுப்பதன் காரணத்தையே வினவுகிறோம்.
   நன்றி!!!

   Delete
  2. சார்வாகன் ,அன்று திகவின் பிராமண எதிர்ப்புதான் இன்று மற்ற சாதிகளை வளமடைய வைத்திருக்கிறது.
   தனது சாதி மக்கள் நல்வாழ்விற்காக சில சாதி கட்சிகள் இருந்தாலும் அரசியல் ஆதாயத்திர்ககாகவும் ,தேர்தல் நேரத்தில் பணம் பண்ணுவதற்காகவும் உள்ள கட்சிகளை எதிர்ப்பது அவசியமில்லை என்று நினைத்திருக்கலாம் .

   Delete
 31. சார்வாகன் ///மதங்களின் கொள்கைகளும் காலம்,சூழலுக்கேற்ப மாறும்.///
  விதிவிலக்கு இஸ்லாம் என்ற வார்த்தையை விட்டுவிட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்ராஹிம்

   மாறும் மதங்கள் நிலைக்கும்,மாறா மதங்கள் அழியும்.
   இதில் பொருந்துவதில் இஸ்லாமை சேருங்கள்.

   நன்றி!!!

   Delete
  2. உங்கள் கூற்றை இஸ்லாம் முறியடித்திருக்கிறது.இனியும் முறியடிக்கும்

   Delete
 32. //படிக்காவிட்டால் நான் பனிஸ்மென்ட் தருவேன் அது சாதரணமாக இருக்காது உன்னால் தாங்கிக் கொள்ளமுடியாதவாறு இருக்கும்//
  என்ன கொடுமை இது? இப்படிபட்ட ஆசிரியருக்கு வளர்ச்சி அடைந்த நாடுகளில் கடுமையான தண்டனை உண்டு. இந்தியாவிலும் அந்த முறை வர வேண்டும். அதே போல் ஒரு மதம் பிற மத மக்களை அரபு ஆதிக்கத்தின் கீழ் நீங்கலெல்லாம் வரவேண்டும் என்று பயமுறுத்தி மிரட்டுவதும் தடைசெய்யபட வேண்டியதே.

  ReplyDelete
 33. வேகநரி ,ஆசிரியர் மாணவர்களின் நலன் கருதி பயமுறுத்தி படிக்க வைக்கவே செய்கிறார் .
  ////அதே போல் ஒரு மதம் பிற மத மக்களை அரபு ஆதிக்கத்தின் கீழ் நீங்கலெல்லாம் வரவேண்டும் என்று பயமுறுத்தி மிரட்டுவதும் தடைசெய்யபட வேண்டியதே.///

  இந்தியாவில்அதிக காலம் ஆட்சி செய்த முகலாயர்கள் இஸ்லாத்தின் அரிச்சுவடி கூட படிக்கவில்லை.அவர்கள் மது மாது மண்ணாசை ஆடம்பரம் ஆகியவற்றிலே மூழ்கியிருந்தனர்.

  ஆனால் உமர் ரலி அவர்களோ எளிமை நேர்மை சமத்துவம் நீதி பாரபட்சம் அற்ற மனன்ராக ஆட்சி செய்தார்

  ஒருமுறை கிறித்தவ நகரை வென்ற சமயத்தில் அங்கு இருந்த சர்ச்சின் மைதானத்தில் உமர் ரலி அவர்களும் அவரது படைகளும் இளைப்பாறுகின்றனர் .தொழுகை நேரத்தில் அங்கு இருந்த பாதிரியார்கள் சர்ச்சுக்குள் வந்து தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளுமாறு வேண்டுகிறார்கள் உமர்ரலி அவர்களோ " அதனால் பின்னர் இந்த சர்ச்சுக்கு முஸ்லிம்கள் உரிமை கொண்டாடக் கூடும்" என்று மறுத்து மைதானத்திலே தொழுகையை நிறைவேற்றினார்கள்.

  ஒரு சொற்பொழிவில் உமர் ரலி அவர்கள் நீண்ட அங்கி அணிந்து வருகிறார்.,அப்போது அங்கு இருந்த ஒரு பிரஜை ,ஜனாதிபதி அவர்களே ,இந்த ஆடைக்கான துணி கடந்த போரில் கிடைத்தது அல்லவா?ஆனால் எங்களுக்கு கிடைத்த பங்கில் இடுப்பளவு தான் சட்டை தைக்க முடிந்தது.உங்களுக்கு கால்வரை நீண்ட அங்கி தைக்க எப்படி முடிந்தது? நீங்கள் எங்களைவிட கூடுதலான பங்கை எடுத்துக் கொண்டீர்களா?என்று கேட்கிறார்.
  ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் கோபப்படாமல் ,"எனது மகனும் போரில் கலந்து கொண்டார் ,அவருக்கு கிடைத்த பங்கையும் அவர் எனக்கு கொடுத்து விட்டார்."என்று பதில் சொன்னார்
  இப்படி உமர்[ரலி] அவர்கள் ஆட்சியைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம் .
  உமரைபோன்று முகலாயர்கள் ஆட்சி செய்தால் இந்திய மக்களை இஸ்லாம் ஈர்த்திருக்கும் .

  ReplyDelete
 34. சாதி அமைப்பை யாரும் சரியாகப்புரிந்து கொள்ளவில்லை. வேதகாலத்தில் சமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சாதியற்ற சமுதாயம் பொருளாதாரம்,தொழில், வாழும்சுழ்நிலை கலாச்சாரம்,கல்வி போன்று வேறுபாடுகளால் சாதியாகப்பிரிந்து போனார்கள். மனுதர்மம் கூட பெண்களுக்கும் துறவிகளுக்கும் சாதிவேறுபாடு கிடையாது. அதாவது ஒரு பெண்ணை சாதி பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு சாதி கிடையாது. தற்காலத்தில் இக்கருத்தை மட்டும் மக்கள் ஏற்றுக் கொள்ள வைத்து விட்டால் சாதிக்கொடுமைகள் மறைந்து வீடும்.பலசாதி மக்கள் வைணவ சமய இயக்கத்தில் இணைந்ததால்உருவானதுதான் அய்யங்கார் சாதி. அதுபோல் பல சாதிமக்களும் பக்தி இயக்கத்தில்ட இணைந்து உருவானதுதான் பிள்ளைமார் சாதி.(மறைமலை அடிகள் புத்தகங்களின் இதற்கான ஆதாரங்களை குறிப்பிடுகிறரார்) சாதிகள் இணைந்து புதிய சாதிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும் . இதைஊக்குவிக்க வேண்டும் என்பதே ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரின் தீர்வு.

  ReplyDelete