Wednesday, November 21, 2012

நாத்திகம் ஆத்திகம் ஒரு எளிய விளக்கம்வணக்கம் நண்பர்களே,
நாத்திகம் ,ஆத்திகம் என்றால் நன்கு அறிந்த வியம்தானே இதில் என்ன எளிய விள்க்கம் என்கிறீர்களா!!. தமிழ்நாட்டில் நாத்திக இயக்கங்கள் பல காலமாக செயலாற்றி ஆட்சியை கைப்பற்றினாலும், கோயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. புதிதாக சாமியார்களும் , மத பிரச்சாரங்களும் ஒவ்வொரு இடத்திலும் இணையத்திலும் எதிரொலிக்கிறது. ஆகவே ஏன் இப்படி சூழல் நிலவுகிறது என்பதை அறிய வேண்டும்.

நாம் நாத்திகம் ஆத்திகம் என்பதை எளிதில் விளங்குவோம்.

நாத்திகம் என்பது சமஸ்கிருத நாஸ்திக் என்னும் சொல்லின் தமிழ் வடிவம்,தமிழாக்கம் என்றால் இறை மறுப்பாளர் என் பொருள் கொள்வோம்.ஆனால் முதலில் நாஸ்திக் என்றால் நான்கு வேதங்களை ஏற்க மறுப்பவனே என்ற பொருளில்தான் பயன்படுத்தப் பட்டது.
 nastika refers to the non-belief of Vedas rather than non-belief of God.[5] However, all these schools also rejected a notion of a creationist god and so the word nastika became strongly associated with them.

இந்த வரையறையில் பார்த்தால் ஆத்திகர்களில் பல வகைகள் உண்டு என்பதும்,ஒரு குழுவிற்கு ,மற்றவர் அனைவரும் நாத்திகரே எனப்புரியும்.ஆத்திகர் என்பதும் சமஸ்கிருத ஆஸ்திக் என்னும் சொல்லின் தமிழ் வடிவமே, இறை நம்பிக்கையாளர் என தமிழாக்கம் செய்யலாம்.

The Sanskrit term Āstika ("pious, orthodox") refers to the systems of thought which admit the validity of the Vedas  Technically, in Hindu philosophy the term Āstika refers only to acceptance of authority of Vedas, not belief in the existence of God.

ஆனால் இங்கும் ஆத்திகர் என்பது வேதங்களை ஏற்பவனே தவிர இறை நம்பிக்கையாளன் அல்ல!!!.
ஒரு சொல்லின் பயன்பாடும் பரிணாம வளர்ச்சி அடையும் என்பதால் ,அவற்றின் பொருளும் மாறுவதில் வியபில்லை.
சரி இப்போது ஆத்திகர் என்றால் என்ன சொல்ல‌லாம்
சில புத்தகங்கள்,சில மனிதர்களின் இயற்கைக்கு மேம்பட்ட செயலை ஏற்பவர்கள் எனலாம்.
நாத்திகர் என்றால் இயற்கைக்கு மேம்பட்ட செயல் எப்போதும் சாத்தியம் அற்றது   என  ஏற்பவரே.
நாத்திகம் என்பதே இயற்கையியல் எனலாம்.


காணொளியின் வாக்கியங்களை தமிழாக்கம் செய்கிறேன்.
1..நம் முன்னால் ஒரே ஒரு உலகமே அறிவியலால் வரையறுக்கப் பட்டதாக உள்ளது என்பதை புரிந்து அறிவோம்.இதில் நாமும் ஒரு அங்கமே!!!
[அதாவது வேறு உலகங்கள் சொர்க்கம் ,நரகம் உள்ளிட்டு இல்லை]

2. இயற்கையியல்[naturalism] என்பது ஒரு வாழ்வியல் தத்துவம்,வழிகாட்டி ஆகும்.இது அதி இயற்கையியல்[super naturalism] என்னும் இயற்கைக்கு மேம்பட்ட செயலின் எதிர் தத்துவம் ஆகும்.

3. நமக்கு ஆன்மா உள்ளது என்பது நம்மிடையே உள்ள பொதுவான ஆத்திக கருத்து. பவுத்தம் போன்ற சில நாத்திக கொள்கைகளும் இத்னை ஏற்கின்றன.

ஆனால் இது நம்பிக்கையின் மீது மட்டுமே அமைந்த வாழ்வியல் தத்துவம் ஆகும். இதனை பரிசோதிக்க முடியாது. உயிர்(ஆன்மா) என்பதும் உடலின் ஒரு தன்மையே . இதுவே மனிதன் மீதான இயற்கையியல் சார்ந்த பார்வை ஆகும் .

4. நாம் யார் என்பது தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி ஆகும். பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் ஒன்றுடன் ஒன்று வினை புரியும் விதத்தை விதிகளாக சான்றுகள் மூலம் நாம் வரையறுக்கிறோம். இந்த விதிகளும் எல்லைகளுக்குட்பட்டவை.நமது   சான்றின்   எல்லைகள் விரிவடையும் போது விதிகளும் மாறும்.
எ.கா நாம் பூமியை தாண்டி எதையும் அளவிட முடியாமல் இருந்து இருந்தால் நியுட்டனின் விதிகள் மட்டுமே இயக்கவியல்,ஈர்ப்பு விசைக்கு போதும்.ஆனால் அதையும் தாண்டி பல ஒளி வருடங்க்ள் தொலைவில் உள்ள பொருள்களை அளவீட்டு சான்றுகள் ஆக்க முடியும் போது  ,அச்சான்றுகளை விளக்க ஏதுவாக ஐன்ஸ்டின் தனது அறிவியல் விதியை வடிவமைத்தார்.

சான்றுகளின் மீதே அறிவியல் விதிகள் கட்டமைக்கப் படுகின்றன.அறியும் இயற்கையின் எல்லைக் கேற்ப விதிகளும் மாறுகின்றன.

ஆகவே இயற்கை என்பதும் நம் அறியும் திறனுக்கேற்ப விரிவடைகிறது.அளவீட்டு சான்றுகளால் அளவிட முடியும் எதுவும் இயற்கையே!!.

மனிதன் உள்ளிட்ட‌ உயிரினங்களின் மாற்றங்களுக்கும் விதிகள் உண்டு. நாம் இயற்கையின்   ஒரு அங்கமாக இணைந்து இருக்கிறோம். இது எதார்த்தமான உண்மையே அன்றி மாய தொடர்பு அல்ல.

சில எறும்புகள் ஒரு பெரிய ரொட்டித் துண்டை   இழுக்கும் போது,ஒவ்வொன்றும் ஒரு திசையில் இழுத்தால், ரொட்டி முடி்வு திசையில் நகரும்.அனைவருக்கும் எதிரான அனைவரின் போராட்டம் என்பதற்கு இந்த எ.கா நன்கு பொருந்தும்.

இயற்கையோடு வாழும் வாழ்வில் சில போட்டிகள்,வாழ்வதற்கான போராட்டம்,சூழலுக்கேற்ற மாற்றம் என்பதே நமது பரிணாம வரலாறு ஆகும். [இதை சொல்பவர் கார்ல் சேகன்].

இபோது நம் ஆத்திக சகோக்கள் வைக்கும் வாதம் எல்லாம் படைப்பு என்றால் படைப்பவன்,இருந்தாக வேண்டும்.[First cause argument]

விதிகள் இருப்பதால் இதனையும் அறிவார்ந்த சக்தி(கள்) ஒழுங்காக நமக்காக வடிவமைத்து இருக்கிறது[Fine tuning argument]. என்பதைத் தவிர நாத்திகர்களுடன் விவாதத்தில் வைக்க மாட்டார்கள்.

ஆனால் தங்களைப் பின்பற்றுப‌வர்களிடம் இது சரி அது தவறு சட்டம் போட்டு, அது ஆட்சி அதிகாரச் சட்டமும் ஆ(க்)கும் அபாயமும் இருக்கிறது. சில மத ஆட்சி நாடுகளில் பிற மதங்கள் தடை செய்யப் படுகின்றன.மத் ரீதியாக பாரபட்சம் சட்டங்களில் உண்டு. அதையும் சிலர் [தமிழ் பதிவுலகிலும்] நியாயப் படுத்துகிறார்.

இயற்கை என்பது ஒரு தொடர் இயக்கத்தில் இருக்கிறது நாம் கடந்த கால்த்தின் நிகழ்வுகளை சான்றுகள் மூலம் பொருந்தும் விளக்கம் கொண்டே கணிக்கிறோம். சான்றுகள் இல்லாக் காலத்தை நம்மால் கணிப்பதில்   பல சிக்கல்கள் உண்டு.

உயிரின தோற்ற வளர்ச்சியை பரிணாம கொள்கை விளக்குகிறது, அனைத்து உயிரின‌ங்களும் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்து ஒரு செல் உயிரிகளில் இருந்து கிளைத்து தழைத்வையே. மனிதன்(ஹோமோ சேஃபியன்) பரிணமித்தது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன், மனிதனும் ,சிம்பன்சியும் ஒரே முன்னோரில் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். ஹோமோ என்னும் பேரினத்தில்[genus] சுமார் 20 மனித இனங்கள் தோன்றி,அதில் ஹோமோ சேஃபியன் மட்டும் இன்றுவரை வாழ்கிறோம். மனிதன் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் அறிந்து ஒரே இடத்தில் வாழ முற்பட்டான்.அதன் பிறகே இந்த நாகரிகம்,மதம்,அரசியல் வரலாறு அனைத்துமே!!!.


நாம் நம்மால் எது சரியாக அறிய இயலுமோ அதனை ஒத்துக் கொள்வதும், இப்போதைய விடை தெரியா விடயங்களை அறிய முயல்கிறோம் என்பதே உண்மை. அறிந்த பின் அது இயல்பான விடயம் ஆகி விடுகிறது.

அப்படி அறிவால்   அறிந்த உண்மைகளை அன்றே வேதத்தில் கூறினார் ஆதிமூலம் என்னும் (பொய்)பிரச்ச்சாரம் ஒரு ஏமாற்று வேலையே.

வேதங்கள் தோற்றம் பற்றிய கதைகளுக்கும் வரலாறு,மொழியியல்,அகழ்வாய்வு சான்றுகள்   இல்லை.இதனை உணர்ந்தாலே மதபுத்தகங்கள் மதிக்கப் படாது.

ஆத்திகர்களில் மத புத்தகவாதிகளே முழு மூச்சாய் எதிர்க்கப் பட வேண்டியவர்கள். மத புத்தக்ங்களில் ஒரு குழுவை உயர்வாகவும்,இதர குழுக்களை மோசமானவர்களாகவும் காட்டி ,தன‌து குழுவை இறைவன் தேர்ந்தெடுத்தார் என்பதுதானே  இன்றுவரை வன்முறை மத்திய கிழக்கில் நடக்க காரணம்.

தன்னை வணங்காதவர்களை நித்திய நரகத்தில் இட்டு பொசுக்குவேன் என்பவர் மத சார்பின்மை ஜனநாயக்த்தில் நம்பிக்கை இல்லாதவ்ர் அல்லவா!! ஹி ஹி

இப்படிப்பட்ட கடவுளை நம்புபவர்கள் எப்படி மத சார்பின்மை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு ஏற்பர்?தங்களின் பாரபட்ச மத சட்டம் அமல்படுத்த வழியில்லை எனப்போடும் வேடம் இது.
***************
நாத்திகம் என்பது சான்றுகள் அடிப்படையில் பரிசோதித்து மட்டுமே உண்மைகளை ஏற்பது.

உண்மை என்பது   ஒன்றை ஒன்று சாராத பல பரிசோதனைகளில்,மாறும் சூழலுக்கும்  வெற்றி பெற வேண்டும்.

சான்றுகளுக்கு பொருந்துவதே உண்மை.
  
ஆத்திகம் என்பது அம்மத நம்பிக்கையாளருக்கு ஊக்கமூட்டும் ஒரு தத்துவம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர்கள் பிறரை விட  கடவுளினால்   விரும்பப் பட்டு ஏற்கப்படுவதாக நினைக்கிறார்கள்.வாழும் சூழலுக்கு தகுந்த்வாறு போடும் இரட்டைவேட முகமூடிகள் கோமாளித்தனம் போல் தெரிந்தாலும் ஆபத்தானது.!!!

மரணத்திற்கு பின்னும் இன்ப வாழ்வு வாழ நினைக்கும் கொள்கைகளை நகைச்சுவை என்று மட்டுமே சொல்வோம்.

ஆத்திகர்கள் தங்கள் மதத்திற்காக எதையும் செய்யும்,நியாயப் படுத்தும் மனநிலையில் இருக்கிறார்கள் என்பது நாம் நடத்திய விவாதங்களில் நன்கு புரியும்.

ஆத்திகர்கள்  இணைவதாக நடிப்பதே அவர்களின் கொள்கையில் உண்மையில்லை என்பதை உணர்ந்து இருப்பதையே காட்டுகிறது. அனைத்து மதங்களும் ஒன்றுதான் என நம் பதிவுலக வஹாபி   சகோக்கள் சொல்லி விட்டால் நம்வேலை பாதி முடிந்தது.

நாம் மதங்களை எதிர்ப்பது இரு காரணங்களுக்காக மட்டுமே!!

1. அதி இயற்கையியல்[Super natural இய‌ற்கைக்கு மேம்பட்ட சக்தியை அறிதல்,சாதகமாக செயல்பட வைத்தல்] என சொல்லி ஏமாற்றுதல்.

2. மத அடிப்படை அரசியல‌மைப்பு சட்டங்கள்.

சரி எல்லோரும் நாத்திகர் ஆவது கடினம் என்பதால் ஆத்திகர் (உலக முழுதும்) இப்படி இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.
.
ஆத்திகத்தில் தத்துவம் இருக்கிறது, அது காட்டும் வாழ்வுமுறை பிடித்திருக்கிறது, அரசு அமைப்பில் ஜனநாயகம்,மத சார்பற்ற மனித உரிமைச் சட்டங்களே வேண்டும் என்னும் ஆத்திகர்கள் மட்டும் உருவானால் மகிழ்ச்சி!!!

நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் மிக குறைவே.உலக ஆத்திகர் அனைவரும் இணைந்து வந்து நம்மோடு  விவாதித்தாலும் சரியே!!
ஆனால் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே விவாதிப்போம்.
கேள்விகள் விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன..

டிஸ்கி: ஒரு மிகப் பெரிய தன்னிலை விளக்கமும் சில சமூக பிரச்சினைகள் சார்ந்து கொடுப்பது அவசியம் ஆகிறது. விவாதத்தில் வரும்  கருத்துகள் சார்ந்து முயற்சிப்போம்.
நன்றி

85 comments:

 1. சகோ.சார்வாகன்,

  நல்லப்பதிவு.

  என்னைப்பொறுத்தவரை செரிக்கிற எல்லாம் சாப்பிடலாம், எல்லாம் குடிக்கலாம், மனசுக்கு புடிச்ச பொண்ணைக்கட்டிக்கலாம், மனசுக்கு புடிச்ச வேலை செய்யலாம்னு சொல்லிட்டா அது எந்த கடவுளா இருந்தாலும் சரி தான்...ஆத்திகனா ஆயிடுவேனுங்க :-))

  ReplyDelete
  Replies
  1. சகோ வவ்வால் வாங்க,
   நாம் என்ன சொல்கிறோம்???.

   நாத்திகரிடம் விவாதிக்கும் போது ஒரு பேச்சும், மதம் நம்பும் அப்பாவிகளிடம் இன்னொரு பேச்சும் ஏன்?

   நீங்கள் சொன்ன இதைச் செய் ,அதை செய்யதே என ஆன்மீக விளக்கம் எங்கு பேசனுமோ தெளிவாக் பேசுவது இரட்டை வேட ஏமாற்று வேலையே.

   தான் செய்யக் கூசும் ஒரு செயலை அவதார புருஷன்/தூதன் செய்தால் அதனையும் தாங்கிப்பிடிப்பது இரட்டை வேடமே!!

   சிறுபான்மையாக இருந்தால் ஒரு பேச்சு/ பெரும்பான்மை ஆனால் ஒரு பேச்சு என்னும் நாடகமும் இரட்டை வேடமே.

   விவாதம் செய்ய வரும் ஆன்மீக இரட்டைவேடதாரிகளை வரவேற்கிறோம்.

   இயற்கைக்கு மேம்பட்ட செயலை எப்போதுமே யாரும் செய்ய இயலும் என‌ நம்பாதே, மத சட்டங்களை ஏற்காதே என்பதே நமது கொள்கை!!

   நன்றி!!!

   Delete
  2. சகோ.சார்வாகன்,

   இரட்டை வேட ஆத்திகர்கள் எல்லாம் அப்பீட் ஆகிட்டாங்க , நான் சில்லி பீஃப் சாப்பிடலாமன்னு மட்டும் தான் கேட்டேன் :-))

   இப்போ தனியா ஜெயதேவுடு மட்டும் பொலம்பினு கீறார் :-))

   ஏக இறைவன் எல்லாம் ஒன்றே என சொன்னால் இஸ்ரேல்-காசா சண்டை ஏன்?

   யூதர்களும் ஏக இறைவன் வழிபாடு செய்பவர்கள், இஸ்லாமும் ஏக இறைவழிபாடு எல்லாம் ஒன்னு தான்னு ஒற்றுமையா வாழ வேண்டாமா?

   தூத்தேறிங்க இணையத்தில் மட்டும் ஏக இறைவன் ,கிருஷ்ணரும் ஏக இறைவன்னு சொல்ல வேண்டியது , அப்பாலிக்கா குண்டு வீசுறது என்ன பொழப்புடா இது :-))

   Delete
  3. சகோ வவ்வால்,

   இந்த பல இறை ஆத்திகம் இதில் மூட நம்பிக்கையான மந்திரம் மாயம் மட்டும்தான் பிரச்சினை. இதை மட்டும் நம்பாமல் இருந்தால் பிரச்சினை அதிகம் இருக்காது. இந்துத்வா கோஷ்டிகள், இராமன்,கிருஷ்னன் என வேதங்கள் என கதை விட்டு வைதீக சனாதன‌ தர்மம் என்னும் பிராமணர்களின் ஓரிறை மதத்தை அனைவருக்கும் திணிக்கிறார்.

   இந்த ஓரிறைக் கொள்கைகளின் ஓரிறை என்றால் ஓர் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என ஆன்மீக ரீதியாக மிக சரியாக விளங்க வேண்டும். கடவுள் பேச்சை குழப்பிட்டான்,மீறிட்டான் மாத்திப் புட்டான் என மறை கழண்டு போய் அடித்துக் கொண்டு சாவதே அதன் வரலாறு.

   ஒரு ஓரிறை மதவாதி அடுத்த ஓரிறை மதவாதி யை மன‌தார நம்பவே மாட்டான்.ஓரிறைக்கு சகிப்பு தன்மை கிடையாது!!!

   இதனால் இந்தியா நாத்திக நாடாக விட்டாலும் பல தெய்வ .சிறு தெய்வ வழிபாடு அழிந்து விடக்கூடாது எனவே கூறுகிறேன்.

   இந்துத்வ ஓரிறை பலர் ஏற்றால் நம் நாடும் இப்படி ஆகிவிடும் வாய்ப்பு அதிகம்!!

   நம்ம மார்க்க பந்துக்களுக்கு ஏன் இந்து,கிறித்தவ காஃபிர்கள் மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்குகிறார்கள் என பயங்கர சந்தேகம்!!!!!!!

   அவர்களுக்கு சுதந்திரம் என்றால் புரியாது!!!

   நன்றி!!!

   Delete
 2. //ஏக இறைவன் எல்லாம் ஒன்றே என சொன்னால் இஸ்ரேல்-காசா சண்டை ஏன்?//

  உங்க அப்பா சம்பாரித்து வைத்த வீட்டை எவனோ வந்து அபகரிச்சு உட்கார்ந்து கிட்டு உங்களை வீட்டை விட்டு வெளியேற்றினால பார்த்துக் கொண்டு சும்மா இருப்பீர்களோ?

  //இந்துத்வ ஓரிறை பலர் ஏற்றால் நம் நாடும் இப்படி ஆகிவிடும் வாய்ப்பு அதிகம்!!//

  சவுதிலே அப்படி எதுவும் ஆகலிங்கண்ணா. நல்லபடியாக அமைதியாகவே போய்கிட்டிருககு. அதற்கு காரணம் அமெரிக்கா என்று சொல்லாதீங்கண்ணா.... ஏன்னா அமெரிக்க ஆளுமையில் இருக்கும் ஈராக்கும், ஆப்கானிஸ்தானும் எந்த நிலையில் உள்ளது என்பதை நாம் நன்றாகவே அறிவோங்கண்ணா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ சு.பி,
   //உங்க அப்பா சம்பாரித்து வைத்த வீட்டை எவனோ வந்து அபகரிச்சு உட்கார்ந்து கிட்டு உங்களை வீட்டை விட்டு வெளியேற்றினால பார்த்துக் கொண்டு சும்மா இருப்பீர்களோ?//

   ஐ.நா கொடுத்த நாடு போதாது என முதலில் 1948ல் போர் தொடங்கியது யார்?இஸ்ரெல் முற்றுமுழுதும் அழியட்டும் என வெளியேறியவர் யார்?

   இஸ்ரேல் அன்றுமுதல் இன்றுவரை போரில் ஜெயித்துக் கொண்டே இருப்பதால் மட்டுமே இருக்கவாவது முடிகிறது.இஸ்ரேல் ஒருமுறை தோற்றால் அழிந்து விடும். ஆகவே த்ன்னைப் பாதுகாக்க எதுவும் செய்வார்கள்.

   இஸ்ரேலின் மக்கள் தொகையில் 30% அரபுக்கள். குடியுரிமை பெற்று பிற அரபு நாட்டு மூமின்களை விட நன்கு வாழ்கிறார்.ஆனால் மூமின் நாடுகளில் பிறர் இப்படி வாழ்வது கன‌விலும் சாத்தியம் அற்றது

   பாலஸ்தீனர்கள் ,அரபு நாடுகளை நம்பியே நாசம் ஆகிறார்கள்.அதற்கு இஸ்ரேலை நம்பி ஒரு தீர்வு காண்பதே நல்லது.
   ****
   //சவுதிலே அப்படி எதுவும் ஆகலிங்கண்ணா. நல்லபடியாக அமைதியாகவே போய்கிட்டிருககு. அதற்கு காரணம் அமெரிக்கா என்று சொல்லாதீங்கண்ணா.... ஏன்னா அமெரிக்க ஆளுமையில் இருக்கும் ஈராக்கும், ஆப்கானிஸ்தானும் எந்த நிலையில் உள்ளது என்பதை நாம் நன்றாகவே அறிவோங்கண்ணா...//

   சவுதியில் அமெரிக்க விசுவாசி இபின் சவுத் வம்சத்த்வர் ஆளுகிறார் என்பதாலும்,அவர் அமெரிக்காவிற்கு எண்னெய் அள்ளிக் கொடுப்பது மட்டுமல்ல,அவர் யூத வம்சத்தினர் என்பதால் இஸ்ரேலுக்கும் நம்பிக்கைக்கு உரியவர்.

   எப்படி இபின் சவுத் வம்ச ஆட்சி வந்தது? எதிர் குழுவினர் அனைவரையும் போட்டு தள்ளித்தானே?

   ஆக்வே புயலுக்கு பின்னே அமைதி.

   ஈராக்கிலும் இதேபோல் ஒரு விசுவாச வம்சம் கிடைத்தால் அமைதி கொண்டு வந்து விடுவார்கள்.சதாம் அமெரிக்க விசுவாசியாக் இருந்த போது அவர் குர்திய மூமின்களை கொன்று குவித்தாலும் ஆதரித்தார்கள் என நினைவு கூறுங்கள்.
   அங்கி பெரும்பான்மை ஷியாக்கள் அமெரிக்காவை எபோதும் ஆதரிக்க மாட்டார்க்ள். வஹாபிகளே எப்போதும் அமெரிக்க விசுவாசிகள் . இராக் மூன்றாக பிரியும் [சுன்னி,ஷியா ,குர்திய ]என்பது என் கணிப்பு. இதில் சுன்னி , குர்திய‌ மூமின்கள் அமரிக்க விசுவாசிகள் ஆகி விட்டால் அங்கு அமைதி வரும்.ஆனால் ஷியாக்களுக்கு வரவே வராது. வஹாபிகள் போல் பிழைக்க தெரியா பேதைகள்!!!!

   ஆப்கானில் விசுவாசி ஹமித் கர்சாய் கிடைத்து விட்டார். ஆனால் அங்கு திருட எதுவும் இல்லை. இரஷ்ய ,இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கவே தலிபானை முற்றும் ஒழிக்க மாட்டேன் என்கிறார்கள்.

   ஆயினும் நிலையை கட்டுக்குள் வைத்தே இருக்கிறார்கள்.

   இந்தியாவுக்கு பிரச்சினை பண்ண வேண்டுமெனில் தலிபானுக்கு ஆயுதம் கொடுத்து இந்தியாவின் மீது திருப்புவார்கள்,தலிபான்களும் செய்வார்கள்.
   மதமாவது,கொள்கையாவது பணம், பணம் ,பணம்.

   இன்னும் கேள்வி கேட்கலாம்!!!

   நன்றி

   Delete
  2. சு.பி.சுவாமிகள்,

   நான் தான் நாத்திகன் ஆயிற்றே சும்மா விட மாட்டேன்.

   ஆத்திகர் அதுவும் ஏக இறைவன் வணங்குவோர் என்றால் நீங்கள் சகோதரர் என்று அல்லவா சொல்வீர்கள், சகோக்கள் அனுபவிக்கட்டுமே என விடலாமே.

   மேலும் சாந்தியும்,சமாதானமும் நிலவ சொல்லி கொண்டு திரிபவர்கள் சண்டை போடலாமோ :-))

   இல்லை எனில் ஷரிய்யாவில் கொலை செய்தாலும் இரத்தப்பணம் கொடுத்தால் போதுமே அதே போல சதுர அடிக்கு இவ்வளவு பணம் கொடுக்க சொன்னால் இஸ்ரேல் கொடுக்கப்போகிறது அதனை வாங்கிக்கொண்டு அமைதியாக காசா மக்கள் வாழலாமே.

   ஏன் எனில் எந்த அரபு நாடும் காசா மக்களுக்கு இலவசமா உணவோ,கல்வியோ, வேலையோ,பெட்ரோலோ கொடுக்கப்போவதில்லை,எனவே இஸ்ரேலிடம் பணம் வாங்கிக்கொடுத்தால் காசா மக்களின் வாழ்வுக்கு உதவும்.

   சாந்தியும்,சமாதானமும் நிலவுவதாக!!!

   Delete
  3. ஏன் இலங்கையில் தலையிட்டு ஐநா ஈழத்தை பிரித்துக் கொடுக்கவில்லை ?பாலஸ்தினை பங்கிட ஐநாவுக்கு அத்தனை முனைப்பு ஏன்?
   இஸ்ரேல் அன்றிலிருந்து இன்றுவரை ஜெயித்துக் கொண்டே இருப்பதால் அல்ல. ஜெயிக்க வைக்கப்படுவதால் என்று சொல்லுங்கள் .
   //இஸ்ரேலின் மக்கள் தொகையில் 30% அரபுக்கள். குடியுரிமை பெற்று பிற அரபு நாட்டு மூமின்களை விட நன்கு வாழ்கிறார்.ஆனால் மூமின் நாடுகளில் பிறர் இப்படி வாழ்வது கன‌விலும் சாத்தியம் அற்றது///
   அரபுகள் அனைவரும் முஸ்லிம்கள் அல்ல ,கிறித்தவர்களும் உண்டு .அரபு நாட்டு மூமிங்களைவிட என்றால் எந்த அரபு நாட்டை சொல்லுகிறீர்கள்?

   இஸ்ரேலில் முஹ்மீன்கள் அமைதியாக வாழ்கிறார்கள் ,ஆம் குஜராத்திலும் அமைதியாக இருப்பதாகத்தான் மோடி சொல்லுகிறார்.இப்போது சிறிலங்காவிலும் தமிழர்கள் அமைதியாகத்தான் வாழ்கிறார்கள் .

   முஸ்லிம் நாடு என்றால் மலேசியா ,இந்தோனேசியா வெல்லாம் உங்களுக்கு தெரியவில்லையா? எண்ணெய் நாடுகளில் மேலைநாடுகளின் கொள்ளை வெறியால் அமைதி இல்லாதவண்ணம் பார்த்துக் கொள்கின்றன.அரபுநாடுகளின் ஒற்றுமை பற்றிய கருத்தை கொண்ட எகிப்து அப்துல் நாசர் கொல்லப்பட்டார்.சவூதி அரேபியாவின் பெயசல் சுட்டு கொல்லப்பட்டார் .அமேரிக்கா என்ற நாசாகாரன் இருக்கும் வரை மத்தியகிழக்கில் அமைதி ஏற்படாது.
   தனது நாணய மாற்றுவிகிதத்தை டாலரிலிருந்து யுரோவுக்கு மாற்றிய காரணத்தை வைத்து பேரழிவு ஆயுதங்கள் என்று கோயபல்சை மிஞ்சும் பொய்களை பரப்பி அந்த நாட்டை சின்னபின்னாமாக்கியத்தை எந்த உலக நாடுகள் நியாய்ம்கேட்டன? ஈராக் போருக்கு முன்னர் டீசல் 9 ரூபாய்க்கு இருந்தது .அந்தநாட்டை கைப்பற்றி ஒபெக்கை செல்லாக்காசாக்கி தனது அமெரிக்கக் கம்பெனிகள் கையில் பெட்ரோல் மார்க்கெட் வந்ததோ அன்றிலிருந்து விலை உயர் ஆரம்பித்தது.அதை தொடர்ந்து தங்கம் விலைஉயர்ந்தது.

   சவூதி அமெரிக்காவை புத்திசாலித்தனமாக கையாள்கிறது.அமேரிக்காவை இப்போது எதிர்ப்பது மடமை என்பது சீனாவுக்கே தெரியும் .உங்களது ஆசைகள் எல்லாம் சவுதியும் எதிர்க்கவேண்டும் .உடன் அமேரிக்கா சவுதியில் பயங்கரவாதிகள் கையில் போய்விட்டது .அணுகுண்டு தாயரிக்கும் யுரேனியம் உள்ளது என்றுபோட்டு தள்ளி இருக்கும் ஒரு நல்ல முஸ்லிம் அரசையும் இல்லாமற் போக செய்யவேண்டும் என்பதே உங்களை போன்றோர் நீண்ட நாள் ஆவல் .

   எந்த முஸ்லிம்களும் ,முஸ்லிம்னாடுகளும் தவறு செய்யவில்லை என்பதே உண்மை பாக்கிஸ்தான் நீங்கலாக .அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் ,கம்யுனிசம் எல்லாம் தங்களது வசதிகேற்றவாறு இஸ்லாமை வளரவிடாமல் தடுக்கவும் ,எண்ணை வளத்தை கொள்ளையடிக்கவும் மட்டுமே அங்கு அமைதி நிலவாமல் பார்த்துக் கொள்கின்றன.அங்கு மிதி நிலவினால் அவர்கள் பொருளாதாரத்திலும் கல்வி ஆய்வு பணிகளில் ஈடுபடவிடாமல் ரத்தம் காயாமல் பார்த்துக் கொள்ளவே தங்களது முழுகவனத்தையும் செலுத்தி வருகின்றன.

   Delete
  4. சகோ இப்பூ,
   நான் உங்களைப் பாராட்டுகிறென். மன‌தில் உள்ளதை மறைக்காமல் பேசுகிறீர்கள். உங்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், மதம் என்பது சாமான்ய மக்க்ளை மட்டுமே கட்டுப் படுத்தும் விடயம், பணம் படைத்த ஆளும் வர்க்கத்திற்கு அல்ல.

   மதம் தவித்து ஒரு பிரச்சினையை அணுகுவது மட்டுமே தீர்வு தரும்.

   உலக வரலாறில் எப்போதும் வலியவன் எளியவனை ஒடுக்குவதே நிகழ்ந்துள்ளது, ஆனால் நாடகத்தில் நாயகன்,வில்லன் ஆவதும்,வில்லன் நாய‌கன் ஆவதும் மிக இயல்பு!!

   மத்திய கிழக்கில் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளைப் பாருங்கள். நான் சொல்ல வருவது புரியும்!!

   மதத்தின் மூலம் எதுவும் செய்ய முடியாது!!!

   நன்றி!!!

   Delete
 3. mY comment on das blog
  நண்பர்களே,
  ஆத்திகர் ஒற்றுமை எனப் பச்ப்பினாலும் தாசு மோடி ஆதரவாளரே!!
  நம் தள பின்னூட்டம்!!
  //
  Jayadev DasNovember 12, 2012 2:09 PM
  பாடப் புத்தகத்தில் வைப்பது என்பது வேறு, அறிவியல் முறைப் படி ஏற்றுக் கொள்ளப் பட்டது என்பது வேறு. அறிவியல் முறைப் படி ஏற்கப் படவில்லை.

  மட்டு மூத்திரம் குடிப்பது அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு, அதில் மூன்றாம் மனிதர்கள் தலையிட முடியாது.

  சம்பந்தமில்லாமல் இன்னொரு மாநில முதலமைச்சரை இங்கே இழுத்திருக்கீங்க. அப்படி அந்தாளு உங்களுக்கு என்ன தீங்கு பண்ணினார் என்று தெரியவில்லை. அவரோட மாநிலத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து மீதம் காண்பித்திருக்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாட்டிற்குள நுழையாமல் பார்த்துக் கொள்கிறார். சாதாரண குடிமக்கள் அவர்கள் எந்த மதமானாலும் நலமாக வாழ்வதை உறுதி செய்கிறார். தீவிரவாதியை பாரபட்சமில்லாமல் நசுக்குகிறார். அப்படியே திரும்பி உங்க சொந்த மாநிலத்தைப் பாருங்க. பேச்சில் மட்டும் தான் மதச் சார்பின்மை. நாட்டிர்க்குச் சேர வேண்டிய Rs. 1.75 லட்சம் கோடி அம்போ ஆயிடுச்சு. ஈழத்தில் கொத்துக் கொத்தாய் மக்கள் செத்தாலும் ஒன்னத்தையும் புடுங்க வில்ல. இந்த மாதிரி நாத்தீகனை விட மாட்டு மூத்திரம் குடிக்கச் சொன்ன ஆத்தீகன் எவ்வளவோ பெட்டர்//

  இதை துப்பாக்கி படத்தில் காட்டினா குதிப்பவர்கள். தாசிடம் இஸ்லாம்,இஸ்க்கான் பாய் பாய் என்கிறார்.

  சிந்திக்க மாட்டீர்களா

  நன்றி!!!

  ReplyDelete
 4. வணக்கம் சகோ,

  கலக்கல் பதிவு ஒருபக்கம் தோழர் செங்கொடி நல்லூர்முழக்கத்தில் கடவுளை கிண்டியெடுக்கிறார்,இங்கு வந்தால் அத தாண்டி கலக்கியிருக்கு. ஒன்றும் சொல்வதற்கில்லை தாவா பணி தொடரட்டும்.

  //அப்படி அறிவால் அறிந்த உண்மைகளை அன்றே வேதத்தில் கூறினார் ஆதிமூலம் என்னும் (பொய்)பிரச்ச்சாரம் ஒரு ஏமாற்று வேலையே.


  வேதங்கள் தோற்றம் பற்றிய கதைகளுக்கும் வரலாறு,மொழியியல்,அகழ்வாய்வு சான்றுகள் இல்லை.இதனை உணர்ந்தாலே மதபுத்தகங்கள் மதிக்கப் படாது.//

  ஆம் அதனால்தான் அன்று ஏமாற்று வலையில் விழுந்தவர்கள் இன்னும் எழவில்லை. குரான்ல அல்லா சொல்லிபுட்டான் அவன் வாக்கு தவறாது,எல்லாம் அவன் நாட்டம்,என்று புலம்பாத மூமின்களே கிடையாது.அந்த அளவுக்கு மூளை விலங்கிடப்பட்டுவிட்டது என்றே கூற வேண்டும். மற்ற மதவாதிகளைவிட அதிகம் புலம்புவது என்னவோ மூமின்கள்தான். காகித புத்தகங்களை நம்பி வாழும் சுயசிந்தனையற்றவர்கள்,இதில் அப்பாவி மூமின்கள் மட்டும் விதிவிலக்கு.இந்த வகை அப்பாவிகளின் மூளையையும் விலங்கிடத்தான் தாவா பணிகள் முடக்கிவிடப்பட்டிருக்கின்றன என்பதை நினைக்கும் போது வருத்தம் தான்.

  ReplyDelete
  Replies
  1. சகோ இனியவன்,
   மதம் என்பதும் அரசியல் என்பதும் ஒன்றுதான். பல நாகரிக நாடுகளில் மதத்தை அரசியலில் இருந்து தவிர்க்கிறார்கள்.

   இதை செய்யதவரை நாடு மதவாதிகளால் கட்டுப் படுத்தப்படும்.

   ஆண்டவன் கட்டளை என மதவாதி கூறி எதையும் சாதிக்க முடியும் என்பதும் ,இம்மதவாதிகள் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள் என்பதே உண்மை.மத பிரச்சாரம் என்பதே மதவாதிகளின் பிழைப்புவாத விளம்ப‌ரம் மட்டுமே!!!

   இத்னை உணராமல் மத போதையில் எதையோ நம்பி, எதையோ செய்து சிக்கலில் மூழ்குபவர்களைப் பார்த்தால் பாவமாக்வே இருக்கிறது.

   மதம் தவிர்த்து தன் அடிப்படை தேவைகளுக்காக மட்டுமே போராடுவதே சரி.

   இதனை சிந்திப்பது இல்லை நம் சகோக்கள்!!!

   நன்றி

   Delete
 5. சகோ. வழக்கம் போல அருமையான பதிவு.

  //இபோது நம் ஆத்திக சகோக்கள் வைக்கும் வாதம் எல்லாம் படைப்பு என்றால் படைப்பவன்,இருந்தாக வேண்டும்.[First cause argument]//

  இந்த படைப்பவனை படைத்தது யார்?

  ReplyDelete
  Replies
  1. சகோ ஏலியன் ,
   பிரபஞ்சம் தொடர் இயக்கத்தில் இருக்கிறது.கடந்த காலம் நாம் அறிய முடிந்தவரை இதுதான் என் தெளிவாக கூறுகிறோம். நம்முடையது தொடர் தேடல்.
   அவர்கள் எல்லாவற்றையும் கடவுள் என சொல்லி நிறுத்தி,அதை பற்றி கேள்வி கேட்காதே என வலியுறுத்தி, மதபுத்தகத்தை விமர்சனத்திற்கு அப்பால் என சொல்லி, ஏமாற்றுகிறார்கள்.

   விடை தெரியா கேள்விகளுக்கு வித்த்கனே காரணம் என்னும் முதல் காரணி வாதம் ஒரு ஏமாற்று வேலையே!!!ஏன் எனில் இது பரிசோதிக்கப்பட முடியாதது.

   நன்றி!!!!

   Delete
 6. //இந்த படைப்பவனை படைத்தது யார்?//

  நம்மை படைத்தவனை கேள்வி கேட்கும் அதிகாரம் நமக்கு கொடுக்கப்படவில்லை என்று பிரபல மத பதிவர் ஏற்கனவே சொல்லிவிட்டார்.

  ReplyDelete
 7. //நம்மை படைத்தவனை கேள்வி கேட்கும் அதிகாரம் நமக்கு கொடுக்கப்படவில்லை//

  சகோ. விஜய்,

  கேள்வி கேட்கும் அதிகாரம் நமக்கு கொடுக்கப்படவில்லை என்று யார் கூறியது? ஏன் கேள்வி கேட்க கூடாது?

  ஒரு விவாதத்திற்காக நானும் சொல்லலாம், எனக்கு அதிகாரம் கொடுக்கபட்டிருக்கிறது என்று.

  நாம் நமது அம்மா அப்பாவிடம் அவர்களது தாய் தந்தையை பற்றி கேட்பது சகஜம் தானே?

  ReplyDelete
  Replies
  1. சகோ விஜய்& ஏலியன்

   அவர்களின் இரைத்தூதரே அப்படித்தான் கூறுகிறார்.
   //7456. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
   நான் மதீனாவிலுள்ள ஒரு வேளாண்மை பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து (போய்க்) கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியவாறு யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி,) 'இவரிடம் 'உயிர்' (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்!' என்றார். இன்னொருவர், 'இவரிடம் கேட்காதீர்கள்! (நாம் விரும்பாத பதிலை அவர் சொல்லிவிடலாம்)' என்றார்.
   பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் 'ரூஹ்' பற்றிக் கேட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டையை ஊன்றியவர்களாக எழுந்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்த நான், நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) வருகிறது என அறிந்துகொண்டேன். பிறகு அவர்கள், '(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்; உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது' எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) வசனத்தைக் கூறினார்கள். அப்போது அந்த யூதர்கள் ஒருவர் மற்றவரிடம் 'அவரிடம் கேட்க வேண்டாமென உங்களிடம் முன்பே கூறினோமே!' என்றார்கள்.96
   Volume :7 Book :97//

   நம்புங்கள் சுவனம். இல்லையேல் நரகம் என்னும் மிரட்டல் கூட எடுபடாமல் படையெடுத்தே தன் ஆட்சி நிறுவினார் என்பதே அவரின் கருத்துகள் எவ்வள்வளவு உண்மை என புரியும்.

   யூதர்கள் எவ்வளவு தெளிவாக அன்றே இருக்கிறார்கள் பாருங்கள் ஹி ஹி

   நன்றி!!!

   Delete
 8. //கேள்வி கேட்கும் அதிகாரம் நமக்கு கொடுக்கப்படவில்லை என்று யார் கூறியது? ஏன் கேள்வி கேட்க கூடாது?//

  கீழ்க்கண்ட லின்க்கில் உள்ள பின்னூட்டங்களை பார்க்கவும்.

  http://suvanappiriyan.blogspot.in/2012/11/blog-post_12.html

  //அடுத்து நம்மை படைத்த இறைவனிடம 'என்னை ஏன் இப்படி படைக்கவில்லை?' என்று கேள்வி கேட்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. அதன் சூட்சுமத்தை அவனே அறிவான். //

  ReplyDelete
 9. ஒரு கேள்வி திரு சுவனப் ப்ரியனுக்கு...

  இஸ்ரேல் மற்றும் Jews, அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. அப்பன் புஷ் (senior Bush) இராக்குடன் போட்ட சண்டையில் அமெரிக்க மிலிடரி பெண்கள் குவைத்திக்கு ஆதரவாக சவுதி நாட்டிற்கு வந்தார்கள். வந்தார்களா இல்லையா? அவர்கள் முகத்தை மூடவில்லை. கார் ஒட்டினார்கள். பண்ணிக் கறியும் சாப்பிட்டார்கள். எல்லாம் சௌதியில் அரங்கேறியது. எல்லாவற்றையும் உங்கள் அரசு [ராஜா] தளர்த்தியது.

  ஆனால், உங்கள் ராஜாக்கள் அமெரிக்காவின் எடுபிடி தான்...அவர்களை ஆட்டுவிப்பது அன்றும் இன்றும் என்றும் அமேரிக்கா தான். உண்மையா? இல்லையா?

  இப்படிப்பட்ட அமெரிக்காவை ஏன் எதிர்க்கவில்லை?

  ReplyDelete
  Replies
  1. மும்பை தாதாவை கைது செய்யாத அரசு ,முகநூலில் கருத்தை பரிமாறிக் கொண்டதற்கு இரண்டு பெண்களை கைது செய்துள்ளதே இதை நீங்கள் எதிர்த்தீர்களா? மாதர்குல மாணிக்கங்கள் எதிர்த்ததா?

   Delete
 10. Thanks for the link Vijay.

  //கேள்வி கேட்கும் அதிகாரம் நமக்கு கொடுக்கப்படவில்லை//

  நான் 4 வருஷம் முன்பே கடவுளிடம் கேட்டுவிட்டேன். உங்களை படைத்தது யார் என்ற கேள்வியை. எந்த பதிலும் இன்று வரை வரவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கடவுளிடம் கேட்டிருக்க முடியாது .கண்டவர்களிடம் கேட்டுள்ளீர்கள்

   Delete
  2. நிஜமாக கடவுளிடம் தான் கேட்டேன் ஐயா. நம்புங்கள். நீங்கள் prayer செய்வீர்களல்லவா, அதே மாதிரி தான் நானும் prayer செய்து கேட்டேன்.

   Delete
  3. நிஜமாக கடவுளிடம் தான் கேட்டேன் ஐயா. நம்புங்கள். நீங்கள் prayer செய்வீர்களல்லவா, அதே மாதிரி தான் நானும் prayer செய்து கேட்டேன்.

   Delete
  4. நிஜமாக கடவுளிடம் தான் கேட்டேன் ஐயா. நம்புங்கள். நீங்கள் prayer செய்வீர்களல்லவா, அதே மாதிரி தான் நானும் prayer செய்து கேட்டேன்.

   Delete
  5. நிஜமாக கடவுளிடம் தான் கேட்டேன் ஐயா. நம்புங்கள். நீங்கள் prayer செய்வீர்களல்லவா, அதே மாதிரி தான் நானும் prayer செய்து கேட்டேன்.

   Delete
  6. நிஜமாக கடவுளிடம் தான் கேட்டேன் ஐயா. நம்புங்கள். நீங்கள் prayer செய்வீர்களல்லவா, அதே மாதிரி தான் நானும் prayer செய்து கேட்டேன்.

   Delete
  7. நிஜமாக கடவுளிடம் தான் கேட்டேன் ஐயா. நம்புங்கள். நீங்கள் prayer செய்வீர்களல்லவா, அதே மாதிரி தான் நானும் prayer செய்து கேட்டேன்.

   Delete
 11. //நான் 4 வருஷம் முன்பே கடவுளிடம் கேட்டுவிட்டேன். உங்களை படைத்தது யார் என்ற கேள்வியை. எந்த பதிலும் இன்று வரை வரவில்லை.//

  கேள்விக‌ளை எல்லாம் இருக்கிற‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்க‌ வேண்டும் இல்லாத‌ ஒன்றிட‌ம் கேட்டால் எப்ப‌டி ப‌தில் வ‌ரும்?

  ReplyDelete
 12. //நான் 4 வருஷம் முன்பே கடவுளிடம் கேட்டுவிட்டேன். உங்களை படைத்தது யார் என்ற கேள்வியை. எந்த பதிலும் இன்று வரை வரவில்லை.//

  கேள்விக‌ளை எல்லாம் இருக்கிற‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்க‌ வேண்டும் இல்லாத‌ ஒன்றிட‌ம் கேட்டால் எப்ப‌டி ப‌தில் வ‌ரும்?

  ReplyDelete
 13. எளிய விளக்கமாக இருக்கலாம்
  நான் ஏற்றுக் கொள்ள வேண்டுமே
  நான் ஏற்காத எதுவும் உண்மையில்லை
  அதனால்தான் இத்தனை கடவுள்கள்

  எதற்கு பதிலளிக்க இயவில்லைங
  எங்கு தடுமாறுகிறோர்களோ
  அங்கு கடவுள்எட்டி பார்கிறார்

  அப்புறம் சுவன பிரியன்

  இஸ்ரவேலர்கள்
  கிருஸ்து
  முகமது நபி யாவரும்

  ஆப்ரகாமின் வழி தோன்றல்கள் என்கிறது வரலாறு

  அப்புறம் இஸ்ரேல்
  பணம் கொடுத்து ஏக்கரா கணக்கில் இடத்தை வாங்கி நாடாக உருவாக்கியது.

  விலையே இல்லாத நிலத்திற்கு அதிக பணம் கிடைக்கிறதே என்று இடத்தை கொடுத்திட்டு இப்ப சண்டை போட்டுகிட்டு இருக்கிறாங்க

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ வேல்முருகன்,

   மதம் தவிர்த்தால் மட்டுமே பிரச்சினை தீரும்,ஏன் எனில் மதம் என்பதே பிரச்சினை.இஸ்ரேல் பாலஸ்தீனம் ஒரு எல்லைப் பிரச்சினை, பல நாடுகளில் இப்பிரச்சினை உண்டு.

   பார்க்க்லாம் அங்கே என்ன நடக்கிறது என்று!!

   நன்றி

   Delete
 14. திரு நம்பள்கி!

  //இப்படிப்பட்ட அமெரிக்காவை ஏன் எதிர்க்கவில்லை?//

  பால்தாக்கரே முதல் தர ரௌடி என்பது எல்லோருக்கும் தெரியும். தன் மேல் போலீஸ் கை வைத்தால் மும்பையில் பின் விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என்றவர். இப்படி சட்டத்தை மதிக்காமல் குண்டா ராஜ்ஜியம் நடத்தியவருக்கு அரசு மரியாதையோடு உடல் அடக்கம் ஏன் எடுக்கப்பட்டது. இதற்கு பதில் கிடைத்தால் உங்கள் கேள்விக்கான விடையும் கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சகோ சு.பி,

   சரியான் பதில்.வாழும் உலகின் சூழல் சார்ந்தே எவரும் வாழ முடியும். எந்த சக்தியும் வந்து காப்பாற்றாது என்பதை உணர்ந்த பதில்.

   நம்மை விட வலியவரை எதிர்க்க வன்முறை அழிவையே தரும்!!!

   இது புரிந்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வந்து விடும்.

   மருந்து சாப்பிடும் போது குரங்கு(மதம்) நினைக்க கூடாது!!

   நன்றி!!!

   Delete
  2. saar///நம்மை விட வலியவரை எதிர்க்க வன்முறை அழிவையே தரும்!!!//
   அப்படி என்றால் பல புரட்சிகள் எங்ஙனம் ஏற்பட்டது?
   இந்த கருத்தை மாவோயிஸ்ட்கள் ஏற்பார்களா?

   Delete
  3. சகோ இப்பூ,
   அவர்களுக்கு தெரியும்

   கார்ல் மார்க்ஸ் கூறுகிறர்.
   உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்
   தோற்றால் இஅழப்பதற்கு ஒன்றுமில்லை
   வென்றால் உலகெ நம் கையில்.

   இதே பாணியில் மூமின்கள் செய்வது என்றால்
   தோற்றால் மேலுலக சுவனம்
   வென்றால் இவ்வுலக் சுவனம்.

   பெரும்பாலும் வலியவ‌னுக்கு எதிரான போரில் சூழல் பங்கு வகிப்பதும், வலியவே வெறதுமே வரலாறு. வழக்கம் போல் சில விதிவிலக்குகளும் உண்டு. பாருங்கள் 1948ல் இஸ்ரேல் எளியவன்,அரபு நாடுகள் வலியவன்.ஜோர்டான் மன்னன் த்னது ஆட்சி போய்விடும் என போரின் பாதியில் இஸ்ரேலுடன் உடன்படிக்கை கொண்டான்.அதுவே இஸ்ரேலைக் காப்பாற்றியது.மத்திய கிழக்கு ஆட்சியாளர்களுக்கு மதம் ஒரு பொருட்டு அல்ல. மக்களை ஏமாற்றுகிறார்கள்

   ஆனால் இப்போது அப்படி அல்ல. இஸ்ரேலே வலியவன்.ஆகவே ............

   நன்றி!!!!

   Delete
 15. அண்ணாச்சி சொன்னதில் எனக்குப் புரிந்தது என்னவென்றால் அமெரிக்காவை எதிர்த்தால் கொட்டை நசுக்கப்படும் என்பதே.

  இப்ப அமெரிக்காவும் மோடியை ஆதரிக்க தயாராக உள்ளது...நாளை அந்த அடிமை நாடும் ஆதரிக்கும். அப்ப நம்ம அண்ணாச்சி மட்டும் சும்மாவா இருப்பார்?

  மோடிக்கு ஆதரவாக பதிவுகள் எழுதுவார்...முடிந்தால் குஜராத் சென்று தேர்தல் பிரச்சாரத்திலும் பங்குகொள்வார்.

  ReplyDelete
  Replies
  1. அமேரிக்கா மோடியை ஆதரிக்கும் என்பது அவசர கற்பனை.மோடியை அமெரிக்க தெரிந்தே வைத்திருக்கிறது பாம்பின் கால் பாம்பு அறியும் .இந்த ஹிந்துத்துவா பாம்பை கிறித்தவ பாம்பு வளரவிடாது .

   Delete
  2. அமெரிக்காவின் கொட்டையும் நசுக்கப்படும் நாள் வரும் .எல்லாநாளும் ஒன்று போல இராது .

   Delete
  3. மோடியை இதே பிஜெபிக்காரர்களே மூட்டைகட்டுவார்கள்

   Delete
  4. //இந்த ஹிந்துத்துவா பாம்பை கிறித்தவ பாம்பு வளரவிடாது .// ஆனால் இஸ்லாமியப் பாம்பான சவூதி அரேபியா அமெரிக்காவின் பிடியில் இருக்கிறதே.

   Delete
 16. யாருக்கு எந்த கெடுதலும் செய்யாத சவூதி அரசு பாம்பு அல்ல .அமெரிக்க பாம்புக்கு பயப்படும் ஒரு பாவம் .இந்த அமேரிக்கா பாம்பே விசத்தை கக்கி சவுதியை நாசமாக்கிவிடும் என்பதால் நீ அமெரிக்கவிளிருந்தே ஆடு என்று தன்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. இப்பு,

   //யாருக்கு எந்த கெடுதலும் செய்யாத சவூதி அரசு பாம்பு அல்ல //

   நீர் பேசுவது ரொம்ப தப்பு, சிரியாவில் என்ன செய்கிறது , ஜோர்டானில் என்ன செய்தது, இரானில் என்ன செய்கிறது சவுதீ என்றெல்லாம் சொன்னால் உம்ம மூஞ்சை ஒட்டகத்தின் பின்னால் மறைத்துக்கொள்வீரா?

   போனமா பொழைப்பை பார்த்தோமா, குடும்பத்துக்கு நாளு காசு அனுப்பினமோனு இல்லாம சவுதிக்கு ஜால்ரா அடிக்க கிளம்பிட்டானுங்க :-))

   Delete
  2. சகோ இப்பூ
   நீங்க வரலாறு படிகோனும். ஆட்டோமான் பேரரசு வீழ்ச்சிக்கு மேலைநாடுகளுக்கு உதவியது சவுதிதான். லாரன்ஸ் ஆஃப் அரேபியா என்னும் பிரிட்டிஷ் உள்வாளியின் தலைமையில் ஆட்டோமானுடன் போரிட்டனர்.
   ஆட்ட்டொமானின் வீழ்சியில் இருந்து மூமின்கள் எழவே இல்லை.

   சவுதி உலக முழுதும் வஹாபி பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறது. அதில் நம் பதிவுலக சகோக்கள்,நீங்களுமொரு பங்கு வகிக்கிறீர்கள். இதுவும் ஒரு இம்சையே

   இனி வஹாபி பிரச்சாரம் வைத்து ஐரோப்பா,அமெரிக்காவை மதம் மாத்தி,உலகத்தையே இஸ்லாமிய மயமாக்கி..................

   ஹி ஹி இதுக்கு கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கலாம்!!
   எண்ணெய் இருக்கும் வரைக்கும் வஹாபிகள் கூவுங்கள்.இன்னும் 20 வருடம்!!!
   அப்புறம் சவுதி ஹஜ்ஜில் வரும் காசை வைத்து மட்டுமே பிழைப்பார்கள்!!!
   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   நன்றி!!

   Delete
 17. அமெரிக்காவில் எந்த மத பாம்புகளுக்கும் இடம் கிடையாது;உங்களுக்கு விருப்பப்பட்ட மதத்தை நீங்கள் தழுவலாம். அரசாங்கம் பொது இடங்கள் இங்கு எல்லாம் மதம் நுழையாது.பல முறை எழுதியுள்ளேன். Separation of Sate and Church.

  சு.பிக்கு:பதில் நேராககொடுத்தால் நலம். மேலும் சவூதி ஏன் அப்படி என்று தெரிந்து தேர்ந்து கொள்ள கேட்டேன்; ஒன்று தெரியவில்லை; இல்லை பதில் சொல்லமுடியாது என்று சொல்லுங்கள். எதற்கு பால் தாக்கரேவை இங்கு இழுக்க வேண்டும்; விவாதம் திசை திரும்பத் தான் உதவும்.

  இந்து மதத்தில் உள்ள ஓட்டைகளை எடுத்து சொன்னால், அதற்கு பதில் சொல்ல மாட்டார்கள் இந்தியாவில். அந்த மதத்தில் இல்லையா இந்த மதில் இல்லையா என்று. நீங்களும் அப்படித்தான் போல...

  ReplyDelete
 18. மிகவும் அருமையான பதிவு.. நாத்திகம் என்பது பண்டையக் காலத்தில் வேதங்களையும், வேத பரம்பொருள் பிரம்மனையும் மறுப்பதே ஆகும் .. !

  பின்னர் அது படைப்புக் கடவுளை மறுப்பதையும் சுட்டியது ..

  இன்றைய பொழுதில் நாத்திகம் என்பது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது ..

  நாத்திகம் என்பது இயற்கைக்கு மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை என்பதே ஆகும்.

  ATHEISM - இறைமறுப்பு, நாத்திகம்

  AGNOSTIC - அஞ்ஞானம்

  RATIONAL, SKEPTIC, FREETHINKING - பகுத்தறிவு

  HUMANISM - மனிதம்

  FEMINISIM - பெண்ணியம்

  என பகுத்தறிவாளர்கள் பல்வேறு தளங்களில் சிந்தனை ஆற்றுகின்றனர்.

  நாத்திகம் என்பது இயற்கைக்கு மீறிய சக்தி ஒன்றில்லை என்பதை மறுப்பது அவ்வளவு தான். நாத்திகம் ஒரு மதமில்லை. நாத்திகன் நல்லவனாக இருக்கலாம், கெட்டவனாக இருக்கலாம். மனிதாபிமானியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பெண்ணியவாதி, சமத்துவாதி என்பவை எல்லாம் வெவ்வேறு தளங்களே.

  பெரும்பாலான நாத்திகர்கள், இயற்கைவாதிகளாகவும் ( NATURALIST ) உள்ளனர்.

  ATHEISM PLUS என்ற இயக்கம் அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வெறும் நாத்திகம் என்பதையும் சார்ந்து மனித குண வாழ்க்கை முறையை போதிக்கின்றது.

  உதா. நாத்திகம், சமத்துவம், மனிதம், பெண்ணியம், இயற்கைவாதம், அறிவியல், தருமம் ( Charitiy ) எனப் பல் பரிமாணங்களில் உள்வாங்கப்பட்டு ஒரு வாழ்க்கை முறையாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. தொடருந்து வழிக்காட்டுவோம். சார்வாகன் தொடர்ந்து எழுதுங்கள். நன்றிகள்

  ReplyDelete
 19. //சு.பிக்கு:பதில் நேராககொடுத்தால் நலம். மேலும் சவூதி ஏன் அப்படி என்று தெரிந்து தேர்ந்து கொள்ள கேட்டேன்; ஒன்று தெரியவில்லை; இல்லை பதில் சொல்லமுடியாது என்று சொல்லுங்கள். எதற்கு பால் தாக்கரேவை இங்கு இழுக்க வேண்டும்; விவாதம் திசை திரும்பத் தான் உதவும்.//

  சரி உங்கள் கேள்விக்கு நேரிடையாகவே வருகிறேன். அமெரிக்கா ஒரு உலக ரௌடி என்பது நாமெல்லாம் அறிந்ததே! தனது நாட்டு டாலரில் வர்த்தகம் செய்யாவிட்டாலோ அல்லது அந்த நாட்டோடு ராணுவ உடன்படிக்கை செய்யா விட்டாலோ என்ன செய்யும்? சதாமக்கு நேர்ந்த கதியும், கடாஃபிக்கு நேர்ந்த கதியும் நமக்கு தெரியும். எனவே சமயோஜிதமாக அமெரிக்காவுக்கு சில மிலிட்டரி ஒப்பந்தங்கள், வியாபாரம் டாலரில் என்று எலும்புத் துண்டுகளை போட்டால் விசுவாசமாக வாலை ஆட்டிக் கொண்டிருக்கும். இதற்கு பெயர் ராஜதந்திரம்.

  எனவே தான் அமெரிக்காவை சவுதி கண்டிப்பதில்லை. சவுதியை அமெரிக்கா கண்டிப்பதில்லை. ஒரு காரியத்தை நண்பனாக்கி சாதித்துக் கொள்வதை சவுதிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும். :-)

  ReplyDelete
 20. நல்ல பதில், சு. பி.
  அப்ப மதத்திற்கு எதிராக இருந்தாலும் அமெரிக்கா மட்டும் என்ன வேண்டுமானாலும் சௌதியில் செய்யலாம். Selective enforcement of religion சரியா?

  ReplyDelete
 21. //அப்ப மதத்திற்கு எதிராக இருந்தாலும் அமெரிக்கா மட்டும் என்ன வேண்டுமானாலும் சௌதியில் செய்யலாம். Selective enforcement of religion சரியா?//

  மீண்டும் தவறான புரிதல். சவுதி அரேபியாவோ அல்லது சவுதி மன்னர்களோ இஸ்லாத்துக்கு அத்தாரிட்டிகள் அல்ல. இஸ்லாத்தை பற்றி பேச வேண்டுமானால் குர்ஆனை அடிப்படையாக வைத்தே பேச வேண்டும். உசிலம்பட்டியில் உள்ள ஒரு சாதாரண முஸ்லிமுக்கும் குர்ஆனின் பாதுகாப்பில், அதனைப் பற்றிய எதிரிகளின் பொய்யான செய்திகளில் ஒரு கண்ணிருக்கும். அந்த அவதூறை துடைக்க முயற்சிப்பான். எனவே இஸ்லாத்தின் மேல் ஏதும் விமரிசனம் வைத்தால் அது குர்ஆனிலிருந்து வர வேண்டும். முஸ்லிம்களிடமிருந்து அல்ல.

  ReplyDelete
  Replies
  1. சகோ சு.பி
   உங்கள் விளக்கத்தின் முழுப் பொருளையும் விள்க்குவோம்.

   1.//மீண்டும் தவறான புரிதல். சவுதி அரேபியாவோ அல்லது சவுதி மன்னர்களோ இஸ்லாத்துக்கு அத்தாரிட்டிகள் அல்ல.//
   ஆனால் முஸ்லிம்களுக்கு அத்தாரிட்டிகள் .ஆகவே அத்னைப் போற்றிப் புகழ்வோம்.சவுதியின் ஒவ்வொரு செயலையும் நியாயப் ப‌டுத்துவோம். அமெரிக்காவுக்கு அடிபணிவதை ராச தந்திரம் என்போம். இதே இதை பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு பணிந்து செல்ல ஏன் சொல்லக் கூடாது?.

   எண்ணெய் தீர்ந்த இபின் சவுத் குடும்பம் சவுதியை விட்டு ஓடிவிடும்.

   2.//இஸ்லாத்தை பற்றி பேச வேண்டுமானால் குர்ஆனை அடிப்படையாக வைத்தே பேச வேண்டும்.//

   எந்த தஃப்சீர்,மொழிபெயர்ப்ப்பு,எந்த ஹதிதுகள் என சொல்லுங்களேன். எது சரி என தலையைப் பிய்த்துக் கொண்டுதானே மூமின் பிரிவுகள் சண்டையிடுகிறார்கள்?.

   1400 வருடம் ஆகியும் ஒருமித்த மொழியாக்கம் கூட செய்ய முடிய வில்லையே? எப்போது ஒரே தெளிவான மொழி பெயர்ப்பு, சரியாக் அனைத்து மூமின்களாலும் ஏற்கப்படும் ஹதிதுகள் மொத்த்மாக தொகுக்கப் படாத வரையில் இஸ்லாம் ஒரு முழுமையான மதமே அல்ல!!!


   3.// உசிலம்பட்டியில் உள்ள ஒரு சாதாரண முஸ்லிமுக்கும் குர்ஆனின் பாதுகாப்பில், அதனைப் பற்றிய எதிரிகளின் பொய்யான செய்திகளில் ஒரு கண்ணிருக்கும். அந்த அவதூறை துடைக்க முயற்சிப்பான். எனவே இஸ்லாத்தின் மேல் ஏதும் விமரிசனம் வைத்தால் அது குர்ஆனிலிருந்து வர வேண்டும். முஸ்லிம்களிடமிருந்து அல்ல.//

   இங்கு நண்பர் நம்பள்கி சவுதி அமெரிக்க உறவு பற்றிய அரசியல் பார்வையை வைக்கிறார்.ஆகவே அரசியல் சார்ந்தே பதில் சொல்லவும்.


   அப்போது ஏன் சவுதியைப் பற்றி விமர்சித்தால் பதில் சொல்ல வேண்டும்??
   சவுதி ஒரு அப்பாடக்கர் நாடு என புகழ வேண்டும்.அதன் சட்ட திட்டங்களை போற்றிப் புகழ்வது யார்?

   நிங்கள் போற்றலாம்.நாங்கள் விமர்சிக்க கூடாதா?

   குரான் பற்றி கேள்வி வேண்டும் எனில் நான் கேட்கிறேன்.

   உத்மான்(ரலி) அவர்கள் தொகுத்த குரான் மூலப்பிரதி இப்போதும் இருக்கிறதா? எங்கே??

   பதில் சொல்லுங்கள்

   நன்றி!!!

   Delete
 22. நல்ல பதிவு.

  உங்களுக்கு வந்து அறிவுரை சொல்லுகிற பலருக்கு தெரியாத விடயம் என்ன வெனில் இந்திய தத்துவங்களில் குறிப்பாக சொல்லுவதெனில் இந்து மதத்தின் தத்துவங்களிலேயே நாத்திகத்திற்கு பெரிய இடம் உண்டு. இங்கு இந்து மதத்தினை எதிர்ப்பவர்க்கு மட்டுமல்லாது இந்து மதத்தினை பின்பற்றும் பலருக்கே வேதங்களுக்கு அப்பால் உள்ள இந்துமதம் பற்றி தெரிவதில்லை. இந்த அரைகுறை அறிவினை வைத்துக் கொண்டுதான் எதிர்க்கவோ ஆதரித்து அறிவுரை சொல்லவோ வந்துவிடுகிறார்கள்.

  இந்து மதத்தின் முதல் பிரிவான சாங்கியம் இயற்கை வாதம் குறித்துதான் பேசுகிறது. கடவுள் பற்றி ஒன்றும் தெரியாத்தால் கடவுளின் இருப்பினை மறுத்து இயற்கையை முன் வைக்கிறது. இன்னொரு பிரிவான நியாவாத பிரிவும் ஆரம்பகாலத்தில் கடவுளை மறுப்பதுதான் அது இந்தகால லாஜிக்கல்/பகுத்தறிவு தத்துவத்துடன் உடன்படுகிறது (நம்மூர் பகுத்தறிவுடன் போட்டு குழப்பிக் 'கொல்லாதீர்கள்').வைசேஷிக எனும் அணுவாதம் கடவுளை பற்றி ஏது கூறாமல் உலகினை படைத்த இயற்கை சக்தி குறித்து பேசுகிறது.

  இன்னொரு பிரிவாக மட்டுமே பார்ப்பனரின் வேதங்களை நம்பும் பிரிவும், பார்ப்பனரின் அட்டகாசங்கத்தை பார்த்து அதிலிருந்து பிரிந்து உபநிடதங்களை அடிப்படையாக கொண்ட வேதாந்தமும் வருகின்றன. இந்த பிரிவுகளின் உட்பிரிவாகவே பக்தி போற்றும் சைவம் வைணவம் இவையெல்லாம் வருகின்றன.

  பார்ப்பானர்களுக்கு இடமில்லாத தத்துவங்களும் உண்டு என்பதை பலர் அறிவதில்லை. எப்படி இசுலாமும் கிருத்துவமும் யூத மதத்தின் நீட்சிகளாகவே கருத இயலுமோ அது போன்று புத்த ஜைன மற்றும் சார்வாகமும் இந்து மதத்தின் நீட்சிகளே. இந்த எல்லா தத்துவங்களும், தற்காலத்தில் இந்து என சொல்லிக் கொண்டு பண்டராமாக கோவிலிலுக்கு கோவில் அலைபவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. . இந்து என்கிற வார்த்தையை பார்ப்பனர் கைப்பற்றிவிட்டதால் இந்த தத்துவங்களை இந்திய தத்துவங்களின் தொகுப்பாக கருதலாம். இவை உண்மையிலேயே இந்தியரின் அறிவு செறிவினை காட்டுகின்றன. இவற்றை மழுங்கடித்து முட்டாள்தன குப்பையாக இந்திய சிந்தனைகளை ஆக்கிய பெருமை பார்பனர்க்கு மட்டுமல்ல, அவர்களை பின்பற்றிய பிற சாதியினருக்கும் போய் சேரும்.

  ReplyDelete
  Replies
  1. சகோ நந்தவனம்,

   நீங்கள் சொல்வது மிக சரியான் உண்மை. நம் பாட்டன் ,முப்பாட்டன் கால்த்தில் இருந்தே வேதம் மேல் விமர்சனம் வைத்திருக்கிறார்கள். தர்க்க ரீதியான வாதங்கள்,பிரதிவாதங்கள் என அரோக்கியமாக் சிந்தனை வளர்ந்து இருக்கிறது.

   நாத்திக‌ன் என்றால் மத புத்த‌கத்தில் இருக்கும் ஆபாசக் கதைகளை சொல்பவன் என்ற பெயரை சிலர் ஏற்படுத்திவிட்டார்கள்.

   அது அக்கால நடைமுறை அவ்வளவுதான்!!!

   நம் முன்னோர்கள் பல விடயங்களை ஆவணப் படுதாமல் விட்டுவிட்டார்கள். இணையத்தினால் பல புதையல்கள் மீண்டும் கிடைக்க தொடங்கி விட்டன.

   நாம் இதையும் படிக்க ஆவல் வந்து விட்டது. நம் முப்பாட்டனின் நாத்திகம் கற்று எழுதுவோம். அனைவருக்கும் பகிர்வோம்!!!

   கொஞ்சம் படிக்க ஆரம்பித்ததில் எதையும் அலசி ஆராயும்,பன்முகப் பார்வையில் விவாதிக்கும் பரம்பரையில் வந்தவ்ர்கள் என பெருமை வருகிறது.

   நம் இந்திய சிந்தனை பன்முகத் தன்மை உடையது,பன்முகத் தன்மையை மறுக்கும் கொள்கைகள் ஒதுக்கப் பட வேண்டியவைகளே.

   உங்களிடன் ஏதேனும் புத்த‌கம்,தகவல் இருந்தால் கொடுங்களேன். நீங்கள் கொடுத்த பரிணாம் புத்தக்ங்கள்தான் பல் பதிவு எழுத உத்விற்று.

   நன்றி

   Delete
  2. நீங்கள் என்னவோ என்னை தத்துவம் பயிலும் ஆசாமி என எண்ணிவிடாதீர்கள். எல்லாம் எப்போதோ படித்தது. தத்துவம் என்றாலே குழப்பம்தானே. தத்துவங்கள் புரிந்து கொள்பவருக்கு ஏற்ப மாறும்.ஆகவே ஏதேனும் பிழை கண்டால் மன்னிக்கவும்.

   டாக்டர்.இராதாகிருட்டினன் எழுதிய Indian philosophy எனும் பழங்கால புத்தகம் http://archive.org/details/Sarvepalli.Radhakrishnan.Indian.Philosophy.Volume.1-2

   சட்டர்ஜி எழுதிய இப்புத்தகத்தில் சிறுகுறிப்பாக எல்லா பிரிவையும் ஆரம்பத்தில் விளக்கியுள்ளார்கள்
   http://archive.org/details/IntroductionToIndianPhilosophy

   இது மேற்குலக பார்வை
   Christopher Bartley;AN INTRODUCTION TOINDIAN PHILOSOPHY http://www.freebookspot.es/Comments.aspx?Element_ID=239716

   தமிழில் வேண்டுமானால், இந்து தத்துவங்கள் குறித்து ஜெயமோகன் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற புத்தகத்தில் நன்றாக விளக்கியுள்ளாராம். 'இந்து ஞான மரபு' எனக் கேட்டதும் இந்துவா புத்தகமோ என பயந்துவிடாதீர்கள்! :)
   ஜெயமோகன் நடுநிலமையோடு இந்து மதத்தின் 6 பிரிவுகளையும் விமர்சித்திருப்பாக நாத்தீகரான நண்பர் சொன்னார். நான் இதுவரை படித்ததில்லை. அவர் இந்து மதம் பற்றி அறிய நல்ல புத்தகம் என்கிறார்.

   Delete
  3. நந்தவனம்,

   நல்ல தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.ஆனால் மிதவாத மத பற்றாளர்கள் சில விடயங்களை கேள்விக்குள் ஆக்காமல் , இப்படி இருக்கிறது என்ற புள்ளியில் இருந்து தங்கள் தத்துவ விசாரங்களை மேற்கொண்டு செல்வதை காண்கிறேன்.

   மேலும் முரண்களை அலசாமல் அப்படியே நகர்வது வழக்கம்.ஜெ.மோ போன்றவர்கள் அப்படித்தான்.

   இந்தியாவில் மரபார்ந்து உள்ள அல்லது உருவ வழிப்பாடுள்ள எல்லாம் இந்து மதமல்ல.

   வேத மதம், வேதமல்லா மதங்களின் கலவை என இரண்டாக பிரிக்கலாம்.

   வேத மத தத்துவங்கள் இந்தியாவில் இருந்த மரபார்ந்த கடவுள் வழிப்பாட்டினை ஆக்ரமித்து ஒன்றாக இந்து மதம் என காட்டுகிறது.இவ்வழிப்பாட்டுக்கலப்புக்கு முன்னர் இருந்த மதங்களுக்கு எழுத்துவடிவ சான்றுகள் அல்லது புனித நூல்கள் இல்லாமையே காரணம்.

   இந்து மதக்கடவுள்களில் இதனால் தான் பிராம்மன கடவுள், பிறக்கடவுள் என இரண்டு பிரிவு இருப்பதைக்காணலாம்.

   வேதமதத்தினரின் ஆதிக்கத்தால் மாற்றப்பட்ட இந்திய மதக்கோட்ப்பாட்டினை அனைவரும் பொதுவாக ஏற்கும் சூழல் ,எனவே அனைவரும் இந்து, ஆனால் கோட்பாட்டினை உருவாக்கியவன் தங்களை உயர்ந்தவன் என காட்டிக்கொண்டான்.

   அக்கால இறைக்கோட்பாட்டில் எந்த பிரிவிலும் பிறப்பின் அடிப்படையில் சமூக வகுப்புகள் பிரிக்கப்படவேயில்லை, வேத மதத்தினரின் வேத தொகுப்பிலும் இல்லை, ஆனால் ரிக் வேதத்தின் இணைப்பாக காட்டப்படும் புருஷ சூக்தமில் தான் பிறப்பின் அடிப்படையில் சமூக வகுப்புகள் காட்டப்படுகிறது.

   பெரும்பாலான இந்து ஞான மரபின் அடிப்படையில் எழுதுபவர்கள் இக்காலத்தில் இருப்பதை அப்படியே எடுத்துக்கொண்டு விளக்க முற்படுகிறார்களேயன்றி ,ஆங்காங்கே செய்யப்பட்ட இடைச்செருகல்களை கணக்கில் எடுப்பதில்லை.

   உண்மையில் நாத்திகர்களும்,சமூக புரட்சியாளர்களும் தான் இந்துவேத சித்தாந்த கோட்ப்பாட்டினை உட்புகுந்து அலசுகிறார்கள், முரண்களை முன் வைக்கிறார்கள், எனவே தான ஆத்திகர்களுக்கு நாத்திக கருத்தாளர்களை பிடிக்காமல் போய்விடுகிறது.

   இது இந்து மதகோட்பாட்டில் மட்டுமில்லை, இஸ்லாம்,கிருத்துவம், யூதம் என எல்லாவற்றிலும் காணலாம்.எல்லா பிரிவிலும் செல்வாக்கனவர்கள் தங்களுக்கு ஏற்றார்ப்பொல மாற்றங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்,அதுவே உண்மையான கோட்ப்பாடு என்கிறார்கள்,சண்டை உருவாகிறது.

   WHO WERE THE SHUDRAS ? என்ற நூலை அம்பேத்கார் எழுதியுள்ளார், இன்டெர்நெட் ஆர்க்கைவில் இருக்கு, படித்தால் வேத திரிப்புகள் புலப்படும்.

   Delete
  4. கருத்துக்கு நன்றி. வவ்வாஜி,

   தாங்கள் சொல்வது போல் ஜெமோ உட்பட பலரும் செய்கிறார்கள். சமரசம் செய்யாமல் செய்யாமல் இருந்தால் உலகில் உள்ள எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என எண்ணி அப்படி செய்கிறார்கள்.எல்லாவற்றையும் கேள்வி கேட்க ஆரம்பித்தால், எல்லாவற்றுக்கான பதிலும் இல்லாத நிலையும் இருக்கும் சூன்ய மனேநிலையை தாங்குவது எல்லோருக்கும் சாத்தியமல்ல என்பதாலே இந்த சமாச்சாரங்கள் தேவைபடுகின்றன போல.

   நீங்க சொன்னாற் போல, எல்லா மதங்களிலும் இவ்வித தத்துவ விசாரணைகள், உதாரணமாக கிருத்துவத்தில் gnosticism, காலப்போக்கில் அடக்கி ஒடுக்கபட்டு பக்தி மட்டும் மோலோங்க செய்யப்பட்டுவிட்டது.ஏனெனில் பக்தி யோகம் ஆண்டான் அடிமை ஐடியாவை வலியுறுத்துவது. இது சாதாரண மக்களை ஒடுக்க உதவுவதால் சர்ச், முகம்மது நபி. பார்ப்பனர்கள் போன்றோரும், உலகெங்கும் உள்ள சத்திரிய வம்சத்தினரும் பக்தியினை பரப்பி நம்மை சிந்திக்காத மூடபக்தர்கள் ஆக்கிவிட்டிருக்கிறார்கள். அதுவே நம்மை ஆள அவர்களுக்கு வசதி.

   ஆனால் இந்தியாவை பொருத்தவரை மிக வேறுபட்ட (diversified) பல தத்துவங்களை உருவாக்கி எல்லா வகை மனோநிலை கொண்டவருக்கும் ஒரு தத்துவம் எனும் வகையில் சிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தத்துவங்கள் பக்தியினை கீழான இடத்தில்தான் வைக்கின்றன.வேதங்களும் அகம் பிரம்மாஸ்மி என்ற தத்துவம் உயர்ந்த நிலை அடைந்த ஒருவன் உணர்வது என்கின்றன.இதுவே நமக்கு மேலே கடவுளின் இல்லாமையை உணர்த்துகிறது எனலாம்.

   ஆனால் நீங்கள் சொல்வது போல் வேதங்களிலும் பிற பிரிவுகளிலும் இந்த ஆளும் வர்க்கம் புகுந்து குழப்பி பக்திதான் முக்கியம் என ஆக்கிவிட்டார்கள். இதை போல் பகவத்கீதையில் இடைச்செருகல் செய்யப்பட்ட பாடல்கள் குறித்து ஒரு புத்தகம் படித்திருக்கிறேன்.(பெயர் மறந்துவிட்டது,ரஜினி ஏதோ சினிமாவில் அதை வைத்து படிப்பது போல் ஆக்டு கொடுப்பார்!) இடைச்செருகல் வாய்ப்பினை பார்ப்பனர்/ஆதிக்க சாதியினர் நன்றாக பயன்படுத்தியுள்ளனர். நாம் ஏதாவது குறை சொன்னால், நமது இணைய முமின்கள் செய்வது போல், நாம் அனைவரும் பிரம்மம்தான் எனும் உயர்ந்த தத்துவத்தை காட்டுவார்கள். மற்ற நேரங்களில் வர்ண பேதத்தை வலியுறுத்தும் இடை செருகல்களை பின்பற்றி நம்மை ஒடுக்குவார்கள்.இந்த இடைசெருகல்களை களைந்தாலே பல குழப்பங்கள் மறையும்.

   Delete
 23. ஆமா, சார்வாகன்.. உங்க "கோஷ்டி"ல நாத்திகர்கள் எத்தனை பேரு இருக்கீங்கனு எண்ணிப் பார்த்ததுண்டா?

  * சார்வாகன்

  * இக்பால் செல்வன்

  * ஐயா தருமி

  அம்புட்டுத்தான்னு நெனைக்கிறேன். "ஆத்திகர்கள்" ஆதரவால்தான் உங்க பொழைப்பே ஓடுது என்பது பரிதாபம் னு நான் நெனைக்கிறேன். நீங்க என்ன நெனைக்கிறீங்க?

  என்ன? "இவன் ஒருத்தன் வந்துட்டான் உண்மையை எல்லாம் புட்டுப் புட்டு வச்சு என் உயிரை வாங்க" னு சொல்றீங்களா?? :))))

  ReplyDelete
  Replies
  1. நண்பர் வருண் வாங்க,

   நான் என்னை மட்டுமே நம்பும் ஆள்!!

   நீங்க சொல்வதை எல்லாம் சீரியசா எடுக்க முடியுமா??

   இன்னும் கொஞ்சம் நல்லா முயற்சி பண்ணுங்க

   கேள்வி கேளுங்க

   இல்லை பதில் சொல்லுங்க‌

   ஆத்திகன் என் யாரையும் எனக்கு தெரியாது.நீங்களா அது??

   என்ன சொல்ல வர்ரீங்க என நல்லா சொல்லுங்க

   நன்றி

   Delete
 24. சார்வாகன், வருண் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறதை தான் அப்படி சொல்றாரு....

  நேரிடையா சொன்னால் நம்ம மத குருமார்களும், இஸ்கான்-களும் என்ன நினைப்பாங்க????? (எதிர் கட்சிக்காரன் பார்த்தா என்ன நெனப்பான்).

  ReplyDelete
 25. சகோ. நல்ல பதிவு,

  ஆத்திகத்திலும், நாத்திகத்திலும், நம்பிக்கை என்ற விடயம் உள்ளது. இந்த நம்பிக்கை குறிப்பாக மதநம்பிக்கை- உளவியல் ரீதியாக பார்த்தால் இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைக்கும். நம்பிக்கை பற்றி பரிணாமம் என்ன சொல்கிறது?? உளவியல் ரீதியாக அதை எப்படி எதிர்க்கொள்வது???
  முன்பு டாக்கின்ஸ் தளத்தில் இதை பற்றி ஒரு பேராசிரியர் பாடம் எடுக்கும் ஒரு காணொளி பார்த்தேன்.
  ஆத்திகம் இருக்க கூடாது என்று சொல்வதே ஒரு மனித உரிமை மீறல் செயல் அல்லவா. ஆத்திகவாதியாக நாத்திகவாதியாக இருப்பதற்கு உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சொல்ல முடியாது.

  அதனால் ஆத்திகமானாலும், நாத்திகமானாலும் அதன் தனிமனித பொதுவெளி. செயல்களை வரையறுக்க வேண்டும்.
  நன்றி.

  அடுத்து உங்களை இந்துத்துவவாதி என்று அடுத்த பதிவில் நிரூபிப்பேன்)))

  ReplyDelete
 26. சுவனப்பிரியன் -is becoming an addiction to me.

  அவரில்லை என்றால் தமிழ்இணையம் களைக்கட்டாது.

  ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. சகோ நரேன்,
   நாத்திகம் என்பதற்கும் அதிஅக் புரிதல்வேண்டும்.நாத்திகன் என்றால் நல்லவனாக் இருப்பான் என்பதும் சரியல்ல.

   ஒவொரு மனிதனுக்குள்ளும் ஒரு நாத்திகன் ,ஆத்திகன் உண்டு.

   யார் சொன்னாலும், சோதித்து பார்த்து ஏற்றுக் கொள்.அப்படி ஏற்பதின் காரணத்தை பிறருக்கும் விள்க்கு என்றே கூறுகிறோம்.

   நம்மிடம் யாரும் விள்க்க மாட்டேன் என்கிறார்கள்.

   நம்ம தாசு, ராதநாத்தை பத்தி விமர்சிக்காதே சாமி கண்ணைக் குத்தும் என்கிறார். நம் சகோக்கள் நரகத்தில் தோலை மாத்தி மாத்தி ரோஸ்ட் பண்ணுவார் அல்லாஹ் என்கிறார்.

   சுவனத்தின் மீது மிக்க ஆசைதான் இருந்தாலும் அத்தாட்சி கொடுக்க மாட்டேன் என்கிறார்களே.
   *****
   இந்து சொர்க்கத்தில் அப்ச்ரஸ்கள் உண்டு. இஸ்லாமிய சுவனத்தில் ஹூரிகள்
   உண்டு. இந்து சசொர்க்கத்தில் இந்த தேவர்களே(இவங்க வேற சாமியோட‌ அல்லக்கைகள்) அப்சர‌சுகளை இலவட்டிக் கொண்டு போகிறார்கள்.நம்க்கு கிடைக்காது.

   இசுலாமிய சுவனத்தில் 72 ஹூரிகள் கிடைக்கிறது. ஆகவே சுவனம் என்றால் இஸ்லாமிய சுவனம்தான் சிறப்பு என விருப்பத்தோடு அத்தாட்சிகளைத் தேடி அலையும் காஃபிர் நான்.

   நான் எப்புடீ இந்துத்வா??பீஃப் சில்லி இந்து சொர்க்கத்தில் கிட்டுமா?


   விளக்குங்கள்!!!

   நன்றி!!!

   Delete
 27. சார்வாகன் ////சகோ இப்பூ
  நீங்க வரலாறு படிகோனும். ஆட்டோமான் பேரரசு வீழ்ச்சிக்கு மேலைநாடுகளுக்கு உதவியது சவுதிதான். லாரன்ஸ் ஆஃப் அரேபியா என்னும் பிரிட்டிஷ் உள்வாளியின் தலைமையில் ஆட்டோமானுடன் போரிட்டனர்.
  ஆட்ட்டொமானின் வீழ்சியில் இருந்து மூமின்கள் எழவே இல்லை.///
  ஆட்டோ மானும் கிடையாது கார் மானும் கிடையாது .உதுமானிய பேரரசு .இந்த பெயரை ottaaman இப்படி எழுதியதால் உச்ச்சரிப்பை கொல்லாதீர் .

  உதுமானிய பேராரசு விரிந்து பரந்த காலத்தில் அதன் ஆதிக்கம் கிரேக்கம் வரை இருந்தது கிரேக்கத்திலிருந்த சோபியிசம் என்ற அத்வைத கொள்கையினால் உதுமாயே மன்னர்களான துருக்கியர்கள் ஈர்க்கப்பட்டனர் சொபியிசத்தின் தாக்கம் அரபுலகை பாதித்தது ,இதுவே பின்னர் சூபியிசமாக இஸ்லாமிய சாயலில் உருவெடுத்தது. இந்த சூபியிசம் இஸ்லாத்தின் அடைப்படையான ஓரிறைக் கொள்கையை தகர்த்தது.
  ஓரிறைக் கொள்கை முஹம்மது நபி ஸல் அவர்களளால் மக்கள் மத்தியில் வேரூன்றியது ,உதுமான்ய மனன்ர்களால் ஆட்டம் கண்டது .இது கண்டு கொதித்துப்போன இமாம் முகம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஏகத்து பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்தார். மக்களிடம் வரவேற்பும் எதிர்ப்பும் இருந்த சமயத்தில் நஜ்த் மனன்ரான இப்னு சவுத் அவர்களின் ஆதரவு கிடைத்தது.இவர்கள்உதுமாநியக்களை எதிர்த்து போராடி மாகக் மத்தின வை கைப்பற்றி இஸ்லாமிய அரசை நிறுவினார்..உதுமானியாய் பேராரசு விரிந்து பறந்து இருந்ததால் அதன் ஆதிக்கம் முடிவுறும் வேளையில் இந்த தாக்குதல் நடந்ததால் சூபியிச கொள்கையினர் மேலை நாடுகளுக்கும் சவுத் மனன்ருக்கும் இடையே முடிச்சு போட்டனர்.
  உதுமானியாய் பேரரசு குரான் ஹதித்களை பின்பற்றி ஆட்சி செய்து வந்திருந்தால் இமாம் முகம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களும் அந்த ஆட்சியை ஆதரித்திருப்பார்

  ReplyDelete
  Replies
  1. இப்னு,

   வரலாற்றை விருப்படி திரிக்க வேண்டாம்.

   கிரேக்கம் வரை இல்லை எகிப்து வரையே உதுமானிய நீட்சி போனது எல்லாம் முகமதுக்கு பின்னர் இஸ்லாமிய கோட்ப்பாட்டின் படியே.

   முக்மது இஸ்லாமை பரப்பிய போது ஆரம்பத்திலேயே இஸ்லாமை தழுவியது துருக்கிய அரசு ,இதுவே இஸ்லாம் வேகமாக பரவவும் ஒரு காரணம். துருக்கியர்களே பின்னர் உதுமானிய அரசாட்சி ஆனார்கள்.

   முகமதுவின் மறைவுக்கு பின்னர் உருவான காலிபா ஆட்சி முறையில் பல கலிபாக்கள் உதுமானிய அரச பரம்பரையே.எனவே இஸ்லாமிற்கு எதிராக போனார்கள் என சொல்ல முடியாது.

   உதுமானியர்கள் மெக்காவை தங்கள் கட்டுப்பாட்டில் வைதுக்கொண்டார்கள்,அதற்கு முன்னர் ஷெரிஃப் ஆஃப் மெக்கா என தனி சுல்தான்கள் வசம், அப்படி ஒரு சுல்தான் தான் அல் சவுத். அவரை உதுமானிய அரசு விரட்டி விட்டதால், அல் வகாப் உதவியுடன் இக்வான் என்ற பழங்குடியினரை கொண்டு போரிட்டு மெக்காவைப்பிடித்தார்,இதான் வரலாறு.

   1932 வரையில் சவுதி அரேபியா என்ற பெயரே இல்லை, 1970 இல் தான் சவுதி அரேபியா என்ற பெயரில் நாடே முழுசா உருவாச்சு.

   இப்பொ இருக்கும் சவுதியில் உள்ள பல இடங்கள் துருக்கி,ஜோர்டான், ஐக்கிய அரபு ஆகியவற்றிடம் இருந்து பிடுங்கிய பகுதிகள்.

   இன்னமும் பிரச்சினை இருக்கு.

   அப்துல் வஹாபுக்கு ஃபத்வா போட்டு தலைமறைவா இருந்தது ,அவரை எந்த இஸ்லாமிய நாடும் சேர்க்காததால், அல் சவுதை தூண்டிவிட்டு தனி நாடு உருவாக்க வச்சது, அதற்கு மூளை சலவை செய்யப்பட்ட இக்வான்களைப்பயன்ப்படுத்திக்கொண்டது,பின்னர் இக்வான்களை பிரிட்டீஷ் சொன்னதால் சவுதி அரசு கொன்றது எல்லாம் வரலாறு ,சும்மா வேற கதை விடாதீர்.   Delete
  2. சகோ இப்பூ

   இஸ்லாம் ஒரு குழப்பமான் மதம் என்பதால், இஸ்லாமுக்கு இஸ்லாமே எதிரி. ஒரு சாம்ராஜ்யத்தை மதம் மூலம் ஏற்படுத்ஹலாம். அதே சாம்ராஜ்யத்தை மதத்தின் மூலம் அழிக்க்லாம். ஆட்டோமான் பேரரசை முனாஃபிக் ஆக்கி அழித்து விடலாம் என்பதை காஃபிர் ஐரோப்பியர்கள் கண்டுபிடித்ததுதான் அருமை.

   அப்துல் வஹாப் என்பவரே ஐரோப்பிய உளவாளி என்னும் கருத்தும் உல‌வுகிறது.

   http://www.hakikatkitabevi.com/download/english/14-ConfessionsOf%20ABritishSpy.pdf

   அதே போல் இபோது சவுதி த்னது எஜமானர்கள்க்கு எதிரானால், அதுவும் [காஃபிர்களால்] முனாஃபிக் ஆக்கப்படும்.

   ஆகவே ஒருவர் நல்ல மூமினா,முனாஃபிக்கா என்பதே காஃபிர்களே நிர்ணயம் செய்கிறார்கள்.

   ஆக்வே இனிமேல் கிலாஃபா வரவே வராது!!!
   பாருங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் ஜமாத்துகளின் சண்டை பார்த்தாலே தெரிந்துவிடும். மூமின்களின் போட்டிக்ளை காஃபிர்கள் இரசிக்கிறோம்.

   சிந்திக்க மாட்டீர்களா!!

   அண்ணன் பி.ஜே,ஜனாஃப் சைஃபுதீன் ரஷாதி [ஆபாச] விவாதத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கும்

   காஃபிர் சார்வாகன்

   Delete
 28. சார்வாகன்,

  வாஹாபியின் வரலாறு.

  http://www.youtube.com/watch?v=Yl1TyY0cp3Q

  காணொளி நீளமாக இருந்தாலும் பார்த்தால் தெளிவுபிறக்கும்.)))

  குரானில் எழுத்து பிழைகள் உண்டு என்று தூத்துக்குடி விவாதத்தில் நிரூபிக்கபட்டிருக்காமே. உண்மையா??

  ReplyDelete
 29. சகோ நரேன்,

  இந்த வஹாபிகள் இஸ்லாமின் திராவிட வாதிகள் என்றாலே புரிந்துவிடும்.

  எப்படி பிராமணர்களை தள்ளிவிட்டு அதே இடத்துக்கு வரத் துடிக்கும் ஆதிக்க சக்திகளே திராவிடம் ஆனது போல் துருக்கியனைத் [போட்டுத்] தள்ளிவிட்டு ஆட்சியைப் பிடித்த சவுதிகள்தான் வஹாபி.

  நடப்பது அரசியல் ஆன்மீகம் அல்ல!!!

  விசிலடிக்காமல் காஃபிர்கள் மூமின்களின் குஸ்தியை இரசிக்க வேண்டுகிறோம்.

  நன்றி

  ReplyDelete
 30. சார்வாகன் ,தங்களுக்கு இடையேஇடையே குசும்புகள் பண்ணிவருகிரீர்கள்.முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பற்றி ஷேக் அப்துல்லா ஜமாலி கூற அறியவேண்டிய அவசியமில்லை .அவரது நூலகள் தமிழாக்கம் வந்துள்ளன நிறையவே படித்துள்ளேன் .அடுத்து நான் இப்னு வஹாப் கூறிய அனைத்தும் சரிகானுபவனும் கிடையாது.நான் இப்னு வஹ்ஹாபை பின்பற்றுபபனும் இல்லை.அவரும் தன்னை பின்பற்றுமாறு கோரவுமில்லை.உருவ வழிபாட்டைஇஸ்லாம் கடுமையாக எதிர்க்கும் என்பதை தாங்கள் அறிவீர்கள் ,ஷேக் அப்துல்லா யு டியுபில் ஒருவரின் படத்தை வைத்து உள்ளார்கள் .அதுவே அவர் இஸ்லாத்தின் கொள்கைக்கு மாற்றமானவர் என்பதை காட்டுகிறது.
  ///குரானில் எழுத்து பிழைகள் உண்டு என்று தூத்துக்குடி விவாதத்தில் நிரூபிக்கபட்டிருக்காமே. உண்மையா??////
  குர்ஆன் எழுதியவர்கள் எழுதியதில் அச்சு பிழைகள் சில உள்ளன அது பின்னர் சரிபார்க்கப் பட்டு பிழைகள் அவ்வாறே எழுதப்பட்டு அதன் அருகே சிறிய எழுத்துக்களில் பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன என்பதே தூத்துக்குடி விவாதத்தில் விளக்கப்பட்டது

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   I love You!!!!

   //குர்ஆன் எழுதியவர்கள் எழுதியதில் அச்சு பிழைகள் சில உள்ளன அது பின்னர் சரிபார்க்கப் பட்டு பிழைகள் அவ்வாறே எழுதப்பட்டு அதன் அருகே சிறிய எழுத்துக்களில் பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன என்பதே தூத்துக்குடி விவாதத்தில் விளக்கப்பட்டது //


   நீங்களும் அண்ணன் பி.ஜேவும் போதும் இஸ்லாமை ஒருவழி பண்ண.காஃபிர்கள் சொல்வதை எல்லாம் நிரூபித்து உண்மை என்கிறீர்களே!!!
   இபோதுள்ள குரான் 1924ல் எகிப்தில் திருத்தப்பட்ட பதிப்பு என்றுதானெ நாம் கடந்த இருவருடமக் கூவுகிறோம்??
   http://www.barry-baker.com/Articles/documents/Preserving%20and%20protecting%20the%20Quran.pdf

   The most standardized editions of the Quran in the world today is the one printed in Cairo, Egypt in 1924 (approved in 1918) and after that the King Fahd edition
   மிக்க நன்றி!!!

   இறைவன் மிக மிக பெரியவன்.

   இந்த ரேஞ்சில் போனால் நான் தேவையில்லை.நீங்களே போதும்!!

   அண்ணனுக்கு ஜே,இப்ராஹிமுக்கு ஜே

   Delete
 31. சார்வாகன் ,முகலாய அரசு முஸ்லிம் அரசு என்பது போலவே உதுமானிய அரசு .
  முக்தார் அப்பாஸ் நக்வி பாரதியஜனதாவின் தலைவாராகிவிட்டால் அதன் கொள்கை மாறிவிடுமா? அவர் முஸ்லிம் என்பதால் பீஜெபிக்கு ஒட்டு போடுங்கள் முஹ்மினை கவிழ்த்து விடாதீர்கள் என்று முஸ்லிம்களிடம் சார்வா கான் சொல்லுவாரா?.
  ///ஒரு சாம்ராஜ்யத்தை மதம் மூலம் ஏற்படுத்ஹலாம். அதே சாம்ராஜ்யத்தை மதத்தின் மூலம் அழிக்க்லாம். ஆட்டோமான் பேரரசை முனாஃபிக் ஆக்கி அழித்து விடலாம் என்பதை காஃபிர் ஐரோப்பியர்கள் கண்டுபிடித்ததுதான் அருமை.////
  உதுமானிய பேரரசு மதத்தால் ஏற்பட்டது ஆனால் அந்த மதத்தை சரியாக பின்பற்றாதா காரணத்தால் அது வீழ்ச்சி அடைந்தது என்பதே உண்மை. இதில் உங்களுக்கு சாதகமானதை சொல்லி நீங்கள் உருட்டலாம் புரட்டலாம் .திரிக்கலாம் அதை நான் தடுக்க முடியாது.
  குழப்பம் மதத்தில் இல்லை .எத்தனையோ அமைப்புகள் இருக்கலாம்.இந்திய யூனியனின் செயல்பாடுகள் செவ்வனே இருந்தால் இத்தனை அமைப்புகள் ஏற்பட்டிருக்காது.அதனுடைய பலவீனத்தால் அந்த இடத்தை சரி கட்ட இப்போது பல அமைப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும் அவைகளின் செயல்பாடு அவற்றில் ஓன்று அலல்து இரண்டைத்தவிர மற்றவைகள் நாளடைவில் அழிந்துவிடும் .

  ///அதே போல் இபோது சவுதி த்னது எஜமானர்கள்க்கு எதிரானால், அதுவும் [காஃபிர்களால்] முனாஃபிக் ஆக்கப்படும்.///

  உலக நாடுகள் அனைத்திற்கும் அமெரிக்காவே எஜமானனாக இருக்கையில் சவூதி மட்டும் விதிவிலக்கா? சில எஜமானர்கள் வேலைக்காரனுக்கு ஒத்துழைப்பதை பார்த்திருக்கலாம் .வேலையாளை எதிர்த்தால் நம் பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என்று சில எஜமானர்கள் வேலைக்காரனுக்கு பயந்து நடப்பதை பார்த்திருப்பீர்கள் .அதுபோலவே சவுதியை பொறுத்தவரை அமெரிக்காவின் எஜமான நிலை .அப்படியே எதிர்த்தாலும் முனாபிக் அல்ல .இருக்கிறதே பேரழிவு ஆயுதங்கள் மற்றும் ஜனநாயக பாதுகாவலன் போன்ற வேசங்களே உதவும்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   காஃபிர்களை விட முனாஃபிக்குகளே அதிகம் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என் மார்க்கத்தை அருமையாக விள‌க்கியவர் நீங்கள்தான்.எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

   ஆகவேதான் மூமின்களில் யார் நல்ல மூமின்,யார் முனாஃபிக் என்ற போர்தான் சிரியா,இராக்,பஹ்ரைன் லெபனான் ,பாகிஸ்தான்,ஆஃப்கானிஸ்தான் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.

   ஆகவே காஃபிர்களின் துணை கொண்டு நல்ல மூமின்கள் கெட்ட மூமின்களின் மீது போர் தொடுக்க வேண்டும்.

   பாருங்க நீங்க நல்ல மூமின் என காஃபிரான எனக்கு தெரியும்,

   2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.

   அதே போல் பதிவுலக போலிகளையும் இருவரும் அறிவோம். என்ன செய்யலாம்??

   உங்களுக்கு அனைத்து காஃபிர்களின் ஆதரவு நான் பெற்றுத் த்ருகிறேன்.இந்த [இஸ்லாம் இஸ்க்கான் பாய் பாய என் சொல்லும்] போலி மூமின்களை பதிவுலகில் வேடத்தை தோலுரிப்போம்

   2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

   காஃபிர்,நல்ல மூமின் பாய் பாய்!!!நேர்வழி முனாஃபிக்குகளுக்கு காட்டுவோம்!!

   டிஸ்கி::
   உங்களை மாதிரி மூமின்கள் இருக்கும் வரையில் காஃபிர்களுக்கு கவலையே இல்லை.ஹி ஹி

   நன்றி!!
   மார்க்

   Delete

  2. சிரியா,இராக்,பஹ்ரைன் லெபனான் ,பாகிஸ்தான்,ஆஃப்கானிஸ்தான் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.////

   உலக தாதா அமேரிக்கா என்ற கொடூர காபிரின் நயவஞ்சகம் முஸ்லிம்களை சீரழித்து வருகிறது

   Delete
 32. saarvaakaan ///உத்மான்(ரலி) அவர்கள் தொகுத்த குரான் மூலப்பிரதி இப்போதும் இருக்கிறதா? எங்கே??////

  இருக்கிறது ரஷ்யாவில் ,துருக்கியில் ,அதனுடைய பிரதிகளே மக்களிடம் புழக்கத்தில் உள்ளது .

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   வாழ்த்துக்கள்!!
   நீங்களே ஒரிஜினல் அக்மார்க் பதிவுலக மார்க்க மேதை. மூமின்களே போலிகளைக் கண்டு ஏமாற‌தீர்,

   துருக்கியில் உள்ளது உத்மான்(ரலி) அவர்களின் குரான் என அனைவரும் ஏற்கிறார்களா. கொஞ்சம் மேலதிக தக‌வல் தேவை!!

   நன்றி!!!!

   Delete
  2. சார்வாகன் ///துருக்கியில் உள்ளது உத்மான்(ரலி) அவர்களின் குரான் என அனைவரும் ஏற்கிறார்களா. கொஞ்சம் மேலதிக தக‌வல் தேவை!!////


   http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/thokukkappatta-varalaru/

   Delete
 33. வவ்வால்///போனமா பொழைப்பை பார்த்தோமா, குடும்பத்துக்கு நாளு காசு அனுப்பினமோனு இல்லாம சவுதிக்கு ஜால்ரா அடிக்க கிளம்பிட்டானுங்க :-))///

  முஸ்லிமகள் என்றால் தீவிரவாதிகள் என்று கிறுக்கு கூட்டம் உளறுவதை போலவே முஸ்லிம்கள் என்றால் சவுதியிலே இருப்பார்கள் என்று என்னைப்பற்றி வவ்வால் வழக்கமான ஜால்ராவை தட்டியுள்ளார்

  ReplyDelete
 34. சார்வாகன் //ஹி ஹி இதுக்கு கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கலாம்!!
  எண்ணெய் இருக்கும் வரைக்கும் வஹாபிகள் கூவுங்கள்.இன்னும் 20 வருடம்!!!
  அப்புறம் சவுதி ஹஜ்ஜில் வரும் காசை வைத்து மட்டுமே பிழைப்பார்கள்!!!
  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///

  ஒரு ரோபோ கொக்கை தாயர்பன்னி அதைக் கொண்டு அசல் கொக்கின் தலையில் வெண்ணை வைத்துவவிடலாம்
  எண்ணெய் இன்னும் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு உள்ளது கவலைபடாதீர்

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   சவுத்யில் இருந்து ஊருக்கு வர்துட்டீங்களா? சரி பரவாயில்லை. பதிவுலக் மூமின்களில் மனதில் பட்டதை வெளிப்படுத்துபவர் என உங்கள் மேல் மரியாதை உண்டு.

   ஆனால் எண்ணெய் ஆயிரம் வருடம் வராது. நம்து தளத்தகின் கீழ் மூலையில் ஒரு கடிகாரம் ஓடுகிறது பாருங்கள். அதன்படி வெறும் 13,900 நாட்கள் மட்டுமே,அதாவது 39 வருடம் மட்டுமே. இன்னும் அதிக பட்ச கண்க்கு பார்த்தாலும்

   சவுதி எண்ணெய் இருப்பு 250 பில்லிய‌ன் பேரல் என்றால் ஒருநாளைக்கு எடுக்கப்படும் எண்ணெய் 10 மில்லியன் எனில்

   எண்ணெய் நீடிக்கும் காலம்=250*1000/10=25,000 நாட்கள்
   வருடமாக மாற்ற =25,000/365=69 வருடம் அதிக பட்சம்
   ஏற்கெனவே நம் பதிவில் இதுபற்றி ஒரு பதிவு இட்டு இருக்கிறோம்.
   http://aatralarasau.blogspot.com/2012/09/12.html
   *********

   http://en.wikipedia.org/wiki/Oil_reserves_in_Saudi_Arabia
   Proven oil reserves in Saudi Arabia are the second largest claimed in the world, estimated to be 267 billion barrels (42×109 m3) (Gbbl hereafter) including 2.5 Gbbl in the Saudi-Kuwaiti neutral zone.
   Thank you

   Delete
 35. சார்வாகன் ,நீங்களும் அவரைப்போலவே பேசுகிறீர்கள் .நான் சவுதிக்குள் போகவே இல்லை
  எண்ணெய் 20 வருடம் என்று அப்புறம் 39 வருடம் ,பின்னர் 69 வருடம் வர சென்றுவிட்டீர்கள் .

  உங்களிடம் 250 பில்லியன் பெறல் என்று சொல்லியிருப்பார்கள் ,நீங்கள் விலையை குறைத்து கேட்டிருப்பீர்கள் .அதனால் ஸ்டாக் கை குறைத்து காட்டியிருப்பார்கள் .எல்லாம் வல்ல இறைவன் இருப்பை இன்னும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே இருப்பான்

  ReplyDelete
 36. இப்னு,

  சவுதிக்கு போனிங்களோ இல்லையோ ஆனால் பேச்செல்லாம் வஹாபி,சவுதினே சுத்தி வருதே :-))

  பெட்ரோல் இருப்பு நாட்டுக்கு நாடு மாறுபடும், மேலும் என்ன விகிதத்தில் எண்ணை உரிஞ்சப்படும் என ஒரு கணக்கீட்டில் சொல்வது.

  அரேபிய நாடுகளை விட நீண்ட நாள் வரும் கையிருப்பு அமெரிக்காவிள் உள்ளது. அவர்கள் எண்ணை விலை குறைவாக இருக்கும் போது வெளிநாட்டில் இருந்து வாங்கிவிட்டு ,தட்டுப்பாடு வரும் போது ,உள்நாட்டு வளத்தினை பயன்ப்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.

  அரேபியா முதல் இந்தியா வரை வருங்காலத்தில் கஷ்டப்படத்தான் செய்வார்கள். ஆனால் இந்தியாவில் எண்ணை பயன்பாட்டுக்கு தான் தேவையே தவிர வாழ்வாதாரத்துக்கு அல்ல.

  அரேபியாவில் குடிநீர் முதல் மின்சாரம் வரை எண்ணையை வைத்து தான். எனவே எண்ணை காலியானதும் எல்லாமே காலியாகிடும்.

  எல்லாம் வல்ல இறைவன் எண்ணையை பார்செல் செய்து அனுப்புவாரு :-))

  ReplyDelete
 37. நண்பா,
  எனக்கு என்னை மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை உண்டு ஆனா மத நம்பிக்கை கிடையாது. இப்ப நான் யாரு?

  ReplyDelete
  Replies
  1. புரட்சிமணி,

   //எனக்கு என்னை மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை உண்டு ஆனா மத நம்பிக்கை கிடையாது. இப்ப நான் யாரு?//

   அப்படினா நீரே ஓர் இறைத்தூதர், ஒரு புது மார்க்கத்தை உருவாகிட்டா போதும், லைஃப்ல செட்டில் ஆகிடலாம் :-))

   புனித நூல் அடைப்புகுறிகளுடன் மலிவு விலையில் எழுதி தர அணுகவும் சார்வாகன் :-))

   பின்குறிப்பு:

   பக்கத்திற்கு ஏற்ப விலையில் தள்ளுபடியுண்டு,

   வேறுகிளைகள் கிடையாது,போலிகளை கண்டு ஏமாற வேண்டாம் :-))

   தாவா பண்ன வருபவர்களை ஒரு வழி செய்ய அடியேனை அணுகவும் , ஒரு மணி நேரம் தாவா செய்ய 10 ரூ மட்டுமே ,கூட்டமாக ஆள் அனுப்பினால் தள்ளுபடியுண்டு :-))

   Delete
  2. வவ்வால் மற்றும் சார்வாகன்,
   puratchimanidham@gmail.com
   என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் இறைவேதம் இறக்குவது பற்றி பேசுவோம் :)
   நன்றி

   Delete
  3. //எனக்கு என்னை மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை உண்டு ஆனா மத நம்பிக்கை கிடையாது. இப்ப நான் யாரு?//
   அப்படினா நீரே ஓர் இறைத்தூதர், ஒரு புது மார்க்கத்தை உருவாகிட்டா போதும், லைஃப்ல செட்டில் ஆகிடலாம் :-))//
   புரட்சிமணியோ வவ்வாலோ இறைத்தூதராக புறப்பட்டால் நானும் பின்னால் வர தயார் எனக்கும் நியாயமான பங்கு தரப்பட்டால்.

   Delete
 38. End Credits.

  Adults with imaginary friends are stupid.

  THE END

  ReplyDelete
 39. நல்ல ஒரு பதிவு சகோ. நல்ல விளக்கமான பின்னோட்டங்கள்.
  சகோ நந்தவனத்தானின் சிறப்பான பின்னேட்டங்கள்.
  //பாலஸ்தீனர்கள் அரபு நாடுகளை நம்பியே நாசம் ஆகிறார்கள்.அதற்கு இஸ்ரேலை நம்பி ஒரு தீர்வு காண்பதே நல்லது.//
  ஆம் உண்மை.
  தமிழ்நாட்டு இஸ்லாமியர்களை நம்பினால் அழிந்தே போவார்கள்.நல்லகாலமாக இவர்கள் ஏத்திவிடுவது அவர்களுக்கு தெரியாது.ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கியமான நபரான அக்மத் ஜபாரியின் மனைவி சொல்கிறார் என் கணவர் எல்லோரையும் விட ஜிகாத்தை விரும்பினார்.
  இஸ்ரேலின் மீது ஹமாஸ் ராக்கட் தாக்குதல்கள் செய்து நன்றாக வாங்கி கட்டி கொண்டது. ஆரம்பத்தில் ஜிகாத் போராளிகள் இஸ்ரேலின் மீது ராக்கட் தாக்குதல்கள் செய்கிறார்கள் என்று ஹமாஸ் பயங்கரவாதிகளை பற்றி பெருமைபட்டார்கள் ஹமாஸ்சும் இஸ்ரேலை அழிப்பேன் என்று சூளுரைத்தது. ஆனா ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு பின்னால் பதுங்கி கொண்டது தெளிவாக தெரியும் விடயம். போர் நிறுத்தபட்டதற்க்கு அல்லாவுக்கு நன்றி என்று சொல்லி பாலஸ்தீனர்கள் தெருக்களில் கொண்டாடுகிறார்கள். இந்தளவுக்கு இஸ்லாமிய மதவாதத்தால் மூளை கழுவபட்ட இவர்களுக்கு எப்படி தான் நல்ல நிலமை வருமோ! ஹமாஸ் கட்டுபாட்டில் உள்ள காசா வறுமைமான இடம் அங்கே மதவாதம் தான் பிரதான தொழில் ஹமாஸ் அழிக்கபட்டால் தான் நல்லது நடக்கலாம்.

  ReplyDelete