வணக்கம் நண்பர்களே,
நமது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய இந்து தத்துவஞான
சிந்த்னையாளரும், பிரபல எழுத்தாளரும் ஆன சகோதரர் ஜெயமோகன் இந்து தமிழ் நாளிதழில் தமிழ் எழுத்தினை
ஆங்கில எழுத்துருவில் எழுதினால் நல்லது என எழுதியதும், அது பல எதிர்வினைகளை தமிழ் பதிவுலகு
உள்ளிட்டு தமிழ் உலகில் ஏற்படுத்தியது என்பதை அறிவோம்.
ஒரு மொழியின் எழுத்துரு என்பது அதன் உடல் போன்றது. எழுத்துருக்கள்
சார்ந்து ஒரு மொழி பல பிரிவாகியுள்ளதும் வரலாறு. கிரந்த எழுத்துருவில் எழுதப் பட்ட
மலையாளம், கன்னடம்,
தெலுங்கு போன்றவை தனித்த
மொழிகளாயின என்பது நாம் அறிந்த எடுத்துக் காட்டு ஆகும்.
தமிழ் கிரந்த எழுத்துருவில் இந்தியாவின் பெரும்பான்மை
மொழிகளை எழுத முடியும் என்றாலும், பல சமய நூல்கள் தமிழ் கிரந்தத்தில் இருந்தாலும் யாரும் தமிழ்
கிரந்தத்தில் எழுத முன் வருவது இல்லை.
வேதங்கள் கூட பின் தோன்றிய தேவ நாகரி எழுத்துருவில் மட்டுமே
எழுதப் படுகின்றன.
இதில் நாம் சொல்வது ஒரே எழுத்துரு பல மொழிகளை சரியாக எழுத
முடியும் என்றாலும் கூட அது ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை என்பதுதான்.இதற்கு மொழிப்
பற்று,அரசியல்
உள்ளிட்டு பல காரணங்கள் உண்டு.
இப்போது ஆங்கிலத்தில் ஏன் சரியாக தமிழை எழுத முடியாதது ஏன் என்பதை விள்ங்குவோம்.
தமிழில் 12 உயிர் எழுத்து, 18 மெய் எழுத்துகள் உண்டு. இவை இணைந்து
12*18=216 உயிர்
மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன.
ஆங்கிலத்தில் 5 உயிர் எழுத்துகளும்,21 மெய் எழுத்துகளும் உண்டு. இவற்றின் ஒப்பீட்டை கீழே உள்ள ஒப்பீடு
விளக்குகிறது.
தமிழ்
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
ஆங்கிலம்
|
|
உயிர் எழுத்து
|
உயிர் எழுத்து
|
மெய் எழுத்து
|
மெய்
எழுத்து
|
|
1
|
அ
|
a
|
க்
|
k
|
2
|
ஆ
|
ā
|
ங்
|
ṅ
|
3
|
இ
|
i
|
ச்
|
c
|
4
|
ஈ
|
ī
|
ஞ்
|
ñ
|
5
|
உ
|
u
|
ட்
|
ṭ
|
6
|
ஊ
|
ū
|
ண்
|
ṇ
|
7
|
எ
|
e
|
த்
|
t
|
8
|
ஏ
|
ē
|
ந்
|
n
|
9
|
ஐ
|
ai
|
ப்
|
p
|
10
|
ஒ
|
o
|
ம்
|
m
|
11
|
ஓ
|
ō
|
ய்
|
y
|
12
|
ஔ
|
au
|
ர்
|
r
|
13
|
ல்
|
l
|
||
14
|
வ்
|
v
|
||
15
|
ழ்
|
|||
16
|
ள்
|
|||
17
|
ற்
|
|||
18
|
ன்
|
|||
12
|
7
|
18
|
10
|
தமிழ் உயிர் எழுத்துகளில் 7 ம், உயிரெழுத்துகளில் 10 மட்டுமே குழப்பம் இல்லாமல்
ஆங்கில எழுத்துகளில் குறிக்க முடியும்(saffron color). ஆகவே ஒருவேளை ஆங்கில எழுத்துருவில் எழுத வேண்டும்
என்றால் இன்னும் புதிய எழுத்துருக்கள்(blue color) தேவை.
இந்த எழுத்துருக்கள் தமிழர் அல்லாதோர் தெரிந்து கொண்டிருக்க
மாட்டார்கள் என்னும் போது இந்த முயற்சி தேவையற்றது ஆகிறது.
ஆகவே திரு ஜெயமோகனின் கருத்தான தமிழை ஆங்கிலம் அறிந்த
எவரும் எளிதில் படிக்க ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்னும் கருத்தும் தவறாகிறது.
சரி தமிழ் வேறு எழுத்துருவில் எழுதப் பட்டு இருக்கிறதா
என கொஞ்சம் தேடியதில். தமிழ் மலையாளம் அரபியில் சில நூற்றாண்டுகளாக எழுதப் பட்டதும்,பிறகு அது வழக்கொழிந்து போனதும்
அறிய முடிந்தது.
இதன் காரணம் என்ன ?
அரபியில் 28 எழுத்துகள்
மட்டுமே உண்டு. அரபி எழுத்துருவில் எழுதப்படும், உருது, பெர்சிய மொழிகளுக்கு கூட இன்னும் எழுத்துகள் சேர்த்தே பயன் படுத்துகின்றனர்.
அதே போல் தமிழை,மலையாளத்தில் அரபி எழுத்துருவில் எழுத சில எழுத்துகள் சேர்க்கப்பட்டன.
இதனை பிற அரபி எழுத்துரு பயன்பாட்டாளர்கள் அறிந்து பயன்படுத்தாமையால்
மட்டுமே வழக்கு அழிந்து போனது.
அரபியில் எழுதப் பட்ட தமிழ் அரவி எனப்பட்டது. விக்கி பாருங்கள்.
அரபியில் எழுதப் பட்ட மலையாளம் அரபி மலையாளம் எனப்பட்டது.
விக்கி பாருங்கள்.
ஆகவே முடிவாக என்ன சொல்கிறோம்?
1. ஐரோப்பிய,மத்திய கிழக்கு எழுத்துருக்கள் இந்திய
மொழிகளில் உள்ள ஒலி அமைப்புக்களுக்கு ஏற்றது அல்ல.ஒருவேளை புதிய எழுத்துகள் உருவாக்கினால்
அது அனைவருக்கும் பலன் அளிக்காது.
2. ஒரு எழுத்துரு சில மொழிகளுக்கு பொருந்தினாலும்
கூட சமூக,அரசியல்
காரணங்களுக்காக ஏற்கப் படுவது இல்லை. கன்னடம் ,தெலுங்கு மொழி எழுத்துருக்கள் மிக
மிக ஒத்த எழுத்துரு என்றாலும் கூட ஒன்றுபட முடியவில்லை.
3.இந்திய மொழிகள் அனைத்தையும் தமிழ் கிரந்தத்தில் எழுதினால்
தமிழர்கள் அனைத்து இந்திய மொழிகளையும் எளிதில் கற்க ஏதுவாக இருக்கும் என்பதால் அனைத்து இந்திய மொழிகளையும் தமிழ் கிரந்தத்தில் எழுத நாம்
பரிந்துரை செய்கிறோம்.
பின் குறிப்பு
ஏன் தமிழ் கிரந்தம் என பதிவில்சொல்கிறோம் என்றால் சிலர்
தமிழில் 4 க
,4 த இல்லையே
என கதை சொல்வதை தவிர்க்க மட்டுமே!!
நன்றி!!!!