Wednesday, July 11, 2012

டார்வினின் வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட் பகுதி 2: Punctuated Equilibrium


ஸ்டீபன் ஜே கோல்ட்(செப்டம்பர் 10,1941_ மே 20,2002) ஒரு அமெரிக்க பரிணாமவியல் வல்லுனர்,தொன்ம உயிர் ஆய்வாளர்,புகழ் பெற்ற  அறிவியல் புதின எழுத்தாளர், இன்னும் பல விடயஙக‌ளால் வரையறுக்க இயலும் ஒரு அற்புத மனிதர்.அமெரிக்க Harvard பல்கலை கழ்கத்தில் நெடுநாள் பணியாற்றி பிறகு அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணியாற்றினார்.
இப்ப‌திவில் திரு கோல்டை பற்றி விளக்குவதை விட அவருடைய பரிணா‌ம வ‌ர‌லாற்றின் விளக்க‌மான‌ நிறுத்த‌ப்ப‌ட்ட‌ ச‌மநிலைத்த‌ன்மை[punctuated equilibrium] என்னும் கொள்கையையே பார்க்க‌ப் போகிறோம்.

பரிணாம கொள்கையில்  எதனை ஆரம்பிப்பது என்றாலும் திரு டார்வினை குறிப்பிடாமல் ஆரம்பிக்க முடியாது.பரிணாம கொள்கைக்கு முதன்முதலில் ஒரு தெளிவான செயலாக்கமாக் இயற்கைத் தேர்வு தந்ததில் இருந்து ,படிப்படியான மாற்ற‌ங்களினால் பல் வேறுவகைகள் உருவாவதும்,ஒரு செல் உயிர்களில் இருந்து அனைத்து உயிர்களும் கிளைத்து தழைத்தன என்பது வரை பரிணாம கொள்கையில் அவரின் தாக்கம் உண்டு.

1. இயற்கைத் தேர்வு (natural selection) Vs சீரற்ற மரபு விலகல்(random genetic drift)

2. சீரற்ற‌ மாற்றம்(random) Vs  சூழல் சார்(adaptive) மாற்றம்(லாமார்க்)

3. படிப்படியான மாற்றம் (gradual) Vs நிறுத்திய சமநிலைத் தன்மை(punctuated equilibrium)

ஆகவே பரிணாம கொள்கையிலும் மாற்று கருத்தாளர்கள் டார்வினியத்தை விட சான்றுகளுக்கு அதிகம் பொருந்தக் கூடிய செயலாக்கங்களை வடிவமைப்பதே பணியாக் கொண்டுள்ளனர்.

இந்த வகையில் திரு கோல்ட் வடிவமைத்த நிறுத்திய சமநிலைக் கொள்கை ,இப்போது பல படிம வரலாறுகளின் படி, டார்வினின் படிப்படியான வளர்ச்சியை விட  அதிகம் பொருந்துவதாக  ஏற்கப் படுகிறது.

உண்மையில் இந்த நிறுத்திய நிலைத்தன்மை கோட்பாட்டை கண்டறிந்தவர் திரு நைல்ஸ் எல்ரிட்ஜ் ,பிறகுதான் கோல்ட் அவருடன் ஆய்வில் இணைந்து கொள்கையை அற்புதமாக வடிவமைத்தார்.

கோல்டின் நிறுத்திய நிலைத்தனமை கோட்பாட்டின் முன் டார்வினின் படிப்படியான் வளர்ச்சி என்பதை புரிந்து கொள்வோம்.டார்வின் தன் இயற்கைத் தேர்வு  கொள்கையை செயற்கை தேர்வு இனவிருத்தி[artificial breeding] மூலம் பல் வேறுவகைகளை தாவரங்கள்,விலங்கினங்களில்,உருவாக்கும்   என்பதை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கிறார்.அவரது உயிரினங்களின் தோற்றம்[Orgin of Species] புத்தகக்த்தில் முதல் அத்தியாயமே இது பற்றியே குறிப்பிடுகிறார்.


http://scienceblogs.com/bloggingtheorigin/2009/01/12/variation-under-domestication/

இரண்டாம் அத்தியாயம் இதே மாற்றங்கள் இயற்கையிலும் உருவாக முடியும் என்பதற்கும் சான்றுகள் அளிக்கிறார்.

http://scienceblogs.com/bloggingtheorigin/2009/01/14/chapter-2-variation-under-natu/

இந்த தளத்தில் டார்வினின் உயிரின தோற்றம் புத்தக்கத்தையே சுருக்கமாக விமர்சனங்களுடன் வெளியிட்டு உள்ளார்கள். விரும்பும் நண்பர்கள் படிக்கலாம்.

டார்வின் படிப்படியான வளர்ச்சி பற்றி 7 ஆம் அத்தியாயத்தில் விவாதிக்கிறார்.செயற்கை தேர்வு இனவிருத்தி முறையில் கூட சில அதிக வித்தியாசமான உயிரினங்கள உருவாவதை ஒத்துக் கொண்டாலும்,இவை இயற்கை சூழலில் தாக்கு பிடிக்காது ஆகவே பெரும்பான்மையான மாற்றங்கள் படிப்படியாகவே நிகழ இயலும் என் வரையறுக்கிறார். டார்வினுக்கு அவர் காலத்தில் இயற்கைத் தேர்வின் மீது வந்த விமர்சனங்களை சமாளிக்கவே நேரம் சரியாக் இருந்து இருக்கும். மீர்வார்ட் எனப்படும் டார்வினின் கொள்கையை ஏற்ற பேராசிரியர் ஒருவர் திடிரென எதிராக மாறி மாற்ம் படிப்படியாக் நிகழாது என உயிரின‌ங்களின் ஆதி ஆக்கம்[Orgin of Genesis] என்னும் நூலை வெளியிட்டார்.அதற்கு மறுப்பாகவே இங்கு தனது படிப்படியான் வள்ர்ச்சிக்கு காரணம் அளிக்கிறார்.

http://www.talkorigins.org/faqs/comdesc/CDgradualism.html

"Everyone who believes in slow and gradual evolution, will of course admit that specific changes may have been as abrupt and as great as any single variation which we meet with under nature, or even under domestication. But as species are more variable when domesticated or cultivated than under their natural conditions, it is not probable that such great and abrupt variations have often occurred under nature, as are known occasionally to arise under domestication. .

My reasons for doubting whether natural species have changed as abruptly as have occasionally domestic races, and for entirely disbelieving that they have changed in the wonderful manner indicated by Mr. Mivart, are as follows. According to our experience, abrupt and strongly marked variations occur in our domesticated productions, singly and at rather long intervals of time. If such occurred under nature, they would be liable, as formerly explained, to be lost by accidental causes of destruction and by subsequent intercrossing; and so it is known to be under domestication, unless abrupt variations of this kind are specially preserved and separated by the care of man. Hence, in order that a new species should suddenly appear in the manner supposed by Mr. Mivart, it is almost necessary to believe, in opposition to all analogy, that several wonderfully changed individuals appeared simultaneously within the same district. This difficulty, as in the case of unconscious selection by man, is avoided on the theory of gradual evolution, through the preservation of a large number of individuals, which varied more or less in any favourable direction, and of the destruction of a large number which varied in an opposite manner.
That many species have been evolved in an extremely gradual manner, there can hardly be a doubt. The species and even the genera of many large natural families are so closely allied together that it is difficult to distinguish not a few of them.
Many large groups of facts are intelligible only on the principle that species have been evolved by very small steps. For instance, the fact that the species included in the larger genera are more closely related to each other, and present a greater
***********
பரிணாமம் பற்றி எது விவாதித்தாலும் டார்வின் என்ன சொன்னார் என்பதை அடிபடையாக கொண்டே பிற கருத்துகள் ஒப்பிடப் படுவதால் கோல்டின் நிறுத்திய சம நிலைத் தன்மை  கோட்பாட்டின் முன் டார்வினின் படிப்படியான் வளர்ச்சி என்பதையும் விளக்க வேண்டியது ஆயிற்று.

http://en.wikipedia.org/wiki/Phyletic_gradualism

http://sandwalk.blogspot.com/2009/02/darwin-on-gradualism.html

உண்மையில் இந்த நிறுத்திய சம நிலைத்தனமை கோட்பாட்டை முதலில் முன்மொழிந்தவர்  நைல்ஸ் எல்ரிட்ஜ்(August 25, 1943) என்னும் அமெரிக்க தொல் உயிரியல்[paleontologist] மேதை.கோல்ட் பிறகே இவருடன் இணைகிறார்.முதலில் அக்கொள்கையை பற்றி மட்டும் பார்ப்போம்.

http://www.nileseldredge.com/


அறிவியலில் ஒவ்வொரு அறிவியலாளரும் தனக்கு கிடைத்த சான்றுகள்,அதன் மீதான பரிசோதனைகளின் முடிவில் தங்கள் கொள்கைகளை வடிவமைக்கின்றனர்.அக்கொள்கைகள் மீது பின் வரும் அறிவியலாளர்கள் அப்போதைய சான்றுகள் அத்னை உறுதிப்படுத்துகிறதா என்பதை சரிபார்ப்பது வழக்கம்.


நைல்ஸ் எல்ரிட்ஜ் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக கொலம்பிய பல்கலை கழக்த்தில் டார்வினின் படிப்படியான் வளர்ச்சிக்கு படிமங்களின் வரலாற்றில் ஆய்வுரீதியாக ஆதாரம் உண்டா  என்பதை எடுத்துக் கொண்டார்.பெரிய விலங்கினங்களின் படிம‌ங்கள் முழுதும் சிதையாமல் கிடைப்பது இல்லை என்பதால் சிறிய‌ உருவ அமைப்பு கொண்ட நத்தை ,அதன் தொடர்புள்ள உயிரினங்கள் ட்ரிலோபைட் குழுமத்தை தன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்.

http://en.wikipedia.org/wiki/Trilobite

கால ரீதியாக அடுக்கப்பட்ட படிமங்களில் அளவீடுகள் ரீதியாக படிப்படியான மாற்ற‌ம் இருக்கிறதா என ஆவணப்படுத்த ஆரம்பித்தார். பல மில்லியன் ஆண்டுகள் எந்த ஒரு குறிப்பிடத்தக்க மாற்ற‌மும் இல்லை.அவருக்கு மிகுந்த வியப்பு ,எனினும் மனம் தளராமல்   இன்னும் கடந்த கால படிமங்களின் அள்வீடுகள் மீது ஆய்வு கவனம் செலுத்தினால்.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதே உயிரின வகையில் இரு உரு அமைப்பில் மாறுபட்ட படிமங்கள் கிடைட்த்ன. இரண்டு வகையிலும் தலைமுறைரீதியாக மாற்ற‌மே இல்லை.இன்னும் பல வகை ட்ரிலோபைட்களில் தனது ஆய்வை மேற்கொண்ட  நைல்ரிட்ஜ்& கோல்ட்  நிறுத்திய  நிலைத்தனமை கோட்பாட்டை கீழ்க்கண்டவாறு வரையறுக்கின்றனர்.

1. உயிரின பிளவு[speciation] மூலம் ஒரு உயிரின குழு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களாக குறுகிய காலத்தில் பிரிகின்றன.இந்த உயிரின‌ங்களுக்குள் உரு அமைப்பு ரீதியாகவும் வித்தியாச‌ம இருக்கிறது.

2. இதன் பிறகு நெடுங்காலத்திற்கு உரு அமைப்பில் மாறுதல் ஏற்படுவது இல்லை.
பல் உயிரினங்கள் தோன்றியதில் இருந்தே ஒரே உரு அமைப்புடன் மறைந்தும் போயிருக்கின்றன.நைல்ரிட்ஜ் கோல்ட் உடன் இணைந்த பிறகே இது ஒரு முழுவளர்ச்சி பெற்ற கொள்கையாக இன்னும் பல படிம அளவீடு சான்றுகளை[quantitative analysis] அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது.ஆகவே இக்கொள்கையின் பிதாமகராக திரு கோல்ட் அவர்களே அறியப்படுகிறார்.

டார்வினின் படிப்படியான வளர்ச்சியா அல்லது கோல்டின் நிறுத்திய சம்நிலைத்தன்மையா என பல விவாதங்கள் சூடு பிடித்தன.இதனால் மகிழ்ழ்ச்சி அடைந்த பரிணாம எதிர்ப்பு மதவாதிகள் இதுவா அதுவா எது சரி? பரிணாம் கொள்கையில் குழப்பம் என கூக்குரல் இஅட அரம்பித்தனர்.

ஏற்கெனவே புகழ்பெற்ற பரிணாம ஆய்வாளர் திரு எர்னஸ்ட் மேயர் உயிரின பிளவின் மூலமே புதிய உயிரினங்கள் தோன்றுகின்றன என்னும் கருத்தாக்கம் பெரும்பாலான ஆய்வாளர்களால் எற்கப் பட்டு இருந்தது.

திரு எர்னஸ்ட் மெயர் உயிரின உரு அமைப்பு மாறாமை[stasis] என்பதை கணக்கில் எடுக்கவில்லை.இது டார்வினின் கருத்து போல் படிம வரலாறு சரியாக கிடைக்கவில்லை,ஒருவேளை அனைத்து படிமங்களும் சீரான குறுகிய கால இடைவெளியில் கிடைத்தால் இப்படி தோன்றாது என்னும் கருத்தையே கொண்டு இருந்தார்.

மெயரின் கருத்தோடு ,உரு அமைப்பு மாறாமை என்பதை இணைத்தல் நிறுத்திய நிலைத்தனமை கருத்தாக்கம் வந்துவிடும்.படிம வரலாற்றில் இரண்டுக்குமே சான்றுகள் இருப்பதால் ,இரண்டுமே இப்போது ஏற்கப்படுகின்றன.

இப்பதிவில் எவ்வளவு எழுதினாலும் சொல்வதை தெளிவாக சொல்லிவிட்ட திருப்தி இல்லை.ஆகவே சகோக்கள் சந்தேகங்களை  பின்னூட்டத்தில் சரி செய்கிறேன். முதல் காணொளியில் இக்கோட்பாடு எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதைக் கூறுகிறது.
 

Part1
இரண்டாம் காணொளியில் திரு நைல்ஸ் எல்ரிட்ஜ் சென்றமாதம் [மே 20,2012] இகோட்பாடு குறித்து நிகழ்த்திய விளக்க உரை.
காணொளி காணுங்கள்.


Part2
இது குறித்து இன்னொரு பதிவும் இட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.மூலக்கூறு அறிவியலின் அடிப்படையில் எக்கொள்கைக்கு சான்று அதிகம்? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


நன்றி!!!!!!!!!!!!

14 comments:

 1. உண்மையில் மிக மிக ஆழமான பதிவு சகோதரம்... டார்வினின் அடிப்படை கொள்கைகளை மட்டுமே அறிந்து வைத்திருககிறேன்....

  தந்திருக்கும் லிங்குகளுக்கு இப்போ செல்லவில்லை...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

  ReplyDelete
 2. பதிவுக்கு நன்றிகள் !!! இந்தப் பதிவுகளுக்காக கடுமையாக உழைத்துள்ளீர்கள் எனத் தெரிகின்றது !!! தொடருங்கள் ... !!!

  படிப்படியான மாற்றம் / நிறுத்திய சமநிலைத் தன்மை

  இரண்டுமே நடந்திருக்கலாம் என நான் நினைக்கின்றேன் .. இயற்கையும் பரிணாமும் நேர்கோட்டில் செல்வது அல்ல, மாறாக பல COMPLEXITIES கொண்டவை என்பதால் ... !!!

  நிறுத்திய சமநிலைத் தன்மை இப்போது பெரும் ஆய்வில் சென்றுக் கொண்டிருக்கின்றது ...

  தொடர்க ... !!!

  பரிணாம எதிர்ப்பு வாதிகள் உங்கள் பதிவைப் படித்து மொத்தமாக குழம்பி போய் உள்ளதால் .. சன் டிவி யில் மெகா சீரியல் பார்த்து ஆசுவாசப்பட்டுக் கொண்டுள்ளார்கள் என உளவுச் செய்திகள் அறிவிக்கின்றன !!!

  ஹிஹி !!!

  ReplyDelete
 3. நண்பர் நரேன் ஆழமான சிந்தனையுள்ளவர்களால் தான் இது போன்ற அரிய தகவலைத் தர முடியும். உங்களின் உழைப்பு வீண் போகாது மதவாதிகளின் எதிர்ப்பே தங்களுக்கு துணையானது என நினைக்கின்றேன்.தொரடருங்கள் வாழ்த்துக்கள்.

  இனியவன்...

  ReplyDelete
 4. நண்பர் நரேன் ஆழமான சிந்தனையுள்ளவர்களால் தான் இது போன்ற அரிய தகவலைத் தர முடியும். உங்களின் உழைப்பு வீண் போகாது மதவாதிகளின் எதிர்ப்பே தங்களுக்கு துணையானது என நினைக்கின்றேன்.தொரடருங்கள் வாழ்த்துக்கள்.

  இனியவன்...

  ReplyDelete
 5. பதிவுக்கு நன்றி.

  வீடியோவை பார்க்க நேரமில்லாத, ஆனால் படிப்படியான மாற்றம் (gradual) Vs நிறுத்திய சமநிலைத் தன்மை(punctuated equilibrium) மற்றும் punctuated equilibrium பற்றி அறிய விரும்பும் நண்பர்களுக்காக பின்வரும் தொடுப்பு.

  இவை பற்றி பர்க்கிலி ஆசாமிகள் என்னைப் போன்ற மூனாம் கிளாஸில் பெயிலான மக்கு பசங்களும் புரிந்து கொள்ளும் வகையில் Pace of Evolution, Competing hypotheses, More on punctuated equilibrium எனும் 3 தலைப்புகளில் எளிய ஆங்கிலத்தில் விளக்கியுள்ளார்கள்.

  http://evolution.berkeley.edu/evosite/evo101/VIIAPaceevolution.shtml

  ReplyDelete
 6. நண்பர் சார்வாகன்,

  அருமையான எளிமையான பதிவு, நன்றி. punctuated equilburium ஏதோ differntial calculus என்று ஓடியவர்களை தடுத்து நிறுத்திய பதிவு.

  படிப்படியா மாற்றத்தில், மாற்றத்திற்கான காரணம் இயற்கை தேர்வு. அதைபோல நிறுத்திய நிலைதன்மை கோட்பாட்டில் நெடிய காலத்திற்புறகுதிடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன???

  மேலதிக தகவல்களுக்கும், காணொளிகளுக்கும் நன்றி.

  நண்பர் இனியவன்....LOL...ஹா...very serious case of mistaken identity.

  நான் சார்வாகன் அல்ல. அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. என்னை அவர் என்று சொல்லி அவரை சிறுமை படுத்தாதீர். உங்கள் பாராட்டுகள் வாழ்த்துக்கள் உண்மையில் அவருக்குதான்.

  ஆனாலும் எனது அடுத்த பதிவில் சார்வாகன் உண்மையில் யார் என்று ஆதாரத்துடன் அவர் முகத்திரையை உலகத்திற்கு காட்டுவேன்...)))))

  கொஞ்சம் பொறுங்கள் நண்பரே.

  ReplyDelete
 7. வணக்கம் சகோ மதி சுதா
  பரிணம் கொள்கை டார்வினிடம் இருந்து தொடங்கு பல பரிணான வளர்ச்சி கண்டுவிட்டது.கற்க நிறைய விடயம் உண்டு.வாழ்த்துக்கு நன்றி
  **********
  வணக்கம் சகோ இக்பால் செல்வன்,
  கருத்துகளுக்கு நன்றி.இது பற்றி .இப்பதிவு குறித்து திருப்தி இல்லை.இன்னும் ஒரு விள்க்க பதிவு எழுத வேண்டும்
  **********
  வாங்க சகோ இனியவன்,
  நரேன் தளத்தில் போட வேண்டிய பின்னூட்டம் இங்கே இட்டு விட்டிர்கள்.எனினும் கருத்துகளுக்கு நன்றி.
  **********
  சகோ நந்தவனத்தான்

  இணைப்பு சுட்டிகளுக்கு நன்றி
  ************
  சகோ நரேன் வாங்க,
  நிறுத்திய நிலைத்த்னமை என்பது சுருக்க்மாக கூறவேண்டும் எனில்

  குறைந்த கால அதிக‌ உரு மாற்றம்,அதிக கால குறைந்த உருமாற்றம்.
  இந்த அதிக உருமாற்றம் குறைந்த காலத்தில் ஏற்படக் காரணம் உயிரின பிளவு.
  உயிரின பிள்வுக்குப் பின் நெடுங்காலத்திற்கு தோன்றும் உயிரிங்களின்னுருவில் மாற்ரம் அதிகம் ஏற்படுவது இல்லை.
  ஆனால் நெடுங்காலத்திற்கு பின் மீண்டும் குறுகிய கால உயிரினப் பிளவு ,நெடுங்கால் உரு மாறாமை என தொடர்கிறது.

  .....
  ஏதோ புரிவது போல் இல்லை?????????????

  அடுத்த பதிவு இட்டு விடுவோம்.
  ********
  நான் உண்மையில் யார் என்று நானே தேடிக் கொண்டு இருக்கிறேன்.உதவுவதற்கு
  நன்றி

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 8. நரேன், இதற்கு காரணமும் இயற்கை தேர்வுதான்.

  நான் கொடுத்த இணைப்பினை வரிசையாக படிக்கவும். நேரமில்லையெனில் பார்க்க http://evolution.berkeley.edu/evosite/evo101/VIIA1bPunctuated.shtml


  சுருக்கமாக, பரிணமரீதியான மாற்றம் படிப்படியாக நடந்தாலும் விரைவாக நடப்பினும், இறுதியில் இயற்கை தேர்வில் வெல்லும் உயிரினங்களே தப்பி பெருக்கமடையும். மேலும் மாற்றத்திற்கு ஏதும் காரணமில்லை.பொதுவாக எந்த ஒரு வெளிதூண்டலும் பரிணாமத்தின் காரணி அல்ல. மாற்றம் நிகழ்ந்து அது உயிரினத்திற்கு உதவும் எனில் அந்த உயிரினம் பெருக்கமடையும். (ஒரு crudeடான உ-ம்) ஒரு பாம்புக்கு விஷம் உற்பத்திக்கான திறன் ஏற்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். அது தானாவே நிகழும்,மியூட்டேசன் மூலமாக. அம்மாற்றம் punctuated equilibria அல்லது gradualism முறையில் நிகழக்கூடும். விசமுடைய பாம்புகள் பிழைக்க வாய்ப்பு அதிகம் என்பதினால் விசமில்லாத தனது முன்னோரை விட பல்கி பெருக்கமடையும். விசமில்லாதவை அழியும் அல்லது விசமுடையவையுடன் உறவு வைத்து எல்லாம் விசமுடையவை ஆகும். ஆக இயற்கை இம்மாற்றத்தை வெளியிலிருந்து தூண்டாது, மாற்றம் நிகழ்ந்தபின் தேர்ந்தெடுக்கும்.

  punctuated equilibria அல்லது gradualism இரண்டும் மாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்க முயலும் கொள்கைகளே. மாற்றம் நிகழ்ந்த பின் நடைபெறும் டார்வினின் இயற்கை தேர்வினை இரண்டுமே ஒப்புக்கொள்ளுகின்றன. மேலும் இக்பால் செல்வன் சொன்னது போலவே இந்த இரண்டு முறையிலும் மாற்றம் நிகழ்ந்தற்கு ஆதாரம் கிட்டியுள்ளது.


  (விளக்கம் தவறு என்றாலும் வாத்தியார் சார்வாகன் பெஞ்சு மேல் நிக்க வைக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் இப்பின்னூட்டம் வெளியிடப்படுகிறது)

  ReplyDelete
  Replies
  1. நண்பர் நந்தவனத்தான், விளக்கத்திற்க்கும், லிங்க்கிக்கும் நன்றி. லிங்க அதிகம் பயனுள்ளதாக இருந்தது.

   Delete
 9. வணக்க்ம் சகோ நந்தவனத்தன்,
  உங்களின் பதில் டார்வினியத்தின் அடிப்படையில் 100% சரி.உண்மையில் டார்வின் படிப்படியான் வளர்ச்சி என்பதை குறிப்பிட்டு இருக்க வேண்டிய அவ்சியமே இல்லை என அவரது உக்கிர சீடன் ஹக்ஸ்லி கூட கருத்து தெரிவித்து இருக்கிறார்.

  இங்கே இரு செய‌ல்கள் விள்க்கப் பட வேண்டும்.
  1. குறுகிய கால அதிக உரு மாற்ற‌ம்

  2. நெடுங்கால குறைந்த உருமாற்றம்

  அப்படி வைத்தால் டார்வினியத்தின் அடிப்படையில் மாற்ற‌ம் என்பதன் மூல காரணி இயற்கைத் தேர்வு என்பதால் முதல் செயல் எளிதில் விள்க்கபடும்.

  ஆயினும் இரண்டாம் செயல் நெடுங்காலத்திற்கு மிக குறைந்த உருமாற்ற‌ம் என்பதை பரிணாம் எதிர்ப்பாளர்கள் [வாழும் படிமங்கள்,பரிணாம் எதிர்ப்பு பவர் ஸ்டார் ஹாரூண் யாஹ்யாவின் அட்லாஸ் புத்த்கம் போன்றவை] எதிரான சான்றாக சித்த‌ரித்த்னர்.

  டார்வின் நெடுங்கால்த்திற்கு உரு மாற்ரமை என்பதன் சான்றுகளை அறிந்து இருக்கவில்லை.அவர் கால்த்தில் படிமங்கள் மிக குறைவு.அவரின் புத்தக்த்திற்கு பிறகே ,பரிணாம் கொள்கைக்கு ஆதாராமாக் நிறைய படிமங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.


  ஒருவேளை டார்வின் நெடுங்கால‌ உரு மாறாமை என்ப‌தின் சான்றுக‌ள் அறிந்து இருந்தால் ச‌கோ ந‌ந்த்வ‌ன‌த்தானின் ப‌திலையே சொல்லி இருப்பார் என்ப‌தில் ஐய‌மில்லை.வாழ்த்துக்க‌ள் ச‌கோ!


  எனினும் அடுத்த‌ ப‌திவில் மாற்று (கோல்ட் அவர்களின்) விள்க்க‌ங்க‌ளையும் பார்போம். ந‌ன்றி

  ReplyDelete
 10. நண்பர் நரேனும்,சார்வாகனும் மன்னிக்க வேண்டும் நண்பர் சார்வாகன் என்பதற்கு பதிலாகத்தான் தவறுதலாக அடித்து விட்டேன்,மறுநாள் பார்க்கும்போதுதான் நீங்கள் சுட்டிக்காட்டியதை உண்ர்ந்தேன் தவறுதலுக்காக வருந்துகிறேன்.

  ReplyDelete
 11. நண்பர் நரேனும்,சார்வாகனும் மன்னிக்க வேண்டும் நண்பர் சார்வாகன் என்பதற்கு பதிலாகத்தான் தவறுதலாக அடித்து விட்டேன்,மறுநாள் பார்க்கும்போதுதான் நீங்கள் சுட்டிக்காட்டியதை உண்ர்ந்தேன் தவறுதலுக்காக வருந்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் இனியவன், வருந்துவதற்கு ஒன்றுமில்லை -:). I had my 15 minutes of fame. LOL

   Delete
 12. அறிவியல் உண்மைகளை மிக அழகாகத் தமிழ்படுத்தித் தௌவதற்கு நன்றி.

  மதம் மூலம் காசு பண்ணுவோர் எதிர்ப்பினால் உண்மை மாறுவதில்லை.

  ReplyDelete