Monday, February 18, 2013

இலங்கை சிங்கள அடிப்படைவாத இயக்கம் பொதுபலசேனா ஹலால் பொருள்களுக்கு எதிர்ப்பு!!வணக்கம் நண்பர்களே,சகோதரர்களே,
இலங்கை என்று சொல்லும் போதே நம் மன‌தில் ஒரு சோகம் வந்து ஒட்டுவது தவிர்க்க முடியாது என்றாலும், நடப்பது நம் தமிழ் சொந்தங்களுக்கு ஒரு தீர்வு தராதா எனவே எதிர்பார்க்கிறோம்.

சிங்கள அடிப்படைவாதம் பேசும் அரசியல் கட்சிகளே அங்கு ஆட்சி செய்ய முடியும் என்னும் சூழல் நிலவுவதால், ஆளும் இராஜபக்சேவை மாற்ற‌ வேண்டும் எனில் அதை விட இனவாதம் பேசும் கட்சிதான் செய்ய இயலும். இது அரசியலின் அடிப்படை விதி.

அந்த வகையில் பொதுபலசேனா என்னும் சிங்கள அடிப்படைவாத இயக்கம் இலங்கையில் வலிமை பெற்று வருகிறது.

அவர்கள் இலங்கை முஸ்லிம்களை எதிர்க்கும் போக்கை கடைப்பிடித்து, அதன் முதல் படியாக அவர்கள் பயன்படுத்தும் ஹலால் பொருட்கள் மீது த்டை விதிக்க கோருகின்றனர். நேற்று மஹாராகமா நகரில் நடைபெற போராட்டத்தில் 
பேசிய புத்த பிக்குகள் மார்ச் 31 க்குள் இந்த பொருள்களுக்கு த்டை விதிக்க வேண்டும் என கெடு விதித்து உள்ளனர்.

இஸ்லாமில் உணவு, உடை உள்ளிட்டு பல கட்டுப்பாடுகள் உண்டு என நாம் அறிவோம். உணவு வகைளில் அனுமதிக்கப்பட்டது என முத்திரை தாங்கி வருவதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை விரும்புகின்றனர்.இது மற்றவர்களுக்கு கட்டாயம் இல்லை.

பொதுபலசேனா முஸ்லிம்களை குறிவைத்து விமர்சிப்பதும்,எதிர்ப்பதும் அரசியல் மட்டுமே!!.

இதற்கு கொஞ்சம் காலம் பின்னால் சென்று பார்க்க வேண்டும். வடகிழக்கில் தமிழர்களிடையே மத ரீதியான பிளவு,வன்முறைகள், முஸ்லிம்கள் துரத்தப் பட்டமை ஆகியவ்ற்றை இராஜபக்சே அரசு சாதுர்யமாக பயன்படுத்தி, இனப்பிரச்சினையை ,தீவிரவாதிப் பிரசினையாக காட்ட முடிந்தது.

சீனா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியுடன் போரில் வெற்றி பெற்றது. எதிர்க்க யாரும் இல்லாமல் இராஜாங்கம் நடத்தி வந்தார் இராஜபக்சே.

அவரை பெரும்பானமை சிங்கள மக்கள் ஆதரிக்கும் வரை அசைக்க முடியாது,தமிழர்களை எதிர்த்து அரசியல் இராஜபக்சேவை விட யாரும் செய்ய முடியாது என்பதால், பொதுபலசேனா முஸ்லிம்களை எதிர்க்க முடிவு செய்தது எனக் கொள்ளலாம்.

முஸ்லிம்களோடு ,கிறித்தவர்களையும் எதிர்ப்பது இந்த கணிப்பை உறுதிப் படுத்துகிறது. மேலும் இராகபக்சே உள்ளிட்ட பல சிங்கள‌ அரசியல் தலைகள் கிறித்தவ பிண்ணனி கொண்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.


பாமர மக்களுக்கு இன,மத,மொழி வெறி கிடையாது என்றாலும் மத,இன வாதம் பேசும் அரசியல்வாதிகள் குறுகியகாலத்தில் இதனை தூண்டுவதில் வல்லவர்கள் என்பதே வரலாறு சொல்லும் பாடம்!!! 
  
From

இலங்கையில் ஹலால் முறைமை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அமைப்பு கோரியிருக்கிறது.
ஒரு மாத காலத்துக்குள் இலங்கையில் உள்ள வெளிநாட்டு மத போதகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கொழும்பு மகரகமவில் நடந்த அந்த அமைப்பின் வருடாந்த கூட்டம் ஒன்றின் போதே அந்த அமைப்பு இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபைகளே காரணம் என்று கூறிய அந்த அமைப்பின் செயலாளர் ஒருவர், உலமாக்கள் சபையை தடை செய்ய வேண்டும் என்றும் பேசியதாக அந்தக் கூடத்துக்குச் சென்ற எமது செய்தியாளர் ஒருவர் கூறினார்.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அங்கு பேசிய பௌத்த பிக்கு ஒருவர் உரையாற்றியுள்ளார்.
**

இந்த பொதுபலசேனா மட்டும் அல்ல, இனவாத அரசு இராஜபக்சேவை புறக்கணித்து  அனைத்து தமிழ், சிங்கள மக்கள் இன,மொழி,மத பேதம் மறந்து பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண வேண்டுகிறோம்!!

மக்களுக்கு தேவை வாழ்வாதாரம், சுயமரியாதை மட்டுமே பிரச்சினைகள் அல்ல!!
37 comments:

 1. விபரமான கட்டுரை சகோ. கடும்போக்கு இஸ்லாமிய அமைப்புகள் பசுந் தோல் போர்த்து கொண்டு செயல்படும் நிலையில் இலங்கையில் அவர்களுக்கு சரியான போட்டியாளர் களமிறங்கியுள்ளார். அவங்க target தமிழர் கிடையாது. காட்டுமிராண்டித்தனமான சிந்தனைகளையும் சட்டங்களையும் கொண்ட இஸ்லாமிய நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பப்படுவதை பாதுகாப்பு காரணங்களால் நிறுத்துவது தான் சரியானது.

  ReplyDelete
  Replies
  1. சகோ வேக‌நரி வாங்க,

   சவுதிமயமாக்களின் காரணி வஹாபி இஸ்லாம் செல்லும் இடம் எல்லாம் எதிர்ப்பை சந்திப்பது செய்திகளில் இருந்து அறிய முடியும்.

   உலகையே மதம் மாற்றி ,ஷரியாவின் மேல் ஆளுவோம் என்னும் நோக்கம் ,பிற மதத்த்வரால் ஏற்கப்ப்டாத போது எதிர்ப்பு தோன்றும்.

   இலங்கையில் சிங்கள இனவாதம் செய்யாமல் அரசியல் செய்ய முடியாது, இதுவரை தமிழர்களை எதிர்த்து செய்து பலன் கிடைத்தது,இப்போது வஹாபிகளை எதிர்த்து செய்யும் அரசியல் பலன் கொடுக்குமா என சில சிங்கள இனவாதிகள் முயற்சி செய்கின்றனர்.

   பார்க்கலாம் என்ன நடக்கிறது அங்கே என்று!!!


   நன்றி!!!

   Delete
  2. நல்ல பலன் கிடைக்கிறது சகோ.சார்வாகன் ...

   ஹலால் என்றால் என்னவென்றே தெரியாது ஹலால் அச்சிடப்பட்ட பொருட்களை நுகர்வதை தவிர்க்கும் பழக்கம் சிங்களவர் இடையே அதிகரித்துள்ளது ...பொது பல சேனா ஆரம்பித்து வெறும் 8 மாதங்களே ஆகியுள்ள நிலையில் பல வருட பாரம்பரியம் உடைய அகில இலங்கை ஜமியத்துல் உலமாவே ஆட்டம் காண செய்யும் வகையில் அவர்களது வளர்ச்சி உள்ளது..

   பொது பல சேனா கூறும் ஹலால் வியாக்கியானம் இதுவே...அல்லாவுக்காக அறுக்கபட்டவைகளை சேர்த்து செய்த உணவுகள் தான் ஹலால்...சிறுபான்மை மக்களை திருப்தி படுத்த கொண்டுவரப்பட்ட இச்சான்றிதழை பெரும்பான்மை சிங்களவர் மீது திணிக்காதீர்....

   முன்பு வாடா பகுதி தமிழர்களை தமிழ்நாட்டில் இருந்து தப்பி வந்தவர்கள் என கூறி தமிழரை ஒடுக்க முற்பட்ட அதே தேரவாத பௌத்த பன்னிகள் தான் தற்போது உருமாற்றம் பெற்று பொது பல சேனா ஆகியுள்ளது.

   அப்படியே இலங்கையில் ஹலால் சான்றிதழ் தடை செய்யப்படின் இஸ்லாமிய நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதியை மறந்து விட வேண்டியது தான்..

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. நேற்று ஊடகங்களில் வெளியான செய்தியை வாசித்த பின் என்னால் அதனை ஜீரணிக்கவே முடியவில்லை. ஒரு 13 வயது இளம் பெண்ணை, கோபாலகிருஷ்ணன், 59 என்ற அவளது சொந்த தாய் மாமனே தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். அவனோடு இணைந்து நிலத்தரகர் கருப்பசாமி ( வயது 59 ); மைக் செட் கடை வைத்திருக்கும் கருப்பசாமி ( வயது 45 ); கோவை மருத்துவக் கல்லூரியில் செவிலியனாகப் பணியாற்றிய 72 வயது பாலசுந்தரம் என்பவன் அச் சிறுமியை 10 மாதங்கள் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி உள்ளார்கள். அத்தோடு பெயிண்ட் வேலை செய்யும் 17 வயதான ஒருவனும் இவ் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.

  பல மாதக் கொடுமைகளைத் தாங்க முடியாத அச் சிறுமி இறுதியாகக் காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கைதாகி உள்ளனர். Sections 376 (g) (minor girl gang rape) and 506 (i) (criminal intimidation) of the Indian Penal Code and under Sections 4, 5 and 6 of the Protection of Children from Sexual Offence Act 2012 ஆகியவற்றின் கீழ் வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதே கோவையில் கடந்த மாதம் தான் 23 வயது இளம் பெண்ணை அவளது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைப் பெண்கள் நீதிமன்றம் உறுதி செய்து இருந்தது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. பாலியல் பலாத்காரம் நடக்கும் போது அப் பெண் இளம் பிராயத்தில் இருந்தத்தாகத் தெரியவருகின்றது.

  இது மட்டுமில்லை கேரளாவில் காசர்கோடு மாவட்டம் பாவூரைச் சேர்ந்த 14 வயதான ஒரு இளம் பெண்ணை அவளது சொந்த அண்ணனும், அவனது தோழனும் பாலியல் வன்புணர்புக்கு உள்ளாக்கி உள்ளார்கள்.

  அதே போல எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பறவூரில் 17 வயது பெண்ணை அவளது தந்தையும், ஏழு பிற நபர்களும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி இருந்தார்கள்.

  மற்றுமொரு சம்பவம் கண்ணூர் மாவட்டம் தாழைச்சேரியில் நடந்தது. 13 வயதான பெண் அவளது தந்தையாலும், 15 வயதான அவளது அண்ணனாலும், அவளது மாமன்மார்களாலும் பலாத்காரம் செய்யப்பட்டு வந்திருக்கின்றாள். அண்மையில் அப் பெண் பரிதாபமாக இறந்து போனாள்.

  இவ்வாறான சம்பவங்கள் யாவும் ஒரு துளி மட்டுமே. இன்னம் பல சம்பவங்கள் குடும்பக் கவுரவம், மானம், மதக் குருமார்களின் அழுத்தங்கள், பெண்கள் மீதான அடக்குமுறை எனப் பற்பலக் காரணங்களால் வெளியே வருவதே இல்லை.

  எழுதியது இக்பால் செல்வன் *** Monday, February 18, 2013

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   ஒரு குற்றம் நடந்து அதில் காஃபிர்கள் மட்டுமே ஈடுபட்டு இருந்தல் மூமின்களுக்கு வரும் மகிழ்ச்சியே அலாதி என்றாலும், நீங்கள் வெளிப்படையாக காட்டுவதால் பாராட்டுகிறென்.

   மனிதர்களில் பலதரபட்ட குணம் உடையவர்கள் உண்டு. குற்றமும் புரிவார். அப்படி குற்றம் நடந்தால் அது புகாராக ஏற்கப்பட்டு, விசாரிக்கப்ப்ட்டு, சூழல் கருதி , முன் நடந்த வழக்குகள், குற்ற‌வியல் சட்டம் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப் படுகிறது.


   ஆனால் சவுதியில் இப்படி எதுவுமே வெளிப்படையாக நடக்காது!!. அங்கு ஆவணப் படுத்தப்பட்ட குற்ற‌வியல் நடைமுறைகளே கிடையாது என்றால் பாருங்களேன்!!

   இந்தியாவில் சட்டம் நடைமுறைப் படுத்துவதில் சிக்கல்!!

   சவுதியில் சட்டமே சிக்கல்!!

   குழந்தையை சித்திரவதை செய்து கொன்ற ஃபய்ஹான் அல் ஹம்டி பற்றி இன்னும் விவரமோ, வழக்கு விசாரணை பற்றியோ செய்திகள்
   வருவது இல்லை!!.

   இதில் அண்ணன் பீ.சே வேற குழந்தையை கொன்றதற்கு தந்தை கொல்லப்படக் கூடது என்ற ஹதிது வீக் என் கூறிவிட்டார்.

   சவுதி தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறென்.
   அப்புறம் சைஃபுதீன் ரஷாதி விவாதத்தில் அண்ணன் சொதப்பி விட்டாரே,
   மத்ஹபு மேல் ஒரு குற்றம் கூட காட்ட முடியவில்லையே!!

   காற்று பிரிவது பற்றியே விவாதம் சென்றதால் நாற்றம் தாங்க முடியவில்லை!!

   ஏக இறைவன் மிகப் பெரியவன்!!

   நன்றி!!

   Delete
  2. http://www.hrw.org/world-report-2012/world-report-2012-saudi-arabia

   Criminal Justice and Torture

   Detainees, including children, commonly face systematic violations of due process and fair trial rights, including arbitrary arrest and torture and ill-treatment in detention. Saudi judges routinely sentence defendants to thousands of lashes.

   Judges can order arrest and detention, including of children, at their discretion. Children can be tried and sentenced as adults if physical signs of puberty exist. The Interior Ministry said it had executed Bandar al-Luhaibi, a child, in October for killing his grandmother.

   Authorities rarely inform suspects of the crime with which they are charged, or of supporting evidence. Saudi Arabia has no penal code, so prosecutors and judges largely define criminal offenses at their discretion. Lawyers do not assist suspects during interrogation and face difficulty examining witnesses or presenting evidence at trial.

   From January to October 2011 Saudi Arabia had executed at least 61 persons, including two women and one child, mostly for murder or drugs offenses, but also a Sudanese man, Abd al-Hamid al-Fakki, for “sorcery.”

   In March a court, after only two sessions, sentenced four Iraqis and two Syrians to the amputation of one foot and one hand each for stealing money from a supermarket. One of the Iraqis told Human Rights Watch that interrogators physically tortured him for eight days into a signing, unread, a prepared confession.

   Secret police detained without trial or access to lawyers, in many cases for years, thousands of persons suspected of sympathies for or involvement with armed groups, or for their peaceful political views.

   In July the government proposed a counterterrorism law that would criminalize “infringing upon the interests of the kingdom” or “describing the king—or the crown prince—as an unbeliever, doubting his integrity, defaming his honesty, breaking the [oath of] loyalty [to him], or inciting such [acts].”

   Prisoners and detainees in several facilities described inhumane conditions. On January 3 Mikhlif al-Shammari, a rights advocate detained in Dammam prison since June 2010, alleged that guards beat inmates. According to his family, guards assaulted al-Shammari in July for his criticisms by putting a chemical agent in his mouth.

   Freedom of Expression, Belief, and Assembly

   Authorities further tightened the space for public criticism of officials or government policies in the wake of the pro-democracy Arab Spring movements. The Ministry of Culture and Information heavily censored print and broadcast media. Internet critics crossing vague "red lines" faced arrest.

   In October 2010 the General Court in Qubba, in northern Saudi Arabia, sentenced to lashes Fahd al-Jukhaidib, a local journalist and teacher who reported on a rare protest against the local electricity company. In December authorities detained incommunicado for three months Muhammad al-'Abd al-Karim, a professor of Islamic jurisprudence, for an online article speculating whether Saudi Arabia would survive as a political entity without the ruling Saudi royal family.

   ..
   Saudi Arabia does not tolerate public worship by adherents of religions other than Islam and systematically discriminates against its religious minorities, in particular Shia and Ismailis (a distinct branch of Shiism). Official discrimination against Shia encompasses religious practices, education, and the justice system. Government officials exclude Shia from certain public jobs and policy questions and publicly disparage their faith.

   This discrimination sometimes amounts to persecution. Professing Shia beliefs in private or in public, in particular at holy sites in Mecca and Medina, may lead to arrest and detention. In October the Interior Ministry said that it would pursue what it called “radicalized or hired instigators” among the Shia with an “iron fist.”

   Thank you

   Delete
 4. சிங்களமோ தமிழோ எந்தவித இனவாதமும் எதிர்க்கப்பட வேண்டியதே. மக்களை முட்டாளாக்கி சிந்தனையை மழுங்கடிக்கு முக்கியமான விடயங்கள் நாட்டுப்பற்று, மதப்பற்று, இனப்பற்றி மொழிப்பற்று இவையே. இவைகளை தாண்டி மனித இனம் ஒன்றுதான் என்பதையும் மொழி போன்றவை மனிதனின் கருவிகள் மட்டுமே என்பதை உணர்ந்தாலே பல பிரச்சனைகள் தீரும்.

  ஆனால் இந்த கோரிக்கையினால் ஒரே ஒரு நன்மை உண்டு. ஹலால் என்பது மிகவும் கொடூரமாக விலங்குளை கொன்று தின்னும் முறையாகும். கழுத்தை அறுத்து விலங்கினை கொடூரமாக துடிக்கை வைத்து கொல்லுதல் முறையல்ல. நான் அசைவ உணவு சாப்பிடுவதை ஆதரிப்பவன் என்ற போதிலும் விலங்குகள் முறையாக வளர்க்கப்பட்டு மன மற்றும் உடல் வலியின்றி கொல்லப்பட வேண்டும் என விரும்புபவன்.ஆகா சிறுபான்மை மக்கள் சாப்பிட அனைத்து விலங்களையும் ஹலால் முறையில் கொல்வது சரியல்ல என்பதினால் பெளத்தர்களின் இந்த அறைகூவலை வரவேற்கிறேன். சிறுபான்மை மக்கள் சாப்பிடும் விலங்குகளுக்கு மட்டும் ஹலால் மற்ற விலங்குகளுக்கு stunning கொலை முறையும் வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. சகோ நந்தவனம்,

   நாம் வரலாற்ரைப் பார்க்கிறோம்,அதில் இருந்து கற்க முயற்சிக்கிறோம்.

   1. வஹாபிகளின் சவுதிமயமாக்கல் பிரச்சாரம் [உண்மையான ஹி ஹி ]சுயமரியாதை கொண்ட எவராலும் விமர்சிக்கப்படும், எதிர்க்கப்படும் என்பது உஅலக் அள்வில் நிகழும் செயல்.

   2. வஹாபிகளின் ஆடை,உணவு கட்டுப்பாடு, அதன் மேனமை குறித்த பிரச்சாரத்தின் எதிர்வினையை சில சிங்கள இனவாதிகள் பயன்படுத்த முயற்சிப்பதுதான் இப்போதைய சிக்கல்.

   ஹலால் என்றால் ஒருமுஸ்லீம் கசாப்புக் கடை வைத்து இருக்கிறார், அதில் விரும்புபவர்கள் வாங்குகிறார் என்பது வஹாபி மயமாக்களுக்கு முந்தைய நடைமுறை.

   நம்ம கூட அங்கு வாங்குபவர்தான்!!இதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

   ஆனால் இப்போது மாமிசத்திற்கு பேக்கிங் செய்யும் போது, ஹலால் முத்திரை,அதற்கு பணம் என்பதும் இப்படி மாமிசம் முஸ்லிம் நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகாது என்பது பொருளாதார வியாபார போட்டி, சமூக பிரச்சினை ஆக பரிணமிக்கிறது.

   பணம்+ அரசியல் அவ்வளவுதான்!!

   இலங்கை முஸ்லிம் தலைகள் எப்படி சமாளிக்கிறார் எனப் பார்ப்போம்!!

   ஹலால் முறையில் கழுத்தை அறுத்து இரத்தம் வெளியாகும் வண்ணம் கொல்வது நமக்கும் பிடிக்காது!!

   தமிழ் இந்துவில் வந்த ஒரு கட்டுரை இதை அலசுகிறது

   http://www.tamilhindu.com/2010/03/should-hindus-eat-halal-or-jhatka-meat/
   ..
   இஸ்லாமிய ஹலால் முறையில் ஆடுகளின் கழுத்து ஒரு கீறல் கீறப்பட்டு அதன் ரத்தம் வடிக்கப்படுகிறது. இந்த முறையில் ஆடு மெல்ல மெல்ல துடிதுடித்து சாகிறது.
   ..
   அது மட்டுமல்ல தற்போது மெக்டொனால்ட் போன்ற அசைவ உணவு கடைகளும் ஹலால் முறையில் வெட்டப்பட்ட மிருகங்களையே பரிமாறி வருகின்றன. இது இந்து முறைப்படி தவறானதாகும்.

   2007இல் சீக்கிய அமைப்புகள் மெக்டொனால்ட் போன்ற கடைகளில் சீக்கியர்கள் உணவு வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியது. ஏனெனில் அந்த கடைகளில் ஹலால் முறையில் வெட்டப்பட்ட கறிகளையே வினியோகம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியது.

   இந்த செய்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ், Jalandhar, October 7, 2003 இதழில் Jhatka vs halal: Sikh body raises meaty issue என்ற தலைப்பிட்ட பகுதியில் காணலாம்.

   ஐரொப்பாவிலும் பல நாடுகளிலும் ஜட்கா என்றும் ஹலால் என்றும் பிரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்கப்படுகின்றன. அமெரிக்காவில் பல இந்துக்கள் ஜட்கா மாமிசத்தை வாங்குகிறார்கள்.

   ஹலால் மூலம் கொல்லப்படும் மிருகங்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பது ஹலால் முறையில் வெட்டப்படும் மிருகத்தை பார்த்தாலே தெரியும். மன தைரியமுள்ளவர்கள் இங்கே வீடியோவை பார்க்கலாம்.
   ..

   நன்றி!!

   Delete
 5. http://www.mirror.lk/news/5366-bodu-bala-sena-gives-ultimatum-to-ban-halal-certification

  Bodu Bala Sena gives ultimatum to Ban Halal certification
  Published on Monday, 18 February 2013 08:08
  (Mirror) – The Bodu Bala Sena General Secretary, Galaboda Aththe Gnanasara Thero yesterday gave an ultimatum to the government to ban Halal certification by March 31st.

  ‘Don’t make us take the law into our own hands,’the monk said, pledging to commence a relentless anti-halal campaign until the Government announced the ban.

  He was addressing the rally yesterday(17)held in Maharagama town. The whole town was decked with Buddhsit flags.

  More than 1300 Buddhist monks and a gathering of 15,000 people attended the meeting, Mr, Dintha Vthanage, a member of the organization told the ‘ Mirror’.

  The organization also unveiled what they called a ‘historic’ Maharagama Declaration, a 10 point resolution that seeks to impose a ban on halal certified foods, sending Lankan women to the Middle East, mosque-building with Middle Eastern funds and certain birth control methods that they claimed were aimed at stunting the Sinhalese population.

  It was alleged that 80,000 Sri Lankan migrant workers in the Middle East had been converted to Islam and claimed that several organizations operating in Sri Lanka were receiving Middle Eastern funding to convert Buddhists in the island.

  ‘From today onwards, each of you must become an unofficial civilian police force against Muslim extremism. These so-called democrats are destroying the Sinhala race,’Gnanasara Thero urged the crowds, who roared in response.

  He said pluralistic values had robbed the Sinhala people of money, jobs and enterprise. “This is a Sinhala country; there is a global principle that minorities must reside in a country in a manner that does not threaten the majority race and its identity’.

  Meanwhile, Crowds leaving the Bodu Bala Sena rally reacted angrily to a three member BBC film crew shooting in front of a Muslim-owned clothing store in Maharagama last evening and threatened them with violence, with police officers at the scene siding with the mob, crew members said.

  Heeding the advice of the mob police barricaded the crew and prevented their car from leaving the site of the commotion, BBC Sri Lanka Correspondent Charles Haviland said. “The police stopped our car from leaving until a police superior came and dispersed the mob and let us go,” Haviland said.

  Haviland said the BBC’s crew’s local members were verbally abused and that the mob behaviour was unsurprising but the conduct of the police had been extremely disturbing.

  Meanwhile, a reporter from the Navamini newspaper, a Muslim publication covering the Bodu Bala Sena rally was harassed by the crowds and handed over to the Maharagama police at 4 p.m., the newspaper said. Police detained the reporter until 8:30 p.m. before releasing him.( source FT)

  ReplyDelete
 6. //வஹாபிகளின் சவுதிமயமாக்கல் பிரச்சாரம்(உண்மையான ஹி ஹி) சுயமரியாதை கொண்ட எவராலும் விமர்சிக்கப்படும்,எதிர்க்கப்படும் என்பது உஅலக் அள்வில் நிகழும் செயல்//
  சவூதி அரேபியாவாக மாற்றுவது என்று இவர்கள் மதவெறி பிடித்தலைந்தால் சொந்த நாட்டுகாரன் என்ன சும்மாவா இருப்பான்.அது தான் இவர்கள் உள்ள நாடுகளில் இவர்களை பற்றிய அபிப்பிராயங்களை பார்க்கிறோமே.சவூதி அரேபியாமயமாக்கலுடன் தாலிபான் அல்கெய்தாவின் மீது அளவற்ற பாசமும் கொண்டுள்ளார்கள் என்பதை விஷ்வரூப படதிற்க்கு இவர்கள் தடை வேண்டி அஜராகம் செய்தபோதே தெளிவாகிவிட்டது.
  கழுத்தை அறுத்து விலங்கினை கொடூரமாக துடிக்க துடிக்க கொல்வது ஹலால்.
  கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்,கழுத்தை அறுத்து மனிதனை கொல்வது ஷரியா.
  பர்தா இப்படி அரபுகாரன் ஏன் தான் இவ்வளவு கொடுமையாக சிந்திக்கிறான்.

  ReplyDelete
 7. சவூதி மன்னர் செலுத்திய இரத்தப்பணம் - இந்திய கொலைக்குற்றவாளி விடுதலை!

  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தொன்றில் ஒன்பது ஆட்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஏழாண்டுகள் சிறையில் வாடிய இந்திய வாகன ஓட்டி ஒருவருக்காக சவூதி மன்னரே முன்வந்து சுமார் 653,000 சவூதி ரியால்கள் குருதிப்பணம் செலுத்தியதால் அந்த இந்தியர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

  கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சலீம் பாஷா, சவூதியின் தெற்குப் பிராந்தியமான கமீஸ் முஷைத் என்னும் நகருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஓட்டுநர் பணிக்கு வந்தார். கட்டுமான கற்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணி செய்த அவருடைய வாழ்வில் அந்த விபத்து ஒரு திருப்பு முனையானது. டிராக்டர் ட்ரெய்லர் ஓட்டிய பாஷா, நெடுஞ்சாலையில் மினி வேன் ஒன்றுடன் பிப் 11, 2006 அன்று மோதியதில், எட்டு சவூதி பெண் ஆசிரியைகளும், ஒரு எகிப்திய வாகன ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாஷா மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டு பாஷா சிறை வைக்கப்பட்டார்.

  திட்டமிடாமல் விபத்தாக நிகழ்ந்த மரணங்கள் என்பதால், குருதிப் பணம் கொடுத்தால் பாஷா விடுதலை செய்யப்படலாம் என்ற நிலை. மாதச் சம்பளம் சவூதி ரியால்கள் 1,200 மட்டுமே பெற இந்தியாவிலிருந்து கடல் கடந்த பாஷாவுக்கு இது மிகவும் மாபெரும் தொகை. என்ன செய்வது? பாஷாவுக்கு யார் உதவ முன்வருவர் என்று காலம் கழிந்து வந்த நிலையில் எதிர்பாரா திருப்பமாக, சவுதி மன்னர் அப்துல்லாஹ்வே அந்தக் குருதிப் பணம் 653,000 ரியால்களையும் செலுத்தி பாஷா விடுதலை ஆக வழி கோலியுள்ளார். பாஷாவின் விடுதலைக்கு முயற்சி செய்த சக இந்தியரான சமூக சேவகர் அஷ்ரஃப் குட்டிச்செல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

  விடுதலை அடைந்த பாஷா கண்ணில் நீர் மல்க தனது விடுதலைக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், உடனடியாக மக்கா சென்று உம்ராஹ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றி தனது விடுதலைக்கு உதவிய மன்னருக்காகப் பிரார்த்தித்துக் கொண்டுள்ளார்.

  "விபத்து நடந்தால் தப்பி ஓடாமலும், உண்மையை ஒப்புக்கொள்வதும்,குடித்துவிட்டு வாகனம் ஓட்டாமலிருப்பதும், குருதிப் பணம் தந்து விடுதலைப்பெற வழி வகுக்கும் " என்றார் சலீம் பாஷா. விடுதலையான பாஷா விரைவில் பெங்களூரு திரும்ப உள்ளார்.

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,

   விபத்து, கொலை வித்தியாசம் தெரியாத ஒரு நாடு, அதுக்கு ஒரு சட்டம், அதுக்கு ஒரு கோமாளி இராசா......

   அதனையும் புல்லரிக்கும் நீங்கள்!!!!!!!!!

   2004ல் விபத்து 8 வருடம் சிறையில் கழித்தாயிற்று,வேறு எந்த நாடாக இருப்பினும் இத்தனை வருடம் சிறை கூட கிடைத்து இருக்காது!!

   சவுதி பற்றி அனைவரும் விமர்சித்து கிழிப்பதால் நானும் நல்லவந்தேன் எனக் காட்டும் வேடமே இது!!

   ஹி ஹி ஒருவேளை கோமாளி இராசா பணம் கட்டாவிட்டால் அவன் கதி அதோ கதியா!!!

   சவுதி ஷரியா சரியில்லை என்பது மீண்டும் நிரூபணம்!!

   சரி அது என்ன 653,000 ரியால் கண்க்கு? எப்பூடீ!!!

   நம் நாட்டில் அண்ணா,காந்தி பிறந்த நாளுக்கு விடுதலை செய்வது போல் விட்டுவிடுகிறோம் என சொல்லாமல் , இராசா பணம் கொடுத்து,அப்புறம் சலீம் உம்ரா போய் .......போங்கப்பா உங்க நாடகம்!!

   ***
   ஃபய்ஹான் அல் ஹம்டிக்கு மரண தண்டனை கொடுக்கா விட்டால், அண்ணன் சொன்ன பலகீனமான ஹதிது அவரின் பொய்களின் வரிசையில் சேர்ந்து விடும்!!

   ஓரின புணர்வு& கொலை செய்த கோமாளி இளவரசனை சவுதி கூட்டிக் கொண்டு வந்து என்ன செய்வார்கள்? அண்ணனிடம் கேட்டு சொல்லவும்!!

   http://news.iafrica.com/worldnews/840922.html

   A gay Saudi prince jailed for life in Britain for murdering his servant is to serve the rest of his sentence in his home country, a British government source said.

   Prince Saud bin Abdulaziz Bin Nasir, a grandson of Saudi Arabia's King Abdullah II, was jailed in 2010 for killing Bandar Abdullah Abdulaziz in a London hotel after subjecting him to a "sadistic" campaign of violence and sexual abuse.

   The source confirmed that British Justice Secretary Chris Grayling has approved the 36-year-old prince's transfer to a jail in Saudi Arabia.

   நன்றி!!!

   Delete
  2. சார்வாகன் இங்கே 8உயிர்களின் மதிப்பு 9 கோடியா ? அல்லது ஒரு உயிரின் மதிப்பு 9 கோடியா ?என்ற கணக்கை ஞாபகப் படுத்துகிறேன் .
   அண்ணா ,காந்தி பிறந்த நாளில் அரசியல் செல்வாக்குள்ள கொடும் குற்றவாளிகள் மட்டுமே விடுதலையாகி அடுத்த குற்றம் செய்கிறார்கள் .விபத்துகளில் கொல்லப்பட்டால் யாரும் கொலை தணடனை பெறுவதில்லை மன்னித்து விடுதலை செய்யப்படுகின்றனர் இங்கு இன்சுரன்ஸ் நிறுவனம் இறந்தவருக்கு பணம் வழங்குகிறது .சவுதியில் இன்சுரன்ஸ் இல்லாமல் அரசு பணம் வழங்குகிறது

   Delete
  3. சகோ இப்பூ,

   இந்த மன்னிப்பு,இரத்த்ப் பணம் என்பது முட்டாள் த்னம்,ஏமாற்றுவேலை என்பதில் நமக்கு ஐயம் இல்லை.

   ஒரு நாகரிக நாட்டின் சட்டம் சட்டம், குற்றம் சார்ந்து,சூழல் சார்ந்து, இது போன்ற முந்தைய வழக்கு சார்ந்து தண்டனை அவ்வள்வுதான்!!

   பண்க்காரனின் கருணையில் ஏழை வாழ்வதை ,பிழைப்பதை மத்வாதிகள் நியாயப் படுத்துவது எப்போதும் நடப்பதுதானே!!

   சவுதியில் இன்சுரன்ஸ், மர்க்க விரோத வட்டி உண்டு!!

   http://www.sicci-ksa.com/   E-Insurance
   Protection Insurance
   Protection & Savings
   Child Benefit Insurance
   Cash Back Insurance

   Your Valuable Possessions in life - home, business, assets, health...are exposed to various hazards. Also, an untoward incident can cause immense financial stress. We safeguard your health and assets with out suite of non-life insurance products. Thereby enabling you to tide over financial loss.

   http://forum.lowyat.net/topic/1019824/all

   AL Rajhi Personal loan latest interest rate


   loan size is 5 to 8 times of ur basic salary.
   7.99% per anum for 2-5yr repayment,0.67% monthly
   11.99% per annum for 6-7yr repayment
   flat rate

   இதுக்கு எதிராக யாரும் போராட முடியாது!!.

   கடவுள் என்பது காசுக்கு பின்னால் என்பதே உண்மை!!

   நன்றி!!!

   Delete
 8. சகோ, தமிழக திராவிட பகுத்தறிவாளர்களை ஏன் ஹலாலை பகுத்தறியவில்லை.

  ReplyDelete
 9. சகோ,தமிழக திராவிட பகுத்தறிவாளர்களை ஏன் ஹலாலை பகுத்தறியவில்லை.

  ReplyDelete
 10. ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரொடெலியொ செலெஸ்டினொ லானுசா என்ற கிறித்தவர், முஹம்மத் பின் ஸைத் அல் கத்தானி என்ற அரேபியரை விரோதம் கொண்டு திட்டமிட்டு 2000 ஆம் ஆண்டில் கொலை செய்த குற்றம் 2002 ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு, 3,000,000 சவூதி ரியால் ( சுமார்.... நாலேகால் கோடி ரூபாய்..!) குறுதிப்பணமாக கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு தர வேண்டும் என்றும் அல்லது மரண தண்டனையை ஏற்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது..!

  உடனே, ஃபிலிப்பைன்ஸ் நாட்டினர் சவூதி கோர்ட்டில் அவகாசம் கோரிவிட்டு... சவூதியிலும் தனது நாட்டிலும் இதற்கான தோகையை பம்பரமாக சுற்றி வசூலிக்க ஆரம்பித்தனர். பத்து வருஷமாக வசூலித்தும் சொத்தை எல்லாம் வித்தும் அவர்கள் சேர்த்தது 700,000 ரியால்தான். (சுமார் ஒரு கோடி ரூபாய்)

  இப்போது, சவூதி அரசிடம் கொலை குற்றவாளியின் தாய், பிலிப்பைனின் சவூதி அரேபிய தூதரகம் மூலம்... இந்த உதவி செய்ய கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற சவூதி மன்னர் பாதிக்கப்பட்ட சவூதி குடும்பத்திடம் பேசி அந்த பிலிப்பைணி செய்த கொலையை மன்னித்து விடுமாறு கோரிக்கை வைத்து, கொலைக்கு ஈடாக குறுதிப்பணத்தில் மீதி 2,300,000 சவூதி ரியாலை (இந்திய ரூபாயில் சுமார் மூன்றே கால் கோடிக்கும் மேல்) சவூதி அரசு மூலமாக கொடுத்து அந்த கிறித்தவரை மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற வைத்திருக்கிறார்.

  ஒரு பிலிப்பைணியை காப்பாற்றிய மன்னர் இலங்கை பெண்ணான ரிஷானா மரணத்தை மட்டும் விரும்புவாரா என்ன..? நாட்டை ஆளும் மன்னராக இருந்தால் கூட தலையிட முடியாத சட்டம் இஸ்லாமிய குற்றவியல் சட்டம். பாதிக்கப்பட்டவர்கள் குறுதிப்பணத்தை ஏற்று மன்னிக்காத வரை, மன்னர் உட்பட எவருக்கும் குற்றாவாளியின் தண்டனையில் தலையிட அனுமதி இல்லை. ரிஷானாவின் மரண தண்டனையை குறித்து கருத்திட்ட சகோதர சகோதரிகள் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   புல்லரிப்பது அருமை!!.

   தப்பு செய்தால் தண்டனை அவ்வளவுதான். இதில் மன்னிப்பு என்பது இருக்க கூடாது.

   இறைச்சட்டமா?? குறைச்சட்டமா? என்பதே நம் கேள்வி!!!

   பணம் எப்பூடீ கணக்கு பண்ணி உயிருக்கு விலை வைக்கிறார்கள் என்பதே கேள்வி!!

   அமீரகத்தில் ஒருவன் கொலைக்கு 5 கோடி, 17 பேர் தப்பினார்,

   சலீம் பாஷா விபத்தில் 9 பேர் பலி ,75 இலட்சம் இரத்தப் பணம், சலீம் தப்பினார்

   உயிருக்கு உயிர் இல்லையேல் பணம் பெற்று மன்னிப்பு என்பதற்கு சவுதி சட்டத்தில் விதிவிலக்கு உண்டா என்பதே நம் கேள்வி!!

   ஹி ஹி ஒன்று மட்டும் புரிகிறது. மக்கள் எதிர்ப்பு கண்டு கோமாளி சவுதி அரசனுக்கு தூக்கம் போய்விட்டது, எப்படியாவது நானும் நல்லவன் எனக் காட்ட முயற்சி செய்கிறார் என தெரிகிறது.

   இபின் சவுத் வம்சத்தினரை சவுதி ம்க்கள் ஓட ஓட விரட்டும் நாள் தொலைவில் இல்லை என்பதையே காட்டுகிறது!!   1.அரசன் அப்துல்லாவின் பேரன் இளவரசன் தனது ஓரினப் புணர்வு அடிமையை கொலை செய்த்வனை சவுதி கூட்டி வந்து என்ன செய்வார்கள் என்பதே நம் கேள்வி!!!

   2.மகளை சித்திரவதை செய்து கொன்ற ஃபய்ஹான் அல் ஹம்டிக்கு மரண தண்டனை வழங்கப்படுமா? என்பதே நம் கேள்வி


   நன்றி!!!

   Delete
 11. கழுத்தை அறுத்து கொடூரமாக துடிக்க துடிக்க கொல்வது ஒரு பக்கம் . ஆனால் அப்போது எதற்கு ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தணும்னு சகோக்களிடம் கேட்டிருந்தேன். இதுவரை பதிலேதும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. கசாப் புக்கு தூக்குதண்டனை அளித்த பொழுது இனிப்பு வழங்கவில்லையா?ஜெய்ஹிந்த் சொல்லவில்லையா?
   குற்றவாளிகள் கொல்லப்பட்டால் இறைவனை புகழ்கிறார்கள் அல்லாஹு அக்பர்

   Delete
 12. நீங்க எதுங்குங்க ஹலாலை எதிர்கிறீங்க என்ற கேள்விக்கு பொதுபலசேனா தலைவர் சொல்கிறார்.
  Why do we have to eat Halal? If they want to eat, sell them Halal food in a special area in the supermarkets. We don’t want to eat it. If this trend continues, one fine day, one would say that the Quran bans idol worship and that therefore we should bring them down.
  There is no extremism in our philosophy. We are not talking about the Muslim people. We are only telling them don’t impose your ideas on us. We don’t want them.

  ஹி ஹி ஹி
  islam will dominate the world
  அல்லாஹூ அக்பர்

  ReplyDelete
  Replies
  1. சகோ நரி,
   இதுதான் கெய்லான் ஜமாய‌த்தில் உலமாவின் ஹலால் சான்றிதழ் தளம்.

   http://www.halaal.acju.net/content/halaal-certification-process

   ஒரு மாமிசம் விற்கும்,ஏற்றுமதி நிறுவனம் ஹலால் சான்றிதழ் பெறும் முறை கூறுகிறார்கள் பாருங்கள்.


   அப்புறம் மாமிச தயாரிப்பு நிறுவன‌த்தில் ஒரு முஸ்லிம் ஆவது பணி புரிந்து ,அதன் மாமிச அறுப்பு முறைகளை செய்ய வேண்டுமாம்.

   இப்போது பிரச்சினை புரிந்ததா!!!

   பிராமணாள் மெஸ் எதிர்க்கும் திராவிட பகுத்தறிவாளர்களுக்கு ஹலால் ஆச்சாரம் தெரியாது,புரியாது!!


   நன்றி!!!

   Delete
  2. சார்வாகன் ///பிராமணாள் மெஸ் எதிர்க்கும் திராவிட பகுத்தறிவாளர்களுக்கு ஹலால் ஆச்சாரம் தெரியாது,புரியாது!!///

   பிராமணாள் கபே யில் தலித்கள் நுழையமுடியாது .ஆனால் சக்கிலியர் முஸ்லிம் ஆனாலும் அவர் அறுத்தாலும் ஹலாலே .இன்னும் முஸ்லிம்கள் முதல் அறுப்பை மட்டுமே செய்கின்றனர் மற்றபடி தோலுரித்து இறைச்சி துண்டுகள் வெட்டும் வரை மற்ற சாதி ஹிந்துக்களும் தலித்களுமே செய்துவருகின்றனர் சாறு அதனால் உங்க பப்பு திராவிட பகுத்தறிவாளர்களிடம் வேகாது

   Delete
 13. அப்சல் குருவுக்குரிய தண்டணை வழங்கபட்டது மனவருத்தமா? ஐதராபாத் தில்சுக் நகரில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்து 10 பேர் கொல்லபட்டனர் பலர் காயம் சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.

  ReplyDelete
  Replies
  1. நரேந்திர மோடி தனது பிரதமர் வேட்பாளருக்கான தேர்தல் யுக்தியை ஹைதராபாத்தில் துவங்கிவிட்டார். அப்சல்குருவை தூக்கில் போட அவசரப்படுத்தியதே அதை காரணம் காட்டி குண்டுவைக்கவே சங்கபரிவார்கள் திட்டம் .
   ஹைதராபாத்தை தேர்ந்தெடுத்தது ஒவைசி கட்சியை காரணம் காட்டிக்கொள்ளலாம் என்பதால் .
   இந்தியன் முஜாஹிதின் அமைப்புக்கு மீடியாக்கள் ஒய்வு கொடுத்துள்ளன

   Delete
  2. ஆகவே ஒரு எந்த இஸ்லாமியர்களும் இந்த குண்டு வெடிப்பு காரணமாக கைது செய்யபட கூடாது அப்படி கைது செய்யபட்டாலும் தண்டணை எக்காரணம் கொண்டும் வழங்கபட கூடாது என்று அருந்ததிராய் அம்மையார் நற்பணி மன்றம் சார்பாக வேண்டிக்கிறேன்.

   Delete
 14. அண்ணா, அந்த பொதுபல சேனவுக்கு மறைமுக அரச ஆதரவு உண்டு என்று ஒருஇடத்தில் படித்தேன்! பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்று?

  ReplyDelete
  Replies
  1. சகோ மணி,
   இராஜபக்சேவுக்கு நேரம் சரியில்லை. எல்லாப் பக்கத்திலும் இருந்தும் சிக்கல்,அதில் இது ஒன்று பார்க்க்லாம்.
   நன்றி!!

   Delete
 15. நான் கடந்த வாரம் இலங்கையில் இருந்திருந்தேன்.
  Nolimit என்பது தெற்கில் உள்ள மிகப்பிரபலமான ஆடைக்கடைத்தொடர். முஸ்லீம்களுக்கு சொந்தமானது.
  முக்கியமாக வேலை செய்பவர்களில் 80% மேல் முஸ்லீம்கள்.
  முன்னரெல்லாம் கூட்டம் அள்ளும் எந்த நாட்களிலுமே.
  ஆனால் இப்போது அங்கே கூட்டம் மிகவும் குறைவு.
  இலங்கையில் ஓடிற்றிங் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார் , சென்ற மாத்தில் மட்டும்
  அவர்களின் லாபத்தில் 5 கோடி வீழ்ச்சியாம். நம்ப முடியவில்லை . ஆனால் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.
  kandy என்னும் இன்னுமொரு ஆடை விற்பனை நிலையம், சிங்களவருக்கு சொந்தமானதுதான் இப்போது கொழும்பில்
  பிரபலமாகி வருகிறது.
  அத்துடன் ஓசியன் லங்கா என்னும் ஆடைத்தொழிற்ச்சாலையில் வேலை செய்யும் தமிழ் நண்பர் ஒருவர் சொல்லியுருந்தார். அங்கே இப்போது வெள்ளிக்கிழமைகளில் மதியத்திற்கு பன்றி இறைச்சி வினியோகிப்பதாக.
  அத்துடன் அங்கே ஒர் முஸ்லீம் முதியவர் சிற்றூண்டி விற்க பின்னேரங்களில் வருவதாகவும், முன்னர் தினமும் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்பவர் இப்போது 500 ரூபாவே தாண்ட முடியாமல் இருப்பதாகவும்.
  எனக்கென்னமோ பொது பால சேன வெற்றி பெற்று விட்டது போலவே தெரிகிறது

  ReplyDelete
 16. மாத்தியோசி மணி மணி
  மறை முகமாக ஒன்றுமல்ல வெளிப்படையாகவே உள்ளது.
  கொழும்புக்கு ஒருக்க போய் வாருங்கள் வடிவாய் தெரியும்.
  அதை விட கொழும்பில் நின்ற போது ஆங்கில பேப்பர் ஒன்றி வாசித்தது,
  இலங்கையில் முஸ்லீம் சனத்தொகை அதிகரிப்பதை யாரோ ஓர் சிங்கள் அமைச்சர் சுட்டிக்காட்டியதாகவும்,
  அதை அமைச்சர் ரவூப் கக்கிம் ஒத்துக்கொண்டு , முஸ்லீம் பொண்களின் திருமண வயதை அதிகரிப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் எழுதியிருந்த்து.

  அத்தோடு யாரோ ஓர் அமைச்சர் கலால் உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு அமைச்சர் பவுசி கலாலை விரும்பாவிட்டால் அதை உண்ண வேண்டான் என்று தெரிவித்ததாகவும், பின்னர் முஸ்லீம்கள் விஸ்வரூபத்தை ஏதிர்த்த போது அதே சிங்கள அமைச்சர் , முஸ்லீம்கள் விரும்பாவிடில் அந்த குறிப்பிட்ட காட்சிகளுக்கு கண்களை மூடிக்கொண்டிருக்கும்படி தெரிவித்ததாகவும் அறியக்கூடியதாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ பாக்கி

   Delete
  2. // சிங்கள அமைச்சர் , முஸ்லீம்கள் விரும்பாவிடில் அந்த குறிப்பிட்ட காட்சிகளுக்கு கண்களை மூடிக்கொண்டிருக்கும்படி தெரிவித்ததாகவும் அறியக்கூடியதாக இருந்தது.//

   தமிழக ஜெயலலிதாவும் 24 அமைப்புகளிடம் தெரிவித்திருக்க வேண்டிய விடயம்.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. வேகநரி ,தமிழர்களையும் நாங்கள் கொலை செய்து தள்ளுவோம் ,இந்த செய்திகள் உங்களுக்கு படிக்க பிடிக்கவில்லையெனில் ,அந்த செய்திகளை படிக்காமல் இருந்து கொள்ளுங்கள் என்று ராஜபக்சே சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

   Delete
  5. இப்பிரஹிம் சாயிக்மொஹமெட்,
   தமிழர்களையும் நாங்கள் கொலை செய்து தள்ளுவோம் இந்த செய்திகள் உங்களுக்கு படிக்க பிடிக்கவில்லையெனில் அந்த செய்திகளை படிக்காமல் இருந்து கொள்ளுங்கள் என்பதிற்க்கும் விஸ்வரூபம் என்ற படத்தில் வரும் காட்சி பிடிக்காவிட்டால் கண்ணை மூடிக் கொள்ளுங்கள் என்பதிற்க்கும் ஏதாவது தொடர்பு உண்டா? விஸ்வரூபம் படத்தில் இந்திய இஸ்லாமியர்கள் கொல்ல படவேண்டும் என்று எங்கே சொல்லியிருக்கு? ஆப்கானிஸ்தானில்தாலிபான் தலைவன் ஒருவன் கொல்லபட்டதிற்கு எங்களுக்கு என்ன வந்தது என்று சமீபத்தில் சொன்னீர்கள் தமிழனாக மனிதனாக சிந்திக்கிறீர்கள் என்று நினைத்தேன் இப்போ அரபு மதவாதியாக சிந்திக்கிறீர்கள்.

   Delete
 17. Peaceful coexistence more important than Halal-ACJU
  Friday, 22 February 2013 - 6:46 AM SL Time
  http://www.lankanewspapers.com/news/2013/2/81434_space.html

  ACJU pledges to protect ethnic harmony, vehemently denies charging high fees and will fully cooperate with Cabinet committee

  Companies with Halal certification were advised by Muslim religious leaders yesterday to limit Halal products to the Muslim community and make available the same product in a non-Halal format to others.
  The All Ceylon Jamiyyathul Ulama (ACJU), which is the pre-eminent Muslim religious organisation in Sri Lanka with over 3,000 Ulamas as members, has requested companies with Halal certification to make available two sets of the same product one Halal and one non-Halal. Understandably the non-Halal product will be available to non-Muslims while the Halal product will be bought by Muslims.

  The Jamiyyathul Ulama is also the organisation that issues Halal certification in Sri Lanka and has been in existence in 1924. They also rejected claims that the certification charged massive fees stating that the monthly income from Halal certification was only Rs. 150,000 out of which Rs. 130,000 are spent as administrative costs. All accounts of the ACJU have been audited and presented to relevant organisations and even publically released to media via advertisements, they said.

  The move comes after months of anti-Halal protests by the Bodu Bala Sena, which held massive rallies and called for the boycott of Halal products. The Bodu Bala Sena had demanded that the Halal Certification should be withdrawn by the end of March, ahead of the Sinhalese New Year festivities celebrated by millions of Buddhists.
  Since the Halal Certification has been misunderstood, the All Ceylon Jamiyyathul Ulama has decided to request the manufacturers who have already obtained the certification to confine the certification to the products offered for sale to the Muslim community only, said organisation President M.I.M. Rizwe.

  Recalling the history of Halal, Rizwe emphasised that the certification process was started to clarify the interpretation of Halal, maintain it for the Muslim population, and provide a standardisation mechanism that could be used to promote exports to Muslim countries. The voluntary nature of the certification was also reiterated.

  A Cabinet committee has also been appointed to look into the controversy and Rizwe insisted they would extend full cooperation and make any necessary compromise to maintain the peace and stability of Sri Lanka. Several rounds of talks have already been held and the ACJU members present at the press conference noted that they would make any compromise to ensure the sustained communal harmony of Sri Lanka.

  ACJU members explained that in all countries other than Singapore and Thailand, Halal certification is done without government overview. Even in Singapore and Thailand, certification is done with the involvement of Muslim intellectuals and community leaders, they pointed out, adding that there is no illegality in the current local system.

  When asked whether they would agree for Halal to come under a Government organisation, they noted that it could be done. The decision to call on businesses to make two products was arrived at after extensive discussions with Defence Secretary Gotabaya Rajapaksa, whom the ACJU thanked for his support.

  ReplyDelete