Wednesday, February 29, 2012

டார்வின் அறியாத இரகசியங்கள்:காணொளி


[டார்வின் வரைந்த பரிணாம் மரம்]

பொ.ஆ.1859ல் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் புத்தகம் வெளிவந்து 150+ ஆண்டுகள் ஆகின்றது.அவர் மேற்கொண்ட பயணம் ,ஆய்வுகளின் அடிப்படையில் வடிவமைத்த கொள்கையாக்கமே இப்போதைய அறிவியலின் ஏற்கப்பட்ட கொள்கையாக விள்ங்குகிறது. நம்முடைய கடந்த இரு பதிவுகள் பரிணமத்தின் மீது வைக்கப்பட்ட சில கேள்விகளுக்கு விடை அளித்தது.இக்காணொளியை நேற்று பார்த்த போது நாம் விவாதித்த பல விடயங்கள் இதில் விள்க்கப்பட்டு உள்ளது ஒரு மகிழ்வான் அதிர்ச்சியை கொடுத்த‌து.

டார்வின் ஏன் பல உயிரினங்கள் ஒரே மாதிரியாகவும்,கொஞ்சம் வித்தியாசத்தோடும்[different varieties] உள்ளன்,பல உயிரினங்கள் மடிந்தன,உயிரோடு இருக்கும் பல விலங்கினங்களும் இறந்த ஒரு[பல] விலங்கினம் போல் ஆனால்  சிறிய மாற்றத்தோடு உள்ளது என்பதை விள்க்க முயன்றார்.

டார்வினால் புவியியல் சூழலுக்கு ஏற்ப ஒரே உயிரினத்தின் வெவ்வேறு வகை விலங்குகள் உருவாவதையும் ,சூழலுக்கு ஏற்றவை மட்டும் வாழ்வதும்,மற்றவை மடிவதும்  அவதானிக்க முடிந்தது.நாய்கள்,மயில் போன்றவற்றின் செயற்கை இனவிருத்தி[selective breeding] முறைகள் பல்வேறு வகைகளை உருவாக்குவதையும் ஆய்வு செய்கிறார்.

பிறகு புவியியல் சூழல்,சூழலுக்கு ஏறற மாற்றங்கள்,உட‌ல் அமைப்புகள்,படிமங்கள் போன்ற்வற்ரை நன்கு அவ்தானித்தே தனது இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம் என்னும் கருத்தை வெளியிட்டார்.இது நடந்தது 150+ வருடங்களுக்கு முன்பு என்பதால் அவருக்கும் பரிணாமம் குறித்த பல் விடயங்கள் அறிய  இயலவில்லை.
அதில் சில‌

1. ஒரு உயிரின‌த்தின் பல் வேறு வகைகள் ஏன் உருவாகின்றன?


2. பரிணாம் செயலாக்கம் உண்மையில் எப்படி நடக்கிறது?

இந்த இரு கேள்விகளுக்கான் விடையை கடந்த பதிவு படித்த நண்பர்கள் அறிந்து இருக்க்லாம்.டார்வினுக்கு இந்த இரக்சியம் அப்போது தெரியாது!!!!!!!!!!!

இவை அறியாமலேயே அவரால் சரியாக கொள்கையாக்கம் வடிவமைக்க‌ முடிந்தது என்பது மிக ஆச்சர்யமான‌ விடயம்.. இக்காணொளி  மூலக்கூறு அறிவியலின் துணையோடு டார்வின் [சரியாக கணித்தாலும்] அறியாத நிரூபண்ங்களை அளிக்கிறது.

பரிணாம் அறிவியலாளர் சான் கேரல் காணொளியை தொகுத்து அளிக்கிறார்.
அருமையான காணொளி!!!!!!!!!!.
.கண்டு களியுங்கள்!!!!!!!!!!!!!.
http://ncse.com/news/2009/12/what-darwin-never-knew-005240

8 comments:

 1. இந்த காணொளி அருமையானது சகோ. நன்றி.

  ReplyDelete
 2. வாங்க சகோ குயிக்ஃபாக்ஸ்
  இக்காணொளியும் நான் பார்த்தவைகளிலேயே சிறந்த ஒன்று என்பேன்.நாம் கடந்த இரு பதிவுகளில் விவாதித்த எல்லாமே அருமையாக விள்க்கப்பட்டுள்ளது மிக ஆச்சர்யமான் ஒற்றுமை.
  கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 3. நண்பரே காணொளிக்கு நன்றி, முழுமையாக பார்த்துவிட்டு வருகிறேன்.

  தமிழ் History Channel-ல் Evolve என்ற நிகழ்ச்சிமூலம், பரிணாமத்தை அழகாக தமிழில் விளக்குகிறார்கள்.

  ReplyDelete
 4. நண்பரே,
  அருமையான காணொளி. டி.என்.ஏ பற்றி எளிதாகவும் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  ம்ம்ம்....கடைசியில் மனிதனை கோழியின் நிலைக்கு எடுத்து வந்துவிட்டார்கள். இறைவனின் மறுபடைப்பான மனிதனுக்கே இந்த நிலையா...ச்சே.

  ==================
  முக்கியமான விஷயம் உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. மாற்றம் என்பது ஒரு உயிரனித்திற்குள் தான் நடக்கும், ஒரு உயிரனம் வேறு ஒரு உயிரனம் ஆகாது...............நல்லா புரிஞ்சிக்கோங்க.... ஆதாராம் வேண்டுமா.

  புகாரி

  3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
  எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
  Volume :4 Book :60

  மனம் திருந்துங்கள்...அச்சம் கொள்ளுங்கள்...அத்தாட்சிகளின் பக்கம் சாயுங்கள்.

  ReplyDelete
 5. வாங்க நரேன்
  இக்காணொளி பார்க்கும் போது பரிணாம் குறித்து அறிய வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பது மட்டும் புரிந்தது.ஆகா அன்னைத் தமிழில் பரிணாஅம் பாடமா!.அருமை.ஒரு வழியாக உண்மையான‌ பகுத்தறிவு தமிழர்களுக்கு கிடைக்கிறது.தகவலுக்கு நன்றி.

  உங்களுக்கும் மத புத்தக்மோ ஃபோபியா வந்து விட்ட்டது.ஒரே மரத்து இள்நீரில் மருந்து கலக்கி இரவில் [ உணவுக்கு முன்] குடித்து பிறகு உணவு உண்டால் இம்மாதிரி கெட்ட கனவு,நினைப்பு எல்லாம் போய் நிம்மதியாக தூங்கலாம்.எதற்கும் தினமும் உயரத்தை அளந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

  அத்தாச்சிகளின் பக்கம் சாய்ந்தால் தர்ம அடிதான் விழும்.!!!!!!!!!!.அதுவும் பரிணாம் வளர்ச்சிக்கான தூண்டல்தான் என்று இப்போ புரியுது! ஹி ஹி ஹி

  ReplyDelete
 6. http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_28.html
  for this post mu comment
  ஸலாம் சுவனன்

  சவுதி பெண் நாசான்வின் மண்டல் ஆய்வுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்து நல்லதுதான்.ஒருமாதம் நாசாவில் பயிற்சி எடுத்து சவுதியில்தான் பணியாற்றுவார்.இம்மாதிரி குழுக்கள் உலக முழுதும் உண்டு.
  இருப்பினும் சவுதி பெண்களுக்கு இவர் முன்னுதரணம் என்பதில் மாற்ருக் கருத்து இருக்க முடியாது.

  இந்திய பெண்களில் இதே போல் சாதனையாளர்களான் கல்பனா சாவ்லாவை ஒப்பிட்டு இருந்தால் பதிவு நிச்சயம் பாராட்டப்பட் வேண்டிய ஒன்றுதான்.
  //பெண் விடுதலை என்று கூறி நாம் பெண்களை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம் என்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த செய்தியை பார்ப்போம்.

  1.ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

  2. சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வாசலில், மகளை கழுத்தறுத்து கொலைமுயற்சி செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது //


  நீங்கள் குறிப்பிட்ட இரு சம்பவங்களில் குறிப்பிட்ட பெண்களை ஒப்பிடிவது நாகரிகமாக் இல்லை இதே போல் இங்கேயே உங்கள் மதம் சார்ந்த குடும்பங்களில் நடக்கவே நடக்காது என கூற முடியுமா!.நல்லவன்,கெட்டவன்,விபச்சாரம்,கள்ளக்காதல் எல்லா குடும்பங்களிலும் நடக்கும்விடயமே. கணவன் வெளிநாட்டில் இருந்தால் வீட்டில் கேமராவை வைத்துக் கண்கானிக்க்லாமா என்ற விடயத்தையும் பி.ஜே தொலைக்காட்சியில் விவாதித்தார் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

  இன்னும் பல விடயங்கள் எ.கா தர முடியும் எனினும் நாகரிகமாகவே விவாதிப்பது நம் வழக்கம்.பத்வின் இறுதிப் பகுதிக்கு கண்டனங்கள்!!!!!!!!!!!!!!!!.

  ReplyDelete
 7. நண்பரே , மிக அருமையான காணொளி. அனைவருக்கும் புரியும் படி எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது.

  ReplyDelete
 8. வாங்க சகோ தமிழன் நல்மா?
  நாம் விள்க்குவது நம் போன்ற தேடல் உள்ள‌வர்களுக்கே!!!!.
  பரிணாமம் குறித்த விள்க்கங்கள்,விமர்சனங்களுக்கு பதில்கள் தொடரும்.

  நன்றி

  ReplyDelete