Thursday, February 16, 2012

மதச்சார்பின்மைக்கு எதிரான இரு பிரிட்டிஷ் இந்தியர்கள்!!!!!!!!!!


சில நாட்களுக்கு முன்பு புகழ்பெற்ற பரிணாம் அறிவியலாளரும்இறைமறுப்பாளருமான திரு ரிச்சர்ட் டாக்கின்ஸ் பிரிட்டனில் வாழும் பெரும்பான்மையினரின் மத நம்பிக்கைகள் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதன் மீது கிறித்துவ போதகர் திரு ஜைல்ஸ் ஃப்ரேசருடன் விவாதம் நடத்தினார்.விவாதம் பிரிட்டன் வாழ் மக்கள் அவர்களின் மதத்தை உணர்ந்து பின்பற்றுகிறார்களா என்ற விவாதத்தின் போது ஃப்ரேசர் கேட்ட டார்வினின் புத்தகத்தின் முழு பெயரை கூறாதது ஒரு பிரச்சினையாக ,இணைய முழுதும் விவாதிக்கப்பட்டது.நாம் இப்பதிவில் சொல்வது அது அல்ல.அந்த விவாதம் ஏன் நடந்தது,அதன் மீதாக என்ன நடக்கிறது நடக்கப் போகிறது என்பதை பற்றியே இப்பதிவு.

இதற்கு கொஞ்சம் ஐரோப்பிய வரலாறு அறிய வேண்டும்.. ஐரோப்பாவில் கிறித்தவம் பல் நூற்றாண்டுகளாக ஆட்சி செலுத்தியது.போப்பரசர் சொல்பவரே அரச்ராக் இருக்க முடியும்.இச்சூழலில் மத நிந்தனை என்ற பெயரில் பலர் கொல்லப் பட்டனர்.பல் போர்கள்,வன்முறைகள் என மதம் பெருமிதம் காக்க என்ற போர்வையில் நடத்த்டப்பட்டது.

யூதர்கள் தங்கள் மத நம்பிக்கைக்காக் கொன்று குவிக்கப்பட்டார்கள்.இப்போது யூதர்களுக்கு விரோத்மாக் இஸ்லாமிய நாடுகள் இருப்பது இஸ்ரேலின் தோற்றத்திற்கு பிறகே.அதற்கு முன் பிற பகுதிகளை விட ஆட்டோமான் பேரரசின் கீழ் உள்ள பல நாடுகளில் யூதர்கள்[ சில உரிமைகள் மறுக்கப்ப்ட்டாலும்] பாதுகாப்பாகவே வாழ்ந்து வந்தனர்.இது பற்றி இன்னொரு சம்யம் எழுதுவோம்.யூதர்களின் இரத்தம் தோய்ந்த வரலாறு அறிய விரும்புவோர் பா ராகவனின் நிலமெல்லாம் இரத்தம் படிக்கலாம்.இப்போது மீண்டும் ஐரோப்பாவிற்கு வருவோம்.

இது போன்ற காரணத்தினால்  மதத்தின் மீதே மக்களுக்கு வெறுப்பு வந்தது. பெரும்பாலான் ஐரோப்பிய நாடுகளில் மதம் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டது.மத சார்பற்ற அரசியல் சாசன சட்டமே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்திய‌ அரசியலமைப்பு சட்டமும் மாமேதை  அம்பேத்கார் அவ்ர்களின் தலைமையில்  இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டம் சார்ந்தே வடிவமைக்கப்பட்டது.

இப்போது ஐரோப்பாவில் இதனை மாற்ற சில முயற்சிகள் நடக்கின்றன‌..இதனை முன்னெடுப்பது கன்சர்வேட்டிவ் கட்சி எனினும் அதன் ஊதுகுழலாக செயல்படுவர்கள் இருவர் இந்திய துணக்கண்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ஆச்சர்யத்தை அளித்தது.. இப்போராட்டம் இங்கிலாந்தை மையமாக  வைத்தே முன்னெடுக்கப்படுவதால்  இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே ரிச்சர்ட் டாகின்ஸ் இங்கிலாந்தின் கிறித்தவ மத குருக்களோடு விவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்த விவாத காணொளிகள் கிடைக்கும் போது வெளியிடுவோம் என்றாலும் அந்த இரு இந்தியர்[பாகிஸ்தானி]யர்களை பற்றி இப்பதிவில் விவரம் அறியத் தருவோம்.

இங்கிலாந்து அரசியல் சட்டத்தில் இங்கிலாந்து கிறித்தவ சபைக்கு தனிப்ப்ட்ட இடம்,அதிகாரம் வழங்கப்பட வேண்டுமா என்னும் விவாதத்தை ஆரம்பித்து வைத்தவர்,ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அமைச்சரான திருமதி பேரன்னஸ்(சயீதா) வார்சி ஆவார்.திருமதி வார்சி பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்.தன் கணவர்,ஒரு பெண் குழந்தையோடு இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.முற்போக்கு முஸ்லிமாக[liberal Muslim] தன்னை அறிவித்துக் கொள்வதால் பல பிரிட்டன் வாழ் இஸ்லாமிய அரசியல் குழுக்களுக்கு இவரை பிடிக்காது.

கிறித்தவ‌ மேலாண்மைக் கட்சியான கன்சர்வேடிவ் இவ்ருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததும் தாங்கள் இதர சமூகங்களையும் அரவணைத்து செல்பவர்கள் என்று காட்டவே என எண்ணலாம்.[பா.ஜ.க வின் முக்தார் அப்பாஸ் நக்வி,ஷாநவாஸ்  ஹுசைன் ஞாபகத்திற்கு வந்தால் நாம் பொறுப்பு அல்ல]  

திருமதி வார்சி வாட்டிகன் சென்று போப்பரசரை சந்தித்து அங்கு அவர் ஆற்றிய உரையில் வலிமையான மசார்பின்மை[militant secularism] மத அடையாளங்களை ம(வெ)றுப்பதாக குற்றம் சாட்டினார்.மத அடையாளம் குறித்து ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்வதில் தவறில்லை.ஐரோப்பா தனது கிறித்தவ பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்வதில் தவறில்லை, மதம் எப்படி வலுகட்டாயமாக் திணிக்கப்பட்டது போல் இப்போது மதசார்பின்மையும் ஒவ்வொருவர் மேலும் திணிக்கப்படுகிறது. என்றார்
.  
http://sayeedawarsi.com/
மத சார்பின்மை மத்வாதிகளை கொடுமைப்படுத்துவதாக் கூறுகிறார்.அருமையாக் சொல்லிக் கொடுத்தபடி கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கையை பிரச்சாரம் செய்த அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்போவதில்லை.எனினும் பின்னூட்டங்களில் விவாதத்தின் போது சரி செய்வோம். இக்கருத்துகள் இந்துத்வவாதிகள்[வார்சி] கூறுவது போல் இந்து(கிறித்தவ) மத்ம் அடிப்படையிலேயே மத சார்பற்றது, பிற மதத்தவரையும் சரி சமாக நடத்தும் என்பது ஆச்சர்யமான் ஒற்றுமை.

மத்வாதிகளின் எதிரி இறைமறுப்பாளர்களின் மத சார்பின்மையே தவிர மத எதிர்ப்பு அல்ல‌ என்பது உறுதியாகி விட்டது. சுருக்கமாக் சொன்னால் எந்த மத்வாதியும் அவர்கள் பெரும்பான்மையாக் இருக்கும் போது மத ஆட்சியும்,சிறுபான்மையாக் இருந்தால் மத சார்பற்ற ஆட்சியும் விரும்புவர்.இத்னை கருத்தில் கொண்டே ஒரு சிறுபான்மையினரை கொண்டே பெரும்பான்மை மத வாத்திற்கு ஆதரவு பிரச்சாரம் செய்ய வைத்த கன்சர்வேட்டிவ் கட்சினரின் புத்திசாலித்தனம் அருமை.சரி இதன் பின் எழுந்த விமர்சன அலைகளை தவிர்க்கவே சில விவாதங்கள் ரிச்சர்ட் டாக்கின்ஸ் குழுவினரால் முன்னெடுக்கப்படுகின்றன.இன்னொரு விவாதம் கிறித்தவர் பிஷப் திரு மைக்கேல் நாஜிர் அலி அவர்களுடன் நடந்தது.இவர் இங்கிலாந்து கிறித்த்வ திருச்சபையின் 106வது பிஷப் ஆக ரோசஸ்டரில் 1994 முதல் பணியாற்றுகிரார்.இவர் வெள்ளையரல்லாத முதல் பிஷம்[ஆயர்] என்பது குறிப்பிடத்தக்கது.இவரும் நம் சகோதர நாடான பாகிஸ்தானை சேர்ந்தவர்தான்.எங்கெலாம்[அங்கேதான்!!!!!!] கிறித்தவ்ர்கள் பாதிக்கப்படுவதாக் நினைக்கிறாரோ அங்கெல்லாம் குரல் எழுப்புவதாக கூறுகிறார்.


இவர்  ரிச்சர்ட்  டாக்கின்சுடன் நடத்திய விவாதத்தில் யூதேய கிறித்தவ்[Judea christian identity] கலாச்சாரம்தான் இங்கிலாந்தை வழி நடத்துவதாக்வும்,அதன் அடையாளம் போற்றப்படவேண்டும் என்கிறார்.என்ன உண்மையிலேயே சொல்ல வருகிறார் என்பது என்க்கு புரிகிறது.உங்களுக்கும் புரிய்லாம்!!!!!!

http://michaelnazirali.com/
இதனை இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு செயலாக பார்க்க இயலாது.ஈரான் மீது அமெரிக்க+ ஐரோப்பிய‌ தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ள நிலையில் கிறித்தவ ஐரோப்பாவை கட்டமைக்கும் முயற்சி எதை நோக்கி செல்கிறது என்பது கவனத்திற்கு உரியது.


இதே போல் வரும் தேர்தலில் இறை மறுப்பு+மத சார்பின்மையால் இந்துத்வா பாதிக்கப்படுகிறது என்ற (பிடி)வாதம் எழும் வாய்ப்பு உள்ளது.ஒரு பெரும்பான்மை மத அடிப்படையிலான அரசுகள் இதர மதங்களுக்கு எவ்வளவு உரிமை தரும் என்பது வரலாற்றுரீதியாக அறிந்தே இருக்கிறோம்.இப்போது பெரும்பான்மை[கிறித்தவ] மதமே மதசார்பற்றது,இது கலாச்சாரம்,அடையாளம் என்று என்ன வேடம்,முகமூடி போட்டாலும் உண்மையை மறைக்க முடியாது.இழந்த அதிகாரத்தை மீட்க முயலும் ஐரோப்பிய வெள்ளையின மத்வாதிகளுக்கு பகடைக்காயாக இருஇந்திய துணைக்கண்டத்தை சேர்ந்த‌ சிறுபான்மையினர் இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.   உலக முழுதுமே மதம் என்பது அரசியலில் இருந்து விலக்கப்படவேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கும் ரிச்சர்ட் டாக்கிக்ன்ஸின் போராட்டத்தை ஆதரிப்போம்.இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் பலராலும் முன்னெடுக்கப் படவேண்டும் என்பதே நம் ஆசை!!!!!!!!!.


29 comments:

 1. சகோ ஆஸிக்
  டாக்கின்ஸ் சொன்ன கருத்துகளுக்கு அவ்ரே பொறுப்பு.நான் அல்ல.
  நான் ரிச்சர்ட் டாக்கின்ஸ்(யார்) சொல்லும் ஒவ்வோரு கருத்தும்,வார்த்தைகளும் அவை அப்படியே சரிதான் என வாதிட மாட்டேன்.

  சரி பல கிறித்தவர்களுக்கு புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் பெயரை(மத்தேயு) உடனே கூற முடியாதது போல் டாக்கின்ஸாலும் கூற இயலவில்லை.

  டாக்கின்ஸ்கு டார்வினின் கருத்துகள் நன்கு தெரியும் என்பதற்கு அத்தாட்சி [எழுதிய புத்தகங்கள்,பரிணாம்வியலில் முனைவர் பட்டம்,பல விவாதங்கள்]நிறைய உண்டு.அவர் கூறிய பரிணாம் விளக்கம் எங்கேனும் தவறு என்றால் அறியத் தாருங்கள்.

  பிரிட்டன் வாழ் கிறித்த்வர்கள் கிறித்தவ வேதம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பதை எப்படி உறுதி செய்வது என்பது பற்றி கூறுங்கள்.

  இதில் இருந்து வேறு எதுவும் கருத்து கொள்ள இயலாது.உங்களின் இப்பதிவிலேயே இஸ்லாமிய பதிவர்களுகிடையில் கூட சில கருத்து மாறுபாடுகள் இருக்கிறதல்லவா!.அதுபோல் டாக்கின்ஸின் கருத்தில் இருந்து சிறிது மாறுபடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். கிறித்தவ்ர்களுக்கு வேதம் தெரிவதை விட அந்நாட்டில் மத சார்பற்ற சட்டங்களே நீடிக்க வேண்டும்,மதம் அரசியல் கலப்பு கூடாது என்பதுதான் அவ்விவாதத்தின் சாரம்.

  அந்த விவாதம் ஏன் நடந்தது அதன் காரண் காரியங்கள் என்ன என்பது பற்றித்தான் இப்பதிவு!!!!!!!!!!!!

  ReplyDelete
 2. நண்பர் ஆஸிக்[எதிர்குரல்]
  தனது பதிவில் சொன்ன ஒரு விடயம்.
  /பரிணாமம் குறித்த கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்பதற்காக அவர்களை பரிணாமத்தை நம்பாதவர்கள் என்று சொல்லிட முடியுமா? சொல்லமுடியாது என்றால் டாகின்ஸ்சின் ஆய்வு முடிவும் அப்படித்தானே? - இது தான் நான் பதிவில் சொல்ல வந்த விசயம். இதனை நீங்கள் தொடவே இல்லை. /

  பரிணாமம் என்பது நம்புவதற்குறிய விடயம் அல்ல.இபோதைய அறிவியல் கொள்கை,ஒருவேளை தவ‌று என அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்ப்ட்டால் மட்டுமே காணாமல் போகும்.

  99% மக்களுக்கு இயற்கைத்தேர்வு என்பதன் முழு பரிமாண‌த்தை உணர்வது கடினமே!.பரிணாமம பற்றி அறியாதவ்ர்கள் எனில் அதனை கற்க முயற்சிக்க வேண்டும்.பரிணாம அற்வியலில் விமர்சனத்தின் ஒவ்வோரு கேள்விக்கும் பதில் உண்டு.அறியாமல் நம்புவது அறிவியலுக்கு ஏற்புடையது அல்ல.

  பரிணாமம் மதம் அல்ல,டார்வின் கடவுள் அல்ல,அவரின் புத்தகம் வேதம் அல்ல!!!!!!!!!.

  பரிணாமம் பற்றி அறியாமலேயே எதிர்ப்போரும் பலர் உண்டு.

  சுருக்கமாக சொல்லவேண்டும் எனில் பரிணாம் எதிர்ப்பும் மதங்களின் கொள்கை போல் ஆகிவிட்டது.

  பரிணாமம் அறியாத இறை மறுப்பாளரும் உண்டு.பரிணாமம் அறிவியல் கொள்கையாக ஏற்கும் ஆன்மீகவாதிகளும் உண்டு.

  ReplyDelete
 3. உங்கள் பதில் இருக்கிறது. ஆஷிக் அவர்களது கருத்துரைகள் எங்கேக? நீக்கிவிட்டீர்களா? ஏன்? இருந்தால் நன்றாக இருக்குமே?

  ReplyDelete
 4. பரிணாமத்தை ஏன் எதிர்க்கிறோம் என்றால் அதை நம்ப ஆரம்பித்து விட்டால் கடவுள் நம்பிக்கை, இறை அச்சம் அற்றவனாக மாறி விடுகிறான். அதற்காகத்தான். இல்லையென்றால் ஏன் இந்த வேலை எங்களுக்கு? பரிணாமம் டார்வின் வரைந்த புகை ஓவியம். அது கலையத்தான் போகிறது.

  ReplyDelete
 5. மதம், மார்க்கம் பிரச்சாரம் இவையல்ல. தீய குணங்கள் அழிய வேண்டும். எண்ணங்கள் சீர்பெற வேண்டும். மனிதன் நல்லவனாக மாற வேண்டும். இதுவே நமது நோக்கம். நீங்கள் கிறிஸ்தவத்தைக் குறித்து தவறான நோக்கம் கொண்டுள்ளீர்கள். நமது அறிவுக்கெட்டாத விஷயங்களை பற்றி(அதாவது கடவுள் குறித்த விஷயங்கள்) தவறாக பேசுவதைவிட மவுனமாக இருப்பதே நல்லது.

  ReplyDelete
 6. வாதமோ விவாதமோ என் நோக்கமல்ல. நான் அனுபவபூர்வமாக உணர்ந்த ஒரு மார்க்கத்தை இழிவாக பேசுதை தாங்க முடியவில்லை. அவ்வளவுதான். மற்றபடி யார்மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் கோபம் கிடையாது.

  ReplyDelete
 7. சகோ மத சார்பின்மை என்ற உயர் நோக்கம் கொண்டது உங்கள் பதிவு.ஆனால் மத சார்பின்மை கொண்ட இந்தியாவில் கடையநல்லூரில் இஸ்லாமை விமர்சித்தார் என்று ஒரு இஸ்லாமியர் மற்ற இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டுள்ளார். மத சார்பின்மையை மதவெறியர்கள் நல்லாவே அனுபவிக்கிறங்க. இஸ்லாமிய நாடாக இருந்தால் இஸ்லாமை விமர்சித்தவருக்கு கவுரவகொலை தண்டனை கிடைத்திருக்கும். அது மட்டும் தான் இங்கே செய்ய முடியல்ல. சில புரட்ச்சி செய்கிற மத சார்பின்மையை சேர்ந்தோர் இஸ்லா தவிர மற்ற மதங்களை போட்டுதாக்கி கொள்வார்கள். ஏன்னென்று கேட்டால் இஸ்லாமியர்களை புரட்ச்சிக்கு பயன்படுத்த முடியுமாம். புரட்ச்சி வந்தபின் நடைமுறைக்குதவாத முகமதுவின் சிந்தனைகளை தூக்கியெறிந்துவிட்டு புரட்சி சிந்தனைகளை ஏற்று கொள்வார்களாம்.
  திருமதி வார்சி மடம் இஸ்லாமில் இருந்து கொண்டே இஸ்லாமிய ஆணாக்கத்திற்கு சவாலாக பர்த்தா இல்லாமல் இருக்கிறாரே அதனால் அவர் மீது தனி மதிப்பு. வெளிநாடுகளுக்கு வந்த இஸ்லாமியர்கள் சிலர் குழப்பம் அடைந்து தெளிவுபெற்று மெல்ல மெல்ல தங்களது மதத்தைவிட்டு விலகும் போது அவர்களிடம் போய் மேற்குலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாக போகுது என்பவனே அரேபிய ஒறியினல் ஊதுகுழல்.

  ReplyDelete
 8. //நமது அறிவுக்கெட்டாத விஷயங்களை பற்றி(அதாவது கடவுள் குறித்த விஷயங்கள்) தவறாக பேசுவதைவிட மவுனமாக இருப்பதே நல்லது. //

  துரை டானியல் அவர்களின் அடைப்பான் கருத்திற்கு எனது கருத்து.

  அறிவுக்கு எட்டாத விசய்ங்கள் என்று எதுவுமேயில்லை.நமக்கு புலப்படாத உண்மைகள் பற்றிய தேடலும்,அதற்கான சூழலும் இல்லையென்பதோடு அறிவு பூர்வமான கருத்து வெளிப்பாடுகள் நம்மை வந்து அடைவதுமில்லை.அப்படியே வந்து அடைந்தாலும் பாரம்பரியமாக நம்பப்பட்டு வந்த எண்ணங்களை அவ்வளவு எளிதாக ம்னம் விட்டு விடுவதுமில்லை.

  மாற்று சிந்தனைகளை வரவேற்கவே மாட்டேன் என்ற பிற்போக்கு சிந்தனையாளர்களை தவிர இப்போதைய நிலையில் இல்லாவிட்டாலும் கூட என்றாவது ஒரு நாள் எல்லா மதங்களையும் கரை சேர்த்து விடலாம்.அதிலும் கிறுஸ்தவம் முந்திக்கொள்ளும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

  ReplyDelete
 9. வாங்க நண்பர் துரை டேனியல்
  நமக்கு எந்த மதத்தின் மீதும்,மதம் சார்ந்தவர்கள் எவர் மீதும் வெறுப்பு கிடையாது.மதங்கள் வரலாற்று ரீதியாக உண்மையா என்பதை விட மதம் என்பது அரசியலில் கலக்காமல் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடே உடையவன்.
  ***********
  இப்பதிவின் முதல் இரு பின்னூட்டங்கள் இது சகோ ஆஸிக் அவர்களின் இபோதைய பதிவுக்கு அங்கு நான் இட்ட பின்னூடங்களின் பிரதி.
  ************
  வரலாற்றின் ஊடாக பார்த்தால் மதத்தின் பெயரால் செய்யப்பட்ட கொடுமைகளை மதத்தின் மேல் சுமத்துவது நியாயம் இல்லை,அதே சமயம் நடந்த கொடுமைகளை மறப்பதோ நியாயப் படுத்துவதோ தவறு.

  பரிணாமம் என்பதன் சில தவறான் பயன்பாடுகள் குறித்து சகோ ஆஸிக்[எதிர்க்குரல்] தனது தளத்தில் பல கட்டுரைகள் இட்டுள்ளார்.அதனை நீங்கள் படியுங்கள்.எந்த ஒரு கொள்கையும் தவறாக் பயன்படுத்தப்படும் சாத்தியமும் உண்டு.அதனை தவிர்க்க வேண்டும் என்பதே நம் ஆசை.

  1.மதம்,பரிணாமம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல.

  2.பரிணாம‌ம் அறிவியல்ரீதியாக் மட்டுமே அதிகம் விமர்சிக்கப்பட வேண்டும்.பரிணாம ஆய்வாளர்கள் செய்த நிரூபிக்கப்பட்ட சில தவறுகள்,ஏமாற்று வேலைகளையும் வரலாற்றுரீதியான் உண்மைகள் என்று ஒத்துக் கொள்வதில் எனக்கு முரண்பாடு இல்லை.இதே நேர்மையை மதவாதிகளிடமும் எதிர்பார்க்கிறேன்.

  3.மதம் +புத்தகம் வரலாற்றுரீதியாகவே விமர்சிக்கப்பட வேண்டும்.தத்துவரீதியான் விள்க்கம் பின்பற்றுப‌வர்களுக்கு மட்டுமே,விமர்சக்ர்களுக்கு அல்ல.
  நன்றி

  ReplyDelete
 10. நண்பர் குயிக்ஃபாக்ஸ்

  பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போவது இல்லை.உலக் முழுதும் தங்கள் மதம் பரவும் என்று மத விள்ம்பரதாரிகள் அடித்துக் கூறுவது ஒரு நகைச்சுவை மட்டுமே.இப்படி பரவும் என்பது எங்கு குறிப்பிடப் பட்டுள்ளது என்று தெரியவில்லை.மக்களில் பல்ர் நரகத்திற்கு செல்வர்,சிலர் மட்டுமே சொர்க்கம் செல்வ்ர் என்றே புத்தகங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

  மதம் என்பது ஆன்மீகம் என்ற நிலை தாண்டி, கலாச்சாரம்,அடையாளம் என்ற பல் பரிமாணங்களை எடுத்ததினால்தான் நிலைக்க முடிகிறதே தவிர அது உண்மை என்பதால் அல்ல‌.

  ஒரு மதத்தவரிடையே கூட கருத்து குழப்பங்கள் பல பிரிவுகளை தோற்றுவிக்கிறது.ஒரே பிரிவு ஆட்களிலும், அரசியல் வேறுபாடுகள் என்று இருக்கும் போது உலக் முழுதும் ஒரே கொள்கை ,கோட்பாடு,சிந்தனை என்பது வரவே வராது.உலகம் தோன்றிய நாள் முதல் இப்படி நிகழ்ந்தது இல்லை.

  அவர்களை விமர்சிக்க நாம் கேட்பது சொல்லும் ஒரே ஒரு கருத்து புத்தகம் குறிப்பிடும் பல சம்பவங்களுக்கு பல‌ விடயங்களுக்கு வரலாற்று ஆதாரம் கிடையாது.ஆகவே விரும்பினால் புத்தகத்திற்கு வரலாற்று ரீதிதியான ஆதாரம் உண்டு என நிரூபிக்க வேண்டுகிறோம்.

  தத்துவ விள்க்கம் ,பரிணாம் எதிர்ப்பு மட்டும் மதத்தை உண்மையாக்கிவிடாது.
  நன்றி

  ReplyDelete
 11. நண்பர் இராஜநடராஜன்
  நான் சொல்ல வந்தத்டையும் நீங்களே சொல்லிவிட்ட்டிர்கள்.கிறித்தவம் எந்த கலாச்சாரத்தையும் சுவீகரிக்கும்,ஊடுருவும் என்பது மிக நிச்சயமான் உண்மை.

  கிறித்தவம் பரவியதற்கு கல்வி,மருத்துவம் முதலியவற்றில் மிஷனரிகள் ஆற்றிய தொண்டுதானே தவிர மதம் அறிந்து ,புரிந்து மாறியவர்கள் குறைவே!!!!!!!!

  நன்றி

  ReplyDelete
 12. @நண்பர் குயிக்ஃபாக்ஸ்
  வினவு கட்டுரை படியுங்கள்,துராப்ஷா விவகாரத்தை நன்கு அலசி இருக்கிறார்கள்.மதசார்பற்ற இந்தியாவிலேயே மத்வாதிகள் இவ்வளவு[ஊர்,சமூக‌ விலக்கம்+குடும்பத்தில் இருந்து பிரித்தல்] செய்ய முடியும் எனில் மத ஆட்சி நாடுகளில் ட்வீட் எழுதியதற்கு மரண தண்டனை என்பது பெரிய விடயம் இல்லை.
  முதலில் பொது சமூக சட்டம் கொண்டுவருதலே இம்மாதிரி குற்றங்களை தடுக்கும்.
  நன்றி

  ReplyDelete
 13. சகோ!, முன்னேறிநாடுகளில் கூட கிறிஸ்தவ மார்க்க பக்தி மிகுந்த அலெக்ஸ்சும்,ஜோஜ்சும் இருக்கிறார்கள்.அவர்கள் பரிணாமம் அறிவு சம்பத்தபட்ட விடயம், மதம் என்பது வேறு என்று பக்குவமாக புரிந்து கொள்ள தொடங்கியுள்ளார்கள். ஆனால் இந்த ஆசிய ஆபிரிக்க அலெக்ஸ்சும்,ஜோஜ்சும் தான் குழப்பமடைந்து மதவெறியர்களுடன் கைகோர்க்கவும் ரெடியாயிட்டாங்க.

  ReplyDelete
 14. @நண்பர் குயிக்ஃபாக்ஸ்
  ஒரு ஐரோப்பியனின் [1500+ வருட] கிறித்தவ புரிதல் என்பதும் ஆசிய,ஆப்பிரிக்கர்களின் [200+ வருட கிறித்தவ் புரிதலில் வித்தியாசப் படுவது இயல்பே.அவர்கள்[ஐரோப்பியர்கள்] மதத்தினால் ஏற்படும் அடக்குமுறை,அதிகாரவெறி,போர் முதலியவற்றால் பாதிக்கபட்டார்கள்.
  நம்மவர்களுக்கு கிறித்தவம் என்றால் பள்ளிக்கூடம், மருத்துவமனை,தேவாலயம் தாண்டிய அனுபவம் இல்லை.ஆகவே இப்படி கொஞ்சம் அனுபவப் பட்டால் புரிந்து கொள்வார்கள்.
  நன்றி

  ReplyDelete
 15. நண்பர் சார்வாகன்,

  இந்தப் பதிவை விவாதித்தால் பல பரிணாமங்கள் வரும்.

  But first things first, டாகிண்ஸ், டார்வினின் புத்தகத்தின் பெயரை சரியாக தெரியாது என்று மூமின் ஆஷிக் பெருமைப் பட்டுக்கொள்கிறார். அவருடைய சந்தோஷத்தை கெடுப்பானேன். ஹா...ஹா...

  டாகின்ஸ் போன்ற பெரிய மேதாவிகளுக்கு சில நேரங்களின் ஞாபக மறதி ஏற்படுவதுண்டு, உதாரணத்திற்கு ஐண்ஸ்டீனை எடுத்தால் புரியும். -:) கருத்தை புரிந்தால் தலைப்பு மறதி என்பது நியதிதான். கருத்தை புரியாமல் ஓதி ஓதி மனப்பாடம் செய்து வாய்க்கு வந்தப்படி தப்பு தப்பாக கட கட என்று உளறுவதற்க்கு அவர் என்ன மருத்துவர் ஜாகிர் நாயக்கா??? -:)

  இருந்தாலும் நமது அல்லா பெரிய சதிகாரர்தான்( திட்டமிடுபவர்தான்) ஜாக்கேட் சரியாக பொருந்துகிறதா?

  சீரியஸ் மேட்டருக்கு வருவோம்....

  மதம் பற்றி நடைமுறை சாத்தியத்தை பார்த்தால்--மதம் வேண்டும் என்பவருக்கு எவ்வளவு உரிமைகள் உள்ளதோ அது தேவை இல்லை என்பதற்கு அவ்வளவு உரிமைகள் உண்டு.

  ஆனால் மதத்தின் இடம் எல்லை என்பது எதுவரை என்ற வரையறுத்தல் முக்கியம். அது தனிமனித எல்லைக்குள் இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் பொதுவெளியில் நுழைந்தால் - பல மதங்கள் உள்ள நிலையில்- மத போட்டிகள் கண்டிப்பாக எழும். மதவாதிகள் உருவாவதற்கு அதுதான் முதல் காரணியாக இருக்கும்.

  அதே வேளையில், அறிவியல் நோக்கம் கொண்டு மதம் அறிவியல் அல்ல என்று கூறுவதற்கும் உரிமை உண்டு. அனைத்தையும் scientific spirit உடன் நோக்க வேண்டும் மற்றும் மதநம்பிக்கையினால் அமையும் செயல்களின் தீமைகளை எடுத்துச் சொல்லவும் கடமைப் பட்டுள்ளார்கள். ஏனென்றால் உலகில் ஒவ்வொரு செயலும் அறிவியல் ஆக்கிரமித்து கொண்டிருக்கும் வேளையில், அது அவசியமாகிறது.

  ஆனால் இது எதிர்க்கொள்வது, மனித சரித்திரத்துலும், மனித மன வளர்ச்சியிலும், மனித சிந்தனையில் சமுதாயத்தில் குடும்பத்தில் இன்னும் அனைத்திலும் ஊறி திளைத்த மதம் + கடவுள் omnipresence -:) யைத் தான். இந்த ‘துல்கர்ணைன் சுவரை” முட்டி மோதி தக்ர்ப்பது கடினம்தான்

  .....contd.

  ReplyDelete
 16. Baroness சயீதாவார்ஸி ( Baroness பெயருக்கு ஒரு sexy effect இருக்கின்றது) மற்றும் இந்துத்துவாதிகள் வகையில் சொல்லப்படும்- பாவாடை சாமியார்- நஸீர அலி- அவர்களின் கூற்று, என்னைப் பொறுத்தவரை old wine in new bottle தான்.

  1) இது pagan மதங்கள் எல்லாம் உண்மையல்ல, சரியானதல்ல, கலாச்சாரமல்ல, காட்டுமிராண்டித்தனம்- அதனை பின்பற்றும் மக்களை அதனிடமிருந்து விடுப்பட்டு உண்மையான கடவுளை அறிய வேண்டும்.
  2) white man's burden கொள்கைப்படி காலணியாக்கம் செய்தல்.
  இந்த இரு அடிப்படை கொள்கையின் மூலம் உச்சகட்ட கொடூரம் அரங்கேற்றப்பட்ட இடங்கள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் தான்.

  மேலும் ஐரோப்பா சரித்தரத்தில் மதச்சார்பின்மை என்பதற்கு எளிதான விளக்கும், அரசியல்வாதிகல் துளிர்த்தெழுந்த காலத்தில் அவர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்த நினைத்த மதச்சபைகளை அரசியல் பொதுவெளியிலிருந்து அகற்றியதுதான். அரசியல்வாதிகள் இறைமறுப்பாளர்களாக இருக்கவில்லை ஆனால் தங்கள் அதிகாரத்தில் மதவாதிகள் தலையிட விரும்பவில்லை.

  இப்போது அந்த நிலை ஒரு பாதுகாப்புதன்மை அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளதால், மதத்தை அரசியல் பொதுவெளியில் விட்டால் என்ன என்ற சிந்தனை மெல்ல எழுகின்றது.

  மேலும், Judea christian identity என்பது கிருத்துவ நாடுகளில் மட்டும்தான் முஸ்லிம்கள் சுதந்திரமாக இருக்கமுடியும் ஆனால் முஸ்லிம்கள் நாடுகளில் மற்றவர்கள் ஐந்தாம்தாரமாகத்தான் இருக்கமுடியும் என்ற அடிநாத எண்ணத்தை புகுத்தி எங்கள் கலாச்சாரம் மதம்தான் சிறந்தது என்கிறார்கள்.

  ReplyDelete
 17. @சார்வாகன்
  துராப்ஷா விவாகாரம் வந்தவுடன்- செங்கோடியும், பகுடுவும் தங்கள் தளங்களை முடிக்கியதற்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா.

  ReplyDelete
 18. நண்பர் நரேன்
  //துராப்ஷா விவாகாரம் வந்தவுடன்- செங்கோடியும், பகுடுவும் தங்கள் தளங்களை முடிக்கியதற்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா.//
  இது நம்க்கும் விடை தெரியா கேள்வி என்றாலும் ஜிட்டிஜனின் இப்பின்னூட்டம் மனிதாபிமானி பதிவில் இருந்து எடுத்தது.என்னமோ சொல்கிறார் .ஏதோ புரிவது போல் உள்ளது.
  http://manithaabimaani.blogspot.com/2012/02/blog-post_17.html
  1.
  ***************************************************************
  //~முஹம்மத் ஆஷிக் citizen of world~Feb 17, 2012 04:54 AM
  வினவு கும்பலில் ஒரு கடையநல்லூர் காரர்... (இந்த பிரச்சினைக்கு அப்புறம் சமீபத்தில் தன் அனைத்து இஸ்லாமிய எதிர்வெறி பிளாக்குகளையும் மூடியவர்) ஒருத்தர், சவூதி ஒஜர் கம்பனி இருக்ககூடிய சவூதி அரேபியாவில்தான் இருக்கார். சவூதியில் இருக்கும் அவருக்கு, சனிக்கிழமையே (ஜனவரி 28) அன்றைக்கே விஷயம் நல்லா தெரிஞ்சிருக்கு.. ஊரில் பிரச்சினை நடப்பது பற்றி. (ஆதாரம்:தோழர் செந்தோழன்ஷா மீது பொருளாதார தடை விதித்து அவர் வயிற்றிலடிக்கிறீர்களே) என்று வேறு ஒருவருக்கு பதில் அளிக்கையில் 'தஜ்ஜால் பிளாக்கில்' கமென்ட் போட்டு இருக்கார் அவர்...!//
  **************************************************
  அங்கு பின்னூட்டம் இட்டவர் தோழர் செங்கொடி!!!!!!!!!!!!!!
  http://iraiyillaislam.blogspot.com/2012/01/blog-post.html
  *************

  செங்கொடி said...
  நண்பர் அப்துல்லா,

  பொதுவெளியில் இருக்கும் எதையும் யாரும் விமர்சிக்கலாம். அதில் தவறிருந்தால், என்ன தவறு? எப்படி அது தவறு? எது சரி என்பதை நீங்கள் விளக்கலாம். மாறாக கம்யூனிசம் என்றதும் மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான் கதை போல கோர்பசேவ், மேற்கு வங்கம் என்று கழிவதற்குப் பதிலாக, (கம்யூனிசம் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்) மெய்யாகவே உங்களுக்கு இஸ்லாம் குறித்து நல்ல்ல்ல்ல்ல்ல்ல புரிதல் இருந்தால்; தான் எழுதாத ஒரு கட்டுரைக்காக கடையநல்லூரில் தோழர் செந்தோழன்ஷா மீது பொருளாதார தடை விதித்து அவர் வயிற்றிலடிக்கிறீர்களே. இது உங்கள் இஸ்லாமிய முறைப்படியே சரிதானா?

  நீங்களோ அல்லது கடையநல்லூரில் உங்களைப்போல் ஆத்திரப்படும் எவரும் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா?

  1) இந்த கட்டுரையில் என்ன தவறாக எழுதப்பட்டிருக்கிறது? அது எந்த விதத்தில் உங்களை புண் படுத்துகிறது?

  2) கடையநல்லூரில் தோழர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் இஸ்லாத்தின் எந்த அடிப்படையில் சரியானது?

  முடிந்தால் பதில் கூற முயற்சியுங்கள்.
  28 January 2012 21:01

  ReplyDelete
 19. நண்பர் நரேன் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.
  நாம் ஆயிரம் பதிவுகளில் விள்க்குவது,விவாதிப்பது எல்லாவற்றையும் தங்கள் செயல்களினால் உண்மையாக்கி காட்டும் மதவாதிகளுக்கு நன்றி.

  துராப்ஷா விவகாரம் போல் பிற மதங்களிலும் நடக்காமல் இருக்கவே கோருகிறோம் மத சார்பற்ற‌ ஒரே பொது சமூக சட்டம்.
  நன்றி

  ReplyDelete
 20. வணக்கம் சார்வாகன்,

  பகடு குறித்து தகவல்கள் ஏதும் இருந்தால் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியுமா?

  ReplyDelete
 21. வண்க்கம் தோழர்
  நலமாக் இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.நமக்கு இ.சா இணையம் மூலம் மட்டுமே பழக்கம்.மற்றபடி திடிரென் மின்னல் போல் வந்தார்,சென்றார் அவ்வளவுதான்!
  அடிக்கடி வாருங்கள்.நன்றி

  ReplyDelete
 22. //வினவு கட்டுரை படியுங்கள் இதுராப்ஷா விவகாரத்தை நன்கு அலசி இருக்கிறார்கள்//
  தகவலுக்கு நன்றி சகோ. சென்றேன் படித்து அதிர்ச்சி அடைந்திட்டேன். இஸ்லாமை விமர்சித்த இஸ்லாமியரை முதலில் தாக்கியவர்கள் இப்போ அவர் மனைவியை நிர்பந்தப்படுத்தி பிள்ளையுடன் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டவைத்து மறுபடியும் இஸ்லாமியராக மாற்றியுள்ளார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம். இதற்கு பெயர் இனிமையான மதம்.

  ReplyDelete
 23. நண்பர் செங்கொடி வலைப்பக்கத்தை நம்க்குத் திறக்கமாட்டேன் என்கிறாரே. இங்கே கோரிக்கை வைக்கிறேன்.

  ReplyDelete
 24. // எந்த மத்வாதியும் அவர்கள் பெரும்பான்மையாக் இருக்கும் போது மத ஆட்சியும்,சிறுபான்மையாக் இருந்தால் மத சார்பற்ற ஆட்சியும் விரும்புவர்.//

  சூப்பர் சூப்பர் சகோ


  எங்கே மதமும் அரசியலும் கலக்கின்றதோ அங்கே மக்களுக்கு சங்குதான்

  ReplyDelete
 25. நன்றி,சகோ குயிக்ஃபாக்ஸ்
  **********
  சகோ தேவிபியாஜி தோழர் செவி கொடுப்பார் என நம்புவோம்.
  ******
  சகோ புரட்சிமணி

  மதம் என்பது பண்பு வளக்கும் ஆன்மீகத் தேடல் எனில் நாம் அதற்கு எதிரியல்ல.ஆனால் கூட்டம் சேர்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வழியாகவும்,பிற மத மக்களை அடிமைப்படுத்தும் முறையாக இருப்பதால்தான் எதிர்க்கிறோம்.
  இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.

  மதம் சாராத ஆன்மீகம் என்பது இயற்கைக்கு மேற்பட்ட ஒரு சக்தியை கண்டறியும் தேடல் முயற்சி எனில் அதுவும் நன்றே.
  நன்றி

  ReplyDelete
 26. @சார்வாகன்
  சகோ அருமையாக சொல்லியுள்ளீர்கள்.முன்பு மதம் ஆன்மீகத்திற்கு முதல் படிக்கட்டு மாதிரி. ஆனால் இன்று மதங்கள் அப்படி இல்லை என்பதே உண்மை.
  இன்றைய மத மாற்றங்கள் கூட்டத்தை சேர்க்கும் முயற்சியே.
  ஆன்மீக பாதையில் ஒருவன் செல்ல செல்ல தன் மதத்தை விட்டுவிடுவான். உதாரனத்திற்க்கு புத்தர், வள்ளலார்.........

  ReplyDelete
 27. சார்வாகன் சார் மதவெறி என்பது மதுவெறியைவிட கொடியது என நடந்த செயல்கள் மூலம் அறிய முடிகிறது. இதில் நண்பர் செங்கொடிக்கும் பகடுவிற்கும் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமென்று மனம் பதைக்கின்றது. நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.

  மனிதாபி மானமற்ற மத வெறியர்கள்!

  ReplyDelete
 28. சகோ கரிகாலன்
  செங்கொடி நல்மாகவே இருக்கிறார் என்றாலும் பதிவை அவர் திறக்கும் வரை பிரச்சினைகள் முடிந்ததாக எடுக்க முடியாது.துராப்ஷா விவகாரத்தில் மதம் ஆபாசமாக் விமர்சிக்கப்பட்டது என்பவர்கள் தோழர் குறித்து எதுவுமே கூற முடியாது.பக்டு பற்றி எதுவும் தெரியவில்லை.நிலைமை மாறும் எனவே எதிர்பார்க்கிறோம்.
  நன்றி

  ReplyDelete
 29. சகோ,
  தாவா மாமேதை, மார்க்க அறிஞர் இ.சா. ஜீவ சமாதியிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

  //காபிர் நரேன்
  ஆச்சரியமாத்தான் இருக்கு.
  நானும் நித்யானந்தாவை பத்தித்தான் ஒரு பதிவு எழுதியிருக்கேன்

  வேணா இதில பாருங்களேன்.
  pagadu.blog.com//

  ஆனாலும் சின்ன சந்தேகம் இந்த தளம் உண்மையான இ.சாவின் தாவா’வா அல்லது மூமின்களின் தக்கியா’வா என்று தெரியவில்லை.

  ReplyDelete