Thursday, February 2, 2012

அறிவியலுக்கு எதிரான போர் காணொளி
நண்பர்களே பரிணம்த்திற்கு எதிரான மதவாதிகளின் கொள்கையாக்கங்கள் பற்றி கற்று விவாதித்து வருகிறோம்.அவர்களின் படைப்புக் கொள்கை அறிவிய்லாக முடியாது என்பதாலேயே அறிவார்ந்த வடிவமைப்பு என்ற மதம் சாரா கொள்கையாக்கம் மூலம் பரிணம எதிர்ப்பு பரப்புவதையும் அறிவோம்.பரிணாமம் குறித்த சில தவறான புரிதல்களை சொல்லி விட்டு அமெரிக்காவில் நடை பெற்ற டோவர் வழக்கு பற்றிய காணொளி இப்பதிவில் காண்போம்.டோவெர் பள்ளி ஒன்றில் பரிணாம்த்தோடு அ.வ கொள்கையும் கற்பிக்கப்பட வேண்டுமா என்பது நீதி மன்ற வழக்கு ஆகிறது[October 2004]..அ.வ கொள்கையின் நாயகர்கள் பிலிப் ஜான்சன்,மிக்கேல் பெஹே, வில்லியம் டெம்ஸ்கி(தலை!!!!!!!!!!) ஸ்டீஃபன் மெயர் போன்றவர்கள் ஒரு புறமும் பரிணாமம் சார்பாக புகழ்பெற்ற அறிவியலாளர் கென்னெத் மில்லரும் வாதாடுகின்றனர்.பிறகு அ.வ் கொள்கையாக்கம் அறிவியல் ஆகுமா என நீதி மன்றம் தீர்ப்பு அளிக்கிறது.
********************
நம் தமிழ் பதிவுலகிலும் வலம் வரும் சில பரிணாமம் பற்றிய கருத்துகள்.

1.குரங்கில் இருந்து தோன்றியவன் மனிதன
:தவறு
**
வாலில்லா மனித குரங்கு சிம்பன்சி, மனிதன் ஆகியோருக்கு ஒரே முன்னோர்.4 to 7 மில்லியன் ஆண்டுகளூக்கு முன் தனியாக பிரிந்தனர்.அதன் பிறகு பிரிந்த பல மனித இனங்களில் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ சேஃபியன்கள்தான் மனிதர்கள்.
Human-phylo-tree.png
ஹோமோ சேஃபியன்களுக்கு நியாண்டர்தாலுக்கும் முன்னோர் ஹோமோ எரெக்டஸ்(மனித‌ன்தான்) [1milliyon years ago).ஆக்வே இப்போதைய மனிதனின்[ஹோமோ சேஃபியன்] முன்னோர் இன்னொரு மனித இனமே!!!!!!!!!!!

2.வெள்ளைக் குரங்கில் இருந்து வெள்ளையன், கருங்குரங்கில் இருந்து கருப்பினத்தவர் தோன்றினர்:தவறு

அனைத்து மனிதர்களுமே[ஹோமோ சேஃபியன்] ஒரே வகை முன்னோர்களிடம் இருந்து கிழக்கு ஆப்பிரிக்காவில தோன்றியவர்கள். ஹோமோ சேஃபியன்களின் தோற்றத்திற்கு பிறகு வாழ்விடம்&சூழல், மனித பரவல்  பொறுத்தே மனித இனங்கள் உருவானது.உலகின் எந்த இரு மனிதருக்கும் 99.9% டி என் ஏ ஒத்துப்போகிறது.

3.பரிணாமம் நிகழ்வதை யாரும் பார்க்க்கவில்லை: பரிசோதிக்க முடியாது.:தவறு

பல பரிணாம் நிகழ்வுகளை பார்க்க முடியாது ன் எனில் இது பல மில்லியன் ஆண்டுகள் நிகழும் ஒரு செயல்.ஆயினும் பாக்டீரியக்கள் ஆன்டி பயாட்டிக் மருத்துகளுக்கு ஏற்ப மாறுவது,எய்ட்ஸ் கிருமி தோற்றம் போன்றவை பரிசோதனை செய்து அறிய முடியும்.

4.பரிணாம் கொள்கை தவறு ஆகவே படைப்புக் கொள்கை சரி.:தவறு

பரிணாம் கொள்கை  என்பது இப்போதைய உயிர் தோற்றம்,பரவல் ஆகியவற்றை படிம வரலாறு ,டி,என் ஏ மற்றும் கால் கணக்கீடுகள் அடிப்படையில் விள்க்கும் கொள்கை.

பரிணம்த்தை விட இச்சான்றுகளை மெய்ப்பிக்கும் இயற்கை விதிகளுக்கு உட்பட்ட கொள்கையாக்கம் வருமானால் அது ஏற்கப்படும்,வரவேற்கப் படும்.

படைப்புக் கொள்கை இயற்கைக்கு மேம்பட்ட சக்தியை கொள்கையாக்கத்தில் கொண்டு வருகிறது.ஆகவெ அறிவிய்லால் ஏற்கப் படாது.

வேண்டுமானால் கால்க் கண்க்கீடுகள், படிம சான்றுகளுக்கு பொருந்தும் படி ஒரு படைப்புக் கொள்கை தயாரிக்க வேண்டிய அவ்சியம் உள்ளது. வழி நடத்தப்பட்ட பரிணாமம் என்பதே எதிர்கால படைப்புக் கொள்கை என்பதில் நம்க்கு எந்த ஐயமும் இல்லை.அப்போதும் அது அறிவியல் ஆகாது!!!!!!!!!!!!.
5. பரிணாமம் இறை மறுப்பு கொள்கை: தவறு
********
 பரிணாம‌ம் உயிர் தோற்றம் விள்க்கும் இபோதைய அறிவியல் கொள்கை  அது இறைவன்,மதம் பற்றி எதுவும் கூறவில்லை.மதவாதிகளின் மத புரிதலுக்கு எதிராக இருப்பதாக அவர்கள் நினைப்பதுதான் பிரச்சினை.

6. பரிணமத்தை அனைவரும் ஏற்றால் ஒழுக்க விழுமியங்கள் மறைந்து மனிதன் விலங்கு போல் செயல்படுவான்.:தவறு

ஒழுக்கம் என்பதன் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் எனினும் சமூக கட்டமைப்பை,பொது நலனை குலைக்கும் செயல் ஒழுக்கமின்மை என கூறலாம்.பரிணாம‌ம் என்பது ஒரு அறிவியல் கொள்கை மட்டுமே,வாழ்வியல் வழிகாட்டி அல்ல.ஆய்வாளர்கள் கற்பவர்கள் மட்டுமே ஏற்கலாம் அல்லது விமர்சிக்க்லாம்.அனைவரும் ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை.அனைவருக்கும் முதலில் புரியாது!!!!!!!!

பரிணாமம் கூட எந்த மாற்றமுமே உடனே நிகழாது என்றே கூறுகிறது.மாற்றம் என்பது சிறிது சிறிதாக்வே ஏற்படும் எனவே கூறுகிறது.மனிதர்கள் கூட்டமாக வாழ  ,முன்னேற்றம் அடைய சில சட்ட திட்டங்களை வாழ்வியல் நெறிகளை சிறிது சிறிதாக்வே உருவாக்கினர்.ஆகவே அதற்கு எதிராக எப்போதும்  பெரும்பானமையினர் திரும்ப மாட்டார்கள். 
*********************

காணொளி கண்டு மகிழுங்கள்.இக்காணொளியின் இதுவரை நாம் விவாதித்த பல் அ.வ கொள்கையாக்கங்களும் அருமையாக் விள்க்கப்படுவது அருமை

காணொளியின் இறுதியில் அட்டன்பரோ சொல்லும் வாக்கியம்
"ஒருவேளை அறிவியலில் அறியாத ,விள்க்க முடியாத உண்மைகள் இருக்க்லாம்,அவற்றை இயற்கைக்கு மேம்பட்ட சக்தி படைத்தது என்று கூறுவதற்கும் முதலில் சொன்ன் அறிய விளக்க முடியவில்லை  என்பதற்கும் வித்தியாசம் இல்லை"
How is it!!!!!!!!!!!!!!!!!!!!!!


மனித படிமங்கள் தேடும் முயற்சியில் நடந்த பல் விவரங்களை இக்காணொளி அளிக்கிறது.பில்ட் டவுன் மேன் என்னும் மோசடி பற்றியும்  மற்றும் மனித இனங்கள் தோற்றம் பற்றிய முடிவுகளுக்கு படிமங்கள் எப்படி சான்றாக அமைந்தன என்று காணொளி விள்க்கமாக் கூறுகிறது.பொறுமையாக கண்டு களியுங்கள்!!!!!!!!!.

38 comments:

 1. சார்வாகன்,

  நல்ல கருத்தாழம் மிக்க இடுகை. என்ன சொன்னாலும் முயலுக்கு மூனு கால் மரபை உடைப்பது கடினம்,பேசாம முயலே இல்லைனு சொல்லிடலாம் :-))

  ReplyDelete
 2. வாங்க நண்பர் வவ்வால்
  நாமும் முயல் கதை[பரிணாம் கொள்கை] அனைவருக்கும் ஒத்துக் கொள்ளாது ஆகவே ஒதுக்கி விடுங்கள். ஆனால் இதனை பள்ளியில் கற்பிப்பதை எதிர்த்து பிரச்சினை ஆக்காதீர்கள்.இது எதிர்கால் அறிவியல் முன்னேற்றத்தை தடுக்குமென்றுதானே கூறுகிறோம்.பள்ளியில் படிக்கும் எத்தனை விடயங்களை மற்க்காமல் வாழ்வில் பயன் படுத்துகிறோம்?
  99.99 % விடயங்களை மற்க்கிறோம் .பரிணாம கற்கும் மாணவர்களில் சிலர் நாளை மிகப் பெரிய கண்டுபிடிப்பு பரிணம் கொள்கையில் செய்ய்லாம்.அல்லது மார்று அறிவியல் கொள்கை கொண்டு வரலாம்.

  அப்ப்டியே பரிணாம் கல்வி,கொள்கை எல்லவற்றையும் அற்வியலாளர்களுக்கு விட்டு விட்டு அதனால் வரும் நனமைகளை அனுபவித்து மதம் பின்பற்றி விட்டு போங்கப்பா என்றுதானே சொல்கிறோம்.பரிணம் கொள்கை இருந்தால் சாமி கும்பிட முடியலை என்றால் பிரச்ச்சினை எங்கே!!!!!!!!

  ReplyDelete
 3. சகோ.சார்வாகன்,

  நல்லாக்கேட்டிங்க, சாமிக்கும்பிட எதுக்கு பரிணாமக்கொள்கைப்படிக்கனும் , போனோமா கும்பிட்டமான வரலாம்ல.

  நல்ல வேளை புவி ஈர்ப்புவிசை பத்திலாம் எதுவும் புனிதநூல்களில் இல்லைப்போல , இல்லைனு சொல்லி இருந்தா இப்போவும் இல்லைனு சொல்லி அடம்பிடிப்பாங்க :-))

  ReplyDelete
 4. வாங்க வவ்வால்
  மத புத்தக்த்தின் புரிதலுக்கு எதிரான அறிவியல் இருக்கக்கூடாது என்னும் கலிலியோ கால‌த்து அடக்குமுறைதான் இது. மத புத்தக்த்தை நிரூபிக்கவும் அறிவியல் உண்மைகள் இதில் இருக்கிற‌து என்றும் முரண்படுவார்கள் நகைச்சுவை மன்னர்கள்.

  இது செய்வதும் தவறே.சிற‌ந்த ஒரு விஷயம் (அறிவியல்) போல் இன்னொரு விஷயம்(மத புத்தகம்) அதே போல் இருக்கிற‌து என்றால் எது உயர்ந்தது?.தங்கள் மத புத்தக்த்தையே தாழ்த்தும் காமெடியன்கள்!!!!!!!!!

  நாம் மத புத்தக்த்தில் அறிவியல்,அறிவியலை மத கட்டுப் படுத்தல் இந்த இரு கொள்கைகளையும் எதிர்ப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்.இதில் எந்த மதம் என்பது நமக்கு அவசியமில்லை.
  நன்றி

  ReplyDelete
 5. மூமின்கள் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே. மூமின்கள் காககககே மொஹம்மது இப்னு அப்பதல்லா காக்காவலிப்பில் பரிணாமம் ஓக்கே என்று சொல்லியிருந்தால் ஓகேன்னுதானே சொல்லியிருப்பார்கள்? அவர் சூரியன் மறைஞ்சவுடனே அது அல்லாஹ் காலடியில் ஒக்காந்துகிட்டு அடுத்த நாள் உதயத்துக்கு ஆர்டருக்காக காத்துகிட்டிருக்குன்னு நம்ம கண்ணுமணி காக்காவலிப்பில சொன்னா நாங்க என்ன இல்லைன்னா சொல்லமுடியும்? இல்லைன்னு சொன்னா கடையநல்லூர் ஜமாத்து உட்டுடுமா? வேணும்னா எஸ்.இப்ராஹிம்கிட்ட கேட்டுப்பாருங்களேன்.

  வச்சிகிட்டா வேணும்னே இல்லைங்கறோம்?

  ஸோ... நீங்க சுழண்டு சுழண்டு எழுதறத பாக்க பாவமாத்தான் இக்கு. எதாவது மூமின் இஙகண வந்தாஹளா பாத்திஹளா?

  ReplyDelete
 6. வாங்க இ.சா
  ஏதோ நம்மால் முடிந்த சங்கை ஊதுவோம்.நாம் என்ன இதை ஏற்காவிட்டல் நரகம் என்றா பயம் காட்ட முடியும் அல்லது ஏற்றால் இனிய சொர்க்கம் கிடைக்கும் என்றும் கூற முடியுமா?.

  பரிணாம எனபது உள்ள சான்றுகளை விள்க்கும் இபோதைய நடைமுறை அறிவியல் கொள்கை.அவ்வளவுதான்!!!!!!!!!!!!!!!!.

  மதங்களின் புரிதலுக்கு விரோதமாக இருக்கிறது என்பதற்காக மட்டும் தூக்கி எறியப்படாது!!!!!!!!!!

  இப்படி மனிதனும் விலங்குகளும் ஒரே முன்னோரிடம் இருந்து தோன்றினார்கள் என்று கூறும் டார்வினில் இருந்து அறிவியலாளர்கள் பல்ருக்கும் பைத்தியமா?அதனை அப்படியே வழி மொழிய நமக்கு ஆசையா!!!!!!!!!!

  இல்லை அதை பற்றி எழுதும் நாம் வேலையற்றவர்களா!!!!!!!

  "கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக் கடவன்"
  நன்றி

  ReplyDelete
 7. //பரிணாமம் இறை மறுப்பு கொள்கை: தவறு
  ********
  பரிணாம‌ம் உயிர் தோற்றம் விள்க்கும் இபோதைய அறிவியல் கொள்கை அது இறைவன்,மதம் பற்றி எதுவும் கூறவில்லை.மதவாதிகளின் மத புரிதலுக்கு எதிராக இருப்பதாக அவர்கள் நினைப்பதுதான் பிரச்சினை.//

  சகோ.சார்வாகன்!இந்த ஒற்றைப்புரிதலும்,நீங்க வவ்வாலுக்கு கொடுத்த பின்னூட்ட விளக்கத்திற்கான சிந்தனையும் இருந்து விட்டாலே பரிணாமம் vs மதம் என்பது அடிபட்டுப் போய் இரண்டும் ஒரே பாதையில் பயணிக்கலாம்.

  முக்கியமாக கலாச்சாரம்,மதம் தொட்டு இதுவரையிலான சமூக கட்டமைப்பில் நாம் வளர்ந்து விட்டாலும் எதிர்கால தலைமுறைக்கு பள்ளிப்பாடங்களில் ஒன்றாக வைக்கவும்,பின் அவர்களே வளர்ந்த பின் உள் திறன் ஆராயவும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோமே என்ற உங்களது சிந்தனை வரவேற்க தக்க ஒன்று.

  இங்கே இவ்வளவு சிந்தனைகளை வைத்தும் கூட யாரும் எட்டிப்பார்க்காமல் நான் போடும் மொக்கைக்கு கூட்டம் சேர்ந்து இதுல என்ன சிந்தனையிருக்குதுன்னு கேள்வியும் கேட்டு நான் பாடும் கதாகாலசேபம் இருக்கே...சொல்லில் அடங்காது:)

  ReplyDelete
 8. முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன்.டேவிட் ஆட்டன்பரோவின் Live series காணொளி தொகுப்பையும் இணைக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 9. வாங்க சகோ இராஜ்ரடராஜன்
  நமக்கு உங்கள் போன்ற சிலரின் ஆதரவு இருப்பது போதும்.நாம் என்ன அனைத்து பின்னூட்டக் கருத்துகளையும் ரூம் போட்டு உக்கார்ந்து யோசித்தா கூறுகிறோம்? மன‌தில் உள்ளது சில சமயம் பொங்கி வருகிறது .அவ்வளவுதான்
  பரிணாமம் மட்டுமல்ல இயற்பியலில் அனைத்திற்குமான் விள்க்க கொள்கை(Theory of Everything இது வரை முழுமை பெறவில்லை) கூட இயற்கை விதிகள் மட்டும் வைத்து பிரபஞ்சத் தோர்றம் முதல் மறைவு வரை அனைத்தையும் விளக்க் முடியும் என கூறுகிறது. இதை அடிப்படையாக் வைட்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறிய கருத்து சர்ர்சையானது உங்களுக்கும் தெரியும்.அதை ஏன் எதிர்க்க கூடாது?.

  இன்னும் கூட பல பிரபஞ்ச கொள்கை[Multi verse] கூட எண்ணற்ற பிரப்ஞ்சங்கள் இருப்பதாக கூறுகிறது.இது மத விரோதம் இல்லையா!!!!!!!!.ஒரு சின்ன பூமிக்கு இவ்வளவு பெரிய பிரபஞ்சம் அவசியமா என்ற வேளையில் எண்ணற்ற‌ பிரபஞ்சங்கள் கொள்கை மத விரோதமாகாதா!!!!!!!!

  அட்டன்பரோவின் காணொளி சீக்கிரம் இடுவோம்.அது பற்றியும் கொஞ்சம் விவரம் எல்லாம் தர வேண்டும். இந்த அ.வ் இன்னும் ஒரு 10+ அத்தியாயம் வர்லாம்.எல்லாம் அதுக்கு மேல்தான்!!!!!!!
  நன்றி சகோ

  ReplyDelete
 10. //பல பரிணாம் நிகழ்வுகளை பார்க்க முடியாது ஏன் எனில் இது பல மில்லியன் ஆண்டுகள் நிகழும் ஒரு செயல்.//

  ஹி...ஹி....பரிணாமம் அதிலும் அறிவியல் நிரூபணம்.....:-(

  ReplyDelete
 11. வாங்க சகோ சுவனப் பிரியன்,
  ஸலாம் .நம் பதிவுகளை தொடர்ந்து படிப்பதற்கும்,பின்னூட்ட கருத்துகளுக்கும் நன்றி.அடிக்கடி வாங்க.
  நன்றி

  ReplyDelete
 12. மதமல்ல மார்க்க சகோ சுவனப்பிரியன்,
  தயவு செய்து அடுத்து அறிவியல் பதிவு ஒன்று எழுதி இந்த நஜஸ் காபிர்களின் வாயை அடைத்து சவுக்கடி செருப்படி மரண அடி நெத்தியடி கொடுக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

  அந்த பதிவில் எப்படி சூரியன் மறைந்ததும் அல்லாவின் காலடியில் சென்று அமர்ந்துகொள்கிறது. எப்படி அடுத்த நாள் காலை வரைக்கும் அல்லாஹ்வின் காலடியில் அமர்ந்து “அல்லாஹ் அல்லாஹ் நான் அடுத்த நாள் காலையில் கிழக்கில் உதிக்கலாமா அல்லாஹ்” என்று கேட்டுகொண்டிருக்கிறது என்பதையும், அடுத்த் நாள் காலையில், சரி போய் கிழக்கில் உதிச்சிக்க்கோ என்று அல்லாஹ் சொல்வதையும் அடுத்த நாள் காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்து இந்த நஜஸ் காபிர்களின் வாயை மூட வைக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

  இந்த பரிணாமம் கிடக்கு கழுத. அதன் கார்பன் காப்பி பதிவர் பாத்துக்குவார்.

  நீங்க இந்த சூரியன் வெவகாரத்தை நம்ம கண்ணுமணி காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா சொன்னது எப்படி நேரா அல்லாஹ் தன்னோட கெரஹத்திலேர்ந்து சொல்லி அனுப்பிச்ச ஜிப்ரீல் வந்து இங்க நம்ம கண்ணுமணிகிட்ட சொல்லி கண்ணுமணி நம்ம கிட்ட சொன்னதை அறிவியல் பூருவமா போட்டு தாக்கி நிரூபிச்சி ஒரு அறிவியல் பதிவு எழுதுங்க.

  ஆ அல்லாஹ்

  ReplyDelete
 13. வாங்க இ.சா
  இது என்ன புது விளையாட்டு?,சரி இ.சா மறுப்பு பதிவுகளை படிக்க மிக ஆவலாக் இருக்கிறோம்.
  நன்றி

  ReplyDelete
 14. Where there is a creation there should be a creator... . Without the creator there is no creation. So...?'

  ReplyDelete
 15. வாங்க கண்னன்
  என்ன ந்ல்ல பேரை இப்படி அடைமொழி கொடுத்து இருக்கிங்க?.சரி அது உங்க விருப்பம்.இந்த "அக்கீனோவின் முதல் காரணி வாதம் "கருத்து கொள்வதற்கும் , கருத்தினை வெளியிடுவதற்கும் உங்களுக்கு உள்ள உரிமையை ஆதரிக்கிறேன்.
  இனும் கூட பல் கொள்கைகள் அறிந்து கொள்ளுங்கள்
  ஒழுங்கான‌ வடிவமைப்பு
  பாஸ்கல் வேஜர்
  ஆங்கிலத்தில் இங்கே படியுங்கள்
  http://en.wikipedia.org/wiki/Existence_of_God
  நன்றி

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. //Where there is a creation there should be a creator... . Without the creator there is no creation. So...?'//

  நல்லா இன்னொரு தரம் அழுத்தி சொல்லுங்க கண்ணன். இந்த டார்வின் மாமா ரசிகர்கள் பண்ற ரவுசு தாங்க முடியல. :-(

  ReplyDelete
 18. //

  //Where there is a creation there should be a creator... . Without the creator there is no creation. So...?'//

  நல்லா இன்னொரு தரம் அழுத்தி சொல்லுங்க கண்ணன். இந்த டார்வின் மாமா ரசிகர்கள் பண்ற ரவுசு தாங்க முடியல. :-(

  //

  SuVa - He probably is asking who created the creator. Check out Saarvagan's link in response to Kannan - Aquinas's first cause argument.

  ReplyDelete
 19. //பரிணாமம் vs மதம் என்பது அடிபட்டுப் போய் இரண்டும் ஒரே பாதையில் பயணிக்கலாம்.//

  அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்பது மாதிரில்ல இருக்கு இது!

  அத்தையா சித்தப்பாவா என்பதல்லாவா இப்போதைய விளையாட்டு.

  //ஹி...ஹி....பரிணாமம் அதிலும் அறிவியல் நிரூபணம்.....:-( //
  என்ன ஆச்சு சுவனப்பிரியனுக்கு? அவர் பாட்டுக்கு இப்படி சிரிச்சிட்டு போய்டாரு.....

  ReplyDelete
 20. உங்கள் பதிவுகள் பற்றி வவ்வால் அவர்களின் பதிவுகளிளிருந்து அறிமுகம் கிடைத்தது. பதிவுகள் நன்றாக உள்ளன. அறிவியலுக்கு மாறான கருத்துக்களுக்கு தமிழில் அறிவியல் பூர்வமான விளக்கவுரை அளிக்கும் பதிவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. வலது சாரி மத அடிப்படைவாத அரசியல்வாதிகள் பணத்தையும் பதவியையும் கொண்டு அறிவியலுக்கு எதிரான போரை அமெரிக்காவில் பல்லாண்டுகளாக நடத்தி வருகிறார்கள். அதே கூட்டம் தான் பூமி சூரியனை சுற்றுகிறது என்ற உண்மையை மறுத்து பல விஞ்ஞானிகளை கொன்று தள்ளி அராஜகம் புரிந்தனர்.அவர்கள் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை 1990களில் தான் ஒத்து கொண்டுள்ளனர். அது போல பரிணாம தத்துவத்தையும் சில நூற்றாண்டுகள் கழித்து ஒத்து கொள்வார்கள். உங்களுடைய அனைத்து பதிவுகளையும் படித்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
 21. நண்பர் சுவனன்
  டார்வின் மாமா என்று உறவு முறை அர்த்தத்தில் கூறியிருந்தால் ஒன்றுமில்லை.இன்னொரு அர்த்தத்தில் கூறியிருந்தால் உண்மையிலேயே யார் மாமா என்பதை ஆதாரத்துடன் விள்க்க வேண்டி இருக்கும்.

  பதிவ பரிணாமம் பற்றிய தவறான புரிதல்களுக்கு விள்க்கம் அளித்து இருக்கிறேன்.இவை அனைத்தும் என் சொந்த கருத்துகளே. கருத்தை ஏற்கலாம் அல்லது மறுக்க்லாம்.இப்பதிவின் சாரம் யார் மாமா&இரசிகர்கள் என்பது பற்றி அல்ல!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 22. நண்பர் சாரதி வாங்க‌
  படைப்பு என்பதும் படைப்பவர் என்பது ஒன்று என்பதும், இயற்கையே படைப்பு சக்தி என்பதில் ந்மக்கு மாற்றுக் கருத்து இல்லை.இருப்பினும் இப்பதிவின் சாரம் பற்றி மட்டும் இங்கு கருத்து பரிமாற்றம் செய்ய வெண்டுகிறேன்!!!!!!!!!!!!.
  கருத்துக்கு நன்றி.அடிக்கட் வாங்க!!!!!!!!!!!!

  ReplyDelete
 23. வண்க்கம் தருமி அய்யா
  வாங்க,தோழ்ர் செங்கொடி,இபின் ஷாகிர் ஆகியோரின் பதிவுகள் முடக்கப்ப்ட்டு விட்டது போல் தெரிகிறது.நம்முடையதும் அப்படி ஆகலாம்.இதெல்லாம் அரசியலில் சக்ஜம்தானே!!!!!!!!!
  பரிணாம்த்தை பற்றி கண்டு கொள்ளாமல் மதம் செல்ல வேண்டும் என்பதுதான் இரண்டும் ஒரே பாதையில் பயணித்தல் என்பதன் பொருள்.
  வருகைக்கு நன்றி!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 24. வாங்க தோழர் ச.பூ
  இந்த பரிணாம் எதிர்ப்பாளர்களை பற்றி நன்றகவே அறிந்து இருக்கின்றீர்கள்.ஜார்ஜ் புஸ்(இளையவர் )தான் இந்த அ.வ கொள்கைக்கே ஆதரவு கொடுத்து அரசியலாக்கினார்.அதன் மூலமே அதிபர் தேர்தலில் இரண்டாம் முறை வெல்ல முடிந்தது.
  மிட் ரோம்னியும் அதே திசையில் செல்வார் என எதிர்பார்க்கலாம்!!!!!!!!
  நன்றி

  ReplyDelete
 25. அருமையான விளக்கம் நன்றி சகோ.
  செங்கொடி, இஸ்லாமியர் இபின் ஷாகிர் பதிவுகள் முடக்கப்பட்டுவிட்டனவா? மதவாத இரசிகர் மன்றத்தினர் நல்லாவே பயப்படுறங்க.அறிவியல் கொள்கைகளை பற்றி நீங்கள் எழுதுவதால் மதவாத இரசிகர் மன்றத்தினருக்கு தங்கள் மீதும் சரியான கடுப்பு.

  ReplyDelete
 26. சகோ சார்வாகன்!

  //நண்பர் சுவனன்
  டார்வின் மாமா என்று உறவு முறை அர்த்தத்தில் கூறியிருந்தால் ஒன்றுமில்லை//

  உறவு முறை அர்த்தத்தில்தான் கொஞ்சம் ஜாலியாக எழுதியது அது. தவறாக எண்ண வேண்டாம.

  //இஸ்லாமியர் இபின் ஷாகிர்//

  இவர் இஸ்லாமியர் அல்ல. இஸ்லாத்திலும் நாத்திகர்கள் உள்ளனர் எனபதை போலியாக காட்டுவதற்காக இஸ்லாமிய பெயரில் உலவி வந்த இஸ்லாமிய எதிரி.

  ReplyDelete
 27. நண்பர் சுவனன்,குயிக்ஃபாக்ஸ்
  கருத்துகளுக்கு நன்றி

  ReplyDelete
 28. //அனைத்து மனிதர்களுமே[ஹோமோ சேஃபியன்] ஒரே வகை முன்னோர்களிடம் இருந்து கிழக்கு ஆப்பிரிக்காவில தோன்றியவர்கள்.// அந்த ஒரே வகை முன்னோர்கள் இப்போது காணப்படவில்லையே, ஏன்?

  அந்த முன்னோர்களுக்கு பிறகும் பல படிநிலைகளைத்தாண்டிதானே மனிதன் வந்திருக்க முடியும். இப்போது மனிதனுக்கு முந்தைய படிநிலைகள் எதுவும் உயிரோடு இல்லையே.

  மனிதனோடு பரிணாம வளர்ச்சி நின்று விட்டதா? மனிதனுக்கு அடுத்தபடியான விலங்கு ஏன் இன்னும் உருவாகவில்லை.

  ReplyDelete
 29. வாங்க இராபின் நலமா?

  உங்கள் கேள்விகளை இப்படி புரிந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

  1.முதன் முதலில் தோன்றிய ஹோமோ சேஃபியன் மனிதர்கள் யார்? இப்போதும் வாழ்கிறார்களா?

  2 அந்த் முன்னோர்களில் இருந்தும் பல படி நிலைகளை கடந்து இபோதைய நிலைக்கு வந்தான் என்பதற்கு ஆதாரம் உண்டா?

  3.மனிதன் ஏன் இன்னொரு உயிரினமாக ஏன் பரிணமிக்க வில்லை?
  ************
  நண்பர் இராபின் இவை நிச்சயமாக் நல்ல கேள்விகள்.உண்மையை அறியும், தேடும் கேள்விகள்.

  அதாவது மனிதன் கால அள்வில் சில படிநிலைகளை கடந்து வந்தான்,கடந்து கொண்டிருக்கிறான் என்பதை சான்றுகள் நிரூபித்தால்(விள்க்கினால்?) இக்கெள்விகளுக்கு விடை கிடைத்து விடும்.
  (contd)

  ReplyDelete
 30. @Robin
  1.முதன் முதலில் தோன்றிய ஹோமோ சேஃபியன் மனிதர்கள் யார்? இப்போதும் வாழ்கிறார்களா?
  கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள புஷ் மென் எனப்படும் இனத்தவரே உலகின் மிக பழமையான் மனிதர்கள்.
  http://en.wikipedia.org/wiki/Bushmen

  Spencer Wells' 2003 book The Journey of Man — in connection with National Geographic's Genographic Project — discusses a genetic analysis of the San and asserts their blood contains some of the oldest genetic markers found on Earth. The Bushmen's Y-chromosomal DNA haplogroup (type A) is one of the oldest, splitting off around 70,000 years ago from those found in the rest of humanity (type BT). Therefore, the Bushmen likely represent one of the oldest existing populations.

  2 அந்த் முன்னோர்களில் இருந்தும் பல படி நிலைகளை கடந்து இபோதைய நிலைக்கு வந்தான் என்பதற்கு ஆதாரம் உண்டா?


  அறிவியலின் முடிவுகள் அனைத்துமே சான்றுகளின் மீதான ஆய்வுகளின் விள்க்கங்களாகும்.ஒரு சிறிய எ.கா தருகிறேன்.
  'அ'
  என்னும் உயிரினம் 'ஆ' என்னும் உயிரினமாக் பரிணமிக்கிறது என எடுத்துக் கொள்வோம்.
  .........அ,அ1,அ2,அ3,......ஆ(௩),..ஆ(௨),ஆ(௧),ஆ,ஆ1,ஆ2....
  என மாற்றம் நிகழ்கிறது.இதில் 'ஆ' இபோதைய வாழும் உயிரினம்.கிடைத்த படிம்ங்கள் வாழ்ந்த கால அளவு ,உட‌ல் அள்வீடுகளில் இருந்து 'ஆ' வின் முன்னோர் என்றும் எபோதும் வாழ்ந்தது என்று முடிவு செய்யப் படுகிறது.இதே பல 'ஆ' ன் முன்னோர்கள் கிடைத்து இருந்தால் பழமையானது படிமம் 'அ' என ஏற்கப் படுகிறது.இதே போல் இன்னும் சில வாழும் உயிரிங்களின் படிம்ங்களுக்கும் 'அ' வின் ஒப்ப்பீடு பொருந்தினால் 'அ' என்பது அ',இ ஆகியவற்றின் அறிவியலின் படி முன்னோர் என்கிறோம்.

  இபோது வாழும் உயிரினத்திற்கு மட்டுமே நம்க்கு தெளிவான வரையறுப்பு உண்டு.இருப்பினும் கிடைத்த படிமங்களி ஒப்பீடு செய்து 'ஆ'வின் முன்னோர்களாக வரையறுத்தல் என்பது பரிணாம் அறிவியலில் மிக முக்கியமான் அய்வு ஆகும்.

  இதன் படி மனிதனின் பல தரப்பட்ட படி நிலைகளுக்கு அறிவியலால் ஏற்கப் பட்ட படிம ஆதாரங்கள் உண்டு.
  List of human fossils.
  http://en.wikipedia.org/wiki/List_of_human_evolution_fossils

  http://www.talkorigins.org/faqs/homs/specimen.html

  ReplyDelete
 31. -

  @ராபின்
  மூன்றாம் கேள்விக்கு வருகிறேன்.மனிதன் இன்னும் பரிணமிக்கிறான? ஏன் இன்னொரு விலங்காக் மாறவில்லை.
  இக்கேள்விக்கு விடை தெரிய இரு வெவேறு விலங்குகள் என்றால் என்ன என்பதன் அறிவியல் விள்க்கம் முதலில் அறிய வேண்டும். இரு உயிரினங்கள்[ஆண்+பெண்] சேர்ந்து இனவிருத்தி செய்து ,இனவிருத்தி செய்யும் தகுதி உள்ள இன்னொரு உயிரினத்தை உருவாக்கினால் அவை ஒரே குழு உயிரினங்க்ள்.
  சிங்கம்,புலி சேர்ந்து இம்மாதிரி வேறு உயிரினங்களை உருவாக்க முடியும்.ஆகவே அவை ஒரே குழு உயிரின‌ங்கள்.
  http://en.wikipedia.org/wiki/Species

  இருப்பினும் ஒரு குழு விலங்கினம்[species] என்பதன் வரையறுப்பு கொஞ்சம் சிக்கலானது.இதுவும் உயிரியலில் முக்கியமான் பிரச்சினைகளுள் ஒன்று.

  இதனை டார்வின் த்னை உயிர்களின் தோற்றம் புத்தக்த்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

  Darwin wrote in chapter II of On the Origin of Species:
  No one definition has satisfied all naturalists; yet every naturalist knows vaguely what he means when he speaks of a species. Generally the term includes the unknown element of a distinct act of creation
  "தனிப்பட்ட விலங்கினம் என்பதன் வரையறுப்புக் கொள்கையில் ஒரு இயற்கையியலாளருக்கு திருப்தி இல்லை என்றாலும் அதனை எப்படி [ஒரு அளவிற்கு] சரியாக வரையறுப்பது என்பது தெரியும். ஒவ்வொரு வில்ங்கினமும் தனிப்பட்ட,வித்தியாசமான் தனமைகளுடன் படைக்கப்பட்டன என்ற படைப்புக் கொள்கையின் சாயலே இந்த வரையறுப்பில் தெரிகிறது."

  மனிதனிலும் சில மாற்றங்கள் நடக்கின்றன.எடுத்துக்காட்டாக 44 குரொமோசோம் உடைய ஒரு மனிதன் இந்த வரையறுப்பின் படி வேறு உயிரினமே.அவனால் 46 குரோமோசோம் உடைய மனிதர்களோடு இனவிருத்தி செய்ய இயலாது.
  http://www.thetech.org/genetics/news.php?id=124
  இதே போஒல் 48 குரோமோசோம் உள்ள மனித குரங்கில் இருந்து 46 குரோமோச்சொம் உள்ள மனித இஅனம் தோன்றி இருக்கலாம் என்ற கருதுகோள் இபோது அறிவியல் உலகில் விவாதத்தில் உள்ளது.
  நன்றி

  ReplyDelete
 32. 44 நிறவுறுக்களை கொண்ட மனிதன் என்ற பதிவு சகோ அனலிஸ்ட் எழுதியுள்ளார்கள்.படியுங்கள் மிக ஆச்சர்யமாக் இருக்கும்.
  அத்வாது
  http://annatheanalyst.blogspot.com/2011/07/44.html

  சான்றுகளின் மீது கட்டமைக்கப்படும் கொள்கையை அச்சான்றுகளின் மீத்னா சந்தேகங்களாக் விமர்சிப்பதில் தவ்றில்லை.ஆனால் கட்டமைக்கப் படும் கொள்கையின் ஊகங்கள் மீதான அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்காது.
  இப்போது மனிதனின் பல கால நிலைப் படிவங்களாக் ஏற்கப்பட்ட ஒரு படிமத்தையாவ்து தவறு என்று நிரூபிப்பவருக்கு அளவில்லா புகழும் பணமும் கிடைக்கும்.உடனே அதுஆய்வு சஞ்சிகைகளில் வெளிவரும்.இந்த முதல் பறவை படிமத்தில் கூட இமாதிரி குழப்பம்[அது பறவையா டைனோசாரா?] வந்து சரியாந்து அனைவரும் அறிந்து இருக்க்லாம்.சில மதத்தை விமர்சிப்பவர்களுக்கு கெட்ட பெயர், சில சமயம் உயிருக்கே ஆபத்து போன்றவையே பரிசு.
  பிற்கு ஏன் பரிணாம்த்தை ஆதரிக்க வேண்டும் அறிவியலாளர்கள்?

  ReplyDelete
 33. //அந்த முன்னோர்களுக்கு பிறகும் பல படிநிலைகளைத்தாண்டிதானே மனிதன் வந்திருக்க முடியும். இப்போது மனிதனுக்கு முந்தைய படிநிலைகள் எதுவும் உயிரோடு இல்லையே.//
  இதுதான் கேள்வி. படிமங்கள் என்பதை ஆதாரமாக வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் கேட்டது மனிதனுக்கு முந்தைய நிலைகளிலுள்ள விலங்குகள் ஏன் இப்போது உயிரோடு இல்லை?

  //மனிதனிலும் சில மாற்றங்கள் நடக்கின்றன.// புரியவில்லை.

  //இதே போஒல் 48 குரோமோசோம் உள்ள மனித குரங்கில் இருந்து 46 குரோமோச்சொம் உள்ள மனித இஅனம் தோன்றி இருக்கலாம் என்ற கருதுகோள் இபோது அறிவியல் உலகில் விவாதத்தில் உள்ளது.//
  //குரங்கில் இருந்து தோன்றியவன் மனிதன: தவறு//
  ஏனிந்த குழப்பம்?

  ReplyDelete
 34. @ராபின்
  //படிமங்கள் என்பதை ஆதாரமாக வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை//
  1.படிமங்களின் மீதுதான் பரிணாம் கொள்கையே கட்டப் பட்டு உள்ளது.படிம வர்லாறு பொய் எனில் பரிணாம் தவறு.
  படிமங்களை மறுப்பது எப்படி எனில் ஒரு பெரிய ஆய்வகம் கட்டி அதில் ஆய்வுகள் செய்து ,அதனை ஆய்விதழ்களில் பதிவ்ட்டு பிறகு விவாதமாகி அனைவரும் ஏற்று கொள்ளும் வரை போராட வேண்டியதுதான்!!!!!!!!!!!

  //நான் கேட்டது மனிதனுக்கு முந்தைய நிலைகளிலுள்ள விலங்குகள் ஏன் இப்போது உயிரோடு இல்லை?//


  2.அறிவியல் சான்றுகள் கொண்டு என்ன& எப்படி நடந்து இருக்கலாம் என்பதை பொருந்தும் படி கூறுகிறது.ஏன் என்பதற்கு விடை சில சம்யம் அறிவியல் கொடுப்பது இல்லை.
  ஹோமோ சேஃபியன்கள் பிற இனங்களை அழித்து விட்டதாக் ஒரு கருதுகோள் உண்டு.இந்த சுட்டியும் அதைத்தான் கூறுகிறது.
  Why is there only one human species?
  By Michael MosleyBBC

  http://www.bbc.co.uk/news/science-environment-13874671
  //ஏனிந்த குழப்பம்?//

  3.ஒரு குழப்பமும் இல்லை. மனித குரங்கில் இருந்து 40_70 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்த மனித இனத்தின் பல பிரிவுகளுள் ஒன்றான ஹோமோ எரெக்டஸ் ல் இருந்து 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்தவர்கள் நியாண்டர்தால்& ஹோமோ சேஃபியன்கள்.. நியாண்டர்தால்கள் 30,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்து விட்டதாக் ஆய்வுகள் கூறுகின்றன.

  ReplyDelete
 35. //படிமங்களின் மீதுதான் பரிணாம் கொள்கையே கட்டப் பட்டு உள்ளது.படிம வர்லாறு பொய் எனில் பரிணாம் தவறு.// படிமங்களை வைத்து திரட்டப்படும் தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவை.

  // 2.அறிவியல் சான்றுகள் கொண்டு என்ன& எப்படி நடந்து இருக்கலாம் என்பதை பொருந்தும் படி கூறுகிறது.ஏன் என்பதற்கு விடை சில சம்யம் அறிவியல் கொடுப்பது இல்லை.//
  ஏன் சில சமயம் பதில் கொடுப்பதில்லை?

  //ஹோமோ சேஃபியன்கள் பிற இனங்களை அழித்து விட்டதாக் ஒரு கருதுகோள் உண்டு.இந்த சுட்டியும் அதைத்தான் கூறுகிறது.
  Why is there only one human species?
  By Michael MosleyBBC

  http://www.bbc.co.uk/news/science-environment-13874671//
  அது கருதுகோள் அல்ல, நம்பிக்கை. நீங்கள் கொடுத்த சுட்டியில் ஒரு புராணக்கதை எழுதப்பட்டுள்ளது.

  //3.ஒரு குழப்பமும் இல்லை.//
  என்னுடைய பின்னூட்டத்தை திரும்ப ஒருமுறை படித்துப் பாருங்கள்.

  எனக்கென்னவோ உங்களைப் போன்றவர்கள் நாத்திகத்தை ஒரு மதத்தைப்போல கட்டியெழுப்ப முயற்சிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 36. //ஏன் சில சமயம் பதில் கொடுப்பதில்லை?//
  அறிவியலின் படி நிகழ்வுகள் அதன் காரணிகளால் சான்றுகள் இருந்தால் மட்டுமே மிக சரியாக விள்க்க முடியும்.சில சமயம் மாதிரி[model based prediction] மூலம் ஊக முறையில் விள்க்க்லாம்.ஏன் ஒரு காரியம் நிகழ்கிறது என்பதைவிட எவ்வாறு என்பதையே அறிவியல் முக்கியமாக் கருதுகிறது. ஏன் பரிணாம வளர்ச்சி& மாற்றம் ஏற்பட்டது எனில் நடக்கும் வாய்ப்பு,காரணிகள் இருப்பதால் மட்டுமே என்பதே அறிவியலின் நிலைப்பாடு.

  /அது கருதுகோள் அல்ல, நம்பிக்கை. நீங்கள் கொடுத்த சுட்டியில் ஒரு புராணக்கதை எழுதப்பட்டுள்ளது./
  கருதுகோளுக்கும்[hypothesis) நம்பிக்கைக்கும்[belief] வித்தியாசம் உண்டு.கருதுகோள் ஒரு சான்றின் காரணத்தை முன்வைக்கிறது.பிற மனித இனங்கள் இருந்தது உண்மை.அவர்கள் அழிந்ததும் உண்மை.எப்படி அழிந்து இருக்க்லாம் என்பதையே கருதுகோளாக் கூறுகின்றனர்.இத்திசையில் இன்னும் பல் உண்மைகள் வெளிவரும் என்ற தேடலில் அறிவியலாளர்கள் உள்ளாரகள்.
  புராணக் கதை பற்றி வேண்டுமானால் விள்க்கி பதிவிடலாம்.
  நம்பிக்கை என்பதற்கு எந்த சான்றுகளும் தேவையில்லை.
  /என்னுடைய பின்னூட்டத்தை திரும்ப ஒருமுறை படித்துப் பாருங்கள்.

  எனக்கென்னவோ உங்களைப் போன்றவர்கள் நாத்திகத்தை ஒரு மதத்தைப்போல கட்டியெழுப்ப முயற்சிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது./
  சரி உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை.தயை கூர்ந்து இன்னொரு முறை விள்க்குங்கள்.

  மதம் என்பது இயற்கைக்கு மேற்பட்ட சக்தியை பற்றி கூறுகிறது.மரணத்திற்கு பின் வாழ்வு என்ற திசையில் பயணிக்கிறது.ஆனால் பரிணாம கொள்கை இபோதைய உயிர்த் தோற்ற விள்க்க கொள்கை,அது எனக்கு சரியாக் படுகிறது.
  நான் இறை மறுப்பாளன் எனில் என் அனுபவங்கள் தேடல் மீதான முடிவு.பரிணாம கொள்கையின் உயிர் தோற்ற விள்க்கம் இல்லாவிட்டாலும் இறை மறுப்பாளனாகவே இருந்திருப்பேன்.

  இந்த 1 வருடமாக்த்தான் பரிணாம் கொள்கை கற்று வருகிறென்.அதற்கும் முன்னும் நாம் மதம் பின் பற்றுபவர் அல்ல‌.
  சரி பரிணம் கொள்கை குறித்த நம் கற்ற‌ல் தேடல்களை பகிர்கிறோம்.இது மத பிரச்சாரம் போல் எனில் இதை ஏற்பவர்களுக்கு என்ன கிடைக்கும் என‌ என்னால் கூற முடியும்?
  மதம் பின்பற்றுபவர்கள் கூட பரிணாம் கொள்கை ஏற்பாளர்களாக இருப்பது முரண் ஆகாது என்பதையே இப்பதிவில் வலியுறுத்தியுள்ளேன்.

  பரிணம்த் கொள்கையின் மீதே அறிவியல் சார்ந்தே விவாதிக்க வேண்டுகிறேன்.
  நன்றி

  ReplyDelete
 37. வணக்கம் சகோ,
  நலம் நலமறிய ஆவல்.
  எனக்கு பரினாமத்திலும் நம்பிக்கை உண்டு ஆதிபராசக்தியிலும் நம்பிக்கை உண்டு. :)

  தொடர்ந்து கலக்குங்கள்..விளக்குங்கள்

  ReplyDelete
 38. வணக்கம் வாங்க சகோ புரட்சிமணி
  பரிணாமத்தை ஏற்பது என்பதை விட கற்கிறோம் என்றே சொல்லுங்கள்.அது ஒரு இப்போதைய அறிவியல் கொள்கை.அவ்வளவுதான்.மதம் என்பது மனதுக்கு இதம் தரும் ஒரு நம்பிக்கை என்ற வகையில் நன்மையே.அதனை அரசியல் ஆக்கி பிற நம்பிக்கையாளர்களுக்கு விரோதமாக் செயல்படும் போது மத விமர்சனம் தவிர்க்க இயலாதது.மதமும் அரசியலும் முற்று முழுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே உண்மையான மத சார்பின்மை.

  நாம் கூட இயற்கையே படைப்புச் சக்தி என்றே கூறுகிறோம்.இயற்கை வழிபாடு என்பதும் மிக பழமையானது.நம் கலாச்சாரத்தில் கூட கலந்த ஒன்று.இயற்கை அன்னையே ஆதிபராசக்தி எனில் நம்க்கும் மகிழ்சியே!!.இயற்கையை வணங்குவதை அதனை பாழ் படுத்தாமல் இருப்பது என்ற நோக்கில் பொருளில் செயல்படுத்தினால் அருமையாக் இருக்கும்.
  நன்றி

  ReplyDelete