Sunday, February 19, 2012

நாளைக்கு இருக்குமா எரிபொருள்??????????
இந்நூற்றாண்டில் அதிக பயன்பாட்டுக்கு வந்தது எரிபொருள் தொழில் நுட்பம் சாந்த வாழ்வுமுறை என்றால் மிகையாகாது.எண்ணெய் எரிபொருள் மூலமே நம் போக்குவரத்து,தொழிற்சாலைகள்,மின்சாரம் தயாரிப்பு போன்றவை பெருமளவு நடக்கிறது.எண்ணெய் இல்லாத வாழ்வு என்பது மிகவும் கடினமாக்வும்,மனித நாகரிகத்தை பல் நூற்றாண்டுகள் பின் தள்ளிவிடும்.

எண்ணெய் தொடர்பில் பல போர்கள்,அரசிய்ல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது வரலாறு.  எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வரும் போது,பயன்பாடு மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இக்காணொளி அரை மணிநேரமே இருந்தாலும் எண்ணெய் தொடர்பான பல் உண்மைகள்,வரலாறு அருமையாக பகிர்கிறது.இன்னும் 40 வருடங்களில் எண்ணெய் தீர்ந்து விடும் என்பது ஒரு கணிப்பு. சோளத்தில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிப்பது உணவுப் பஞ்சம் ஏற்படுத்தலாம்.

இப்போதும் கூட நம் நாட்டின் எண்ணெய் இறக்குமதியின் பெரும்பகுதி ஈரானிடம் இருந்தே வருகிறது.இபோது போர் வந்தால்  ஈரான் எண்ணெய்க்கு பதிலாக சவுதி தன் எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக் கூறினாலும்,எந்த அளவுக்கு போதுமாக இருக்கும்?.போரின் விளைவுகள் அனைவருக்குமே கெடுதலாகவே இருக்கும்.

போரை தவிர்ப்பது நம் கையில் இல்லை என்றாலும் அதன் விளைவுகளை அறுவடை செய்தாக் வேண்டும் என்ற கட்டாயம் நமக்கு உண்டு.

காணொளி காணுங்கள்,எரிபொருள் பயன்பாட்டை குறையுங்கள். எண்ணெய்க்கு மாற்று எரிபொருள் சீக்கிரம் கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முனையட்டும்!!!!!!!!

15 comments:

 1. //தேடுகிறேன்.தேடலை பகிர்கிறேன்.கலை ,இலக்கியம் அறிவியல் அனைத்தும் மக்களுக்கே!!!//

  அந்தவகையில் இந்த பகிர்வுக்கும்

  நன்றி

  ReplyDelete
 2. நண்பரே நல்ல பதிவு எச்சரிக்கை காணொளி,

  இந்தப் எரிப் பொருள் BRIC நாடுகளின் அகோர பசிக்கு ஈடுகொடுத்தால் 40 ஆண்டுகளுக்கு குறைவாகவே தீர்ந்துபோய்விடும்.

  வளர்ந்த முன்னேறிய நாடுகள் தன்னிறைவு பெற்றுவிட்டன, அதனால் அவர்கள் யோசிக்காமல் மாற்று எரிப்பொருள் சக்திகளை தேடலாம் பய்ன்படுத்தலாம்.

  ஆனால் வளரும் நாடுகள், தாங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்று அனைத்து துறை வளர்ச்சியினால் எரிப்பொருட்கள் அதிகமாக தேவைப்படுக்கின்றன. இதை கட்டுப்படுத்த முடியாது, மேலும் கட்டுப்படுத்த எண்ணமில்லை. இப்போதுள்ள நிலையை சமாளித்தால் போதும், எரிப்பொருள் தீரும்போது பார்த்துகொள்ளலாம் என்ற நிலைதான் இருக்கின்றது.

  இதை மாற்ற தனிமனித முடிவுகளாலும் நடவடிக்கைகளாலும்தான் முடியும்.

  ReplyDelete
 3. நண்பர் வேர்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி
  ********************
  நண்பர் நரேன்
  இன்னும் 40+ ஆண்டுகளில் எண்ணெய் இல்லாமல் போவதும் உறுதி.அதன் பிறகு சோளம் மூலம் எத்தனால் தயாரிப்பு முக்கியத்துவம் பெறும். அப்போது காலனியாக்கம் இப்போது எண்ணெய் வள நாடுகளை ஆக்கிரமித்த‌து போல் விவாசாய வளம் கொண்ட நாடுகளின் மீது திரும்பலாம்.விவசாய வளம் கொண்ட நாடுகள் சோளம் தயாரித்து குறைந்த விலையில் மேல நாடுகளுக்கு விற்கும் படி கட்டாயப் படுத்த்ப்படும்.

  இதில் இந்தியா ,இலங்கை,பாகிஸ்தான்,,வங்காளா தேசம் போன்றவை காலன்யாதிக்கத்தின் வேட்டைக்காடு ஆகும் வாய்ப்பு அதிகம்.பொ.ஆ 2050ல் இவையெல்லாம் பார்த்து விடுவோம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 4. சகோ, எதிர்காலதில் எரி பொருள் பிரச்சனை பற்றி தெரிவித்துள்ளீர்கள். நன்றி.அப்போது wahabhi ளின் ஆதிக்க வெறியும் இல்லாமல் கனவாய் போய்விடும்.
  இஸ்லாமிய மார்க்க அறிஞர் இப்னு ஷாகிர் தளத்தில் புருசிலியின் படத்துடன் வந்தது நீங்களா?

  ReplyDelete
 5. வாங்க சகோ குயிக்ஃபாக்ஸ்
  இந்த ஆக்ரோஷமான மதப் பிரச்சாரம் இன்னும் 20+ வருடத்திலேயே காணாமல் போய் விடும்,அதற்குள் இந்த ஈரான் போர் வந்தால் சவுதி உள்ளிட்ட நாடுகள் அதிகம் எண்ணெய் எ(கொ)டுக்க வேண்டி இருக்கும்,பார்க்க்லாம் என்ன நடக்கிறது என்று.
  புருஸ்லி படம் உங்களுக்கு பிடிக்காதா!!!!!!!!!!!
  I like Bruce Lee!!!!!!!
  கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 6. //புருஸ்லி படம் உங்களுக்கு பிடிக்காதா!!!!!!!!!!!//
  என்ன சகோ இப்படி கேட்டிட்டிங்க!எங்க மூத்த சகோதரங்களலெல்லாம் புருஸ்லி ஸ்ரைலில் HairStyle செய்து திரிந்ததை பார்த்து நாங்க வாயை பிளந்ததை என்னால் மறக்க முடியுமா?
  நான் இந்த முகமதுவின் ரசிகன் கிடையாது. புருஸ்லி ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.எங்க சார்வாகன் கூட புருஸ்லி இரசிகன். நைஸ்.

  ReplyDelete
 7. சொர்க்கத்திற்கு போக பிரியபடுபவரின் பதிவில் உங்க பின்னோட்டம் பார்த்தேன்.குறைவான எண்ணிக்கையினரை இருட்டுக்குள் விழுத்தி மகிழுகிறார்கள். இவர்களின் இருட்டைவிட்டு தப்பினோம் பிழத்தோம்மென்று வெளியே ஓடும் அதிக எண்ணிக்கை பற்றி இவர்களுக்கு தெரியாது.ஒரு தமிழ்பெண் ப்ரீத்தி முழுக்க மூடீகட்டி பார்க்கவே ரெம்ப கஷ்டமாயிருக்கு.

  ReplyDelete
 8. @ //புருஸ்லி படம் உங்களுக்கு பிடிக்காதா!!!!!!!!!!!//

  புருஸ்லியின் ஸ்டைலான புகைப்படங்கள் நிறைய இருக்கும்போது அரத பழசான படம் எதற்கு....அந்த படம் பழமைவாதி( LOL ) போல இருக்குது.......

  நண்பர் குயிக்பாக்ஸ்-- சு.பி.( தவ்வீது சுவனப்பிரியன் சண்டைக்கு வந்துவிடுவார் - Sufi கிடையாது) தளத்தில் மறுமொழியிடாதலால் நீங்கள் பாக்யவான்.

  But you are prime suspect for the துலக் ஹா... comment.

  ReplyDelete
 9. comment on suvanappiriyan's post
  /எல்லோரும் தயாரா இருங்க இதோ நாத்திகத்தின் இவ்வளவு இணைய தொலைகாட்சி,.... பிரச்சாரத்திற்கு நாத்திகராக மாறியோர் பட்டியலை வெளியிடப் போகிறார் நண்பர் சார்வாகன்./

  நண்பர் மஸ்தூக்கா
  நான் இறை மறுப்புக் கொள்கை உடையவன் என்பதற்காக அனைவரும் அக்கொள்கைக்கு வரவைப்பதல்ல நம் நோக்கம். சில் மதங்களின் பிரச்சார உத்திகளான மத புத்தக்த்தில் அறிவியல்[ரொம்ப போர் அடிக்குது ஆகவே இப்போது இல்லை!!!!!!!!!],பரிணாம் கொள்கை எதிர்ப்பு என்ற தந்திரங்களை விளக்கி பதிவிடுகிறோம்.மத ரீதியான் ஆட்சி,சட்டங்கள் உலக் முழுதுமே கூடாது என்கிறோம்.ஜனநாயக் ஆட்சி,மதசார்பற்ற மனித உரிமை சட்டங்கள் உலக் முழுதும் வேண்டும் என்கிறோம்.

  மதம் பின்பற்றும் பலருக்கு தங்கள் மதம் பற்றி போதிய விவரங்கள் தெரிவது இல்லை.மதம் என்பது கலாச்சார அடையாளம்,வாழ்வு முறை என்பதும் மத பிரச்சாரத்திற்கு அரசியல்,பொருளாதார வலிமை உள்ளதால் மட்டுமே நீடிக்கிறது.இந்த மத்ப் போட்டியில் பல மதங்கள் தங்களின் கெடுபிடியான கொள்கைகளை தளர்த்துவதை முன்னேற்றமாக்வே பார்க்கிறேன்.

  மதப் போட்டியில் காணாமல் போன மதங்கள்,கடவுள்கள் ஏராளம்.இறை மறுப்பு மதங்களான பௌத்தம்,சமணம் கூட கடவுள்களை உருவாக்கி கொண்டன.

  நம் நாட்டில் இறை மறுப்பாளர்கள் அவர்கள் பிறந்த மதத்தின் பெயரால்தான் அறியப்படுகிறார்கள்.ஆகவே இறைமறுப்பாளர்கள் மதத்திலும் ஒரு அமைதி காக்கும் சிறுபான்மையினர்.

  மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை.அதன் மூலம் அவர் வாழ்வு முறை மாறும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று அறிந்தே மாறுகிறார்.அவர்களால் புதிய சூழலுக்கு ஒத்துப்போக முடியவில்லையெனில்,சரியாக் நடத்தப் படாவிட்டால் மாறிய மதத்தில் நீடிப்பது கடினம். ஆகவே அவர்களை விமர்சிக்க நான் விரும்பவில்லை.

  மதம் மாறிய சகோதரர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்!!!!!!!!!

  நன்றி

  ReplyDelete
 10. நண்பர் நரேன்,குயிக் ஃபாக்ஸ்

  ஒரு விதத்தில் சகோ சுவனப் பிரியனை பாராட்டியே ஆகவேண்டும்.சாதி மறுப்பிற்காகவே மதம் மாறியதாக் ஒத்துக் கொண்டது நான் எதிர்பார்க்காத விடயம்.மாறியவர்கள் ஆய்வு செய்து மாறினார்கள் என்றால் மட்டுமே நம்க்கு வேலை அங்கே!.
  வாழ்த்துக்கள் சகோ சுவனன்!!!!!!!!

  500+ வருடங்களாக மதத்தில் இருக்கிறவர்களுக்கே இது சரி(ஹலால்) ,இது தவறு(ஹராம்) பல்ர் தினமும் எழுதி சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கும்[இதில் வரும் தகராறுதான் மிக கொடுமை] போது புது ஆட்கள் எப்படி அறிய முடியும்?

  @இந்து மத வாதிகளுக்கு

  இந்து மதத்தில் இருந்து மதம் மாறுவது தடுக்கப்பட வேண்டும் எனில் சாதிரீதியான் உயர்வு தாழ்வு முதலில் உடனடியாகவும்,சாதி முற்றும் முழுதாக் கால்ப்போக்கிலும் ஒழித்தால் மட்டுமே சாத்தியம்.சாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப் படவேண்டும்.
  நன்றி

  ReplyDelete
 11. @ சார்வாகன்,

  இதைப் பற்றி வேறு தளங்கள் இல்லாதலால் இங்கு விவாதிக்க வேண்டிய நிலை.
  நண்பர் சு.பி. தெரிந்து பதிவிட்டுள்ளாரா என்று தெரியவில்லை.

  முஸ்லிம் மன்னர்கள் ஆண்ட நாடுகளில் அல்லது ஆட்சியமைந்த நாடுகளில் ஏறக்குறைய பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டனர். இதற்கு இரண்டு விதிவைலக்கு.

  ஒன்று ஸ்பெயின் நாடு, அங்கு இருந்த முஸ்லிம்களையும் ஆட்சியாளர்களையும் அவர்கள் எப்படி ஆட்சியை பிடித்தார்களோ அதே வகையில் கிறிஸ்த்துவர்களால், அடித்து துரத்தப்பட்டனர். இவ்வாறு ஸ்பெயின் நாடு இஸ்லாமில்லிருந்து தப்பியதை இஸ்லாமிய அறிஞ்சர்கள் தங்களின் பயான்களில் இன்றும் புலம்பி தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். தோல்விக்கு காரணம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் குரான் அதீஸ் நபி வழிப்படி ஆட்சி செய்யவில்லை என்கிறார்கள்.

  இந்தோனிஷியாவில் இருக்கும் இந்துமக்கள் ஸ்பெயின் வழியில் இஸ்லாத்தை துறத்த நினைக்கிறார்கள் என்று அங்குள்ள மதவாதிகள் சில வருடங்களுக்கு முன் பிரச்சனைகளை கிளப்பினார்கள்.

  இரண்டாவது விதிவிலக்கு இந்தியா. சுமார் 600 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்தும், இஸ்லாமிய ஆட்சியின் அனைத்து அம்சங்களையும் உபயோகித்து பார்த்தும் 20% மக்கள் மேல் அசையவில்லை. இது எதனால் என்று பிற்பாடு சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்த்போது, முக்கிய காரணமாக இருந்தது இந்த சாதிய கட்டுக்கோப்புதான்.

  இது தாவா தாயீக்களுக்கு இருதலை கொள்ளியாகிவிட்டது. சாதி கொடுமை தேவை, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மதம்மாற. சாதி கட்டுப்பாடு அல்லது சாதி ஒழிய வேண்டும், இன்னும் பலர் மார்க்கத்திற்க்கு வந்துச் சேர.

  இதனால் தாயீக்களுக்கு சாதி ஒரு obsession மாதிரி ஆகிவிட்டது

  ....contd....

  ReplyDelete
 12. contn..
  மீனாட்சிபுரத்தின் பிரிதிபலிப்புதான் சாதி கொடுமைகள் இருந்து தப்ப மதம் மாறுகிறோம் என்பது.

  இந்து சமுதாயத்தில் ஆதிக்க சாதிகள், அவர்கள் சாதி கொடுமைகளை உள்ளாக்கிய சாதிகளைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டும், வெட்கபட வேண்டும். இவ்வளவு கொடுமைகளை சந்தித்து இன்னும் பெரும்பான்மையினர் மதம் மாறாமல் இருக்கிறார்களே என்று அந்த சாதியினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

  சாதி கொடுமைகளை பார்த்து ஓடிவராத அமைப்புகள் மீனாட்சிபுரம் சம்பவத்திற்கு பிறகு ஓடிவந்து அலறியது ஏன். அனைவரும் மதம் மாறிவிட்டால் ஒடுக்குவதற்கு யாரும் கிடைக்கவில்லை என்றா அல்லது மற்ற மதத்தினரால் ஒடுக்கப்படுவோம் என்பதால்.

  மனிதத்தன்மை ஓங்கினால் இந்த சாதிதன்மைகளை ஒழிக்க முடியும். இதன் முதல் படி மதத்தை காப்பாற்ற சாதியை கலைவோம் என்று தொடங்கினால் எனக்கு அதில் ஆட்சேபனை கிடையாது. காலங்காலமாக தொடர்ந்து இரத்தத்தில் சதையில் ஊறிப்போன ஒன்றை களைய கடினம் தான் நீண்ட நெடிய போராட்டம் தேவை.

  ReplyDelete
 13. சார்வாகன், நன்றி.
  நரேன், அருமையான தெளிவான விளக்கங்கள்.

  ReplyDelete
 14. Oil-guzzling India, China, Brazil will ramp up price: Obama

  http://www.thehindu.com/news/international/article2927998.ece

  ReplyDelete