இந்நூற்றாண்டில் அதிக பயன்பாட்டுக்கு வந்தது எரிபொருள் தொழில் நுட்பம் சாந்த வாழ்வுமுறை என்றால் மிகையாகாது.எண்ணெய் எரிபொருள் மூலமே நம் போக்குவரத்து,தொழிற்சாலைகள்,மின்சாரம் தயாரிப்பு போன்றவை பெருமளவு நடக்கிறது.எண்ணெய் இல்லாத வாழ்வு என்பது மிகவும் கடினமாக்வும்,மனித நாகரிகத்தை பல் நூற்றாண்டுகள் பின் தள்ளிவிடும்.
எண்ணெய் தொடர்பில் பல போர்கள்,அரசிய்ல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது வரலாறு. எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வரும் போது,பயன்பாடு மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இக்காணொளி அரை மணிநேரமே இருந்தாலும் எண்ணெய் தொடர்பான பல் உண்மைகள்,வரலாறு அருமையாக பகிர்கிறது.இன்னும் 40 வருடங்களில் எண்ணெய் தீர்ந்து விடும் என்பது ஒரு கணிப்பு. சோளத்தில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிப்பது உணவுப் பஞ்சம் ஏற்படுத்தலாம்.
இப்போதும் கூட நம் நாட்டின் எண்ணெய் இறக்குமதியின் பெரும்பகுதி ஈரானிடம் இருந்தே வருகிறது.இபோது போர் வந்தால் ஈரான் எண்ணெய்க்கு பதிலாக சவுதி தன் எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக் கூறினாலும்,எந்த அளவுக்கு போதுமாக இருக்கும்?.போரின் விளைவுகள் அனைவருக்குமே கெடுதலாகவே இருக்கும்.
போரை தவிர்ப்பது நம் கையில் இல்லை என்றாலும் அதன் விளைவுகளை அறுவடை செய்தாக் வேண்டும் என்ற கட்டாயம் நமக்கு உண்டு.
காணொளி காணுங்கள்,எரிபொருள் பயன்பாட்டை குறையுங்கள். எண்ணெய்க்கு மாற்று எரிபொருள் சீக்கிரம் கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முனையட்டும்!!!!!!!!
