Thursday, February 2, 2012

ஜாகிர் நாயக் பரிணாம பாடம் கற்பிக்கிறார்:நகைச்சுவை பதிவு

இஸ்லாமிய மத விளம்பர பிரச்சாரகர் ஜாகிர் நாயக் மருத்துவ கல்வி பயின்றவர். இருந்தாலும் மத விளம்பரம் செய்வதே முழு நேரப் பணியாக கொண்டவர். இந்த காணொளியில் டார்வின் எப்படி பரிணாம் கொள்கையை வடிவமைத்தார் என பாடம் எடுக்கிறார்.இதை பார்த்தவுடன் நல்லவேளை இவர் மருத்துவத் தொழில் பார்க்கவில்லை .பார்த்து மட்டும் இருந்தால் "ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்" என்னும் பழமொழியை உண்மையாக்கி இருப்பார் என தோன்றியது.

அருமையான நகைச்சுவை கண்டு களியுங்கள்.நகைத்து மகிழுங்கள்!!!!!!!!!

டிஸ்கி அது ஆயிரம் வேர் கொன்ற என்று விள்க்கம் அளிக்க சில நண்பர்கள் முன் வரலாம் எனினும் ஜாகிர் நாயக்கிற்கு இது பொருந்தாது!!!!!!!!!!! 


26 comments:

 1. cro-magnon @ homosapiens சார்வாகன் அவர்களே, என்னால் முடிந்த மொழிப்பெயர்ப்பு.

  1) சாகிர் நாயக் : சார்ல்ஸ் டார்வின் keletropist(கேலப்டரபிஸ்ட்) என்ற தீவின் மேல் சென்றார்.
  பதில் : டார்வின் சென்றது Galapagos(கேலாபேகஸ்) தீவு.

  2) சா. நா : அங்கே டார்வின் பறவைகள் niches(நிட்சஸ்)யை கொத்துவதை பார்த்தார்.
  பதில் : (niches என்பது எளிதாக- பறவைகள் வசிக்குமிடத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமிப்பு செய்த பகுதி) பறவைகள் niches யை கொத்தவில்லை. அவைகள் தனிதனி niches சுற்றுசூழலில் வாழ்வதிஅ டார்வின் பார்த்தார்.

  3) சா. நா: அந்த மாதிரி niches யை கொத்துவதால்??? பறவையலகு நீளமாகவும் குட்டையாகவும் இருக்கும் – என்றார் டார்வின்.
  பதில் : பறவையலகை பற்றி மட்டும் சொல்லவில்லை. நிறம், சாப்பாடு, பாட்டு, அளவு போன்றவற்றைகளை பற்றியும் சொல்லியுள்ளார்.

  4) சா.நா : இந்த மாதிரி கவனிப்பு ஒரே இனத்தில் செய்யப்பட்டன.
  பதில்: ஒரே இனத்தில் செய்யவில்லை 14 வெவ்வேறு இனப்பறவைகளை ஆராய்ந்து கவனித்தார்.

  5) சா.நா. டார்வின் Charles thromtan என்ற அவரின் நண்பருக்கு கடிதம் எழுதினார்.
  பதில் : அந்த மாதிரி அவருக்கு நண்பர் கிடையாது. அந்தப் பெயருடைய நபரிடம் கடிதப் போக்குவரத்தும் அவர் வைத்துக் கொள்ளவில்லை.

  6) சா. நா. அதில் அவர் இணைப்புகள் காணவில்லை, அதனால் பரிணாமம் கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லை.
  பதில் : டார்வின் இணைப்புகள் காணவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். அதை எங்கே கண்டுப்பிடிக்க முடியும் என்பதையும் சொல்கிறார். அவர் ஒருப் போது பரிணாம கொள்கை ஒப்புக்கொள்ளவில்லை என்று சொன்னது கிடையாது.

  ….தொடரும்

  ReplyDelete
 2. நல்லா சிரிப்பு வருது! வேறென்ன சொல்ல? நண்பர் நரேனின் மொழிபெயர்ப்பு அருமை, ஆனால் உபதலைப்புகளுடன் கூடியவற்றிற்க்கு மொழிபெயர்ப்பு தேவையில்லை(என்னை பொறுத்தவரை). சில சமயங்களில் உச்சரிப்பு காரணமாய் புரிந்து கொள்ள கடினமாய் இருக்கும், அம்மாதிரி காணொளிகளில் நண்பர் நரேனின் உதவி தேவை.

  இந்த காணொளியை வெளியிட்ட அமைப்பின் பின்புலமென்ன?

  ReplyDelete
 3. வாங்க நண்பர் நரேன்,
  மொழி பெயர்ப்பு அருமை.நன்றி
  நண்பர் சீனிவாசன்
  இக்காணொளியை வெளியிட்டவர்கள் ஒரு கிறித்தவ மத விளம்ம்பரதாரர்களே!.தீப்பொறி ஆபுதீன்(பழைய பெயர் பி.ஜே)vs ஜெர்ரி தாமஸ் விவாதம் குறித்த ஜெர்ரியின் தளத்தில் இந்த காணொளி கிடைத்தது.அவர்கள் தளத்திலும் சில பரிணாமம் பற்றிய சில வினோத கருத்துகளை வெளியிட்டுள்ள்னார்.
  http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=181&Itemid=39

  ஆனால் அவர்கள் இப்படி காணொளி போட்டு நகைக்கும் அளவிற்கு மாட்டிக் கொள்ளவில்லை.

  இதில் பரிணாமம் பற்றிஒரு மருத்துவ படிப்பு படித்தவர் இப்படி அனைவரும் எள்ளி நகையாடும்படி கருத்துகளை சொல்வது மிகுந்த ஆச்சர்யம்+அதிர்ச்சி அளித்தது.

  ReplyDelete
 4. இந்த காணொளியை பீஸ் டிவி இல் பார்த்ததாக ஞாபகம்...அதே போல இன்னொரு தாடி வச்ச முல்லாவும் டார்வின் மேல அடுக்கடுக்கா குற்ற சாட்டுக்களை முன் வைத்தார்...அதாவது இப்படி ..
  முல்லா:- டார்வின் எந்த ஒரு பல்கலைகழகத்திலும் கற்றவர் அல்லர்,அவரிடம் ஒரு முதுமாணி பட்டம் கூட கிடையாது,அவரின் நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்திலும் ,நான் கண்டவைகளையே உனக்கு எழுதுகிறேன்,என் மனதில் தோன்றும் எண்ணங்களே இவை என்றே கூறியுள்ளார்..
  மேட்டர் என்னனா முல்லா குர்-ஆண் அறிவியல் களஞ்சியத்த கரைச்சு குடிச்சவரு...ஆனா மத்த படி அவர் ஒன்னும் பிரபஞ்ச அறிவியல் விஞ்ஞானியோ,நோபெல் பரிசு பெற்றவரோ இல்ல...இந்த லட்சணத்துல பரிணாம வளர்ச்சின்னு ஒன்னு இல்லைன்னு வாதம் செய்ய வந்துட்டாரு....குர்-ஆண் படி பார்த்த டயனோசர (dinosaur ) கட்டி தீனி போடு வளர்த்தது ஆதம் (நபி)யா இருக்குமோ?????????????

  அனுப்புணவனே அறிந்தவன் ...யா #@%^&$$##$^&^%!!!!!

  ReplyDelete
 5. @ naren:

  Yes sir ,According to the Google translate,Niches mean இடத்திற்கும்...doctor zakir naik is an scholar.but he has to go to a English class.

  ReplyDelete
 6. Religion leader Dr.Ibnu zakir's blog is not found. .can anyone tell what's happend??

  ReplyDelete
 7. நண்பர் விஜய்
  மதவாதிகளின் பரிணாம் விமர்சனம் என்பது ஒதுக்கி தள்ள வேண்டியது.பாருங்கள் ஜாகிர் நாயக் போன்ற ஒரு மருத்துவரே இப்படி பேசும் போது படிக்காத பிரச்சாரகன் என்ன செய்வார் ?பாவம்!!!!!!!!!!!!!.

  இபின் ஷாகிர் தளம் நீகப்பட்டுள்ளது.ஒரு வேளை அவராக நீக்கினாரா அல்லது கூகிள் நீக்கியதா என்று தெரியவில்லை.தேர்தல் வரை மத விமர்சனத்திற்கு தடையா இல்லையா எபோதும் த்டையா என்று தெரியவில்லை.நலமாக் இருக்கிறார்.மீண்டும் வருவார் இ.சா(ஹி ஹி ஈசா அல்ல!!!!!!!!) என நம்புவுவோம்

  ReplyDelete
 8. //ஜாகிர் நாயக் போன்ற ஒரு மருத்துவரே இப்படி பேசும் போது படிக்காத பிரச்சாரகன் என்ன செய்வார்//
  முகமெட் அலி அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார் என்பவர்களையும் பார்த்திருக்கோமில்ல.
  சகோ சார்வாகன், மத அறிஞர் இப்னு ஷாகிர் மீண்டும் வருவார். தனது மத கருத்துக்களை மக்களிடம் சிறப்பாக எடுத்து செல்வார்.
  ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

  ReplyDelete
 9. நம்ம பீ.ஜே அண்ணனும் சாகிர் நாய்க் மேல செம காண்டுல இருக்காப்ல...அண்ணாச்சி மிளகு அப்பளமா பொரிஞ்சு தள்ளிட்டாரு இந்த சுட்டில.... http://nashidahmed.blogspot.com/2010/11/blog-post_8325.html

  அது மட்டுமில்லாம இங்கு கொழும்பில் தமிழ் மும்மின்கள் தான்..தாவா பணி செய்யும் போது கைல எடுக்குற முதல் ஆயுதம் சாகிர் நாயகின் சி.டி யை தான்...ஏதும் கேள்வி கேட்டா உண்மையான இஸ்லாம அறிய குர்-ஆணை படிச்சு பாருங்க.னு சொல்வாங்க...அப்படியும் குற்றம் கண்டு புடிச்சு கேட்டா உண்மையான இஸ்லாம அறிய குர்-ஆணை அரபி மொழில படிச்சு பாருங்கன்னு சொல்றாங்க..20 வருஷமா சிறீலங்கால இருந்து சிங்களமே இப்ப கொஞ்ச நாளாதான் fluent அ பேச,வாசிக்க பழகிருக்கேன்.இதுல அரபி வேறயா ??தமிழ் குர்-ஆண் அறிவிலி யாரும் எழுதினாங்களா??னு கேட்டா அப்படியும் இல்ல...அறிவுமிக்க மும்மின் தான் எழுதிருக்காரு..இனி ஜாகிர் நாய்க் இன் தாவா சீடர்கள் வந்த இந்த videovai பரிந்துரை செஞ்சுட்ட போச்சு

  ReplyDelete
 10. மீண்டும் வருவார் இ.சா(ஹி ஹி ஈசா அல்ல!!!!!!!!) என நம்புவுவோம் /////

  தங்கள் வாயில் இந்த லொள்ளு என்றென்றும் நிறைந்திருப்பதாக .......

  ReplyDelete
 11. சகோ விஜய் அருமையான் சுட்டி
  இதில் ஜாகிர் நாயக்கின் மீது இரு குற்ற்சசாட்டுகளை வைக்கிறார்.திரு பி.ஜே
  1. மத புத்தகத்தில் அறிவியல் என்று காண்பிக்க டஹாஹா என்னும் அரபி சொல்லுக்கு த்வறான் பொருள் தருகிறார்.
  //அது போல் அறிவுப்பூர்வமாக இஸ்லாத்தை விளக்குகிறேன் என்ற பெயரில் பல சந்தர்ப்பங்களில் தவறாகக் கூறி இருக்கிறார்.
  உதாரணமாக والأرض بعد ذلك دحاها79:30 வசனத்தில் பூமியை இதன் பின் விரித்தான் என்று கூறப்படுகிறது. இந்த வசனத்தில் தஹாஹா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி இவர் குறிப்பிடும் போது தஹா என்றால் முட்டை என்று பொருள். பூமி முட்டை வடிவில் இருப்பதை அன்றே குர்ஆன் கூறி விட்டது என்று கூறுகிறார். அரபு மொழி அறியாதவர்கள் ஆஹா ஓஹோ என்று இதைப் புகழ்வார்கள். இவர் கூறுகிறபடி தஹாஹாவுக்குப் பொருள் செய்தால் அதன் பின் பூமியை அவன் முட்டை என்று வரும். குர்ஆனைக் கேலிக் கூத்தாகுகிறார் என்று தான் அரபு மொழி அறிந்தவர்கள் கூறுவார்கள். தஹா என்பது வினைச் சொல்லாகும். அதன் பொருள் விரித்தான் என்பதாகும். வினைச் சொல்லுக்கு முட்டை என்று பொருள் கொள்வது அறியாமையாகும்.//

  2. திரு பி.ஜே எழுதிய ஒரு புத்த்கத்தை ஜாகிர் நாயக் தன் பெயரில் வெளியிட்ட்டுள்ளார்
  //மேலும் இயேசு இறை மகனா என்று நான் எழுதிய நூலை ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டேன். அந்த நூலை ஜாகிர் நாயக் சென்னை வந்த போது என் சார்பில் பாக்கர் மூலம் கொடுத்து அனுப்பினேன். இதன் பின்னர் ஆறு மாதம் கழித்து ஜாகிர் நாயக் சகோதரர் அல்லது உறவினர் பெயரில் இயேசு இறை மகனா என்பது குறித்து ஒரு நூல் ஜாகிர் நாயக் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டது. அது அப்படியே எனது நூலின் தழுவலாக இருந்தது. கிறித்தவ பாதிரியாருடன் விவாதிப்பதற்காக நான் ஆறு மாதம் உழைத்து திரட்டிய தகவல்களைத் தான் அந்த நூலில் குறிப்பிட்டிருந்தேன்.
  அவர் வெளியிட்ட ஆண்டு என்ன? நான் எத்தனை வருடங்களுக்கு முன் வெளியிட்டேன் என்பதை ஒப்பு நோக்கும் எவரும் இந்த உண்மையை உறுதி செய்து கொள்ளலாம் சென்னையில் ஒருவர் தவ்ஹீத் போர்வையில் நூல் வெளியிடும் ஒருவர் மற்றவர்களின் நூல்களைக் காப்பி அடித்து வெளியிட்டு வருவதை பலரும் அறிவார்கள். அவரைப் போன்று இழிந்தவராக இவரும் இருக்கிறர் என்று நான் பேசியதுண்டு//

  ReplyDelete
 12. சகோ விஜய்
  ஜாகிர் நாயக்கின் மீதான பி.ஜேவின் விமர்சனத்தை இவ்வாறு பார்க்கலாம்.இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.
  1. மத விளம்பர பிரச்சாரகர்கள் ஒரு நிறுவனம் போலவே இயங்குகின்றனர்.செலவுகளை சமாளித்து இலாபம் ஈட்டியே ஆக வேண்டும்.போட்டி என்பது தவிர்க்க இயலாது.ஆகவே மதத்தில் உள்ள மற்ற‌ பிரச்சாரகர்களை விமசிப்பதும் இதில் ஒன்றே.

  2. பி.ஜே அங்கில மொழியிலும் தன் கருத்துகளை வெளியிட நினைக்கும் போது ஜாகிரை போட்டியாளராக சந்திக்க் நேரிடும்.

  3. மத புத்தகத்தில் அறிவியல் என்பதும் பரிணாம கொள்கை எதிர்ப்பு என்பதும் மத விளம்பரமே என்பதில் நம்க்கு மாற்று கருத்து இல்லை

  மத பிரச்சாரகர்கள் தங்களுக்குள் உள்ள பிரசினைகளையே தீர்க்க இயலாதவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என எண்ணி கருத்து கேட்பவர்கள்தான் நகைப்புக்கு உரியவர்கள்.

  ReplyDelete
 13. சகோ சார்வாகன் அண்ணாவிற்கு,

  கடந்த சில வருடங்களா பீஸ் டிவி ஐ பார்த்து வருகிறேன்.சில அப்பட்டமான அறிவற்ற கருத்துக்கள் சாகிர் நாய்க் இனால் வெளியிடப்பட்டு வருகிறது.உதாரணத்துக்கு இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிய உரையில் உலகில் முதன் முதலில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகளே,அவர்கள் இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற வகையில் அவர் கூறினார்....அது போதுமே குழுமி இருந்த மும்மிங்களக்கு....ஆரவராம் பண்ணிடாங்க...இங்கு நோக்க வேண்டிய விடயம் என்ன எனில்,விடுதலை புலிகள் காலை 5 மணிக்கு எழுந்து சந்தியாவந்தனம் செய்து இதர பக்தி கடன்களை செயும் இந்து மக்களா என்பதே...புலிகளின் கொடியில் காணப்படும் சிவப்பு நிறம் கம்யுநிசத்தையும்,புலி சின்னம் சோழர் கொடியின் சின்னத்தை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.(சிங்கம் vs புலி).அப்படிப்பட்ட கம்யுனிசவாதிகளை ,சிவசேனா போல ஒப்பிடுவது மடமையின் உச்சம்.

  ReplyDelete
 14. சாகிர் நாயகின் பயங்கரவாத பரிணாம வளர்ச்சி கட்டங்கள் ..

  அறிவிப்பாளர் சாகிர் நாய்க்,

  படி 1 .இஸ்லாமியம் அமைதி மார்க்கம்,தீவிரவாதம் செய்வது இஸ்லாமுக்கு எதிரானது.

  படி 2 .இஸ்லாம் தீவிரவாதம் செய்ய சொல்லவில்லை,அடக்கப்படும் போது எதிர்க்க சொல்லியுள்ளது.அதையே இஸ்லாமியர்கள் உலகெங்கும் செய்கின்றனர்.

  படி 3 :பகவத் கீதையில் கூட பகவான் போர் புரிய சொல்கிறார் ..
  இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30).
  அதையே தான் இஸ்லாமிய "விடுதலை வீரர்களும் செய்கிறார்கள்", இது போராட்டம் இதில் தவறேதும் இல்லை.

  படி 4 : இஸ்லாமியர்கள் உலகெங்கும் அடக்கி ஒடுக்கபடுகின்றனர் (crocodile tear!!)..யூதர்கள் நிலம் தேடி அலையும் போது அவர்களை வரவேற்று இடம் அளித்தது நாங்கள் தான்.அனால் இன்று சொந்த இடத்தை பெற்று கொள்ள பாலஸ்தீனிய இஸ்லாமியர்கள் போராட வேண்டி உள்ளது.ஆகவே தீவிரவாதம் என்பது இஸ்லாமியர்கலக்கு மட்டும் ஏகபோக உரிமை கொண்டது அல்ல.( ஒரு வழியா இஸ்லாமியனும் தீவிரவாதம் செய்கிறான் என ஒப்புகொண்டார்)

  படி 5 :ஷரியா சட்டமே உலகுக்கு உகந்தது,குற்றங்களக்கு அல்லா கூறிய வழியில் கழுத்தை வெட்டுதல்,பொதுவில் கல்லால் அடித்து கொல்லுதல் போன்றவை அமுல்படுதப்படுமாயின் உலகெங்கும் அமைதி நிலவும் ...

  பாருங்க எப்படி காபீர் கிட்ட படிபடியா இஸ்லாமியதை போதிக்கிறாங்க..முன்னாடியே இஸ்லாம்ல வன்முறை இருக்குனு சொன்ன ஒடிபோயடுவங்க னு வாழைபழ ஊசியா பேசுறார் ..அதை விட அவரின் கேள்வி பதில் நேரத்துல கேள்வி கேக்குற கபீர்கள் இஸ்லாம் இதை அனுமதிக்குதா,அதை
  அனுமதிக்குதானு கேக்குறாங்களே தவிர இப்னு சாகிர்,தமிழன்,நெஞங்க,நரேன் கேக்குற மேரி கேள்விகள் ஒன்னும் கேக்க மாட்றாங்க..

  பரிணாமம் பத்திய அறிவு நம்ம கிட்ட குறைவா இருப்பதை உபயோக படுத்தி அவர் ஏகத்துக்கு அவுத்து விடுறாரு....காபீர்களே கவனம்

  ReplyDelete
 15. நெஞங்க ...Typing mistake...neenga kekura mari kelvigal keka maatranga

  ReplyDelete
 16. சகோ விஜய்
  ஒரே ஒரு வேண்டுகோள் (காமெடி)பீஸ் தொ(ல்)லைக் காட்ட்சி பர்க்காதீர்கள்.தமிழர்கள் அற்வியலிலும் அரசியல் இராஜதந்திரத்திலும் முன்னெடுக்க நடவடிக்கைகள் கற்றுக் கொள்வதே காலத்தின் கட்டாயம்.
  இது பற்றி நிறைய அறிந்து கோள்ளுங்கள்.கற்பதை முடிந்தால் பதிவு எழுதுங்கள்,பகிருங்கள்.இந்த ஜாகிர் நாயக் ,பால் தினகரன்,நித்யானந்தா போன்ற மத(ட) வியாபாரிகளை பற்றி விவாதிப்பது வீண்.இப்பதிவில் பரிணாமம் பற்றி ஒரு மருத்துவரே இப்படி கூரூவது மிக வினோத்மான செயலாக் இருப்பதல் மட்டுமே பதிவிட்டேன். மற்றபடி அவர் தொழிலுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கும் வரை அது தொடரும்.

  கருத்துக்கு நன்றி.
  நமக்கு

  ReplyDelete
 17. அவரை பற்றிய அனைத்து தரப்பிலான விவாதங்களையும் பகிரவே அதை பற்றி மறுமொழி இட்டேன்..ஆயினும் தவறை சுட்டி காட்டிய சகோ.சார்வகான் அண்ணாவுக்கு நன்றிகள்.....நான் இனைய பாவனை செய்வது எனது அலுவகலத்தில் தான்..ஆயினும் பதிவிடும் அளவு நேரம் கிடைப்பதில்லை..வெகு சீக்கிரம் கணினி வாங்க போகிறேன்..அதன் பின் சிறப்பான பதிவுகளை வெளியிட எண்ணியுள்ளேன்...நன்றிகள் ...தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைப்பின் எனக்கு பயனாக இருக்கும்..
  எனது முகவரி vijayvijaiy1 @gmail .com ..விருப்பம் இருப்பின் பதில் தரலாம்...
  நன்றி

  ReplyDelete
 18. பரிணாமம் பற்றிய வாதங்களில் அதற்கு எதிரான கருத்துக்கள் எடுகோள்கள்,வாதங்கள் அடிப்படையில் முன்னிறுதபடுவதில்லை...பைபிள் மற்றும் குர்-ஆண் ஆகியவற்றில் உலகம் 6 நாட்களில் படைக்கப்பட்டதாகவும் ஆதம் நபி படைக்கப்பட்டு தேவசெய்தி அல்லது வஹி அவருக்கு இறங்கியதாகவும் கூறபட்டாலும் உலகம் படைக்கப்படும் போது மனிதன் மொழி அறிவுடன் தான் படைக்கபட்டானா??? அல்லது எவ்வாறு தேவனின் வார்த்தைகள் புரிந்து கொள்ளப்பட்டது?? சுவனப்ரியன் அடிக்கடி சொல்ற மாதிரி 5000 வருடங்கள் முன்பு தான் எழுத்து முறைகள் உருவாக்கப்பட்டது என இருக்கும் போது அதெப்படி ஆதம் நபிக்கு வெளிப்படுத்தின விஷேசங்களும் ,வஹிக்களும் எவ்வாறு தான் வாய் மொழிமூலமாக கடத்தி வரப்பட்டு இன்று சாகிர் நாய்க் தாவா செய்ய உறுதுணையாக உள்ளது என்ன மாயமோ .....??????? நான் படித்தது இந்து பாடசாலை ஆகையால் அங்கு டார்வின் கோட்பாடை படிக்கும் போது பரிணாம வளர்ச்சி பற்றி நிறைய அறிய முடிந்ததுடன் ,அவரின் ஆராய்சிகள்,நிறமூர்த்தங்கள்,பரம்பரை அலகுகள் பற்றி அறிய முடிந்தது...ஆயினும் இதுவே இஸ்லாமிய பாடசாலை ஆயின் தவறான ஒன்றை படித்து கொடுக்க மாட்டோம் என அப்பாடத்தை மட்டும் கை கழுவி விட்டுருப்பர்....

  ReplyDelete
 19. பைபிள் உள்ளவை வெறும் ஊகக் கதைகள்- புனையப்பட்டவையே என பைபிளியலாளர்கள் ஏற்கின்றனர்.

  தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய
  புதிகளுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படப்பு, பாவம், சாவு, துன்பம்...)இதற்குரிய பதிலகளைப் "படைப்பு" போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது.
  - பக்கம் 15 "நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி -பதில்; - கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் S.S.தெயோபிலஸ்
  எழுதிய நூல்- : “நிஜங்கள்- விவிலியம் பற்றிய கேள்வி - பதில்கள்”, இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்.

  இதே போல இஸ்ரேலின் அக்ழ்வாய்வு முடிவுகள் ஆபிரகாம் ஸாலமோன் வரை உள்ளவை அனைத்தும் புனையப்பட்டவை என்கின்றனர்.
  இன்னுமொரு நூல் –
  http://wp.me/PxRSh-7E
  • Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
  இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
  இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
  1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
  2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
  3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
  4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
  5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
  6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
  7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.

  ReplyDelete
 20. மோசே சட்டங்கள் முழுதையும் மேலும் சாலமன் ஜெருசலேம் கர்த்தர் ஆலயம் கட்டும்போது செய்தக் கொலைகளை எல்லாம் ஒன்றிணைத்து பார்த்த ஒரு
  ஆப்பிரிக்கப் பாதிரியார், இவர் முன்பு கணிதப் பேராசிரியராக இருந்தவர், இவர் முன்பு கணிதப் பேராசிரியராக இருந்தவர், ஒவ்வொரு நிமிடமும்
  தினந்தோரும் 400௧600 ஆடுகள் பலி எனக் கொலைகள் என்றும் எபிரேய யூதமதப் பாதிரிகள் தினமும் 88 புறக்கள் சாப்பிட வேண்டும் என்பது பைபிள் படியான சட்டங்களின்படி என்றார். அந்த ஆப்பிரிக்கப் பாதிர்யாரை சர்ச் கிறிஸ்துவத்திலிருந்து வெளியேற்றியது, ஆனால் இப்படிப் பட்ட சட்டங்கள்
  இன்றும் உலகில் தேவன் வார்த்தை என பரப்பப் படுகிறது.
  No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained
  as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch,
  the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily
  and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads.
  Page-266 The Religious World.
  ஒரு பத்திரிக்கைச் செய்திப்படி 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் அமெரிக்காவின் பல்வேறு மாநில அரசுகளாலும் மாநில உச்ச நீதிமன்றங்களாலும்
  படிப்பவர் மனதைப் பாதிக்கும் அருவெறுப்பானவைகளை கொண்டது என பைபிள் 113 முறை தடை செய்யப் பட்டது
  BIBLE Banned IN America - Will Sonia Gandhi follow?-
  http://youngindiansu.blogspot.in/2011/12/bible-banned-in-usa-will-sonia-gandhi.html

  உலகம் படைக்கப் பட்டு 6000 வருடங்கள் தான் ஆகிறது என கதை புனைகின்றது விவிலியம்.
  உலகம் படைக்கப்பட்டதின் பைபிள் தரும் துல்லியக் வரலாற்று கணக்கு
  சந்ததி பிறந்த ஆதாமிய வருடம் வாழ்நாட்கள் இறந்த ஆதாமிய வருடம்
  ஆதாம் ——————-000——————-930—————930
  சேத்————————-130————————912—————1042
  ஏனோஸ் —————–235————————-905—————1140
  கேனான்——————–325———————–910—————1235
  மகலாலெயேல்————395———————–895—————1290
  யாரேத்———————-460————————962—————1422
  ஏனோக்கு——————622————————-365————–987
  மெத்தூசலா—————-687————————-969————–1656
  லாமேக்கு ——————874————————-777————–1651
  நோவா———————-1056———————-950—————2006
  சேம்————————–1556———————-600—————2156
  அர்பக்சாத்——————1658———————-438—————2096
  ************************************************************************
  சாலா————————-1693———————433—————2122
  ஏபேர்————————1723———————-464—————2187
  பேலேகு———————1757———————–239————–1996
  ரெகூ————————-1787———————–239————–2026
  செரூகு———————–1819———————–230————–2049
  நாகோர்———————1849————————148————–1997
  தேராகு———————-1878————————-205————-2083
  ஆபிராம்———————1948————————175————-2123
  இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து
  எடுக்கப்பட்டுள்ளது.
  ****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார்.
  லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது
  சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன்.
  நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர்.
  தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன்.
  நோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 5000 வருடங்கட்கும் மேலாக. யூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் புனைகின்றனர்.

  ஆனால் பைபிள் புனைந்த கதையை குரானும் சொல்கின்றது.இருமதத்தினரும் பாமரரை இன்றும் ஏமாற்றி வருகின்றனர்.

  ReplyDelete
 21. வாங்க சகோ தேவிப்பிரியாஜி
  உங்கள் பதிவுகள் படிக்கும் வாசகன் என்ற முறையில் நம் தளத்திற்கு நீங்கள் வந்து கருத்திட்டது நமக்கு மிக பெருமை.புத்தகம் சார்ந்த மதங்கள் வரலாற்று ஆதாரம் இல்லாத்வை என்பதை அருமையாக் விள்க்கி கருத்திட்டதற்கு நன்றி.
  அடிக்கடி வாங்க

  ReplyDelete
 22. சகோ விஜய் நீங்கள் அருமையாக பல் விவரம் அறிய முயல்வது அறிய முடிகிறது.உங்களுக்குள் உள்ள தேடலை தொடருங்கள்.நம் மின்னஞ்சல் இது saarvaakan@gmail.com.தொடர்பு கொள்ளுங்கள் இன்னும் விவாதிப்போம்.
  நன்றி

  ReplyDelete
 23. ஆபிரகாம் = இப்ராஹீம் இயேசு=ஈசா மோசே=மூஸா ...ஆத்தி ...என்ன பிட்???? ஆபிரஹாமிய அ(றி)வியல் பல விஞ்ஞான புதுமைகளை கொண்டிருக்கும்..கடல் இரண்டாக பிளக்கும் என்பது இது வரையிலான அறிவியலுக்கு எதிரானது எனினும் அவ்வாறு நடந்தது என கொண்டாலும்,கடல் நீர் இரண்டாக பிளக்க செங்குத்தாக அதிவேக சுழல்காற்று உருவாகி இருக்க வேண்டும்....அப்படி அக்காற்று நீரை இடம்பெயர செய்து இருக்கும் எனினும் ,அங்கு தோன்றிய வெற்றிடத்தை நிரப்ப பக்கவாட்டில் இருக்கும் காற்று நீரை தள்ளும்...அந்த இயக்கத்தையும் தேவன் (அ) இனைகட்பிக்க முடியாதவன்!!! ஸ்டாப் பட்டன் துணை உடன் நிறுத்தினான் எனினும் ,அத்தனை மக்கள் அவ்வளவு தூரத்தை பாரோ மன்னன் படைகளிடம் அகப்படாமல் தப்பித்து வந்ந்துடான்கலம்...இந்த கதையே இப்படின நோவா கதை இன்னும் மோசம்.உலகின் அத்தனை ஜீவராசிகளும் ஒரு பேழையில் போட்டாராம்...கூகிள் search அப்பவே இருந்துச்சா???அவ்வளவு மிருகங்கள எப்படி கண்டு புடிச்சார்???...ஒண்ணுமே புரியல .... ஆனா அதே தேவன கும்பிட்ட எத்தனையோ தமிழ் ஈழ சகோதரர்களை இறுதி முள்ளிவாய்கள் யுத்தத்துல காப்பத்த எந்த கடவுளின் குழந்தையும் வரல...கேட்டா கடவுள் பாவிகளக்கு தண்டனை kodukka அப்படி செய்றாராம்..ஆனா,யூதர்கலக்கு மட்டும் தனிய நாடு பட்டா போடு கொடுப்பாராம்... என்ன கொடுமை கடவுள் சார் இது???

  ReplyDelete
 24. நண்பர் விஜய்

  கூகுள் சர்ச் அப்பவே இருந்துச்சா? என கேட்டுள்ளீர்களே,சாதாரண மனிதனுக்கே இத்தனை பவர் இருக்கும் போது கடவுளுக்கு இருக்காதா? என்கிற முட்டாள்தனமான கேள்வியைத்தான் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, யார் சிந்திக்கிறார்கள்?

  ReplyDelete
 25. lol, இந்த யாசிர் , இறந்துபோன யூதனை நம்புபவர்...

  ReplyDelete
 26. இங்கே இறைவன் இல்லை என்று வாதிடும் அனைவருக்கும்.......உங்கள் இறப்பிற்கு பின் உங்கள் கேள்விகள் விளக்கப்படும் அய்யாக்களே...இறைவன் இல்லை என்றால் நம் எவருக்கும் இறப்பிற்க்கு பின் பிரச்சனை இல்லை....ஆனால் படைத்தவன் என்று ஒருவன் இருந்தானாகில் .......நாம் வீணாக பேசியதற்க்கு தண்டனை இருக்கும்.......

  ReplyDelete