Tuesday, February 14, 2012

பரிணாமத்தின் சான்றுகள் காணொளி


நண்பர்களே பரிணாமம என்பது உயிரின‌ தோற்றம் விள்க்கும் இப்போதைய அறிவியல் கொள்கை.இயற்கைத் தேர்வு+சீரற்ற சிறுமாற்றங்களினால் ஒரு செல் உயிர்களில் இருந்தே அனைத்து உயிரினங்களும் கிளைத்து தழைத்தன எனும் சார்லஸ் டார்வினின் கொள்கையாக்கமானது 150+ வருடங்களாக் உயிர் தோற்ற, பரவல் கொள்கையாக கோலோச்சி வருகின்றது.

மதவாதிகளின் படைப்பு புனைவு கதைகளுக்கு முரணாக அவர்கள் இருப்பதால் பரிணாம் கொள்கையை எதிர்க்கும் கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.அறிவியல் கொள்கையான பரிணாம கொள்கை அறிவியல்ரீதியாக் விமர்சிக்கப்பட்டால் நல்லதே,ஏன் எனில் அறிவியலில் விமர்சனம்+மாற்றுக் கொள்கைகளின் போட்டி என்பது ஒவ்வொரு கொள்கையாகக்த்திற்கும் உண்டு.சான்றுகளுக்கு அதிகம் பொருந்தி இயற்கை விதிகளை மீறாத கொள்கையே அறிவியலில் ஏற்கப்படும்.அவ்வகையில் ஏதேனும் மாற்று அறிவியல் கொள்கை வரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை.பரிணாம் செயல்பாடுகள்,வேகம் இவற்றின் படி மட்டும் சில விவாதங்கள் உண்டு.இவை பரிணாம் கொள்கையை எதிர்ப்பதாக் அல்ல பண்படுத்துவதாகவே கொள்ளலாம். எதிர் விமர்சனங்களுக்கு  பதில் கொடுப்பது எளிது என்பது அனைவருக்கும் தெரியும்.

பெரும்பாலும் பரிணாம எதிர்ப்பு விமர்சனங்கள் எப்ப்டி இருக்கும் எனில்,
ஏதாவது வித்தியாசமான் உயிரினம்,உடல் உறுப்பு,தாவரம் காட்டி 
"அடேயப்பா இம்மாம் பெரிசா அளகா ஷோக்கா கீது" இது எப்ப்டி நைனா பரிணமிக்கும் என்பதுதான்.

நண்பா இதற்கு பரிணாம் வரலாறு உண்டு ஏற்கென்வே அறிவியல் கட்டுரை எழுதி ஆய்விதழ்களில் பதிவிட்டு உள்ளார்கள் என்று கூறினால் ஏற்காமல் எதையாவது கூறி மழுப்புவதும் வழக்கமே!!!!!!!!

ஆகவே இதுவரை பரிணம்த்திற்கு எதிரான் ஒரு சான்றையும் பரிணாமம் கற்கும் இந்த ஒரு வருடத்தில் காண் முடியவில்லை.வேண்டுமானால் அந்த முதல் செல் எப்படி தோன்றியது என்பது அறிவியலில் உறுதியாக் வரையறுக்கப்படவில்லை. என்பதை ஒரு காரண்மாக ஏற்கலாம்.அதுவும் தீர்க்கப்படும் என எதிர்பார்க்க்லாம். இது குறித்த பல ஆய்வுகள் முன்னெடுக்கப் படுகின்றன. இது பற்றியும் ஒரு பதிவு விள்க்க்மாக் எழுதுவோம்.இன்றைய விடை தெரியா கேள்விகளுக்கு விடை தேடுவதே அறிவியல்.இது ஒரு தொடர் பயணம்.

பரிணாமம் மதம் புத்தகம்,ஒழுக்கம் பற்றி எதுவும் சொல்வது இல்லை.அறிவியல் என்ற முறையில் கற்பது அவசியம் என்பதையே வலியுறுத்தி வருகிறோம்பரிணாமத்தை எதிர்ப்பவர்கள் பெரும்பாலோனோர் மத(ட)வாதிகளே என்பதும் அறிந்ததே.. பரிணாம் கொள்கையாளர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பது மதவாதிகளால் ஆதிகாலத்தில் இருந்தே மத விமர்சகர்களை ஒழித்துக்கட்ட பயன்படுத்தப்பட்ட உத்தி என்பதை வரலாற்றின் இரத்தம் தோய்ந்த பக்கங்கள் பேசுகின்றன.பரிணாமம் தவறெனில் அறிவியலாளர்களே இந்த 150+ வருடங்களில் நிரூபித்து இருப்பார்கள்.தவறான அறிவியல் கொள்கை நீடிக்க இயலாது.

ஆகவே யார் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அறிவியல்ரீதியாக தவறென்று நிரூபிக்கப்படாதவரை பரிணாமக் கொள்கையே இப்போதைய அறிவியல் கொள்கையாக நீடிக்கும்.ஆகவே பரிணாம் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு ஏற்பதா,எதிர்ப்பதா என்று முடிவு செய்ய வேண்டுகிறோம்.எதிர்ப்பதை அறிவியல் ரீதியாக செய்ய வேண்டுகிறோம்.

பரிணாம அறிவியல்  கற்கும் ஆவல் உள்ள்வர்களுக்காக் இந்த பரிணாமத்தின் சான்றுகள் என்ற காணொளியை அளிக்கிறோம்.

பரிணாமத்தின் சான்றுகள்  இக்காணொளியில்  மிக அற்புதமாக விள்க்கப்படுகிறது.இதில் பல விடயங்கள் அலசப்படுகின்றது.

1.பரிணாம் மர கிளை குழு உயிரினங்கள் ஒத்த குணங்களை கொண்டுள்ளன.
2. படிம வரலாறு&இடைப்பட்ட படிமங்கள்.
3.பரிணாம் மாற்ற‌ வளர்ச்சியின் அலகு டார்வின். [ 2.7/1 மில்லியன் ஆண்டுகள்] இது படிம வரலாற்றில் 0.6 ல் இருந்து 32 டார்வின் வரை காண்பப்டுகிறது.

4.குழு கலப்பின விலங்குகள்[hybrid]
5..குரோமோசோம் பிளவு[chromosome fusion]
6. டி என் ஏ குறியீடுகள்
7. கருவியலில் பரிணாம சான்றுகள்

இன்னும் மூலக்கூறு உயிரியல் பரிணமத்தின் பல சான்றுகளை தரும் என எதிர்பார்க்க்லாம்.கண்டு களியுங்கள் காணொளியை!!!!!!!!!!!

4 comments:

 1. அன்புள்ள சார்வாகன் ,
  உங்களது வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
  ஐன்ஸ்டினின் இயக்கவியல் கொள்கை போன்றே டார்வினின் இயற்கை தேர்வு கொள்கையும் மண்ணுலகம் உள்ளவரை நிலைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
  நன்றி.

  ReplyDelete
 2. வாங்க நண்பர் செல்வக் குமார்
  பரிணாமக் கொள்கையும் பிற அறிவியல் கொள்கைகளை போலவே பல்வித பரிசோதனைகளையும் தாண்டி வந்து விட்டது.இக்கொள்கையிலும் சில இயற்கை விதிகளுக்கு உடபட்ட பண்படுத்தும் மாற்றங்கள் மூலக்கூறு அறிவியலின் அடிப்படையில் வரலாம்.மாற்றங்கள் என்பது இயலபானதே.ஆனால் மதவாதிகள் எதிர்பார்க்கும் பரிணாம் கொள்கை முற்று முழுதாக தவறு என்பது நடக்கவே நடக்காது.

  பரிணாம ஒரு அறிவியல் கொள்கை அதனை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் நம் கொள்கை.மற்றபடி பரிணாமம் கற்றால் ஒழுக்கமற்ற‌வன் ஆவான்,மத நம்பிக்கை கொண்டால் ஒழுக்க சீலன் ஆவான் என்பதெல்லாம் ஆதாரமற்ற விடயங்கள்.பரிணாமம் உயிர்த் தோற்ற கொள்கையாக் ஏற்பவர்கள் (மதம் கடந்த) இறை நம்பிக்கை கொள்வதிலும் எந்த முரணும் இல்லை.
  வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி அடிக்கடி வாங்க!!!!!!!!!!!!!

  ReplyDelete
 3. அருமையான காணொளி,
  எளிமையாக வரிசைப்படுத்தி தெளிவுபடுத்துகிறது.

  நாட்டாண்மை விஜயகுமார் ஸ்டைலில்..

  இந்த அத்தாட்சியெல்லாம் செல்லாது..செல்லாது...
  குரான், ஹதீஸ், பைபிள் இருக்குதா?? இருந்தால் அதுதான் அத்தாட்சி. அந்த அத்தாட்சி, சாட்சி கொண்டுவாங்க..

  ReplyDelete
 4. ஹாஅ ஹா ஹா
  நல்ல நகைச்சுவை நரேன்
  மத புத்தகவாதிகள் நாட்டாமை அல்ல,குற்றம் சாட்டப் பட்டவர்கள்.அவர்களின் சாட்சியமும் செல்லாது.
  நன்றி

  ReplyDelete