Tuesday, October 30, 2012

ப்ரோட்டா ,ப்ரோட்டீன் ,பரிணாமம் தொடர்பு என்ன?[பரிணாம ஆதாரங்களைப்] பார்க்காதே

[பரிணாம விளக்கங்களைக்] கேட்காதே
[பரிணாமம் மறுக்க] மத புத்த்கம் படி!!வணக்கம் நண்பர்களே,


நம்மை எப்போது நினைத்து வாழ்த்தும் மார்க்க சகோக்களே, பரிணாமம் கற்க ஆதரவளிக்கும் நண்பர்களே மீண்டும் ஒரு பரிணாம விளக்கப் பதிவோடு சந்திப்பதில் மகிழ்ச்சி.நமது அன்புக்கும், பாசத்துக்கும் மரியாதைக்கும் உரிய பதிவுலக மார்க்கமேதை அண்ணன் சுவனப் பிரியன் பரிணாமம் கற்க ஆரம்பித்தது நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. நாளொறு மேனியும் பொழுதொறு வண்னமாய் அழகிய முறையில் பரிணாம எதிர்பதிவுகள் எழுதி வருகிறார். நாமும் இதற்கு மறுப்பு எழுத என்றும் விரும்புவதால் அவரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம். முதலில் அவரின் இப்போதைய பதிவின் சாரத்தை அறிவோம்.
http://suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_7859.html

1.1.// நாம் கேட்பது இந்த புரோட்டீனுக்கு இத்தகைய அறிவை கொடுத்து அதனை வேலை வாங்குவது யார்? //


புரதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


புரதம் (Protein) என்பது அதிக மூலக்கூறு எடையுள்ள, அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட சிக்கலான கரிமச் சேர்மமாகும். அனைத்து உயிரணுக்கள் மற்றும் தீ நுண்மங்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுக்குப் புரதம் இன்றியமையாததாகும். பல புரதங்கள் வளர்சிதைமாற்றங்களில்உதவும் நொதிகளாகவோ நொதிகளின் துணையலகுகளாகவோ விளங்குகின்றன. வேறு சில புரதங்கள் கட்டமைப்பு மற்றும் இயக்க ரீதியான பணிகளைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, உயிரணுகளின் வடிவத்திற்குக் காரணமான கலசட்டகத்தை (Cytoskeleton) உருவாக்குவது புரதங்கள் ஆகும். அக்ரின் (actin), மயோசின் (myosin) எனப்படும் தசைகளில் காணப்படும் புரதங்கள் தசை அசைவில் பங்கு கொள்கின்றன. நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும்பிறபொருளெதிரிகள், ஈந்தணைவிகளின் சேமிப்பு மற்றும் உயிரணுக்களுக்கிடையிலான சமிக்ஞைகளைக் கடத்தல் போன்றவை புரதங்களின் இதர பணிகளாகும்.


எளிதாக புரியவேண்டுமெனில் புரதம் என்பது நமது செல்லில் உள்ள ஒரு வேதிப் பொருள். அது பல செயல்களை செய்கிறது. .


இருப்பினும் நம் அண்ணன் கேள்வி ப்ரோட்டினை இப்படி அறிவோடு செயலாற்ற வைத்தது யார்? என்ற கேள்வியில் ப்ரோட்டின் என்பது ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] இது பரிணமிக்க இயலாது என்பதே சரியான பரிணாம எதிர்ப்பு வாதம்.
பொதுவாக ப்ரோட்டினின் உள்ள அமிலக் கூட்டமைப்பின் நிகழ்தகவு மிக,மிக... குறைவு என்ற வாதமே வைக்கப்படும். ஆனால் அண்ணன் ப்ரோட்டினை செயல்படுத்துவது யார் என்பதோடு நிறுத்திக் கொண்டார்.சரி அதில் கணிதம் வருவதால் அண்ணன் ஒதுங்கி விட்டார்!!!.எனினும் அதற்கும் விளக்கம் இந்த காணொளியில் உண்டு.


ப்ரோட்டின் என்பது வேதிப் பொருள் என்பதால் அதன் குணத்திற்கேற்ப இங்குகிறது என்று மட்டுமே அறிவியல் சொல்ல இயலும்ப்ரோட்டின் எப்படி இயங்குகிறது என்பதைக் கூறுவதே அறிவியல்.ஏன் ப்ரோட்டின் இப்படி இருக்கிறது என்பது தத்துவம்.

ஆகவே தத்துவரீதியாக கூறினால் ப்ரோட்டினை செயல்படுத்துவது யார் என்பது தவறான கேள்விஇது முதல் காரணி வாதத்தின்[First cause argument] ஒரு மாறுபட்ட வடிவமே.அதாவது படைப்பு என்றால் படைக்கும் சக்தி அவசியம்,ஆனால் அப்படைக்கும் சக்திக்கு இன்னொரு படைப்பு சக்தி தேவையில்லை என்பதுதான்.
அப்படி எவ்வகையிலும் அறிய இயலா சுயம்புவான படைப்பு சக்தி என்பதை ஏற்பவர்கள்,ஏன் அறிய இயலும் ப்ரோட்டினும் சுயம்புவாக தோன்றியது என்பதை ஏற்க கூடாது???
***************
2.//ஒரு உயிரி மற்றொரு உயிராக பரிணாமம் அடைந்தால் முக்கியமாக இந்த புரோட்டீனின் அளவும் கூடவோ அல்லது குறைவாகவோ பரிணாமம் அடைந்திருக்க வேண்டும்இது பற்றி பரிணாமவியலார் எந்த தகவலும் அளிக்கவில்லைஇது பற்றி டார்வின் அறிந்திருக்கவுமில்லை.//

ப்ரோட்டின் என்பது ஒரு வேதிப் பொருள் அதில் பல வகையான அமைப்புகள் உள்ளன.உருவான முதல் செல்லிலேயே இந்த ப்ரோட்டின்கள் தயாரிக்கும் வண்ணம் இருந்திருக்க வேண்டும்.அறிவியலின் அபியோஜெனெசிஸ் ன் படி உயிரற்ற வேதிப்பொருள்களில் இருந்து முதல் செல் உருவாகி இருக்க வேண்டும் என்ற கருதுகோளே ஏற்கப்பட்டு அதன் மீது ஆய்வுகள் நடைபெறுகின்றன.

பரிணாமத்திலும்
 வடிவமைப்புகள் இயற்கைத் தேர்வினால் காலப் போக்கில் சூழலுக்கு பொருந்தும் வண்ணம் மாற்றியமைக்கப்படுவது இயல்பே.இயற்கைத் தேர்வின் படி உடலில் உள்ள ஒரு உறுப்போ,அல்லது வேதிப்பொருளோ ,அதன் செயல் பயன் அளித்தால் மட்டுமே நீடிக்கும்பாதிக்கும் செயல்கள் தீர்வில் நீக்கப்படும்ஒருவேளை இரைப்பை இப்படி தான் சுரக்கும் அமிலத்தால் அதுவே பாதிகப்பட்டால் அந்த உயிரி தேர்வில் நீக்கப்படும்ஆகவே ப்போது வாழும் உயிரிகள்,உறுப்புகள் அனைத்தும் இயற்கைத் தேர்வில் வெற்றி பெற்று நீக்கப் படாதவைஇது படைப்பு போன்ற மாயை தருவதில் வியப்பு ஒன்றுமில்லை.

இந்தக் கேள்விதான் அண்ணன் ப்ரோட்டினை ப்ரோட்டா மாதிரி நினைக்கிறார் என்னும் அரிய உண்மையை நாம் அறியத் தந்தது.

பாருங்கள் ப்ரோட்டா மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறதுவீச்சு பரோட்டா,கொத்து பரோட்டாசில்லி பரோட்டா,சிக்கன் பரோட்டா என பலவகைகளிலும் பரிணமித்து உள்ளதுகுரானிலும் அல்மைதா என ஒரு அத்தியாயமே உண்டு.
Sura Al-Ma'ida (Arabicسورة المائدة‎, Sūratu al-Mā'idah, "The Table" or "The Table Spread with Food") is the fifth chapter of the Qur'an, with 120 verses

ப்போது முதல் செல்லில் இருந்து தோன்றிய அனைத்து உயிரி,தாவர வகைகளின் செல்ஜீனோம்ப்ரோட்டின் ஆவணப் படுத்தப் பட்ட விவரங்கள் இருக்கிறது என்றால் பரிணாம மரத்தின் படி ஏற்பட்ட‌ மாற்றங்கள் ப்ரோட்டின்களின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் உருவாக்கி உள்ளதா என்பதை அவதானிக்கலாம்.

ஆனால் ஏற்கெனெவே வாழ்ந்து மறைந்த உயிரிகளின் படிமம் மட்டுமே உள்ளது.வாழும் உயிரிகளின் ஜீனோம் கண்டறியப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஒவ்வொரு உயிரியின் ஒவ்வொரு செல்லையோ அல்லது அதில் உள்ள ப்ரோட்டின்களையோ ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடியுமா?அப்படி நடக்கும் ஒப்பீடு ஆய்வுகளும் பரிணாமத்திற்கு எதிராக இல்லை.

நாம் ஏற்கெனவே சொன்னபடி மதவாதிகள் எபோதும் சான்றுகள் குறைவாக உள்ள‌ விடயங்களையே விவாதங்களுக்கு பயன்படுத்துவார்கள் என்பதற்கு ப்ரோட்டின் மீதான பரிணாம எதிர்ப்பும் ஒரு .கா!!.


3.//ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம்
இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவாஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் நிகழ்வதில்லை?..இந்த இரைப்பையின் உள்ளே ம்யூகோஷா என்ற பொருளை அளந்து அமைத்தவன் யார்? அறிவியல் அறிஞர்களால் இன்று வரை இதற்கான காரணத்தை பெற முடியவில்லை.//


எனினும் அண்ணன் விடாப்பிடியாக ப்ரோட்டினை படைத்தது யார் எனக் கேட்கிறார்? அதனைவிட ப்ரோட்டின் படைப்பாளி யாராக இருக்க முடியாது என்பதை நாம் எளிதில் விளக்க முடியும்.

இந்த இரைப்பையில் உள்ள அமிலம் ஆட்டுக் கரி,மாட்டுக் கரி மட்டும் இல்லாமல் பன்றிக் கரியும் பிரச்சினை இல்லாமல் செரிக்கிறது. ஆகவே பன்றிக் கரி உண்பதை தடை செய்பவர் எவரும் இந்த இரைப்பையையோ அந்த அமிலத்தையோ படைத்து இருக்க முடியாது!!!!!.

வெஜெடேரியக் கடவுள்களும் ப்ரோட்டின் படைப்பாளியாக இருக்க முடியாது.!!!!!!!!!!.

அனைத்து வகை மாமிச உணவையும் அங்கீகரித்து, படையலை ஏற்றுக் கொள்ளும் கடவுள் மட்டுமே ப்ரோட்டின் படைப்புக்கு உரிமை கொண்டாட முடியும்.!!!!!!!!

சகோ இராவணன் அவர்களின் விருப்ப சாமி முனியாண்டி அவர்களுக்கே ப்ரோட்டின் படைப்பாளி ஆகும் வாய்ப்பு ((மட்டுமே!!) அதிகம் என கூறுகிறேன்.


4.//அல்புமீனைப் பற்றியும்ம்யூகோஸாவைப் பற்றியும் டார்வின் தனது பரிணாம கொள்கையில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லைபரிணாமம் நடை பெற முதலில் டிஎன்ஏகுரோமசோம்கள்புரோட்டீன்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்அதன் பிறகுதான் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும்இந்த புரோட்டீன்களின் அவசியத்துக்கு காரணத்தை கண்டு பிடிக்காமல் வெளித்தோற்றத்தை வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்ததையும் மானிலிருந்து ஒட்டகம் வந்ததையும் தனது கற்பனைத் திறனால் பலரை நம்ப வைத்து விட்டார் டார்வின்.//

இது மேலே கூறிய வாதங்களின் தொகுப்பு. நாம் கூறுவது என்ன??? பரிணாம கொள்கைக்கு ப்ரோட்டீன்கள் பற்றிய ஆய்வுகள் எப்போதும் எதிராக முடியாது. ஏன் எனில்[ சில விதிவிலக்குகளைத் தவிர‌ ] வாழும் உயிரிகளின் ப்ரோட்டின் அமைப்பு மட்டுமே நமக்கு தெரியும்.ப்ரோட்டின்கள் புதிதாக கூட உருவாக்குகிறார்கள்.இயற்கையிலும் இதேபோல் உருவாகி இருப்பதில் வியப்பில்லை.


பரிணாமம் நடைபெற ஜீனோமில் மாற்றம் ஏற்பட வேண்டும்,அந்த மாற்றம் ப்ரோட்டின்களின் செயல்களில் பிரதிபலிக்கும். ஆகவே பரிணாமம் நடைபெறவில்லை எனில கீழ்க்கண்டவை நிரூபிக்கப்படவேண்டும்.

a). ஜீனோம் மாறுவது இல்லை.


b). இம்மாற்றம் ப்ரோட்டின்களின் செயல்களை பாதிப்பது இல்லை.


ஏற்கெனெவே நமது பதிவில் போலி ஜீன்கள் பற்றி அலசி இருக்கிறோம்.அதாவது முதலில் ப்ரோட்டின் தயாரித்து பிறகு
 பரிணாம மாற்றத்தால்[mutations] தயாரிக்க இய்லாமல் போன ஜீன்களே இவை.

ஆகவே நாம் முடிவாக என்ன கூறுகிறோம்.

1.இந்த ப்ரோட்டின் மீதான பரிணாம விமர்சனம் என்பது முதல் செல் எப்படி வந்தது என்ற கேள்வியின் மறு உருவமே!!!.முதல் செல் தோன்றியபோதே அது ப்ரோட்டின் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.

2.பரிணாமம் என்பது ஒரு செல் உயிரிகளில் இருந்து அனைத்து உயிரிகளும் பரிணமித்த‌ன என்பதையே விளக்குகிறதே அன்றி, எப்படி முதல் செல் அல்லது உயிர் உருவானது என்பது பற்றி அல்ல.ஒரு செல் உயிர்கள், பலசெல் உயிர்களானதும்,அதில் இருந்து கடல்வாழ் கேம்பிரியன் என்று தொடங்கி இப்போதைய மனிதன் உள்ளிட்ட வாழும் உயிரிகள் வரை பரிணமித்தன.இதில் 99% வாழும் உயிரிகளின் ப்ரோட்டின் பற்றிய விவரங்கள் மட்டுமே ஆவணப் படுத்தி உள்ளார்கள்.இதை வைத்து பரிணாமத்திற்கு ஆதரவு ப்ஸூடோஜீன்கள் கண்டறியப்பட்டதே அன்றி எதிராக எதுவும் இல்லை. 
3. இரைப்பையில் உள்ள அமிலம்,உள்ளிட்ட சில உறுப்புகளின் தனித்திற்னுக்கு விடை ஒருவேளை அவை சரியாக சூழலுக்கு ஏற்றபடி இயங்காவிட்டால் அந்த உயிரியே இயற்கைத் தேர்வின் படி அழிந்து இருக்கும்.

இம்மாதிரி கேள்விகள் ஒரு உறுப்பு, ஒரு செயல்,குணம் எப்படி பரிணமித்தது என்பவை பெரும்பாலும் குழப்பும் நோக்கில் கேட்கப்படுபவையே. உயிரிகள் பரிணமிக்கும் போது அதில் ஏற்படும் மாற்றங்களில் மெலே சொன்ன விடயங்கள் அடங்கிவிடுகின்றன.

உறுப்புகள்,செயல்,குணம் சார்ந்து பரிணாம வளர்ச்சி ஆய்வுக் கட்டுரைகள் உண்டு.பரிணாமக் கடலில்  மீன் பிடிக்க பல மில்லியன் விடயங்கள் உண்டு. கற்றது கைம்மண் அள்வு, கல்லாதது உலகளவு என்பதை நாம் அறிந்து இருக்கிறபடியால் நம் விளக்கங்கள் பொதுவாக் கேள்விகளின் பொருளற்ற தன்மையை விளக்குவதிலேயே கவனம் செலுத்துகிறோம்.

ப்ரோட்டா மைதாவில் இருந்து பரிணமித்தது போல் ப்ரோட்டினுக்கு முன்னால் என்ன என்பதே அண்ணன் கேள்வி!!!. இப்போது நமது பதிவின் தலைப்பு விளங்கி இருக்கும். அண்ணனின் கேள்வியை பாராட்டி ஒரு நகைச்சுவை காணொளி!!!. அண்ணன் அடுத்த பதிவு போட்டதும் மீண்டும் மறுப்போம்!! நன்றி

47 comments:

 1. //ஆட்டுக் கரி,மாட்டுக் கரி மட்டும் இல்லாமல் பன்றிக் கரியும் பிரச்சினை இல்லாமல் செரிக்கிறது. ஆகவே பன்றிக் கரி உண்பதை தடை செய்பவர் எவரும் இந்த இரைப்பையையோ அந்த அமிலத்தையோ படைத்து இருக்க முடியாது!!!!!.
  அனைத்து வகை மாமிச உணவையும் அங்கீகரித்து, படையலை ஏற்றுக் கொள்ளும் கடவுள் மட்டுமே ப்ரோட்டின் படைப்புக்கு உரிமை கொண்டாட முடியும்.!!!!!!!!//
  உண்மை உண்மை. கடவுளின் படைப்புக்கு அருமையான விளக்கம்.
  அந்த இரண்டுபோர் வரும் வீடியோ நல்லாகவே இருந்தது.

  ReplyDelete
 2. வாங்க சகோ வெகநரி,
  நம் அண்ணன் அடாது கேள்வி கேட்டாலும்,விடாது பதில் அளிப்போம். அவர் பரிணாம் எதிர்ப்பும் மதம் படைப்புவாதமும் ஒருவர் ஒரே சமயத்தில் செய்ய இயலாது என்பது அறியாதவர் . ஆகவேதான் அறிவார்ந்த வடிவமைப்புக் கொள்கையாளர்கள் மதம் சாராதவர்கள் போல் காட்டிக் கொள்வர். வழிநடத்தப் பட்ட பரிணாமத்தையும் அதிகம் எதிர்க்க மாட்டார்கள். இதுவே பரிணாம எதிர்ப்பு செய்யும் இரகசியம் ஆகும்.
  அடுத்த அண்ணன் பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்!!!

  நன்றி!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 3. Mr. Saarvaagan: You are putting all eggs in one basket.
  பிரிச்சு மேயுங்க! ஒரு புள்ளியை எடுத்து அதை பெரிசாக்கி.அதாவது, ஒரு பதிவில் ஈரை பேனாக்குங்கள்: அடுத்து பதிவில், பேனைபெருமாளாக்குங்களேன். எங்களுக்கும் படித்து அசை போடநேரம் வேண்டாமா?

  A side note:
  I admire Mr. Suvanap Priyan in one aspect. Irrespective of his wrong arguments, he is very decent and puts forward his arguments relentlessly..! Yes, relentlessly in a very decent way..!

  He is a great character and an asset to Islam; however, I have to admit that, I don't believe in any God...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் நம்பள்கி,
   நம்க்கும் சகோ சு.பி மீது அன்பும் மதிப்பும் உண்டு.அதனால் அவர் தவிர மற்றவர்களின் மத பிரச்சார பதிவுகளை கண்டுகொள்வது இல்லை.

   உங்கள் கணிப்பு மிக சரியானது.எனினும் எந்த அளவுக்கு பொறுமை காட்டுவாரோ அதே அள்வு மதம் சார் கருத்துகளில் பிடிவாதமும் காட்டுவார்.
   **********
   ப்ரோட்டின் பற்றியே நிறைய எழுதலாம் என்றாலும் அண்ணன் பரிணாம எதிர்ப்பில் யார்க்கர்,அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் ,ஃபுல் டாஸ்,ஸ்லோஒ பால் என மாற்றி மாற்றி போட்டு குழப்ப பார்க்கிறார்.ஆகவே நாமும் அதிரடி ஆட்டம் ஆடுகிறோம். ஹி ஹி.விளக்குவோம் எங்கே போகிறோம்!!!

   நன்றி

   Delete
 4. வணக்கம் நண்பர்களே,
  சகோ சுவன்ப்பிரியனின் தவறான பரிணாம் புரிதலுக்கு மட்டுமன்றி மார்க்கப் புரிதல்களையும் நாம் சரி செய்ய வேண்டி உள்ளது.

  http://suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_644.html

  //மரணித்த பிறகு எந்த உயிரும் இந்த உலகத்திற்கு திரும்பி வராது, அவ்வுயிருக்கும் இவ்வுலகிற்கும் இடையில் திரை இருக்கிறது. அதை உடைத்துக் கொண்டு வரவே முடியாது. /

  ஆனால் அல்லாஹ் இறக்கிய குரான் அல்லாவுக்கு செத்து செத்து விளையாடுவது பிடிக்குமென்கிறது. குரான் சில வரிகளில் முறை இறந்த மனிதர் ,பறவைகள் உயிர் பெறுகிறார்.

  1//2:55. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
  2:56. நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.//
  2//2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.//
  3//2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.//
  4//3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான்[ஈசா என்னும் இயேசு] உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).//
  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
  நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. சார்வாகன் எப்பொழுதுமே சில குர் ஆன் வசனங்களை சொல்லுகிறார்..ஆனால் எதுக்கு சொல்கிறார் என்றுதான் தெரியவில்லை...இதுல இஸ்லாத்திற்கு பலகீனமாக எதைக்கண்டார்...??? பார்த்து சார்வாகன் ,ராவணன் ரேஞ்சுக்கு போறீங்க ..அவரோட பதிவு போலதான் இருக்கு உங்க பின்னூட்டங்கள்!!! :-(

   நன்றி !!!

   Delete
  2. வாங்க சகோ மீரான்,
   ஸலாம்.நீங்கள் ஒருவராவது நான் வருத்தப்படக் கூடாது என்று உங்கள் குழுவில் இருந்து வந்து பின்னூட்டம் இடுவதற்கு நன்றி.
   அண்ணன் சு.பி சொன்னதற்கு குரானில் ஆதாரம் இல்லை என்பதையே காட்டி இருக்கிறேன்.
   வாழக வளமுடன்
   அன்புடன்
   சார்வாகன்

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 5. மிக அருமையான பதிவு...


  //இந்த இரைப்பையில் உள்ள அமிலம் ஆட்டுக் கரி,மாட்டுக் கரி மட்டும் இல்லாமல் பன்றிக் கரியும் பிரச்சினை இல்லாமல் செரிக்கிறது. ஆகவே பன்றிக் கரி உண்பதை தடை செய்பவர் எவரும் இந்த இரைப்பையையோ அந்த அமிலத்தையோ படைத்து இருக்க முடியாது!!!!!.//

  பன்றிக் கரி மேட்டர் பத்தி சு.பி (அ)சாமிகள் சொல்லவேயில்ல.......

  ReplyDelete
  Replies
  1. வங்க நண்பர் ராம்,
   சகோ சு.பி அவருக்கு ஒத்துவரும் விதத்தில் கருத்து பதிவது இயல்புதானே!!!
   அவர் சொல்ல மறுப்பதை நாம் சொல்கிறோம்.நன்றி

   Delete
 6. ஹாய்!!!...சகோ.சார்வகான் !!

  இஸ்கூல் பையன் சார்வாகன் :

  //1.// நாம் கேட்பது இந்த புரோட்டீனுக்கு இத்தகைய அறிவை கொடுத்து அதனை வேலை வாங்குவது யார்? //


  புரதம்//

  திங்ககிழம...காலைல வாத்தியார் இஸ்கூல் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கிறார்...சிறுவர் சார்வாகன் தான் முதல் பென்ச் மாணவர்.. பையன்ட்ட நெல் விளைவது பற்றிய பாடம் என்பதால் ,நாம் உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது..?? என்கிறார் ஆசிரியர்.

  சார்வாகன் உடனே கையை தூக்குகிறார்..அப்பாடா..இவங்களுக்கு விவசாயம் பற்றி பாடம் எடுக்க தேவை இல்லை போல...என்று நினைத்து பதில் சொல்ல சொல்கிறார்,ஆசிரியர்.

  படுவேகமா ..எங்க அம்மா ..சார்..!!! ஆசிரியருக்கு சிரிப்பாக இருந்தது..சரி உங்க அம்மாக்கு எங்கிருந்து வருகிறது...???மளிகை கடைல இருந்து சார்.!!!

  ம்ம்..ஹ்ம்ம் இன்னும் கேட்டா லோடு லாரின்னு பதில் வரும்..நீங்க உக்காருங்க ராசா !!!! என்கிறார் ஆசிரியர்..

  தானும் சரியான பதிலை அளித்துவிட்டோமோ என்கிற திருப்தியில் அமருகிறார்..சுட்டி சார்வாகன்...!!!

  நன்றி !!!

  ReplyDelete
  Replies
  1. சகோ மீரான்,
   இப்படி அதுக்கு முன்னால் என் தொடர்ந்து கேள்வி கேட்பவர் யார்? சகோ சு.பிதானே.
   நன்றி!!

   Delete
 7. பகுத்தறிவு சார்வாகன் பதிவிலிருந்து துல்லியமான பதில்கள்.(!!!) :

  * முதல் செல்லிலேயே இந்த ப்ரோட்டின்கள் தயாரிக்கும் வண்ணம் < இருந்திருக்க வேண்டும் >

  * அதன் மீது < ஆய்வுகள் நடைபெறுகின்றன >.

  * < இயற்கைத் தேர்வின் படி > உடலில் உள்ள ஒரு உறுப்போ,அல்லது வேதிப்பொருளோ ,அதன் செயல் பயன் அளித்தால் மட்டுமே நீடிக்கும்,

  * < ஒருவேளை > இரைப்பை இப்படி தான் சுரக்கும் அமிலத்தால் அதுவே பாதிகப்பட்டால் அந்த உயிரி தேர்வில் நீக்கப்படும்.

  * ஏன் எனில் <[ சில விதிவிலக்குகளைத் தவிர‌ ]> வாழும் உயிரிகளின் ப்ரோட்டின் அமைப்பு மட்டுமே நமக்கு தெரியும்.

  * முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.

  * பரிணாமம் என்பது ஒரு செல் உயிரிகளில் இருந்து அனைத்து உயிரிகளும் பரிணமித்த‌ன என்பதையே விளக்குகிறதே அன்றி, எப்படி முதல் செல் அல்லது உயிர் உருவானது என்பது பற்றி அல்ல.

  * பரிணாமக் கடலில் மீன் பிடிக்க பல மில்லியன் விடயங்கள் உண்டு. கற்றது கைம்மண் அள்வு, கல்லாதது உலகளவு என்பதை நாம் அறிந்து இருக்கிறபடியால்...

  இனி யாராவது சார்வகன்ட்ட கேள்வி கேப்பிங்க !!!

  ((கேக்க மாட்டேன் ..கேக்க மாட்டேன் ..துபாய் எங்க இருக்கு!!!..உசிலம்பட்டி,கீரிப்பட்டி பக்கத்துல இருக்கு !!! )

  ReplyDelete
 8. வணக்கம் சகோ,

  நல்ல விளக்கமான பதிவிற்கு மிக்க நன்றி. பன்றி கறியையும் செரிக்க வைக்கும் எ.கா. மிக அருமை. பன்றியை படைத்துக்கொண்டே அதை தடை செய்யப்பட்டது,என பினாத்தும் ஒரு முட்டாள் கடவுளை நாம் இது வரையில் பார்த்ததில்லை. டாஸ்மாக்கை திறந்து வைத்துவிட்டு குடிக்க தடை என்பது போல் இருக்கிறது.எல்லாம் வல்லவனுக்கு பன்றி இனத்தையே நிறுத்தும் சக்தி இல்லையோ!!!!

  //பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;//

  இந்த வசனத்தின் வல்லமை ஈசா காலத்தோடு காலாவதியாகிவிட்டது. இப்ப இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மருத்துவர்களைத்தான் நாட வேண்டியுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் இனியவன்,
   அதவது நம் மார்க்க சகோக்கள் விரும்பும்,எடுத்து இயம்பும் தன்மைகளோ சக்திகளோ அவர்கள் வணங்கும் கடவுளுக்கு இருப்பதாக எதன் மூலமும் அறிய முடியவில்லை. ஏதோ புத்த்கம் பார்த்து தத்துவ விள்க்க்ம் சொல்கிறார்கள். ஒவ்வொரு பிரிவும் வேவ்வேறு விள்க்கம் கொடுக்கும் போதே அதன் நம்பக்த் த்னமை இல்லாமல் போய் விடுகிறது.

   விஷம் சாப்பிட்டால் இறக்கிறோம்,ஆனால் மாட்டுக் கரியோ,பன்றிக் கரி யோ சாப்பிடுவது எதுவும் செய்வது இல்லையே!!!
   இரண்டையும் வெளுத்துக் கட்டும் வெள்ளையரே உலகை அடித்து சுரண்டி நன்றாக்த் தானே இருக்கிறார்கள்.
   இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன்.
   நன்றி

   Delete

 9. // குரானிலும் அல்மைதா என ஒரு அத்தியாயமே உண்டு.//

  சார்வாகன் :நாசமா நீ போனியா தெரு இங்க இல்லையே..

  வழிப்போக்கன் : ஏன்சார் இங்கிலீச கொலபன்னுரீங்க.. அது நேசமணி பொன்னையா தெரு...

  ??????

  அது சூரா.. அல் மாய்தா ...

  ReplyDelete
  Replies
  1. நாகூர் மீரான் அண்ணாமலை பட வசனம் அப்படியே சொல்ரீங்க.சினிமா பார்ப்பது ஹராம். பார்த்து சூப்பர் சுவனம் கிடைக்காது!!!

   நன்றி

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 10. இங்கு அதிகமாக சார்வாகனின் பன்றிக்கறி அறிவை பலரும் சிலாகிப்பதால் அதைப்பற்றியும் சொல்வோம்...

  சார்வாகன் மறைத்த சு.பி பதிவின் மையக்கருத்து :

  //ஏனெனில் யானையின் செரிமானத்துக்கும் சிங்கத்தின் செரிமானத்துக்கும் குரங்கின் செரிமானத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ம்யூகோஸா என்ற பொருளின் அளவு உயிரினத்தின் செரிமாணத்துக்கு ஏற்ப மாறுபட்டால்தான் அந்த உயிரால் உயிர்வாழ முடியும். பரிணாமம் இஙகிருந்து தொடங்க வேண்டும். இதற்கு எந்த ஆய்வாவது செய்து சமர்ப்பித்துள்ளார்களா என்றால் எதுவும் இல்லை.//

  இதுக்கு பதில் சொல்லாம எடுத்துக்காட்டா சொன்னத போய் எக்ஸ்ட்ராவா ஒன்னு சொல்லி தனது அடிவருடிகளை மகிழ்வித்து இருக்கிறார்...

  ஒரு பதிவோட மையக்கருத்தை விளங்க முடியாமல் அஞ்சாங்கிளாஸ் பையன் மாதிரி புரதத்தின் பயன்பாடுகள் என்ன என்பதை வெட்டி ஒட்டியிருக்கிறார்..அதுக்கு இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே போடலாம்..இதை வைத்து பாஸ் ஆக முடியாது..வெரி சாரி :-(( :-((

  //அண்ணன் அடுத்த பதிவு போட்டதும் மீண்டும் மறுப்போம்!! நன்றி//

  இதுக்கு பேரு தான் மறுப்பு பதிவோ..!!!அடங்கப்பா..!!!


  நன்றி !!!

  ReplyDelete
  Replies
  1. இனிமே சார்வாகன் என்ன சொல்லுவார்னு நாமளே கணிச்சிரலாம்...இந்த பின்னூட்டம் மட்டும் காலியா இருக்கு..மறந்துட்டார் போல..எப்புடியும் இதை தான் போட போறாரு..

   "ஹா..ஹா..ஹா.".


   "சார்வகனை நீங்க இன்னும் விடலையா." னு ஆசிக் அஹமது சொன்னதற்கு அர்த்தம் இப்பதான் புரியுது..
   ..

   ஆசிக் அஹமது நீங்க ஒரு ஜீனியஸ் ...

   நான்தான் தெரியாம வந்துட்டேன் ...

   கடைசியா சார்வாகனுக்கு ஒரு நன்றி !!!

   Delete
 11. சார்வாகனின் நோ பாலும் , இஸ்லாம் அடித்த சிக்சரும் :


  //இந்த இரைப்பையில் உள்ள அமிலம் ஆட்டுக் கரி,மாட்டுக் கரி மட்டும் இல்லாமல் பன்றிக் கரியும் பிரச்சினை இல்லாமல் செரிக்கிறது. ஆகவே பன்றிக் கரி உண்பதை தடை செய்பவர் எவரும் இந்த இரைப்பையையோ அந்த அமிலத்தையோ படைத்து இருக்க முடியாது!!!!!.

  வெஜெடேரியக் கடவுள்களும் ப்ரோட்டின் படைப்பாளியாக இருக்க முடியாது.!!!!!!!!!!.

  அனைத்து வகை மாமிச உணவையும் அங்கீகரித்து, படையலை ஏற்றுக் கொள்ளும் கடவுள் மட்டுமே ப்ரோட்டின் படைப்புக்கு உரிமை கொண்டாட முடியும்.!!!!!!!!//

  இங்கு சகோ.சார்வாகனின் ஆய்வு அவருக்கே எதிராக திரும்பியதை அவரால் அறிய இயலவில்லை..!!!

  இப்ப, கடவுள் கல்லை திண்காதே!! என்று சொன்னால், கல்லை தின்னால் எப்படியும் செரிக்கப்போவது இல்லை..கல்லை உண்டால் செரிக்காமல் இறந்து விடுவார் என்று அஞ்சாம் வகுப்பு ராவணனுக்கு கூட தெரியும்..இதை கடவுள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என பரிகாசம் செய்யலாம் ....

  பன்றிக்கறியை உண்டால் மனிதனுக்கு செரிப்பதில் இல்லை பிரச்சனை ..வேறு பிரச்சனை இருப்பதாலே குறிப்பாக பன்றிக்கறியையும் தடைசெய்கிறது இஸ்லாம் ..பன்றிக்கறியால் என்ன பிரச்சனை வரும் என்பதை கீழ்காணும் சுட்டியில் பாருங்கள்

  http://egathuvam.blogspot.in/2009/03/blog-post_24.html

  ஆக . எந்த பொருளுமே செரித்தால் தான் உடலுக்கு நன்மையோ ,கெடுதியோ செய்ய முடியும்... ...பன்றிக்கறி செரிக்கவும் செய்யும் ,உடலுக்கு தீங்கும் விளைவிக்கும் என்று கூறிய அல்லாஹ்வே இறைவன் என்பது நிரூபணம்...

  என்ன! சார்வாகன் நீங்க போடுற பால் எல்லாமே நோ பாலா இருக்கு..நோ பாலும் சிக்சருக்கு போகுது பாருங்க !!!

  இப்ப என்ன செய்வீங்க!!! ...இப்ப என்ன செய்வீங்க!!! ...

  நன்றி !!!

  ReplyDelete

 12. மாட்டுக்கறி சாப்பிடுவது மனித ஆயுளை குறைக்கும் : ஆய்வில் தகவல்

  http://www.challaram.com/?id=OTk5OQ==&db5=aW1fZ2E=&cctv=ZnVsbA==

  ReplyDelete
  Replies
  1. ஆமா... கீரை சாப்புடுறவன் எல்லோரும் அப்டியே சதம் அடிச்சி நிக்கிறாங்க ..இதுல மாட்டுக்கறி உண்டு தான் மர்கையா ஆவுறதுக்கு!!!அளவுக்கு மீறி போனா எல்லாமே நஞ்சுதான் அதில் மாற்றுக்கருத்து இல்லை..

   நன்றி!!!

   Delete
  2. வாங்க நண்பர் விஜய் நன்றி
   ***
   சகோ மீரான் காஃபிர் மாதிரி பேசக் கூடாது. பன்றிக் கரியைத் தவிர ஆடு,மாடு,ஒட்டகம்,கோழி போன்ற்வை சாப்பிடுவது தாவர உணவை விட சிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
   ஏன் என்றால் அல்லாஹ் சொல்லி இருக்கிறர் என போட்டுத் தாக்க வேண்டும்
   //5:3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.//
   பன்றிக் கரி சாப்பிட்டாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான்!! ஆகவேதான் இரைப்பை இப்படி இருக்கிறது
   நன்றி

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 13. //முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.// தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் இராபின்,

   அறிவியலில் விடை அறியா,தேடப்படும் கேள்விகளுள் ஒன்றுதான் இந்த முதல் செல் எப்படி இருக்கலாம் என்பது.அறிவியலில் ஒரு கேள்விக்கு விடை என்பது பல் கேள்விகளுக்கே வித்திடும் என்பதால் அறிவியல் ஒரு தொடர்பயணம்.

   அறிவியல் அனைத்துக்கும் தீர்வு தந்துவிடும் என்பதையும் நாம் ஏற்பது இல்லை. இயற்கை, மனிதம் மேம்பாடு அடைய‌ உதவாத அறிவியல் தேவையில்லை என்பதே நம் கருத்து.

   வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!!

   Delete
 14. ///முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.//
  இதற்கு பரிணாம அறிஞர் பதில் சார்வாகன் சொல்லாமல் வெறுமனே ஹைஹை என்கிறார் .

  http://www.ethirkkural.com/2012/10/national-geographic.html

  இதையும் சேர்த்து வெளுத்துக் கட்டப் போகிறார்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இப்ராஹிம் ஷேக் முகம்மது
   அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதே நம் கடமை.ஆகவே விரைவில் எதிர்பாருங்கள்.
   நன்றி

   Delete
 15. மாட்டுக்கறி சாப்பிடுவது மனித ஆயுளை குறைக்கும் ஆய்வில் தகவல்
  இப்படியான ஒரு தகவலை தந்து கடவுளின் வீக்னெஸ்சை வெளிப்படுத்திட்டிங்க விஜய்.

  இந்த கடவுள் உண்மையிலேயே சக்தியுள்ளவராக இருந்தால் இறைச்சி பிரியர்களுக்கு
  குழைந்தைகளே நீங்க பன்றி,ஒட்டகம்,கோழி,ஆடு,இறைச்சி மட்டுமே சாப்பிடுங்க என்று சொல்லியிருக்கலாமே.

  போஸ்னியா இஸ்லாமிய பக்தர் ஒருவர் கால்நடையாகவே ஹஜ் சென்றாலும்,
  போஸ்னியாவில் வதியும் முன்னாளில் அரேபியர்களினால் மதம் மாற்ற பட்ட மக்கள் தற்போது பெருமளவில் பன்றி கறி சாப்பிட தொடங்கியுள்ளனர் என்பது யதார்த்தமான வாழ்வியல் நடை முறை என்ன என்பதை தெளிவாகியுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. சகோ வேகநரி,
   பாருங்கள் நம் சகோ முக்மது மிரான் போட்ட பின்னூட்டத்தை எடுத்து விட்டார்.ஏன் எனில் மறந்து போய் நம்மை பாராட்டி விட்டார்.

   என்னமோ அல்லாஹ் ப்னறிக் கரி சாப்பிடவே கூடாது என சொல்லவில்லை,
   பாருங்கள் தெளிவாக!!!
   5.3.....உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.//

   பன்றிக் கரி சாப்பிட்டாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான்!! மூமின்கள் பசிக் கொடுமை வரும்போது,நிர்பந்திக்கப் படும் போது சாப்பிடலாம் என்றே அருளாளன் இறுதி இறைமறையில் அழகாக கூறுகிறான்.ஒருவேளை இப்படி சூழல் வரலாம் என்வே இரைப்பை பன்றிக் கரியையும் செரிக்கும் வண்ணம் படைத்தான்!!!

   ஆகவே மார்க்கத்தை சரியாக் புரியுங்கள்
   நன்றி!!

   Delete
 16. சகோ.சார்வகான் !!

  //பாருங்கள் நம் சகோ முக்மது மிரான் போட்ட பின்னூட்டத்தை எடுத்து விட்டார்.ஏன் எனில் மறந்து போய் நம்மை பாராட்டி விட்டார்.//

  ஹா ஹா !!!...நீங்க போட்ட haa..haa..hi..hi..பதில்களுக்கு நீங்க பாராட்டை வேற எதிர் பார்கிறீர்களா...??? இப்பதான் சுவனப்பிரியன் பதிவுல சொல்லிட்டு வாரேன்...இனி உங்க பக்கமே வரமாட்டேன்னு !!!

  நீங்க விட மாட்டீங்க போல ..என்னை பற்றி பேசியதால் பதில் சொல்ல வேண்டியது நம் கடமை..உங்களை பாராட்டுவதற்கு என்ன செய்தீர்கள்..அப்பின்னூட்டங்கள் தேவை இல்லாததுன்னு தோணிச்சி (உங்கள் பதிலை பொறுத்தவரை எல்லாமே தேவை இல்லாததுதான்.)
  தவிர அது நம் உரிமை இல்லையா..??

  இனிமே அப்பிடினா தப்பா நெனைக்காதிங்க !!! நீங்க போட்ட பதிலே போதுமானது ...இனி அக்குளுமத்திலிருந்து நானும் வர மாட்டேன் ....மகிழ்ச்சியா உங்க சகாக்களுடன் வெளுத்து வாங்குங்க ..!!!

  நன்றியுடன்
  நாகூர் மீரான்

  ReplyDelete
 17. ////சகோ இராவணன் அவர்களின் விருப்ப சாமி முனியாண்டி அவர்களுக்கே ப்ரோட்டின் படைப்பாளி ஆகும் வாய்ப்பு ((மட்டுமே!!) அதிகம் என கூறுகிறேன்.///


  அது என்னங்க சாமி....இந்த ஈரேழு பதினாறு(எங்க சுகவீனக் கணக்கு) உலகையும் படைத்த நம்ம முனியாண்டி சாமியை..என்னோட விருப்பசாமி என்று குறைச்சிட்டேங்களே சாமி?

  பரோட்டாவிற்கும் அவரே சாமி...

  அந்த புரோட்டீனுக்கும் அவரே சாமி...

  நம்ம நாக்கூர் நாகப்பனுக்கும் அவரே சாமி...

  எனக்கும் உங்களுக்கும் அவரே சாமி....

  பரிணாமத்துக்கூட அவரே சாமி....

  நம்ம அல் பூரான் புத்தகத்தில் உள்ளதைப் படிக்கவில்லையா?

  ReplyDelete
 18. திருவாளர் பதிவுலக பரிணாம மாமேதை. சு.பி அண்ட் கோ அவர்களே,

  ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சில ஆதிவாசி மக்களுக்கு அங்கு வாழும் சில பாலூட்டி விலங்குகளின் பாலை நேரடியாக செரிமானம் செய்யுமளவுக்கு அவர்களின் செரிமான உருப்புகள் அமைந்துள்ளன.

  இது பல ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த மக்களில்லை, இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் உடலியல்.
  ஆனால் உலகின் வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு(including நாகூர் மீரான், சுபி,மற்றும் மேற்கூறிய மாமேதைகளுக்கும் ) அந்த தகவமைப்பு கிடையாது.

  நாம் வாழும் சூழலில் பயன்படும் படி நம் செரிமான உருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
  இது தான் பரிணாம வளர்ச்சி..
  நாங்க வளர்ந்துட்டோம், நீங்க இன்னும் வளரலியா..........

  பி.கு: ஒரு வேளை நாம் அந்த ஆப்பிரிக்க காடுகளில் உணவின்றி மாட்டிக்கொண்டால் அந்த விலங்குகளின் பாலை எப்படி உண்டு செரிப்பது என்று கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு ,
  இரண்டு வழிகள்.

  1) பரிணாம வளர்ச்சி உங்கள் மூளையில் பதிய வைத்த நெருப்பு உருவாக்கும் வழியை பயன்படுத்தி அந்த பாலை காய்ச்சி குடிக்கவும்.(for more info. See Man vs Wild)

  2) இது கொஞ்சம் சுலபம். இந்த பரிணாமம் எல்லாம் பொய், எனவே இப்பொழுதே, இங்கேயே அந்த பாலை செரிக்கும்படி எனக்கு செரிமான உருப்புகளை புதுப்பிக்கவும் என்று எல்லாம் வல்ல உங்கள் இறைவனை வேண்டவும்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பர் ராம்,
   நல்ல தகவல்
   அவர்களுக்கு இது புரியாது,புரிந்தாலும் ஏற்க மாட்டார்கள் என்றாலும் தமிழ் பதிவுலகில் போலி அறிவியலை மறுக்காமல் இருப்பது தவறாகவே எனக்கு தோன்றுவதாலேயே இந்த முயற்சி.மீண்டும்நன்றி

   Delete
 19. முஸ்லீம்கள்/ மற்றும் படைப்புக்கொள்கையை நம்பும் ராபின் போன்ற கிறிஸ்தவர்கள்,மதத்தை சற்றே கழட்டி வைத்துவிட்டு பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

  அறிவியல் மட்டுமே உலக முன்னேற்றத்தின் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் உதவி இருக்கிறது, அதில் பரிணாமமும் ஒன்று. அறிவியலில் தவறும் நடக்கும் ஏனென்றால் அது அறிவியல் நம்பிக்கையியல் அல்ல.

  ReplyDelete
 20. சு.பி நல்ல மனிதர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் கருத்துக்களை மட்டுமே அவரை எதிர்ப்பவர்கள் எதிர்க்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ கு.கு
   நான் இஸ்லாமின் ஷாரியா சார்ந்த ஆட்சிமுறைச் சட்டங்களையே விமர்சிக்கிறேன்.அதைக் கொண்டுவர செய்யும் முயற்சிகளில் இந்த மத புத்தக அறிவியல், பரிணாம எதிர்ப்பும் போன்ற்வை சில எ.கா.
   நன்றி

   Delete
 21. முகமது அவர்கள் கடவுள் படைத்த ஆதாமின் வழித்தோன்றல், 85 வது தலைமுறை என்று ஏதோ ஒரு காலத்தில் ஆர்குட்டில் படித்த ஞாபகம்.(சான்று, ஹதீத் குரானெல்லாம் நான் படிப்பதில்லை) இப்படிப்பாத்தா ஆதாமுக்கு வயசு என்ன?

  இறைத்தூதர்கள் எல்லாம் அரபு நாட்டிலேந்து இருக்காங்களே ஏன் ஒருத்தர் கூட நான் வாழும் அமெரிக்காவிலோ, இன்னும் ஆதி வாசிகள் வாழும் அந்தமானிலோ இல்லை? இது போன்ற சிறு கேள்விகளே மதத்தை உடைத்துவிடும் ஆனால் நம்பிக்கையை உடைக்க மனிதன் விரும்புவதில்லை:)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா திருவள்ளுவர் எங்க ஆள் என் கூறிக் கொண்டு இருப்பதை அறிய மாட்ட்டிகளா!!!.

   குரானில் சொல்லாத இறைத்தூதர்களும் உண்டு!!!

   //4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.//

   இப்படிப் போட்டு தாக்கி விடுவார்கள்!!!

   நன்றி!!

   Delete
 22. //பன்றிக்கறியை உண்டால் மனிதனுக்கு செரிப்பதில் இல்லை பிரச்சனை ..வேறு பிரச்சனை இருப்பதாலே குறிப்பாக பன்றிக்கறியையும் தடைசெய்கிறது இஸ்லாம் ..பன்றிக்கறியால் என்ன பிரச்சனை வரும் என்பதை கீழ்காணும் சுட்டியில் பாருங்கள்

  http://egathuvam.blogspot.in/2009/03/blog-post_24.htmல்//

  ப‌ன்றி இறைச்சியில் ந‌ன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் என்று எந்த‌ முட்டாளும் கூற‌ இய‌லும்,எப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ன்மை தீமை என்ப‌தை விள‌க்கும் அறிவு அறிவிய‌ல் அறிஞ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே உண்டு. உண்ண‌க்கூடாது என்று த‌டை போட்ட‌வ‌ன் அத‌ன் ந‌ன்மை தீமைக‌ளை விள‌க்கியிருந்தால் நியாய‌மான‌து.இறைவேத‌ம் என‌ கூறிக்கொள்வ‌தில் அது இல்லாத‌தால் அது இறைவேத‌மே அல்ல‌.

  ReplyDelete
 23. //பன்றிக்கறியை உண்டால் மனிதனுக்கு செரிப்பதில் இல்லை பிரச்சனை ..வேறு பிரச்சனை இருப்பதாலே குறிப்பாக பன்றிக்கறியையும் தடைசெய்கிறது இஸ்லாம் ..பன்றிக்கறியால் என்ன பிரச்சனை வரும் என்பதை கீழ்காணும் சுட்டியில் பாருங்கள்

  http://egathuvam.blogspot.in/2009/03/blog-post_24.htmல்//

  ப‌ன்றி இறைச்சியில் ந‌ன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் என்று எந்த‌ முட்டாளும் கூற‌ இய‌லும்,எப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ன்மை தீமை என்ப‌தை விள‌க்கும் அறிவு அறிவிய‌ல் அறிஞ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே உண்டு. உண்ண‌க்கூடாது என்று த‌டை போட்ட‌வ‌ன் அத‌ன் ந‌ன்மை தீமைக‌ளை விள‌க்கியிருந்தால் நியாய‌மான‌து.இறைவேத‌ம் என‌ கூறிக்கொள்வ‌தில் அது இல்லாத‌தால் அது இறைவேத‌மே அல்ல‌.

  ReplyDelete
 24. //பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;//
  இந்த வசனத்தின் வல்லமை ஈசா காலத்தோடு காலாவதியாகிவிட்டது. இப்ப இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மருத்துவர்களைத்தான் நாட வேண்டியுள்ளது.//
  இனியவன், ஈசாவின் தமிழ் பக்தர்கள் இப்போ ஒரு தந்திரம் செய்கிறார்கள். தமிழர் ஒருவர் நோய்பட்டு அதை குணப்படுத்த மருதவரிடம் சென்று மருத்துவரும் சிகிச்சை அளித்து நோய் குணமாகும் நிலையிலே யேசுவின் தமிழ் பக்தர்கள் அழையா விருந்தாளியாக மருத்துவமனைக்கு வந்து தம்பி உனது நோய் மாறி நீ பழையபடிவர யேசுவை கேட்கிறோம் என்று ஒரு பிரார்தனை கூட்டமே நடத்துவார்கள். இவர்கள் பிரார்த்தித்து தான் நோய் குணமாவது மாதிரி நாடகமாடுவார்கள்.

  ReplyDelete