Thursday, October 18, 2012

பரிணாம ஆய்வாளர்கள் மோசடியாளர்களா?வணக்கம் நண்பர்களே, 
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத மார்க்க மேதை சகோ சு.பி மீண்டும் பரிணாம மரத்தில் ஏறி ஒரு தகவல் பெற்று பதிவு இட்டு இருக்கிறார்.இதற்கு நாம் பதில் சொன்னால் அவர் மீண்டும் மரம் ஏறி விடுவார் என்பதால் அவரை மரம்(மலை) ஏற வைக்கும் பொறுப்பை[ வழக்கம் போல்] நாம் ஏற்கிறோம்.


சென்ற பதிவைப் படித்த நண்பர்கள்,நாம் அவரின் பதிவில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் மறுத்தோம்,அவரின் வாதங்களுக்கு ஆதாரம் கேட்டொம்.எ.கா

1. டான் ஃபோசியின் கொரில்லா மீதான ஆய்வுகள் பரிணாமத்தை பொய்ப்பித்தன ,அத்னால் அவர் பரிணாம் ஆய்வாளர்களால் கொல்லப்பட்டார் என்பது ஆதாரமற்ற பொய்.


2. ஒரு உயிரியின் உரு அமைப்பு மாறாமல் இருப்பதும், பரிணாம கோட்பாட்டின் படி எதிரானது அல்ல. உருமாறாமை என்பதன் ஆங்கில சொல் stasis  .இதுவும் ஒரு பரிணாம நிகழ்வே.இது குறித்து நிறுத்திய நிலைத் தன்மைக் கோட்பாட்டின் பிதாமகர் நைல்ஸ் எல்ரிட்ஜ் எழுதிய முழு ஆய்வுக் கட்டுரை.
http://www.nileseldredge.com/pdf_files/Dynamics_of_Evolutionary_Stasis.pdf


3.அவரின் அசுர மனிதர்கள் என்பது கட்டுக் கதை,

4.மொழி பெயர்ப்பு தவறு என நாமும்  எதிர் குற்றச்சாட்டுகளை வைத்தோம்.

ஆகவே அவரின் இப்போதைய பதிவில் இவைகளுக்கு மறுப்பு சொல்வாரோ என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்க்லாம். ஆனால் எனக்கு இல்லை!!

அவர் வேறு கிளைக்கு[விடயம்] தாவி மனிதனும் ஒருவகைக் குரங்கின மூதாதையரிடம் இருந்து தோன்றியவன் என்பதை நிரூபிக்கிறார்.

அண்ணன் சு.பியை மகிழ்விக்கும் வண்ணம் கம்பெனி விளம்ப‌ரத்திற்காக ஒரு பாடல்!!!

***

சரி இப்போதைய பதிவில் என்ன கூறுகிறார்?

பரிணாமவியலின் பொய் முகங்கள் அம்பலம்


பில்ட் டவுன் மோசடி என்ப்படும் மனிதனின் முன்னோர் எனக் காட்டப் பட்ட ஒரு மோசடிப் படிமம் பற்றி கூறுகிறார்.

//ஆராய்ச்சியில் பிழை ஏற்படலாம். அதை யாரும் குறை காண மாட்டார்கள். ஆனால் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக பரிணாமம் அடைகிறது என்ற பொய்யை நிரூபிப்பதற்காக உலகை முட்டாளாக்கிய இந்த பரிணாம மோசடிகாரர்களை அறிவியல் உலகம் என்றுமே மன்னிக்காது.//

இப்பதிவை நாம் மறுக்கப் போவது இல்லை.சகோ சுவனப்பிரியன் மீது நமக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு.அவ்வபோது உரிமையோடு கிண்டல் அடித்தாலும் அவர் அதனை பெரிதாக எடுப்பது இல்லை என்பதே நம் அன்புக்கு காரணம்.

ஆகவே இப்பதிவில் சகோ சுவனப்பிரியன் கூறிய அனைத்துமே உண்மை என வழி மொழிகிறேன்.இத்ர சரியான் படிமங்களினால் பில்ட் டௌன் மேன் படிமத்தின் வித்தியாசம் அறிந்தே மறு ஆய்வு செய்யப் பட்டது என்பதையும் சரியாக குறிப்பிட்டு இருக்கிறார் சகோ.நாம் சொல்ல வேண்டியதை அவரே சொல்லி விட்டார்.வாழ்த்துக்கள் சகோ!!ஆகவே இது மறுப்பு பதிவு அல்ல.வழி மொழியும் பதிவு!!!

அறிவியலில் யார் சொன்னாலும் பின்வருபவர்கள் அதனை சந்தேக கண்ணோடு பார்த்து அதன் மீது ஆய்வு செய்து சரி பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த மோசடிப் படிமம் கண்டுபிடிக்கப் பட்டது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

நாம் சென்ற பதிவிலும் பரிணாம்த்தை, சரியாக வரையறுத்தமைக்கும் சிறு பரிணமம்[micro evolution] நிகழ்வதை ஏற்றதற்குமே நாம் பாராட்டு தெரிவிக்க மறுத்து விட்டோம்.அதற்கும் வாழ்த்துக்கள்.

பில்ட்டௌன் படிமம் ஒரு மோசடியே. அதற்காக அனைத்துப் படிமங்களும் அப்படி அல்ல. மனித படிமங்கள் மட்டுமே ஆயிரக் கணக்கில் அருங்காட்சியகங்களில் பாதுக்ககப் பட்டு வருகின்றன்.

அந்த பில்ட்டௌன் மோசடி பற்றி ஒரு காணொளியும் பாருங்கள்.இக்காணொளி ஷெர்லாக் ஹோம்ஸ் என்னும் புகழ்பெற்ற துப்பறியும் நிபுணரை தன் கதைகளில் உருவாக்கிய சர் ஆர்தர் கோனால் டோயல் இந்த மோசடியில் தொடர்பு கொண்டு இருந்தாரா என்பதை அலசுகிறது. பரிணாமம் பற்றிய கேள்விகளுக்கு விடை அளிக்க சித்தமாக இருக்கிறோம்.

விரைவில் பரிணாமம் பற்றிய தொடர் தொடங்கும்!!

நன்றி


19 comments:

 1. ஒரு வாரத்தில் உலகைப் படைத்தது எந்தவகையான பரிணாமம்?

  விலா எழும்பிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தது என்ன எழவு பரிணாமமோ?

  விலா எழும்புக்கும் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் இராவணன்,
   நாம் கேள்வி எல்லாம் கேட்க கூடாது. பதில் எதுவுமே தெரியாது என்பதல் அவர்களுக்கு மட்டுமே அந்த உரிமை ஹி ஹி
   நன்றி

   Delete
 2. வகாபிகள் பொய்யர்கள் என நீங்கள் சொன்னதும் சுவனபிரியன் கோவித்துகொண்டுவிட்டார். அவரது கோவத்திலும் ஒரு நியாயம் இருக்கிறது. மதப்பிரச்சாரங்களில் முட்டாளம்தனம் பொய்யை விட அதிகமாக இருக்கும். அசுர எலும்புக்கூடுகளின் படங்கள் போன்ற போலி புகைப்படங்களை உருவாக்கி வெளியிடவெனவே ஒரு குரூப் இணையத்தில் இருக்கிறது. சுபி போட்ட பெரிய எலும்புக்கூடு படம் மகாபாரத கால அசுரனுடையது எனவும் சில ஈமெயில்கள் உலவின. இவற்றை உண்மை என மதவாதிகள் நிஜமாகவே நம்பிவிடுறார்கள். நம்பிக்கை அவர்களின் கண்ணை மறைக்கிறது. காதல் மட்டுமல்ல பல சமயங்களில் நம்பிக்கையும் குருடாக்குகிறது.

  அறிவியலாளரிடையும் சில போலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பல படிமங்கள் போலி என நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி ஏமாற்றுவது சில ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமாயிருக்கலாம். ஆனால் இப்போது ஒரு படிமத்தை அளித்தால் அதை யாரும் உடனே நம்பிவிடுவதில்லை. பல சோதனைகள் செய்கிறார்கள்.

  இன்னொன்று பரிணாமவியல் படிமங்களை தாண்டி எங்கோ போயிவிட்டது. இப்போது அறிவியலின் எல்லாத் துறைகளிலும் அது பயன்படுகிறது, குறிப்பாக மருத்துவத்தில். உதாரணமாக ஒரு புதிய புரதம் கண்டுபிடிக்கப்பட்டால் உடனே மற்ற உயிரிகளில் உள்ள அதே புரதத்தின் ஜீனை எடுத்து அவைகளுக்கு உள்ள தொடர்பினை ஆய்தலே முதல்படி ஆய்வாகும். ஆக பரிணாமவியல் இயற்கையாளரை தாண்டி இப்போதைய மருத்துவ, உயிரியல் சோதனை சாலைகளின் ஒரு அங்கமாகிவிட்டது. படிமங்கள் அனைத்தும் பொய் என்றாலும் பரிணாமத்தை நிறுவ தற்போதைய மரபணுவிலும் புரதவியலுமே போதுமானது. ஸாரி சுபி!

  ஓஷோ பரிணாமம் மற்றும் கடவுள் குறித்து கொடுத்த சிந்தனையை தூண்டும் உரை; OSHO: God Is Not a Solution - but a Problem . எனக்கும் ஓஷோவுக்கும் யாதொரு சம்மந்தமில்லை, ஆனால் அவரது சிந்திக்க வைக்கும் கிண்டல்களுக்காக அவரது வீடியோக்களை பார்ப்பதுண்டு. அவரது பர்சனல் வாழ்க்கையை விட்டுத்தள்ளுங்கள்.

  பதிவுக்கு சம்மந்தமல்லாத விடயம். நியூயார்க் போலிஸ் பணம் விரயம் செய்து கண்காணித்தும் ஒரு முசுலிமைக்கூட தீவிரவாதியென பிடிக்க முடியல; நாங்க ரொம்ப நல்லவங்க என சுபி எந்த நேரத்தில் பதிவு போட்டு சந்தோசப்பட்டரோ தெரியல. உடனே அதை தவறு என நிரூபிக்க ஒரு 21 வயது பங்களாதேசி முமின் கிளம்பிவிட்டார். மாணவரான குவாசி முகம்மதுவினை, 450 கிலோ எடையுள்ள குண்டு வைத்து நியூயார்க் ரிசர்வ் வங்கினை தகர்க்க முயன்ற போது FBI கைது பண்ணியுள்ளது. நல்ல காலம் முமின்களை கண்காணித்தோம் என நியூயார்க் போலிசுகாரர்கள் நிம்மதி பெருமூச்சுவிடுவார்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் நந்தவனம்,
   பில்ட் டௌன் மேன் என்பது சிலரின் புகழ்வெறியின் வெளிப்பாடே. அது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் ஆவணம் ஆக்கப் பட்டது.நாம் தவறு யார் செய்தாலும் த்வறு என ஏற்கிறோம்,கண்டிக்கிறோம்.

   ஆனால் நம் சகோக்களால் மதம் செய்யும் எதையும் விமர்சிக்க இயலாது!! பாவம்!!
   *****
   நீங்கள் சொல்வது மிக சரி ,படிம வரலாறு தாண்டி மரபியல் ஆய்வில் பரிணாம அறிவியல் எங்கோ சென்று விட்டது. இன்னும் நூறு வருடங்களுக்கு முந்தைய பில்ட் டௌன் மேன், ஹேய்க்கலின் வரைபடம் என எதையாவது சொல்லட்டும்.

   அறிவியல் விமர்சனங்களை ஏற்பதே அதன் சரிபார்க்கும் செயலாக்கம்.
   *********
   அந்த வங்க தேச மாணவன் உண்மையில் பரிதாபத்திற்கு உரியவந்தான். ஒரு ஏழை நாட்டில் பிறந்தும்,அவன் தந்தை அமெரிக்க அனுப்பி கல்வி கற்க அனுப்பினால் கண்மூடித்த்னமான மதப் பற்று அவனை குற்றவாளி ஆக்கியது.

   அவன் சிந்தனையை மோப்பம் பிடித்த காவல்துறை பொறி வைத்து பிடித்து விட்டது. அமெரிக்க,யூத‌ எதிர்ப்பு வெறி என்பதும் மதவாதிகளின் பிரச்சாரம் என்பதும் இது இப்படியான் எதிர்விளைவுகளை வாலிபர்களின் மீது ஏற்படுத்துகிறது என்பதை உணர மாட்டார்கள்.பாவம் அவன் வாழ்வு அழிந்து விட்டது!!

   முதலில் மதவாதிகள் இது அமெரிக்க சதி என்பார்கள், பிறகு மறுக்க முடியாமல் வழக்கம் போல் அவன் உண்மையாக மதம பின்பற்றவில்லை என ஒதுங்கி விடுவார்கள்.
   நன்றி!!!

   Delete
 3. எம்மை இந்தப் பாடல் மூலம் மகிழ்வைத்ததிறகாக நன்றி!
  ஒரு கேள்வி?

  இந்தப் பாடலைக் காட்டி பரிணாமம் உண்மை என்று சொல்லமுடியாதா? அவர்கள் கடவுளுக்கு ஆதரங்களை அப்படித் தானே காட்டுகிறார்கள்! Tit for Tat

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் நம்பள்கி,
   அருமையான் கருத்து,அதானே இப்பாடல் போல் இன்னொரு கருத்துள்ள ஆடலுடன் பாடல் நாங்கள் ஏற்கும் வண்ணம் கொண்டுவர முடியுமா?

   ஆகவே இதுவே நிரூபணம்
   நன்றி!!!

   Delete
 4. சகோ.சார்வாகன்,

  இது போன்று அறிவியலை வைத்து செய்யப்படும் திரிப்பு வேலைகளை அறிவியலாளர்களே வெளிப்படுத்தி ,உண்மையான ஆய்வுக்கும்,அறிவுக்கும் வழிகாட்டுகிறார்கள், இதனை சு.பியின் பதிவிலும் தேலிவா சொல்லிவிட்டேன்.

  இதை பெருமையாக சொல்லிக்கொண்டு ,கும்மி அடிப்பவர்கள்,

  சு.பி.சுவாமிகள் ஆதிமனிதன் உயரத்திற்கு சான்றாக மதாயின் சாலே இடத்தினை வைத்து சொன்ன கதையை ,ஆஹா நல்ல சான்று என்று கொண்டாடிக்கொண்டார்கள்,அதில் இருந்த பொய்யை சொன்னதும், ஹி...ஹி விளக்கம் கேட்டுள்ளேன் என நழுவியதையும், இந்த மார்க்க பந்துக்கள் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டாமா?

  பரிணாமம்,அறிவியலில் கட்டுக்கதைகள் புகுந்துவிடாமல் தடுப்பதில் பரிணாமவியலாளர்களே அக்கரைக்கொண்டுள்ளர்.பில்ட்டவுன் மோசடியை வெளிப்படுத்தியதும் அவர்களே.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் வவ்வால்,
   விடுங்க அவர்கள் அப்படித்தான்!. அவர்கள் இல்லாவிட்டால் நாமும் எதிர்பதிவு போட முடியாது என்பதால்,இயங்கியல் தத்துவப்படி நம்மை அவர்களே இயக்குகிறார்கள்.

   ஆமாம் பில்ட் டௌன் படிமம் மோசடி என்பதை ஏற்கிறோம். அதற்காக அனைத்துப் படிம்ங்களும் சரியா என வெறும் கேள்வி மட்டும் கேட்காமல் ,பரிணாம் ஆய்வாளர்கள் சொல்லுமொவ்வொரு விடயத்தையும் ஆய்வு செய்ய,ஆவணப் படுத்த பரிணாம் எதிர்ப்பு கோஷ்டிகளை வேண்டுகிறேன்.

   ஆகவே அவ்ர்கள் இன்னும் பரிணாம் எதிர்ப்பு பதிவுகள் எழுத ஊக்குவிக்கிறேன்!!
   நம்க்கு அதுவே பிடிக்கிறது!! ஐ லவ் யு சுவன்ப் பிரியன்!!!!!!!!!!!!!!!!!!
   டூ யு லவ் சுவனப் பிரியன்?
   நன்றி!!!

   Delete
 5. சார்வாகன்,

  தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  மதவாதிகள் அறிவியலில் அவர்களுக்கு ஒவ்வாத பகுதியை தவிர்த்துவிடுவது ஒன்றும் புதிதல்லவே. நீங்கள் ஏதேனும் கேள்வி இட்டால் அதற்கு பதில் கூறாமல் வேறொரு கேள்வியோடு வந்து நிற்பார்கள். தங்களின் நம்பிக்கை தகர்க்கப்படும்போது எழும் சுயபச்சாதாபம் தான் இவற்றிற்குக் காரணம்.எதையாவது சொல்லி அவர்களாவே திருப்தி அடைந்து கொள்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் கு.பி
   நம் சகோக்களை நன்கு புரிந்து வைத்து இருக்கிறீர்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்
   நன்றி

   Delete
 6. வணக்கம் சகோ,

  பதிவு மிக அருமையாகப் போய்க்கொண்டிருக்கின்றது தொடருங்கள்,மதபழைமை வாதிகளை விட்டுத்தள்ளுங்கள். எங்களைப் போன்ன்றோர் உண்மைகளை அரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக உங்கள் பதிவு அமைந்துவிட்டது. பொய்களை உண்மை என சொல்லி நீண்டநாட்களுக்கு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. பரிணாமத்தின் முன்னேற்றம் மதவாதிகளை பீதியடைய வைத்துக் கொண்டிருக்கின்றதற்கு அவர்களின் உளறல்களே சான்றாகி வருகிறது. எவ்வளவுதான் பரிணாமத்தை மதவியாபாரிகள் எதிர்த்தாலும் எதிர்காலத்தில் அதையும் வரவேற்று,எங்கள் மதபுத்தகத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னாடியே கடவுள் கூறிவிட்டான் என்று,எதையாவது ஒரு வசனத்திற்கு அடைப்புக்குறியிட்டு சமாளித்துவிடுவார்கள். அது அவர்களுக்கு கைவந்த கலை!!!!!!

  இனியவன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் இனியவன்,
   சரியான விடயங்களை,நடுநிலையோடு யார் சொன்னாலும் ஆதரிப்போம் என்பதாலேயெ,இப்பதிவில் மதவாதிகளின் ஏமாற்று வேலைகள் பற்றி எதுவும் கூறவில்லை சகோ சு.பி யின் பதிவை வரவேற்று வழி மொழிந்து இருக்கிறேன்.ஒருவேளை நான் எழுதி இருந்தாலும் பில்ட் டௌன் பற்றி இப்படித்தான் எழுதி இருப்பேன்!!

   வாய்மையே வெல்லும்!!
   ***
   ஜாகிர நாயக் மீது இபோது முஸ்லிம்களே ஒத்துக் கொள்ளும் இருகுற்றச்சாட்டுகள் உண்டு.
   1.குரான் 79.30ல் டஹாஹ என்னும் அரபி சொல்லுக்கு இலாத த்வறான பொருள் நெருப்புக் கோழி முட்டை என்று சொல்லி உலகம் நெருப்புக் கோழி முட்டை போல் இருக்கிறது என பொய் சொன்னார்.
   http://satyagni.com/science-zakir/
   akir Naik says:
   The earth is not exactly round like a ball, but geo-spherical i.e. it is flattened at the poles. The following verse contains a description of the earth’s shape “And the earth, moreover, Hath He made egg shaped.” [Al-Qur'aan 79:30]
   The Arabic word for egg here is dahaha, which means an ostrich-egg. The shape of an ostrich-egg resembles the geo-spherical shape of the earth. Thus the Qur’aan correctly describes the shape of the earth, though the prevalent notion when the Qur’aan was revealed was that the earth is flat
   Our response:
   As expected, the translation of the above verse is NOT from YUSUF ALI, it’s a later day addition by apologists like Dr. Naik. Here are the three reputed translations:
   YUSUFALI: And the earth, moreover, hath He extended (to a wide expanse);
   PICKTHAL: And after that He spread the earth,
   SHAKIR: And the earth, He expanded it after that.
   Al-Taqiyya is at play and Dr. Naik deviates from his assurance that he would quote from Yusuf Ali. He created his own translation!!! Not a single scholar worth his salt translated dahaha as egg-shaped.
   **

   2. ஜாகிர் நாயக், பி.ஜேவின் " இயேசு இறைமகான என்னும் புத்த்கத்தை அப்படியே த்னது சொந்த சரக்காக் பி.ஜே விடம் அனௌமதி பெறாமல் ஆங்கிலத்தில் எழுதி விட்டார்
   ***
   இப்போது ஜாகிர் நாயக்கின் மோசடிகள், தவறால் குரான் தவறாகி விடும் என்றால், பில்ட் டௌன் மோசடியால் பரிணாமமும் த்வறாகி விடலாம்
   நன்றி

   Delete
 7. ஐ!!! சார்வாகன்

  ReplyDelete
 8. ஹையா மீரான் நலமா?
  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!!!
  நன்றி!!!

  ReplyDelete
 9. வ அலைக்கும் அஸ்ஸலாம் .சகோ..

  நான் நலம்...நீங்க நலம் தானே..நேரத்துக்கு சாப்புடுங்க ...உடம்ப பாத்துக்கோங்க ...அப்பப்ப லட்டர் போடுங்க.. ..மறக்காம வீட்ல கேட்டேன்னு சொல்லுங்க ...

  நன்றி!!!

  ReplyDelete
 10. சொல்ல வேண்டியதை துரை டேனியலுக்கு தெளிவாக சொல்லியுள்ளீர்கள் சகோ.
  //பரிணாம கொள்கையை மத நம்பிக்கையாளர்கள் நம்பாவிட்டால் பரிணாமத்திற்கு நட்டம் ஒன்றுமில்லை. உலகின் பெரும்பானமை பல்கலைக் கழகம்,பள்ளிகளில் தமிழ்நாடு உட்பட்டு போதிக்கப்படுகிறது. ஆயிரக் கண்க்கில் ஆய்வுகள்,கட்டுரைகள் என நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக வளர்கிறது.ஆகவே பரிணாமத்தின் நம்பகத் தன்மைக்கு எந்த குறையும் இல்லை//
  தனது மதத்திற்க்கு எதிரானது பரிணாமம் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமிய மதவாதிகளோடு இவர் கூட்டு சேர்ந்துள்ளார்.தமிழ் அரபு விசுவாசிகளின் நிலை தெரிந்தது தானே. இஸ்லாமிய மதவாதிகளுக்கு இவரும் காபீர் தான். இவருக்கும் சேர்த்து ஆப்படிப்பாங்க.காதலன் காதலியைப் பார்த்து சொன்ன கவிதைக்கு கிறிஸ்தாவர்கள் எதிர்ப்பு.இஸ்லாமிய செயல்பாடுகளின் சாயல் தமிழ் கிறிஸ்தவர்களிடம் காண முடிகிறது.

  ReplyDelete
 11. இதில் இன்னொரு முக்கிய விடயம். மதவாதிங்க எப்போதுமே மோசமான வெளிவே ஷ‌க்காரராகயிருப்பதில் கில்லாடிங்க.தங்கள் நலன்களில் மட்டும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள்.தங்க புள்ளை குட்டிகளை மட்டும் பொறுப்புணர்வுடன் பரிணாம கொள்கையையை எல்லாம் படிப்பித்து முன்னேற்றிவிடுவார்கள். பரிணாம எதிர்பபு என்பது எல்லாம் பெருந்தொகை அப்பாவி மதநம்பிக்கையார்களை ஏமாற்ற மட்டுமே.

  ReplyDelete
 12. 1400 வருடங்களுக்கு முன்பு யாரோ ஒரு அரபுகாரன் படு முட்டாள்தனமாக சொன்னான் என்பதிற்காக இப்பவும் தாங்கள் சிறு நீர் கழிக்க போது போகும் போது செங்கல்லை தேடி அலையும் தமிழ்நாட்டை சேர்ந்த சிலரிடம் போய் மொபைல்போன், லேப்டாப், பரிணாமம் என்பதெல்லாம் ரொம்படி ஓவர். முதலில் 1400 வருடங்களுக்கு முற்பட்ட மனநிலையில் வாழும் அந்த பின் தங்கிய மனிதர்களை 2012க்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

  ReplyDelete
 13. வணக்கம் சகோ,

  பரிணாமவியலில் தவறு நடந்தால் அதை சரி செய்ய அறிவியலாளர்கள் முயற்சி செய்து அவர்களே அம்பலப்படுதிவிடுகிறார்கள்.சுமாராக ஒரு 50 ஆண்டுகளுக்குள் இவைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்ற தவறுகள் என்று,இட்டுக் கட்டப்பட்ட ஹதீதுகள் எனவும்,திருத்தப்பட்ட எழுத்துக்கள் எனவும் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளாகத்தானே சொல்லிவருகிறார்கள். எ.கா. இதயம் உள்ளமாகவும்,இரத்தக் கட்டி சதைப்பிண்டமாகவும்,களிமண் மண்சத்துக்களாகவும்,சாணம் ஜீரணிக்கப்பட்ட சத்துணவாகவும்,இன்னும் பல . ஒரு கடவுளின் வசனத்தை புரிந்து கொள்ளவே 1500 ஆண்டுகள் தேவைப்படும் போது,மனிதனின் வாசகத்தை அரிந்து கொண்டு திருத்திக் கொள்ள சொற்ப ஆண்டுகள் கடந்து செல்லவது ஒன்றும் வியப்பில்லயே!!

  இனியவன்...

  ReplyDelete