Tuesday, October 30, 2012

நான்கு சிறகு கொண்ட டைனோசார்: காணொளி


Prophet Nuh a.s
 

வணக்கம் நண்பர்களே,
 
பரிணாம் எதிர்ப்பு பதிவுகள் தொடர்ந்து வருவதால் நாமும் தொடர்ந்து எத்ர்வினையாற்றும் சூழல் உருவாகிறது. சகோ ஆஸிக் அகமது ஆர்ச்சியோராப்டர் மோசடி பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.பரவாயில்லை நடுநிலையோடு எழுதி இருக்கிறார். இதனை நாம் மறுக்கப் போவது இல்லை.

நாம் எதிர்வினையாற்றுவதே அறிவியல் செய்திகளை விமர்சிக்கும் போது நடுநிலையாக இருக்க வேண்டும். தமிழில் அறியும் நண்பர்களுக்கு உண்மைகள் தெரியவேண்டும் என்பதுதான்.

ஒரு சர்சைக்குறிய கருத்து இடப்படும் போது அதன் மறுபக்கம்,பன்முகப் பார்வைகள் அறிவது உண்மை நாடும் பகுத்தறிவாளர்களின் கடமை ஆகும். இது மட்டுமே உண்மை,மாற்றுக் கருத்துகள் அனுமதிக்கப்படாது என கூறுவது யாராக இருப்பினும் தவறே.

அந்த வகையில் இப்பதிவில் ஒரு வித்தியாசமான பறக்கும் டைனோசார் பற்றி அறிவோம்.பரிணாமவியலில்  தெரபோட் டைனோசார் ல் இருந்தே பறவைகள் உருவானதே என்பதே இப்போதைய ஏற்கப்படும் கொள்கை. அறிவியல் என்பது சான்றுகளுக்கு பொருந்தும் விள்க்கம் அளித்தல் என்பதும்,அவ்விளக்கத்தின் மூலம் செய்யப்படும் கணிப்புகள் எந்த அளவுக்கு மெய்ப்படுத்தப் படுகிறவோ அவ்விளக்கத்தின் நம்பக்த்தன்மை,ஏற்பு அதிகரிக்கும்.

சான்றுகள் மாறும் போது விளக்கமும் மாறும்.இதில் அறிவியலில் எந்த பிரிவும் விதிவிலக்கு அல்ல.அந்த வகையில் பரிணாம வளர்ச்சியில் டைனோசாரின் முன் இரு கைகளில் இறகு முளைத்தே இறக்கைகளாக மாறியது என்பதே இப்போதைய அறிவியல் கொள்கை அனைத்து பற்வைகளுக்கும் இரு இறக்கைகள்,இரு கால்கள் உண்டு,

பல புராணக் கதைகளில் சில விலங்குகள் நான்கு கால்களுடன் இரு இறக்கைகளுடன் காணப்படும். பரிணாமத்தின் படி இது சான்றுகள் அற்ற ஏற்கப் படாத ,சாத்தியமற்ற‌ விடயம் ஆகும்.

இந்திய புராண காமதேனு


இஸ்லாமிய  புராண புர்ராக் (முகமது(சல்) அவர்களை சுவனம் அழைத்து சென்ற விலங்கு.


சீன புராணக் கதை ட்ராகன்!!!

 

மனிதர்களை சுமந்து செல்லும் பறக்கும் நாலுகால் விலங்குகள் பற்றி பல புராணக் கதைகளில் உண்டு. 

இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் மைக்ரோராப்டர் என்னும் டைனோசார் படிமத்தில் நான்கு இறக்கைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதாவது பின்னங்கால்களிலும் இறகுகள் உண்டு.

இது தெர்போட்[theropod] டைனோசாரிடம் இருந்து பறவைகள் தோன்றின என்னும் கொள்கையை மாற்றுமா என்பதே விவாதம். இதை ஏன் கூறுகிறோம் என்றால் ஏற்கெனவே உள்ள கருத்துக்கு சற்று மாறான் சான்று கிடைத்தாலும் அதையும் பரிசீலித்து ஏற்கும் அறிவியல் என்பதை வலியுறுத்தவே செய்கிறோம். இந்த நான்கு இறகு டைனொசார் ஒரு விதிவிலக்காக மட்டும் இருக்கலாம், அல்லது பறவைகளின் தோற்றத்திற்கு மாற்று விளக்கம் அளிப்பினும் ஏற்கப்படும்.


கிடைக்கும் சான்றுகளை  பலர் ஒருவரை ஒருவர் சாராமல் ஆய்வு செய்து ஒத்த ஒருமித்த கருத்துகள் வருவதையே அறிவியல் உலகம் விரும்புகிறது.

ஒருவேளை எவரேனும் தவறு செய்தால் பிடிப‌டுவது இதனால்தான். ஆகவே பில்ட்டௌன் மேன்,ஆர்ச்சியோராஃப்டர் என ஒரு சில மோசடிகளை சொல்லி பரிணாம எதிர்ப்பாக காட்டுவது நகைப்புக்குரியது.

ஆகவே தவறான படிமங்களை நிரூபித்தால் அறிவியல் உலகம் ஏற்கும் என்பதால் இருக்கும் படிமங்கள் அனைத்தையும் தவறென்று நிரூபிக்க ஆய்வுகள் மேற்கொள்ள பரிணாம் எதிர்ப்பாளர்களை வேண்டி விரும்பி கேட்கிறோம்.

ப‌டிம‌ங்க‌ள் அனைத்தும் தவ‌றாகி விட்டால் ப‌ரிணாம‌ம் இல்லாமல் போய் விடும்.ப‌ற‌க்கும் டைனோசார்க‌ள் என்ப‌து டை‌னோசாரின் ஒரு உயிரிக் குழு என்றாலே ப‌ரிணாம‌ம் புரிந்துவிடும்.

அளவில‌ பெரிய‌ டைனோசார்க‌ள் உருஅளவில் குறையும் சிறுப‌ரிணாம‌மும்[micro evolution] ம‌தவாதிக‌ளால் எதிர்க்க‌ முடியாது. ஆக‌வே ப‌றவைக‌ள் என்ப‌து ஒரு வ‌கை சிறிய‌ டைனோசார்க‌ளே!!!.

இன்னும் கூட டைனோசார்கள் பறவைகளாக பரிணமித்த விடயமும் இச்சுட்டிகளில் விளக்கப் படுகிறது.

Nine links in the transition from dinosaurs to birds

http://www.talkorigins.org/indexcc/CC/CC214.html


************

இன்னும் அந்தப் பதிவில் உள்ள எச்சரிக்கை உணர்வு நமக்கு பிடிக்கிறது.

//இந்த பதிவுக்கு பதில் சொல்ல விரும்புபவர்கள் தயவுக்கூர்ந்து ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். "டைனாசரில் இருந்து பறவை" வந்தது என்ற யூகத்தை இந்த கட்டுரை விமர்சிக்கவில்லை (அதற்கு இத்தளத்தின் ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த கட்டுரையை பார்க்கவும்) அதனால் பதில் சொல்கின்றேன் என்று கிளம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, பரிணாம ஆய்வாளர்கள் அறிவியலுக்கு செய்த துரோகத்தை தான் இந்த கட்டுரை விமர்சிக்கின்றது. முடிந்தால் அதனை மறுத்து காட்டுங்கள். //

 
அறிவியல் ஒன்றும் புனிதப் பசு அல்ல, புகழ்வெறி பண ஆசை கொண்டவர்கள் எங்கும் எதிலும் இருப்பது போல் இயல்பானது. ஆனால் அறிவியலில் பொய்கள் கண்டுபிடிக்கப்பட்டு அமபலப் படுத்தப்படுவது போல் பிற வாழ்வியல் சார் விடயங்களில் நடப்பது இல்லை.

ஏதேனும் படிமத்தை யாரும் ஆய்வு செய்ய விருப்பப் பட்டால் அது நடக்கும் வாய்ப்பு உண்டு.ஆனால் பல நாடுகளில் அகழ்வாய்வு செய்தால் தங்கள் குட்டுகள் அறியப்படும் என மறுப்பார்கள்.செய்திகளும் வராது!!!

ஆகவே அறிவியலில் சில மோசடிகள் நடந்திருப்பது உண்மைதான், அதன் சரி பார்க்கும் செய்லாக்கமான ஒன்றை ஒன்று சாரா ஆய்வுகளின் மூலம் ஒத்த ஒருமித்த கருத்துகள் எட்டப்படுதல் என்பது தவறுகளை நீக்கி சரியான பாதையில் நடத்துகிறது.

இப்போது  நாமும் ஒரு மோசடியை அம்பலப்படுத்துகிறோம்.ஆனால் சகோக்கள் ஏற்க மாட்டார்கள் என்ன அது.

பைபிளில் நோவா என்ரும் குரானில் நூஹ் என்றும் அழைக்கப்படும் இறைத்தூதர் கால்த்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.அதாவது அன்பு மிக்க கடவுள் தன் சொல் கேளாதவர்களை அழிக்க ஏற்படுத்தினார்.

அதில் இருந்து கடவுளின் அடியார்  நோவா(நூஹ்)மற்றும் அவர் குடும்பம்  ஒரு கப்பல் செய்து அந்த கப்பலில் பல விலங்குகளையும் ஏற்றி தப்பிக்க வைத்தார் எனக் கூறுகின்றன மதபுத்தகங்கள்.

சரி இந்த வெள்ள‌ப் பெருக்கு ஆனது உலக முழுதும் என்பதே பொதுவான கருத்து ஆகும்.ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை என்பதால் இப்போது இஸ்லாமிய பிரச்சாரகர்கள், இது நூஹ்(நோவா) வாழ்ந்த இடத்தில் மட்டும் ஏற்பட்டது என்று  பொய் சொல்கிறார்கள்.

பாருங்கள் அண்னன் ஜாகிர் நாயக் என்ன கூறுகிறார்?? ‌குரான் [வழக்கம் போல்] இந்த விடயத்தையும் தெளிவாக சொல்லவில்லை ஆகவே அந்த இடத்தில் மட்டும் வெள்ள‌ப் பெருக்கு வந்தது எனப் பொருள் கொள்வேன் என்கிறார்.அந்த இடம் என்றால் எங்கே என்று கேட்க கூடாது!!!!!!!!!!

ஆகவே இது மோசடியா இல்லையா என்பதை உங்கள் கவனத்திற்கு விடுகிறேன்!!

அறிவியலில் மோசடிகள் நடப்பது அபூர்வம்,அப்படிநிகழ்ந்தாலும் அது கண்டுபிடிக்கப்படும்,நீக்கப்படும்.ஆனால் மதவாதிகளின் புராணக் கதை மோசடிகள் மறைக்கப்படுகிறது.காலம் காலமாய் தொடர்கிறது!!!!!!!
 
நோவா கப்பல் கதைக்கு ஆதாரம் கிடையாது,ஏதோ அராஃபத் மலையில் கிடைத்த கப்பல் என்பதும் மோசடி வேலையே!!!.பதிவின் தொடக்கத்தில் உள்ள படம்!!
 
http://www.wnd.com/2010/04/146941/

இது பற்றிய நம் முந்தைய பதிவு ஒன்று.
நோவா கப்பல் கதை உண்மையா?

ஆகவே அறிவியல் கண்டுபிடித்து சரி செய்த மோசடிகளை பட்டியல் இடும் மதவாதிகளே, உங்கள் மத புராணக் கதைகளின் உண்மைகளை நிரூபிக்க வாரீர் என அழைக்கிறோம்
நன்றி

26 comments:

 1. ஆகவே அறிவியல் கண்டுபிடித்து சரி செய்த மோசடிகளை பட்டியல் இடும் மதவாதிகளே, உங்கள் மத புராணக் கதைகளின் உண்மைகளை நிரூபிக்க வாரீர் என அழைக்கிறோம்
  நன்றி//

  கடவுள் சொன்னது எப்படி மோசடியாகும் சும்மா அரைகுறையாக உளறக்கூடாது.

  ReplyDelete
 2. வாங்க சகோ குடுகுடுப்பை,
  இப்படியேதான் சொல்லிகிட்டு இருங்காங்க நம் சகோக்கள்
  மத புத்த்கத்தை எப்படி நம்புவது?
  அது கடவுளிடம் இருந்து வந்தது
  கடவுளை எப்பை நம்புவது
  மத புத்தகம் சொல்வதால்
  ***********

  கடவுள்தான் மத புத்த்கம் அனுப்பினார் என்று எப்படி நம்புவது? என்றால்

  பரிணாமம் தவறு, மதபுத்தகத்தில் அறிவியல் என்கிறார்கள் ஹி ஹி.
  *********
  பிற மதங்கள் மட்டும் ஏன் தவறு ?என்றால்
  அவற்றில் ஆபாசம் என்கிறார்

  உன் புத்தகத்திலும் இருக்கிறதே என்றால்
  [அண்ணனின் லேட்டஸ்ட் விவாத விள்மபரம்!!!!

  http://www.onlinepj.com/PDF/101_thalaippu_2.pdf
  ]
  அதன் புரிதல் தவறு என்கிறார்.
  ***********
  ஹா ஹா ஹா
  இதுவே மதவிள்மபரம் சேய்யும் முறை ஆகும்
  நன்றி!!!!!!

  ReplyDelete
  Replies
  1. சார்வாகன் //// உன் புத்தகத்திலும் இருக்கிறதே என்றால்
   [அண்ணனின் லேட்டஸ்ட் விவாத விள்மபரம்!!!!////

   சார்வாகன் சும்மா அலட்டாதீர்கள் உங்கள் புத்தகத்தில் இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது அதை நிருபியுங்கள்

   Delete
 3. சகோ.சார்வாகன்,

  நல்ல கருத்தாக்கம்.

  உங்கள் முந்தைய பதிவும் படித்தேன், பாவம் சு.பி.சுவாமிகள் குழு, முன்னுக்கு பின் முரணாக பேசிக்கொண்டு அலைகிறார்கள்.


  கொஞ்ச நாளைக்கு முன்னர் சாந்தியும்,சமாதானமும் பிரச்சினையின் போது, ஆதாம் சலாம் அலைக்கும் என வானவர்களுக்கு சொன்னார், புனிதமானது என்றார்கள், அரபி மொழி தோன்றி எத்தனை காலம் ஆச்சு என அப்போதும் கேட்டேன் பதிலே சொல்லவில்லை, இப்போது சு.பி அது அரபியாக இருக்காது ஏதோ ஒரு மொழி என்கிறார். மேலும் ஆதாம் சுவனம் நேராக போகவில்லை என்றும் சொல்கிறார். அதாவது அவர்கள் எதனை சரி என வாதிடுகிறாகளோ,அதனை அவர்கலே இல்லை என மறுத்துவிட்டு புதிதாக ஒன்று போவதை வழக்கமாக வைத்துள்ளதை இதன் மூலம் அறியலம் :-))

  எனவே அன்று என்ன சொன்னார்கள் என்பதை நினைவில் வைத்து திரும்ப கேட்டால் மார்க்கப்பந்துக்களின் ஆட்டம் குளோஸ் ஹி...ஹி :-))

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ வவ்வால்,
   அறிவியலில் சில மோசடிகள் நிகழ்ந்து இருக்க்லாம். ஆனால் மத புத்தக கதைகள் மொத்தமும் மோசடியே.
   எதுவரைக்கும் போவார்கள் என்றே ஆவணப் படுத்துகிறோம்.

   1.பில்ட் டௌன் மேன் மோசடி என்றார்கள்,நம் 10 அடி மனிதர்கள் மோசடி என்றோம்.ஜாகிர் நாயக்கின் உலகம் நெருப்புக் கோழி முட்டை என்னும் தவறான மோசடி காட்டினோம்.

   2. ஆர்சியோராஃடர் படிமம் மோசடி என்றார்கள், நோவா கப்பல் மோசடி காட்டி விட்டோம்.
   ************
   எனினும் சகோ ஆஸிக்கின் மிக எச்சரிக்கையான் பதிவு ஹா ஹா ஹா

   இன்னும் பரிணாம் எதிர்ப்பு பதிவுகள் தொடர வாழ்த்துகிறோம்.

   நன்றி

   Delete
 4. மன்னிக்க வேண்டுகின்றேன் நேரமின்மையால் சுபி, ஆசிக், உங்கள் பதிவுகளை முழுமையாக படிக்கவில்லை - செல்பேசி ஊடாக மேய்ந்துவிட்டு சென்றுவிட்டேன், நாளை பேய்கள் தினத்தில் ஒரு பிடி பிடிக்கலாம் என இருக்கின்றேன். ஆழமாக வாசித்த பின்னர் எனது மேலான கருத்துக்களை முன் வைக்கின்றேன் .. :)

  ReplyDelete
 5. அனைத்து நாத்திக செய்திகளையும் ஆங்கிலத்தில் தொகுக்க ஒரு புதிய தளத்தை ஏற்படுத்தியுள்ளேன் - http://go.to/atheistpost -

  கீழே நீங்கள் இணைத்த நாஸ்திக தளம் நீக்கப்பட்டுவிட்டது, உங்களுக்கு பேப்பர்லியில் வரும் - http://paper.li/tag/atheism பரிந்துரைக்கின்றேன் ..

  Atheistpost -விட்ஜட்டின் கோட்கள் வேண்டும் எனில் எனது மின்னஞ்சலுக்கு ஒரு மெயில் போடுங்கள் நன்றிகள் !!!

  புரதம் குறித்த உங்கள் பதிவை வாசித்தேன், சில சந்தேகங்கள் தெளிவாக்கி விட்டு கருத்திடுகின்றேன், சுபியின் பதிவையும் ஒருமுறை வாசிக்க வேண்டும் .. வாசித்த பின் எனது பதிலை சொல்லுகின்றேன். நன்றிகள் ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இ.செ
   ஆவண செய்கிறேன்.நன்றி

   Delete
 6. வணக்கம் சகோ,

  நல்ல பதிவு. மதவாதிகள் எப்போதுமே தங்கள் தரப்பு தவறுகளை ஏற்க மாட்டார்கள். ஏன் என்றால் கடவுள் தந்த வேதம் என்று கண்மூடித்தனமாக நம்புவதே. ஆகவே அதில் தவறுதல் இருக்காது என்ற தவறான புரிதல்.

  //ஆகவே அறிவியல் கண்டுபிடித்து சரி செய்த மோசடிகளை பட்டியல் இடும் மதவாதிகளே, உங்கள் மத புராணக் கதைகளின் உண்மைகளை நிரூபிக்க வாரீர் என அழைக்கிறோம்
  நன்றி//

  எப்படி வருவார்கள்? உண்மையை விரும்பாத வெறும் (மூட) நம்பிக்கைவாதிகள்!!!!

  நன்றி...

  ReplyDelete
 7. நீங்கள் குடுத்திருக்கும் தகவல் எல்லாம் நிரூபிக்க படாதவை .உங்களால் குர்ஆனில் இருந்து ஆதாரம் காட்டமுடியுமா .?
  நுவ் நபி கதைக்கு குர்ஆனில் ஆதாரம் இருக்கிறது . உங்களின் பறக்கும் டைனோசர் கதைக்கு குர்ஆனில் ஆதாரம் காட்ட முடியாது . இதில் இருந்தே உங்கள் பரிணாம கொள்கை கிழிந்து தொங்குவது தெரிய வில்லையா .?

  ஆஹா நெத்தியடி கேள்வி . சாட்டையடி கேள்வி என்று என் பின்னூட்டதிற்கு ஊக்கம் அளிக்குமாறு மார்க்கபந்துகளை கேட்டு கொள்கிறேன் . அவ்வாறு ஊக்கம் அளித்தால் நாக்கை புடுங்கிகொள்ளும் மாதிரி நிறைய கேள்விகளை வைத்திருக்கிறேன் .ஒவ்வொன்றாக போட்டு இவர்களின் முகத்திரையை கிழிக்க தயாராக இருக்கிறேன் . கட்டணம் கிடையாது இலவசம்தான் .................

  ReplyDelete
  Replies
  1. வாஅங்க சகோ,
   நம்மிடமே குரானில் காட்ட சொல்லி சவாலா!!! காட்டுவோம்!!!
   //2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.//
   அனைத்து வகை பிராணி என்றால் மைக்ரோராஃப்டரும் அடக்கம்தானே!! ஹி ஹி

   இதை நான் மட்டும் சொல்லவில்லை சில மார்க்கமேதைகளும் சுட்டுகிறார்!!
   http://www.answering-christianity.com/dinosaurs.htm

   Dinosaurs in the Noble Quran:
   நன்றி

   Delete
 8. வணக்கம் சகோ.

  பறந்து செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக இறக்கைகள் இருந்தாக வேண்டும் என்ற எண்ணம் காட்டுமிராண்டிகாலத்திலே இருந்ததால் தான் இப்படிப்பட்ட கற்பனை விலங்கு விமானங்கள் கற்பிக்கப்பட்டன. இப்ப இறக்கைகள் இல்லாமலேயே ராக்கெட்டில் பயணிக்கலாம் என்ற சமாச்சாரம் அப்ப தெரியாதல்லவா பாவம் கடவுள். சொர்க்கம் பூமியில் இனிமேதான் உண்டாக்கப்படும் என்று கூறிவிட்டு,சொர்க்கத்தில் முன்னால் மாண்புமிகு இறைத்தூதர்களை நம்ம காககககே சந்தித்த அனுபவம் சூப்பர் காமெடி. அது சரி இப்பவும் ஜகன்மோகினி,ஜக்கம்மா,அம்மன், ஆத்தா,முனி போன்ற படங்களை பார்த்துவிட்டு பரவசமானவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அந்தக்காலத்தில் நம்பவைக்கப்பட்ட கதையை இப்பவும் நம்பவைக்கப் பாடுபடுகிறார்கள் அவ்வளவுதான்...

  ReplyDelete
  Replies
  1. ஆம் சகோ இதுவும் ஒரு முரண்பாடே,
   நியாயத் தீர்ப்பின் முன்பே எப்படி சுவனம்,நரகம் இருக்க முடியும்???.அப்புறம் எப்படி அங்கே போய் ஆட்களைப் பார்க்க முடியும்?

   ஆயினும் நம்மால் இதற்கு அறிவியல் விளக்கம் கொடுக்க முடியும்!!!

   இதுக்கு ஐன்ஸ்டின் விதியை அழைத்து காலத்தையும் தாண்டிச் சென்று பார்த்தார் என விளக்கினாலும் வியப்பில்லை.

   ஹி ஹி நாமெ விமர்சிப்போம் நாமே எடுத்தும் கொடுப்போம்!!!!!!
   *********
   இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன.

   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
   நன்றி

   Delete
 9. ம‌தவாதிகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால்,அறிவியலாளர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்கள்,பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார்கள் என்பதே அவர்களின் குற்றச் சாட்டு.ஒன்றை தவறுதலாக அறிவிக்கும் போது அது தவறு என அப்பொழுதே சுட்டிக் காட்டாமல் 40 ஆண்டுகள் கழித்து கூறுவது ஏன்? இது அறிவியலுக்கு செய்யும் துரோகம் அல்லவா என்பதே அவர்களின் கேள்வி. நியாயமானதுதானே!!!

  இவர்களுக்கு புரியும்படியாக சொல்ல வேண்டும் என்றால்,ஒரு ஹதீது பலஹீனமானது என்று கண்டுபிடிக்க 1400 ஆண்டுகள் கடந்து அண்ணன் பி.ஜே. ஆராய்ச்சிக்குப் பிறகு தெரியவருவது போல் என்று விளக்கமாக சொல்ல வேண்டும். இந்த 1400 ஆண்டுகள் என்பது அவர் கணக்குப்படி சுமாராக ஒன்னறை நாள் தானே. அது மட்டுமல்லாமல் சிந்திப்பது மூளைதான் என்று சொன்னால் அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ள மறுத்து குரானை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,அதாவது குரான் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் குரானை நிராகரிக்கமாட்டார்கள்(உபயம் திரு.பி.ஜே.).எனவே அன்று சிந்தித்தது இதயம், இன்று சிந்திப்பது மூளை.தவறு என்று தெரிந்தும் அன்று ஏன் சுட்டிக்காட்டவில்லை? இந்த மாதிரி கேள்வி மட்டும் கேட்க கூடாது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ,
   பில்ட் டௌன் மேன் மோசடி 40 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப் பட்டது என்றால் அது பிற படிமங்களோடு ஒத்துப் போகவில்லை.மேலும் அது ஐயந்திரிபர தவறு என நீருபிக்கும் அள்வு தொழில் நுடப்ம் வளர்ந்து இருக்கிறது.
   யாரும் இபோது எந்த படிமத்தின் மீதும் ஆய்வுகள் நடத்தலாம். பில்ட் டௌன்,ஆர்சியோராஅஃப்டர் தவிர மீதம் உள்ள இலட்சக்கணக்கான் படிமங்கள் சரியென்று அறிவியல் ஏற்கிறதே.

   இவை அனைத்து பரிசோதனைகளையும் தாங்கி நிற்கிறதே!!!.

   *************
   நம் சகோக்கள் பரிணாமத்தை தேவையின்றி எதிர்த்து நம் பணியை எளிதாக்குகிறார்கள் என்பதால் நமக்கு அவர்களின் பரிணாம் எதிர்பதிவுகள் பிடிக்கிறது.

   நன்றி

   Delete
 10. சார்வாகன் ///முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.//
  இதற்கு பரிணாம அறிஞர்சார்வாகன் பதில் சொல்லாமல் விட்டு விட்டார்.

  வவ்வால் ,சென்னைக்கு வந்த அரபி சார்வாகனை சந்தித்தார் .உங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று சொன்னதாக நான் கூறினால் அந்த அரபி அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொல்லியிருக்கிறார் என்று புரிந்து கொள்ளுவார்கள் .அந்த அரபிக்கு தமிழ் எப்படி தெரியும்? அவர் அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார் என்று வவ்வால் அடம்பிடித்தால் ?

  ஆங்கிலேயர் என்னிடம் காலை வணக்கம் சொன்னார் என்றால் அவர் குட் மானிங் என்று சொல்லியிருப்பார் என்று பொருள்

  ReplyDelete
 11. நாக்கூர் நாகப்பன் வரவில்லையா?

  ReplyDelete
 12. ////Ibrahim SheikmohamedOctober 31, 2012 6:43 PM

  சார்வாகன் ///முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.//
  இதற்கு பரிணாம அறிஞர்சார்வாகன் பதில் சொல்லாமல் விட்டு விட்டார்.

  வவ்வால் ,சென்னைக்கு வந்த அரபி சார்வாகனை சந்தித்தார் .உங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று சொன்னதாக நான் கூறினால் அந்த அரபி அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொல்லியிருக்கிறார் என்று புரிந்து கொள்ளுவார்கள் .அந்த அரபிக்கு தமிழ் எப்படி தெரியும்? அவர் அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார் என்று வவ்வால் அடம்பிடித்தால் ?

  ஆங்கிலேயர் என்னிடம் காலை வணக்கம் சொன்னார் என்றால் அவர் குட் மானிங் என்று சொல்லியிருப்பார் என்று பொருள் ////

  எனக்கு யாராவது குட் மானிங் என்று கூறி....அது எனக்குப் புரிந்தால் பதிலுக்கு நானும் குட் மானிங்கு என்று கூறவும் செய்வேன்.

  சேக்கு முகம் போல் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லமாட்டேன்.

  யாராவது என்னைப் பார்த்து உங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று கூறினால்...அப்படிக் கூறும் நபரை சும்மா விடமாட்டேன். நான் என்ன தீவிரவாதியா? குண்டு வைக்கும் தீவிரவாதிகள் தங்களுக்குள் இப்படி கூறிக்கொள்வது சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. ராவணன் உங்களைப்போலவே நானும் சொல்லட்டுமா?என்னிடம் ஒரு ஆங்கிலேயர் குட் மானிங் என்று சொன்னால் நான் குட் மானிங் என்று சொல்ல மாட்டேன் ,ஏனெனில் அவர்களுக்கு கெட்ட காலையாக இருக்கலாம் .ஆனால் நான் பஜர் தொழுது விட்டதால் எனக்கு ஏற்கனவே இன்றைய நாள் நல்ல நாளாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு

   Delete
 13. சகோ.சார்வாகன் நலமா?தீவிர வாசிப்புக்கு நேரமில்லாமல் அவ்வப்போது சிற்றலைகள் வந்து திசை மாறிப்போவதால் வாசிப்பை தொடர முடியவில்லை.தமது ஆய்வுகளை நிரூபிக்கவென்றும் ஜர்னல்களில் இடம்பிடித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் அறிவியல் கருத்துக்களில் குழறுபடிகள் நிகழ்ந்திருக்க கூடும் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்......மதநூல்களிலும் இருக்ககூடும்,அது அப்போதைய காலத்தின் அறிவுத்திறன் சார்ந்தது என்பதால் அதனை புறம் தள்ளி நல்லவைகளை மட்டும் சொல்கிறோம் என்கிற துணிவு மதசார்பாளர்களுக்கு இல்லை.

  அரைக்க அரைக்க அம்மி நகருமென்று எதிர்பார்ப்பது நிகழாமல் போனாலும் மசாலா அரைந்தால் சரி.தொடர்ந்து அரைப்போம்:)

  ReplyDelete
 14. //Ibrahim SheikmohamedOctober 31, 2012 6:43 PM
  சார்வாகன் ///முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.//

  ஆம்!முத‌ல் உயிர் ஆத‌ம் எப்ப‌டி இருப்பான் என்ப‌து இன்னும் அல்லாஹ்வால் நிரூபிக்க‌ப்ப‌டாத‌ விட‌ய‌ம் என்ப‌தாலும்,100% க‌ளிம‌ண்+த‌ண்ணீரை குழைத்து இன்று உயிர் கொடுக்க‌ இய‌லாத‌வ‌ன் அல்லாஹ் என்ப‌தாலும்,60(90 அடி) முழம் மனித‌ உட‌லை எப்போதும் அல்லாஹ்வால் உருவாக்க‌வோ அல்ல‌து 90அடி எலும்புக் கூட்டை (ஆத‌ம்)பாதுகாத்து அத்தாட்சியாக வைத்திருக்க‌ அருக‌தைய‌ற்ற‌ அல்லாஹ் ஒரு க‌ற்ப‌னை என்ப‌தாலும்,நிரூப‌ண‌ம‌ற்ற‌ க‌ட்டுக் க‌தைக‌ள் அட‌ங்கிய‌ வேத‌ புத்த‌க‌மும் ஒரு கேள்விக் குறிதான்?!!!‌

  ReplyDelete
 15. இப்ரஹிம்,

  ஆதம் ஆதி மனிதன் என்றால் ,அவன் மட்டும் தான் முதலில் உருவாக்கப்பட்டதாக பொருள், அப்போ வேறு மொழி உருவாகி இருக்க வேறு உயிரினம்-மனிதன் அப்போ இருந்துச்சா .

  அப்போ அரபியில்ல என்றால் ,என்ன மொழி, இருப்பது முதல் மனிதன் மற்றும் அல்லா, என்ன மொழியில் பேசியிருக்க முடியும், அதை ஏன் அசலாமும் அலைக்கும்னு சொல்லிக்கணும்,அந்த முதல் மொழியில் சொன்னதையே சொல்லிடலாம், :-))
  -----------

  ஒரு செல்லில் இருந்து உயிரினம் உருவானது என்பதற்கு சில உதாரனங்கள் காட்ட முடியும்,

  விந்தணு ஒரு செல் , அதற்கு உயிருண்டு, ஆனால் அதே போல உடலில் உள்ள செல்களுக்கு உயிர் இருக்காது.

  சித்தர் பாடல்களில் விந்தணு உடலில் இருக்கும் வரை உயிர் இருக்கும் என இருக்கிறது.

  முதல் செல் உயிர் இயர்கையில் எப்படி உருவானது என்பதற்கு காஸ்மிக் சூப் தியரி முதல் பல வற்றையும் சொல்கிறார்கள்.

  செயற்கையாக காஸ்மிக் சூப் ஆய்வில் அமினோ அமிலம் வரைக்கும் உருவாகிடுச்சு, எனவே சாத்தியம் உண்டென சொல்கிறார்கள்.

  ReplyDelete
 16. Iniyavaniniyavan Iniyavan
  அறிவியலில் நிருபணம் கேட்டால் அதற்கு பதில் சொல்ல இயலாமல் ,நம்பிக்கையை ஒப்பிட்டும் பார்க்கும் இனி யவன் நீங்கள் அறிவுஊற்றா?

  ReplyDelete
  Replies
  1. சகோ.இபுறாஹிம்

   //அறிவியலில் நிருபணம் கேட்டால் அதற்கு பதில் சொல்ல இயலாமல் ,நம்பிக்கையை ஒப்பிட்டும் பார்க்கும் இனி யவன் நீங்கள் அறிவுஊற்றா?//

   படைப்பு கொள்கை வெறும் நம்பிக்கை என்பதை ஒத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி. அதனால் தான் வெற்று நம்பிக்கையை அறிவியலுடன் தொடர்புபடுத்தி விளக்கமளிப்போர் எல்லாம் அறிவு ஊற்றா?

   Delete
 17. வவ்வால் //அப்போ அரபியில்ல என்றால் ,என்ன மொழி, இருப்பது முதல் மனிதன் மற்றும் அல் மொழியில் பேசியிருக்க முடியும், அதை ஏன் அசலாமும் அலைக்கும்னு சொல்லிக்கணும்,அந்த முதல் மொழியில் சொன்னதையே சொல்லிடலாம், ////


  ஒருவர் நான் போய் வருகிறேன் ,அப்புறம் பாக்கிறேன் என்று நம்மிடம் சொன்னால் ,அதே ஒருபுரியாத குழந்தை என்ன சொல்லுகிறார் என்று கேட்டால் டாட்டா சொல்லுகிறார என்போம் .

  ReplyDelete