Tuesday, October 16, 2012

பரிணாமம்,இஸ்லாம் எதற்கு சான்றுகள் அதிகம்???வணக்கம் நண்பர்களே,

"மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று விடுவதில்லை"

மீண்டும் இரு பரிணாம எதிர்ப்பு  பதிவுகள் தமிழில் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.இரண்டையும் பதிவிட்டவர் நமது அன்புக்கும் பாசத்துக்கும்,மரியாதைக்கும் உரிய மார்க்கமேதை சகோ சுவனப்பிரியன் அவர்களே. அதை அவரே எழுதினாரோ அல்லது  இன்னொரு மார்க்க(மான) ம(னி)தாபிமான விஞ்ஞானின் எழுதிக் கொடுத்தாரா என்பதும் சிந்திக்கத் தக்கது என்றாலும்,நாம் இதனை கருத்து ரீதியாகவே எதிர்கொள்கிறோம்.
சரி இரு பதிவுகள் என்ன?[சிவப்பு எழுத்துகளில் உள்ளது சகோ சு.பியின் கருத்துகள்]

1. 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சிலந்தி,குளவி ஆகியவற்றின் உரு அமைப்பு போலவே இப்போதும் சில குளவி,சிலந்தி இனங்கள் உரு அமைப்பு  உள்ளது .

நமது கோல்ட் பற்றிய தொடர்பதிவில் நிறுத்திய நிலைத் தன்மை[puncutated equilibrium] பற்றி விளக்கி இருக்கிறோம்.அதன் படி பெரும்பரிணாமம்[macro evolution] என்பதில் சிற்றினமாதல்[speciation] என்ப்படும் ஒரு உயிரிக்[species] குழு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனவிருத்தி செய்ய இயலாத உயிரிக் குழுக்களாக பிரிதல் மற்றும் உருமாற்றம்[morphlogical change]  என் அறிந்தோம்.

Macro evolution=speciation+morphological change


சிற்றினமாதலின் சராசரி கால அளவு 30 இலட்சம் ஆண்டுகள் ஆகும். உருமாற்றம் ஒரே கிளையில் அடிக்கடி நிகழாது. அப்படி நிகழும் உருமாற்றங்களும் இயற்கைத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதால் இது அபூர்வ நிகழ்வே.ஆகவே 90 மில்லியன் ஆண்டுகளாக உருமாறாமல் இருக்க்லாம்,ஆனால் அதன் ஜீனோம் ,இபோது வாழும் உயிரிகளில் இருந்து மாறுபட்டு இருக்கும். இது பற்றி பின்னூட்டங்களில் அதிகம் விவாதிப்போம்.

இதைவிட அதிக காலம் உருமாற்றமின்றி வாழும் உயிரிகளை வாழும் படிமங்கள்[Living Fossils] என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.ஆகவே இது ஒரு பெரிய விடயம் அல்ல!!!!!!!!!!.
இதனையும் டார்வின் அய்யா தனது   புத்தகத்தில் குறிப்பிட்டதையும் விக்கிபிடியாவில் இருந்து அறிய முடியும்.சான்றுகளின் மீதான விளக்கமே அறிவியல் என்பதால் நெடுங்கால உருமாற்றமின்மை என்பதை நன்கு விளக்கும் கோல்ட்டின்[S.J.Gould] நிறுத்திய நிலைத்தன்மையே படிம வரலாற்றில் காணப்படுகிறது என்பதும் அது ஏன் என்பதையும் நாம் நன்கு முந்தைய பதிவுகளில் அறிந்து இருக்கிறோம்.எனவே  இது ஏற்கெனவே அறிந்த புரிந்த விடயம்.!!!!!!!!!!!!!!
***
2 .இது நேற்றைய பதிவு. கொரில்லா ஆய்வு செய்த விஞ்ஞானி,மனிதனின் காலடித்தடம் என பலவற்றையும் குழப்பி அடித்துள்ளார். அப்பதிவுக்கு நாம் மறுப்பு சொல்ல கடமைப் பட்டு இருக்கிறோம். இனி பதிவுக்கு செல்வோம்.

ஆதி மனிதனின் உயரம் என்ன? சில தேடல்கள்.

///  ஆராய்ச்சியாளர்களால்தான் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று விக்கி பீடியாவே கூறுகிறது. இவரது ஆராய்ச்சி முடிவு டார்வினின் பரிணாமவியலுக்கு குழி தோண்டும் விதமாக இருந்ததால் பரிணாமவியலாரே இவரை போட்டு தள்ளியிருக்கலாம்.//


அதாவது

அ)முதலில் டான் ஃபோஸி என்ப்படும் கொரில்லா ஆய்வாளர் பற்றிக் கூறி,அவரின் கொலைப் பழியை மூமின் பாணியில் ஆய்வாளர்கள் மீது போடுகிறார்.அவரின் கொரில்லா மீதான ஆய்வுகள் (டார்வினின்) பரிணாமவியலுக்கு எதிராக இருந்தது என்கிறார்.

சகோ சு.பி சொல்வது போல் எந்த விவரமும் விக்கிபிடியாவில் இல்லை. பரிணாம கொள்கையின் படி மனிதனும்,சிம்பன்சியுமே ஒரே முன்னோரிடம் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்கள்.சிம்பன்சிக்கு அடுத்த நெருங்கிய உயிரி கொரில்லா என்றாலும், டான் ஃபோசியின் ஆய்வுகள் பரிணாமம் தொடர்பாக் இல்லை. கொரில்லாக்களின் வாழ்வு,சமூக அமைப்பு போன்றவற்றையே ஆய்வு செய்தார்,கொரில்லா வேட்டைக்கு எதிராக போராடினார். கொரில்லாவின் பழக்க வழக்கங்கள் பற்றி அவர் எழுதிய சில புத்தகங்கள் உண்டு.அவர் முதலில் நேஷனல் ஜியோகிராஃபிக் ஆய்விதலில் பதிவிட்ட கட்டுரை பாருங்கள்!!!.
http://ngm.nationalgeographic.com/2008/07/archive/fossey-gorillas-1970/dian-fossey-text/2ஆகவே டான் போஸியின் ஆய்வுகள் பரிணாமத்திற்கு தொடர்பற்றவை. அவரது கொலை பற்றி எதுவும் சரியாக ஆதாரபூர்வமாக் தெரியாத போது சகோ சு.பி சொல்வது சட்டப்படியே தவறானது,குற்றம். இது வழ்க்கமான் ஒன்றுதானே இரட்டைக் கோபுர தக்குதல் செய்தது யூதர்கள்,ஹிட்லர் யூதர்களை அதிக அள்வில் கொல்லவில்லை,முல்லா ஓமர்(தலிபான்) நல்லவர்(கள்_ என்ற பாணியில் அமைந்த கருத்து மட்டுமே!!.

ஆகவே பரிணாமத்திற்கு எதிராக டான் ஃபோசி எழுதிய கட்டுரைகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் எத்தனைப் பேர் பரிணாம ஆய்வாளர்கள் என சகோ சு.பி ஆதாரம் கொடுக்க வேண்டும்.

இன்னும் டான் ஃபோஸி பற்றி இன்னும் மேலதிக த்கவல் இங்கே பார்க்க்லாம்.


கொரில்லா வாழ்வின்,உடல் அமைப்பின்  மீதான ஆய்வுகள் பரிணமத்தை தவறு என நிரூபித்து விடும் என சுவன்ப்பிரியன்&கோ மட்டுமே நம்பும்.ஏன் எனில் இதைவிட மிகப் பெரிய பொய்களையே 1400 வருடங்களாக நம்பி பழகியவர்கள் ஹி ஹி.!!!!

************
ஆ) ஒரு நல்ல விடயம் சகோ சு.பி பரிணாமத்தின் வரையறையை சரியாக் சொல்லி இருக்கிறார். பாராட்டுக்கள்.இதன மூலம் பரிணாமம் சரியாக் வரையறுக்கப்படாத‌ கொள்கை என்னும் மார்க்க(மான) விஞ்ஞானி ஆஸிக் அகமதின் பொய்யை அம்பலப் படுத்தி உள்ளார்!!.மிக்க நன்றிகள்.

//பரிணாமத்தின் அடிப்படை நியதியே ஒரு உயிரினம் மாற்றங்களை உள்வாங்கி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே, அந்த மாற்றங்கள் உயிரினத்தின் தக்க வைத்தலுக்கு நன்மை பயக்கும் போது அது தொடரும், அதே போல மாற்றங்கள் தேவை இல்லாத போது அது நீக்கப்படும். அதே போல மாற்றங்களை நிகழ்த்துவதாலும், மாற்றங்களை உள்வாங்குவதாலுமே இனம் விருத்தியடைந்து வருகின்றது எனலாம். பரிணாமத்தை தூக்கிப் பிடிப்போர் வைக்கும் வாதங்களே இது. //

இதுதான் சிறுபரிணாமம்

//ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம்.//
***
// தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.//

இது சகோ சு.பியின் கருத்து மட்டுமே!!.இடைப்பட்ட படிமங்கள் நிறைய உண்டு. இது பற்றி பலமுறை விளக்கினாலும் அவர்களுக்கு புரிவதில்லை.சரி இந்த கருத்து எந்த ஆய்விதழில் பதிவிடப் பட்டுள்ளது?.இடைப்பட்ட படிமங்கள் பற்றி மீண்டும் ஒரு பதிவு எழுத சித்தமாகவே இருக்கிறோம்.எனினும் இப்பதிவில் புதிய விடயமான மனிதனின் 10 அடி எலும்புக்கூடு பற்றியே விவாதிக்கிறோம்.ஆகவே மேலதிக தகவல்கள் பின்னூட்டங்களில் பகிர்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/List_of_transitional_fossils
******************
இ) மனிதர்கள் 10 அடியில் இருந்து 20 அடிவரை இருந்ததாக சில சான்றுகளை வைக்கிறார்.

i) சவுதியில் உள்ள ஒரு குகையில் உள்ள காலடித்தடம்.


ii).டெக்சாஸ் மாநிலத்தின் கண்டுபிடிக்கப்பட்டு பிளாங்கோ அருங்காட்சியகத்தில்  இருக்கும் எலும்புக்கூடு.

iii). இராக்கில் யூப்ரடிஸ் நதி அருகில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள்.
இத்தளம் கிறித்தவ மதவாதிகளின் தளம் என்பதும்,அவர்கள் உலகம் தோன்றி 7000 வருடம் கணக்கு சொல்ப்வர்கள் என் அறிந்து நமக்கு ஆர்வம் போய் விட்டது.

எனினும் நகைச்சுவைக்கு நகைச்சுவை என்ற வகையில் அதே தளத்தின் இன்னொரு கட்டுரை இணைப்பு தருகிறோம்.அதாவது இஸ்லாம் அந்திக் கிறிஸ்துவின் மதம். அந்திக் கிறிஸ்து[Anti Christ]  என்றால் சாத்தானின் அவதாரம் என சொல்லலாம்!!!. இக்கட்டுரையை சகோ சுபி ஏற்றால் அவர் காஃபிராகி விடுவார் ஹி ஹி!!!

http://www.6000years.org/frame.php?page=antichrist

(Note: The following text is from http://www.answering-islam.org) "The religion of Islam, more than any other religion, philosophy, or belief system, fulfills the description of the antichrist spirit

ஆகவே நம் ஆதம் ஒரு ஹோமோ எரக்டஸ் என கண்டுபிடித்த பதிவில் ம(னி)தாபிமானி கூறிய மனிதன் தோன்றியது சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்றும் அதனை ஏதோ காலடித்தடம் நிரூபிப்பதாக கூறியது பொய். இந்த அசுர மனிதர்கள் இருந்தார்கள் என வைத்தால் கூட அவர்களின் காலம் அனைத்தும் 10000 ஆண்டுகளுக்குள்ளேதான்.


ஆகவே காமெடி விடயங்களை தவிர்ப்போம்!!நேஷனல் ஜியோகிராஃபிக் இவை அனைத்தும் ஏமாற்று வேலை என கூறுகிறது!!!!
---------------------------------------------------------------------------------
இதுவரை தோன்றிய மனிதர்களிலேயே உயரமானவராக அறியப்படுபவர் இராபர்ட் வாட்லோ[ 8 ft 11.1 in (2.72 m)] என்பவ‌ர்தான், ஆகவே அனைத்து விவரங்களும் சான்றுகள் அற்ற கட்டுக் கதைகளே
Robert Pershing Wadlow (February 22, 1918 – July 15, 1940) is the tallest person in history for whom there is irrefutable evidence. Wadlow is sometimes known as the Alton Giant orGiant of Illinois because he was born and grew up in Alton, Illinois.[1][2]ஆகவே அசுர மனிதர்கள் என்பது பரிணாம எதிர்ப்பாளர்களின் கட்டுக் கதைகளே. ஆகவே ஆய்விதழ்களில் மட்டும் அல்ல. விக்கிபிடியாவில் உள்ள ராபட்ர் வாட்லோவை விட உயரமான மனிதன் என விக்கிபிடியாவில் ஒரு பக்கம் இட வேண்டுகிறோம்!!!.

அப்போதும்  அதற்கும் பரிணாமத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
-------------------------------------
ஈ)கடைசியாக ஒரு ஆய்வுக்கட்டுரையின் முதல் வரியை எடுத்து தவறாக மொழிபெயர்த்து பரிணாம்த்திற்கு எதிராக காட்டி இருக்கிறார். நாம் முழுக்கட்டுரை இணைப்பு தருகிறோம்.பிறகு சரியான மொழியாக்கம் அளிக்கிறோம். 
---------------------------------------------------

//"Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.

தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).
**************


நாம் சரியான மொழியாக்கம் தருகிறோம்.அண்ணன் என்ன செய்து இருக்கிறார் என்றால் ஒரு வாக்கியத்தை பல் சிறிய வாக்கியங்களாக் பிரித்து தவறான் பொருள் வருவது போல் செய்துவிட்டார்.கேம்பிரியன் காலம்(500 மில்லியன் ஆண்டுகள் முன்பு) முதல் இன்றுவரை படிமங்கள் தெளிவாக இருந்தாலும் அதற்கு முந்தைய இடிய‌க்கரா கால படிமங்கள் அவ்வளவு கிடைக்கவில்லை.அதனைக் குறிப்பிடுவதை படிமங்களே எப்போதும் இல்லாதது போல் மொழியாக்கம் செய்வதைப் பாருங்கள்.கேம்பிரியன் அதற்கு முந்தைய உயிரிகள் அனைத்துமே கடல் வாழ் உயிரிகள்.அதையும் மறைக்கிறார்கள்.ஆய்வாளர் பட்டர்ஃபீல்ட்  ன் இடியக்கரா படிமங்களைப் பற்றிய கட்டுரை மட்டுமே அது !!!!

இப்போது நாம் மொழியாக்கம் செய்கிறோம் பாருங்கள்!!!

டார்வினின் காலந்தொட்டே தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய‌ படிம வரலாற்றில்[அதாவது பானோர்ஜாயிக் கால தொடக்கத்தில்]   இருந்து வருகின்றது.டார்வினின் படிப்படியான வளர்ச்சி உண்மை என்றால் இக்கால்த்தில் அதிக உயிரிப் படிமங்கள் கடலில் கிடைத்து இருக்க வேண்டும்.ஆனால் கிடைத்த ஆரம்பக் கால படிமங்களில் அது இல்லை.

*****
கேம்பிரியனில் இருந்து இப்போதுவரை படிம வரலாறு சீராக இருக்கிறது.அதற்கு முந்தைய படிமங்கள் பல செல் உயிர்கள்[பாக்டீரியாக்கள்] மட்டுமே. எனினும் டார்வினின் படிப்படியான் வளர்ச்சி என்பது உருமாற்றமாக் வெளிப்படுகையில் நிறுத்திய நிலைத்தன்மையாக் வெளிப்படும் என்பதால் பல செல் உயிரிகள்,நீண்ட காலத்தில்  கேம்பிரியன் உயிரிகளாக மாறுவதில் வியப்பில்லை.

இது குறித்து பல தகவல் அறிய ஸ்டீஃபன் ஜே கோல்ட்டின் வொன்டன்ஃபுல் லைஃப் புத்த்கம் படிக்கலாம். இது குறித்து சில பதிவுகளும் எழுத வரும் கால்ங்களில் முயற்சிப்போம்.
http://en.wikipedia.org/wiki/Wonderful_Life_(book)


***********************
படிக்கும் நண்பர்களுக்கு என்ன இந்த பரிணாம எதிர்ப்பாளர்கள் கொஞ்சமும் அஞ்சாமல் இவ்வளவு பொய் சொல்லி ஏமாற்றுகிறார்களே என வியப்பு வரலாம்.அப்படி வரலாறு,அறிவியலை திரிக்காமல் மத பிரச்சாரம் செய்ய இயலாது என்பதால் அவர்களை சொல்லி குற்றமில்லை.நம்புபவர்களே பாதிக்கப்படுவதால் அவர்கள் கூறுவதை சரிபார்க்க அவசியம் ஆகிறது.

பாருங்கள் சேன்னல் 4ல் வந்த இஸ்லாமின் அறியாத கதை என்னும் ஆவணப்படம் வரலாற்று ஆய்வாளர் டாம் ஹாலண்ட் அவர்களால் எடுத்து இங்கிலாந்தில் ஒளிபரப்பட்டது. மூமின்களின் எதிர்ப்பினால் மறு ஒளிபரப்பு நிறுத்தப் பட்டது.


அக்கணொளி இஸ்லாமின் முதல் நூற்றாண்டில் இஸ்லாம் என்பது யூத மதம் அல்லது கிறித்தவம் போன்ற ஒரு பிரிவாக இருந்தது. குரான் என்று அப்போது இல்லை,முஸ்லிம் என்னும் சொல்லோ, முகமது பற்றிய த்கவல்களோ இல்லை என்பதும்,குரான் என்பது சிரிய அராமைக் மொழி சொற்களை அதிகம் கொண்டு இருக்கிறது என புட்டு புட்டு வைத்து விட்டார்.


அந்த காணொளி பாருங்கள். இப்படி சான்றுகள் இல்லாத மதத்தை நம்புபவர்கள் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சான்றுகள் சரியாக இல்லை என பரிணாமம் மீது கேள்வி எழுப்புவது விந்தை!!!http://www.channel4.com/programmes/islam-the-untold-story

http://www.liveleak.com/view?i=7fa_1349153809

சில நாடுகளில் பார்க்க இயலாது என்பதால் கீழ்க்கண்ட இணைப்பில் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்.

http://atheistmovies.blogspot.com/2012/10/islam-untold-story-2012.html
 காணொளி பாருங்கள், பார்த்து விட்டு 500 மில்லியன் ஆண்டுகள் சான்றுகள் கொண்ட பரிணாம அறிவியல் சரியா, 1400 வருடத்திற்கு கூட சான்றுகள் அற்ற இஸ்லாம் சரியா?விவாதிப்போம் நன்றி!!!!!!!!!!!!!!!!32 comments:

 1. இல்லல்ல ..நீங்க கள்ளட்டம் ஆடுறீங்க....மறுபடியும் மொதல்ல இருந்து விளையாடுவோம் வாங்க :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் ராஜா,
   மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க நான் தயார்,நம் கடன் பணி ச்ய்து கிடப்பதே!!!.அவங்களையும் வரச் சொல்லுங்க!!!.ரெடி ஜூட்!
   நன்றி

   Delete
 2. அட போங்கப்பா இவங்களுக்கு விளக்கம் சொல்லியே நீங்க ஒஞ்சிருவீங்க போல இருக்கு .
  சார்வால் உங்களை தொழிற்களம் தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள் ............
  http://tk.makkalsanthai.com/2012/10/blog-post_6199.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் அஞ்சா சிங்கம்,
   நாம் பரிணாமம் விமர்சனங்கள், அதன் பதில்கள் என்ற த்லைப்பில் தமிழில் ஆவணப் படுத்த செய்கிறோம்.நம் பணிக்கு உதவும் வஹாபி சகோக்களுக்கு நன்றிகள். ஆனால் என்ன காலாவதியான சொத்தை வாதங்களையே வைக்கிறார்கள் என்பதால் எதிர் பதிவு மிக மிக எளிதாகி விடுகிறது.
   வரும் காலங்களிலும் தொடர்வோம்.
   நன்றி!!!

   Delete
  2. நண்பர் சிங்கம்,
   தொழிற்களம் தகவலுக்கு நன்றி!!

   Delete
 3. வணக்கம் சகோ,

  நல்லதொரு எதிர்பதிவிட்டு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.
  கடவுள் ஏற்புக்கு இடைஞ்சலாக இருக்கும் பரிணாமத்தை எதிர்த்தவர்கள் கொஞ்சம் இறங்கி வந்து குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்,அதாவது பரிணாம எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் பரிணாம குழப்பவாதிகளாக பரிணமித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். பொருத்திருந்து பார்ப்போம் இன்னும் இறங்கி வருகிறார்களா என்று?

  இனியவன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் இனியவன்,
   நீங்க அவங்க பதில் சொல்லுவாங்கன்னு நம்புரீங்களா?? அப்பாவியாக இருக்கீங்களே!!
   பாருங்கள் அவர்கள் கூறும் டெக்சாஸ் ஃப்ளாமிங்கோ அருங்காட்சியகம் ஒரு கிறித்தவ மத பிரச்சாரக் குழுவால் நடத்தப்படும் அமைப்பு, 47 இன்ச் தொடை எலும்பு யாஅரும் இதுவரை பார்த்தது இல்லை.அங்கே இருப்பது சிற்பம் எனவே கருஹ்து,காசு கொடுட்தால் அந்த வடிவ மாதிரி அனுப்புகிறார்கள்.
   ஹி ஹி அவ்ர் வருவாரா????
   http://mtblanco.com/Ctlg/MtBlancoCtlg6.htm
   These items can be ordered from:

   Mt. Blanco Fossil Museum
   P.O. Box 550
   Crosbyton, TX 79322

   (800) 367-7454 or (806) 675-7777
   (806) 675-2421 (fax)
   e-mail: mtblanco1@aol.com

   Payment can be made by check, money order or credit card.
   **
   Q&A
   Q. Are the fossils seen in the museum real?

   A. Some are actual fossils, others are casts.   Q. How is the Mt. Blanco Fossil Museum funded?

   A. We are self-funded by sales of casts, fossils, and restoration; also by molding jobs. We also have our own digs and manage digs for others. We are not 501C-3.

   If you would like to make a donation to a 501C-3 organization that actively supports fossil research and restoration - we would be glad to provide you with a list of the ones that we know of and work with.   Q. Is Mt Blanco Fossil Museum a religious organization?

   A. We are a science museum, showing facts and data about the actual fossils in the museum. We believe that evolution is an old-fashioned theory not substantiated by facts, and that what the Bible says is more scientifically accurate. Our museum shows that there was a worldwide flood only a few thousand years ago. We show that most species are not getting more complex or larger. There are also numerous specimens that show most fossils were buried rapidly.   Q. Do you think Noah took dinosaurs on the ark?

   A. Absolutely. We can show you why.
   Thank you

   Delete
 4. சார்வாகன்,

  எதற்கு நீங்கள் இவர்களுக்கு பதில் சொல்லுகிறீர்கள். இதைப் படித்து யாரும் மாறிவிடப்போவதில்லை.ஒருவேளை மற்றவர்களுக்கு உதவும் வகையில், நீங்கள் பரிணாமம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளை, விளக்கங்களை எழுதிக்கொண்டு வரலாம். அப்படி எழுதினால் ஒரு தொடர்ச்சி இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் கு.பி,
   நாம் எழுதுவது அவர்களுக்கு மறுப்பு தமிழில் சொல்ல இயலுமா என தேடும் ஒருவருக்கேனும் பயன் தந்தால் போதும் என்பதே நம் நோக்கம். தமிழ் பதிவுலகில் போலி அறிவியலை அனுமடியோம் என்பதே நம் கோட்பாடு!.

   எந்த ஒரு பரிணாம் எதிர்ப்பு,போலி அறிவியல் பதிவுகளுக்கு த்ரமான முறையில்,நகைச்சுவை கலந்து,நல்ல முறையில் எதிர்ப்பதிவு இட நாடுவீர் நம்கடையை!!!. கிளைகள் எங்கும் கிடையாது.

   பரிணாமம் என்பது கடல் என்பதலும் அவ்வப்போது சில அம்சங்களையே குறிப்பிட்டு தொடர் பதிவுகள் எழுதுகிறோம். பரிணாம் கல்வி ட்யூக பல்கலைக் கழகம் ஆரம்பித்து விட்டது. தமிழாக்கம் செய்து கொண்டு இருக்கிறேன்.
   நன்றி!!!

   Delete
 5. சகோ.சார்வாகன்

  //இஸ்லாம் கூறுவது இந்த உலகம் ஒரு சோதனை...நமக்கு கொடுக்க பட்டுள்ள கால அவகாசத்திற்கு தகுந்தவாறு யார் நம் எஜமானனின் சொல்படி கேட்டு செயல் படுத்துகிறார்கள்..யார் யார் சிறந்தவர்கள்...??என்பதை அறியவே இந்த உலகம்//
  இப்படி எல்லாம் குரானில் உண்மையில் இருந்தால் நாங்கள் ஏன் விமர்சிக்க போகிறோம்?
  இது உங்களின் கருத்து என்றால் சரிதான்.சும்மா அண்ணன் பி.ஜே பாணியில் அடித்து விடக்கூடாது. குரானில் இருந்து இப்படி கூறப்பட்டுள்லது எனக் காட்ட முடியுமா?
  *****

  சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே ;-

  உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (அல்குர்ஆன் 2:214)


  செல்வமும் சோதனையே :-

  உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)

  மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான். பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால், அவன் "இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!" என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 39:49)


  குழந்தைகளும் சோதனையே :-

  வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் ஆக்குகிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49-50)


  வியாபாரத்திலும் சோதனை :-

  அல்லாஹ் தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான் (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான். எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடாமல் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 13:26)


  மரணத்தைக் கொண்டு சோதனை:-

  உலகில் என் அடியானின் நேசத்துக்குரிய ஒருவரை நான் கைப்பற்றி, அதன் மீது என் அடியான் பொறுமை கொண்டு நற்கூலியை ஆதரவு வைத்தால், அவனுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறெதுவும் இல்லை,என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

  "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 9:51)

  ReplyDelete
  Replies
  1. சகோ மீரான்,
   நாம் எப்போதும் சொல்வது இதுதான்
   எபோதெல்லாம் மூமின்கள் ஒரு குரான் வசனம் காட்டினால் முன்,பின் சில வசனங்களைப் படித்தால் மட்டுமே யாருக்கு என்ன நோஒக்கத்தில் கூறப்பட்டது என்ப் புரியும்.2ஆம் சூரா ஆன அல் பக்ரா 214 காட்டினீர்கள் நாம் 210 முதல் 217 வரை தருகிறோம்.
   //2:210. அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டுவரப்படும்.
   2:211. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
   2:212. நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.
   2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
   2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
   2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
   2:216. போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
   2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”//

   Delete
  2. இந்த வசனங்கள் மூமின்கள் காஃபிர்களுடன் போர் புரிய மறுப்பதுதான் சோத்னை எனக் கூறுகிறது. புனித மாதம் என்று கூடப் பார்க்காமல் போர் செய்ய வேண்டும்.

   காஃபிர்களின் நற்கியைகள் அவர்கள் முகமதுவை இறைத் தூதராக் ஏற்றுக் கொள்ளாத படசத்தில் பயன் தராது!!அதாவது இஸ்லாம்[ குறிப்பிட்ட பிரிவு] மட்டுமே சரியான் மதம்.
   அல் பக்ரவின் சூழல்


   http://www.wikiislam.net/wiki/Revelational_Circumstances_of_the_Qur%27an:_Surah_2_(Al-Baqara)

   இஸ்லாம் என்பது ஆன்மீக வளர்ச்சியை விட ஆட்சி,அதிகாரம் கௌப்பற்றுவதயே முதன்மை நோக்கமாக் கொண்டு உள்ளது.குரானின் பொதுவான செய்தியும் அதுதான். உலகை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவர எதுவும் செய்யலாம்.
   இஸ்லாம் என்பதே மனித சமுதாயத்திற்கு வந்த சோத்னை!!!

   நீங்கள் ஒருவேளை ஆன்மீகவாதியாக் மட்டும் இருப்பின் நான் சொல்வது உங்களைப் புண்படுத்தலாம்.ஆயினும் இதுவே வரலாற்றில் நடந்த நட‌க்கும் உண்மையாகும்.இயற்கை வளங்களுக்காக எப்படியும் நிகழப் போகும் மூன்றாம் உலக்ப் போர் இஸ்லாமின் பெயரால் வரக்கூடாது என்றால் ஷாரியா,மத ஆட்சி இல்லாமல் போவதே நல்லது. இல்லையெனில் போர் தவிர்க்க இயலாது என்பதே நம்கருத்து.!!
   நன்றி!!!

   Delete
 6. நோயைக் கொண்டு சோதனை :-

  நான் நபி(ஸல்) அவர்களிடம் பிளேக் நோயைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது அல்லாஹ், தான் நாடுவோர் மீது இறக்கி வைக்கும் வேதனையாகும். (எனினும்) மூஃமின்களுக்கு அதனை அல்லாஹ் ரஹ்மத்தாக ஆக்கிவிட்டான். யார் பிளேக் ஏற்பட்ட ஊரில் அல்லாஹ் (விதியில்) எழுதியிருந்தாலே தவிர, அது தம்மைத் தொடாது என்று உறுதி பூண்டு நற்கூலியை ஆதரவு வைத்தவராக பொறுமை கொண்டு இருப்பாரோ அவருக்கு "ஷஹீது" என்னும் புனித தியாகியின் நற்கூலி கிடைக்கும் எனக் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

  நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்கள் காய்ச்சலாக இருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா காய்ச்சலால் தாக்கப்படுகிறீர்கள்?" என்று வினவினேன். அதற்கவர்கள், "ஆம் உங்களில் இருவர் காய்ச்சலால் பீடிக்கப்படுமளவு நான் காய்ச்சலால் பீடிக்கப்படுகிறேனே" என்று கூறினார்கள். அதற்கு நான், அப்பொழுது தங்களுக்கு இரு நற்கூலிகள் உள்ளன எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள், "ஆம் அது போன்றே நோவினை வந்தடையும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் - அது முள் குத்துவதாலோ அல்லது அதற்கு மேலுள்ள பொருள்களினாலோ (இருப்பினும் சரியே) அல்லாஹ் அவை கொண்டு அவர் தீமைகளை அழித்தே தவிர வேறில்லை. மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் அவர் பாவங்கள் அவரை விட்டு நீக்கப்படும்" என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம் - அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி)

  உடல் குறைபாடுகள் ஒரு சோதனையே :-

  நபி(ஸல்) அவர்கள் கூறத் தாம் செவிமடுத்ததாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான், என் அடியானின் இரு கண்களை (போக்கிவிடுவது) கொண்டு அவனை நான் சோதித்து, அவன் அதன் மீது பொறுமை கொள்வானேயானால், அவ்விரு கண்களுக்குப் பகரமாக நான் அவனுக்குச் சுவர்க்கத்தை வழங்குவேன். (புகாரி : அனஸ்(ரலி))

  ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம், நோய், கவலை, நோவினை, துக்கம் - அவரது காலில் குத்திவிடம் முள்ளின் வேதனை வரை- அவை அனைத்தைக் கொண்டும் அவர் பிழைகளை அல்லாஹ் அழித்தே தவிர வேறில்லை. (புகாரி, முஸ்லிம் : அபூஸயீது, அபூஹுரைரா(ரலி))

  நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

  //இப்படி எல்லாம் குரானில் உண்மையில் இருந்தால் நாங்கள் ஏன் விமர்சிக்க போகிறோம்?//

  உங்கள் சொல்லில் நீங்கள் உண்மையாளரா ..???

  நன்றியுடன்
  நாகூர் மீரான்

  ReplyDelete
  Replies
  1. சகோ மீரான்,
   இதைப் பாருங்க. ஒருவன் என்ன செய்தாலும் பிற தெய்வங்களை வணங்காமல்,அல்லாவை மட்டும் கும்பிட்டல் போதும் என்றும் கூறுகிறது.இந்த குரான் ஹதித்தில் இதுதான் சிக்கல்,ஒன்றுக்கொன்று முரண்படும் வசனங்கள்,சூழலுக்கு மட்ட்மான நிறைய உண்டு,ஒரு திற்மையான் பிரச்சாரகர் நினைத்தபடி எதுவேண்டுமானாலும் கருத்து திணிப்பு செய்ய இயலும்.
   **************
   3222. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
   "உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!" என்று பதிலளித்தார்கள்.
   Volume :3 Book :59
   ***************
   காஃபிர் குரேசிகளை முக்மது&கோ கொள்ளையிட்ட பத்ரு போரில் இறந்தவ்ருக்கு சொர்க்கம்!!!

   6550. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
   இளைஞராயிருந்த ஹாரிஸா பின் சுராக்கா அல் அன்சாரி (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டார்கள். அப்பால் அவர்களின் தாயார் நபி (ஸலர்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே* (என் மகன்) ஹாரிஸாவுக்கு என்னிடமுள்ள அந்தஸ்தைத் தாங்கள் அறிந்துள்ளீர்கள். (இப்போது) ஹாரிஸாவுக்கு என்னிடமுள்ள அந்தஸ்தைத் தாங்கள் அறிந்துள்ளீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமை காப்பேன். இதுவன்றி நிலைமை வேறாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்களே ஊகிக்கலாம் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அடப்பாவமே* இழப்பால் துடிக்கிறாயோ* அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்க(ளின் படித்தரங்க)ள் நிறைய உள்ளன. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தில் இருக்கிறார் என்று கூறினார்கள்.
   Volume :7 Book :81

   Delete
 7. @ நாகூர் மீரான்
  சத்திய சோதனை ...................

  ReplyDelete
  Replies
  1. தலை அ.சிங்கம்,
   இதெல்லாம் நம் பொதுவாழ்க்கையில் சகஜம்தானே!!!
   நன்றி!!!

   Delete
 8. @அஞ்சா சிங்கம்

  பேருலதான் காமெடினா பேச்சிலையும் காமெடிதான் போங்கோ....

  ReplyDelete
 9. பரிணாமத்தை விட உங்கள் எழுத்து நடை அருமை! நான் கடவுளையும் நம்பறன்! பரிமளாவையும் ச்சீ பரிணாமத்தையும் நம்பறன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் இராஜரத்தினம்,
   நலமா?. அறிவியலில் ஆயிரம் கொள்கைகள் உண்டு. அனைத்தையும்,அனைவரும் அறிந்து புரிய இயலாது. பரிணாம கொள்கையும் அப்படித்தான். உண்மையிலேயே பரிணாமம் த்வறு என நிரூபிக்க வேண்டுமெனில் பரிணாம ஆய்வாளர்கள் கூறும் கருத்துகளை தனியாக ஆய்வகம் அமைத்து ஏன் பரிணாம் எதிர்ப்பாளர்கள் சரி பார்க்கக் கூடாது? அதை செய்யாமல் ஆய்வுக் கட்டுரைகளை வெட்டி ஒட்டுவதும்,சில ஆய்வளர்களின் பரிணாம செயலாக்கம் பற்றிய நுட்பமான் கருத்து வேறுபாட்டை பரிணாமமே தவறு என்பது போல் காட்டுவதும் மோசடியே.
   இப்பதிவிலேயே பாருங்கள் எத்த‌னை பொய்கள்?
   1) டான் போசியில் க்லையை செய்த்து பரிணாம் ஆய்வாளர்கள்.ஏன் எனில் அவரின் ஆய்வுகள் பரிணம்த்தை தவறென்று நிரூபித்ததாம்.
   2.அசுர மனிதர்கள் இருந்தார்களாம்.
   3. மொழிபெயர்ப்பிலும் பொய் சொல்கிறார்கள்.
   ****

   இவர்களின் பொய்களை பலரும் நம்பிவிட்டால் என்ன ஆகிறது என்பதாலேயே மறுப்பு தெரிவிக்கிறோம் .

   மற்றபடி பரிணமத்தை ஏற்காமல் இருக்க்லாம்.ஆனால் பொய் சொல்லி பதிவிடக் கூடாது.

   பரிமளா யாரு சுவனத்தில் இருக்கும் நித்திய‌க் கன்னி ஹூரியா? ஹி ஹி
   நன்றி!!

   Delete
  2. உங்கள் சேவையை இறைவன்தான் சு.பிக்காகவே நாடுகிறான்!
   நான் கூட முதலில் பரிணாமம் தவறுனு நினைக்கல! ஆனால் 100 சதவிகிதம் உண்மை இல்லைனுதான் நினைக்கிறேன்! அப்ப இது கடவுளுக்கு எதிர்ப்பா நான் பாக்கல! ஏன்னா ராமாயணம்லாம் 2லட்சம் வருஷம்னு தள்ளி போட்டுட்டோம்!
   நிச்சயம் உங்களை சுபிக்கு எதிரா படைத்ததே அவனின் விளையாட்டாகவே நான் பார்க்கிறேன்!

   Delete
 10. சகோ.சார்வாகன்,

  நல்ல விளக்கம்,ஆனால் பரிணாம புனைவிலக்கியம் படைக்கும் மார்க்கப்பந்துகளுக்கு விளங்காது :-))
  ----------

  மத்யன் சாலே வில் 14 அடிக்கு மேல் வாசல் உள்ள வீடு உள்ளது எனவே மனிதன் 10 அடி இருந்திருப்பான், அவன் காலம் 5000-6000 ஆண்டு என ஆதாரம் காட்டினார். சரி என்ன தான் இருக்கும் என தேடினால் ,

  அவை நபாதியன் அரசர்கள் கட்டிய கல்லறை குகைகள், மொத்தம் 111 உள்ளது அவற்றில் லத்தினில் எழுதி இருக்கு என யுனெஸ்கோ சொல்கிறது.

  இப்போதைய ஜோர்டானுக்கு அருகில் உள்ளது அவ்விடம், அக்காலத்தில் நபாதியன்கள் , ரோமானியர்கள் ஆண்டுள்ளனர்.

  எதனையாவது இங்கு கொஞ்சம்,அங்கு கொஞ்சம் என வெட்டி ,இதான் ஆதாரம் என காட்டுவதே வழக்கமக போச்சு :-))

  சு.பி.சுவாமிகள் பதிவில் இட்ட பின்னூட்டம்,

  இராஜகிரியார்,

  //மத்யன் என்ற ஒரு கூட்டத்தினர் மட்டும் வசித்ததாக தானே சுவனப்பிரியன் சொல்லி இருக்கிறார்.//

  எங்கே அப்படி பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

  அப்புறம் உங்களை நினைச்சா சிரிப்பு தான் வருது, மத்யன் என்ற இனக்குழ்வை நீங்களே உருவாக்குங்க :-))

  "Hegra". என்பதை Al-Hijr அல்லது Madâin Sâlih என அரபியில் பெயரிட்டு அழைக்கிறார்கள்,

  Madâin என்றால் நகரம் என அரபியில் பொருள், உடனே மத்யன் என்ற இனக்குழு என அடித்து விடுங்கோ :-))

  சாலிஹின் நகரம் அல்லது நகரங்கள் என அரபியில் பொருள்.

  முதலில் ஜோர்டானிலும் ,சிரியாவிலும் உள்ளன என சொல்லிக்கொண்டிருந்தேன்,அப்போ Madâin Sâlih என்ற பெயர் தான் அந்த இடத்திற்கு புதிதாக சூட்டப்பட்டது என்பது நினைவில் இல்லை. மீண்டும் படித்தப்போது தான் ஜோர்டானில் இருப்பதாக நான் படித்த இடமும் இதுவும் ஒன்று தான் என்பதை அறிந்தேன்.

  நபாதியான் மன்னர்கள் கட்டியது, அவர்கள் ரோமனிய ஆளுகைக்கு கீழ் வந்து விட்டார்கள், காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி முதல் நூற்றாண்டு.அனைத்தும் ரோமானிய கட்டிடக்கலை.

  யுனெஸ்கோ கணக்குப்படி 111 குடவறை அமைப்புகள் உள்ளன. சு.பி சுவாமிகள் சொன்னது போல அதில் மக்கள் வசிக்கவில்லை, அவை அனைத்தும் கல்லறைகள். நிறைய லத்தின் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

  ஹெக்ரா என அக்காலத்தில் அநகரம் அழைக்கப்பட்டுள்ளது,மக்கள் அந்த குடவறை கல்லறை அமைப்புகளை சுற்றி வாழ்ந்துள்ளார்கள்.பிற்காலத்தில் அங்கு மக்கள் வசிக்காதப்போது கேரவான்ன் பயணிகள் அங்கு இளைப்பாறி சென்றுள்ளார்கள். மற்றபடி அவை வீடுகள் அல்ல.

  மேல் விவரங்களுக்கு

  http://whc.unesco.org/en/list/1293

  ReplyDelete
 11. வாங்க நண்பர் வவ்வால்,

  பாருங்க நீங்களும் சரியாப் புடிச்சீங்க. வ்ரலாறு,அறிவியலை திரிகாமல் மத பிரச்சாரம் செய்ய முடியாது என்பது உண்மை என்றாலும்,வஹாபிகள் போல் 100% பொய் சொல்ப்வர்கள் நான் பார்த்தது இல்லை.

  இவர்களையும் நம்பி ஒரு கூட்டம், நாம் மட்டும் எழுதவில்லை என்றால் ,இவர்கள் பாட்டுக்கு கதை விட்டே,கால்த்தை ஓட்டிக் கொண்டு இருப்பாரகள்.
  இதற்குத்தான். உடனே மறுப்பு பதிவு இட்டுவிடுகிறோம்.
  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொடுமை!!!!!!!!

  அன்றில் இருந்து இன்று வரை பொய் பொய், மேலும் பொய் இதுவே வஹாபி பிரச்சாரம் ஆகும்!!!

  நன்றி!!

  ReplyDelete
 12. சகோ.சார்வாகன்

  //நாம் எப்போதும் சொல்வது இதுதான்
  எபோதெல்லாம் மூமின்கள் ஒரு குரான் வசனம் காட்டினால் முன்,பின் சில வசனங்களைப் படித்தால் மட்டுமே யாருக்கு என்ன நோஒக்கத்தில் கூறப்பட்டது என்ப் புரியும்.//

  நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே...ஆனால் நீங்களே ஏன் 5:33 என்ற வசனத்திற்கு முன் உள்ள 5:32 வசனத்தை பார்க்க மறந்தீர்கள்....

  அல் பகரா வசனங்களுக்கு முன் பின் வசனங்களை கொடுத்து இருக்கிறீர்கள்...அப்படி என்றால் நான் கொடுத்த மற்ற வசனங்களின் பொருள் என்ன.???

  *********************

  என்ன பாவம் வேண்டுமானாலும் செய்யலாம் ஒரே இறைவனை ஏற்று கொண்டால் போதும் சுவர்க்கம் என்பது அல்ல இஸ்லாம்..அவர் என்றாவது ஒரு நாள் சுவர்க்கம் செல்வாரே தவிர நரகத்திலிருந்து பாதுகாகப்படுவார் என்பது அல்ல...அதை கீழ்காணும் ஹதீத் விளக்கும்...

  ஒருவர் (நபியவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்' என்று கூறினார்கள். அந்த மனிதர், 'பிறகு எது (மிகப் பெரும் பாவம்)?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும்' என்றார்கள். அந்த மனிதர், 'பிறகு எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்' என்று கூறினார்கள். அப்போது இதை மெய்ப்பிக்கும் வகையில் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், 'அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரமும் செய்யமாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைப் புரிந்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையை அடைந்தே தீருவான்' எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அருளினான்.(bukari :6861)

  நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

  இந்த ஹதீத் உங்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று???


  //காஃபிர் குரேசிகளை முக்மது&கோ கொள்ளையிட்ட பத்ரு போரில் இறந்தவ்ருக்கு சொர்க்கம்!!!//

  பத்ரு போர் பற்றிய உங்கள் கண்ணோட்டமே போதுமானது ...இஸ்லாத்தை நீங்கள் விளங்கி கொண்டதற்கு... கீழ் காணும் உங்கள் சிந்தனையில் ஆச்சர்யம் இல்லை தான்...

  //இவர்களையும் நம்பி ஒரு கூட்டாம், நாம் மட்டும் எழுதவில்லை என்றால் ,இவர்கள் பாட்டுக்கு கதை விட்டே,கால்த்தை ஓட்டிக் கொண்டு இருப்பாரகள்.
  இதற்குத்தான். உடனே மறுப்பு பதிவு இட்டுவிடுகிறோம்.
  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொடுமை!!!!!!!!

  அன்றில் இருந்து இன்று வரை பொய் பொய், மேலும் பொய் இதுவே வஹாபி பிரச்சாரம் ஆகும்!!!//


  //இஸ்லாம் என்பதே மனித சமுதாயத்திற்கு வந்த சோத்னை!!!//

  உங்கள் சிந்தனை சிறகடித்து உங்கள் சகாக்களுடன் பறக்கட்டும், வாழ்த்துக்கள் .......

  நன்றி ....

  ReplyDelete
 13. சார்வாகனுக்கு தீனி போடனே சிலர் இருக்காங்களே :)) சார்வாகன் பதில் சொல்ல திணறுவது போல் புதிய கேள்வி கேளுங்கள். எளிமையான கேள்வி கேட்காதிங்க. மனதை தளரவிடாதிர்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்க இறைவன் (அரபியில் அல்லா) துணை புரிவானாக! நல்ல அதீத் (ஹதீத்) எது என்று சொல்லி மக்கள் தீய அதீத்(ஹதீத்) பக்கம் போகாமல் காப்பாற்றுங்கள்.

  ReplyDelete
  Replies

  1. வாங்க நண்பர் குறும்பன்,
   நாம் சும்மா இருக்க்லாம் என்றாலும், நம் சகோக்க்ள் பரிணாம் எதிர்ப்பு பதிவு எழுதுகிறேன் என்று பல தவறான் சான்றுகளுடன் பதிவிடுகிறார்கள்.நான் சொல்வது ஏன் பேசாமல் வழிநடத்தப்பட்ட பரிணாமம் என்று சொல்லி விட்டு போய்விடக் கூடாது??
   அப்படி சில மூமின் பிரச்சாரகர்களும் இருக்கிறார்கள்.குறிப்பாக அகமதியா மார்க்கம் இப்படி சொல்கிறது.

   http://en.wikipedia.org/wiki/Ahmadiyya_views_on_evolution
   The Ahmadiyya Movement is a denomination of Islam that universally accept in principle the process of evolution, albeit divinely guided, and actively promotes it.[1] Over the course of several decades the movement has issued various publications in support of the scientific concepts behind the process of evolution, and frequently engages in promoting how religious scripture supports the concept.

   ***
   http://www.alislam.org/library/articles/Guided_evolution_and_punctuated_equilibrium-20081104MN.pdf

   நம் வஹாபி சகோக்கள் ஏன் பரிணாம்த்தை எதிர்த்து வாங்கி கட்டிக் கொள்கிறார்கள் எனக்கு விள்ங்கவே மாட்ட்டேன் என்கிறது.

   மனிதன் உட்பட்ட இப்போதைய வாழும் உயிரிகள் அனைத்தும் இதே வடிவத்துடன் வெவ்வேறு காலங்களில் படைக்க்ப்ப்ட்டன என் மட்டுமே சான்றுகள் அடிப்படையில் கூறலாம் என்றாலும்,உலகில் தோன்றிய 99% உயிரினங்கள் மறைந்து விட்டன.இது படைப்புக் கொள்கையை இன்னும் விமர்சந்த்திற்கு உள்ளாக்குகிறது.

   ஆகவே அகமதியாக்களையோ,குரன் மட்டும் முஸ்லிம்களையோ பின்பற்றி பரிணாம‌ம் வழிநடத்தப்பட்டது என்று சொல்வது நம் வஹாபி சகோக்களுக்கு நல்லது.

   நன்றி

   Delete
 14. அருமையாக எழுதுகிறீர்கள் சார்வாகன்.

  அதிலும் கட்டுரையைவிட உங்கள் பின்னூட்ட பதில்கள் சிறப்பு மிக்கவை.
  உங்களின் இஸ்லாம் பற்றிய அறிவு மலைக்க வைக்கிறது. இவ்வளவு படிப்பு எப்படி சாத்தியமாகிறது?
  நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் உங்களிடம் ஒரு கேள்வி...
  Are you an Ex-Muslim, now an Atheist?
  முடியுமெனில் பதில் சொல்லுங்கள்.
  பரிணாமம் பற்றிய உங்கள் எழுத்துக்கள் உண்மையானவை, நேர்மையானவை.
  I am sure you are an enlightened person.
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் அறிவாளன்,
   பாராட்டுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. நாம் கற்பதை பிறருடன் பகிர்வதே நம் பதிவுகள்.ஆகவே பரிணாம் விமர்சனங்களுக்கு பதில் தேடும் முயற்சியில் பரிணாமம் கற்றதால் ,பரிணாம் எதிர்ப்பு விமர்சனக்களை எளிதில் சமாளிக்க முடிகிறது. நம் பரிணாம் எதிர்ப்பு சகோக்களின் வாதங்கள் மிகப் பழமையானவை.
   **
   நாம் ஒரு திறந்த புத்த்கம். சொல்கிறேன்.
   நான் முன்னாள் முஸ்லிம் அல்ல.நான் முஸ்லிம் ஆக பிறக்கவில்லையே தவிர ,பிறப்பு,வளர்ப்பு ,நட்பு ஆகியவற்றில் பெரும்பங்கு முஸ்லிம்களே. குரான் தமிழாக்கம் ஒரு அண்டை வீட்டு அஜரத்திடம் முதலிலேயே கற்றேன்.
   படித்தது கிறித்த்வ பள்ளி என்பதால் பைபிள் பழைய ஏற்பாடும் குரானும் 99% ஒத்துப் போவதும் உணர்ந்தேன்.

   தோழர் செங்கொடி எழுதிய பதிவுகள்தான் என்னை இஸ்லாமின் மீது மீண்டும் ஆய்வு செய்யத் தூண்டியது. அங்கு பின்னூட்ட விவாத்ங்கள் சுமார் 1 வருடத்திற்கும் மேல் கலந்து கொண்டேன். அந்த விவாதங்களுக்காக மீண்டும் குரான்,ஹதிது ,பைபிள் கற்றதை மனிதம் பதிவில் எழுதினே.

   பரிணம எதிர்ப்பை சமாளிக்கவே சமரசம் தளத்தை தொடங்கினேன். எனினும் படிக்கும் அறிவியல் கணிதம் தொடர்பான விடயங்களையும் பகிர்கிறேன்.

   நான் பெரிய சிந்தனையாளன் அல்ல,ஆயினும் ஆசிரியன் என்பதால் அறிந்தவற்றை எளிதாக விளக்கும் முறை தெரியும்.

   அவ்வளவுதான்.

   நன்றி

   Delete
 15. வணக்கம் சகோ,

  நம்ம சு.பி.சுட்டிக்காட்டிய குகையின் காலடித்தடங்கள் அனைத்தும் கற்பாறையின் வடிவம். கருங்கல்லில் எப்படி மனித பாதம் பதியும்? அந்த அளவுக்கு மனிதன் எடை உள்ளவனா? கற்சிற்பம் செதுக்கியதுபோல் தோன்றுகிறதே விளக்கம் தேவை!!

  இனியவன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பர் இனியவன்,
   1. சகோ சு.பியின் பதிவின் படி அக்காலடித்தடம் அரபிக் குகைகளில் அல்ல.அமெரிக்க டெக்சாஸ் மாநில ஃப்ளாமிங்கோ அருங்காட்சியகத்தில் உள்ளவை. இத்தளம் கிறித்த்வ படைப்ப்புவாதிகளின் தளம் என்பதும்,இத அருங்காட்சியகமும் ஒரு ஏமாற்றுவேலை, இதில் உள்ளவை உருவாக்கப்பட்ட சிற்பங்கள் என்பதும்,ஆய்வுக்கு உடபடுத்தப் படாத்வை.
   காலடித் தட படங்கள் இத்தளத்தில் இருந்தே எடுக்கப் பட்டன.

   http://www.6000years.org/frame.php?page=giants

   2.சு.பி காட்டிய குகைகள் பற்றி நண்பர் வவ்வாலின் பின்னூட்டம் பாருங்கள்!!!
   மீண்டும் சொல்கிறேன். அசுர மனிதர்கள் என்பது கட்டுக் கதை.இதுவ்ரை பிறந்த மனிதர்களில் உயரமானவராக ஆதாரபூர்வமாக் ஏற்கப்பட்டவர் அமெரிக்கர் ராபர்ட் வாட்லோ(8 அடி 11 அங்குலம்)தான்.
   நன்றி

   Delete
 16. //மனிதர்கள் 10 அடியில் இருந்து 20 அடிவரை இருந்ததாக சில சான்றுகளை வைக்கிறார்.//

  ம‌னித‌ர்க‌ள் சான்று வைப்ப‌து இருக்க‌ட்டும்,க‌ட‌வுளின் சான்று 60 முழ‌ம் க‌தை என்ன‌ ஆன‌து? அந்த‌ ஆத‌ம் உட‌ல் எங்கு புதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து? எல்லாவ‌ற்றுக்கும் ந‌ம்மிட‌ம் சான்று கேட்ப‌வ‌ர்க‌ள் இத‌ற்கு சான்று எங்கு வைத்திருக்கிறார்க‌ள்? க‌ட‌வுளின் வாக்கு பொய்யாக‌க் கூடாதே! ஃபிர் அவ்ன் உட‌லை பாதுகாத்த‌தாக‌க் க‌தைப்ப‌வ‌ர்க‌ள் முக்கிய‌மான‌ 60 முழ‌ம் அதிச‌ய‌த்தைய‌ல்ல‌வா‌ பாதுகாத்து வைத்திருக்க‌ வேண்டும்? அது ச‌ரி உண்மையைத்தானே பாதுகாக்க‌ முடியும்!

  இனிய‌வ‌ன்....

  ReplyDelete
  Replies
  1. நண்பர் இனியவன், ஆதாரம் இருந்தல் சும்மாவா இருப்பார்கள்?
   மத புத்த்கங்கள் ஐன்ஸ்டீன் கூறியது போல் ஆதாரமற்ற கட்டுக் கதைகளே,
   நாம் கேட்ட இனொரு ஆதாரமான துல்கர்னைன் கட்டிய சுவர் எங்கே என்னும் பதிவு பாருங்கள்.
   காணாமல் போன துல்கர்னைனும் அவர் கட்டிய சுவரும்.
   http://saarvaakan.blogspot.com/2011/01/blog-post_19.html
   நன்றி

   Delete
 17. சார்வாகன்
  மிக அருமையாக பதிலுக்கு பதிலடி கொடுக்கிறீர்கள். கிறிஸ்தவர்கள்தான் உலக மகா பொய்யர்கள் என்று நினைத்திருந்தேன். இப்போது முஸ்லிம்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று தெரிகிறது. பகடு போல் முஸ்லிம்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுங்கள்.

  ReplyDelete