Thursday, April 11, 2013

பூமி சூரியனை சுற்றுகிறதா? நம்பலாமா?Pages from 1550 Annotazione on Sacrobosco's Tractatus de Sphaera, showing the Ptolemaic system.

வணக்கம் நண்பர்களே,

பேரண்டத்தில் உள்ள எண்ணற்ற‌ விண்மீன் திரட்சிகளின் ஒன்றான நமது  பால்வீதி மண்டலத்தில் உள்ள எண்ணற்ற விண்மீன்களுள் ஒன்றுதான் நமது சூரியன். அதனைச் சுற்றும் மூன்றாவது கோள் நாம் வாழும் பூமி எனப் படித்து இருக்கிறோம். கோபர் நிகஸ்[19 February 1473 – 24 May 1543)] இத்னை முதலில் வரையறுக்கும் வரை டாலமியின்[CE 90 – CE 168)] புவி மையக் கொள்கையே அதிகம் ஏற்கப்பட்ட கொள்கையாக இருந்தது என்பது வரலாற்று உண்மை.

நாம் உணரும் உலகம் முப்பரிமாணம், நேரத்தையும் சேர்த்தால் நான்கு எனலாம்.

டாலமியின் கருத்து ஏன் நீண்ட காலமாக எதிர்க்கப்படவில்லை?. அது முற்றும் முழுதான தவறான கொள்கை எனில்,இது மிகவும் வியப்பான விடயம் ஆகும். டாலமி பூமி மையத்தில் இருக்கிறது சூரியன்,சந்திரன் ,இதர கோள்கள் பூமியை [நீள்] வட்டத்தில் சுற்றி வருவதை இரண்டுபரிமாணத்தில் கற்பனை செய்து தவறு என்கிறோம்.

ஆனால் அதே போல் சூரியனை மையமாக கொண்டு கோள்கள் சுற்றுவதையும், சில கோள்களுக்கு துணைக்கோள்கள் அதனை சுற்றுவதையும் இப்படியே இருபரிமாண வரைபடமாக சரி என‌ மனதில் கற்பனை செய்கிறோம். 

டாலமியின் கொள்கை சார் கணக்கீடுகளும் சரியாக சூரியன், கோள்கள்,துணைக் கோள்களின் இயக்கம்,பாதை கணிக்க முயன்றது என்றால் எப்படி அது தவறாகும்??.

பூமியில் இருந்து சூரியன்,கோள்களின் இயக்கம் பார்த்தால் எப்படி தெரியும்?
இதுதான் டாலமியின் வரையறுப்பு!!

ஒவ்வொரு கோளும் [பூமி உட்பட்டு] சூரியன் சிறிய வட்டத்தில் சுற்றி ,சுருள் போல் பெரிய வட்டத்தில் சுற்றுகின்றன என்பதே அவரின் சரியான விளக்கம். எந்த கோளையும்,சூரியனையும் மையமாக காட்ட முடியும்!!!!!!!!!!!!!

The basic elements of Ptolemaic astronomy, showing a planet on an epicycle with an eccentric deferent and an equant point.
https://en.wikipedia.org/wiki/Geocentric_model

அங்கிருந்து பார்க்கும் போது முப்பரிமாணத்தில்  சூரியன் இதர கோள்கள் சுருள்கள் போல் மேலும் ,கீழும் செல்வது புரியும். காணொளி பாருங்கள்.
மையம் என்பது மாறுவது புரியும்.சூரியன் ,கோள்கள் ஒவ்வொன்றும் சிறிய வட்டத்தில்[epicycle] சுற்றி, பெரிய வட்டத்தில்[Deferent] செல்வது போல் டாலமியால் விளக்கி அதற்கும் சமன்பாடுகள் வகுக்க முடிந்தது. அச்சமன்பாடுகள் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட கோள் எங்கு இருக்கும் என அப்போது துல்லியமாக கணக்கிட முடிந்தது. இன்றும் சோதிடத்தில் இம்முறையே பின்பற்றப் படுகிறது.


இங்கு சிக்கல் என்னவெனில்  நாம் சூரியக் குடும்ப வெளியில் இருந்து சூரியன் கோள்களின் இயக்கத்தை இரு பரிமாணத்தில் மட்டுமே பார்ப்பதுதான் சிக்கல்.

நமது கேலக்சிக்கு[பால்வீதி மண்டலம்] வெளியில் இருந்து பார்த்தால் டாலமி சொல்வது போல் தெரியுமாம்!!!

இப்போது சொல்லுங்கள் பூமி சூரியனை சுற்றுகிறது என்பது சார்பியல் கருத்துதானே!!!

டாலமி எழுதிய தி அல்மகஸ்ட்[Almagest] என்னும் புத்த‌கம்[ஆங்கில மொழியாக்கம்] இங்கே தரவிறக்கி படியுங்கள். 

எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியாவில் வசித்த டாலமி அப்புத்த்கம் கிரேக்க மொழியில் எழுதினார். பல கணித சூத்திரங்களின் எளிய நிரூபணமும் தந்து இருக்கிறார்.

இந்த ஆவணப் படம் இதனை நன்கு விளக்குகிறது.

ஆகவே டாலமியின் புவி மையக் கொள்கை என்பது முற்றிலும் தவறானது அல்ல.அவரின் பேரண்ட மாதிரியை விட கோபர்நிகசின் மாதிரி துல்லிய்மான கணக்கீடுகளை தந்ததால் மட்டுமே அது கைவிடப் பட்டது. ஏறத்தாழ 1200 வருடங்கள் டாலமியின் கொள்கையே ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில்  கற்பிக்கப்பட்டது. இதன் அரபி மொழி பெயர்ப்பில் இருந்துதான், ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது.


 Ptolemy's authority was preferred by most medieval Islamic and late medieval European astronomers.
..
The first translations into Arabic were made in the 9th century, with two separate efforts, one sponsored by thecaliph Al-Ma'munSahl ibn Bishr is thought to be the first Arabic translator. By this time, the Almagest was lost in Western Europe, or only dimly remembered in astrologicallore.
..
During the 16th century, Guillaume Postel, who had been on an embassy to the Ottoman Empire, brought back Arabic disputations of the Almagest, such as the works of al-KharaqīMuntahā al-idrāk fī taqāsīm al-aflāk ("The Ultimate Grasp of the Divisions of Spheres", 1138/9).[7]

அது மட்டும் அல்லாமல் அவரின் கணித பங்களிப்புகளும் போற்றத் தக்கவை!!!.

http://galileo.rice.edu/sci/theories/ptolemaic_system.html

Ptolemy was able to account for the motions of heavenly bodies within the standards of observational accuracy of his day. The idea was to break down the complex observed planetary motion into components with perfect circular motions. In doing so, however, Ptolemy violated the cosmological and physical rules of Aristotle. The excentric and epicycle meant that planetary motions were not exactly centered on the Earth, the center of the cosmos.


டாலமியின் புவிமைய, கோபர்நிகசின் சூரிய மையக் கணக்கீடுகள் அடிப்படையில் பூமி,சூரியன், இன்னொரு கோள் ஆகியவற்றின் நகர்வுகளைக் காட்டும் அருமையான ஜாவா சித்தரிப்பு!!!
http://web.cortial.net/bibliohtml/epiclc_ja.html
நன்றி!!

12 comments:

 1. இப்பதிவில் நாம் சொல்வது

  1. டாலமியின் மாதிரி முழுதும் புவி மையக் கொள்கை அல்ல!!
  ஒவ்வொரு கோளும்,சூரியனும் சிறிய வட்டச் சுருள்களில் பெரிய வட்டப் பாதைகளில் நகர்கின்ற.

  2. இவை கணக்கீட்டில் அப்போதைக்கு சரியான கணிப்புகளைத் தந்த்ன.

  3. இபோதும் சோதிடத்தில் கிரகங்களின் நகர்வுக்கு இம்முறையே அடிப்படை.

  4. இது 1200 வருடங்களாக ஏற்கப்பட்ட கொள்கை

  இதை விட்டு நான் பூமியை அனைத்தும் சுற்றுகிறது என சொல்வதாக சொல்லக் கூடாது!!!

  நன்றி!!!

  ReplyDelete
 2. டாலமி அக்காலத்தில் சூரியனே பூமியை சுற்றுவதாக நினைத்திருக்கலாம்.
  அறிவியல் வளர்ச்சி பெரிதாக இல்லாத அக்காலத்தில் சான்றுகளிற்கேற்ப அக்கொள்கையை ஏற்றுக்கொண்டதில் வியப்பேதுமில்லை...

  ஆனால் டாலமியின் கொள்கைகளே பிற்காலத்தில் அவற்றைத் திருத்தி திருத்தமான கொள்கைகளை உருவாக்க வழிவகுத்தன.

  சிறந்த அலசல்..
  உங்கள் பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இரசிகன்,
   நீங்கள் சொல்வது மிக சரியானது.

   பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனை சுற்றுவது, பூமியில் இருந்து பார்த்தால்,சூரியன் பூமியை சுற்றுவது போல்தானே தெரியும், அள்வீட்டுக் கணக்கும் சரியாக வரும்.

   அதே போல் பூமியில் இருந்து இன்னொரு கோளின் இயக்கமும் பெரிய வட்டத்தின் மேல் சிறிய வட்டம் நகரும் கண்க்கீடுகளில் பொருந்துகிறது.

   டாலமி அக்கால குறைந்த சான்றுகளை வைத்து அதுவும், கண்கள், கோணம் அளவிடுதல் வைத்தே சொல்வது பெரிய விடயம்.

   நன்றி!!!

   Delete
 3. "யோசுவா10:12 கடவுள் எமேரியரை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்த அன்று யோசுவா ஆண்டவரிடம் பேசினார். அவர் இஸ்ரயேலர் கண்முன், கதிரவனே! கிபயோனில் நில்! நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில் என்றார்.13 அவர்கள் தம் எதிரியின் மீது வஞ்சம் தீர்க்கும்வரை கதிரவனும் நிலவும் அசையாது நின்றன. இது யாசாரின் நூலில் எழுதப்படவில்லையா? கதிரவன் நடுவானில் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது இறங்குவதற்கு விரையவில்லை."
  கர்த்தரின் சட்டத்தை மறுதலிக்கிறீரே!....
  http://en.wikipedia.org/wiki/Galileo_affair

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ தேவப்பிரியா,

   வணக்கம். டாலமியின் கொள்கை முழுமையான புவிமையக் கொள்கை அல்ல.
   பூமியில் இருந்து சூரியன் இத்ர கோள்களின் இயக்கங்களை கணிக்கும் ஒரு கணித முறை. இது முழுமையான் புவிமையக் கொள்கைபோல் மத வாதிகள் திரித்த்னர்.


   ஆனால் இது 1400 வருடங்களாக மறுக்கப் படாமல் போனதற்கு கிறித்த்வர்,போப் ஆகியோரின் இக்கொள்கை சார் மத புத்தக விளக்கமே!!.

   இது பைபிளை மெய்ப்பிப்பதாக அவர்கள் நினைத்த்னர். எதிரான எதுவும் மத விரோதம் என்பதால் பொ.ஆ 100 முதல் பொ.ஆ 1500 வரை டாலமியின் கொள்கையே அப்போதைய பேரண்ட இயக்க கொள்கை.

   கிறித்தவ‌ மதகுருக்களின் கையில் கலிலியோ பட்ட பாடுதான் அனைவருக்கும் தெரியுமே!!!!

   நன்றி!!!

   Delete

 4. "Devapriya Solomon" - அம்பிகள் எல்லாம் கிறிஸ்தவப் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டது நல்ல முன்னேற்றம்தான். பூமாதேவி பூமியை தாங்கி பிடித்துக்கொண்டிருப்பதாக நம்பும்
  வெளிநாட்டு அம்பி பைபிளை குறைசொல்ல வந்திருக்கிறீர். நீர் சொன்ன வசனத்தில் மனிதன் சொன்னதாகத்தான் இருக்கிறது. இன்னொருமுறை திறந்த மனதுடன் வாசித்துப் பாரும்.

  நீர் கேட்ட கேள்வியை நாத்திகர்கள் கேட்டால் அர்த்தம் உண்டு. உம்மைப்போல கண்ட கட்டுக்கதைகளையும் நம்பிக்கொண்டு திரிபவர்களுக்கு பைபிளை பற்றி கேள்வி கேட்கும் யோக்கியதை கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இராபின்,
   சகோ கேட்டதில் என்ன தவறு?. வழக்கம் போல் ஏதேனும் மழுப்பி இதுதான் அது என மத அறிவியல் விளக்கம் கொடுக்க வேண்டியதுதானே!!.

   உங்களுக்கும் உதவுகிறேன். நமது புலன்கள் ரீதியாக மட்டுமே உணர்கிறோம். அப்படி சூரியன் நிற்பது போல் தெரிந்தது என் சொல்லி விடலாமே!!!


   மகாபாரதத்தில் கூட , ஜெயரதனைக் சூரியன் மறையும் முன் கொல்ல[சபதம்!!!] கிருஷ்னன் கொஞ்சம் நேரம் சூரியனை மறைவது போல் செய்து மீண்டும் வர வைத்து அருச்சுனன் ,அவனை கொல்ல வழி செய்வார்.

   http://en.wikipedia.org/wiki/Jayadratha

   n the epic Mahābhārata, Jayadratha (Sanskrit: जयद्रथ) was the king of Sindhu Kingdom (so he is also called as Saindhava). He was married to Dushala, the only sister of the 100 Kaurava brothers. He was the son of the king Vridhakshtra.
   ..
   Arjuna blamed Jayadratha to be the cause for Abhimanyu's death. He vowed to kill him the very next day before sunset, failing which Arjuna would kill himself by jumping in a pyre of fire.
   ..
   Krishna soon realised that Arjuna was unable to reach Jayadratha before sunset. So, he sent his Sudarshana Chakra to in order to mask the sun and thereby causing a solar eclipse in order to create an illusion of sunset. The Kaurava warriors rejoiced over Arjuna's defeat and were looking forward for his imminent suicide. Jayadratha came before Arjuna and laughed at Arjuna's defeat. In the meantime, the Sun appeared suddenly. Then, Krishna suggested Arjuna that the sun has not yet set. He pointed his hand towards Jayadratha and asked Arjuna to kill him without wasting further time. Arjuna then invoked the most powerful of his weapons, the Pashupatastra which was given to him by Lord Shiva, which decapitated Jayadratha's head.

   ஆகவே இதெல்லாம் மதபுத்தகத்தில் சகஜமப்பா!!!

   உங்களுக்கு அமைதியும் சாந்தியும் இன்னும் பலவும் உண்டாவதாக!!

   நன்றி!!

   Delete
  2. Devapriya and Robin..

   Will give both of u two stories,

   Bible : To prove to a King that he wont die GOD made time to travel behind.. How could have he did that, making the world revolve in reverse ?? and then made it revolve in the coreect direction just like using a tape recorder..

   Hindu Scripture : A demon rolled the world and went into the sea.. Lord Vishnu took the form of a boar and went inside the ocean.. took out the earth, spreaded it(remmember the demon rolled it).. Also made it dry with hair dryer.. and then left for Vaikuntam...

   So both Bible and Hindu scripture are fighting for the award of "Greatest Stupid ih the Universe"... So to get that Mr.Devapriya and Mr.Robin Start Music....

   Delete
  3. //சகோ கேட்டதில் என்ன தவறு?. வழக்கம் போல் ஏதேனும் மழுப்பி இதுதான் அது என மத அறிவியல் விளக்கம் கொடுக்க வேண்டியதுதானே!!.//

   மத அறிவியல் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. விஞ்ஞானம்- மெஞ்ஞானம் இரண்டையும் கலக்கவேண்டிய அவசியமில்லை. என்னை பொறுத்தவரை பைபிள் என்பது ஆன்மீகப் புத்தகம், அறிவியல் புத்தகம் அல்ல.

   தேவப்பிரியா சாலமன் என்ற போலிப் பெயரில் வந்திருக்கும் பார்ப்பனர் இந்துமத நம்பிக்கை உடையவர். அவர் நம்பிக்கையை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறிவதுபோல் பைபிளைக் குறை சொல்வதை எற்றுக் கொள்ள முடியாது. அவர் சார்ந்த மதத்தில் அறிவியலுக்கு எதிரான ஆயிரக்கணக்கான விஷயங்கள் உண்டு . அதற்கெல்லாம் இவரால் பதில் சொல்ல முடியுமா? தன் குட்டு வெளிப்பட்டுவிடக் கூடாது என்றுதான் திருடனைபோல முகமூடியுடன் அலைகிறார்.

   Delete
 5. யோசிக்க வைக்கும் பதிவுதான். நீங்கள் குறிப்பிட்ட இணைப்புகள் மூலம் படிக்க முயற்சி செய்கிறேன்.
  வீடியோ எனது கணினியில் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ முரளி,
   டாலமியின் சூரியன்,கோள்கள் இயக்கம் கண்க்கிடும் முறை பூமியில் இருந்து நகர்வு கணக்கிடும் கணித முறை. வட்டம்,கோணம் கொண்டே வியக்க வைக்கும் வகையில் பொ.ஆ 100 ல் செய்து இருக்கிறார்.
   திரிகோணமிதி என்பதுதான் அப்போதைய பேரண்ட விளக்கம்!!! .
   **

   காணொளிகள்.யு ட்யூப்தான். டாலமி யுனிவர்ஸ் என தேடினால் இதுபோல் பல கிடைக்கும்.

   1.Ptolemy's universe (aka Claudius Ptolemaeus' model)
   http://www.youtube.com/watch?feature=player_embedded&v=utH-GHH1FT8

   2.Ptolemy's theorem from proj.math documentary

   http://www.youtube.com/watch?v=ejnc49yNXfQ

   பதிவின் கடைசியில் உள்ளது ஜாவா சைமுலேசன்.உங்கள் கணிணியில் ஜாவா இருந்தால் மட்டுமே வேலை செய்யும்.இலவசமாக தரவிறக்கம் செய்யலாமே!!

   http://web.cortial.net/bibliohtml/epiclc_ja.html

   நன்றி!!!

   Delete
 6. சார்வாகன்,

  …ஜோதிடத்திலும் மகர - கடக ரேகைக்கும் இடையில் சூரியன் நகர்வதாகச் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டதுபோல், வெளியிலிருந்து பார்த்தால், சூரியனின் நிலை சுற்றிவைக்கப்பட்ட சுருள் போலத்தான் இருக்கும். பூமியின் சார்பிலிருந்து பார்த்தால், டாலமி சொல்வதும் ஜோதிட சாத்திரம் சொல்வதும் அர்த்தமுடையதாகப் படுகிறது.

  ReplyDelete