Thursday, April 18, 2013

பூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்?


வணக்கம் நண்பர்களே,

இணையம் என்பது கட்டற்ற கருத்து சுதந்திரம் அளிப்பதால், சிலர் விரும்பும் விடயங்களை சான்றுகள் இன்றியே பரப்புரை செய்து விளம்பரம் கொடுக்க முடியும். பெரும்பான்மை மனிதர்கள் தாங்கள் ஒரு அற்புதப் படைப்பு என்னும் எண்ணம் கொண்டு இருப்பதால் இக்கதைகளை நம்புவதில் வியப்பில்லை.

மதங்கள் தோன்றியதே இயற்கை சக்திகளை மந்திரம் போட்டு ஆதரவாக செயல்படுத்த முடியும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே.
இயற்கை சக்திகளை மனித உருவில் கற்பனை செய்து, கதைகள் சொல்லி வந்தது மதத்தின் அடுத்த கட்டம்.மத புத்தக கதைகள் எல்லாம் இப்படித்தான். கடவுளுக்கு மனிதன் போல் ஆசை, கோபம்,பெருமை என் பல குணங்களும் உண்டு.

இவற்றை எல்லாம் பொய் என உணர ஆரம்பித்து விடும் சூழல் வந்ததால், அறிய,புரிய முடியா இயற்கைக்கு மேம்பட்ட சக்தியே கடவுள் என சொல்லி மதவாதிகள் குழப்பி விட்டார்.
  
இயற்கையின் ஆற்றலில் இறைவனைக் காண்போம் என்னும் பாதிரி அக்கினோவின் கருத்து இன்றும் நன்கு எடுபடுகிறது.

இன்று தமிழ்மணத்தின் படித்த ஒரு பதிவில்  தமிழ்நாடு திருநள்ளாறு கோயிலின் மேல் வரும் போது மட்டும் துணைக் கோள்கள் 3 நொடி செயல் இழக்கிறது என ஒரு செய்தி. அதுவும் இத்னை நாசா ஒத்துக் கொள்வதாகவும், சில ஆய்வாளர்களை அனுப்பி இத்னை பரிசோதிப்பதாகவும் அப்பதிவு கூறுகிறது.  


//சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது..

3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

**கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. 

**இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. 

**இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்

**அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.

**நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.//

இதையும் நம்புபவர்கள் இருப்பதை கண்டு நமக்கும் பிரமிப்பு வருகிறது.

எதையும் சான்றுகள் அடிப்படையில் சீர்தூக்கி பார்ப்பதே அறிவு. வழக்கம் போல் இப்பதிவிலும்  ஆய்வுக் கட்டுரை அல்லது நாசா அறிக்கை போன்றவை இல்லை.

ஒரு விடயத்தை சொல்பவர்கள் அதனை மற்ற‌வர்கள் பரிசோதித்து ஏற்க/ மறுக்க சான்றுகள் அளிக்க வேண்டும். இப்படி பரப்புரைகள் சொல்பவர்கள் இதனை நாசா மறுக்கவில்லையே ஏன் என்றே கேட்பார்கள்.

இப்படி பதில் சொல்வது நாசாவுக்கு வேலையா? ஒவ்வொரு புரளிக்கும் நாசா பதில் சொன்னால் அது நாசாவாக இருக்காது நாசமாக போய்விடும். அடுத்த கிரக மனிதர்,ப்றக்கும் தட்டு, கோயில் கும்ப்ம காஸ்மிக் கதிரை இழுக்கிறது என பல புரளிகள் தினமும் கிளம்பும் போது எல்லாவற்றையும் மறுக்க நேரம் இருக்காது.

பரிணாம எதிர்ப்புக்கும் தொடர்ந்து மறுப்பு சொன்னாலும்,எதிர்க் கோஷ்டி சும்மா இருப்பது இல்லையே!!. கடவுளைக் காப்பாற்ற இப்படி புரளிகள் இன்றியமையாதது.


Myths are created much faster than they can be debunked

சனி பகவான் என்பவருக்கு மத புத்தக கதைகளின் படி ஒரு கால் ஊனம். ஆகவே கொஞ்சம் நொண்டி நொண்டி நடப்பார்.அக்காலத்தில்[ 20 ஆம் நூற்றாண்டு முன்] போலியோ மருந்து கண்டுபிடிக்கப் படாமையால இது நடக்கும் வாய்ப்பு அதிகம். ஹி ஹி!!!

சனி பகவான் நொண்டுவதால், அவர் கோயில் மேல் செல்லும் துணைக்கோள்களும் நொண்டும் என் கதை விடுவதை ஊகிக்க முடியும். 12 இராசிகளின் நகர்வு , டாலமியின் புவிமையக் கோட்பாட்டில் இருந்து கணிக்கப்படுகிறது என நாம் மீண்டும்,மீண்டும் சொல்லி வருகிறோம்.கிரகங்களின் நகர்வு மனிதனை மட்டும் ஏன் பாதிக்கிறது, ஏன் பிற உயிரிகளைப் பாதிப்பது இல்லை? டைனோசோர்கள் விண்கற்கள் தாக்கி இறக்க எந்த இராசி காரணம்? உலகில் தோன்றிய 99% உயிரிகள் மறைந்து விட்டனவே. மனிதனின் ஹோமோ சேஃபியன் தவிர இதர 20+ இனங்கள் மறைந்து போனாரே!!! 


  நமக்கு வந்த கேள்விகள்

1. எந்த துணைக்கோள் எப்போது இப்படி செயல் இழந்தது?
அது குறித்த செய்திகள் உண்டா?


2.திருநள்ளாறு வந்த ஆய்வாளர்கள் யார்?

3. இப்படி உண்மையிலேயே ஏதேனும் வித்தியாசமாக திருநள்ளாறு மீது மட்டும்  செயற்கைக்கோள் செல்லும் போது நிகழுமா?அதற்கு அறிவியல் விளக்கம் உண்டா???

இது ஒரு பொய் பரப்புரை என்பது என்க்கு தெரியும் என்றாலும் இது குறித்து நாசாவின் மறுப்பு ஏதேனும் உண்டா எனத் தேடினேன். நாசா எதுவும் சொன்னது போல் தெரியவில்லை என்றாலும், இந்த இயற்பியல் கலந்துரையாடல் தளத்தில் பல நண்பர்கள் இதனை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்தது புரிந்தது.


அந்த தளத்திலும் அனந்து [ஒரு தமிழர்??!!] இப்படி கதை விட , அங்கே இருந்தவர்கள் ஆதாரம் கேட்டு, மாற்று விள்க்கம் கொடுத்து கும்ம, நம்ம தமிழர் பம்மி எங்கேயோ யாரோ சொன்னாங்க என தவறை ஒத்துக் கொண்டார்.

சரி நாம்  கேள்விகளின் பதிலை பற்றி யோசிப்போம்.

முதல் இரு கேள்விகள் முற்றிலும் பொய், எந்த துணைக்கோளும் , திருநள்ளாறு மீது செயல் இழக்கவில்லை, எந்த ஆய்வாளரும் பரிசோதிக்க வரவில்லை.

மூன்றாம் கேள்விக்கு துணக்கோள்கள் பயணிக்கும் பாதை பற்றி கொஞ்சம் அறிவோம்.

பூமி,துணைக்கோள்களின் இயக்கம் பற்றி அறிய நியுட்டனின் விதிகள் போதுமானவை. பூமி ஒரு ஒழுங்கற்ற கோளம் என்பதால் துணைக்கோள்களின் பாதையும் ஒழுங்கற்ற நீள்வட்டமாகவே இருக்கும்.

பூமிக்கும் துணைக்கோள்களுக்கும் உள்ள‌ தூரம் மாறுவது மிக இயல்பான விடயம். ஆஹா திருநள்ளாறில் அப்படித்தானா  என்றால் திருநள்ளாறு கோயில் என்பதை துணக்கோள் செல்லும் வேகத்தில் கடக்கும் ஆகும் நேரம் சுமார் 8 கி.மீ/வினாடி.துணக்கோள்  250 கி.மீ தூரத்தில் இருந்து ,பூமியை சுமார் 90 நிமிடத்தில் சுற்றுகிறது.இதில் துருநள்ளாறு கோயில் குறுக்கு வெட்டு தூரம் அதிகபடசம் 200 மீட்டர் கூட இருக்காது. திருநள்ளாறு ஊர்  8 கி.மீ நீளம் இருக்காது. ஆகவே மூன்று வினாடியில் துனைக்கோள் சுமார் 24 கி.மீ சென்று விடும்.The speed needed to achieve a stable low earth orbit is about 7.8 km/s, but reduces with increased orbital altitude. The delta-v needed to achieve low earth orbit starts around 9.4 km/s. Atmospheric and gravity drag associated with launch typically adds 1.5–2.0 km/s to the delta-v launch vehicle required to reach normal LEO orbital velocity of around 7.8 km/s (28,080 km/h). 

பூமி ஒழுங்கற்ற கோள்மாக இருப்பதால் துணக்கோள்களின் பாதை ஏற்ற இறக்கமாக் இருக்கும். எப்படி நிலத்தில் வண்டியில் செல்லும் போது மேடு ,பள்ளம் உணர்கிறோம் அல்லவா!!! அப்படி. இது உலக முழுதும் நடக்கும். திருநள்ளாறில் மட்டும் எதுவும் நிகழவில்லை.குறிப்பாக துணக்கோள்கள் செயல் இழக்கும் வாய்ப்பே இல்லை.செயல் இழத்தல் என்றால் அக்கணம் மட்டும் த்கவல் தொடர்பு கிடைக்காமல் போக வேண்டும். இதனை நாசா உணராமல் இருக்குமா? உணர்ந்தே வேண்டும் என்றே மறைக்கிறார் என் உங்களுக்கு எண்ணம் வந்தால், உங்களுக்கு சொர்க்கத்தில் அப்சர‌சுகள் காத்து இருப்பார்கள் என்னும் கனவு அடிக்கடி வரும்.உங்களின் இறைவன் மிகப் பெரியவர்!!!!!!!!!!!!!!!!!.


இந்த விக்கி சுட்டியில் நாசா நடத்திய புவி ஈர்ரப்பின் ஒழுங்கற்ற பரவல், தட்பவெப்பநிலை குறித்த ஆய்வு பற்றிக் கூறுகிறது. எப்படி துணக்கோள்கள் பயணிக்கும் பாதை மாறுகிறது என்பதையும் விளக்குகிறது.


எப்படி பூமி ஒழுங்கற்று இருப்பது இயல்பான விடயமோ,அதே போல் துணக்கோள்கள் பாதை ஏற்ற இறக்கத்துடன் இருப்பது பெரிய விடயம் இல்லை.


இந்த சுட்டியில் கல்லூரி பாடத் திட்ட கேள்வி பதிலில், ஒரு துணக்கோளின் பாதை எப்படி ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது என எ.கா உடன் விள்க்குகிறார்கள். குறிப்பாக 4.4 to,4.8 அருமையான கணக்குகள்.


ஆகவே 
1. திருநள்ளாறில் துணைக்கோள்கள் செயல் இழக்கவில்லை.

2. துணக்கோள்களின் பாதை ஏறி இறங்க ,பூமியின் ஒழுங்கற்ற அமைப்பே காரணம்.
அது பூமியின் பல் இடங்களில் நிக்ழ்கிறது. திருநள்ளாறுக்கும் ஒரு குறிப்பிட்ட துணைக்கோள் சார்ந்து ,தூரம் காணமுடியும். அது அற்புதம் ஆகாது!!!. 

பாருங்கள். பூமி,ஈர்ப்பு,துணக்கோளின் பாதை என பல விடயம் சொல்ல வேண்டி உள்ளது. இன்னும் பல விடயங்கள் உண்டு என்றாலும், பின்னூட்ட விவாதங்களின் மேல் தொடர்வோம்.

புரளி கிளப்புவது எளிது,மறுப்பு சொல்வது அதிக நேரம் எடுக்கும்,கடின உழைப்பு கொண்ட விடயம் ஆகும்.

புரளி கிளப்பிய பதிவு எழுத 10 நிமிடம் போதும். மறுக்க நமக்கு பல மணிநேரம் தேட வேண்டி இருந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!!!!

என்றாலும் பரிணாம மறுப்பு, இப்படி போலி அறிவியல்களை மறுக்கத்தானே நாம் இருக்கிறோம்.

சனீஸ்வரருக்கே சனி பிடிக்க வைக்கிறார்களே ஆத்திக விளம்பரதாரிகள்!!


சனீஸ்வராய நமஹ!!!


நன்றி!!!


31 comments:

 1. //புரளி கிளப்புவது எளிது,மறுப்பு சொல்வது அதிக நேரம் எடுக்கும்,கடின உழைப்பு கொண்ட விடயம் ஆகும்.// மிகச்சரி..சிலர் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மெய்யாக்க‌ முயல்கிறார்கள். தாம் சொல்வதே சரி எனவும் வாதிடுவார்கள் இதற்கான ஆதாரம் இருக்கா எனும் போது திரு திரு என முழிக்கவேண்டியதுதான். சரியான எதிர் கேள்விகள் மற்றும் பதில் கொடுத்து இருக்கீங்க தொடருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. சகோ கலா குமாரன்,

   இணைய உலகில் எதையும் சொல்வது எளிதி. எழுதும் விடயங்களை ஆதாரத்துடன் எழுத முயற்சி செய்தாலே, இப்படி விடயங்களின் சாத்தியம் பிடிபட்டு விடும்.

   யாரோ பரப்புவதை சில அப்பாவி சகோக்க்கள் புல்லரித்து வெட்டி ஒட்டுவதை, சான்றுகள் அடிப்படையில் நாம் மறுக்கா விட்டால் இத்னையும் நம்ம ஆள்கள் நம்பி விடுவார்கள்!!!.

   இதனை நாசா செய்ய்யாது, அப்படி மறுப்பு கொடுத்தாலும் இப்படி புரளிகள் நிற்காது!!!

   பாருங்கள் கடல் கன்னிகள் இருப்பதன் சான்று இல்லை என National Oceanic and Atmospheric Administration மறுக்கிறது.

   http://www.dailymail.co.uk/news/article-2168532/Mermaids-dont-exist-declares-US-government-Animal-Planet-TV-prompts-questions.html?ITO=1490
   he question as to whether mermaids are real or not was recently put to rest as a U.S. scientific agency confirmed the sea creatures do not exist.
   The National Oceanic and Atmospheric Administration have confirmed that there is no evidence that the half-human, half-fish beings are a genuine living species.
   The agency made a statement last week clarifying that the sea species is not real after they received a few calls following a fictional Animal Planet show called Mermaids: The Body Found that confused some viewers as fact.


   இப்போது விதண்டாவாதம் செய்ய NASA தேடியவரை மட்டும்தானே சான்று இல்லை. ஒரு சிலர் ஏமாற்றுகிறார் என்பதற்காக அனைத்துமே அப்படி சொல்ல முடியுமா?நாளை நடப்பதை யார் அறிவார் என்போரை ஒன்றுமே செய்ய முடியாது.

   இயற்கையின் சில நிகழ்வுகளை இறைவன், கோயில் ஆகியவற்றின் அற்புதமாக காட்டுவது வியாபார ,விளம்பர த்ந்திரமே!!

   நன்றி!!!!

   Delete
 2. வணக்கம் சகோ.

  ஆன்மீகவாதிகள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ,அறிவியலைத் தான் முழுசாக நம்பி கல்லாகட்ட பார்க்கிறார்கள்..மறுப்பதற்கு உங்களைப்போல் யாரும் சிரமப்பட்டு பதிவிடுவார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை. அந்த விடயத்தில் நீங்கள் படு உஷார்தான்.....எப்படியும் இழுத்து வச்சு நறுக்கிவிடுகிறீர்கள்...நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. சகோ இனியவன்,
   நமக்கு எந்த மதத்தின் மீதும் பிடிப்போ, வெறுப்போ இல்லை. இப்படி புரளிகள் மத புத்த்கத்தில் அறிவியல், அன்றே கூறினார் ஆண்டவன், அற்புத்தம் நடக்கிறது என்னும் பிரச்சாரங்களை எதிர்ப்பதை கடமையாக கருதுகிறோம்.

   இணைய உலகில் புரளிகள் பரப்ப வசதி இருப்பது போல், மறுக்கவும் இருக்கும் வாய்ப்பை நாம் பயன் படுத்துகிறோம்.

   புரளிகளை வெட்டி ஒட்டுவோர். நான் இத‌ன் அடிப்படையில் கூறுகிறேன் என மூல சுட்டிகள் அளித்து ,விருப்பம் உள்ளோர் சரி பாருங்கள் என் சொன்னாலே புரளி அம்பலம் ஆகும். ஆனால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

   கிரக ,இராசி நகர்வுகள் மனிதர்கள் மீது பிறந்த நேரம் சார்ந்து வித்தியாசமாக செயல் ஆற்றுகின்றன என்பதும் சான்றுகள் அற்ற கருதுகோள் மட்டுமே!!

   ஆனால் சோதிடக் குறிப்புகள் பெரும்பான்மை நாளிதழ்கள்,தொலைக்காட்சிகளில் தினமும் வருகின்றன.

   அப்படி ஒரே தினத்தின், ஒரே இராசிக்கு வெவ்வேறு கணிப்புகளை ஒப்பிட்டாலே வித்தியாசம் பிடிபடும்.

   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   நன்றி!!!

   Delete
 3. இதனை பல காலத்திற்கு முன்பே நான் mail, facebookல் பார்த்திருக்கிறேன்..

  ஆனால் இதனை நம்புபவர்களிற்கு சொல்லி புரியவைக்க முயன்றும் முடியாமல் போய்விட்டது. ஆதாரம் தேட அதிக நேரம் எடுக்கும், அப்படி சொன்னாலும் அதற்கும் வேறு கேள்வி கேட்பார்கள் என்பதால் விட்டு விட்டேன்.
  இத்தனை சிரமப்பட்டு ஆதாரங்களுடன் பதிவிட்ட உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது...

  ReplyDelete
  Replies
  1. சகோ இரசிகன்,

   இது சான்றுகள் அற்ற புரளி என் ஏற்கெனவே தெரியும் என்றாலும், நாசா கடல்கன்னி விவகாரம் போல் மறுப்பு கொடுத்து இருக்கிறதா என் மட்டுமே தேடினேன்.

   இயற்கையின் சில விந்தைகளை ஆண்டவன் நமக்காக நிகழ்த்தும் அற்புதம் என்பது ஆதி மனிதர்களின் சிந்தனை. இன்றுவரை தொடர்கிறது.

   அவ்வளவுதான். நன்றி!!!

   Delete
 4. சகோ.சார்வாகன்,

  இந்த நாசா-சனிஸ்வரன் கதை ரொம்ப பழசு, அனேகமா 2000 ஆம் ஆன்டு வாக்கில் பரப்பப்பட்டது.

  திருநள்ளார் சனிஸ்வரன் கோயில் கோபுரம் இல்லாமல் இருந்தது ,அதனை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி , சனிப்பெயர்ச்சியை பிரமாண்டமாக கொண்டாடினார்கள்,அந்த சமயத்தில் அமெரிக்க தமிழர்கள் சிலரும் சாமி கும்பிட வந்தார்கள்,அவர்களில் சிலர் நாசாவில் வேலை செய்பவர்கள், இதை அப்படியே பரப்பி விட்டார்கள்.

  அவங்க சாமி கும்பிடத்தான் வந்தார்கள் என்பதை அவர்கலை அழைத்து வந்தவரே அப்பொழுது விளக்கம் கூட கொடுத்திருந்தார். மக்கள் புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோயிலுக்கு "பவர்" கூடிவிட்டது என காட்டிக்கொள்ள திட்டமிட்டே வதந்தியை பரப்பினார்கள்.

  அந்த பழைய செய்தியை இப்போ எடுத்துப்போட்டு சிலர் பரபரப்பு கிளப்புகிறார்கள் :-))

  இந்த செய்திக்கெல்லாம் முன்னரே நாசா சனிக்கிரகத்தை ஆராய காசினி போன்ற செயற்கை கோள்கலையே அனுப்பிடுச்சு,அப்போ சனி பகவான் அந்த செயற்கை கோள்கைகளை முடக்கலையே :-))

  ----------

  எர்த் கிராவிட்டி ஆராயும் கிரேஸ் திட்டம் மூலமாக பூமியின் நிலத்தடி நீர்மட்டம் பற்றி ஆய்வு செய்து இருக்கிறார்கள் அதைப்பற்றி யாரும் சொல்லவில்லை, நான் ஒரு பதிவு தயார் செய்தேன் ,அப்படியே விட்டுவிட்டேன்.

  நிலத்தடி நீர் மட்டத்திற்கும்,புவியீர்ப்புக்கும் தொடர்பு இருக்காம்,அதிக நிலத்தடி நீர் உரியப்பட்டால்,அங்கு ஈர்ப்பு விசைக்குறையுமாம், இதனால் பூகம்பம் வர வாய்ப்புண்டு என்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோ வவ்வால் ,
   நாசாவில் பணியாற்றுபவர்கள்[ யாரு!!???] விடயம் தெரியும் என்றாலும், ஹி ஹி நான் இத்னை இயற்பியல் அடிப்படையில் விள்க்க முடியுமா என மட்டுமே முயற்சி செய்கிறோம்.   அந்த இயற்பியல் தளத்தில் கூட ஒருவர் இப்படி கோயில் புகழ்பாடி அப்புறம் மழுப்பி ஒதுங்கி விட்டார்.

   ஒரு புரளி கிளப்புகிறார். சான்று இருக்கிறதா என்றால், எதிர் சான்று நீ கொடுக்க முடியுமா என்பார்கள். இங்கும் அதே!!!

   ஈர்ப்பு விசை ஏற்ற இறக்கங்கள் பூமியை பாதிக்கிறது. இதற்கு இயற்கையை பாழ்படுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும்.

   ஈர்ப்பு விசை ஏற்ற இறக்கம் , கிரகங்களுக்கு பூசை செய்து பூகம்பம் தடுக்கலாம் எனவும் புரளி கிளப்பும் வாய்ப்பு இருக்கிறதே!!! இந்த மந்திரம் , ஈர்ப்பு விசையின் விளைவுகளை சமன் செய்யும் என்வும் சொல்வார்கள்!!!


   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   நன்றி!!!

   Delete
 5. மாமு, சூடா டீ வடை சாப்பிடாளாமுன்னு கடைக்கு வந்தா ஆறிய டீயும், ஊசிப்போன வடையும் வித்துகிட்டு இருக்கீங்க...........

  பல மாதங்களுக்கு முன்னரே இந்தக் கதையை கிழித்து தொங்க போட்டுவிட்டார்கள், நீங்க இப்ப வந்து காந்தியை சுட்டுட்டாங்கலன்னு கேட்டுகிட்டு இருக்கீங்க. நீங்க எப்படி மிஸ் பன்னுநீங்கன்னு ஆச்சரியமா இருக்கு!!

  \\இதையும் நம்புபவர்கள் இருப்பதை கண்டு நமக்கும் பிரமிப்பு வருகிறது.\\ இதென்ன மாமு ஜுஜுபி!! நீங்க எழுதுவதைய நம்புறவங்க இருக்காங்களே, அந்த மாதிரி இளிச்சவா பசங்க எதை வேணுமின்னாலும் நம்புவாங்க........

  \\அமெரிக்க தமிழர்கள் சிலரும் சாமி கும்பிட வந்தார்கள்,அவர்களில் சிலர் நாசாவில் வேலை செய்பவர்கள், இதை அப்படியே பரப்பி விட்டார்கள்.\\ இப்ப புரியுது!! thanks வவ்வால்.......

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாப்ளே தாசு,
   நீங்க சொல்வது சரிதான். இது பழைய விடயம்தான். இந்த புரளி நேற்று தமிழ்மணத்தில் வந்ததால் அதற்கு அறிவியல் சார் விளக்கம் அளித்தோம்.

   ஈர்ப்பு விசையின் ஒழுங்கற்ற பரவல் பற்றியும் சொல்ல முடிந்தது!!
   **
   டிஸ்கி: உங்க அளவுக்கு ,கருப்பு பொருள், ஹிக் போசான் என லேட்டஸ்ட் புரளியில் இஸ்க்கான் ஆன்மீகம் கல்ந்து மெய் மறக்கும், புல்லரிக்கும் பிரச்சாரம் அளிக்கும் திறமை எல்லோருக்கும் வருமா???

   அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம்!!!

   நன்றி!!!

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. 2011 சனவரியில் தமிழ்பிராமின்ஸ் எனும் தளத்தில் தனக்கு ஈமெயிலில் இந்த செய்தி வந்ததாக ஒருவர் forum ஒன்றில் எழுதினாராம். ஆனால் அதற்கு பதிலலித்தபலர் அதை புரட்டு என புறந்தள்ளி விட்டார்கள். பின்பு அதே ஆண்டு தினத்தந்தியிலும் ராணி பத்திரிக்கையிலும் வந்து இந்த செய்தி பிரபலமானது(தமிழகத்தில் அதிகம் படிக்கப்படும் செய்தித்தாளின் லட்சணத்தை பாருங்கள்). ஆனால் வவ்வால் சுட்டிக்காடிய படி இதற்கு முன்னரே இந்த மாதிரி ஈமெயில்கள் அவ்வப்போது தலைகாட்டிய படியே இருந்தன. இதற்கு மூல செய்தி 2005-2005 வாக்கில் வந்த ஜீனியர் விகடன் செய்திதான் மூலம் என சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த மாதிரி ஒரு ஜூவியில் வரவே இல்லை என்பதே உண்மை. வவ்வால் குறிப்பிட்ட நாசா ஆளுங்க வந்த செய்தியும் புரளி வகைறாவே என தோன்றுகிறது. அவருக்கும் இது செவி வழியாக வந்த செய்தியாத்தான் இருக்க வேண்டும்.

  நிற்க. இந்த பக்தர்களில் லாஜிக்கே புலப்படமாட்டேன் என்கிறது. சனிபகவான் மிகுந்த கண்டிப்பானவர், நமது வினைகளுக்கு தகுந்த கூலி கொடுப்பார் என நம்புகிறார்கள். ஆனால் இப்படி புரளி கிளப்பி மக்களை ஏமாற்றி திருநள்ளாறுக்கு கூட்டம் சேர்த்தால் சனி ஒன்னும் செய்யமாட்டாரோ? எல்லாம் சனியாருக்கே வெளிச்சம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ நந்தவனம்,

   இந்த நாசாவில் பணியாற்றுபவர்கள் பற்றி எதுவும் சொல்லாமல் இயற்பியல் சார்ந்து மட்டுமே விள்க்குவோம் என நினைக்கிறேன்.தமிழர்களில் பலர் பணியாற்றுகிறார்கள். அப்படி எவரேனும் நேர்த்திக் கடனுக்கு திருநள்ளாறு வந்த போது ஏதோ சொல்லி வைப்போமெ என முதலில் ஆரம்பிக்க அது கை,கால் முளைத்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது!!!.

   நாம் எப்போதும் சொல்வது நாத்திகம் கற்க மத புத்தகம் படி!!!

   நாத்திகர் ஆக ஆத்திக விளம்பரதாரிகளின் செயல்களை உற்று கவனியுங்கள்!!!

   மதபுத்த்கம் படிக்கவிடாமல், எதையோ சொல்லி குழப்பி வாழ்வை ஓட்டும் விடயம் என் எளிதில் புரியும்!!

   பாவம் உடல் ஊனமுற்ற[போலியோ அட்டாக்!!] சனி பகவானை, இப்படி துணைக் கோள்களை உடைக்கும் தீவிரவாதி ஆக்கிவிட்டார்களே என்றே வருந்துகிறோம்!!

   ஏற்கெனவே பூகம்பம் ஏற்படுத்தி ,அனைவரையும் போட்டுத் தாக்குவது எங்க ஆள் என ஒரு பிரச்சாரம் வந்தது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

   டைனோசார்களையும் , இன்னும் 99% உயிரிகளையும் அதே ஆள்தான் போட்டுத் தள்ளி இருக்க வேண்டும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   தேடிக் கொண்டு இருக்கிறேன் ,சிக்க மாட்டேன் என்கிறார்!!!

   பெரிய தீவிரவாதி அவரை விட்டுவிட்டு பாவம் சனிக் கிரகம் அது பாட்டுக்கு சிவனே[?] என சூரியனை சுத்தி வருது அதைப்போய்!!!!!!

   சனி பகவான் ஒரு அப்பாவி!!!.அவருக்கு நான் ஆதரவு கொடுக்கவே இப்பதிவு இட்டேன்!!

   நன்றி!!!

   Delete
 8. சனீஸ்வரருக்கே சனி பிடிக்க வைக்கிறார்களே ஆத்திக விளம்பரதாரிகள்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ,

   பாவம் அப்பாவி சனி பகவான் மீது துணைக்கோள்களை கெடுக்கிறார் என குற்றம் சுமத்துகிறார்களே என்னும் வருத்தம்தான் இப்பதிவு சகோ!!!

   நன்றி!!!

   Delete
 9. கில்லாடி நீங்க

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஜோதிஜி,
   கில்லாடி[இரங்கா] நான் என்றால் கேடி[பில்லா] யாரு ?? ஹி ஹி

   எல்லாம் அவன் செயல்!!!
   எல்லாப் புகழும்___________

   நன்றி!!!

   Delete
 10. சார்வாகன்,

  .இரண்டு கடலுக்கு இடையிலயும் திரை இருக்கு, ரெண்டு தண்ணியும் ஒன்னுசேராதுன்னுட்டு குரான்ல சொல்லியிருக்காம். அத இப்போ ஒரு விஞ்ஞானி கண்டுபிடிச்சிருக்காருன்னு ஒரு முஸ்லீம் நண்பர் சொல்றார். எனக்கு விவரம் தெரியாததினால பேச முடியல. டெய்லி ஒவ்வொன்னா சொல்லி என்ன அரிக்கிறான். இதப்பத்தி ஒரு பதிவு போடுங்கன்னா.

  ReplyDelete
  Replies
  1. சகோ பிரகாஷ்,
   மத அறிவியல் என்பது இப்போது காணாமல் போய்விட்டது. இப்படி பிரச்சாரங்கள் ஒவ்வொன்றும் மறுக்கப்பட்டு விட்டன.
   இந்த சுட்டியில் பல மத அறிவியல் புரட்டுகளை அம்பலப் படுத்துகிறார். நீங்கள் கேட்ட கடலுக்கு இடையே பிரிவு.

   http://www.youtube.com/watch?v=ZAK6fQQALE4&playnext=1&list=PLE463E6D6891DEF37

   செந்தில் ஒரு படத்தில் பால் விற்கும் போது பால் கேனில் கீழே குழாயில்
   பிடித்தால் எருமைப் பால்,மேலே எடுத்தால் பசும் பால் என விற்பார். கேள்வி கேடபவ்ர்களை எருமைப் பால் அடர்த்தி ஆகவே கீழ் இருக்கும் என் விள்க்கம் கொடுப்பார் அதுபோல்தான்!!!
   ***
   சரி இதில் என்ன நடக்கிறது.

   1. ஒரு வசனத்திற்கு ஏற்கெனவே இல்லாத புதிய பொருள் கூறி ,அத்னை ஏதேனும் உறுதியான அறிவியல் கருத்தோடு ஒத்து வருவதாக காட்டுவார்கள்.

   2. இதற்கு பழைய விள்க்கங்களை[தஃப்சீர்] பார்த்தாலோ, அல்லது சொல்லுக்கு சொல் பொருள் கண்டாலோ குட்டு வெளிப்பட்டு விடும்.

   நாம் இதனையும் அறிவியல்ரீதியாக அலசுவோம்.
   அறிவியலின் படி அடர்த்தி[density],உப்புத் தன்மை[salinity] மாறு படும் இரு திரவங்கள் கலக்க முடியாது, தனி, தனியாக இருக்கும், எண்ணெய் தண்ணீர் போல்!!!!

   சரி குரான் என்ன சொல்கிறது???
   55:19. அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
   55:20 (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.

   ***
   25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
   ***
   இந்த வசனக்கள் அடர்த்தி,உப்புத்தன்மை பற்றி சொல்லவில்லை!! மாறு பட்ட கடல்கள் பற்றி மட்டும் கூறுகிறது!!!


   அதாவது ஒரு கடல் சுவையான தண்ணீர், அடுத்தது கசப்பு தண்ணீர், இப்படி எந்த அடர்த்தி,உப்புத்தன்மை மாறுபட்ட இரு கடல்களும் அருகில் இருக்கவில்லை. உங்கள் நண்பரிடம் எது என கேளுங்கள்.

   குடிக்கும் தண்ணீர் கொண்ட ஆறு , கடலில் கல்க்கும் போது, கலக்கும் இடத்தில் தண்ணீர் சுவையாக இருக்கும். கொஞ்ச தூரம் சென்றால் மீண்டும் உப்பு சுவை வரும். ஆகவே இந்த வசனம் ஆறு, கட‌லில் கலப்பதை கூறுகிறது.

   இது எவருக்கும் தெரிந்த விடயம்தானே!!!

   ஆற்றுத் தண்ணீர் கடல் தண்ணீர் கலக்காது என் சொல்வோமா? சிந்திக்க மாட்டீர்களா??

   நன்றி!!

   Delete
  2. உங்கள் நண்பரிடமோ அல்லது குரான் விஞ்ஞானிகள் எவரிடமோ கடலில் வீணாக கலக்கும் ஆற்றுத் தண்ணீரை பிரித்து எடுத்து கொடுக்க சொல்லுங்கள், உலகின் குடிநீர் தண்ணீர்ப் ப்ஞ்சம் தீர்ந்து விடும்!!! ஹி ஹி

   Delete
 11. சகோ சார்வாகன்
  ஒரு சந்தேகம்
  ஏன் சனி பகவன் வாகனம் நீல நிறத்தில் இருக்கிறது
  எப்படி கிருஷ்ணனின் கரு நிறத்தை நீல நிறமாக மாற்றினார்களோ அப்படியா
  விளக்குவீரா

  ReplyDelete
  Replies
  1. சகோ சூரி,
   மதங்களில் குறியீடுகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. அவை எப்போது பயன்பாட்டுக்கு வந்த்ன என்பதையோ, குறியீடுகளின் விளக்கம்,குறியீடுகளோ எப்படி மாறுகிறது என அறிவது கடினம்.

   http://en.wikipedia.org/wiki/Shani
   Shani is a deva and son of Surya and his wife Chhaya, hence also known as Chayyaputra. He is the elder brother of Yama, the Hindu god of death, who in some scriptures corresponds to the deliverance of justice. Surya's two sons Shani and Yama judge. Shani gives us the results of one's deeds through one's life through appropriate punishments and rewards; Yama grants the results of one's deeds after death.[1]
   It is said that when Shani opened his eyes as a baby for the very first time, the sun went into an eclipse, which clearly denotes the impact of Shani on astrological charts. He is known as the greatest teacher and well wisher for the righteous as well the greatest punisher for those who follow the path of evil, betrayal, backstabbing and unjust revenge. He is depicted dark in colour, clothed in black; holding a sword, arrows and two daggers and mounted on a ""crow""", which is Shani's vāhana.

   இந்த விக்கியின் படி சனி சூரியனின் மகன், அவரது வாகனம் கழுகு அல்லது காகம்.இந்தியாவில் பல இடங்களில் கோயில் உள்ளது எப்படி எல்லா இடங்களிலும் சிதரிக்கப் படுகிறார்,அதன் விள்க்கம் என் பார்த்தால் ஒருஇத்து கருத்து வராது!!!

   மத குறீயீடுகள் பற்றி இனிமேல் கற்க வேண்டும்.
   டாவின்சி கோட் நாயகன் ராபர்ட் லாங்டான் குறீயீடுகள் பற்றி ஆய்வு செய்பவர்!!
   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   ஆத்திகனுக்கு விள்க்கம் தேவையில்லை நம்பிக்கை போதும், அவன் நம்பிக்கையை நாத்திகன் விள்க்க,புரிய படாத பாடு பட வேண்டும்.

   அப்படி கண்டுபிடித்து சொன்னாலும் , அது அவன் இல்லை என்பார்கள்!!

   நன்றி!!!

   Delete
 12. நானும் அவரது பதிவை வாசித்தேன், அவ்வவ்ப்போது புதிது புதிதாக பழைய விடயங்களோடு பதிவுலகில் வந்து விடுவதால், நாமும் பதில் சொல்லியே ஒய்ந்து போக வேண்டிய நிலைமை.. அறிவியல் கலந்த மூட நம்பிக்கைகள் இப்போது மக்களிடம் நன்றாக எடுபடுகின்றது என்பதால் பலரும் பலதையும் கிளப்பிவிட்டு கல்லாக் கட்டுகின்றார்கள், என்ன அவற்றை மறுதலித்து எழுதும் நம் போன்றோருக்குத் தான் தலைவலியாக இருக்கின்றது. கொடுமை என்னவெனில் இவ்வாறான போலி நம்பிக்கை விடயங்களை தமிழ் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிடுகின்றன என்பது தான். உங்களின் இப்பதிவு மிக அருமை. தொடர்க நும் பணி .. ! :)

  நவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் இன்றைய பெற்றோர்கள் :

  http://www.kodangi.com/2013/04/music-multivitamins-and-other-modern-education-myths.html

  நாமலும் கொஞ்சம் இதே போன்ற ஒரு பதிவை எழுதி இருக்கோம்.. :)

  ReplyDelete
  Replies
  1. அதே சகோ, நாம் ஊதும் சங்கை தொடர்ந்து ஊதுவோம்!!

   என்ன இருந்தாலும் பரிணாம் எதிர்ப்பு பதிவுக்கு மறுப்பு எழுதும் போது பதிவு அப்படியே அருள்வாக்கு மாதிரி பதிவு வரும்!!இதுவும் அவன் செயலா!! ஹி ஹி
   அந்த உணர்வுக்கு ஈடே கிடையாது!!

   எப்போ வருமோ பரிணாம எதிப்பு பதிவு?!!

   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
   நன்றி!!

   Delete
 13. நீங்கள் பிறந்தது துலாம் ராசியில். உங்களுக்கு இப்போது நடப்பது ஜென்மச்சனி, ஏழரை சனியில் மத்தியில் உள்ளீர்கள். உங்களுக்கு ஏழரை முடியட்டும். அப்போது உங்களது நிலை என்னவாக இருக்கும் என்று தெரியும்.

  நமது ஒரே இறைவன் எங்க ஊரு முனியாண்டிசாமிக்கு அனைத்தும் தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இராவணன்,

   நம் இராசி அது அல்ல. சிறுவயதில் கணித்த சோதிடம் எதுவும் நடக்கவில்லை.


   ஏன் சோதிடம் முழுதும் பலிக்காது என்பதற்கும் மதத்தில் ஒரு கதை உண்டு.

   முருகன் நன்றாக் சோதிடம் பார்ப்பாராம். தன் தந்தை சிவனுக்கு சோதிடம் பார்த்து ,உன் ம்னைவியை[அன்னை பார்வதி]பிரிவாய், சுடுகாட்டில் திரிந்து அலைவாய் என்றாராம்.

   அதே போல் மனைவி[ தட்சன் மகள் தாட்சாயனி] இறந்து , சுடுகாட்டில் பித்த்னாக அலைந்தது உண்மையாக சிவனுக்கு கோபம் வந்து, சோதிடம் இனிமேல் முழுதும் பலிக்க கூடாது என் சாபம் விட்டாராம்!!

   ஆகவே அய்யன் சிவன் சொன்னது சரி என்றால், சோதிடம் பலிக்காது!!

   சோதிடம் பலித்தால் அய்யன் சொல் பலிக்காது!!!

   http://www.onlyhinduism.com/2012/02/why-is-astrology-not-accurate.html


   சனி பகவான் நொண்டி ஆகவே எங்க ஆத்தா பார்வதி விட்ட சாபம்தான்!!

   http://www.pantheon.org/articles/s/sani.html

   Son of Surya (Sun-god) and Chaya. He is the planet-god of Saturn.
   There is a story explaining the malefic nature of this planet. Once, when Sani was in meditation, his wife approached him. But as Sani was deeply immersed in meditation, he did not notice her. She felt insulted and uttered a curse that whoever is aspected by Sani will meet with misfortune and destruction. Due to the effect of this curse, when Sani inapected Ganesha on one occasion, Ganesha died instantly. Ganesha's mother, Parvati became furious at her son's death and cursed that Sani would become lame. This accounts for the extremely slow movement of this planet.

   உங்களின் ஏக இறைவன் முணியாண்டி அய்யா இப்படி ஏதாவது சொல்லி இருக்காரா!!

   நன்றி!!!

   Delete
 14. ////உங்களின் ஏக இறைவன் முணியாண்டி அய்யா இப்படி ஏதாவது சொல்லி இருக்காரா!!////

  இதையே திருப்பி எழுதினால் உங்களின் ஏக இறைவன் முனியாண்டி என்றே எழுதவேண்டும்....எனவே எங்களின்...உங்களின் என்பதை விட்டுவிட்டு நமது ஒரே இறைவன் முனியாண்டி சாமி என்று சொன்னால் நலம்.

  முனியாண்டி சாமியை முணியாண்டி அய்யாவாக மாற்றவேண்டாம். அவர் எப்போதும் முனியாண்டி சாமி மட்டுமே.

  நாம் செய்வதை அவர்தான் முடிவு செய்கின்றார்,

  ReplyDelete
 15. முருகன்...சிவன்....என்பவர்களது கதைகளைப் படிக்க நன்றாக இருக்கலாம். முருகனும் சிவனும் நம்மைப் போன்ற மனிதர்களாக இருந்தவர்கள்.

  ஆனால் நம் முனியாண்டிசாமி எப்போதும் நமக்கு ஒரே இறைவன்.

  ReplyDelete
 16. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சுகவீன அண்ணாச்சியான நம் மாணிக்கம் அண்ணாச்சியிடம் கேளுங்கள்.

  அவர்களது குடும்பம் மொத்தமும் எங்கள் ஊர் முனியாண்டி கோவிலில் சாமியாடிவர்கள்.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. இரண்டு வருடங்களுக்கு முன்னரே என் நண்பரொருவர் இது ஜூனியர் விகடனில் வந்திருந்ததாக எனக்குச் சுட்டியிருந்தார். அதற்கு நானளித்த விளக்கம் கீழே. அதே போன்று முகநூலிலும் பரவலாக இதனைப் பதிவிட்டுக்கொண்டிருக்கின்றனர். என் கண்ணில் படும் இடத்திலெல்லாம் எனது இந்த விளக்கத்தினைப் பதிவிட்டுக்கொண்டிருக்கிறேன்.

  சற்று அறிவியல்பூர்வமாகச் சிந்திப்போமோ......
  1. ஒவ்வொரு செய்மதி(செயற்கைக்கோளு)க்கும் தனித்தனிச் சுற்றுப்பாதை உண்டு. ஒரு செய்மதியின் சுற்றுவட்டப்பாதைக்குள் மற்றொறு செய்மதி நுழைந்துவிடமுடியாது.

  2. ஒரு வேளை வெவ்வேறு உயரங்களில் சுற்றுவட்டப்பாதை அமையுமானால் கூட, இந்த திருநள்ளாறு பகுதிக்கு நேர்மேலே பல செய்மதிகளுக்கான சுற்றுவட்டப்பாதை அமையும் வாய்ப்பும் குறைவு. அப்படி அமைந்த செய்மதியின் பெயர் மற்றும் சுற்றுவட்டப்பாதையின் விபரங்கள் அறியக்கிடைக்குமா எனப் பாருங்கள்.

  3. பெரும்பாலும் நாடுகள் தத்தம் பகுதிகளைக் கண்காணிக்கும் வகையிலேயே செய்மதிகளை மேலே நிலை நிறுத்துவார்கள். அவற்றினை புவிநிலைச் செய்மதிகள் (Geo-Stationery Satellites) என்பர். அதாவது, புவியின் சுழற்சிக்கு ஒத்த வேகத்தில் அந்தச் செய்மதிகள் சுற்றிவரும். வல்லரசு மற்றும் சில நாடுகள் மட்டும், உளவு பார்ப்பதற்காகச் மற்ற நாடுகளின் மேலாகச் சுற்றிவருமாறும் சில செய்மதிகளை விடுவதுண்டு. ஆனால் அவைகளும் உளவு பார்த்தச் செய்திகளை உடனுக்குடன் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பிவிட இயலாது. தனது நாட்டின் மேல் வரும்பொழுது மட்டுமே பதிவு செய்யப்பட்ட செய்திகள், படங்களை அனுப்பிட இயலும்.

  அவ்வகையில் அமெரிக்காவின் செய்மதி தமிழகத்தின் மேல் சென்றுகொண்டிருக்கும் பொழுது செய்திகள் அனுப்பிக்கொண்டிருப்பது போன்றும், அது திருநள்ளாறு பகுதிக்கு மேல் வரும்பொழுது தொடர்பு அறுந்துவிடுவது போன்றும் கூறுவது ஏற்கத்தக்கதாகத் தெரியவில்லை.

  4. மற்ற நாடுகளை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்படும் செய்மதிகள் பொதுவாக நீள்வட்டப்பாதையில்தான் சுற்றிவருமாறு அதன் சுற்றுவட்டப்பாதை அமைக்கப்படும் எனப் படித்ததாக நினைவு. உளவு பார்க்கப்படும் நாட்டிற்கும், உளவு பார்க்கும் நாட்டிற்கும் அருகே ஒருமுறை வந்து போவது போல் அதன் பாதை அமைக்கப்படும். அதனை அண்மைநிலை (Perigee) என்பர். நீள்வட்டப்பாதையின் அதிகத்தொலைவில் இருப்பதை சேய்மை நிலை (Apogee) என்பர். அப்பொழுது செய்மதிக்கும் தரைத்தளக்கட்டுப்பாட்டு அறைக்கும் (Ground Control Room) தொடர்புகள் கூட ஏதும் இருக்காது.

  ஆக, இந்த அவர்சொன்னார், இவர் சொன்னார் என்பதும், இந்தப் பத்திரிக்கையில் வந்தது, அந்தப்பத்திரிக்கையில் வந்தது என்று கூறுவதும் படித்துச் சற்றுநேரம் இரசிக்கலாமே தவிர, உண்மை என்று நம்புமுன் ஆராய்ந்து பார்த்திடல் வேண்டும். செய்தியில் குறிப்பிடப்படும் ஜூனியர் விகடன் இது மட்டுமல்ல இன்னும் பல புருடாக்களையும் வெளியிட்டுள்ளது. ஆவிகள், சாமியார்கள், பறக்கும் தட்டு, அறிவில் விநோதங்கள் பெயரில் மக்களை முட்டாளாக்கியுள்ளது. வெளிநாட்டுப் பத்திரிக்கைச் செய்திகளையும் வெளியிட்டு அதனை ஆதாரமாகக் காண்பித்துள்ளது. நாமும் "வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்" என்று நம்பிவிடுவோம் என்று எண்ணியிருப்பர் போலும்.

  எனக்கு ஒரு சந்தேகம், திருநள்ளாறு பகுதியில் அலைபேசிச் சேவை உண்டா இல்லையா?

  இது போன்ற பெருமைகளை நமது சந்ததிக்கு எடுத்துச்செல்லவேண்டிய அவசியமில்லை. படிப்போம், இரசிப்போம், சிரிப்போம், இங்கேயே விட்டுவிடுவோம்.

  ReplyDelete