Wednesday, November 30, 2011

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப் படம் :காணொளி


பாகிஸ்தானின் இரட்டை வேடம் உலகறிந்த உண்மை .அதாவது அமெரிக்க ,மேற்கத்திய நாடுகளுக்கு ஆதவாக இருப்பது போல் நடித்து அவர்களிடம் இருந்து பண்ம,ஆயுத உதவிகளை பெறுவதும்,தலிபான்,காஷ்மீர் தீவிரவாதி உட்பட்ட பல குழுக்களுக்கு உதவி செய்வதும்தான் அவை.ஆளும் அரசு இராணுவம்+மத குருக்கள் கூட்டணியாஅலேயே கட்டுப் படுத்தப்படுகிறது.இபோதைய நாட்டோ படையினரின் குண்டு வீச்சும் இப்பின்புலத்தில் ,இதன் காரணமாக் நடந்ததுதான்.இதன் விளைவு என்னா ஆகும் என்பதை எளிதில் யூகிக்க்லாம்.நாட்டோ கொஞ்சம் கோபப்படுவது போல் பாகிஸ்தான் அரசு காட்டி பிறகு சமாதானம் ஆகி விடும்.ஏன் எனில் அவர்கள் உதவி இல்லாமல் பாகிஸ்தானால் நீடிக்க முடியாது.

பாகிஸ்தானின் இப்போக்கினால இந்தியா உடப்ட்ட பல நாடுகள் பாதிக்கப் படுவது மட்டுமல்லாமல் ,அதன் தீவிரவாதம் அதனையே அழிக்கத் தொடங்கி விட்டது.இதில் என்ன நகைச்சுவை என்றால் இச்செயல்களை ஆவணப் படுத்தும் எந்த முயற்சியையும் தடை செய்து விடுவார்கள். இந்த ஆவணப் படத்தில் சில தலிபான் தலைவர்களே பாகிஸ்தானின் செயல்களை விளக்குவதை பார்க்கலாம்.இது அக்டொபர் 2011 ல் ஒளிபரப்பிய போது பாகிஸ்தான் அரசு இதற்கு தடை விதித்தது.
கண்டு தெளியுங்கள்!!!!!!!!!!!

1
2

3

4
5
6

3 comments:

  1. /சிந்திக்க உண்மைகள். said...
    CLICK LINK AND READ./


    தேவையற்ற பின்னூட்டம் இடுவதால் பின்னூட்டம் நீக்கப் படுகிறது.வேலையில்லாமல் யார் யாருக்கு பிறந்தார் என்று அதிகம் சிந்திப்பது புரிகிறது. சிந்திக்க உண்மைகள் ஒரு காமெடி பீஸ்

    ReplyDelete
  2. நண்பரே.
    அரசுக்கு அப்பாற்பட்ட நடிகர்கள்???!!!(non-state actors) நல்லாவே ”சதி” செய்கிறார்கள். அவர்கள் செய்யும் சதி ”பெரிய” சதியை விட பெரிதாக இருக்கிறது. பாகிஸ்தானின் raisan d'etre இந்தியாதான். இந்தியா என்பது பாகிஸ்தானுக்கு ஒரு Obsessive–compulsive personality disorder மாதிரி!!!. அதை மனநல மருத்துவரிடம் காட்டி சரிப்படுத்தவேண்டிய விஷயம்.

    சதியை யார் வேண்டுமானலும் செய்யலாம். அமெரிக்கா சதி செய்ய ஆரம்பித்தால் பாகிஸ்தானே இருக்காது.

    எப்படியோ அவர்கள் செய்த சதி, வன்முறை என்ற வகையில் அவர்கள் மீதே திரும்புகிறது.

    காணொளிக்கு நன்றி

    ReplyDelete
  3. நண்பர் நரேன்
    அருமையாக சொன்னீர்கள்.பாகிஸ்தான் என்னும் நாடு இருத்தலே இந்தியாவை சார்ந்தே உள்ளது.இந்தியாவின் செயலுக்கு எதிர் செயல் புரிவது மட்டும் ஒரு நாட்டை உருவாக்கி விடாது என்பதை பாகிஸ்தான் இன்னும் புரிந்து கொள்ள வில்லை.
    இந்த அமெரிக்க ,மேலை நாடுகள் ஒரு (தீவிரவாத) இயக்கத்தை தங்களுக்கு வேண்டுமெனில் ஊட்டி வளர்ப்பார்கள்.வேலை முடிந்த பின் அவர்களே அழித்தும் விடுவார்கள்.அவர்களுக்கு ஒன்று நாட்டின் இயற்கை வளங்கள் சுரணட அனுமதிக்கும் அரசு[எ.கா சவுதி,குவைத்] வேண்டும் அல்லது சொன்னதை செய்து முடிக்கும் அடிமை அரசு[முன்னாள் பாகிஸ்தான்,இராக்] வேண்டும்.பாகிஸ்தான் தலிபானுக்கு எதிராக முழு மூச்சில் இறங்காதவரை இந்த சிக்கல்கள் தொடரும்.தலிபானுக்கு எதிராக இறங்கினால் மத வாத சக்திகளால் உள்நாட்டு பொர் ஏற்படலாம். பாகிஸ்தானுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை கூர்ந்து கவனிப்போம்.
    கருத்துக்கு நன்றி!!!!!!!!!!!

    ReplyDelete