Monday, May 28, 2012

பெரு விரிவாக்க கொள்கையின்[Big Bang Theory] கதை: பகுதி 1


வணக்கம் நண்பர்களே,

எந்த ஒரு பொருளுக்கும்,செயல்,விடயத்திற்கும் ஒரு வரலாறு இருப்பது அனைவரும் அறிவோம்.பேரண்டத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒன்றுக் கொன்று தொடர்புடையது& சார்ந்தது என்பதும் அவைகளை காலத்தோடு வகைப்படுத்திக் கூறுவதே வரலாறு.இதற்கு அறிவியலும் விதி விலக்கு அல்ல.ஒவ்வொரு அறிவியல் கொள்கையாக்கமும்,நிரூபணமும் கூட வரலாற்றின் படி அறிந்து கொள்ள வேண்டியவை.

நம் கல்வி முறை பாட புத்தகங்களில் '' என்பவர் '' என்னும் கொள்கையை ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________ என்னும் ஆண்டு கண்டுபிடித்தார் ,அல்லது நிரூபித்தார் என மட்டுமே இருக்கும்.அதனை மனனம் செய்து ஒரு மதிப்பெண் கெள்விக்கோ அலது ஏதேனும் தொலைக்காட்சி போட்டியில் பதில் அளிக்க மட்டுமே பயன்படும் விடயம் ஆகி விடுகிறது.

இசையில் எதுவும் புதிதில்லை என இசை மேதை இளையராஜா கூறுவது இசைக்கு மட்டுமல்ல அறிவியலுக்கும் பொருந்தும்.அறிவியலில் பெரும்பாலான கொள்கைகள் முந்தைய கொள்கைகளின் மீதான சிறு மாற்றங்கள் மட்டுமே.நாம் நமது முன்னோர்களின் தோள்கள் மீது நிற்பதால் அவர்களை விட உயரமாக எண்ணுகிறோம்.

காட்டுமிராண்டியாக திரிந்த மனித இனம் ஓரிடத்தில் வாழ பழகியதும்,விவசாயம்[பொ.ஆ 15,000] உள்ளிட்ட பல் தொழில்கள் உருவானதும்,சமூக அமைப்புகள் ,சட்டதிட்டங்கள் ஏற்பட்டதுமே மனித குலத்தின் உண்மையான வரலாறு.

மனித குல முன்னேற்ற‌ம் என்பது எப்போதும் சீராக ஒரே திசையில் நடைபெற்ற‌து இல்லை.தட்டுத் தடுமாறி பல் முயற்சிகளை பரிசோதித்து அதில் சில் வெற்றி பெற்று,அதனை நடைமுறையில் பயன்படுத்தி வாழ்வின்  முன்னேற்றமாக மாறும்.

இது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும் என்றாலும் அறிவியலுக்கு குறிப்பாக பெரு விரிவாக்க கொள்கையின் கதையில் இதனை பார்க்க போகிறோம்.

எதற்கு இவ்வளவு தத்துவம் கதை கூறினோம் எனில் இந்த கொள்கைகளை வரையறுக்கவே.

1.அறிவியலின் பெரும்பாலான கருத்துகள் முந்தைய கருத்தின் மீதான பல தொடர்ச்சியான வளர்ச்சிகளின் சில உறுதிப் படுத்தப் பட்ட‌ வாய்ப்புகள்.

2. அறிவியல் என்பது ஒரு தொடர் பயணம்.

சரி பதிவுக்கு செல்லலாம். பெருவிரிவாக்க கொள்கை என்பது பேரண்டத்தின் தோற்றத்தை விளக்கும் இப்போதைய அறிவியல் கொள்கை.

பேரண்டத் தொற்றம் என்பது மனிதனுக்கு நெடுங்காலமாக்வே ஈடுபாட்டை ஏற்படுத்திய ஒரு விடயம்.எப்படி இந்த பேரண்டம் ,புவி,உயிரினங்கள் உருவாகின எனற பல் வகை சிந்தனைகளையும் ஒவ்வொரு மனித இனக்குழுவின் மரபு வழிக் கதைகளில் பல தரப்பட்ட சிந்தனைகளை அறிய முடிகிறது.

பேரண்ட தொற்றம் பற்றிய பல மரபுக் கதைகளை இந்த காணொளியில் பாருங்கள்.இது பற்றி விவாதிக்க விரும்பவில்லை.இதுவும் ஒரு தேடல் அக்கால் மனிதர்கள் தங்களால் இயன்றவரை  கேள்விகளுக்கு விடை அளிக்க முயன்றனர் என்ற விதமாகவே பார்க்கவேண்டும்.


அப்படி அவர்கள்  சிந்திக்க முற்பட்டதால்தான் அவையே பல் அறிவியல் முன்னேற்றங்களுக்கு வித்திட்டன எனவே கூறுகிறோம்.


கிரேக்க அறிஞர்கள் அரிஸ்டார்ர்டில்,டாலமியில் இருந்து கலிலியோ கெப்ளர்,நியுட்டன் வரை படிப்படியான் அறிவியலில் நடந்தவற்றை கூறலாம்  எனினும் அவை பெரும்பாலானவர்கள் அறிந்த விடயம் என்பதால் தவிர்க்கிறோம்.இப்பதிவில் இந்த பெருவெடிப்பு (விரிவாக்கம்) என்னும் கொள்கை எப்படி அறிவியலில் ஏற்றுக் கொள்ப்பட்டது ,அதன் சான்றுகள்,சிக்கல்கள் பற்றியே அறிய விழைகிறோம்.

ஐன்ஸ்டின் 1916ஆம் ஆண்டு தன் பொது சார்பியல்[General Relativity] என்னும் புதிய ஈர்ப்பு விசை கொள்கையை வெளியிடுகிறார்.இது ஈர்ப்பு விசையை காலம் ,வெளி சார்ந்த அமைப்பாக வடிவமைத்தது.

அந்த சமன்பாடுகள் பற்றியே ஒரு சில பதிவுகள் எழுத வேண்டும் என் ஆசை உண்டு எனினும் ,அதை விள்க்க பல கணிதக் கோட்பாடுகள் தேவை.இபோதைக்கு அவை முப்பரிமாண வகைக்கெழு சமனபாடுகள் என வைத்துக் கொள்வோம்.அந்த சமன்பாடுகளை  பார்க்க விரும்பும் நண்பர்கள் இங்கே செல்லவும். .


வகைக்கெழு சமன்பாட்டை தீர்க்க தொடக்க அல்லது எல்லைத் தீர்வுகள்[boundary conditions] தேவைப்படும் என்பதை அறிவோம்.அப்படி எடுக்கும்போது பேரண்ட மாறிலிக்கு[cosmological constant] சூன்ய மதிப்பு கொடுத்து ஐன்ஸ்டின் இச்சமன்பாடுகள்க்கு தீர்வு கண்டார்.அப்போது பேரண்டம் நிலையாக் இருப்பதாக விள்க்கம் அளிக்க முடிந்தது.இது தன்னுடைய மிகப்பெரிய தவறு என ஐன்ஸ்டின் கூறுவார். இந்த மாறிலி பற்றி அடுத்த பதிவில் எளிமையாக விள்க்கி விடுவோம்.இப்பதிவில் வேண்டாம்.


20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த பேரண்டம் நிலையானதா அல்லது விரிவடைகிறதா என்னும் விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.அபோதைய அறிவியல் கருவிகள் மூலம் நமது பெருவெளித் திரள் தவிர பிறவற்றை அறியும் அளவில் இல்லை.  


இந்த பெருவெடிப்பு[Big Bang] என்னும் சொல்லை முதலில் உருவாக்கியவர் ஃப்ரெட் ஹோய்ல் எனப்படும் கேம்பிரிட்ஜ் பல்கலை கழக் கணித மேதை.இவர் நிலையான பேரண்டம்[Static Universe] என்னும் கொள்கைக்கு ஆதரவான அறிவியலாளர்.இந்த விரிவடையும் பிரபஞ்சம் என்பதை கேலி செய்ய இந்த Big Bang பதத்தை பயன்படுத்தினார் என்பது நமக்கு வியப்பான விடயம்.

இந்த காணொளி பெருவெரிவாக்க கொள்கையின் வரலாறு ,பல அம்சங்களை விள்க்குகிறது.இன்னும் பல் சுவையான விடயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.



(தொடரும்)

11 comments:

  1. அறிவியலில் பெரும்பாலான கொள்கைகள் முந்தைய கொள்கைகளின் மீதான சிறு மாற்றங்கள் மட்டுமே.நாம் நமது முன்னோர்களின் தோள்கள் மீது நிற்பதால் அவர்களை விட உயரமாக எண்ணுகிறோம்.

    சிறப்பான சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. நன்றி சகோ
    இராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  3. அருமையான பதிவு மாற்றம் ஒன்றுதான் மாறாதது தோழரே,இன்னும் இதுபோல் நிறைய எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்..

    அன்புடன் இனியவன்.....

    ReplyDelete
  4. சிரப்பான பகிர்வு.இது போன்ற பதிவுகள் குறைவே.தொடர்வேன்

    ReplyDelete
  5. வருகை பதிவேடு

    ReplyDelete
  6. உங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்ததுநேரம் இருப்பின் வாசிக்கவும்.
    http://blogintamil.blogspot.in/2012/06/2.html
    நன்றி.

    ReplyDelete
  7. அறிய வேண்டிய விடயங்கள்.
    தந்ததற்கு நன்றி

    ReplyDelete
  8. கருத்திட்ட சென்னை பித்தன் அய்யா,சகோதரர்கள்,இனியவன்,ஜோதிஜி,முரளி,முருகானந்தம் ஆகியோருக்கு நன்றி.

    பணி கொஞ்சம் அதிகம் என்பதால் தொடர்ந்து எழுத இயவில்லை.வாரம் ஒன்றாவது தொடர்ந்து எழுத முயல்கிறேன்.
    சகோ முரளி உங்களின் ஊக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  9. Dont stop your writing . Brother plz Continue valuble writing

    ReplyDelete
  10. The Qur'an and the Big Bang Theory (Debunked)!
    http://www.answeringmuslims.com/2012/06/quran-and-big-bang-debunked.html

    http://www.youtube.com/watch?v=VftgbI8bMFU&feature=player_embedded
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=OOgKiAsb5l4

    The Qur'an and Modern Science: Talking Ants?
    http://www.youtube.com/watch?v=vG8xGsoS6N8&feature=player_embedded

    ReplyDelete