Wednesday, July 25, 2012

போட்டி போடுவதா? போராட்டம் செய்வதா?




உலகில் வாழும் கோடிக்கணக்கான் உயிரினங்களில் மனிதனுக்கு இருக்கும் பிரச்சினைகள் மற்றஉயிரினங்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.பிற உயிர்கள் ,இயற்கையின்  ஒரே பிரச்சினை மனிதனின் பேராசை என்றால் மிகையாகாது. பிற உயிரினங்களின் வாழ்வாதாரத்தை,இயற்கை சூழலை அழிப்பதில் மனிதனின் பங்கு மகத்தானது.மனிதனுக்கு இருப்பதாக கருதப்படும் உபரி அறிவு பெரும்பாலும் இந்த நோக்கிலேயே பயன்படுத்தப்படுகிறது.

சரி புலம்பலை நிறுத்தி பதிவுக்கு வருவோம்.இப்போதைய நடைமுறை வாழ்வில் இரு வகையான பொருளாதார கொள்கைகள் உள்ளதாக சொல்லலாம்.

1. சந்தைப்  பொருளாதார முதலாளித்துவ வலதுசாரிக் கொள்கை

2.பொது உடமை இடது சாரிக் கொள்கை.

இந்த இரண்டுமே ஆத்திகர் ,நாத்திகர் வித்தியாசம் போல்,விவாதம்,விமர்சனம் என்று போகும் ஒரு தொடர்கதை.இந்த இரண்டையும் பற்றி சுருக்கமாக அறிவதே இப்பதிவின் நோக்கம்.

சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு அம்சமான விலை நிர்ணயம் பற்றி முந்தைய பதிவு ஒன்றின் பார்த்தோம். உலகளாவிய சந்தைப் பொருளாதார முறையில்  என்ன சொல்கிறார்கள்   ?

1.சட்டம் ஒழுங்கு போன்ற சில இன்றியமையா துறைகள் தவிர அனைத்துமே தனியார் வசம் இருக்க வேண்டும்.

2.தொழில்,வியாபாரம் தொடங்க எல்லைகள்,விதிகள்  இருக்ககூடாது அல்லது மிக குறைவாக இருக்க வேண்டும்.

3.பொருளாதாரம் என்பது சுழற்சி முறையிலானது.ஏற்றம் இறக்கம் போன்றவை இயல்பான விடயங்களே.

4. போட்டி என்பது தனி மனிதனில் ஆரம்பித்து ,நாடுகள் வரை இருந்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும்.

ஆகவே போட்டி போடுவதே இதன் இயல்பு.போட்டி இட முடியாதவர்களுக்கு சில சலுகைகளும் வ்ழங்குவதாகவும் சில அம்சங்கள் உண்டு
.******************

சரி இடதுசாரி பொது உடமை என்ன சொல்கிறது?

1.மனித சமுதாயம் வரலாற்று ரீதியாக முதலில் தனியுடமை கொண்டதாக இருக்கவில்லை. விவசாயம் சார்ந்து ஒரு இடத்தில் வசிக்க முறப்ட்ட போதே தனியுடமை வந்தது.பிறகு அடிமை முறை,பிரபுத்வம்,அரசாட்சி,ஜனநாயகம் என பல் மாற்றங்களை ஏற்றது.அவ்வகையில் பொது உடமை என்பதும் அடுத்தநிலை ஆகும்.இதனை தவிர்க்க இயலாது.

2. உலகிற்கே இது பொருந்தும் எனினும் ஒரு நாட்டில் உள்ள இயற்கை வளம்,சொத்துகள் னைத்தும் அரசின் வசம் இருக்கும்.

3.அனைவருக்கும் வாழ்வாதாரம்,கல்வி சுகாதாரம் போன்றவை அரசினால் வழங்கப் படும்.



இது இந்நூற்றான்டின் தொடக்கத்தில் சில நாடுகளில் அமலுக்கு வந்து பல சாதனைகள் செய்ததாக சொல்லப் பட்டாலும், வந்தது போலவே மறைந்தது அல்லது பல மாற்றங்கள் கண்டது.

இபோதைய பொது உடமை நாடுகள் என்று தங்களை அழைக்கும் சீனா,கியுபா சந்தைப் பொருளாதரத்தின் பல அம்சங்களை பயன்படுத்துகின்றன.

பொது உடமைக் கொள்கையின் மேல் விமர்சனம் வைப்பவர்கள் பலர் இது மனித இயல்புக்கு மாறானது என்பதையே முதன்மையாக்குகின்றனர்.அதாவது போட்டி போடுவது மனித இயல்பு  போட்டியை மறுக்கும் பொது உடமை இயல்புக்கு மாறானது என்பதே வாதம்.ஆகவே போட்டி போட்டு முன்னெறுங்கள் என்பது வலது சாரி வாதம்!!!!!!!!!!!!!!

போட்டி என்பது நியாயமாக நடந்தால் பரவாயில்லை,வலியோர் அரசியல்வாதிகளின் துணையோடு இயற்கை வளங்களை சுரண்டித்தானே தொழில் நடத்துகின்றார். இயற்கை வளம் வேண்டி காலம் காலமாக வாழும் நிலத்தை பிடுங்குகிறார்,இயற்கை வளம் உள்ளநாடுகளில் பிரச்சினை ஏற்படுத்தி சமாதானம் பேசுவது போல்  ஆக்கிரமிப்பு செய்து சுரண்டுகிறார்.ஆகவே போராடுவோம் என்பது இடதுசாரி வாதம்.

சரி நாம் என்ன சொல்கிறோம்?

நாம் இபோது ஒரு 75% சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாக் கொண்ட ஜனநாயக மத சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம்.

சர்வரோஹ நிவாரணி என்பது இருக்கவே முடியாது.ஆகவே எதனையுமே அப்படி ஏற்க முடியாது.

போட்டி போட்டு வரும் மன அழுத்தத்தால் கொலை,தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன.ஆகவே போட்டி மனப்பானமை அடிப்படையிலான கல்விமுறை நிச்சயம் மாற்றப் படவேண்டும்.

தனியுடமை என்பது ஒழிக்க முடியாது எனினும் ,உச்ச வரம்பு அமல்படுத்துவது நல்லது.

மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு,அது சார் நடவடிக்கைகள் தேவை.

அரசியல் பணிக்கும் கால வரம்பு. [.கா ஒருவர் அதிகபட்சம் 10 or 15 வருடம் மட்டுமே  சட்ட மன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் எனில் பல புது முகங்கள் பதவிக்கு வரும் வாய்ய்பு உண்டு.வாரிசு அரசியல் ஒழியும்]

போராட்டம் என்பது வன்முறையில் முடியும் வாய்ப்பு அதிகம்,ஆதிக்க ஆளும் சக்திகளுக்கு இதனை தங்களுக்கு சாத்கமாக மாற்றும் வித்தை கற்று பல வருடம் ஆனதை போராடு என ஊக்குவிப்பவர்கள் அறியவில்லை.

பலர்  போராட்டம் என பல இழப்புகளை சந்தித்ததும் அறிவோம்.அதன் பலன் யாருக்கோ செல்லும்.

மாற்றம் என்பது சிறிது சிறிதாக அடிமட்டத்தில் இருந்தே வரவேண்டும்.ஒவ்வொருவரும் தனக்கு சாதகமானதை மட்டும் விவாதிப்பதும் இயல்பானது.இந்த போட்டி,போராட்டம் இரண்டும் நம்மையும் பாதிக்கும் விடயங்கள் என்பதாலேயே விவாதிக்கிறோம்.

ஜனநாயகத்தினால் எங்களுக்கு கிடைத்த கொஞ்ச உரிமைகளையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது!!!!!!!!!!!!!!!!!!.

இதுதான் செய்ய வேண்டுமென யாராலும் சொல்ல முடியாது.ஆனால் இது குறித்த ஆக்கபூர்வமா விவாதங்கள் சில நடைமுறைகள் இப்போது இருக்கும் சூழலில் செய்ய முடியும்..

நம் வீட்டு குழந்தைகள்,இளைஞர்களை போட்டி என்பதில் இருந்தும் போராட்டம் என்பதில் இருந்தும் சரியான புரிந்துணர்வு கொள்ளசெய்வோம்.

போட்டியல்ல நட்போடு பகிர்வோம்

போராட்டமல்ல ஆக்கபூர்வமான படிப்படியானமாற்றம்

டிஸ்கி

சி அறைக்குள் உட்கார்ந்து  இப்படித்தான் எழுதுவான்கள் என்ற குரல் நமக்கு கேட்கிறது.நாம் மனித உயிர்கள் எதன் காரணமாகவும் பலி ஆகக்கூடாது.நம் வீட்டு குழந்தைகள் போட்டியினால் போராடுகிறார்கள் என உணர்ந்ததால் உரைக்கிறோம்.

நம் கருத்தை மறுக்க என்னை திட்ட சகலஉரிமைகளும் நம் சகோக்களுக்கு உண்டு!!!!!!!!!!!!!!!

உங்களின் கருத்தை நான் மறுக்கலாம் ,ஆனால் அக்கருத்து கொள்ளும் உரிமையை ஆதரிக்கிறேன்: வால்டய்ர்


நன்றி!!!!!!!!!!!!!!!!!!

14 comments:

  1. தெரியாமத்தான் கேட்கிறேன். What is your 'field of interest'?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா

      நாம் தேடுவது,எழுதுவது இயற்கை சார்ந்து மட்டுமே ,இயற்கை சாரா வாழ்வு அழியும்.

      போட்டி போடுங்குறான் ஒருத்தன், போராடுங்குரான் இன்னொருத்தன்.சத்தம் காதை அடைக்குது!!!!!!!!!!!!!!!!!!!.

      அழியும் வாழ்வில் இயல்பாக அமைதியாக வாழ வழி தேடுகிறேன்

      முடியுமா?

      அவ்வளவுதான்!!!!!!!!!!!!!!!!

      நன்றி

      Delete
    2. நீங்க கமலஹாசனா இல்லை அவரல இன்ஸ்பயர் ஆனாவரான்னு தெரியல! பெரிசு பெரிசா ஏதேதோ சொல்லுறீங்க. ஆனா சில நேரத்துல என்ன சொல்லுறீங்கன்னு புரியத்தான் மாட்டீங்குது. What is your 'field of interest'? அப்புடீங்கற தருமி ஐயா கேள்விக்கு உங்க பதில படிச்சதும் எனக்கு தோனுணது இது, 'சார்வாகன் சார் எழுத்துக்கு எவனாவது கோனார் நோட்ஸ் போட்டன்னா கண்டிப்ப அவன் பெரியளாயிடுவான்!' ;-)

      Delete
  2. அருமையான பதிவு.
    //பலர் போராட்டம் என பல இழப்புகளை சந்தித்ததும் அறிவோம்.அதன் பலன் யாருக்கோ செல்லும்.
    ஜனநாயகத்தினால் எங்களுக்கு கிடைத்த கொஞ்ச உரிமைகளையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது!!!!!!!!!!!!!!!!!!.//
    பொன் மொழிகள்.

    //போட்டி மனப்பானமை அடிப்படையிலான கல்விமுறை நிச்சயம் மாற்ற‌ப் படவேண்டும்//
    நிச்சயமாக ஆனால் போட்டி மனப்பானமை அடிப்படையிலான கல்விமுறை மனப்பானமை இந்திய பிரதேச ஆசிய பெற்றோர்களிடமே மோசமாக இருக்கிறது. பிள்ளைகளை பலிடபடுப்போகும் ஆடுகள் மாதிரி கல்வி கற்ப்பிக்கிறார்கள். இதர சந்தைப் பொருளாதார நாடுகளில் இப்படியில்லை.
    //இடதுசாரி பொது உடமை என்ன சொல்கிறது?
    அனைவருக்கும் வாழ்வாதாரம் கல்வி சுகாதாரம் போன்றவை அரசினால் வழங்கப்படும்//
    முன்னாள்,இந்நாள்?!இடதுசாரி பொது உடமை நாடுகளில் வழங்கபட்டதை விட எத்தனையோ மடங்கு சிறப்பாக முதலாளித்துவ நாடுகளில் மக்களுக்கு வாழ்வாதாரம் கல்வி சுகாதாரம் போன்றவை வழங்கபட்டுள்ளது. இந்தியாவிலும் அது மாதிரி வழங்கபட வேண்டும்.அது தான் தேவையே தவிர இடது சாரியம் அல்ல

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவு நண்பரே எந்த ஒரு சப்ஜெக்ட்டாகிலும் அதை எடுத்துச் சொல்வதில் திறமை மிகுந்த பதிவர்களில் குறிப்பிடும்படியாக மிகச் சிலரே உள்ளனர்,அதில் சார்வாகன்,இக்பால் செல்வன்,தருமி,நரேன் போன்ற பகுத்தறுவிகள் என்னைக் கவர்ந்தவர்களில் முக்கியமானவர்கள்.ஆனால் சார்வாகன் நீங்கள் கூடுதலாகவே தேறிவிட்டீர்கள்.

    இனியவன்....

    ReplyDelete
  4. வணக்கம். மார்க்சியம் பற்றித் தெரியாது எனினும் என்னைப் பொறுத்த வரை இடதுசாரிகளே சரி என்பது என் கருத்து. அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், அனைவருக்கும் வேலை, முக்கியமாக இயற்கையை பேணிக்காத்து வாழ்வது இதெல்லாம் வலதுகள் அனுமதிக்காது என்பதே நடப்புக்களிலிருந்து தெரிகிறது. இடதுசாரி அல்லது வலதுசாரி இல்லாமல் நடுநிலை வகிக்கிறோம் என்றால் அது நிச்சயம் வலதுசாரிகளுக்கு ஆதரவாகவே முடியும். இடதுசாரி நாடுகள் என்றால் சீனா அல்லது வட கொரியா மாதிரயான மூச்சு முட்டும் அளவுக்கு அடக்குமுறை அதிகமாக இருக்கின்றன. பெயரளவில் கம்யூனிச்ம் ஒட்டி கொண்டிருந்தாலும் சீனாவும் கம்யூனிசத்தை கைவிட்டு முதலாளித்துவத்திற்கு மாறி விட்டது. க்யூபாவும் சில பொருளாதார சீர்த்திருத்தங்களைச் செய்கிறது. குறைந்தபட்சம் அனைவரின் வாழ்வாதாரம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது நம் தேவை. இதற்குத் தனியுடைமை எப்படி ஒத்துக் கொள்ளும். இந்த ஜனநாயம் என்பது குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வாய்க்கிறது.

    ReplyDelete
    Replies
    1. @ தமிழானவன் - உங்களின் கருத்துக்களில் நான் முரண்படுகின்றேன். மார்க்ஸ் மனிதக் குலத்துக்கும் உழைக்கும் வர்க்கத்துக்குமான புதிய சித்தாந்தத்தை உருவாக்கினார் ... ஆனால் அவை இறுக்க நிலையில் கடைப்பிடிக்கப்பட்ட போது உடைந்துவிட்டது, ஆனால் பொருள்முதல்வாதக் கொள்கையை இன்றைய கம்யூனிச சீன எடுத்து ஒரு புதுவிதமான இடது - வலது கொள்கையைக் கொடுத்துள்ளது .. அங்கு மனித உரிமைகள் குறைப்பாடுகள் இருந்தாலும் ... மனித ஒற்றுமை, வறுமை ஒழிப்பு, தொழில்வாய்ப்பளிப்பு, கல்வி முன்னேற்றம் ஆகியவற்றை அருமையாக தந்துள்ளது.

      அதே வேளை நீங்கள் சொல்வது போல

      ......அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், அனைவருக்கும் வேலை, முக்கியமாக இயற்கையை பேணிக்காத்து வாழ்வது இதெல்லாம் வலதுகள் அனுமதிக்காது என்பதே நடப்புக்களிலிருந்து தெரிகிறது. ......

      இல்லை இது தவறான அபிப்பிராயமே ஆகும் .. கனடாவை எடுத்துக் கொள்வோம் இங்கு அனைவருக்கும் இலவசப் பள்ளிக் கல்வி கிடைக்கின்றது, பூரண இலவச மருத்துவம் - தனியார் மருத்துவமனைகள் இல்லை, இயற்கையை பேணிக்காப்பதில் கனடாவின் பங்கு முன்மாதிரியான ஒன்றாகும் .... கனடா ஒரு முதலாளித்துவ நாடே ஆகும், பொருள்முதல்வாத தனியுடமை கொள்கைகளை கொண்ட நாடாகும் .. ஆனால் வறுமையில் உழன்றால் சோசியல் உதவித் தொகை கிடைக்கின்றது, உலக அகதிகளின் சொர்க்கம் இது, அகதிகளை வாரி அணைத்துக் கொள்கின்றது, சமத்துவம் சம உரிமை பேணுகின்றது .. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை வெகுவாக குறைத்துள்ளது ...

      ஆகவே வலதுகளால் முடியாது என்றுமில்லை .. அதே போல இடதுகளால் முடியாது என்றுமில்லை ... வலது இடது இரண்டையும் சம அளவில் பயன்படுத்தலாம் .. ஆனால் வலதில் இடதின் குணம் கொண்டதாக கனடாவும், இடதில் வலது குணம் கொண்டதாக சீனாவும் இருப்பதே இதற்கான சான்று ,,

      ஆனால் ரெண்டும் கெட்டான் என்று தன்னை பெருமையடித்த உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இன்று ரெண்டின் தீயவைகளை மட்டும் தனதாக்கி மக்களை கருக்கி வருகின்றது !!!

      Delete
  5. வணக்கம் நண்பர்களே,

    சகோ நந்தவன‌த்தான்,சகோ குயிக்ஃபாக்ஸ்,சகோ இனியவன்,சகோ தமிழானவன்
    உங்களின் கருத்துகள்க்கு நன்றி.சில பகிரல்கள்.

    சகோ நந்தவன‌த்தான் நன்கு அவதானிப்பு செய்கிறீர்கள்.நம்க்கு பிடித்த விடயம் இயற்கை சார் வாழ்வு.ஆனால் இதனை சரியாக வரையறுப்பதுதான் சிக்கல்.
    Learning from nature" OK!!!!!!
    *******
    பதிவில் முதலில் கூறியது போல் மனிதனுக்கு மட்டுமே அதிக பிரச்சினைகள்.இதன் காரணம் அவன் இயற்கைக்கு ஏற்றபடி வாழாமை என சொல்ல முடியும்.விலங்குகளும் போட்டி போடுகின்றன,போராடுகின்றன‌, ஆனால் அவற்றின் தேவை எளிதில் தீரக்கூடியதாக் இருப்பதால் அதிக பிரச்சினை இல்லை

    நம் இயல்பு என்ன? இதன் விடை தெரியாமல் நம் சமூக பிரச்சினைகளை தீர்க்க இயலாது.நம்மிடம் இன்னும் குழு மன்ப்பானமை உண்டு.நம் குழுவிற்குள் ஒற்றுமை +விகிதாச்சார பகிர்வு,பிற குழுக்களுடன் வெற்றுமை+போட்டி.

    அனைவரும் ஒரே குழுவாக்குவது பொது உடமை எனினும் இது தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரையும் ஒரே மாதிரி பாவிப்பவர்களாக,தனிப்ப‌ட்ட விருப்பு வெறுப்பு அற்றவர்களாக‌ இருப்பின் மட்டுமே சாத்தியம்.இப்படி தொடர்ச்சியான தலைவர்கள் பதவிக்கு வருவது முடியுமா?

    இதனை பொது உடமையில் எப்படி சரி செய்ய இயலும்?.

    சந்தை பொருளாதாரம் கூட்டுக் குடும்பம் என்ற அளவில் கூட குழுக்களாக இயங்க அனுமதிப்பது இல்லை.கணவன்,மனைவி,குழந்தைகள் மட்டுமே குழு ஆகின்றனர்.இம்ம்முறை சுழற்சி முறையின் பால் பட்டது என்பதால் இதில் பொருளாதார ரீதியாக பலர் அடிக்கடி பாதிக்கப்படுவர்.

    மார்க்ஸ் சொன்னார்,டார்வின் சொன்னார்,'அஆஇஈ" சொன்னார் ஆகவே அது சரி என்று சொல்வதை தவிர்த்து எப்படி பெரும்பானமையான(99.9999%) மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு அரசியலமைப்பு வாழ்வு முறை இயற்கை சார்ந்து அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.அந்த அமைப்பு சூழலுக்கு ஏற்ற மாற்ற‌ங்களை ஏற்பதாகவும் இருக்க வேண்டும்.

    இவ்வகையில் சில சமூக பரிசோதனைகள் மூலமே இந்த அமைப்பை காண முடியுமே தவிர விவாதித்து அல்ல!!!இயற்கை சார் சமூக அறிவியலுக்கும் முதனமை இடம் வேண்டும்.

    நன்றி

    ReplyDelete
  6. மிகவும் அருமையான பதிவு .. குறிப்பாக பொருளாதார விடயங்கள் என்னைக் குழப்புவன .. அதில் எனக்கு ஞானம் கம்மியே !!! ஆனால் எளிமையாக யாராவது சொன்னால் விரும்பிப் படிப்பேன். அப்படியான எளிமை உங்களிடம் நிறைய இருக்கு ..

    பொருள் முதல்வாதம் அல்லது தனியுடமை என்பது இன்றியமையாதது ... பூரண பொதுயுடமை கொள்கைகள் தோல்வியிலேயே முடிந்தன .. பொதுயுடமை நாடுகளான சீனாவே இன்று பொருள் முதல்வாதத்தினை சுவீகரம் செய்து கொண்டது ... !!!

    ஆக சந்தை மயப் பொருளாதாரம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கவே செய்யும் என நினைக்கின்றேன் .. ஆனால் சந்தை மயப் பொருளாதாரத்தில் ஒரு செக் வைக்க வேண்டும், தனியுடமையில் உச்சவரம்பு வேண்டும், எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்பதை உணரவேண்டும் !!!

    சந்தைமயப் போக்கால் ஒரு தனி மனிதனின் அடிப்படைத் தேவைகளும், உரிமைகளும் பறிப் போகக் கூடாது .. அதே வேளை நாம் வாழும் உலக வளங்களை சுரண்டித் தள்ளக் கூடாது .. நாம் பொறுப்பற்ற வியாபாரியாக இல்லாமல் பொறுப்புடைய வர்த்தகர்களாக இருத்தல் வேண்டும் !!!

    தொடர்க ...

    ReplyDelete
  7. அருமையான பதிவு,

    பூரண பொருள்முதல்வாதமான Laissez-faire மற்றும் பூரண பொது உடைமை கொள்கைகளை நடைமுறைபடுத்தமுடியாது. அதனால் தான் இரண்டு கொள்கைகளில் வகைகள் வந்தது.
    மனிதனிக்கு எல்லா தேவைகளுடன், தனிமனித சுதந்திரம் என்பது தேவையானது. அந்த சுதந்திரத்தை அதிக காலத்திற்கு அடக்கி வைக்கமுடியாது. ஜனநாயகம் கொள்கையில் தான் அந்த சுதந்திரத்தை அடைய முடியும் என்பது நிதர்சனம். மற்ற தேவைகள் பூர்த்தியானவுடன், மக்கள் தனிமனித சுதந்திரத்தையே நாடுவார்.
    அதனால் கால்த்திற்க்கு ஏற்ப அதன் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகளை பின்பற்றினால் நலம்.
    வரலாற்றை எடுத்துக்கொண்டால், வரலாறு என்பது வர்க்கப் போராட்டம், தனிமனித சுதந்திர போராட்டம், மத போராட்டம் போன்ற உரைகள் உள்ளன ( சோழர்கள் இஸ்லாமியர்கள் என்ற உரைகளும் உள்ளன் -:) )
    அனைத்தும் அரங்கேறிய பின்னர்தான் ஜனநாயகம் சரி என்ற நிலையை உணர்ந்துள்ளது. அதை எப்படி நடைமுறைபடுத்துவது என்பதில் வகைகள் இருந்தாலும் சிக்கல்கள் இருந்தாலும், அதுதான் தற்பொழுது சிறந்த வழி.

    கடும் போராட்டதிற்குபின் இந்தியா ஜனாநாயகத்தை தேர்தெடுத்து, இந்திய அரசியலைப்பு சட்டப்படி, ஆட்சி செய்யபடுகிறது. சிறந்த அரசியலைப்பு சட்டம். அதை முழுமையாக நடைமுறைபடுத்த இன்னும் போராட்டங்கள், விழிப்புணர்வுகள் தேவை. இந்தியா ஆட்சிமுறையில், கடும் குறைப்பாடுகள் இருந்தாலும், அதை களைவதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. இன்னும் வரும் நாட்களின் விழிப்புணர்வுடன் இருந்து, சுதந்திர போராட்டத்தில் இழப்புகளை மூலதனமாக்கி சுதந்திரம் அடைந்ததை போல, அத்துமீறல்கள், குறைபாடுகள் ஆகியவைகளை எதிர்த்து போராடினால், ஆட்சிமுறை இன்னும் நன்றாக வரும்.

    சுதந்திரம் அடைந்து 64 வருடங்கள் ஆகிவிட்டது, அரசியலைப்பு சட்டத்திற்கு மேலான கொள்கை ஒன்றை, எடுத்துவைக்கப்படவில்லை (கடவுள்களின் வார்த்தைகளை விட்டுதள்ளுவோம்). அதனை பலம் படுத்தவேண்டியது குடிமகனின் கடமை (டாஸ்மாக் குடிமகன் அல்ல).

    அதற்கு ஒரே ஆயுதம், ஒவ்வொரு குடிமகன் கையில் இருக்கும் வாக்களிக்கும் உரிமைதான். அதன் மகத்துவத்தை எப்போது உணர்வோமோ, பாதி தூரத்தை கடந்து விடுவோம்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நரேன்,
      சந்தைப் பொருளாதாரமா? சண்டைப் பொருளாதாரமா?

      பொது உடமை எனில் எல்லோருக்கும் எல்லாமுமா? ஒருவருக்கும் ஒன்றுமில்லையா ? என்பதே நம் கேள்வி.

      குடிமக‌ன்களை குறை சொல்வது இபோது பதிவுலகில் ஃபாஷன் ஆகிவிட்டது.மதவாதி, சாதிவாதி,வர்க்க வாதி அனைவரும் எதிர்க்கிறார்.

      உலகில் சாதி மத இன,பால் சமத்துவம் நிலவும் ஒரே இடம் அவ்விடமே.

      தனியுடமை,பொது உடமை இரண்டையும் மிக சரியாக மிக்ஸ் பண்னத் தெரியாமல் மனித சமுதாயம் நெடுங்காலமாக திண்டாடுகிறது.

      ஆகவே குடியை தடுக்கும் கடவுள் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது.ஒரு நல்ல குடிமகனே இந்த மிக்சிங் பிரச்சினையை தீர்க்க முடியும்.ஹி ஹி

      ஆகவே பெருங் குடிமகன் விரைவில் வருகிறார்.காத்திருங்கள்!!!!!!!!!!!!!!

      நன்றி

      Delete
  8. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நோக்கம் உலகின் வளங்களை தனி மனிதனை நோக்கிக் குவிப்பது, சோசலிசப் பொருளாதாரத்தின் நோக்கம் உலகின் வளங்களை மக்களுக்கு பொதுவாக்குவது. உலகின் பிரச்சனைகள் எங்கிருந்து தொடங்குகிறது? எது சரியானது? எது தேவையானது? என்பவைகளை ஆலோசித்துப் பார்த்தால் போதுமானது. மட்டுமல்லாது கம்யூனிச சமூகத்தில் போட்டி இருக்காது என்றெல்லாம் கூறமுடியாது. அன்றைய போட்டி தனி மனிதர்களுக்குள்ளோ, இனங்களுக்கிடையோ, மொழிகளுக்கிடையோ, நாடுகளுக்கிடையோ இருக்காது மாறாக மனிதனுக்கும் இயற்கைக்குமான போட்டியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ செங்கொடி

      நலமா? மார்க்சீய‌ம் ம‌ட்டுமே பொது உட‌மை,அது எக்கால்த்துக்கும் அனைத்துப் பிரச்சினைகள்க்கும் வ‌ழிகாட்டி என்ப‌து பொது உட‌மைவாதிக‌ளை ந‌ம் மதப்‍பிரிய ச‌கோக்க‌ள் போல் ஆக்கி விடும்.

      மார்க்சீய‌த்தின் வ‌ர‌லாற்று பொருள் முத‌ல் வாத‌ம்,உப‌ரி ம‌திப்பு இர‌ண்டும் மிக‌ அற்புத்மான‌ அவ்தானிப்பு என்ப‌தும் உண்மையே!!!

      நிச்ச‌ய‌மாக் ச‌ந்தைப் பொருளாத‌ர‌த்தில் இய‌ற்கை வ‌ள்ங்களை சில‌ ச‌க்திக‌ள் ம‌ட்டுமே ஆக்கிர‌மித்து பொருளாதாரத்தையே கட்டுக்குள் வைத்துள்ளன என்பதும் உண்மைதான். இதில் இருந்து மாற்ற‌ம் தேவை என்ப‌தை ஒத்துக் கொள்கிறோம்.ச‌ந்தைப் பொருளாதார‌ம் ச‌ண்டைப் பொருளாதார‌மே!!!!!!!!.

      ஆனால் பெரும்பானமையான் ம‌க்க‌ள் பொருளாதார பிர‌ச்சினையின்றி வாழும் அர‌‌சிய‌ல் அமைப்பு முறை இப்போதைய பொது உடமைக் கொள்கையாளர்களால் முழுதும் வரையறுக்க பட்டு விட்டதா?

      அப்ப்டி ஒன்று இருக்கும் எனில் அது பல சார்பற்ற சமூக பரிசோதனைக்களுக்கு உடப்டுதப்ப்ட்டே ஆக் வேண்டும்.அப்படி பல பரிசோதனைகளில் வென்ற அரசியலமைப்பு முறை நோக்கி சூழலுக்கேற்ப இபோதைய நிலையில் இருந்து சிறிது சிறிதாகவே மாற வேண்டும்.

      மக்கள் தொகை அதிகரிப்பும்,இயற்கை வளங்களின் குறுக்கமும் கூட கணக்கில் கொள்ள‌ப் படவேண்டும்.

      ஆகவே ச‌ந்தைப் பொருளாத‌ர‌த்தின் சிக்க‌ல்க‌ள் ம‌ட்டுமே பூர‌ண‌ பொது உட‌மையை ச‌ரியாக்கி விட‌ முடியாது!!!!!!!

      கொள்கை வடிவமைப்பு அள்விலும்,ப‌ய‌ன்பாட்டு பரிசோத‌னையிலும் பொது உட‌மை கொள்கையாள‌ர்க‌ள் அதிக‌ம் உழைக்க‌ வேண்டும்.

      ந‌ன்றி

      Delete
  9. வணக்கம் சார்வாகன்,

    மதம் மட்டுமே சர்வரோக நிவாரணி என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும். கம்யூனிசம் அவ்வாறல்ல, அது வரட்டுத்தனமானதும் அல்ல. அது சமூக அறிவியல். அந்த சமூக அறிவியலை புவி மக்கள் வரலாற்றின் நிகழ்தகவுகளுக்கு ஏற்ப பொருத்தி வடிவமைக்கப்பட்டது தான் மார்க்சியம் லெனினியம். இந்த அடிப்படை அந்தந்த மண்ணுக்கு ஏற்ப பிரயோகிக்கப்படும். எல்லாவற்றையும் முன்பே தீர்மானித்து எழுதி வைத்திருக்க வேண்டும் என்பதும் ஒருவகையில் மதம் தான். அதை மார்சியம் செய்யாது.

    இன்றைய காலகட்டத்தின் பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகள் எங்கிருந்து தொடங்குகின்றன? மனித குலம் வர்க்கமாக பிரிந்து தனியுடமையை வரித்துக் கொண்டதே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல வேர். முதலாளித்துவ சமூகம் அதை விசிறி விட்டு தன்னுடைய ஏகபோகச் சுரண்டலுக்கு வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

    அரசியலமைப்பு என்றால் இன்றைய ஜனநாயக முறை முதலாளித்துவம் வழங்கிய கொடை. ஆனால் எந்த வகை அரசமைப்பும் - பழைய இனக்குழு ஆட்சி தொடங்கி இன்றைய ஜனநாயகம் வரை - அது வரக்கங்களை வர்க்கப்பிரிவினையை வளர்க்கும் அரசமைப்பாகவே இருந்து வருகிறது. சோசலிசம் மட்டுமே வர்க்கங்களை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பயணப்படும் அரசமைப்பு. வர்க்கங்கள் தீர்ந்த பிறகு தான் கம்யூனிசம் தோன்றும். கம்யூனிசம் என்பது தனி நாட்டில் ஏற்பட முடியாத, இதுவரையான மனித குல வரலாற்றில் மிக உயர்ந்த சிந்தனையும், கலாச்சாரமும் அறிவியலும் வாழ்முறையும் கொண்ட சமூக அமைப்பு. இன்றைய தளத்திலிருந்து மட்டுமே யோசிப்பவர்களுக்கு இது கற்பனையாகவே தோன்றும். ஆனால் மனிதகுலம் தொடக்கத்தில் கம்யூனிச சமுதாயமாகவே இருந்துள்ளது. ஆனால் அன்றைய கம்யூனிசம் அறிவியலற்ற, நோக்கங்களற்ற, நிகழ்ச்சிப் போக்கான கம்யூனிசம்.

    எந்த ஒன்றுமே இருக்கும் அமைப்பிலிருந்து தொடங்கி படிப்படியாக பரிசோதனைகளுக்கு உட்பட்டே வளர்ச்சியடையும் கம்யூனிசமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த முதலாளித்துவ சமூகத்திலிருந்து பல தோல்விகளைக் கடந்தே தனக்கான வெற்றியை அடையும்.

    ReplyDelete