Wednesday, February 13, 2013

நரேந்திர‌ மோடிக்கு ஆதரவு பெருகுகிறதா?





வணக்கம் நண்பர்களே,

நாம் மதம் என்னும் விடயத்தின் அரசியல் தாக்கம், ஆளுமை குறித்து கவனம் செலுத்துகிறோம். இந்தியாவில் இந்துத்வம்,இஸ்லாமிய மதவாதிகள் அவர்கள் சமூகங்களின் பெறும் மதிப்பு குறித்தும் அவ்வப்போது அலசுகிறோம்.

இந்துத்வம் என்பது பாஜக'வின் வரையறையின் படி இந்தியாவின் இந்து கலாச்சாரம் அடிப்படையில் ஒரு நாட்டைக் கட்டியமைப்பதே ஆகும். 

http://en.wikipedia.org/wiki/Hindutva

 According to a 1995 Supreme Court of India judgement the word Hindutva could be used to mean "the way of life of the Indian people and the Indian culture or ethos"

இந்துத்வா குறித்த பலரின் பார்வை வித்தியாசப்படும் அதை பின்னூட்டத்தில் விவாதிப்போம்!!


திரு நரேந்திர மோடி மூன்றாம் முறையாக வெற்றி பெற்ற போதும் அந்த வெற்றி குறித்து விவாதித்தோம். இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான் மத வன்முறைகளுள் ஒன்று 2002 ல் குஜராத்தில் நடந்து அதில் 1000+ மக்கள் இறந்ததும் ,அதன் காரணமாக மோடி சிறுபானமை எதிர்ப்பாளர் என விமர்சிக்கப்படுவதும் நடைமுறை உண்மையே.

சென்ற ஞாயிறு(11/2/2013) குஜராத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் 74 மொத்த இடங்களில் 47 நகர்மன்றங்களில் வெற்றி பெற்றது.

Gujarat Municipality Election Results 2013 have been declared. 

- BJP swept the polls winning 47 out of 75 Municipalities including Salaya Nagarpallika, Danduka, Sanand, Rajula, Lathi, Kodinar, Mansa,

- In Muslim dominated Salaya, BJP had announced 24 Muslim candidates. All the 24 Muslim candidates have won the election 

- Congress has won 9 Nagarpalika viz Chalala, Dhanera, Choorvad, Lunavada, Dhrol, Radhanpur, Ranavav, 

- Independents have won 6 Nagarpalika viz., Mahudha, Chaklasi, Kheda, Dakor, Kutiana, Anklav

- 12 Municipalities have hung assembly with no one getting clear majority. Viz., Vijapur, Karjan, Tharad, Bavala, Visavdar, Mangrol


இதில் சலாயா,ஜாம் நக‌ர் நகரின் வசிக்கும் 33,000 மக்களில் 90% முஸ்லிம்கள். இந்த நகரில் அனைத்து 27 பஞ்சாயத்துகளையும் பாஜக வென்றது வியப்பை ஏற்படுத்துகிறது.

Religions in Salaya
ReligionPercent
Hindus
  
14%
Muslims
  
85%
Jains
  
0.8%
Others†
  
0.2%
Distribution of religions
Includes Sikhs (0.2%), Buddhists (<0.2%).














பாஜக' வின் சார்பில் 24 முஸ்லிம்களும் தேர்ந்தெடுக்கப்பட்டது இன்னொரு நல்ல விடயம். மோடிக்கு உலக அளவிலும் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்து உள்ளது,அதாவது முன்பு விமர்சித்த சில மேலை நாடுகள் இப்போது நட்புக் கரம் நீட்டுகின்றன.

இவை ஏன் என்பதே நம் கேள்வி!!!

1)90% முஸ்லிம்கள் நகரில் பாஜக' வெற்றி அதற்கு கிடைத்த சிறுபானமையினரின் அங்கீகாரமா? இல்லையா?



2) ஏன் திடீரென வெளிநாடுகள் மோடியை நோக்கி நட்புக் கரம் நீட்டுகின்றன?




நாம் இப்பதிவில் கேள்வி மட்டுமே கேட்கிறோம்.

அனைவரின் பதில்களை மட்டுமே வேண்டுகிறேன்!!




நன்றி!!!

46 comments:

  1. மைனஸ் ஓட்டு போட்ட சகோவிற்கு நன்றி!!.

    மைனஸ் ஓட்டின் மூலம் சொல்ல வருவது என்ன?

    உங்களின் கருத்தையும் சொல்லி இருக்கலாமே!!

    நன்றி!!!

    ReplyDelete
    Replies

    1. -------இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான் மத வன்முறைகளுள் ஒன்று 2002 ல் குஜராத்தில் நடந்து அதில் 1000+ மக்கள் இறந்ததும் ,அதன் காரணமாக மோடி சிறுபானமை எதிர்ப்பாளர் என விமர்சிக்கப்படுவதும் நடைமுறை உண்மையே.
      --------

      மத வன்முறை தான் நடந்தது என்று சாமர்த்தியமாக சொல்கின்றீர் ....அதிலும் இஸ்லாமியர்களுக்கெதிரான ஒரு இனபடுகொலையை மத வன்முறை என்று சுருக்கி அதில் இஸ்லாமியர்களையும் ஒரு சரி பாதியான குற்றவாளியாக்குகின்றீர் ...இது மணிரத்னம் பாணியிலான ஒரு இடைசொருகளே ......தாங்களின் நடுநிலைமையை சற்று சுய பரிசோதனை செய்து பாருங்கள் ...

      இஸ்லாம் மத வெறியர்கள் பற்றி தங்கள் கருத்து மற்று கட்டுரை சரியாக இருந்தாலும் , இப்படி இஸ்லாமிய மக்கள் படுகொலையை சாமர்த்தியமாக இரு தரப்பு தவறாக பதிவிட்டு விட்டீர்களே சார்வாகன் ....

      ஒருவேளை கோத்ர ரயில் எரிப்பு சம்பவத்திற்கு காரணம் இஸ்லாமியர்கள் என்று தாங்கள் முடிவு செய்து விட்டு தீர்ப்பில் இந்து வெறியர்கள் எதிர்வினை மட்டும் ஆற்றினார்கள் என்று கருதுகிறிர்களோ .......

      போகட்டும் ...

      அவர் மீண்டும் முதல் அமைச்சராக ஆனதற்கு பல்வேறு கரணங்கள் இருக்கலாம் ,
      1.பெரும்பாண்மையான இந்துக்கள் அவரை ஆதரிக்கின்றார்கள்.
      2. சரி அப்புறம் எப்படி இஸ்லாம் மக்களின் ஓட்டும் அவருக்கு கிடைத்திருக்கின்றது என்று தாங்கள் கேட்கலாம் ..இதற்க்கு வேறொரு உதாரணம் கூட சொல்லலாம் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு போட்டு நூரயிரக்கனக்கான மக்களை படுகொலை செய்தது ஆனால் இன்று ஜப்பான் அமெரிக்கா உடன் நட்பாக தானே இருக்கின்றது .
      கண்டிப்பக அவரின் தொழில் துறைசார் அணுகுமுறை காரணமாக மேல்தட்டு இஸ்லாமியர்கள் பயனடைந்து இருப்பார்கள் ...அப்படியெனில் கிழட்டு வர்க்க இஸ்லாமியர்கள் ஏன் அவருக்கு ஒட்டு போட்டனர் ? பயத்தினால் போட்டிருக்கலாம் ...
      3.தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தை கூறு போட்டு கொடுப்பதன் மூலம் அவர்களின் நன் மதிப்பையும் பெற்றிக்கின்றார் .முதலாளிகளின் ஊடங்களுக்ம் அதை ஊதி பெருக்கி உலகம் முழுதும் பறக்க விடுகின்றன.

      ------
      திடீரென வெளிநாடுகள் மோடியை நோக்கி நட்புக் கரம் நீட்டுகின்றன?
      ------
      சும்மா ஒன்றும் அவை நட்புக்கரம் நீட்டவில்லை ....
      மோடி பா ஜா க சார்பாக தலைமை அமைச்சராக போட்டியிட விரும்புகின்றார் அதற்க்கு சிலபல அரசியல்வாதிகளின் /மதவாதிகள் /முதலாளிகலின் ஆதரவும் இருக்கின்றதை அந்நாடுகள நன்கறியும் .
      அதனால் அவர் ஒருவேளை பதவிக்கு வந்தால் அதன் ஆதாயத்தை அடையவே அவருக்கு கரத்தை நீட்டுகின்றன .திடீரென்று அவர் மீது பாசம் ஒன்றும் பொத்து கொண்டு வரவில்லை என்பது கண்கூடு .

      முன்னர் ஏன் அவருக்கு நீட்டவில்லை என்று நீங்கள் கேட்பிர்கள் என்றால் ,
      அவர் மீது இஸ்லாமிய மக்கள் மீதான படுகொலை பற்றிய குற்றசாட்டு நடுநிளையலர்களால் / மனித உரிமையாளர்களால் வைக்கப்பட்டு அதற்காக வழக்கும் இருந்தது .. ஒருவேளை இந்த மக்கள் குமுறி அவரை அவரை தண்டித்து விட்டால் என்ன செய்வது ........


      நன்றி !!!!







      Delete
    2. சகோ செல்வக்குமார்,

      கோத்ரா வன்முறை என்பது இனப்படுகொலை என்னும் உங்களின் கருத்தை எப்படி நிரூபிப்பது?

      இந்துத்வாவினர் கோத்ரா இரயில் எரிப்பை வேண்டுமென்றே செய்து இனப்படுகொலை நடத்தினார்கள் என மார்க்க பந்துக்களும், உங்களைப் போன்ற காஃபிர்(?) நடுநிலையாளர்களும் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாதவரை அது சான்று ஆகாது!!! அது சதிக் கோட்பாடே!!

      இது உங்களின் சார்பு கருத்து அவ்வளவுதான்!!

      பதிவிற்கு தொடர்பாக விவாதியுங்கள்!!

      http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence

      On 27 February 2002, the Sabarmati Express train was attacked at Godhra by a Muslim mob[2][3][4].[5] 58 Hindu pilgrims, including 25 women and 15 children, returning from Ayodhya, were killed in the attack. This in turn prompted retaliatory attacks against Muslims and general communal riots on a large scale across the state, in which 790 Muslims and 254 Hindus were ultimately killed and 223 more people were reported missing
      ...
      The nature of these events remains politically controversial in India. Some commentators have characterised the deaths of Hindus and Muslims as a genocide in which the state was complicit,[10] while others have countered that the hundreds of Muslim and Hindu dead were all victims of riots or "violent disturbances".

      **
      //2. சரி அப்புறம் எப்படி இஸ்லாம் மக்களின் ஓட்டும் அவருக்கு கிடைத்திருக்கின்றது என்று தாங்கள் கேட்கலாம் ..இதற்க்கு வேறொரு உதாரணம் கூட சொல்லலாம் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு போட்டு நூரயிரக்கனக்கான மக்களை படுகொலை செய்தது ஆனால் இன்று ஜப்பான் அமெரிக்கா உடன் நட்பாக தானே இருக்கின்றது .
      கண்டிப்பக அவரின் தொழில் துறைசார் அணுகுமுறை காரணமாக மேல்தட்டு இஸ்லாமியர்கள் பயனடைந்து இருப்பார்கள் ...அப்படியெனில் ""கிழட்டு"" வர்க்க இஸ்லாமியர்கள் ஏன் அவருக்கு ஒட்டு போட்டனர் ? பயத்தினால் போட்டிருக்கலாம் //
      ஹி ஹி கிழட்டு அல்ல கீழ் தட்டு!!

      நல்ல கணிப்பு!! ஏற்புடையதே!!

      **
      //3.தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தை கூறு போட்டு கொடுப்பதன் மூலம் அவர்களின் நன் மதிப்பையும் பெற்றிக்கின்றார் .முதலாளிகளின் ஊடங்களுக்ம் அதை ஊதி பெருக்கி உலகம் முழுதும் பறக்க விடுகின்றன.//

      இதுவும் ஒரு அள்வுக்கு சரியான கணிப்புதான் என்றாலும் தனியார் மயமாக்குத்லை மோடி மட்டும் அல்ல, அனைத்து முதல்வர்களும் செய்கிறார். ஏன் மோடிக்கு மட்டும் இந்த ஊடக பிரசாரம்!!!

      மோடி பிரதமர் 2104 ஆகும் வாய்ப்பு குறைவே என்பது என் கணிப்பு என்பதால் கேட்கிறேன்.

      **
      //அதனால் அவர் ஒருவேளை பதவிக்கு வந்தால் அதன் ஆதாயத்தை அடையவே அவருக்கு கரத்தை நீட்டுகின்றன .திடீரென்று அவர் மீது பாசம் ஒன்றும் பொத்து கொண்டு வரவில்லை என்பது கண்கூடு .//

      வெளிநாடுகள் எதுவும் யார் மீதும் பாசம் காட்டாது!!.இதுதானே எதார்த்தம். மத்வாதிகள் எப்போதும் ஆளும் கட்சியை அண்டிப் பிழைப்பது போல்தானே!!
      ஏன் வஹாபி சகோக்கள் சவுதி இபின் சவுத் வம்சத்தை தாங்கி பிடிக்கிறார்?/ ஹி ஹி!! ஒரு விள்ம்பரம்தானே!!!
      **

      // ஒருவேளை இந்த மக்கள் குமுறி அவரை அவரை தண்டித்து விட்டால் என்ன செய்வது ........//

      மக்களுக்கு தேவை வாழ்வாதாரம், அது பெரும்பானமை மக்களுக்கு கிடைக்கும் வரை எதுவும் புரச்சி நடக்காது!!.

      நம் நாட்டில் தண்டிப்பு என்றால் அரசியலில் இருந்து ஒதுக்கப் படுவார் அவ்வளவுதான்.

      மோடிக்கு அப்ப்டி நடக்கும் சூழல் சமீபத்தில் இல்லை!!

      நன்றி!!!

      Delete
    3. சகோ செல்வா நடுநிலை காஃபிர்,
      இதையும் படியுங்கள்!! இது மத வன்முறையா இனப்படுகொலையா?

      http://en.wikipedia.org/wiki/Direct_Action_Day

      http://www.danielpipes.org/comments/29320

      Delete
    4. சகோ சார்வாகன் ,

      தாங்கள் கூறிய புள்ளிவிவரங்கள் யாவும் காண கிடைக்கின்றனவே . இணையத்தில் தேடினால் எளிதில் கிடைக்கும்.

      ---------2002 ல் குஜராத்தில் நடந்து அதில் 1000+ மக்கள் இறந்ததும்....
      -------
      நீங்கள் 1000+ என்று கூருகின்றிர்கள் ...விக்கி யும் அதையே தான் சொல்கின்றது ..அது மேலவையில் கூறப்பட்ட ஒன்று தான் . அதாவது அரசு 20005 இல் மேலவையில் அளித்த புள்ளி விவரம் ..... அதை தான் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் மக்களுக்கு கூறின .
      ஆனால் தன்னார்வ மற்றும் மனித உரிமையார்வளர்கள் அளிக்கும் தகவல் வேறுவிதமான புரிதலை தருகின்றது ....அதாவது உங்கள் கணக்கு படி இறந்த இந்துக்கள் பலரும் பழங்குடியினர் மற்றும் தலித் மக்கள் .
      இந்திய அரசு என்னைக்காவது உண்மைய சொல்லி இருக்கா .... இல்ல அதில் உள்ளவர்களாவது பொய்யாவது கம்மியாக சொல்லியிருக்கிறர்கலா ......

      கட்டுரையில் நீங்கள் கொருவதேன்ன்வோ நடுநிலைமையுடன் .... ஏன் மோடி தேர்வு செய்யப்பட்டார்.. ஏன் ஏன் ஏன்?
      இடையில் நீங்கள் ஒரு நடு நிலைவாதியை போல் நாடகமடுவது ஏன் ஏன் ஏன்?

      ----
      இந்துத்வா குறித்த பலரின் பார்வை வித்தியாசப்படும் அதை பின்னூட்டத்தில் விவாதிப்போம்
      ------
      வர்ணாசிரமப்படி , ஆகம விதிகளின் படி தொன்று தொட்டு இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றனவே ஒரு பிரமிட் வடிவ அமைப்பு ..அதை நிறுவுவது தான்..
      மற்றும் சவூதி அரேபியாவின் ஷரியத் போல இங்கே இருக்கவே இருக்கின்றது மனு ஸ்ரிமி .......... ஆம்மாம் நீங்க இத்தன கேள்வி கேக்குறீங்களே உங்கள ஒரு கேள்வி கேக்கலாமா ?


      அப்புறம் நீங்க ஒரு இந்து வா .?......
      இல்ல ,
      இஸ்லாம் என்றால் பலமாக ஓங்கி மரண அடி குடுக்குறிங்களே, இந்து என்றால் சும்மா மெல்லமா செல்லமா ......தட்டி குடுத்து ........... ஆக ... அருமை அருமை ........

      நன்றி !!!


      Delete
    5. சகோ சார்வாகன் ,
      -----இதுவும் ஒரு அள்வுக்கு சரியான கணிப்புதான் என்றாலும் தனியார் மயமாக்குத்லை மோடி மட்டும் அல்ல, அனைத்து முதல்வர்களும் செய்கிறார். ஏன் மோடிக்கு மட்டும் இந்த ஊடக பிரசாரம்!!!

      மோடி பிரதமர் 2104 ஆகும் வாய்ப்பு குறைவே என்பது என் கணிப்பு என்பதால் கேட்கிறேன்.
      ------

      காங்கிரசை நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம் அவர்கள் ஊழலில் நாரி சாக்கடை ஓடி கொன்னு இருக்கின்றது.

      அனைத்து முதல்வர்களும் செய்கின்றார்கள் .. ஆனால் இது ஓரளவிற்கு மட்டுமே உண்மை ..
      தொழில் துறை பொறுத்த அளவில் தமிழ்நாடு,குஜராத் போன்ற சில மாநிலங்கலில் மட்டுமே முதலீடு மிக அதிகமாக நடக்கின்றது மற்றும் நகரமயமாதல் இங்கு தானே அதிகம் .

      பிஜெ பி எடுத்து கிட்ட பின்வரும் மாநிலங்களில் ஆட்சி செய்கின்றது,
      (Gujarat, Jharkhand, Madhya Pradesh, Karnataka, Chhattisgarh, and Goa)
      இந்த 6 மாநிலங்களில் குஜராத் , மத்திய பிரதேஷ் மாநிலங்களில் தொழில் துறையில் தனியார் நிறுவனங்களின் முதலீடு அதிகம் உள்ளது .
      குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மோடி மற்ற முதலமைச்சர்களை போலல்லாமல் பிரதமாராக காய்களை நகர்த்தி வருகின்றார் அதற்கு இந்த தொழில் துறை முதலீடுகளின் மூலம் வரும் பொருளாதார முன்னேற்றம் என்ற பிம்பத்தை பயன்படுத்தி கொள்கின்றார் ..

      நன்றி...










      Delete
    6. சகோ செல்வா,
      நாம் சொல்வது நான் நாட்டின் சட்ட திட்டங்களை, நீதிமன்றங்களின் மேல் நம்பிக்கை உள்ளவன். அவ்வள்வுதான். சட்ட திட்டங்களை மாற்றவும் சட்ட நடைமுறைகள் உண்டு.

      குஜராத வழக்கு குறித்த நீதிமன்ற முடிவே நம் முடிவு!!

      **
      எந்த பிரச்சினைக்கும் அதுவே!!.

      மனித உரிமை என் சொல்லிக் கொள்ளும் ஏமாற்றுப் பேர்வழிகளை நாம் மதிப்பது இல்லை!!
      **
      //வர்ணாசிரமப்படி , ஆகம விதிகளின் படி தொன்று தொட்டு இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றனவே ஒரு பிரமிட் வடிவ அமைப்பு ..அதை நிறுவுவது தான்..
      மற்றும் சவூதி அரேபியாவின் ஷரியத் போல இங்கே இருக்கவே இருக்கின்றது மனு ஸ்ரிமி .......... ஆம்மாம் நீங்க இத்தன கேள்வி கேக்குறீங்களே உங்கள ஒரு கேள்வி கேக்கலாமா ?//

      ஒருவழியாக‌ சரியான வாதத்திற்கு வருகிறீர்கள்.
      மனுதர்மம் என்னும் நூல் காட்டுமிராண்டித்த‌னமானது!!

      மனுதர்ம அடிப்படையில் நாட்டை கட்டி அமைக்க இந்துத்வ முயற்சி செய்கிறதா?

      சரி பாஜக ஆளும் மாநிலங்களில் இது எப்படி நடைமுறைப் படுத்தப் பட்டு உள்ளது என் விளக்கினால் நலம். இதர மாநிலங்களில் எப்படி சரியாக இருக்கிறது என்பதையும் விளக்கவும்.


      ஷரியா என்பதும் சுன்னி பிரிவு மூமின்களை, பிறரிடம் இருந்து உயர்வாக காட்டுகிறது.காஃபிர் பாலியல் அடிமைப் பெண்கள்,ஜிஸ்யா வரி, இரத்தப் பணம், பல்தார மணம், ... என பல் மனித உரிமை மீறல்கள் அதில் உண்டு.

      மனுதர்மம்= ஷரியா இதில் நமக்கு மாற்று கருத்து இல்லை!!

      சென்ற பதிவில் ஷரியா சட்ட நடைமுறைப் புத்த்கம் இணைப்பு கொடுத்து இருக்கிறோம். தரவிறக்கி படியுங்கள்!

      ஜன்நாயகம்,மத சார்பற்ற ,மனித உரிமை சட்ட‌ங்கள், சட்டங்களை மதித்து நடத்தல் இதுவே நாம் சொல்லும் தீர்வுகள்!!

      மோடி குற்றவாளி என்றால் நாட்டில் சட்ட நடைமுறகளுக்குள் உள்ள வாய்ய்பு மூலம் தண்டியுங்கள். இல்லையேல் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்க வேண்டும்!!.

      நான் சொல்வது கசப்பாக இருக்கும். மருந்து அப்படித்தான் இருக்கும்!!

      அப்புறம் நீங்கள் யார் என் என்க்கு மட்டும் அல்ல, பதிவை படிக்கும் அனைவரும் உணர்வார்கள். நான் ஒரு மனிதன் ,மதம்,இனம் சார்ந்து பிரிவினைகள் வேண்டாம் என போராடும் ஒரு மனிதன். அவ்வளவுதான்

      நன்றி!!

      Delete
    7. சகோ செல்வா,
      / மோடி மற்ற முதலமைச்சர்களை போலல்லாமல் பிரதமாராக காய்களை நகர்த்தி வருகின்றார் அதற்கு இந்த தொழில் துறை முதலீடுகளின் மூலம் வரும் பொருளாதார முன்னேற்றம் என்ற பிம்பத்தை பயன்படுத்தி கொள்கின்றார் ..//
      இது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உள்ள உரிமைதானே!!

      காங்கிரஸ்,பாஜக,மூன்றாம் அணி( வந்தால்) இதுதான் வாய்ப்பு!!

      நடக்கும் வாய்ப்பில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஜனநாயகம்.

      புரச்சி, இறைவனின் சட்டம் எல்லாம் கதைக்காகாது!!

      மதத்தை கழட்டி வைத்து விட்டு வாழ முயற்சியுங்கள் என்வே சொல்கிறோம்!!

      இந்துத்வா மட்டும் தவறு,வஹாபியம் சொல்லும் உலகளாவிய கிலாஃபா சரி என்பவர்கள் வேடதரிகளே!!

      நன்றி!!

      Delete
  2. சகோ,
    மோடி முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்தது நல்ல செயல்.
    அந்த முஸ்லிம்கள் பெற்ற வெற்றி மோடியின் வெற்றியாகுமா என்றால் பாதி பாதி என்பேன்.
    இதேபோல இவர்கள் பல முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்தால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. பல முஸ்லீம்கள் அதிகாரத்தில் இருப்பதன் மூலம் முஸ்லிம்களின் அச்ச உணர்வும் நீங்கும்.
    என்ன ஒன்று, மதவெறியற்ற முஸ்லிம்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
    வெளி நாட்டவர்கள் மோடிக்கு ஆதரவு என்பது.....எங்கே வருங்கால பிரதமராக வந்துவிடுவாரோ.... வருவதற்கு முன்பு ஆதரவு தெரிவித்துவிடுவோம் என்ற கணக்காக இருக்கும்.

    என் கணிப்பு சரியா? :)

    ReplyDelete
    Replies
    1. சகோ மணி,

      வாங்க. நான் பாராளுமன்ற தேர்தல், மோடி பிரதம வேட்பாளர் என்ற கேள்விக்கே செல்லவில்லை. குஜராத் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களிக்கிறார்கள் என்பது சான்றாகி விட்டது.
      மோடியும் முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துகிறார். இந்த நிகழ்வை நாம் தூரத்தில் இருந்து பார்த்து, ஏன் என‌ கணிக்க முயல்கிறோம்.

      என்ன வாய்ப்புகள்? உண்மை நிலவரம் அங்கு வசிப்பவர்களேஎ அறிவார். அதிலும் ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபடலாம்!!ஆயினும் பொதுக் கருத்து என்ன?

      1. மோடி இப்போது மத பாரபட்சமின்றி நல்லாட்சி நடத்துவதால், பழைய காயங்கள் மறந்து விட்டன.

      2. முஸ்லிம்களுக்கு வேறு வாய்ப்பில்லை, காங்கிரசை விட மோடியே நம்பகத் தனமை உடையவராய் இருக்கிறார்.எதிர்காலம் கருதி ஒன்றுபடுவோம் என்க் கூட முடிவு எடுத்து இருக்கலாம்!!.பழிக்குப் பழி என்பது காட்டுமிராண்டிகளின் விடயம் என்க் கூட புரிந்து இருக்கலாம்!!

      நாம் சொல்வது அனைத்தும் கணிப்புகளே!!
      நன்றி!!

      Delete
  3. மோடிக்கு பிரதமர் ஆசை அதிகரித்துவிட்டதையே இந்த வேட்பாளர் தேர்வு காட்டுகிறது. டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட மோடி முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை கூட நிறுத்தவில்லை. குஜராத்தில் மோடிக்கு கிடைக்கும் வெற்றி எல்லாமே அவரது சொந்த செல்வாக்கினால் கிடைப்பது அது இந்திய அளவிலும் அப்படியே இருக்கும் என்று எடுத்துக் கொள்ள முடியாது

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மருத நாயகம்,

      1. மோடிக்கு பிரதமர் ஆகும் விருப்பம் இருக்க்லாம். அதற்கு அனைத்து பிரிவு மக்களுக்கும் ஏற்புடையவன் ஆகலாம் என சுமுகமாக சூழல் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அது மிகவும் வரவேற்கத் தக்க செயலே!!


      2. நான் குஜராத் முசுலிம், பாஜக உறவு பற்றி மட்டுமே இப்பதிவில் வினவுகிறேன்.

      நன்றி!!

      Delete
  4. நம்ம எல்லாருக்கும் சாயம் பூசின கண்ணாடி போட்டு பார்த்து பழகிப்போச்சு. அதுனால சிகப்பு கண்ணாடி அனிந்துகொண்டு குஜாராத்தில் ரத்தவெள்ளம் பாயுதுனு பேசுவதே வழக்கமாகிவிட்டது. கண்ணாடி கழடிட்டு பாருங்க உண்மையில் அங்க ஓடுவது பாலும் மோரும் மட்டும்தான் ஆடு கோழி வெட்டுற ரத்தம்கூட வெளிய தெறியாது.

    எத்தனை நாளைக்கு காங்கிரஸ் எல்லாத்தையும் ஏமாத்திகிட்டு இருக்கமுடியும். ஒரு ராஜீவ்காந்தி உயிருக்கு பதிலாக ஒரு லட்சம் தமிழ் உயிர்களை பறிக்கவிட்டு வேடிக்கைபார்த்த காங்கிரஸ்ஸை விட மோடி என்ன பெரிய தப்பு செய்துவிட்டார்?

    நட்ப்பு நாடான இலங்கை தமிழக மீனவர்கள் சுட்டுக் கொன்றுகொண்டே இருப்பதை தடுக்கமுடியாத துப்பு கெட்ட தமிழக அரசியல்வாதிகளைவிட பகை நாடான பாக்கிஸ்தானிடம் இருந்து குஜராத் மீனவர்களை பாதுகாக்கும் மோடி எவ்வளவோ மேலானவர்.தமிழ் நாட்டில் இருக்கும் உங்களுக்கெல்லாம் பாக்கிஸ்தான் பார்டரில் இருக்கும் குஜராத்தை பற்றி என்ன முழுமையாக தெறியப்போகிறது. குஜராத் பார்டரில் உள்ளவர்களுக்கு பாதி உறவினர்கள் பாகிஸ்த்தானில் உள்ளார்கள் என்பது எத்தனை பேருக்கு தெறியும்?

    அவங்க அவங்க குடும்பத்தில் நடக்கும் உண்மை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெறியும் அதப்பத்தி அடுத்தவீட்டுக்காரன் பேசும்போது அது புரளியாகத்தான் இருக்கும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ தமிழன்,
      நீங்கள் குஜராத் நிலவரம் அறிந்தவர் என உங்களின் சில பதிவுகள் கூறுகின்றன.

      பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!!!


      நன்றி!!!

      Delete
  5. மக்காவும் மதினாவும் எப்படி முஸ்லிம்களின் புனித இடமோ அப்படித்தான் கிருஷ்ணர் பிறந்த துவாரகையும் இந்துக்களின் புனித பூமியாகும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ தமிழன்,
      உலகின் ஒவ்வொரு இடமுமே புனித இடம். இயற்கை சூழல் பாதுகாக்கப் பட வேண்டும்.

      இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இருக்கும் தொன்மைத் தலம் எதுவும் மாற்றப் படக் கூடாது என்பதே நம் கருத்து!!.

      நன்றி!!!

      Delete
  6. சகோ.சார்வாகன்,

    குஜராத்தில் காங்கிரசின் பலவீனம், மோடியின் பலம் என்ற நிலையில் அரசியல் உள்ளது. இதே நிலை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் செல்லாது.

    பல மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத பிராந்தியக்கட்சிகளே மேலோங்கியுள்ளது.எனவே நல்லக்கூட்டணியுடன் தேர்தல் அல்லது தேர்தலுக்கு பின் வென்றவர்களில் நல்ல கூட்டணியை படிய வைக்கும் திறமை உள்ளவர்களே ஆட்சிக்கு வர முடியும்.

    தேசிய அளவில் மோடியின் முகத்துக்கோ,கொள்கைக்கோ ஓட்டு விழாது.ஆனால் இன்றைய தேதியில் காங்கிரஸ் மீதான கடுப்பு அதிகம் என்பதால் அதனை சாமர்த்தியமாக மோடி தனக்கு சாதகமாக திருப்பினால் வாய்ப்புண்டு.

    ஆனால் அது சாத்தியமாவது என்பது கடினம்,ஏன் எனில் மோடிக்கு வெளியில் இருந்து எதிர்ப்பு என்பதை விட பிஜேபியிலே எதிர்ப்பு உள்ளது,எனவே உள்குத்தை தாண்டி வரட்டும் அப்புறமா மோடியின் வாய்ப்பை பேசலாம்!

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வு!!

      இங்கு பிரதமர் தேர்வு பற்றி விவாதிக்கவில்லை. குஜராத் முஸ்லிம்கள் மோடியை ஏற்கின்றனர் என சான்றுகள் கூறுகின்றதா??
      அவ்வளவுதான்!!

      நன்றி!!

      Delete
  7. குஜராத் முஸ்லிம்களுக்கும் பிற பகுதி முசல்மானுகளுக்கும் உள்ள இடைவெளி தெரிகிறது. பிற பகுதி முஸ்லிம்கள் கலவரத்தை தாண்டி எதையும் பார்க்க மறுக்கிறார்கள். ஆனால் குஜராத் முசுலிம்கள் மோடி ஆட்சியினால் வரும் பொருளாதார நலன்களை நேரடியாக அனுபவிக்கும் காரணத்தால் அதை கடந்துவிட்டார்கள்.

    இந்திய பிரதமராக வர அல்லா போன்ற அயல்நாட்டு கடவுள்கள் மட்டுமல்லாது இந்தியாவின் முப்பத்து முக்கோடி தேவர்களும் அருள்பாலிக்க வேண்டும். ஆனால் வெளிநாட்டு உளவுத்துறையினர் மோடி பிரதமராக வருவார் என கணிக்கிறார்கள் என நினைக்கிறேன். இதனால்தான் இப்போதே துண்டு போட்டு வைக்கிறார்கள். அவர் பிரதமராக வராவிட்டாலும் எதிர்கட்சி தலைவராக வந்தாலே அவரின் தயவு வெளிநாட்டு அரசுகளுக்கு தேவைப்படும் என்பதினால் ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் போலும்.

    சிறுபான்மை மக்களோ அல்லது வெளிநாட்டு அரசுகளே வல்லவன் பின்னால் இருக்கத்தான் விரும்புகிறார்கள். காசோதான் கடவுளடா, அந்த கடவுளுக்கும் இது தெரியுமடாதான்!

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,
      பதிவின் கேள்விகளுக்கு விடை அளித்தமைக்கு நன்றி!!

      என்க்கும் இதே மாதிரி கணிப்புதான்.

      நீங்க சரியாப் பாயிண்டைப் பிடிக்கிறீர்கள்.

      ஆட்சி அதிகாரம் நாடியே அனைவரும் ஓடுவார்!!.

      ஆண்டவனின் பிரதிநிதியே அரசன்!!! இதுதானே நடைமுறை.

      நன்றி!!

      Delete
  8. //குஜராத் முஸ்லிம்களுக்கும் பிற பகுதி முசல்மானுகளுக்கும் உள்ள இடைவெளி தெரிகிறது. பிற பகுதி முஸ்லிம்கள் கலவரத்தை தாண்டி எதையும் பார்க்க மறுக்கிறார்கள். ஆனால் குஜராத் முசுலிம்கள் மோடி ஆட்சியினால் வரும் பொருளாதார நலன்களை நேரடியாக அனுபவிக்கும் காரணத்தால் அதை கடந்துவிட்டார்கள்./ / congress exposing like that

    ReplyDelete
  9. ரொம்ப சந்தோசமா இருக்குமே? எங்கயாச்சும் போயி ரூம் போட்டு சிரிச்சிட்டு வாங்க, உங்களுக்கு 2 நாள் சிரி(ற)ப்பு லீவு ..

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சஹா,

      நலமா?? இங்கும் அனைவரும் நல்ல சுகம்.

      பதிவில் கேட்ட கேள்விகளை சிந்திக்க மாட்டீர்களா!!

      நீங்க சரியில்லை!! நீங்கள் ஒரு பெயர் தாங்கி மூமின்.

      எங்கே நம் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய ஒரே தமிழ் இணைய மார்க்கப் போராளி சகோ இப்பூ? அவ்ர் வந்தால்தான் களை கட்டும். எந்த கேள்விக்கும் துணிந்து பதில் சொல்லும் திறமை வக்கீல் வண்டு முருகனுக்கு பின் சகோ இப்பூதான்.அதுக்கும் மேலே!!

      நன்றி!!

      Delete
  10. மத வெறியற்ற அமைதி வாழ்க்கையை விரும்பும் இஸ்லாமியர்களின் விருப்பத்தையே மேற்படி செய்தி தெரிவிக்கிறது. வங்கதேசத்தில் இருந்து காபிர் இந்தியா நோக்கி வரும் அகதிகள், இஸ்லாமிய ஆபிரிக்க நாடுகளில் இருந்து கடல வழியாக ஆபத்தான பயணம் செய்து காபிர் இத்தாலி நோக்கி வரும் அகதிகள் இஸ்லாம் மனித வாழ்வுக்கு உகந்தது அல்ல என்பதையும், காபிர் நாடுகளிலேயே நிம்மதியாக வாழ முடியும் என்பதையும் அறிய தருகிறது. நிலமை இப்படியிருக்க ஒரு பைசாவுக்கும் பெறுமதியற்ற தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை என்ற பெயரில் இஸ்லாமிய காஷ்மீர் தேவையா?பின்பு அங்கிருந்து வரும் அலை அலையாக காபிர் இந்தியா நோக்கி ஓடிவரும் இஸ்லாமிய அகதிகளை பராமரிப்பதே இந்தியாவுக்கு வேலையாய் பேய்விடும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரி
      நீங்கள் சிந்திப்பது அறிகிறேன்.
      வாழ்க வளமுடன்!!

      நன்றி!!

      Delete
  11. புரட்சிமணி,நந்தவனத்தான் கருத்துக்களை வழிமொழிகிறேன்.தற்போதைய நிலையில் காங்கிரஸ் மீதான கடுப்பு தென்னகத்தில் அதிகம் இல்லா விட்டாலும் கூட வட மாநிலங்களில் மிக அதிகம் என்பதோடு மன்மோகன் சிங் ஆளை விட்டால் போதுமென தொடர் மவுன விரதமிருக்கிறார்.

    இப்போதைய நிலையில் மோடி vs ராகுல் காந்தியென்ற நிலையில்தான் வரும் பாராளுமன்ற தேர்தல் இருக்கப்போகிறது எனபதை குஜராத்தில் மோடியின் வெற்றியும்,ராகுல் காந்திக்கு முடிசூட்டு விழாவும் காட்டுகிறது.பிஜேபிக்குள் உள் பூசல்களும்,நாற்காலி கனவுகள் பலருக்கும் இருந்தாலும் கூட அவற்றையெல்லாம் தாண்டி காங்கிரஸ் கடுப்பு மோடியை பிரதமராக்குவதற்கே சாத்தியம்.

    குஜராத் இஸ்லாமியர்கள் தங்களுக்கு நலன் தரும் அரசியலையையும் பழையவற்றை பின் தள்ளி முன்னேற விரும்புகிறார்கள் என்பதையே மோடி சார்ந்த தேர்தல் வெற்றிகள் நிரூபிக்கின்றன.

    மேற்கத்திய நாடுகள் இப்பவே துண்டு போட்டு வைத்துக்கொள்வதோடு அமெரிக்கா மோடிக்கு விசா கொடுக்கிறேன்னு சிக்னல் கொடுத்தால் போதும். மோடிக்கான அமெரிக்க அப்ரூவல் கிடைச்ச மாதிரி.

    இந்திய பல்வேறு மாநில கலாச்சாரத்தில் பிஜேபி இந்துத்வா நிறுவுவதெல்லாம் கனவு என்பதை விட நாற்காலியில் உட்கார்ந்த நிமிடம் இந்துத்வா மறந்து போகும்.முந்தைய பிஜேபி ஆட்சி அதைத்தான் செய்தது.

    ReplyDelete
    Replies


    1. //இந்திய பல்வேறு மாநில கலாச்சாரத்தில் பிஜேபி இந்துத்வா நிறுவுவதெல்லாம் கனவு என்பதை விட நாற்காலியில் உட்கார்ந்த நிமிடம் இந்துத்வா மறந்து போகும்.முந்தைய பிஜேபி ஆட்சி அதைத்தான் செய்தது.//
      சகோ இராசநட,
      வாங்க!!

      முகமது பின் துக்ளக் திரைப்படத்தில் ஒரு காட்சியில்

      துக்ளக்கிடம் அமைச்சர் கூறுவார்: மக்களின் கோர்க்கைகளை நிறைவேற்றா விட்டால் போராட்டம் நடத்துவார்கள்!!

      துக்ளக் : மீண்டும் வாக்குறுதி கொடுப்பேன்!!

      அவள்வுதான் சகோ அரசியல்!!

      இந்துத்வா என்பது தூண்டில், மீன் என்பது பதவி. மீன் கிடைத்தால் தூண்டிலை கீழே வைத்து விட்டு,மீனை குழம்பு வைக்க்லாமா, பொரிக்கலாமா எனவே சிந்திக்க வேண்டும்.

      இதுவே அரசியல் பால பாடம் ஆகும்!!.

      தூண்டிலைக் குழம்பு வைக்க முடியுமா? இல்லை பொரிக்க முடியுமா?

      இதில் பாஜக மட்டும் இல்லை, அனைவருமே இப்படித்தான்!!

      ஹி ஹி

      நன்றி!!

      Delete
  12. பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு பின்னூட்டம். டாகின்ஸ் அறிமுகமே உங்களால்தான். இப்ப கமல் வேற டாகின்ஸை கதையோடு அழகாக பொருத்தும் சாத்தியமிருந்தும் கோட்டை விட்டு விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராசநட,

      ஆமாம் படம் பார்த்தபின் நானும் நினைத்தேன். முதலில் தெரிந்து இருந்தால் டாக்கின்சை இழிவு படுத்திவிட்டார்கள் என போராடி இருக்கலாம்!!.ஹி ஹி

      படம் பார்த்து காஃபிரை[டாக்கின்ஸ்] இழிவு படுத்தினால் பரவாயில்லை என உண்மையை மறைத்த மத்வாதிகளுக்கு கடும் கண்டனம்.

      பரிணாமம்,நாத்திகம் குறித்து பல வசனம் கொண்டு வந்து இருக்கலாம்!!

      நன்றி!!

      Delete
  13. ஒரு குறிப்பிட்ட பகுதியின் வெற்றியால் மோடி இந்தியாவின் பிரதமராவார் என்று சொல்ல முடியாது.ஆனால், பா.ஜ.கட்சிக்கு அப்பாலும் அவருக்கு ஆதரவு இருப்பதை மறுக்க முடியாது. முதலில் அவர் தன கட்சிக்குள் எதிரிகளை வெல்ல வேண்டும்.பின் அதிகாரப்பூர்வமாக பிரத்மர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட வேண்டும்.ஏன் என்றால் கட்சி ஜெயித்தாலும் கடைசி நேரத்தில் உள்கட்சி எதிராளிகள் கவிழ்க்கும் வாய்ப்பு உண்டு.
    சந்திரசேகர் பிரதமராக தேர்வானபோது தேவிலாலின் கண்ணீரை மறந்துவிட முடியாது.
    போலேவ,குஜராத்தின் அப்பகுதி முஸ்லீம்கள் ஆதரித்தாலே பிற பகுதி முஸ்லீம்களும் ஆதர்ப்பார்கள் என சொல்லி விட முடியாது.மோடிக்கு எதிரான பிரசாரங்கள் பிறபகுதியில் இருந்தே அதிமும் முன்னெடுக்கப்படுகின்றன.என்றாலும் குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவில் முஸ்லீம் வேட்பாளர்களை மோடி நிறுத்தியது பாராட்டத்கக்கது.
    வளர்ச்சியை பார்த்தும் கடந்த காலத்தின் காயங்களை மறந்திருக்கலாம் முஸ்லீம் மக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராசின் ,
      ஏற்கக் கூடிய கணிப்புகள். வாழ்த்துக்கள். நன்றி!!

      Delete
  14. குஜராத் இஸ்லாமியர்களின் இந்த அமைதியை விரும்பும் நல்ல வாழ்க்கை வாழவிரும்பும் போக்கை அனுமதிக்க முடியாது. தமிழகத்ததை சேர்ந்த 24 இஸ்லாமிய அமைப்புகளும்,தமிழ்மண சவூதி அரேபிய தொண்டர்கள் அணியும் இதற்கெதிராக போராடும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரி,

      நான் குரான் வழி நடக்கும் காஃபிர் என்பதை அவ்வப்போது மறந்து விடுகிறீர்கள்!!.நம் ஒரே பிரச்சினை சுவனம் பற்றி சான்று இல்லை. கிடைத்தால் நான்தான் தமிழ் பதிவுலகின் மிகப் பெரிய மார்க்க பந்து!!

      மார்க்கத்தின் மீதான எந்த விமர்சனத்திற்கும்
      அழகிய வழியில்,
      ஆணித்தரமாக,
      இன்சொல் கொண்டு
      ஈகைக் குணத்தோடு
      உத்தம மார்க்கத்தை
      ஊக்கமாக விளக்கி
      எம்பெருமான் நபி(சல்)
      ஏகத்துவ வழியில்
      ஐவேளை தொழுகையும்
      ஒருமித்த நம்பிக்கையுடன்
      ஓதுவோம் குரானை
      ஔவையும் சொன்னபடி
      இஹ்தெ இனிய வழியென

      பதில் அளிக்க நம்மால் முடியும் ஹி ஹி!!

      அப்புறம் நீங்க அவ்வளவுதான்!!

      எங்கே தேடுவேன் சுவன சான்றை எங்கே தேடுவேன்??

      கிடைத்தால்

      நன்றி!!

      Delete
  15. யோவ் ஒளவையை ஏன்யா இங்கே இழுத்தே?
    ஔவைக்கும் பர்தா மாட்டிடுவாங்கையா ..கவனம்

    ReplyDelete
    Replies
    1. சகோ வெத்து வேட்டு,
      நாம் காரணம் இல்லாமல் சொல்ல மாட்டோம்!!

      பாருங்கள் அதியமான் அவ்வைக்கு என்றும் உயிர் வாழும் [நெல்லிக்] கனி கொடுத்தான்.

      முதல் மனிதர் ஆதம் ,தன் மனைவி ஹவ்வா [ஏவாள் என பைபிள்] விற்கு
      என்றும் உயிர் வாழும் கனி[ என் நம்பி] கனி கொடுத்தார்.

      என்னே ஒரு ஒற்றுமை பெயரில்,செயலில் பாருங்கள்
      ஆதம் இலங்கையில்தான் முதலில் சுவனத்தில் இருந்து இறங்கினார் என்றும் சில கதைகள் உண்டு!!

      ஆதம் ஹவ்வா கதையே அதியமான் அவ்வை கதை ஆகி இருக்குமோ, இல்லை ரிவர்சா!!

      ஆகவே ஹி ஹி அவ்வை, திருவள்ளுவர் ஆகியோர் நம்பிக்கையாளரே!!!.

      பாருங்க நம்ம எப்படி மார்க்கப் பணி ஆற்றுகிறோம்!!

      என்னைப் போய் மார்க்க விரோதி என புரளி கிளப்பினால் நியாயமா??

      ஏக இறைவன் மிகப் பெரியவன்!!

      நன்றி!!!

      Delete
  16. சகோ.சார்வாகன்.

    மோடி பற்றி வேறு வகையான பார்வை நமக்கு இருக்கிறது. பதிவாக வெளிவரும்

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரேன்,

      இந்தியா என்பது ஒரு நாடு என்றாலும், நம் மாநிலம்தான் நம் சூழலை 99% நிர்வாகம் செய்கிறது. மோடி குஜராதில் இருப்பது நம்மைப் நேரடியாக பாதிப்பது இல்லை!!

      தமிழ்நாட்டில் இருந்து குஜராத் நிகழ்வுகளைப் பார்க்கிறோம். அவ்வளவுதான்!!

      குஜராத்தை தாண்டி மோடியின் வளர்ச்சி வருமா? அரசியல் வாழ்வு எவ்வள்வு நாள் நீடிக்கும் என்பதை காலம் பதில் சொல்லும்!

      பதிவு எழுதுங்கோ ,அங்கே வருகிறேன்!!

      நன்றி!!!

      Delete
  17. அண்ணன் சர்வாகன்!

    ஆதம் இலங்கையில்தான் முதலில் சுவனத்தில் இருந்து இறங்கினார் என்றும் சில கதைகள் உண்டு!!

    ஆச்சர்யமான தகவல் இன்றுதான் இது பற்றி கேள்வி படுகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. சகோ ரேயன்,
      ஒவ்வொரு மதத்திலும் பல நல்ல விடயங்கள், அறிய புரிய விடயங்கள் உண்டு.சூழலுக்கு ஏற்ப ஒதுக்க வேண்டிய விடயமும் உண்டு.

      பல இன,மத,மொழி மக்கள் இணைந்து வாழ்கையில் பலவகை சிக்கல்கள் முரண் வரும். ஆனால் அதனைத் தாண்டி இணைந்து வாழ்வதே மனித சமூகத்தின் வெற்றி.

      மதக் கண்ணாடி போடுபவர்களுக்கு இது புரியாது!!

      எந்த ஒரு பிரச்சினையிலும் சுமுக தீர்வு வருவதுதான் நல்லது!!

      வாழ்க்கை வாழ்வதற்கே!!!

      அதை சொல்ல முயலும் போது புரிதல் கொள்ள விரும்பாதோரை என்ன செய்ய முடியும்?
      **
      இன்னும் நிறைய‌ இருக்கு சகோ அடிக்கடி வாங்க, பேசுவோம்[கதைப்போம் ஹி ஹி]

      நன்றி!!!

      Delete
  18. சார்வாகன்,

    //இதில் சலாயா,ஜாம் நக‌ர் நகரின் வசிக்கும் 33,000 மக்களில் 90% முஸ்லிம்கள். இந்த நகரில் அனைத்து 27 பஞ்சாயத்துகளையும் பாஜக வென்றது வியப்பை ஏற்படுத்துகிறது//

    ஆச்சர்யம் ஆன தகவல் தான். இதை வைத்து குஜராத்தி முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிரான 2002 வன்முறையை தாண்டி யோசிக்க போய்விட்டார்கள் என்று சொல்ல முடியுமா? தெரியவில்லை. என்னளவில் முடியாதெனவே நினைக்கிறேன். வாக்களிப்பு என்று வரும்போது பல நேரங்களில் உள்ளூர் பிரச்சினைகள், மாநில, தேசிய பிரச்சினைகளை விட முக்கியமானவை ஆகி விடும். குஜராத்தில் வாழாமல் , நம்மால் இந்த சலயா, ஜாம் நகர் பிராந்தியங்களின் தற்சமய நிதர்சனங்களை உணர முடியாது. அதை உணராமல் இந்த கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லவும் முடியாது. இந்த கேள்விக்கான விடை, நியாயப்படி பார்த்தால், நேரடியாய் குஜராத்திய முஸ்லிம்களை பேட்டி கண்டு, ஆழமாகவும், நடுநிலைமையுடனும் செய்யப்பட ஒரு பத்திரிக்கை ஆராய்ச்சியாக வந்தால் தான் உண்டு.. The answer has to come out a proper journalistic endeavour. வேறு வழியில்லை. நான் பார்க்கும் வரையில் பத்திரிக்கை கருத்துகள் ஒன்று மோடி சார்பாகவோ அல்லது அவரை எதிர்த்தோ தான் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. சகோ கணேசன்,
      நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்கிறேன். ஏன் குஜராத் முஸ்லிம்களின் உண்மையான நிலையை அறிய தமிழக முஸ்லிம் த்லைகள் உள்ளிட்டு யாரும் முயற்சிப்பது இல்லை?

      சில மனித உரிமை அமைப்புகள் மோடிக்கு எதிராக கருத்து வெளியிட்டாலும், ஏன் ஒன்னும் இல்லாத விசுவரூபத்துக்கு சவுண்டு விடும் பீ.ஜே,ஜவிகருல்லா போன்றோர் குஜராத் சென்று நிலை என்ன என் விள்க்கலாமே!!

      குஜராத முஸ்லிம்களுக்காக போராடும் காஃபிர் மனித உரிமை அமைப்புகளினால்தான் ,அங்கே இந்துத்வா அடக்கி வாசிக்க வேண்டிய சூழலும், மூமின்கள் நலமாக இருக்கிறார் என நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் வந்தது.

      ஒருவேளை 2002 பிறகு இன்னும் சில கலவரம் வந்து இருந்தால், அங்கே ஜனாதிபதி ஆட்சியே நீடிக்கும்!!

      எல்லாவற்றையும் காஃபிர்கள் [குஜராத்] மூமின்களுக்கு செய்யனும்

      இவங்க சும்மா சவுண்டு விடத்தான் இலாயக்கு!!

      நன்றி

      Delete
    2. //முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிரான 2002 வன்முறையை தாண்டி யோசிக்க போய்விட்டார்கள் என்று சொல்ல முடியுமா? தெரியவில்லை. என்னளவில் முடியாதெனவே நினைக்கிறேன்//

      வன்முறையை தாண்டி யோசிக்க முடியாது என்ற எல்லோரும் நினைத்திருந்தால் உலகம் என்றோ அழிந்து பேயிருக்கும். இஸ்லாமிய நாட்டில் இருந்து வந்த இஸ்லாமியன் தன்னை கிறிஸ்தவன் என்று பெயர் மாற்றி சொல்லி வெளிநாட்டில் அகதி உரிமை பெற்றுள்ள இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். ஏன்? அவர்களது இஸ்லாமிய நாடுகளீல் மதத்தை தவிர ஏதும் இல்லை. இவர்கள் தாங்கள் மற்றவர்கள் போல வாழ விரும்புகிறார்கள். அதற்கான வழியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு புலியை பற்றி கூட ஒரு செய்தி படித்தேன். முன்பு இலங்கை அரசுக்கு எதிராக துப்பாக்கி சுட்டுடேன். இப்போ இலங்கை ஒலிம்பிக்கில் வெல்வதற்காக துப்பாக்கி சுட்டு பயிற்ச்சி எடுக்கிறேன். வாழ்கை வாழ்வதற்க்கு தாங்க. ஜிகாத் செய்து சாவதற்கோ, வன்முறையை தாண்டி யோசிக்காம வன்முறைக்குள் இருந்து மேலும் அழிவதற்கோ இல்லை.

      Delete
  19. சகோ சார்வாகன்,
    செல்வகுமர் நல்ல காபிர் பெயர் தானே எல்லாவற்றையும் மார்க்கத்தினூடாகவே பார்க்கிறார்:)

    ReplyDelete
    Replies
    1. சகோ வேகநரி,
      ------
      செல்வகுமர் நல்ல காபிர் பெயர் தானே. எல்லாவற்றையும் மார்க்கத்தினூடாகவே பார்க்கிறார்:)
      ------
      நமக்கு மார்க்கம் பத்தி எல்லாம் தெரியாது .
      உங்களுக்கு என் கருத்தின் மீது விமர்சனம் இருந்தால் கருத்தை மறு மொழி இடவும் .
      நன்றி !!!

      Delete
    2. சகோ செல்வா,

      மார்க்கம் பற்றி [செல்வக்குமார் போல்]அறியாதோர் ஆதரிப்பதும், அறிந்தவர்கள் [சார்வாகன் போல்] விமர்சிப்பதும் இயல்புதானே!!

      மார்க்கம் பற்றியும்,ஷரியா பற்றியும் காஃபிர் தாவா செய்யத்தானே நாம் இருக்கிறோம்!!

      ஏக இறைவன் மிகப் பெரியவன்!!!

      நன்றி!!!

      Delete
  20. //ஏன் குஜராத் முஸ்லிம்களின் உண்மையான நிலையை அறிய தமிழக முஸ்லிம் த்லைகள் உள்ளிட்டு யாரும் முயற்சிப்பது இல்லை?//
    ஹி ஹிஹி அவங்க குஜராத்துக்கு சென்று அங்கே இஸ்லாமியர்கள் நல்லாக இருப்பதை கண்டுட்டாங்க என்று வைத்துக் கொள்வோம். ஆனா அதை வெளியே சொல்ல குரான் அனுமதிக்குமா? மிக மேசமான நிலையில் குஜராத் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் என்று அல்தக்கியா செய்ய தான் அவர்களுக்கு அனுமதியுண்டு. தமிழக கடந்த தேர்தலில் திமுக தேற்றது அதிமுக வென்றது ஆனா தேர்தல் நடப்பதற்க்கு முதலே திமுக தலைவருக்கு முமீன்கள் மத படி பல பெண்டாட்டிக பல பிள்ளைகள் நாட்டு பணத்தை களவெடுத்து பிள்ளைகளுக்கு பதுக்குகிறார் என்றும் அதிமுக தலைவி உறுதியாக செய்பட கூடியவர் நாட்டை முன்னேற்றுவார் என்றும் கருத்து நிலவியது அந்த கருத்தை தான் தேர்தல் முடிவும் தெரிவித்தது அதே போல் குஜராத் தேர்தல் முடிவுகளும் குஜராத் இஸ்லாமியர்களின் நல்ல நோக்கத்தை தெரிவுபடுத்துகின்றன.
    முமீன் செல்வமாருக்கு கோடங்கி பதிவில் நீண்ட அருமையான விளக்கம் கொடுத்திருந்தீர்கள். ஆனால் அவர்களுக்கு குரானை தாண்டி சிந்திக்கவே முடியாது. ஆனா பல காபிர்களுக்கு உங்க விளக்கம் உதவியாக இருக்கும். நானும் சில காபிர்களுக்கு கொப்பி பண்ணி அனுப்பி வைத்தேன். நன்றி

    ReplyDelete