Tuesday, February 26, 2013

தாசின் பரிணாம பதிவு: தேவையான விளக்கங்கள்&திருத்தங்கள்




வணக்கம் நண்பர்களே,

தமிழ்பதிவுலகில் பரிணாமம் மீதான விமர்சனங்களையும்,மதம் சார் ஆட்சி என்பதையும் தொடர்ந்து விவாதித்து விமர்சித்து வருகிறோம். நம்ம மாப்ளே தாசு பரிணாம எதிப்பு பதிவு எழுத முயற்சி செய்கிறார் என்பதால், ஒரு ஆசிரியராக அவர் எழுதிய பதிவில் தேவையான திருத்தங்களை இப்பதிவில் செய்வோம்.

 A)முதலில் தலைப்பு: பரிணாமம் அறிவியல்தானா?

இதில் இரு சொற்கள் பரிணாமம் ,அறிவியல் இருக்கிறது. இதன ஏற்கப்பட்ட வரையறை சொல்ல வேண்டும் ,ஆனால் சொல்லவில்லை. ஆகவே நாம் சொல்லி விடுவோம். அறிவியல் விடயங்களை சொல்லும் போது சுட்டிகள் கொடுக்க வேண்டும்.அவர் செய்யவில்லை நாம் செய்வோம்?விக்கிபிடியா தகவல்களே போதுமானது.

அ) பரிணாமம் என்பதன் வரையறை என்ன?


Evolution is the change in the inherited characteristics of biological populations over successive generations. Evolutionary processes give rise to diversity at every level of biological organisation, including species, individual organisms and molecules such as DNA and proteins

பரிணாமம் என்பது தலைமுறைரீதியாக கடத்தப்படும் மாற்றங்களினால் உயிரின குழுக்களில் ஏற்படும் உரு அமைப்பு,ஜீனோம், ப்ரோட்டின் மாறுதல்கள் ஆகும்.இத்னால்  380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் உயிர்களில் இருந்து அனைத்து உயிரிகளும் கிளைத்து தழைத்தன.  ஆகவே பரிணாமம் என்பது உயிரின தோற்ற,வளர்ச்சி,பரவல் வரலாறு. இதன் சான்றுகள் 

1.காலரீதியான உருமாற்றம் கொண்ட படிமங்கள்.

2.ஜீனோம் மாற்றம் தலைமுறைரீதியாக ஏற்படுகிறது. இதனால் உரு அமைப்பு மாற்றம்[Morphological Change],ஒரு உயிரின குழு இணைந்து இனவிருத்தி செய்ய இயலா சிற்றின‌ங்களாக பிரிதல்[speciation] என்பவையும் சான்றாக ஆவணப் படுத்தப்பட்டு உள்ளது.


**
ஆ)அறிவியல் என்பதன் வரையறை என்ன?

//விஞ்ஞான ரீதியான பரிசோதனை அப்படின்னா என்ன?

ஒரு நிகழ்வை கவனித்தல், அதுகுறித்த கோட்பாடு, பரிசோதனை, சோதனை முடிவுகளில் இருந்து அனுமானம் [Observation, Theory, Experiment & Conclusion] என்ற வரிசைக் கிராமமாக அணுகுவது விஞ்ஞான முறையாகும்.   //

தாசும் அறிவியல் பற்றி சொன்னாலும் ,சான்று என்பதைப் பற்றியே சொல்லவில்லை.

http://en.wikipedia.org/wiki/Science

Science (from Latin scientia, meaning "knowledge") is a systematic enterprise that builds and organizes knowledge in the form of testable explanations and predictions about the universe.

பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வையும் பரிசோதனை மீது உறுதிப் படுத்த படக் கூடிய , விளக்கம் ,கருதுகோள் உருவாக்கும் கட்டமைப்பு.ஒரு நிகழ்வை அளவீடுகளாக்கி, காரணிகளாக பகுத்து, கட‌ந்த நிகழ்கால அளவிடப் பட்ட சான்றுகளுக்கு விளக்கமும், எதிர்கால நிகழ்வுகளுக்கு கருதுகோளும் கொடுப்பதே அறிவியல்.

**
B) பரிணாமம் எப்படி அறிவியலாக ஏற்கப் படுகிறது?.

Observation

சான்றுகளின் படி பிரப்ஞ்சம் தோன்றியது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமி தோன்றியது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன். முதல் ஒரு செல் உயிரி படிமத்தின் காலம் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உள்ளிட்டு,பூமியின் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வகை உயிரின‌ங்கள் வாழ்ந்தன என்பதை சான்றாக்கி உள்ளனர்.

அதுவும் ஒரு கால கட்ட உயிரினத்திற்கும், அடுத்த கால கட்ட உயிரினங்களுக்கும் உரு அமைப்பில் தொடர்பு இருந்தாலும் சிறு அளவு மாற்றமும் இருந்ததும் ஆவணப் படுத்தப் பட்டது.

Theory

ஆகவே ஒரு கால கட்ட உயிரினங்கள் சூழல் சார்[natural selection],சாரா[ random genetic drift] மாற்றங்களினால் தலைமுறைரீதியாக மாற்றம் அடைகிறது என விளக்கம் அளிப்பது பரிணாம கொள்கை. நிகழ்வுக்கான விளக்கமே அறிவியல். விளக்கத்திற்கு சான்று தேடுவது அல்ல!!.

Testing

கடந்த 50ஆண்டுகளில் மூலக்கூறு அறிவியலில் ஏற்பட்ட வளர்ச்சியால், மனிதன் உள்ளிட்ட பல் உயிரின‌ங்களின் ஜீனோம் குறியீடுகளாக ஆவணப்படுத்தப் பட்டது.

தலைமுறைரீதியாக ஜீனோம் ம்யுட்டேஷன் என்ப்படும் மாறுதல் அடைவதும், இந்த ஜீனோம் மாற்றங்கள் உருமாற்றம், சிற்றினங்கள் ஆக பிரிதல் என்பதும் ஆயவக பரிசோத்னைகளில் உறுதிப்படுத்தப் பட்டது.

Conclusion

ஆகவே பரிணாமம் அறிவியல் ஆகும்.
**
C) பரிணாமத்தை எப்படி தவறான விளக்கமாக‌ அறிவியல்ரீதியாக நிரூபிப்பது?

பரிணாமம் என்பதே காலரீதியான ,தலைமுறை ரீதியான மாற்றம் ஆகும்.ஒரு செல் உயிரில் இருந்து இன்றைய உயிரிகள் வரை முன்னோர்,வழித்தோன்றல் என்ற தொடர்பாக பரிணாம மரம் உண்டு. இதன் கடந்தகால சான்றுகள் படிமங்கள்தான். இதுவரை கிடைத்த‌ படிமங்கள் இந்த பரிணாம மரத்தின் கருதுகோள், விளக்கம் ஆகியவற்றுக்கு எதிராக இருக்க‌வில்லை.

ஒருவேளை இனிமேல் கிடைக்கும் படிமங்கள் பல இதற்கு மாறாக இருப்பின் பரிணாம மர விளக்கம் கைவிடப்படும். இது முதலில் நடந்தால் மட்டுமே பரிணாமம் பொய்யாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

எ.கா ஹோமோ சேஃபியன் என்னும் மனிதன் தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் என்பது இப்போது ஏற்கப்பட்ட பரிணாம விளக்கம்.  சிம்பன்சியும், மனிதனின் முன்னோரும் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பொது முன்னோரில் இருந்து பிரிந்தனர்.அதன் பிறகு மனிதனின் ஹோமோ பேரினத்தில்[Genus] 20 வகை மனித இனம் தோன்றி, ஹோமோ சேஃபியன் மட்டும் மிஞ்சியது. ஒரு ஹோமோ சேஃபியன் படிமம் 1 கோடி ஆண்டுகளுக்கு முன் கிடைக்கும் பட்சத்தில் இந்த விளக்கம் தவறாகிவிடும்.

உயிரின‌ங்களின் மறைவு என்பதும் பரிணாம நிகழ்வுதான்.பல உயிரின‌ங்கள் இன்றும் மறைவதும் கூட இதன் சான்றே!!

ஜீனோம் மாற்றம் உறுதியான படியால்,இத்னால் உருமாற்றமோ, சிற்றினம் ஆதலோ[speication] நடைபெறவே முடியாது என் நிரூபிக்க வேண்டும். இது நடக்கும் வாய்ப்பு மிக மிக மிக ...குறைவு!!!

ஆகவே படிம ஆதாரம்,ஜீனோம் ஆய்வு மட்டுமே பரிணாம கொள்கையின் மீது கேள்வி எழுப்ப முடியும்!!!

ஆகவே பரிணாமம் என்பது அறிவியல் என விளக்கி விட்டோம்.விளக்கம் முடிந்தது, இப்போது திருத்தம்!!
***

மாப்ளே தாசின் பதிவுக்கு செல்வோம்.

a) // 1859 ஆம் ஆண்டு ஒரு ட்விஸ்டாக சார்லஸ் டார்வின் இந்த நம்பிக்கை மேல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  உயிர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெறும் இயல்பான பரிணாம வளர்ச்சி மூலம் உருவாயின என்றார்.//

தவறு பரிணாம் கொள்கை டார்வினுக்கும் முந்தையது. பரிணாமத்தின் முக்கிய காரணி இயற்கைத் தேர்வு[natural selection] என்பதே டார்வின்& வால்ல‌ஸ் ஆகியோரின் விள்க்கம் ஆகும்.அதற்கு முந்தைய லாமார்க்கியம் பற்றி இச்சுட்டியில் பார்க்கவும். 


Lamarckism (or Lamarckian inheritance) is the idea that an organism can pass on characteristics that it acquired during its lifetime to its offspring (also known as heritability of acquired characteristicsor soft inheritance). It is named after the French biologist Jean-Baptiste Lamarck (1744–1829), who incorporated the action of soft inheritance into his evolutionary theories as a supplement to his concept of an inherent progressive tendency driving organisms continuously towards greater complexity, 


b)//எங்காவது பாதி மனிதனாகவும், பாதி குரங்காகவும் வாழும் உயிரினத்தைப் பார்த்திருக்கிறோமா?  பாதி தவளை-பாதி மீன்?  பாதி பறவை-பாதி ஊர்ந்து செல்லும் இனம்?   இந்த மாதிரியெல்லாம் இடைப்பட்ட உயிரினம் என்று எதுவும் இல்லை!!  எந்த உயிரினத்தை எடுத்தாலும் முற்றிலும் பூரண வளர்ச்சியடைந்த உயிர்களாக உள்ளனவே தவிர பாதி வளர்ச்சியடைத உயிரினங்கள் எதுவும் இல்லை.... மீன், குரங்கு, மனிதன் போன்ற இன்றைக்கு இருக்கும் உயிரினமாயினும், டைனோசர் போன்ற பூமியில் மறைந்த உயிரினமாயினும் முழு வளர்ச்சியடைந்த நிலையிலான படிவங்களே உள்ளன, அவை எவற்றுக்கும் முன்னோர் இருந்ததாகவோ அல்லது  ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறியதாகவோ எந்த Fossil ஆதாரமும் இல்லை.   மேலும், அவை ஒரு காலகட்டத்தில் திடீரெனத் தோன்றுகின்றன, திடீரென மறைகின்றவே தவிர ஒருபோதும் பாதி பரிணாமம் அடைந்த நிலையில் ஒரு படிவம் கூட இதுவரை கிடைக்கவில்லை.//

இங்கேதான் நிற்கிறார் தாஸ்!!ஒரு உயிரினம் முழுமை அடைந்தது என அறிய முடியாது, வாழும் சூழலுக்கு பொருந்தினால் வாழும் அவ்வளவுதான். இப்படி இடைப்பட்ட உயிரின‌ங்கள் என்பது தவறான கணிப்பு!!.இப்போதைய உயிரினம் மட்டும் முழுமை அடைந்தவை என்பது தவறான புரிதல்.ஒவ்வொரு கால கட்ட உயிரினமும் முழுமை அடைந்தவைதான்.

இவருக்கு இந்த பதிவு!!


c). வாழும் மஹ்தி ஹாரூண் யாஹ்யா உலகம் தோன்றி 7000 வருடம் ஆகிறது என்னும் கொள்கை கொண்டவர். அவரின் விளக்கத்தை தாசு ஏற்கிறாரா?


In his work Al-Burhan fi Alamat al-Mahdi Akhir az-Zaman, Al-Muttaqi al-Hindi, one of the Ahl al-Sunnah scholars told in 8 hadiths that the life span of this world is 7000 years .
...
“THE LIFE OF THIS COMMUNITY WILL EXCEED 1,000 YEARS, YET BE LIMITED TO 1,500 YEARS.”

One of the greatest Islamic scholars al-Suyuti made this statement after examining the hadith.

“THE LIFE OF MY COMMUNITY WILL NOT EXCEED 1,500 YEARS.”

We are now in the year 1431 Hijri calendar. That is 1431 years have passed from the life span of the community since our Prophet (saas). So then how much will the life span of the Islamic community pass the year 1500?
By numerogically examining a hadith told by our Prophet regarding the End of Times, Bediuzzaman has made the calculation that the acceptance time of the Islamic community, that is their victorious time will end in year 1506 hijri calender, meaning that it will not exceed 1500 years as told in the hadith.

1506 Hijri=2086 உலகம் அழியுதுங்கோ!!!

d). பில்ட் டௌன் மேன் படிமம் மோசடி மட்டும் உண்மை. இதுபற்றி பல பதிவுகளில் விவாதித்து விட்டோம். 

தாசின் பதிவில் சொல்ல்ப்படும் விடயங்கள் அனைத்தும் ம[னி]தாபிமானி ஆஸிக்கின் பதிவில் இருக்கும், நாம் ஏற்கெனவெ அலசிய விடயங்களே!!

நாம் ஒவ்வொரு விடயத்தையும் ,ஒன்றன் பின் ஒன்றாக சான்றுகள் அடிப்படையில் அலச முயல்கிறோம். கேள்வி கேட்டு குழப்ப முயல்பவர்களை சமாளிக்க பெரிதாக சிரமப்படத் தேவையில்லை.

இப்பதிவில் பரிணாமம் ஏன் அறிவியல் ஆக உள்ளது? இதனை தவறு என நிரூபிக்கவும் வழி காட்டி இருக்கிறோம்.

இது இல்லாமல் பரிணாமத்தின் 380 கோடி வருட வரலாற்றில், கோடிக் கணக்கான உயிரின, உறுப்பு வகைகளில் கேள்வி கேட்பது எந்த ப‌யனையும் தராது.கேட்கும் கேள்விக்கு சான்று இருப்பின் விளக்கமும் ஆய்வுக் கட்டுரைகளில் இருக்கும்.

என்றாலும் தாஸ் உலகின் உயிரியல்,ஆய்வகங்கள், பல்கலைக் கழகங்களில் பரிணாமம் ஏற்கப்பட்டு, கற்பிக்கப்படுவதை ஒத்துக் கொண்டு,பதிவிலும் சொல்லி இருக்கிறார்ர்.

//150 ஆண்டுகள் கடந்தபின்னர், இன்றைக்கும் உலகின் முக்கிய கல்வி நிறுவனங்களிலும், ஆராய்ச்சியாளர்களிடமும் டார்வினின் பரிணாமக் கொள்கை பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்ற தேடலில் ஒரு முக்கிய கொள்கையாக விளங்கி வருகிறது.//

மிக்க நன்றி. மார்க்க பந்துக்கள் முழு ஒட்டகத்தை பிரியாணியில் மறைக்கும் கூட்டம் என்பதால் இதையும் ஒத்துக் கொள்ளவில்லை.பரிணாமம் என்பதே தங்களின் மதத்தை ஒழிக்க வந்த [வழக்கமான] சதிக் கோட்பாடு என்றே சித்தரிக்கின்றனர். ஹி ஹி

ஆகவே மாப்ளே தாசை பாராட்டுகிறோம்!!


இப்பதிவைப் படிக்கும் நண்பர்களை தாசின் பதிவையும் படித்து ,விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம், பின்னூட்டத்தில் பதில் அளிப்போம்.

நன்றி!!


Facts Of Evolution (Cassiopeia Project)

39 comments:

  1. சகோ சார்வாகன்.

    இப்படி அப்பஅப்ப எழுதினால் தான், நமக்கும் ரிவைஸ் செய்ய ஏதுவாக இருக்கும். +2 தேர்வுகள் வர்ரது பாருங்க.

    நண்பர் ஜெயதேவ்தாஸ் தொடரும் போட்டுள்ளார், உலகம் எவ்வாறு எப்படி, எப்போது படைக்கப்பட்டது என்று எழுதினால் இன்னும் சுவராஸ்யம் கூடும். வரும் தொடர்களுக்காக காத்திருப்போம்.

    ஒருவர் முழுமையாக பரிணாமத்தை பார்த்திருக்கிறார் என்று பேச்சுக்காக எடுத்துக்கொண்டாலும், ஒவ்வொரு உயிரினமும் முழுமையாக இருக்காது, பாதி அதுவாகவும் பாதி வேறாகவும் இருக்கும். இல்லாத பாதிகளை எங்கே என்றால், அவ்வாறு பாதிகள் வரவில்லை, இருப்பவை பாதிதான், முழுமை என்பதே கிடையாது.

    மேலும் தொடருக்காக காத்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரேன்,
      வாங்க, மோடி பற்றிய பார்வை பற்றி பதிவு எதிர்பார்த்தேன். அலுவல் அதிகமோ?

      அப்புறம் மாப்ளே சொல்வதை உங்கள் பின்னூட்டத்தில் வேறுபடுத்திக் காட்டவும்.

      வஞ்சப் புகழ்ச்சியாக சொல்வதைக் கூட புரியாத்வர் பலர் உண்டு. 380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் உயிரியும் முழுமை பெற்றதுதான். சூழல் மாறும் போது ,அந்த முழுமை பலன் தருவது இல்லை, அபோது வேறு முழுமை வேண்ரும். ஆகவே பாதியில் இருந்து முழுமைக்கல்ல!!

      ஒரு முழுமையில்,நிலைத்தன்மையில் இருந்து இன்னொரு முழுமை,நிலைத்தன்மை என்பதே பரிணாமம்.

      உலகில் தோன்றிய 99% உயிரின‌ங்கள் மறைந்தன என்பதும் பரிணாம நிரூபணமே!!
      **

      ஆயினும் பரிணாமம் மீதான ஒரே மாதிரியான விமர்சம் கேட்டு அலுக்கிறது.

      1. இது எப்பூடி,அது எப்பூடி வந்தது என எதையாவது உயிரி, உறுப்பு காட்டிக் கேட்பது?.

      2. பில்ட் டௌன் மேன் மோசடி போல் எதையாவது காட்டுவது.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      **
      சிரிதேவி மூக்கு அறுவைச் சிகிச்சை செய்தால் குழந்தைக்கும் அது வரவேன்டும் என்னும் படம் போட்டு விளக்கம் தாசின் எதிர்பார்ப்பு ஹி ஹி

      சுன்னத் தந்தை செய்தாலும், மகனுக்கும் செய்ய வேண்டி உள்ளதை படம் போடாதவரை நல்லது!!!

      நன்றி!!!

      Delete
  2. சார்வாகன்,
    உங்க விவாதத்தை...விவாதத்தில் உள்ளவைகளை தாஸ் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது அவர்பாட்டுக்கு அவர் கூறுவதை கூறிக் கொண்டிருக்கிறாரா எனபது தெரியவில்லை.

    இதற்க்கு தான் நான் ஒரு தனி வழி வைத்திருக்கிறேன்,...இந்த விளக்கம் விவாதம் எல்லாம் நேர விரயம்; எளிதாக நான் ஒரு விவாதத்தை பிறகு எடுத்து வைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,

      பல ஆயிரம் தலைமுறைகளில் வரும் மாற்றத்தின் சான்றை படிமங்களின் ஒப்பீடு ஆய்வில் மட்டுமே காட்ட முடியும்!!.

      வேறு எப்படி நிரூபிக்க வேண்டும்என சொன்னால் பரவாயில்லை.
      பாருங்கள் பிரபஞ்சம் விரிவடைகிறது. அதை கடந்த கால்த்திற்கு நீட்டி,சுருங்கியது என் விள்க்கி அனைத்தும் ஒருபுள்ளியில் இருந்து 1400 கோடி ஆண்டுகளில் விரிவடைந்தது என்பது பெருவிரிவாக்க கொள்கை.

      இதற்கு ஒளிப்படிம சான்றுகள் மட்டுமே!!.
      **

      ஜீனோம் தலைமுறைரீதியாக மாறுகிறது, அம்மாற்றம் உரு அமைப்பில் மாறுதல்,ஒரு உயிரினல் பல் சிற்றினங்களாக பிரிதல் என்னும் செயல்களின் காரணி ஆகிறது.

      இதுவும் ஆவணப் படுத்தப்பட்ட, ஆய்வக உண்மைகள்!!

      **
      இன்னும் பரிணாம மாற்றத்தை கண்ணால் பார்ப்பேன் என்பவரை என்ன் சொல்வது?

      சரி உங்க வழி தனி வழி கலக்குங்கள்!!!

      நன்றி!!

      Delete
  3. நண்பர் ஜெயதேவ்தாஸ், பரிணாமத்திற்கு மார்க்கவியாதிகளை துணைக்கு ஏன் அழைக்கிறார் என்று தெரியவில்லை. பகவத்கீதையிலும், வேதங்களிலும் பரிணாமத்தை பத்தி அல்லது படைப்பை பத்தி ஏதாவது சொல்லியிருக்கிறார்களா என ஆராய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரேன்,

      தாஸ் [அதே]அளவுக்கு சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் மார்க்க பந்துக்கள் என்னும் போது இஸ்க்கான்,இஸ்லாமும் மூலம் ஒன்றே என்பதை நிரூபிக்கவில்லையா??

      ஆகவே தனித்தனியாக வந்தாலும் சரி, சேர்ந்து வந்தாலும் சமாளிப்போம்!!

      நன்றி!!!

      Delete
    2. The funny fact is that the same bagavatha puraanam is justifying the evolution. As stated by some Hindus. Life origins in water as Macys avatar. Then as amphibian .koormam. Then varaham.then animal man combination. Narasim. Forest dweller cum warrior. Parasuram. Then a all known ? Brahmin. Funny guys...

      Delete
    3. Just searched in google about Vishnu avatar evolution . Lots of articles have been written by them.:-)

      Delete
    4. சகோ டூலிடில் வாங்க,
      நம்ம மாப்ளே தாசு, இஸ்க்கான் பக்தர், அவரின் குரு பிரபுபாத பரிணாமத்தை தவறு என் சொல்லி விட்டார்.ஆகவே தாசு எதிர்ப்பார்.

      http://www.prabhupada.org.uk/sp_expose/evolution.htm
      os Angeles, June 1972: Srila Prabhupada asserts that Darwin's theory of evolution is inconclusive and illogical. But Darwin's is not the only theory of evolution. The Vedas explain that an evolutionary process governs the progress of the soul. "We accept evolution," Srila Prabhupada says, "but not that the forms of the species are changing. The bodies are all already there, but the soul is evolving by changing bodies and by transmigrating from one body to another.... The defect of the evolutionists is that they have no information of the soul."
      ..
      Srila Prabhupada: If he sees a plan or design, then whose design? As soon as you recognize a design, you must acknowledge a designer. If you see a plan, then you must accept a planner. That he does not know.

      நன்றி!!!

      Delete
  4. Replies
    1. சகோ முரளி,
      பரிணாமத்தை எதிர்ப்பவர் மட்டும் அல்ல,அறிய விரும்புவோரும் வினவலாம்.

      ஒரு 380 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய செயல், இன்றுவரை தொடர்கிறது. கடந்த கால நிகழ்வுகளுக்கு கிடைத்த சான்றுகள் படிமங்கள். உரு ஒப்பீட்டு கணக்கீட்டில் ,கால வரிசையில் வகைப்படுத்தி உருவானது பரிணாம மரம்..
      **

      இப்போதைய ஜீனோம் மாறுதல்கள் ,ஆவணப்படுத்தப் படுகின்றன்,இம்மாற்றங்கள் புதிய உயிரின‌ங்களை உண்டாக்கிறது என் பழ ஈக்கள் ஆய்வில் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.

      பரிணாமம்,இறை மறுப்பு/நம்பிக்கை தொடர்பு இல்லை. பரிணாமம் இப்போதைய உயிரின தோற்ற ,பரவல்,விளக்க கொள்கை.அவ்வள்வுதான்!!

      நன்றி!!!

      Delete
  5. Fruit Fly experiments in Schools
    http://tolweb.org/treehouses/?treehouse_id=4002

    http://bioweb.wku.edu/courses/biol114/vfly1.asp

    ReplyDelete
  6. b) சிவப்பு எழுத்தை பார்த்ததும் முந்தைய விசித்ர உடலமைப்பு பதிவுதான் நினைவுக்கு வந்தது.சுட்டி பார்த்ததும் விட்ட சிரிப்பை மீண்டும் ஒட்ட வைத்துக்கொண்டேன்:)

    ReplyDelete
    Replies
    1. சகோ இராசநட,

      கடவுள்ல் பாதி,மிருகம் பாதி
      இரண்டும் சேர்ந்த கலவை போல் தாசு கேட்கிறார்!!

      நீண்ட கால மாற்றங்களின் அறிவியல் விளக்கம் எப்படி சரிபார்ப்பது என் சிந்தித்தால் புலப்படும்.

      பெருவிரிவாக்க கொள்கையும்,பரிணாமமும் ஒரே மாதியான சான்றுகளின் அடிப்படையில் ஆனவை.

      பெருவிரிவாக்கம் ஏற்பவர்கள், அது எப்படி ஏற்கப்படுகிறது என் விளக்கி, அதே கண்ணோட்டத்தில் பரிணாமம் பார்ட்தால் பிடிபடும்.

      எனினும் பரிணாமம் உண்மை எனில் என் சாமி சக்தி இல்லாமல் போய்விடும்,மத புத்தகம் சொல்லும் விளக்கம் தவறாகி விடும் என்பவர்களை எதுவும் செய்ய இயலாது!!

      நன்றி!!!

      Delete
  7. நான் பிரியாணி சாப்பிடுவதை விட்டு விட்டு முட்டை மட்டும் சாப்பிடும் வெஜிடேரியனாகி விட்டேன்.இதையெல்லாம் தெரியாத வவ்வால் நான் ஒட்டக பிரியாணி சாப்பிடுகிறேன் என்று வம்பு இழுக்குறார் மை லார்ட்:)

    ReplyDelete
    Replies
    1. சகோ இராசநட‌
      நம்ம் மாப்ளே தாசு முட்டையும் சாப்பிடாத சாக பட்சினி. ஆகவே அவரைப் பொறுத்தவரை நீங்களும் அசைவ உணவாளியே!!.

      அசைவம் சாப்பிடுவது என் முடிவு செய்து விட்டு, மாடு,பன்றி,ஒட்டகம் என பிரித்து பார்த்தல் சரியல்ல!!

      ஒன்று எதுவும் சாப்பிடாதீர்கள். அல்லது கடையில் கிடைக்கும் மாமிசம் அனைத்தையும் சாப்பிடுங்கள்!!

      ஒட்டகம் அவ்வளவு சுவையில்லை என்றாலும் பரவாயில்லை!!!

      ஏதேனும் ஒட்டகம் வருதான்னு பார்ப்போம்!!

      நன்றி!!

      Delete
    2. ராச நட,

      மருத்துவர் ,உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமாகிடுச்சு கொழுப்பை குறைக்கணும் என சொல்லிட்டாரா :-))

      ஆமாம் ஒட்டகம் முட்டை எல்லாம் போடுமா சொல்லவேயில்லை :-))

      16 வயதினிலேவிலே ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சி வந்ததுனு ஒலகநாயகரே பாடி இருக்கார், அப்போ ஆட்டுக்குட்டி முட்டை போடும் தானே :-))

      Delete
  8. சகோ.சார்வாகன்!உங்ககிட்ட விவாதிப்பதை விட ஜெயதேவ்க்கு பின்னூட்டம் போடுவது சரியாக இருக்குமென அங்கே போய்விட்டேன.

    ReplyDelete
  9. பரிணாமத்தை அறிவியலாகவும்,மத நம்பிக்கையை சுய நம்பிக்கையாகவும் பார்ப்பதில் உள்ள குழப்பமே பிரச்சினைகளுக்கான காரணம்.

    கலிலியோ காலத்தில் பூமி தட்டைங்கிற மதவாத நம்பிக்கைகள் பொய்யாகிப் போனது போல் மத நம்பிக்கையும் சுக்கு நூறாகி விடுமோ என்ற பயம் முக்கிய காரணமாக இருக்கலாம்:)

    ReplyDelete
  10. சகோ.சார்வாகன்,

    நல்ல விளக்கம்.

    எனக்கென்னமோ பாகவதர் மார்க்கப்பந்துக்களின் பழைய பதிவை எல்லாம் எடுத்து வெட்டி ஒட்டி ஒரு பதிவா போட்டாப்போல இருக்கு,எல்லாம் பழைய சமாச்சாரங்களே.

    ஹி...ஹி பரிணாமம் நடந்தை நிருபிக்க சான்று இல்லை என்கிறார், அப்போ பகவான் அவதாரங்கள் எடுத்ததை நிருபிக்க சான்று உள்ளதா?

    படிமங்கள் உள்ளதா?

    நாளை பரிணாமம் நடந்தது ,நடக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்களுடன் நாமும் ஒரு பதிவிட உள்ளோம், நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கு, முன்னர் மார்க்க பந்துக்களுடன் விவாதம் செய்த போது எழுத நினைத்து அப்படியே விட்டது.

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால் வாங்க,

      தாசு பதிவை பார்த்து இப்படியும் யோசிப்பார்களா? கேள்வி கேட்க முடியுமா என் சிருப்புதான் வந்தது!!.

      உடல் அமைப்பில் ஏற்படும் சிறுபரிமாணம் வேறுவழியீலாமல் ஒத்துக் கொள்ளுகிறார்.

      அதனுடன் ஒரு உயிரினம் சில சிற்றின‌ங்களாக பிரிவது[speciation] பெரும்பரிமாணம். அவ்வளவுதான். இதைல் என்ன எபடி மறுப்பது என்க்கு புரியவில்லை.

      மனிதர்களுக்குள் எத்த்னைவிதமான மனிதர்கள்? எப்படி வந்தது?ஜீனோம் மாற்றத்தால். 44 குரோமோ சோம் உள்ள மனிதர் கூட உண்டு. அவர்களின் மக்கள் தொகை அதிகரித்தால் மனித இன‌த்தில் இரு பிரிவுகள் ஆகிவிடும்.
      http://genetics.thetech.org/original_news/news124


      தாசின் பதிவில் இருந்து புரியும் ஒரே விடயம் அவர் பரிணாமம் என்பது மந்திரம் போல் ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறும் ,அதனையும் கண்ணால் பார்க்கவேண்டும் என் விரும்புவதுதான்!!

      நன்றி!!

      Delete
    2. சகோ.சார்வாகன்,

      //தாசின் பதிவில் இருந்து புரியும் ஒரே விடயம் அவர் பரிணாமம் என்பது மந்திரம் போல் ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறும் ,அதனையும் கண்ணால் பார்க்கவேண்டும் என் விரும்புவதுதான்!!//

      மந்திரம் போல நடக்கனும், இடைப்பட்ட உயிரினம் இரண்டும் கலந்த தோற்றத்தில் இருக்கணும் என்றால்,இருக்கு, பெருமால் சிங்க தலையும், மனித உடலும், சிங்க வாலுடன் நரசிம்மவதாரம் எடுத்தாருள்ள அதான் ஆதாரம்னு சொல்லிடுங்க, பாகவதர் வாய்யே தொறக்க மாட்டார் :-))

      மேலும் ராமாயணத்தில் அனுமர்,வாலி,சுக்ரிவன் எல்லாம் மனித உடல் குரங்கு முகம், வால் எல்லாம் வைத்துக்கொண்டு மனிதர்கள் போல பேசியதாக எழுதப்பட்டுள்ளது,அப்போ குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியடையும் உருவான இடைப்பட்ட உயிரினம் அவைனு புராணமே சொல்லுதுனு சொல்லுங்க :-))

      அதெல்லாம் இல்லைனு சொன்னா ,பகவான் அவதாரம் எடுத்தது எல்லாம் கப்சா ஆகிடும்னு வாயை தொறக்க மாட்டார் :-))

      Delete
  11. http://scienceblogs.com/observations/2010/04/24/evolution-watching-speciation/

    Speciation in real time
    February 2010
    http://evolution.berkeley.edu/evolibrary/news/100201_speciation

    ReplyDelete
  12. மாப்ளே தாசு,

    1. பரிணாம கொள்கை டார்வினுக்கு முந்தையது. டார்வினின் கொள்கை பரிணாமம் நிகழ்வது இயற்கைத் தேர்வினால் என்பதுதான். அதிலும் வால்ல்ஸ்க்கும் பங்கு உண்டு.

    2.சிறுபரிணாமத்தை ஏற்கிறீர்கள் அல்லவா?. அத்வாது ஒரு உயிரியின் உடலில் அளவு சார்ந்து மாற்றம் வரலாம். இதன் காரணம் ஜீனோம் மாற்றமே. இந்த பல்வகை நாய்கள் அனைத்துக்குமே மூலம் ஒரு வகை ஓநாய். ஏற்கிறீர்களா? ஆம்/இல்லை.

    3. பெரும்பரிமாணம் என்பது இப்படி உருமாற்றம் பிறகு ,ஒரு உயிரினம் ,சில சிற்றினங்களாக பிரிகிறது. இந்த சிற்றின‌ங்கள் தங்களுக்குள் இணைந்து இனவிருத்தி செய்ய இயலாதவை.

    ஏன் புலி ,சிங்கம் இணைந்து இனவிருத்தி செய்ய முடிகிறது என்றால், அவை இன்னும் சிற்றினப் பிரிதல் நிலை அடையவில்லை.

    காலப்போகில் குதிரை ,கழுதை இணைந்து கோவேறு கழுதை என்னும் மல்ட்டு விலங்கை பெறுவது போல் செய்யும்.

    பிறகு பிரிவு நிரந்தரம் ஆகும். இந்த சிற்றினமாதல் என்பது ஆயவங்களில் பரிசோதிக்கப்பட்ட உண்மை.
    இந்த விக்கிபிடியா பாருங்கள்!!

    http://en.wikipedia.org/wiki/Speciation

    ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுமா? சான்று உண்டா!!!!!!!!!!!!
    http://aatralarasau.blogspot.com/2012/04/blog-post_04.html

    4. இரு உயிரிகள் எப்படி ஒரே இனம் அல்லது வெவ்வேறு இனம் என் சொல்கிறோம்? என்பதைப் புரிந்தால் பரிணாமம் பிடிபட்டு விடும்.

    ***

    உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நம்ம ம(னி)தாபிமானி ஆஸி(ட்)க் அகமது பதிவில் இருந்து ஒவ்வொரு பதிவாக உம்ம கைவண்ணம் காட்டி பதிவிடுங்கள்!!

    முதல் மனிதர் ஆதம்(அலை) ஒரு ஹோமோ எரக்டஸ் என்னும் உண்மையை கண்டறிந்தவர் ஆஸி(ட்)க்தான்!!

    நாம் ஏற்கெனவே அவரின் பெரும்பான்மை பதிவுகளுக்கு பதில் சொல்லி ஆயிற்று. நான் பதில்களை மீள் பதிவு செய்கிறேன்.

    ஏதேனும் மிச்சம் மீதி இருந்தால் பார்க்கிறேன்.

    அப்புறம் கேள்விகளைக் கேளுங்கள் பதில் சொல்கிறேன்!!

    நன்றி!!

    ReplyDelete
  13. வணக்கம் சகோ.ந‌ல்ல‌ ப‌திவு....
    //எனினும் பரிணாமம் உண்மை எனில் என் சாமி சக்தி இல்லாமல் போய்விடும்,மத புத்தகம் சொல்லும் விளக்கம் தவறாகி விடும் என்பவர்களை எதுவும் செய்ய இயலாது!!//

    இந்த‌ நினைப்புதான் ம‌(ந்)த‌வாதிக‌ளை பீதிய‌டைய‌ வைத்திருக்கிற‌து,கால‌த்திற்கு த‌குந்தாற் போல‌ விள‌க்க‌த்தை மாற்றி சொல்லும் பாங்கை க‌வ‌ணித்தால் புரியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இனியவன்,
      நலமா? அவர்கள் பரிணாமத்தின் உண்மைத் தன்மை மீது, தங்கள் இறைநம்பிக்கை என சவால் வைக்கும் போது நம் பணி எளிதாகிறது. ஒரு கல் பல மாங்காய்!!

      இவர்கள் பரிணாமம் எதிர்க்க எதிர்க்க நாம் தொடர்ந்து ஆவணப் படுத்தப்படுத்த வேண்டும். எப்படியும் பரிணாமம் கடவுள் வழிநடத்தியது என்னும் கொள்கைக்கு வந்தே ஆவார்கள். அப்போது சூழலுக்கு தகுந்த விளக்கம் என்னும் மதவாதிகளின் இரட்டைவேடம் காணாமல் போகும்!!

      நன்றி!!!

      Delete
  14. சகோ.சார்வாகன்,

    வைரஸ்,பேக்ட்ரீயா போன்றவற்றில் பரிணாம மாற்றம் நடைப்பெறுவதை அனைத்து உயிரியியல் ஆய்வாளர்களும் நிறுவியுள்ளனர், உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கிறது.

    ஹெச்.ஐ.வி வைரசில் பரிணாம மாற்றம் ஏற்படுவதால் தான் மாற்று மருந்துக்கண்டுப்பிடிக்க முடிவதில்லை, இதற்காக ஆய்வும் நடக்கிறது.
    ஹெச்.ஐ.வி வைரசில் நடைப்பெறும் பரிணாமம் குறித்து பதிவிட்டுள்ளேன்,பார்க்கவும்.

    http://vovalpaarvai.blogspot.in/2013/02/blog-post_27.html

    இதன் மூலம் பரிணாமம் சாத்தியமே,என அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால் பரிணாமம் என்ப்து நடைபெறுவதை அறிவியல் உலகம் ஏற்று விட்டது. சில மத்வாதிகள் மட்டுமே எதிர்க்கிறார்.

      உங்கள் பதிவு அருமை.அடிக்கடி பதிவு இடுங்கோ!!

      நன்றி!!

      Delete
  15. saaruvaagan ////தாசின் பதிவில் இருந்து புரியும் ஒரே விடயம் அவர் பரிணாமம் என்பது மந்திரம் போல் ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறும் ,அதனையும் கண்ணால் பார்க்கவேண்டும் என் விரும்புவதுதான்!!///
    சிலர் கடவுளை கண்ணால் பார்த்தால்தான் நம்புவோம் என்பது போல சொல்லுகிறார் .அவர் சொல்லிட்டு போகட்டும் .நாம் பரிணாமத்தை தொடர்வோம் .380 கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,,,,,,

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      வாங்க, நீங்க வந்தால்தான் கச்சேரி களை கட்டும்.பாருங்க‌
      படிமங்களை வைத்து ஆய்வு செய்து வகைப்படுத்தியதில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்ந்தது அறிய முடிகிறது.

      இதற்கு ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிவதே காரணம் என பரிணாமக் கொள்கை விள்க்குகிறது.

      இதுக்கு கடவுளை வைத்து என்ன விளக்கம் கொடுப்பது!!

      380 கோடி ஆண்டு முன்பு ஒரு செல் உயிர் படைத்தார்

      55 கோடி ஆண்டு முன்பு கேம்பிரியன் கடல் வாழ் உயிரிகளைப் படைத்தார்.

      .....


      60 இலட்சம் ஆண்டு முன்பு மனிதனின் மூதாதையரை படைத்தார்.

      அதில் 20+ மனித இனங்கள் படைத்தார்,

      2 இலட்சம் ஆண்டுகள் முன் ஆபிரிகாவில் ஹோமோ சேஃபியனைப் படைத்தார்,அங்கிருந்து பல் இடங்களுக்கு பரவ செய்தார்

      20,000 வருடம் முன் விவசாயம் கற்றுக் கொடுத்து குழு குழுவாக ஒரு இடத்தில் வாழுமாறு பல் நாடுகளில் சொல்லிக் கொடுத்தார்.

      5000 வருடங்களாக வேதம் அனுப்புகிறார்,

      124,000 நபிகளையும் அனுப்பினார்.

      ஒரு நபியும்,ஒரு வேதமும் உருப்படி இல்லை!!

      இப்பூடி சொல்லலாமா??? ஹி ஹி
      **
      சரி நம்ம மார்க்கம் பேசுவோம்
      அப்புறம் நம்ம் முக்மது(சல்) ஐ பிரப்ஞ்சம் படைக்கும் முன்னே அல்லாஹ் படைத்தார் என் ஒரு புரளி!!.இதற்கு குரான்,ஹதித் ஆதாரம் உண்டா!!

      நம்ம பி.ஜே அண்ணன் என்ன சொல்ராக? குரான் 3.81 விளக்கத்தில் "நபிமார்களிடம் எடுத்த உறுதி மொழி"யில் அப்படித் தெரியுதே!!!
      http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/95-nabimarkalidam-sduththauruthi-mozi/

      http://www.ahlus-sunna.com/index.php?option=com_content&view=article&id=60&Itemid=114

      "The Prophet being a mercy to all is linked to the fact that he is the intermediary of the divine outpouring over all contingencies [i.e. all created things without exception], from the very beginnings (wasitat al-fayd al-ilahi `ala al-mumkinat `ala hasab al-qawabil), and that is why his light was the first of all things created, as stated in the report that "The first thing Allah created was the light of your Prophet, O Jabir," and also cited is: "Allah is the Giver and I am the Distributor." The Sufis -- may Allah sanctify their secrets -- have more to say on that chapter." [Tafsir Ruh al-Ma`ani, Volume 017, Page No. 105]

      விள்க்கவும்

      நன்றி!!

      Delete
  16. அவரின் பதிவே உயிரியல் குறித்து தாசருக்கு ஒன்னியும் தெரியாது என்பதைக் கூறிவிட்டது. உதா. வாலும், குடல் வாலும் ஒன்று போல எழுதியிருப்பார், நல்ல நகைச்சுவை !

    ReplyDelete
  17. தாஸின் கருத்துக்களை இந்துக்களின் கருத்துக்களாக எடுத்துகொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறேன். இஸ்கான் பிரிவினர் அதுவும் அதில் ஒரு சிறு பிரிவினரே பரிணாமவியலை மறுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இஸ்கானில் கிருஷ்ணரை முழுமுதல் கடவுளாக வணங்கினாலும், அவர்கள் ஒரு கிறிஸ்துவ/இஸ்லாமிய மயமாக்கப்பட்ட இந்துக்கள் என்பது என் கருத்து.

    http://en.wikipedia.org/wiki/Hindu_views_on_evolution
    இந்துக்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிணாமவியலை எதிர்ப்பதில்லை. பரிணாமவியலை மதத்தோடு பிரச்னை கொண்டதாக கருதுவதும் இல்லை.

    இந்து மூர்த்தி வழிபாட்டில், மூர்த்திகளின் பின்னே ஒரு அரைவட்ட ஒழுங்கு அமைக்கப்பட்டிருக்கும். அது ஒழுங்கின்மையிலிருந்து ஒழுங்கு சென்று உச்சத்தில் யாளியாகவும், பிறகு அது இழிந்து மீண்டும் ஒழுங்கின்மையை அடைவதாகவும் குறிப்பிடுகிறது. இதனை பரிணாமவியலின் வழியாகவும் பார்க்கலாம். தசாவதாரம் மனிதனின் பரிணாம பாதையை குறிப்பதாக இருப்பதையும் பார்க்கலாம்.

    தமிழ்நாட்டில் எந்த இந்திய இந்து மத துறவிகளும் பரிணாமத்தை எதிர்த்தோ அல்லது பரிணாமத்தை விமர்சித்தோ, அல்லது பரிணாமத்தை பற்றி பேசியோ பார்த்ததில்லை என்னும்போது, பரிணாமவியலுக்கும் இந்து மதத்துக்கும் ஒத்துவராது என்பதுபோல எழுதுவது அறிவுநேர்மையற்ற செயல்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நிலவன்,

      வணக்கம் வாங்க,

      நீங்க நம் பரிணாம பதிவுகளை இப்போதுதான் படிக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள் என அறிய முடிந்தது. இப்பதிவு இஸ்கான் பிரிவைச் சேர்ந்த நம்ம மாப்ளே தாசின் கருத்துகளுக்கு மட்டுமே மறுப்பு. நான் பொதுவாக இந்துமதம் பரிணாமத்தை எதிர்ப்பது போல் காட்டவில்லை எனவே எண்ணுகிறேன். அப்படி எழுதும் வரிகள் இருந்தால் சுட்டுங்கள். மாற்றுகிறேன்.

      இந்து/ பவுத்த/சமண மதங்களின் பிரம்மம்/மாயாவாதம் போன்ற கருத்துகளின் மீதும் கற்றல்,தேடல் செய்பவன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

      கடவுள் பற்றிய ஆபிரஹாமிய கோட்பாடுகளுக்கு முற்றும் எதிரானவன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

      மாப்ளே தாசுவுடன் நம் விவாதம் சுமார் ஒரு வருட‌த்திற்கும் மேல் தொடர்கிறது. இது பதிவுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
      இந்த பதிவு பாருங்கள் நீங்கள் சொன்னதை ஏற்கெனெவே சொல்லி இருப்பேன்!!


      http://aatralarasau.blogspot.com/2012/12/blog-post_11.html
      இஸ்கானின் பரிணாம எதிர்ப்பு பிரச்சாரம்
      ..

      நன்றி அடிக்கடி வாங்க!!

      Delete
  18. அன்புள்ள சார்வாகன்,

    அப்படியாயின் எனக்கு பிரச்னை இல்லை. ஆயினும் இந்துபுராணங்களில் வரும் எண்ணிக்கைகளை, அப்படியே பொருள் கொள்வது தவறான நிலைப்பாட்டுக்கு இட்டுச் சென்றுவிடும்.

    இஸ்லாமிய, கிறிஸ்துவ பைத்தியங்களை பார்த்து சில இந்துக்களும், வேதங்களில் அறிவியல் என்ற உளறல்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை இப்போது காண்கிறோம்.

    ஆயினும், பல இந்து ஆச்சாரியர்கள் எப்போதும் நாத்திகவாதிகளை கொல்வதற்கு அறைகூவல் விட்டதோ அல்லது மாற்றுமதத்தினரை கொல்ல அறைகூவல் விட்டதோ, அல்லது பரிணாமவியல் போன்ற அறிவியல்களை தவறு என்று சொன்னதோ இல்லை.
    அப்படி சொல்லுபவர்கள் கூட சமீபத்தில் கிறிஸ்துவ கான்வெண்ட்டில் படித்து அந்த கிறிஸ்துவ கிறுக்கு பார்வை மூலம் இந்து ஆன்மீகத்தை பார்ப்பவர்களாக இருப்பார்கள்.



    ReplyDelete
  19. ஆபிரஹாமியத்துக்கு சாவுமணி பரிணாமவியலிருந்துதான் வருகிறது என்பதை முழுக்க உணர்ந்தவர்கள் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும். ஆகையால்தான் அவர்கள் குலைநடுங்க பரிணாமவியலை எதிர்க்கிறார்கள்.
    ஆனால், 1 பில்லியன் மக்கள் இருக்கும் இந்துமதத்திலிருந்து ஏன் அந்த எதிர்ப்பு வரவில்லை?

    உங்கள் வார்த்தையில் சொன்னால், இதில் சிந்திப்பவர்களுக்கு என்னவோ இருக்கின்றன.

    ReplyDelete
  20. நிலா நிலவனின் நல்ல கருத்துகள்.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. நுன்னுயிர் அவதாரம் எடுத்த எம்பெருமான் ஈசன் லெமூரியாவை ஆண்ட பிறகு 2000 மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி மூலம் பாண்டிய மண்ணாக மதுரையில் கடைசியா "பாண்டி மன்னன்" அவதாரம் எடுத்தார்.

    "நுன்னுயிர் ஈசனால் ஆளப்பட்ட மற்ற அடிப்பொடி நுன்னுயிர்களே பிற்காலத்தில் பாண்டிய நாட்டு மக்களாக பரிணாம வளர்ச்சி பெற்றனர்; மதுரையை ஒட்டிய பாண்டிய நாட்டில் வாழ்ந்தனர்.

    இதுவே தமிழர்களை "பாண்டி' என்று செல்லமாக நமது கேரளத்து சேட்டன்கள் அழைக்க சொல்லப் பட்ட உணமையான அறிவியல் காரணம்...!

    ReplyDelete

    ReplyDelete
  23. படத்தில் உள்ள செய்தி நன்றாக உள்ளது, தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete