Monday, March 25, 2013

அநாதை ஜீன்களை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவன் ஆதிமூலமா?



வணக்கம் நண்பர்களே,

பரிணாம விமர்சன பதிவுகளுக்கு விளக்கம் கொடுக்கும் வேலையை,தமிழ் பதிவுலகில் செய்து வருகிறோம். இதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றால் யோக்கியதை உள்ள யாரும் செய்ய முயற்சி செய்யாததால் என தந்தை பெரியார் போல் பதில் சொல்லி பதிவை தொடங்குவோம்.

பரிணாம எதிர்பாளர்கள் வைக்கும் எதிர்வாதங்கள் அனைத்துமே அடிப்படையில் இரு கேள்விகள் மட்டுமே?

1. முதல் செல் உயிரி எப்படி வந்தது?

2. ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறுமா?

இந்த இருகேள்விகளும் கூட அதுக்கு முன்னால் என்ன? என்ற கேள்வியின் கடந்தகால,எதிர்கால கணிப்பை நோக்கிய திரிபுக் கேள்விகளே!!!

முதல் செல்லுக்கு முன்னால் என்ன என்பது இப்போது சான்று இல்லை என்பதால் கேட்கிறார்கள்.

ஒருவேளை இப்போது ஆய்வகத்தில் செயற்கை உயிரி உருவாக்கினாலும், முதல் செல் உயிரியும் 100% அப்படித்தான் இருக்கும் என ஆய்வாளர்கள் சொல்ல மாட்டார்கள். இது போல் அதுவும் உருவாகி இருக்கலாம் என மட்டுமே சொல்வார்கள். கடந்த கால சூழலைக் கிடைக்கும் சான்றுகள் மூலம் மட்டுமே கணிக்க முடியும்.ஆகவே சான்றுகள் இருந்தால் விளக்கம் கிடைக்கும்.அந்த விளக்கத்தின் மீதும் எழும் கேள்விகளின் விடைக்கும் சான்றுகள் அவசியம்.இப்படி சான்று விளக்கம்,சான்று,... என தொடர் பயணமே அறிவியல்.

ஒரு உயிரி சில உயிரிகளாக பிரியும் சிற்றினம் ஆதல்[speciation] நிகழ்வு என்பது பல மில்லியன் ஆண்டுகளில் நடக்கும் என்பதால் இப்போதே  கேட்கிறார்கள்.

எத‌ற்கு எளிமையாக சான்று கொடுக்க முடியாதோ,அந்த இண்டு இடுக்குகளில்
கடவுளைத் திணிப்பது மதவாதிகளின் வழக்கம்.

http://en.wikipedia.org/wiki/God_of_the_gaps

God of the gaps is a type of theological perspective in which gaps in scientific knowledge are taken to be evidence or proof ofGod's existence. The term was invented by Christian theologiansnot to discredit theism but rather to point out the fallacy of relying on teleological arguments for God's existence.

ஒரு விடை தெரியா கேள்விகள் விடை அளிக்கப்படும் போது , எழும் பல கேள்விகளுக்கு விடையாக கடவுள் இடம் பெயர்வார் என்பது ஆன்மீகம் நீடிக்கும் வழியாகும்.

பரிணாமம் என்பது 380 கோடிஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் உயிரில் இருந்து அனைத்து உயிரிகளும் கிளைத்து தழைத்து தோன்றின என்பது ஆகும்.

இதன் சான்றாக

1. மறைந்த,வாழும் உயிரிகளின் படிம வரலாறு,ஒப்பீட்டு ஆய்வுகளின் மீதாக கட்டமைக்கப்பட்ட பரிணாம மரம்!!

2. வாழும் உயிரிகளின் ஜீனோம் மீதான ஆய்வுகள்.

இப்போது படிமம் குறித்த பரிணாம எதிர் விமர்சனங்கள் வருவது இல்லை.

ஜீனோம் என்பது 1953ல் கண்டறியப் பட்டதில் இருந்து 2001ல் மனிதனின் ஜீனோம் குறியீடுகள் ஆவணப் படுத்தப்பட்டது வரை பல ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஜீனோம் மாறுவது ஆவணப் படுத்தப்பட்டு அதில் ஏற்படும் மாற்றங்கள் ,அதன் விளைவாக ஏற்படும் உருமாற்றம், சிற்றினமாதல் பொன்றவை மீது அதிக ஆய்வுக் கட்டுரைகள் வருகின்றன.

Genome research History from 1990 CE

1990's Genome projects are begun. The yeast genome is complete in 1996, and the C. elegans genome is done in 1998.

1990's DNA microarrays are invented by Pat Brown and colleagues.

1990's DNA fingerprinting, gene therapy, and genetically modified foods come onto the scene.

1995 Automated sequencing technology allows genome projects to accelerate.

1996-7 The first cloning of a mammal (Dolly the sheep) is performed by Ian Wilmut and colleagues, from the Roslin institute in Scotland.

2000 The Drosophila genome is completed. The Arabidopsis genome is completed. The human genome is reported to be completed.

2001 The sequence of the human genome is released, and the "post-genomic era" officially begins.

2009 Controversies continue over human and animal cloning, research on stem cells, and genetic modification of crops.

நம்மிடம் [ஒரு சில விதிவிலக்குகள் தவிர] வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே உள்ளன.இதில் இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரிகளின் ஜீனோமின் மூல வேதிப்  பொருள்கள் ஒன்றே என் உறுதி செய்துள்ளனர்.

ஒத்த உருஅமைப்பு கொண்ட,பரிணாம மரத்தில் ஒரே மூதாதையர் கொண்ட வாழும் உயிரிகளின் ஜீனோம் நெருங்கிய தொடர்பு இருப்பதும் ஆவணப் படுத்தப் பட்டு உள்ளது.

எ.கா ஆக மனிதன்(ஹோமோ சேஃபியன்) சிம்பன்சி ஆகிய வாழும் உயிரிகளை எடுப்போம். இவை இரண்டும் ஒரே முன்னோரில் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு பிரிந்தன என இப்போதைய பரிணாம அறிவியல் விளக்கம் ஆகும்.

அந்த பொது முன்னோரின் ஜீனோம் நம்மிடம் கிடையாது. மனிதன்,சிம்பன்சி இடையே 98% ஜீனோம் ஒற்றுமை உண்டு.அதாவது 2% வித்தியாசமும் உண்டு.

அப்படி வித்தியாசம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு உயிரி ,சில உயிரிகளாக விலகி பிரிய முடியும்.

பரிணாம விமர்சன பதிவில் மறுப்பு சொல்ல ஒன்றும் இல்லை.
அ)ஒவ்வொரு வாழும் உயிரியின் ஜீனோமிலும் , சில குறிப்பிட்ட வகை ஜீன்கள் 10 _30% வரை உள்ளன. அது எப்படி என்பதே அவர் பதிவு.

இதை மாற்றி சொன்னால்

ஆ)அதாவது 70_90% ஜீன்களுக்கு பரிணாம விளக்கம் இருப்பது போல் இவற்றுக்கு இல்லை என்பது ஏன் என்கிறார்.

ஆ) ல் சொன்ன விடயம் , ஜீன் ஒப்பீட்டு ஆய்வுகளின் படி விளக்கம் அளிக்க முடிகிறது.

அ) ல் சொன்ன விடயம் , ஜீன் ஒப்பீட்டு ஆய்வுகளின் படி தெளிவாக விளக்கம் அளிக்க முடியவில்லை.

அவரிடம் நாம் எப்போதும் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்??

இரு உயிரிகள் ,ஒரே வகை இனம்,வெவ்வேறு வகை இனம் என எப்படி வரையறுப்பது? என்பதுதான்.

இங்கும் கொஞ்சம் மாற்றி கேட்கிறோம்!! 

இரு ஜீன்கள் ,ஒரே வகை இனம்,வெவ்வேறு வகை இனம் என எப்படி வரையறுப்பது? என்பதுதான்.

ஜீன்கள் என்பவை ப்ரோட்டின் தயாரிக்கும் ஜீனோமின் பகுதி. ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள் சிறு பரிணாமத்தை ஏற்படுத்துகிறது. குரோமோசோம் அளவு ஜீனோம் மாற்றங்கள் பெரும் பரிணாமத்தை ஏற்படுத்துகிறது.

இங்கு பிரச்சினையாக நாம் கருதுவது ஒரு புதிய ஜீனை ஆய்வகத்தில் உருவாக்கி, அதுபோல் இயற்கையில் ஜீனோமில் நிகழ்கிறது என்றாலும், பரிணாம எதிர்ப்பு மதவாதிகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஏற்கெனெவே வேதிப் பொருள்களால் செயற்கை ஜீனோம் வடிவமைத்து, அதனை செல்லினுள் வைத்து புதிய உயிரி உருவாக்கிய க்ரைக் வெண்டரின் கருத்தை கூற்று சுற்றுதல் முறையில் பரிணாம மர எதிர்ப்பு விமர்சனமாக காட்டுகின்றனர்.

வைரஸ்,பாக்டீரிய மீது ஆய்வு மேற்கொள்ளும் பரிணாம ஆய்வாளர்கள் குழு,பரிணாம மர கட்டமைப்பில் புதிய கருத்தினை முன் வைக்கின்றனர்.

ஜீன்களின் பரிணாம வரலாறு அடிப்படையில் பரிணாம மரம் கட்டமைக்கப்பட வேண்டும் என்கிறனர். வைரஸ்கள் போன்றவை உயிரிகளின் ஜீனோமில் இணைய முடியும் எனவும் சில வைரஸ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைரஸ் தாத்தா பதிவில் ஏற்கெனெவே இந்த டி நேவோ[de nova] என்னும் திடீர் படைப்பு பற்றியும் விவாதித்து இருக்கிறோம். 


ஜீன்கள்பரிமாற்றம் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களுக்கிடையே மட்டுமன்றி பாக்டீரியாவில் இருந்துபிற மேம்பட்ட[மனிதன் போன்றஉயிரினங்களுக்கு இடையேயும் நடக்கிறதுஇது மனிதக்குடலில் நடக்கிறது ஒரு சான்றாகும்..

 இது டி நோவா[???????????] படைப்பியல் கொள்கை மூலம் புதிய உயிர்கள் தோன்றுவதுசாத்தியம் என்பதை விள்க்குகிறது.  ஆகவே டார்வினின் பரிணாம் மரம் இடையிடையேஇணைக்கப்பட்ட வலைப் பின்னல் போன்ற அமைப்பாக மாற்றப் பட வேண்டும்."


ஒரு புதிய ஜீன் என்றால் எப்படி வரையறுப்பது??? அனைத்து ஜீனோம்களும் ஒரே வேதிப் பொருள்களால் ஆனவை. ஜீன் என்பது தயாரிக்கும் ப்ரோட்டின் வைத்து  ஆய்வாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.  

ஒரு புதிய ஜீன் தோன்றுகிறது என்றால், அது ஏற்கெனவே உள்ள ஒரு ஜீன் பிரதி எடுக்கப்பட்டு[gene duplication] சில மாற்றங்களுக்கு உள்ளாவது என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து.

ஒரு ஜீன் மனிதனின் ஜீனோமில் இருக்கிறது என்றால், சிம்பன்சி ஜீனோமில் கொஞ்சம் மாறுதலுடன் இருக்கிறது எனப் பொருள்.

இப்போது ஒரு ஜீன் அடைந்த மாற்றங்களினால், இதர உயிரி ஜீன்களுடன் உறவு,தொடர்பு பொருத்த இயலவில்லை.இதனை அநாதை ஜீன்கள் என அழைக்கின்றனர்.மதவாதிகள் எப்போதும் வார்த்தை விளையாட்டு, கூற்று சுட்டுதல் போன்ற வேலைகளில் கைதேர்ந்தவர் என்பதால் இந்த சொல்லை வைத்து கயிறு திரிப்பதில் வியப்பு இல்லை.


முதலில் அறிவியல் கற்பவர்கள்,சான்று என்பதை உணர்வதும்,அத்னை அளவீடாக்கி பொருந்தும் விளக்கம் அளிப்பதும் அறிவியல் என்பதையும், நாம் ,நம்மை சுற்றி நடக்கும் விடயங்களை புரிய‌ சான்றுகளைத் தேடுகிறோமோ தவிர நமக்காக அனைத்து சான்றுகளும் தயாராக இருக்கிறது என நினைப்பது பேதைமை என உணர வேண்டும்.

பரிணாமத்தின் மீது வைக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் சார் விமர்சன‌ங்களுக்கு விள்க்கம் எப்போதும் உண்டு. அந்த வகையில் இக்கட்டுரை தெளிவாக அநாதை ஜீன்கள் உருவாவது ஏன் என்பதை நன்கு விளக்குகிறது.


இக்கட்டுரை இரு ஆய்வுக் கட்டுரைகளை எடுத்து இந்த அநாதை ஜீன்கள் எப்படி வந்து இருக்கலாம் என விளக்குகிறது.

1. ஜீன் பிரதி எடுத்தல் மூலம் பிறக்கும் ஜீன், ஏற்படும் மாற்றங்களின் சுவடுகள் அழிந்து விடுதல்.

Khalturin et al. (1) suggest that “once a certain evolutionary time has elapsed” sequence similarity to the ancestral gene will be erased. Mutational erasure is clearly possible over time.  Marshall et al. (4) tried to quantify the idea in 1994, concluding that after about 10 million years, genes mutated into pseudogenhood could no longer be revived by mutation (but retain enough sequence to still be recognized as pseudogenes).

2. ஜீனோமின் ப்ரோட்டின் தயாரிக்காத பகுதியில்[Non coding genome or Junk genome] ஏற்படும் மாற்றங்கள், இப்படி ஜீன்களை உருவாக்கி இருக்கலாம் எனக் கருத்தாக்கம் வைக்கின்றனர்.இதற்கு ஆதரவாக கடந்த 5 ஆண்டுகளில் பல ஆய்வுக கட்டுரைகள் வெளிவந்து உள்ளன.

Tautz (2) provide a step-by-step scenario for de novo gene creation.  These authors recognize the stretched plausibility of such ideas, given the seemingly miniscule probability that functional genes—with strongly advantageous effects—could arise this way.  


இப்போது இந்த இரு கருதுகோள்களும் பரிசோதிக்க பட்டே ஏற்கப்படும்.

எப்படி பரிசோதனை நடக்கும்??.

இனவிருத்திக் காலம் குறைவான நுண்ணுயிர்களின் ,தொடர் தலைமுறைகளின் ஜீனோம் தொடர்ந்து ஆவணப் படுத்தபட்டு அதில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றால் விளக்கம் கிடைக்கும்.

1.ஜீன் பிரதி எடுத்தல் மூலம் ஒரு புதிய‌ ஜீன் தோன்றி, ஒரு குறிப்பிட்ட தலைமுறைக்கு பின் தோன்றிய சுவடு இல்லாமல் போதல்.மாற்றம் அடைந்த ஜீன்கள் தொடர்ந்து மாறுபட்ட ப்ரோட்டின் தயாரித்தல்.

2. ஜீனோமின் ப்ரோட்டின் உருவாக்காத பகுதியில் இருந்து, புதிய ஜீன் உருவாகி ப்ரோட்டின் த்யரித்தல்.

இரண்டும் நடக்குமா இல்லை, ஏதேனும் ஒன்று மட்டும் சரியா என்பது ,எதிர்காலத்தில் அறிவோம்.

இப்படிப் பட்ட கேள்விகளின் மீதுதான் முதுகலை/முனைவர் பட்ட ஆய்வுகள் நடக்கும்.

ஜீனோம் மாறுகிறது,அது உருமாற்றம் ஏற்படுத்துவது நன்கு அறிந்த விடயம்,ஜீனோமின் மாற்றம் சூழல் சார்ந்தும், சாராமலும் நடப்பதும் அறிந்த விடயம்.நுண்ணுயிர்களில் ஏற்பட்ட ஒரு உயிரி ,சில உயிர்களாக பிரிவதும் ஆவணப் படுத்தப்ப்ட்ட விடயம்.

விடை தெரிந்த கேள்விகளில் இருந்தே பரிணாமம் குறித்த புரிதல் எளிதில் கொள்ள இயலும்.

நாம் இதுதான் மேண்டில் என சொல்லி ,இதில் இருந்து வெளிச்சம் வருகிறது என சொல்கிறோம், அவர்களை மேண்டிலை உடைத்து நம்மீது பழி போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் ஹி ஹி!!!




வளர்ச்சி அடையும் ஒவ்வொரு கொள்கையிலும் உள்ள விடை தேடும் கேள்விகள் பரிணாமத்திலும் உண்டு.இந்த அநாதை ஜீன்களின் கேள்விக்கு விடை வந்தால்,மதவாதிகள் மீண்டும் முதல் செல் எப்படி வந்தது என்பார்!!!

பரிணாமம் என்பது உயிரின வரலாறு மட்டும் அல்ல,உயிரற்ற பொருள்களின்
பரிணாம வளர்ச்சி பெரு விரிவாக்க கொள்கை, மொழிகளின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியே

தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிக் குடும்ப மொழிகள் ஒரே மூல மொழியில்[proto dravida] இருந்து தோன்றியது என்பது ஏற்கப்பட்ட கருதுகோள் என்றாலும், அதற்கு சொல் ஒப்பீட்டில் உள்ள ஒற்றுமை பயன்படுகிறது, அப்படி ஒப்பிட முடியா சொல்லை விளக்குவது கடினம்.அதுபோல்தான் இந்த அநாதை ஜீன்கள் விடயம். 

விளக்கம் கொடுக்கலாம்,ஆனால் சான்று மட்டுமே மெய்ப்பிக்கும்.

ஜீனோம் அறிவியலில் விடை தெரியா கேள்விகளுக்கு விடை தேடும் ஆய்வாளர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த மதவாதிகளின் ஒரே கேள்வி அற்ற பதில் இதுதான்!!!

"மதபுத்தகம் கூறும் அநாத இரட்சகன்,ஆபத்பாந்தவன், ஆதிமூலம் ஆகிய ஆண்டவனின் ஆட்சியை,சட்டங்களை உலகெங்கும் கேள்வி கேட்காமல் ஏற்கும் வண்ணம் சாம, தான,பேத ,தண்ட வழிகளை பின்பற்றுவோம்" என்பதுதான்

உலகில் யாரும் அநாதை இல்லை!!!.ஒருவரின் பெற்றோர் அறிய  இயன்றால் நல்லது, இல்லை எனில் வானத்தில் இருந்து வந்தார் எனவா சொல்வோம்!!!

சிந்திக்க மாட்டீர்களா!!!!

மதபுத்தகம் கூறுகிறது!!!!!!!!!!!  

33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

எதிர்க் குரல் பதிவு முழுக்க முழுக்க இந்த கட்டுரை அடிப்படையில் மட்டுமே எழுதப் பட்டு இருந்தாலும் முடிவுரையை விட்டுவிட்டதை அறிய முடியும். நாம் முடிவுரை&தமிழாக்கம் கொடுத்து நிறைவு செய்வோம்.

http://ccsb.dfci.harvard.edu/web/export/sites/default/ccsb/publications/papers/2013/All_alone_-_Helen_Pilcher_New_Scientist_Jan_2013.pdf


We still have a lot to learn about orphan  genes, but we are now starting to trace their
ancestry. And it looks as if we couldn’t find the families of most orphans because they don’t
really have families. The raw DNA from which they sprung can be traced, but as genes they
are the first of their kind. In this sense, the term orphans may be a misnomer. Perhaps
they ought to be renamed Pinnochio genes–non-genes carved by chance and natural
selection into proper, “living” genes.

அநாதை ஜீன்கள் பற்றி நாம் அறிய வேண்டியவை பல உள்ளன, என்றாலும் அதன் தோற்றம் பற்றியே அதிகம் தேடுகிறோம்.அவைகளுக்கு மூதாதையர் இல்லாது போல் இருப்பதால் நம்மால் மூதாதையர் காண இயலவில்லை. ஜீனோமின் எந்த பகுதியில் இருந்து இந்த அநாதை ஜீன்கள் வந்தது என நம்மால் சொல்ல முடியலாம்,ஆனால் இவை ஒரு தனித்துவ வகை ஜீன்கள்.ஆகவே அநாதை என் சொல்வது தவறான சொல் வழக்கு என்பதால் பின்னாச்சியோ ஜீன் என அழைக்கலாம். அதாவது ஜீன்களாக இல்லாத ஜீனோமின் ஒரு பகுதி, சூழல் சார்[natural selection],சாரா[chance] விளைவால், ஜீனாக மாறி விட்டது.



பின்னாச்சியோ என்றால் ஒரு கதையில் வரும் மரப் பொமமை மனிதனாக மாறிவிடும்,அது பொய் சொல்லும் போது மூக்கு வளரும் என கதை நகரும்.
http://en.wikipedia.org/wiki/Pinocchio

he was created as a wooden puppet but dreamed of becoming a real boy. He has also been used as a character who is prone to telling lies and fabricating stories for various reasons....Pinocchio is known for having a short nose that becomes longer when he is under stress (chapter 3), especially while lying.

பரிணாம எதிர்ப்பாளர்களின் மூக்கு வளருமா!!! ஹி ஹி
நன்றி!!!

42 comments:

  1. http://phys.org/news/2012-10-evolution-genes-captured.html

    Evolution of new genes captured October 22, 2012 (Phys.org)—Like job-seekers searching for a new position, living things sometimes have to pick up a new skill if they are going to succeed. Researchers from the University of California, Davis, and Uppsala University, Sweden, have shown for the first time how living organisms do this. Ads by Google Microbial Diversity - Bacterial, Fungal, Functional Genes Pyrosequencing Services - researchandtesting.com The observation, published Oct. 19 in the journal Science, closes an important gap in the theory of natural selection. Scientists have long wondered how living things evolve new functions from a limited set of genes. One popular explanation is that genes duplicate by accident; the duplicate undergoes mutations and picks up a new function; and, if that new function is useful, the gene spreads. "It's an old idea and it's clear that this happens," said John Roth, a distinguished professor of microbiology at UC Davis and co-author of the paper. The problem, Roth said, is that it has been hard to imagine how it occurs. Natural selection is relentlessly efficient in removing mutated genes: Genes that are not positively selected are quickly lost. How then does a newly duplicated gene stick around long enough to pick up a useful new function that would be a target for positive selection? Experiments in Roth's laboratory and elsewhere led to a model for the origin of a novel gene by a process of "innovation, amplification and divergence." This model has now been tested by Joakim Nasvall, Lei Sun and Dan Andersson at Uppsala. In the new model, the original gene first gains a second, weak function alongside its main activity—just as an auto mechanic, for example, might develop a side interest in computers. If conditions change such that the side activity becomes important, then selection of this side activity favors increasing the expression of the old gene. In the case of the mechanic, a slump in the auto industry or boom in the IT sector might lead her to hone her computer skills and look for an IT position. The most common way to increase gene expression is by duplicating the gene, perhaps multiple times. Natural selection then works on all copies of the gene. Under selection, the copies accumulate mutations and recombine. Some copies develop an enhanced side function. Other copies retain their original function. Ultimately, the cell winds up with two distinct genes, one providing each activity—and a new genetic function is born. Nasvall, Liu and Andersson tested this model using the bacterium Salmonella. The bacteria carried a gene involved in making the amino acid histidine that had a secondary, weak ability to contribute to the synthesis of another amino acid, tryptophan. In their study, they removed the main tryptophan-synthesis gene from the bacteria and watched what happened. After growing the bacteria for 3,000 generations on a culture medium without tryptophan, they forced the bacteria to evolve a new mechanism for producing the amino acid. What emerged was a tryptophan-synthesizing activity provided by a duplicated copy of the original gene. "The important improvement offered by our model is that the whole process occurs under constant selection—there's no time off from selection during which the extra copy could be lost," Roth said.

    Read more at: http://phys.org/news/2012-10-evolution-genes-captured.html#jCp

    ReplyDelete
    Replies
    1. மாமு,

      கடைக்குள்ள டீயை ஆத்தி வச்சிட்டு, குடு குடுன்னு வெளியில வந்து அதை நீரே எடுத்து கபக் ........கபக் என்று குடிப்பது தமாசாய் இருக்கு.

      Delete
    2. வாங்க மாப்ளே தாசு,

      ஆய்வகத்தில் இயல்பாகவே ஒரு ஜீன் உருவாகுதலை ஆவணப் படுத்திய ஆய்வுக் கட்டுரை என்பதால் அதன் சுருக்கம் இட்டு விட்டேன்.நாளை ஏதேனும் தகவல் தேவை எனில் நம்மிடம் இருக்கும் அல்லவா!!.

      ஒரு புதிய ஜீன் உருவானதற்கு சான்று உண்டா என யாரும் கேடக் கூடாது அல்லவா!!!

      நம்ம கடை டீயை நாமே குடிக்காவிட்டால் எப்பூடீ!!!

      நன்றி!!!

      Delete
    3. http://www.plosbiology.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pbio.1001466

      Evolutionary Biology for the 21st Century

      Delete
  2. ஆராய்ச்சி தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அய்யா வணக்கம்,

      10_30% ஜீன்களின் பரிணாம வளர்ச்சி தெரியவில்லை என ஆய்வாளர்கள் சொலவ்தை ஏற்பவர்கள் மீதி 70_90% ஜீன்களின் பரிணாம வரலாறாக ஆய்வாளர்கள் சொல்வதையும் ஏற்க மாட்டார்கள்.

      இந்த வகை ஜீன்களின் தோற்றம் பற்றி புதிய விளக்கம் வரும் வரை ,இதைப் பேசுவார்கள் அவ்வளவுதான்!!!

      குறைந்த பட்சம் ஆய்வாளர்கள் தங்களின் தேடுதல்களில் உண்மையாக இருப்பதை அனைவரும் ஏற்க வேண்டும்.

      இயற்கை தனது செயல் அனைத்துக்கும் சான்று வைத்து இருக்கும் என அவசியம் இல்லை!!!

      கிடைக்கும் சான்றுகளை வைத்து பொதுப்படுத்தலின் விளக்கம்தான் பெரும்பான்மை அறிவியல் கொள்கைகள்!!!

      நன்றி!!!

      Delete
    2. ரெண்டு வார்த்தைக்கே இவ்வளவு பெரிய விளக்கமா? நீங்க குடுத்த விளக்கத்துக்கும் அவரு காமன்டுக்கும் சம்பதம் இரூகிரா மாதிரி தெரியலையே............ மாமுவோட வியாபார டிரிக்சே தனிதான்........

      Delete
    3. மாப்ளே,

      நம்ம கந்தசாமி சார் நமது பரிணாம விமர்சனம் பதிவுகளுக்கு மறுப்பு எழுதும் விடயம் தொடரட்டும் என்கிறார். நாம் நம் பதிவின் சாரம் கொடுத்தோம் அவ்வளவுதான்!!

      நன்றி!!

      Delete
  3. அவர்கள் பேசுவது ‘வாழைப்பழ ஜோக்’ மாதிரி இருப்பதை அவர்கள் அறியார்களா என்ன?
    பல இடுக்குகளை -God of the gaps - தேடி ஓடுகிறார்கள்.

    அப்புறம் இன்னொரு சந்தேகம். குரானில் உள்ளதெல்லாம் தலையின் வார்த்தைகள் என்கிறார்கள். ஆனால் தல எதுக்காக தன்னைப் பற்றியே //அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.// அப்டின்னு அப்பப்ப தம்பட்டம் அடிக்கிறார். தேவை என்ன? ஏன் அடிக்கடி இது போன்று சொல்லி தன்னையே பெருமைப் படுத்திக் கொள்கிறார்??!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தருமி அய்யா,
      வணக்கம்
      இந்த யூத,கிறித்தவ பழைய ஏற்பாட்டுக் கடவுளுக்கும்,குரானிய கடவுளின் த்னமைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

      ஆனால் அல்லாஹ் எப்போதும் தன்னைப் பற்றி [உயர்வாக] சொல்வது போலவே குரானில் இருக்கும். ஜிப்ரீல்[அலை] முகமதுவிடம் சொல்வது போல் இருக்காது!!.ஆனாலும் அப்படித்தான் விள்க்கம் சொல்வார்கள்!!

      ஜிப்ரீல்[அலை] என்பவர் அல்லாவின் ரூஹ் என்பார்கள்,ரூஹ் என்றால் உயிர்,ஆத்மா ,spirit எனவும் பொருள் உண்டு.
      http://en.wikipedia.org/wiki/Holy_Spirit_(Islam)

      The Holy Spirit (Arabic: الروح القدس, al-Ruḥ al-Quds) in Islam is mentioned several times in the Quran, and is interpreted by Muslims as referring to the angel Gabriel.


      19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

      ஆகவே குரானின் படி மட்டும் ஜிப்ரீல் என்பவர் யார்? என்பது சிந்திக்க தக்க கேள்வி!!!
      **
      உங்களுக்கு இன்னும் மார்க்கம் பிடிபடவில்லை என நினைக்கும் போது எனக்கு கவலையாக இருக்கிறது!!

      அல்லாஹ் அடிக்கடி செய்யாதே, செய்தால் தவறு,இருந்தாலும் செய்துவிட்டால் மன்னிப்பேன் என்பார்!!

      அவர் மன்னிக்க தயாராக இல்லாத ஒரே விடயம், அவருக்கு இணை வைப்பது மட்டும்தான்!!

      இணை வைப்பதை தவிர , முக்மது(சல்) ஐ தூதராக ஏற்க மறுத்தல தவிர எதையும் மன்னிப்பார்!!

      முதல்& இரண்டாம் உறுதிமொழிகளே இதுதானே!!

      அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை!!
      முக்மது(சல்) அல்லாவின் தூதர்!!!

      ஆகவே இது ஒரு எளிய இனிய மார்க்கம்!!

      நன்றி!!!

      Delete
    2. See this!!!
      (19:17:7)rūḥanā=Our Spirit

      (21:91:7) rūḥinā Our Spirit

      Pickthall: And she who was chaste, therefor We breathed into her (something) of Our Spirit and made her and her son a token for (all) peoples.

      Yusuf Ali: And (remember) her who guarded her chastity: We breathed into her of Our spirit, and We made her and her son a sign for all peoples.
      (66:12:10) rūḥinā Our Spirit

      Pickthall: And Mary, daughter of 'Imran, whose body was chaste, therefor We breathed therein something of Our Spirit. And she put faith in the words of her Lord and His scriptures, and was of the obedient.

      Yusuf Ali: And Mary the daughter of 'Imran, who guarded her chastity; and We breathed into (her body) of Our spirit; and she testified to the truth of the words of her Lord and of His Revelations, and was one of the devout (servants).

      Delete
    3. இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக எங்கே எப்படி ஊதினார்கள் என்று எதிலோ வாசித்த நினைவு ....?

      Delete
  4. நல்ல பதிவு சகோ. அப்படியே என் முகநூலில் பதிந்து விட்டேன். நாமும் அங்க இங்க ஓடியாடித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம் சிந்திப்பவர்கள் சிந்திக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இனியவன்,
      க்டந்த இருவருட பரிணாம எதிர்ப்பின் வீரியம்,சுதி இறங்கி இருப்பதை தெளிவாக அவதானிக்க முடியும்.

      இந்த பதிவில் கூட 10_30% ஜீன்களின் பரிணாம வரலாறு குறித்த சிக்கல் என சொல்வதில் இருந்து மீதி 70_90% ஜீன் பரிணாம் வரலாறு தெளிவாக இருப்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டார்கள்.

      பாருங்கள் 21001 ல் இருந்து இன்றுவரை என்னே ஒரு முன்னேற்றம்!!!

      புதிய ஜீன்கள் தோன்றுவது சான்றாகிவிட்டது.ஏற்கெனவே தோன்றிய சில[10_30%] குறிப்பிட்ட [அநாதை] ஜீன்களின் உருவான சுவடுகள் இல்லை!!.

      அந்த அநாதை ஜீன்களும் மாறும் என்பதும் உண்மைதான்,பிறகு சிக்கல் இல்லையே!!

      நன்றி!!

      Delete
  5. நான் இப்பொழுதுதான் சகோ.ஆசிக் அகமத் பதிவில் நீங்கள் எதிர்க்குரல் கொடுப்பீர்கள் என சொல்லி விட்டு வந்தேன்.என்னோட அசரிரீ கேட்ட பதிவா அல்லது ஆசிக்கின் பதிவைப் பார்த்தவுடனே அக்னி ஏவுகளை பட்டனைத் தட்டி விட்டீர்களா என்று தெரியவில்லை:)

    பரிணாம கோட்பாட்டில் பெட்ரோமாக்ஸ் கவுண்டமணி!அட்ராசக்க!அட்ராசக்க:)

    ReplyDelete
    Replies
    1. வாஙக சகோ இராசநட,

      படிம வரலாற்றில் பெரும்பான்மை சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விட்டன.

      பாருங்கள் ஜீனோன் ஆய்வில் 2001 ல் இருந்து ஏற்பட்ட முன்னேற்றங்கள் வெறும் 10_30 ஜீன்களின் தோற்றம் பற்றி மட்டும் சரியாக இன்று கூற முடியவில்லை.

      அந்த அநாதை ஜீன்களும் மாறாமல் இருக்காது!!!

      அந்த ஜீன்களின் மாற்றத்தையும் ,அவதானித்தால் பிடிபடும்.

      நன்றி!!

      Delete
  6. மாமு,

    நீங்க எத்தனை கெமிக்கல் வேண்டுமானாலும் எடுத்துக்குங்க, அதை எப்படி வேண்டுமானாலும் கிண்டுங்க, எத்தனை வருஷத்துக்கு வேணுமின்னாலும் கிளருங்க. அது ஒரு போதும் உசிரு வந்து என்ன மாமு சவுக்கியமான்னு கேட்காது. அப்படியேதான் இருக்கும்.

    பிக்காலித் தனம் பண்ணலாம் இந்த அளவுக்கு பண்ணப் படாது.

    thirunthu makku maamu, thirunthu...........

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,
      பரிணாமம் என்பது ஒரு உயிரி ,சில உயிரிகளாக பிரிதல். முதல்ல் செல்லின் தோற்றம் பற்றிய அறிவியல் பெயர் அபியோஜெனெசிஸ்,அதிலும் கூட தொடர்ந்து ஆய்வு நடக்கின்றன.
      http://www.gla.ac.uk/projects/originoflife/html/2001/laymans_abstract.htm
      The Origin of Life research project
      Michael J. Russell & Allan J. Hall
      University of Glasgow,
      January 2000

      This is an explanation of how life might have originated. It is written for non-specialists. A detailed account was published in 1997 in the Journal of the Geological Society of London, an appropriate journal because we consider that a major geological process, the cooling by seawater of rocks under the floor of the ocean, played an important role in the origin of life. Such a process might seem remote from our everyday knowledge of life but it has now been known for more than twenty years that genetically primitive micro-organisms are to be found living at warm springs on the ocean floor.

      The challenge of this research is to explain how a relatively simple 'living' organism similar to a single bacterial cell could form, function and reproduce.

      உயிர் என்பது , ஆற்றல் உடகொண்டு,தன்னைத் தானே பிரதி எடுக்கும் சக்தி உடைய உயிர்வேதிப் பொருள் என்பதே வரையறை.

      பாருங்கள் எளிய உயிர் அமைப்பு என்பதை உருவாக்கினால்,அது நீங்கள் நினைப்பது போல் தாசூ நீ எங்கே இருக்கே மாப்ளே என கூவாது!!

      அது வேதிப் பொருள், உயிருக்கு இடைப்பட்ட நிலை போல் இருக்கும்.

      வைரஸ் பாருங்கள் அதற்கு உயிர் இருக்கிறது என்ற சொல்வோம்!!

      http://serc.carleton.edu/microbelife/yellowstone/viruslive.html

      "Viruses straddle the definition of life. They lie somewhere between supra molecular complexes and very simple biological entities. Viruses contain some of the structures and exhibit some of the activities that are common to organic life, but they are missing many of the others. In general, viruses are entirely composed of a single strand of genetic information encased within a protein capsule. Viruses lack most of the internal structure and machinery which characterize 'life', including the biosynthetic machinery that is necessary for reproduction. In order for a virus to replicate it must infect a suitable host cell".

      அதுபோல் ஒரு எளிய [உயிர்] அமைப்பை நிச்சயம் உருவாக்குவார்கள்!!

      நன்றி!!

      Delete
  7. //பிக்காலித் தனம் பண்ணலாம் இந்த அளவுக்கு பண்ணப் படாது.//

    இப்படி தடால்ண்டு உண்மையை போட்டு எல்லோர் முன்னிலையிலும் உடைக்கலாமோ! :-)

    பாவம் சகோ சார்வாகன்! அவரும் என்னென்னமோ வெட்டி ஒட்டி சமாளிக்கப் பார்க்கிறார். நடக்கட்டும்....நடக்கட்டும்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ சு.பி,
      ஸலாம்.

      எதிர்க்குரல் பதிவு என்ன சொல்கிறது?

      அனைத்து உயிரிகளின் ஜீனோமில் 10_30% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்த இயலாத நிலையில் இப்போது இருக்கிறது.

      நான் சொல்கிறேன் அப்படி எனில் 70_90% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்தும் வண்ணம் 1996 ல் இருந்து ஆய்வாளர்கள் சாதித்து உள்ளனர்.

      1996 ல் முதன் முதலில் ஈஸ்ட்டின் ஜீனோம் அறியப்பட்டது, 2001ல் மனிதன் ஜீனோம் அறியப்பட்டது.

      ஆகவே குறைந்த காலத்தில் இந்த அளவு சாதனை பாராட்டத் தக்கது!!.

      அறிந்த ஆவணப் படுத்தப்பட்ட விடயங்களையும் ஏற்க மறுப்பவர்கள், அறிய முயற்சிக்கும் விவரங்களின் மீது முடிவு வந்தால் மட்டும் ஏற்று விடுவீர்களா!!!
      **

      அந்த அநாதை ஜீன்களும் மாறும் என்னும் போது, முயுடேஷன் சுவடுகளும் அழியும் என்னும் போது இதில் பிரச்சினை எதுவும் இல்லை.
      http://en.wikipedia.org/wiki/Deletion_(genetics)

      In genetics, a deletion (also called gene deletion, deficiency, or deletion mutation) (sign: Δ) is a mutation (a genetic aberration) in which a part of a chromosome or a sequence of DNA is missing. Deletion is the loss of genetic material. Any number of nucleotides can be deleted, from a single base to an entire piece of chromosome.[1] Deletions can be caused by errors in chromosomal crossover during meiosis. This causes several serious genetic diseases. Deletion also causes frameshift.

      ஒவ்வொரு உயிரிக்கும் தனிப்பட்ட வகை ஜீன்கள் இருந்தாக வேண்டும்,எப்படி வந்தது என இன்று அறிய முடியாதவை நாளை சாத்தியம் ஆகும்!!

      "இதுதான் மேண்டில்[பரிணாமம்] ,இதில் இருந்து பளீர் என வெளிச்சம் [அனைத்து உயிரிகளும்] வரும்!!!

      நன்றி!!

      Delete
    2. //இதுதான் மேண்டில்[பரிணாமம்] ,இதில் இருந்து பளீர் என வெளிச்சம் [அனைத்து உயிரிகளும்] வரும்!!!
      //


      You have also become an expertin using BRACKETS He He He He

      Delete
    3. //எதிர்க்குரல் பதிவு என்ன சொல்கிறது?

      அனைத்து உயிரிகளின் ஜீனோமில் 10_30% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்த இயலாத நிலையில் இப்போது இருக்கிறது.

      நான் சொல்கிறேன் அப்படி எனில் 70_90% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்தும் வண்ணம் 1996 ல் இருந்து ஆய்வாளர்கள் சாதித்து உள்ளனர்.//

      உங்கள் கேள்விக்கு சகோ ஆஷிக் கொடுத்துள்ள பதிலையும் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வரவும்.

      வழக்கம்போல இதுவொரு திரிப்பாகும். 70% மரபணுக்கள் ஒரே மாதிரி இருப்பதாக நான் பதிவில் கூறவில்லை. மாறாக பரிணாமவாதிகள் எப்படி நினைக்கின்றனர் என்பதை மட்டுமே பின்வருமாறு கூறினேன்.

      ===
      பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்துள்ளதற்கு என்ன ஆதாரம்? மரபணு ரீதியாக உயிரினங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருப்பதே என்கிறார்கள் பரிமாணவியலாளர்கள்.
      ===

      இது மட்டும் தான் நான் கூறியது. சரி, அப்படியே உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மரபணுக்கள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில் நமக்கு பிரச்சனை இல்லை. காரணம், ஒரே மாதிரியான mechanism (யுக்தி) கொண்டு இறைவன் படைத்திருக்கின்றான் என்று கூறிவிடலாம். குர்ஆன் உயிரினங்கள் குறித்து பேசும் போது, இவை அனைத்தும் தண்ணீரால் படைக்கப்பட்டவை என்று கூறுகின்றது. தண்ணீர் என்னும் ஒரே யுக்தியை கொண்டு அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியானால் ஒரே மாதிரியான மரபணு யுக்தியை கொண்டு இறைவன் பல்வேறு உயிரினங்களை படைத்தான் என்று கூறுவதில் லாஜிக் மீறல் இல்லை. அடிப்படையான மரபணுக்களை ஒரே மாதிரியாக படைத்துவிட்டு பின்னர் உயிரினங்களின் தேவைக்கு ஏற்றவாறு தனித்துவமான மரபணுக்களை அல்லது செயல்பாடுகளை இறைவன் படைத்திருக்கலாம். இது நீண்ட காலமாகவே படைப்பியல் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையாகும். ford கம்பனி காரும் நான்கு டயருடன் தான் வருகின்றது, டாடா கம்பனி காரும் நான்கு டயருடன் தான் வருகின்றது. ஆக, அடிப்படை என்பது ஒன்று தான். ஆனால் இந்த இரண்டு கம்பனிகளின் வடிவமைப்பு மற்றும் specs வித்தியாசமாக இருந்து இரண்டு கார்களையும் தனித்து காட்டுகின்றது.

      ஆக, உயிரினங்களின் மரபணு நிலை என்பது படைப்பியல் கொள்கைக்கு மிக சரியாகவே ஒத்துவருகின்றது. மாறாக, பரிணாமத்தை பொருத்தவரை, அது உண்மையென்றால் எல்லா உயிரினங்களின் மரபணுக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக அல்லது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவமான மரபணுக்கள் உள்ளன. எப்போது இப்படியான நிலை வந்துவிட்டதோ அப்போதே பரிணாம கணிப்பு செத்துவிட்டது. ஒரு கோட்பாடு உண்மையென்றால் அதன் எதிர்கால கணிப்பு சரியாக இருக்க வேண்டும். ஒரு கல்லை தூக்கி நான் மேலே போடுகிறேன் என்றால் அது கீழே வரும் என்பது கல்லை போடுவதற்கு முன்பே எனக்கு தெரியும். காரணம், புவி ஈர்ப்பு கோட்பாடு அதனை தான் கூறுகின்றது. அதன் கணிப்பு சரியாகவே இருக்கின்றது. அதே நேரம், அதே கல்லை நான் குறிப்பிட்ட தொலைவிற்கு மேலே எறிந்தால் அது புவிஈர்ப்பு சக்தியை தாண்டி சென்றுவிடும், அதனால் திரும்பிவராது. இதுவும் எனக்கு கல்லை எறிவதற்கு முன்பே தெரியும், எப்படி? புவிஈர்ப்பு அதனை தான் சொல்கின்றது. அதன் கணிப்பு மிக சரியாகவே இருக்கின்றது.

      ஆனால் இப்படியான ஒரு கணிப்பை பரிணாம கோட்பாட்டால் செய்யவே முடியவில்லை. நடப்பதெல்லாம் அதன் கணிப்புக்கு எதிராக தான் இருக்கின்றன. பரிணாமத்தை நம்பி ஒரு ஆய்வில் நம்பிக்கையாக இறங்க முடியாது. இது தான் பரிணாம கோட்பாடு சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகும். நம்பிக்கையை தாண்டி என்று இந்த உண்மை உள்மனதில் இறங்குகின்றதோ அன்று இந்த பரிணாம குழப்பம் சிலரை விட்டு நீங்கிவிடும். அதுவரை எடுத்துக் சொல்லிகொண்டே இருப்பது நம் கடமையாகவே கருதுகின்றேன்.

      Delete
    4. வாங்க சகோ சு.பி,

      சகோ ஆஸிக்கின் விள்க்கங்களை சீர் தூக்கி பார்ப்போம்,
      1./வழக்கம்போல இதுவொரு திரிப்பாகும். 70% மரபணுக்கள் ஒரே மாதிரி இருப்பதாக நான் பதிவில் கூறவில்லை. மாறாக பரிணாமவாதிகள் எப்படி நினைக்கின்றனர் என்பதை மட்டுமே பின்வருமாறு கூறினேன். //

      அதாவது 70_90% பரிணாம வளர்ச்சி வரலாறு கட்ட முடிவதாக பரிணாம் ஆய்வாளர்கள் சொல்வது அவர்களின் நினைப்பு. ஹி ஹி இத்னையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என் நான் சொல்லி விட்டேனே!!

      10_30% இப்போது அறிந்த ஜீன் மாற்ற விதிகளின் படி, சுவடுகள் இல்லாமையால்
      பரிணாம வரலாறு பொருத்த முடியவில்லை என்பதை மட்டும் வேத வாக்காக எடுப்பீர்கள்!!!.

      70% விடை கிடைத்து உள்ளது சரி என ஏற்றல் மட்டுமே 30% விடை தேடப்படுகிறது என சொல்ல தார்மீக நியாயம் உண்டு

      **
      2//இது மட்டும் தான் நான் கூறியது. சரி, அப்படியே உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மரபணுக்கள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில் நமக்கு பிரச்சனை இல்லை. காரணம், ஒரே மாதிரியான mechanism (யுக்தி) கொண்டு இறைவன் படைத்திருக்கின்றான் என்று கூறிவிடலாம். குர்ஆன் உயிரினங்கள் குறித்து பேசும் போது, இவை அனைத்தும் தண்ணீரால் படைக்கப்பட்டவை என்று கூறுகின்றது. தண்ணீர் என்னும் ஒரே யுக்தியை கொண்டு அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியானால் ஒரே மாதிரியான மரபணு யுக்தியை கொண்டு இறைவன் பல்வேறு உயிரினங்களை படைத்தான் என்று கூறுவதில் லாஜிக் மீறல் இல்லை. அடிப்படையான மரபணுக்களை ஒரே மாதிரியாக படைத்துவிட்டு பின்னர் உயிரினங்களின் தேவைக்கு ஏற்றவாறு தனித்துவமான மரபணுக்களை அல்லது செயல்பாடுகளை இறைவன் படைத்திருக்கலாம். இது நீண்ட காலமாகவே படைப்பியல் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையாகும்//

      நல்ல காமெடியான மூமின் விளக்கம்!!!

      இது என்ன வழிநடத்தப் பட்ட பரிணாமக் கொள்கையா?? இது குரான் கூறும் படைப்புக் கொள்கைக்கு விரோதம் ஆனது.தனித்துவ ஜீன்கள் உயிரிகளில் எத்தனை சதவீதம் ,என பதிவு எழுதுவீர்களா???

      ஹி ஹி
      **
      3./ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவமான மரபணுக்கள் உள்ளன. எப்போது இப்படியான நிலை வந்துவிட்டதோ அப்போதே பரிணாம கணிப்பு செத்துவிட்டது./
      10_30% ஜீன்களின் பரிணாம வரலாற்று சுவடுகள் இல்லை!!

      சரி இரு ஜீன்கள் ஒப்பீட்டில் எப்படி தொடர்பு கண்டுபிடிக்கிறார்கள்? ஹி ஹி

      **
      4.//அதே கல்லை நான் குறிப்பிட்ட தொலைவிற்கு மேலே எறிந்தால் அது புவிஈர்ப்பு சக்தியை தாண்டி சென்றுவிடும், அதனால் திரும்பிவராது. இதுவும் எனக்கு கல்லை எறிவதற்கு முன்பே தெரியும், எப்படி? புவிஈர்ப்பு அதனை தான் சொல்கின்றது. அதன் கணிப்பு மிக சரியாகவே இருக்கின்றது. //

      எப்படி தெரியும்? எந்த விசை மேலே போகும் கல்லை விழ வைக்கிறதோ ,அதுவே அனைத்து பிரபஞ்சத்தையும் இயக்கும் விசை என்றார் நியுட்டன்.
      அவர் விதி பூமியைத் தாண்டினால் பிழை தருகிறது. ஆகவெ ஐன்ஸ்டின் விதி, கருப்பு பொருள் இல்லாமல் போனால், அதுவும் தவறு ஆகலாம்.

      ஆகவே விதிகள் நிலையானவை என்னும் கருத்து தவறு!!

      கல் எறிந்தே பூமியைத் தாண்டி எறியும் வல்லமை ஆஸிக்கிற்கு உண்டா??

      சரி நபி(சல்) நிலவைப் பிளந்தார் என்றால் நம்புபவர்கள் அல்லவா!!

      ***
      4//ஆனால் இப்படியான ஒரு கணிப்பை பரிணாம கோட்பாட்டால் செய்யவே முடியவில்லை. நடப்பதெல்லாம் அதன் கணிப்புக்கு எதிராக தான் இருக்கின்றன. பரிணாமத்தை நம்பி ஒரு ஆய்வில் நம்பிக்கையாக இறங்க முடியாது. இது தான் பரிணாம கோட்பாடு சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகும். நம்பிக்கையை தாண்டி என்று இந்த உண்மை உள்மனதில் இறங்குகின்றதோ அன்று இந்த பரிணாம குழப்பம் சிலரை விட்டு நீங்கிவிடும். அதுவரை எடுத்துக் சொல்லிகொண்டே இருப்பது நம் கடமையாகவே கருதுகின்றேன்.//
      சான்றுகளின் விளக்கம் அறிவியல். பரிணாம கணிப்புகள் சரியாக சன்றளிக்கப்பட்டது பற்றியே வரும் பதிவில் எழுதுகிறேன்!!

      பெரும்பான்மை மூமின்கள், கொஞ்சம் பிற மதத்தவர் தவிர அனைவரும் வழிநடத்தப் பட்ட பரிணாமம் என் சொல்லி விட்டார்கள்!!
      அப்ப்டி சொல்ல‌வே மாட்டோம் என் சொல்வீர்களா

      பரிணாமம் பொய் என்றால் மட்டுமே இஸ்லாம் சரி என தைரியமாக ஏன் ஒத்துக் கொள்ளக் கூடாது?

      நன்றி!!!

      Delete
    5. சகோ ஜெனில்,
      மத புத்த்கங்களின் அடைப்புக் குறிகளும்,விளக்கங்களும் கூட பரிணாம வளர்ச்சி அடையும் ஹி ஹி.
      **

      70_90% பரிணாம மாற்ற வரலாறு அறியக்கூடிய ஜீன்கள் ஆவணப் படுத்தியதை ஏற்காதவர்கள். மீதி 10_30% ஜீன்களின் பரிணாம் வரலாறு அறியக்கூடிய சான்றுகள் இப்போது இல்லை என்றால் குதித்து குட்தாட்டம் போடலாமா??

      பரிணாம வளர்ச்சியின் அடிப்படைக் காரணி ஜீன் மட்டுமே என் சொல்லும் ஆய்வாளர்கள் உண்டு,இல்லை செல் முழுதும் என்வும் சொல்வோர் உண்டு,இல்லை இல்லை முழு உயிரியுமே காரணி எனச் சொல்வோரும் உண்டு.

      வளரும் துறை என்பதல் மாற்று விள்க்கங்கள், அதன் மீது பரிசோதனைகள், அதில் அதிகம் பொருந்து விளக்கம் என பரிணாம ரீதியாக வளர்வதே அறிவியல்.

      இபோது வெறும் 10_30% ஜீன்கள் என்பதால் , இப்படி ஜீன்கள் வரலாற்று சுவடு இல்லாமல் தோன்றுமா என் ஆய்வகத்தில் கண்டறிய முயல்வர்.
      உலகில் தோன்றிய 99% உயிரிகள் மறைந்து விட்டன. வெறும் 1% மட்டுமே இன்று வாழ்கிறது.

      நம்மிடம் இருப்பது வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே,மூதாதையரின் ஜீனோம்கள் அல்ல!!!

      இந்த வாழும் உயிரிகளில் பொது மூதாதையர் கொண்ட உயிரிகளின் 70_90% ஜீன்கள் தொடர்பு பொருத்த முடிகிறது என்பது பரிணாமத்தை மெய்ப்பிக்கிறதா இல்லையா??

      அவ்வள‌வுதான்!!

      நன்றி!!

      Delete
  8. சகோ.சார்வாகன்,

    நீங்களும் விடாம சங்கை ஊதிட்டு இருக்கிங்க, ஆனால் என்ன செய்ய மார்க்கபொந்துக்கள் எல்லாம் டமார செவிடுங்களா இருக்கே :-))

    இதுல இஸ்கான் பாகவதர் காமெடி வேற தாங்கலை,


    தசாவதாரம் எடுத்தார் பெருமால்னு இருக்கும் போது நீர் என்னதுக்கு கிருஸ்னாவை மட்டும் தாங்கிட்டு இருக்கீர்?

    பன்னி,ஆமை,மீன் எல்லாம் கூட பெருமாலின் அவதாரம் தானே அதை கும்பிடாம அதுக்கு எல்லாம் பின்னாடி வந்த கிருஸ்ணா தான் எல்லாம்னு சொல்லும் பிக்காலித்தனம் ஏன்?

    முதலில் ஒரு பன்னியை வீட்டில் வளரும், அது பகவானோட அவதாரம் அப்பாலிக்கா நீர் பக்தி மார்க்கம் போதிக்கலாம் :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ வவ்வால்,

      மார்க்கம் என்றால் அப்படித்தான்!!!,நமக்கு மார்க்கம், மார்க்க பந்துக்கள் மனநிலை நன்கு புரியும் என்பதல் வியப்பு இல்லை!!


      பரிணாம எதிர்ப்பு பதிவுகளின் பரிணாம வளர்ச்சியை பாரீர், எவ்வளவு எச்சரிக்கையாக எழுதுகிறார்கள்??? ஹி ஹி!!!

      நம்ம மாப்ளே மேலே கோபப் படாதீக!! ஏதோ விவரம் இல்லாமல் நல்லா நகைச்சுவை விருந்து அளிக்கிறார்!!!அவர் மாதிரி இன்னொரு ஆளை பதிவுலகில் காட்ட முடியுமா?[ குரான் மாதி சவால்]
      **
      அது கிடக்கட்டும்!!

      எப்ப அடுத்த பரிணாம எதிர்ப்பு பதிவு வரும்???
      ஹி ஹி

      அப்படி வந்து மறுப்பு பதிவு போட்டால்தான் நிம்மதியாக இருக்கு ஹா ஹா ஹா!!!

      நன்றி!!!

      Delete
    2. @ வவ்வால்

      இப்படி டோட்டல் மக்கா இருக்கீரே? அது பன்றி அவதாரம் இல்லை வராக அவதாரம். ஆங்கிலத்தில் Wild Boar. பல திவ்ய தேசம் கோவில்களில், பிற பெருமாள் கோவில்களிலும் வராகர் வடிவில் நாங்கள் பெருமாளை வணங்குகிறோம்.

      http://4krsna.wordpress.com/2008/07/20/sri-mushnam/
      https://sites.google.com/site/thiruvidanthaikoil/

      ஏன் ஸ்ரீ கிருஷ்ணரை மட்டும் கடவுள் என்கிறோம்?


      ete camsa-kalah pumsah

      krsnas tu bhagavan svayam

      indrari-vyakulam lokam

      mrdayanti yuge yuge

      - Srimad Bhagavatam 1.3.28

      TRANSLATION

      All of the above-mentioned incarnations are either plenary portions or portions of the plenary portions of the Lord, but Lord Sri Krsna is the original Personality of Godhead. All of them appear on planets whenever there is a disturbance created by the atheists. The Lord incarnates to protect the theists.

      Delete
    3. வாங்க மாப்ளே தாசு,

      நீர் உட்பட்டு பல ஆத்திகர்களை ஏன் சிந்திக்க மாட்டீர்களா என ஏன் சொல்கிறோம்?

      வைல்ட் போர் எனப்படும் காட்டுப் பன்றியும், தெருவில் திரியும் பன்றியின் மூலமும் ஒன்று என்பதே பரிணாமக் கொள்கை.

      http://en.wikipedia.org/wiki/Domestic_pig
      The domestic pig (Sus scrofa domesticus or Sus domesticus: also swine or hog) is a large, domesticated, even-toed ungulate that traces its ancestry to the wild boar; it is considered a subspecies of the wild boar or a distinct species in its own right.

      ஆகவே காட்டுப் பன்றி உயர்ந்தது,வீட்டுப் பன்றி தாழ்ந்தது என இங்கும் வர்ணாஸ்ரமம் கொண்டு வராதீர்!!!.


      ***
      மூமின்களை அல்லாஹ் பன்னிக் கரி துண்ணாதே[ பசிக்கு வேறு வழியில்லாமல் தின்னால் (வழக்கம் போல்)மன்னிப்பார் ஹி ஹி] என்று பொதுவாக சொன்னால் அது பன்னி வகைகள்,மூலம் மூதாதையர் என அனைத்துக்கும் பொருந்துமா??

      http://en.wikipedia.org/wiki/Even-toed_ungulate

      This group includes pigs, peccaries, hippopotamuses, camels, chevrotains (mouse deer), deer, giraffes, pronghorn, antelopes, sheep, goats, and cattle. The group excludes whales even though DNA sequence data indicate that they share a common ancestor, making the group paraphyletic.
      **
      இப்படி அனைத்து உயிரிகளுக்கும் ஒரே மூலம் என்றால் எந்தக் கரியும் துண்ண முடியாது என்பதால் மூமின்கள் பரிணாமக் கொள்கையை எதிர்க்கிறார் என கண்டுபிடிக்க உதவிய மாப்ளே தாசுக்கு நன்றிகள் பல!!!

      நன்றி!!

      Delete
    4. எருமை மாடும் பசு மாடும் ஒண்ணாயிடுமா? வித்தியாசம் இருக்குல்ல?

      Delete
    5. மாப்ளே தாசு ஆமாம்,
      இரண்டுக்கும் கூட பொது முன்னோர் உண்டு!!

      http://en.wikipedia.org/wiki/Bovini

      The Bovini tribe is made up of large to very large grazers, including large animals of great economic significance to humans in Domestic Cattle, Domestic buffalo, and the Yak, as well as smaller Asian relatives, and large free-roaming bovids in the African Buffalo and the American Bison.

      எருமைப் பால் குடிக்க மாட்டீரா? சும்ம பொது அறிவுக்கு !!!

      நன்றி!!

      Delete
    6. மாப்ளே,
      நீர் கேட்கும் கேள்விகளின் நம்க்கு பல் பதில் கிடைக்குது!!!

      எருமை, பசு சேர்ந்து குட்டி போடுது!!!

      ஆகவே பரிணாம உயிரி விதிப்படி[Biological species concept] இரண்டும் ஒன்றுதான்!!

      http://en.wikipedia.org/wiki/Beefalo

      Beefalo are a fertile hybrid offspring of domestic cattle, Bos taurus, and the American bison, Bison bison (generally called buffalo in the US). The breed was created to combine the characteristics of both animals with a view towards beef production.

      ....
      It was found early on that crossing a male buffalo with a domestic cow would produce few offspring, but that crossing a domestic bull with a buffalo cow apparently solved the problem. The female offspring proved fertile, but rarely so for the males. Although the cattalo performed well, the mating problems meant the breeder had to maintain a herd of wild and difficult-to-handle bison cows.

      நன்றி!!!

      Delete
    7. சகோ.சார்வாகன்,

      //எருமைப் பால் குடிக்க மாட்டீரா? சும்ம பொது அறிவுக்கு !!!
      //

      எருமைப்பால் மட்டும் இல்லை எலிப்பால்,புலிப்பால்,நரிப்பால்னு என்ன கிடைச்சாலும் விட மாட்டார்,ஆனால் யாராவது கறந்து பாக்கெட் போட்டு டோர் டெலிவரிக்கொடுக்கணும் :-))

      எந்த அய்யர் பசங்களாவது மாடு மேய்ச்சு,கழுவி,பால் கரந்து குடிச்சிருபாங்களா கேளுங்க? எல்லாம் எவனாவது வேலை செய்து கொடுத்தால் பகவான் என்ன சொல்லி இருக்கார்னானு சொல்லிக்கிட்டே நோகாம நோம்பு கும்பிடுவாங்க :-))

      மாடு மேய்ச்சி,பால் கறந்துக்கொடுக்கிற கூட்டம்லாம் படிச்சிட்டு வேலைக்கு போகுதேனு வயித்தெரிச்சலில் தான் அப்போ அப்போ வர்ணாசிரமம் ,விளக்கெண்ணைனு சொல்லி ஊரை ஏமாத்துதுங்க.

      ஏன்யா ஶ்ரீரெங்கம் கோயிலில் எல்லாம் போய் மணியாட்டலாம்னு சொல்ல துப்பில்லைனு கேட்டா இது வரைக்கும் நேரான பதிலே வரலை.

      இன்னும் சில காலம் தான் மக்களே கோயிலுக்குள் புகுந்து இழுத்துப்போட்டு சாத்தி வெளியேபோனு சொல்லப்போறாங்க,அப்போ எந்த அவதாரம் வந்து கேட்கும் பார்ப்போம்.

      Delete
  9. @வவ்வால்
    அவரை ஏன் திட்டறீங்க. கேபிளின் பதிவில் நீங்க கலாட்டா பின்னூட்டம் போட்டவரை அது மிக சுவாரஸ்யமான பதிவாக இருந்தது. இங்கு ஜெயதேவ் போடும் பின்னூட்டங்கள் கருத்து ரீதியாக ஒப்புக்கொள்ளத்தக்கன அல்ல என்ற போதும் சிரிக்க வைக்குதே. ஈஸி!

    ReplyDelete
    Replies
    1. @ நந்தவனத்தான்
      "நியாயம் அப்படின்னா என்ன விலை, அது எந்த கடையில விக்கிறாங்க?" அப்படின்னு கேக்கிற பார்டி வவ்வால். அது கூட செட்டு சேர்ந்துகிட்டீங்களா ? விளங்குமா இது?



      Delete
    2. மாப்ளே தாசு,

      உமக்கு யுக தர்மம் என்பதன் பொருள் தெரியுமா?

      யுகத்தை பொருத்து தர்மம் என்பதன் வரையறை மாறும்!!! ஹி ஹி

      எப்படி சிலர் சிறுபான்மையாய் இருந்தல் ஒரு வாதம்,பெரும்பான்மை ஆனால் ஒரு வாதம் என்கிறார்களோ அப்பூடி!!!

      ஆகவே நியாம்/அநியாயம் என்பவை காலம்,சூழல் சார்ந்தவை!!!

      நியாயம் பற்றி இஸ்கான் வைணவர்கள் பேச தகுதி இல்லை.

      வாலியை பின் சென்று தாக்கி கொன்றவன் இராமன்,

      கவுரவர்களை வெல்ல சகலவித அயோக்கியத் த‌னமும் செய்தவன் கிருஷ்னன்,

      பகவத் கீதை மொழியாக்கத்தை திரிப்பவர்,இன்றும் வர்ணாஸ்ரமத்தை ஆதரிப்பவர் பிரபுபாத!!!

      நன்றி!!!

      Delete
    3. நநந்தவனம்,

      நான் எங்கே பாகவதரை திட்டினேன், மொக்கை காமெடி தாங்க முடியலைனு தான் சொல்லி இருக்கேன்.

      சார்வாகனைப்பார்த்து பிக்காலித்தனம்னு சொன்னால் ,இவர் செய்வது என்னத்தனம் என கேட்டேன்.

      பன்னினு சொன்னால் இல்லை அது காட்டுப்பன்னினு சப்பைக்கட்டுறார், சரி போகட்டும் விடுங்க பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னா என்ன செய்ய?

      ஒரு காட்டுப்பன்னியை வளர்க்க சொல்லிடிவோம், அது தான் பகவானின் அவதாரம்னு பாகவதரே ஒப்புக்கிட்டார், காட்டுப்பன்னி வளர்க்க தயாரா பாகவதர்?

      ------

      பாகவதரே,

      //All of the above-mentioned incarnations are either plenary portions or portions of the plenary portions of the Lord, but Lord Sri Krsna is the original Personality of Godhead. All of them appear on planets whenever there is a disturbance created by the atheists. The Lord incarnates to protect the theists.//

      ராமாவதாரம் சுத்தமான பூரண் அவதாரம் இல்லை, கேவலமான ஒரு குறைப்பாடான அவதாரம்னு சொல்லுறீர் சரியா :-))

      பிஜேபி ஆளுங்க அப்புறம் என்னாதுக்கு ராமருக்கு கோயில் கட்டணும்னு சொல்லி நாட்டையே அல்லோகல படுத்துறாங்க?

      பேசாம கிருஸ்ணா பொறந்த இடம் கடலுக்கு அடியில் இருக்காம் அங்கே போய் கோயிலோ ,இல்லை கக்கூசோ கட்டிக்கிட்டு நாட்டு மக்களை நிம்மதியா இருக்க விடலாம்ல :-))

      நீர் என்ன செய்றீர்னா நேரா அத்வானிய போய்ப்பார்த்து, ராமரு விளங்காத அவதாரம், ஆனால் கிருஸ்ணா தான் அக்மார்க் ஐஎஸை அவதாரம் அவருக்கு கடலில் கோயில் கட்டுவோம் காராசேவு இயக்கம் ஆரம்பிப்போம்னு சொல்லி கடலுக்கு கூப்பிட்டு போயிடும், நாடு நிம்மதியா இருக்கும் :-))

      வந்துட்டாங்கய்யா அவதாரம் ,அபச்சாரம்னு கதை சொல்லிக்கிட்டு.

      Delete
  10. சார்வாகன்...
    இது அறிவாளிகள் கும்மி அடிக்கும் இடம் போல இருக்கு;எனக்கு இங்கு வேலையில்ல. ஆம். கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை; அதனால், அய்யா அப்பீட்! எனக்கு இந்த விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்ல; So, no பின்னூட்டம்..

    அதே சமயம், அந்த கவுண்டமணி வீடியோவைப் பற்றி விவாதம் செய்ய எனக்கு மிக மிக அழ்ந்த அறிவு உள்ளாது; இதில், I am expert at International level..அதனால், என் பின்னூட்டம்..

    "கவுண்டமணி வீடியோவில்கூடை வைத்திருக்கும் குட்டி ஷோக்கா-கீதுபா!"

    ReplyDelete
  11. சகோ. சார்வாகன்.

    காட்டுப் பன்னிய வாங்கி வளர்த்து காசு பண்ணலாம் என்று நினைக்கிறேன்,அவதாரப் பன்னி என்று விளம்பரப்படுத்தினால் மக்கள் மத்தியில் மவுசு கூடும் அல்லவா??

    ReplyDelete
  12. சகோ. சார்வாகன்.
    பரிணாமம் எளிய விளக்கங்கள் - பார்ட் 1 படித்து இந்தப் பதிவையும் படித்தால் எளிதாக விளங்கும். அருமையான பதிவு.
    நண்பர் ஆஷிக் அஹமத் இதைப்போன்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி அறிவியல் சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்று ...... யை இறைஞ்சி வேண்டிக்கொள்கிறேன். அவரின் பதிலில் நெறைய செல்ப் கோல் அடித்துள்ளார்.
    பிற பின்னூட்டங்கள் பதிவை தெளிவு படுத்தியதால், மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரேன் வாங்க,
      அடிக்கடி ஆள் தென்படுவது இல்லை!!.பணி அதிகமோ!!!

      பரிணாமத்தின் மீதான விமர்சனக்களின் தொனிகள் மாறுவதும், பரிணாமம் மத புத்தக் படைப்புக் கொள்கையின் படி 100% முரண்,தவறு என் ஒத்துக் கொள்ள அஞ்சுவதும் நல்ல நகைச்சுவை.

      இன்னும் சில ஆண்டுகளில் இப்போது இரத்தப் பரிசோத்னை போல் அனைவரும் ஜீனோம் பரிசோத்னை எளிதில்,குறைந்த செலவில் செய்வார். பரம்பரை ரீதியாக எப்படி ஜீனோம் மாறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கைக்கு வந்து விடுவார்.

      அப்போது பதிவு எழுதுபவர், சில யூத ,கிறித்தவ,இந்துத்வ காஃபிர்கள் மூமின் பெயரில் வேண்டும் என்றே இஸ்லாம பரிணாமம் முரண் என அவதூறு பதிவு எழுதினார் என்பார்!!

      துல்கர்னைன் அலெக்சாண்டர் இல்லை என் சொல்வது போல்,குரான் பூமி தட்டை என சொல்லவில்லை என் சொல்வது போல் இதெல்லாம் அரசியலில் சகஜம்!!
      ***

      பரிணாம வரலாறு 70_90% ஜீன்களில் அனைத்து உயிரிகளுக்கும் உள்ளது, என்பது மிக வியப்பான விடயம்.

      ஜீனோம் இப்போது வாழும் 1% உயிரிகளில் மட்டுமே ஆவணம் ஆக்கப் பட்டு உள்ளது.

      மனித்னின் பிற 20+ இனங்களின் ஜீனோம் கிடைதால் மிக நலமாக இருக்கும். நியாண்டர்தால் ஜீனோமை,ஏதோ மிச்சம் மீதி சதை துணுக்கில் இருந்து கண்டறிந்து ஆவணப் படுத்தி விட்டார்கள்???!!
      !
      http://arstechnica.com/science/2013/03/no-the-neanderthal-genome-has-not-been-completed/

      The new genome, labelled Altai (after the region in Siberia where the Densiova cave is) in the diagram above, clearly groups outside the Denisovan and modern human lineages and in with other Neanderthals. But it's somewhat distant from the other Neanderthal genomic sequences we have, which are derived from bones found in Germany and Croatia. According to anthropologist John Hawks, there is also a Y chromosome present, which could allow some additional comparisons with modern humans.

      As with the past sequences, the data has been placed in a public archive. Other scientists are free to analyze it, but they should coordinate any publications that analysis produces so that the people who generated the sequence get to have the first say on it.

      http://en.wikipedia.org/wiki/Neanderthal_genome_project

      அதில் அநாதை ஜீன்களின் நிலை என சில கட்டுரைகள் வரலாம். மீண்டும் நியண்டர்தாலை உருவாக்க முடியும் எனக் கூட சொல்கிறார்கள்!!!

      நன்றி!!!

      Delete
  13. பரிணாமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது...சாரி...மண்ணு...களிமண்ணு நிஜம்...அது இருக்கு....அதில் அந்த அரேபிய அல்லா தண்ணிய ஊத்தி பெசஞ்சு மொத மனுசனப் படச்சாரு.

    துலுக்கர்கள் யாரும் பரிணாமத்தின் மூலம் பிறந்தவர்கள் கிடையாது. யாரோ ஒருத்தன்..வர்ரவன் போறவன் எதையோ பிசைந்து அவர்கள் வீட்டுப் பெண்கள் வயிற்றில் வைத்துவிட்டுப் போய்விடுவார்கள்.

    அந்த இஸ்கான் கும்பலும் அப்படியே...

    எங்க சுகவீன அண்ணாச்சியும் மாணிக்கமாக நல்லா இருந்தவருதான்....மாலிக் என்ற பெயரில் திருட்டு பாஸ்போட்டில் சவுதி சென்றபின் வக்காபீயாக மாறிவிட்டார்.

    அவரை எங்க ஒர்ரே இறைவன் முனியாண்டிசாமிக்காக மன்னிக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இராவணன்,
      பரிணாமத்தையும் வழி நடத்துவது எங்க அல்லா சாமின்னு சொல்லி விட்டு போனால் நாம் கண்டு கொள்ள மாட்ட்டொம் அல்லவா?

      சரி இப்படி என்னைக்கும் சொல்ல மாட்ட்டோம் என சொல்லுங்க என்றாலும் நழுவுகிறார்கள்.

      இதில் இஸ்கான் கொசுத் தொல்லை வேற!!!

      **
      அப்புறம் உங்களுக்கு மட்டும் சொல்ரேன் உங்க ஏக இறைவன் முனியாண்டியும்,என்னோட ஏக இறைவன் [விடாது கருப்பு புகழ்]கருப்பு சாமியும் சேர்ந்துதான் பெருவிரிவாக்கம்,பரிணாமத்தை ,..அனைத்தையும் வழி நடத்துகிறார்கள்.

      என் தாத்தா மேலே சாமி வந்து சொல்லுச்சு!!!

      அதையெல்லாம் வேதம் ஆக்கனும்!! ம்ம்ம்ம்ம்ம்ம்

      நமக்குள்ளே இருக்கட்டும்!!

      நன்றி!!!

      Delete