Thursday, December 29, 2011

Archaeopteryx ன் கதை நடந்தது என்ன? பகுதி 3



Pterodactyl fossil reveals complex skills of earliest flyiers


The fossil from a pterosaur which was presented on at the National Museum of Rio de Janeiro Photo: EPA


தொடரின் முந்தைய பகுதிகள்


Archaeopteryx ன் கதை நடந்தது என்ன? பகுதி 2



1.பறவை என்பதன் இலக்கணம் என்ன?

 '
இரு கால்களுடன் இறக்கைகள் கொண்ட, விலங்கை பறவை எனக் கூறுவர்.பறவைகள் முதுகெலும்புடையவை. மித வெப்ப இரத்தம் உடையவை,முட்டையிடும் விலங்குகள் ஆகும்.
முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன..


பறவைகள் அல்லாத பறக்கும் பூச்சி,விலங்குகளும் உண்டு.ஈ,கொசு,பறக்கும் எறும்பு, தட்டான் ஆகியவை பூச்சிகளாகவே வகை பிரிக்கப்படுகின்றன.

True flies are insects of the order Diptera (from the Greek di = two, and ptera = wings). They possess a pair of wings on the mesothorax and a pair of halteres, derived from the hind wings, on the metathorax.










External anatomy of a bird (example: Yellow-wattled Lapwing): 1 Beak, 2 Head, 3 Iris, 4 Pupil, 5 Mantle, 6 Lesser coverts, 7 Scapulars, 8 Median coverts, 9 Tertials, 10 Rump, 11 Primaries, 12 Vent, 13 Thigh, 14 Tibio-tarsal articulation, 15 Tarsus, 16 Foot, 17 Tibia, 18 Belly, 19 Flanks, 20 Breast, 21 Throat, 22 Wattle





2.பறக்கும் டைனோசார் உண்டா?

Pterosaur பொதுவாக பறக்கும் டைனோசார் என்று அறியப்ப்ட்டாலும் அறிவியலாளர்கள் இதனை டைனோசாரின் வழித்தோன்றலாகவே (பறவைகள் போல்) வகைப் படுத்துகின்றனர். இதன் படிமங்கள் கூட கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

Pterosaurs, from the Greek πτερόσαυρος, pterosauros, meaning "winged lizard") were flying reptiles of the clade or order Pterosauria. They existed from the late Triassic to the end of the Cretaceous Period (220 to 65.5 million years ago). Pterosaurs are the earliest vertebrates known to have evolved powered flight.

birds are dinosaurs!!!!!!!!!!!!!!



 
3.அந்த சீன ஆய்வாளர்களின் உணமையான கூற்று என்ன?

உண்மையில் இதுவே இத்தொடர் பதிவின் நோக்கமே அந்த ஆய்வாளர்கள் என்ன உண்மையிலேயே கூறினார்கள் என்பதே!!!!!!!!!!
a) யார் அந்த சீன ஆய்வாளர்கள்?
மொத்தம் 4 பேர்[Xing Xu, Fenglu Han, Hailu You, Kai Du] அவர்கள் சீனாவின் புகழ் பெற்ற பரிணாம, ,புவியியல் ஆய்வாளர்கள். அத்துறையின் ஆய்வகங்களில் பணியாற்றுகிறார்கள்.
Xing Xu: College of Life Science, Linyi University,
Shuangling Road, Linyi City, Shandong
276005, China

Xing Xu &Fenglu Han: Key Laboratory of Evolutionary Systematics of Vertebrates, Institute of Vertebrate Paleontology and Paleoanthropology, Chinese Academy of Sciences,
142 Xiwai Street, Beijing
100044, China

Hailu You: Institute of Geology, Chinese Academy of Geological Sciences,
26 Baiwanzhuang Road, Beijing
100037, China
Kai Du: Department of Biology, Capital Normal University,
105 Xisanhuan North Road, Beijing
100037, China
b) அவர்கள் எங்கே எந்த படிமம் மீது தங்கள் ஆய்வினை நடத்தினர்?

ஆய்வாளர் Xing Xu&co  டைனோசார் படிமங்களை கண்டு பிடிப்பதிலும்,வகைப்படுத்துவதிலும் பல சாதனைகளை புரிந்தவர்.

xiaotingia.jpeg
a, b, Photograph (a) and line drawing (b). Integumentary structures in b are coloured grey. cav, caudal vertebra; cv, cervical vertebra; dv, dorsal vertebra; fu, furcula; lc, left coracoid; lfe, left femur; lh, left humerus; li, left ilium; lis, left ischium; lm, left manus; lp, left pes; lpu, left pubis; lr, left radius; ls, left scapula; lu, left ulna; md, mandible; rfe, right femur; rfi, right fibula; rh, right humerus; ri, right ilium; rm, right manus; rr, right radius; rt, right tibiotarsus; ru, right ulna; sk, skull; ss, synsacrum.

2011ல் இவர் கண்டு பிடித்த ஒருவகை டைனோசார் Xiaotingia [bird-like theropod dinosaur] படிமங்களின் மீதே ஆய்வுகளை நடத்தினார். அந்த படிமத்தின் மீது எடுக்கப்பட்ட அளவுகளின் மூலம் இதுவும் Archaeopteryx  ம் ஒரே பரிணாம மர கிளை[clade] டைனோசார்கள் என்று கருத்து வெளியிட்டார்.இந்த குழுவில்[clade] இந்த இரு டைனோசார் தவிர இன்னும் சில டைனோசார்களை[Dromaeosauridae and Troodontidae] சேர்த்து ஒரு குழுவாக வரையறுத்து அதற்கு Deinonychosauria என‌ பெயரிட்டார்.

இந்த Deinonychosauria ம் பறவைகளின்[Avialae] இலக்கணத்தையும் வரையறுத்த போது உடல் அமைப்பில் வெவ்வேறாக இருப்பதாக  இவர்  கூறுகிறார். .ஆகவே               Archaeopteryx ஒரு பறவையை விட Deinonychosauria குழு டைனோசார்களுடனேயே அதிக தொடர்பு கொண்டது.

An initial cladistic analysis by Xu et al. showed that Xiaotingia formed a clade with Archaeopteryx, Dromaeosauridae and Troodontidae to the exclusion of other groups traditionally seen as birds. Xu et al. therefore (re)defined the concepts of Deinonychosauria and Avialae to the extent that Archaeopteryx and Xiaotingia belonged to the Deinonychosauria and Archaeopteryx no longer was an avialan.

3c) அந்த ஆய்வாளர்கள் சொன்னது என்ன?

இதனை நேச்சர்[nature] 28 ஜூலை ,2011 ஆய்விதழில் கட்டுரையாக வெளியிட்டார். அந்த முழு ஆய்வுக் கட்டுரை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.

இபோது அந்த ஆய்வாளர்கள் சொன்னது என்ன என்பது கொஞ்சம் புரிந்து இருக்கலாம்.இருந்தாலும் அவர்கள் ஆய்வின் சாராமசமும்,அவர்களின் நேச்சர் ஆய்வுகட்டுரையின் சுருக்கிய கருத்தின் மொழியாக்கத்தையும் அளிக்கிறேன்.

An Archaeopteryx-like theropod from China and the origin of Avialae
Xing Xu1,2, Hailu You3, Kai Du4 & Fenglu Han2


Absract
Archaeopteryx is widely accepted as being the most basal bird, and accordingly it is regarded as central to understanding avialan origins; however, recent discoveries of derived maniraptorans have weakened the avialan status of Archaeopteryx. Here we report a new Archaeopteryx-like theropod from China. This find further demonstrates that many features formerly regarded as being diagnostic of Avialae, including long and robust forelimbs, actually characterize the more inclusive group Paraves (composed of the avialans and the deinonychosaurs). Notably, adding the new taxon into a comprehensive phylogenetic analysis shifts Archaeopteryx to the Deinonychosauria. Despite only tentative statistical support, this result challenges the centrality of Archaeopteryx in the transition to birds. If this new phylogenetic hypothesis can be confirmed by further investigation, current assumptions regarding the avialan ancestral condition will need to be re-evaluated.

தமிழ்  மொழியாக்கம்
Archaeopteryx என்பது ஒரு பறவையாக அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட,பறவைகளின் தோற்றத்தை விளக்குவதில் அச்சாணியாக திகழ்கிறது. இருப்பினும் சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசார் படிமங்களின்[maniraptorans] மீதான ஆய்வு  இக்கூற்றை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இங்கே Archaeopteryx  போன்ற இன்னொரு குழு டைனோசார் ஆய்வுக்கு உட்படுத்தப்ப்ட்டது..Archaeopteryx க்கு மட்டுமே உரித்தாக கருதப்பட்ட பறவை குணங்கள்,அமைப்புகள்  Deinonychosauria என்ற ஒரு குழுவிற்கும் உள்ளது.ஆகவே இவை ஒரு பரிணாம் கிளை(குழு) உயிரினங்கள். இப்போதைய (தற்காலிக) ஆய்வுகளின் படி Archaeopteryx ன் இபோதைய பரிணாம் மர நிலையை[phylogenetic position]கேள்விக்கு உள்ளாக்குகிறது.. இந்த கொள்கையாக்கம் இன்னும் ஆய்வுகளின் படி உறுதிப்படுத்தப் பட்டால் பறவைகளின் தோற்றம் பற்றிய இபோதைய அறிவியல் கருத்துகள் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


3d) எளிய விள்க்கம்

d1.சீன ஆய்வாளர்கள் ஒரு டைனோசார் படிமங்கள் 2011 ல் கண்டு படித்தனர்.
d2.இந்த படிமங்கள் உடன் Archaeopteryx மிகவும் ஒத்து போகிறது.

d3. Archaeopteryx மட்டுமே உரித்தான குண‌ங்களே அதனை பறவைகள் முன்னோராக வரையறுத்தது.
d4.அவை இக்குழு டைனோசார்களுக்கும் இருப்பதால் இவைகளின் முன்னோர்(அல்லது அதற்கும் முன்னோரோ) பறவைகளின் முன்னோர் ஆக இருக்க வேண்டும்.
d5.இது இன்னும் ஆய்வுகளின் மீது உறுதிப்படுத்த வேண்டும்.

4.அதுவே இறுதி கூற்றாக அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? 

Likelihood reinstates Archaeopteryx as a primitive bird
1.         Michael S. Y. Lee1 and
2.         Trevor H. Worthy3
*Author for correspondence (mike.lee@samuseum.sa.gov.au).


இல்லை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த கூற்றுகளின் மீது ஆய்வில் இதனை மறுத்து உள்ளார்கள்,இது ராயல் சொசைட்டி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் Archaeopteryx மற்ற டைனோசார்களை விட பறவைகளின் முன்னோராக நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருத்திட்டு உள்ளார்கள்.

Archaeopteryx is restored as a basal bird with bootstrap frequency of 73 per cent and posterior probability of 1. These results are consistent with a single origin of typical (forelimb-powered) bird flight.

சரி அவ்வளவுதான் கதை முடிந்தது என்கிறீர்களா. ஆய்வுகள் என்பது தொடர்பயணம். மாற்றம் ஒன்றே மாற்றமிலாதது.மாற்றங்களை எந்த வித முன் முடிவுக‌ள் இன்றி உண்மையின் அளவுகோள் கொண்டு மட்டும் வரவேற்போம்.

விவாதங்கள் ,விளக்கங்கள் வரவேற்கப்படுகின்றன‌.

(முற்றும்)






நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!!!!!!!!!!!!

Archaeopteryx ன் கதை நடந்தது என்ன? பகுதி 2

 Archaeopteryx fossil
Archaeopteryx lithographica, is the earliest bird in the fossil record, coming from the Late Jurassic lithographic limestone near Solnhofen

போன பதிவை படித்தவர்கள் Archaeopteryx பற்றி கொஞ்சம் அறிந்து இருப்பீர்கள் இப்பதிவை கொஞ்சம் கேள்வி பதிலாக கொடுத்து விடலாம் என எண்ணுகிறேன்.

இந்த  Archaeopteryx பறவை (முன்னோர்) அல்ல என்று கூறப்படுவது இதுதான் முதல் முறையா?

இல்லை.முதலில் பொ.ஆ 1861ல் முழுமையான படிமம் ஜெர்மனியில்[Solnhofen limestone in Bavaria, southern Germany] கண்டு பிடிக்கப்பட்டது. படிம சான்றுகளின் மீதான ஆய்வுகள் இது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வழ்ந்ததாக  உறுதிப்படுத்தின. இது இறுதி ஜுராசிக் காலத்தை ‌ [161.2 ± 4.0 to 145.5 ± 4.0 மில்லியன் வருடங்கள் (Ma)], சேர்ந்தது.

a) பல பரிணாம் எதிர்ப்பாளர்கள் இந்த  படிமமே ஒரு ஏமாற்று வேலை ,அதன் இறகுகள் பறக்கும் தன்மை ஆகியவை ச்ந்தேகத்திற்கு உரியது என்று கூறி வந்தன‌ர்.இது பற்றிய சில விவரங்கள் இங்கே கிடைக்கும்.


b)1984ல் திரு சங்கர் சாட்டர்ஜி எனப்படும் பரிணாம் ஆய்வாளர் 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை இனம் என்று ஒரு படிமத்தின்[Protoavis] மீதான ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார். ஆனால் இந்த படிம விலங்கு பறக்கும் தன்மை உடையதா என்பதை சரியாக நிரூபிக்க முடியாததால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

c) இக்கேள்விகள் பல விவாதங்களுக்கு கடந்த 50+ வருடங்களாக் உள்ளகியே வந்தன.

i) Archaeopteryx உண்மையான படிமமா இல்லை ஏமாற்று வேலையா? A legitimate fossil or an artful hoax? Is it a crucial missing-link or a bizarre offshoot?

இது ஒரு உண்மையான படிமமே மற்றும் ஏமாற்றும் வேலை அல்ல என்பது பரிணாம் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.மற்றும் இப்படி எந்த ஆய்வுக்கட்டுரையும் ஏமாற்று வேலை என்று நிரூபிக்கவில்லை. இப்போதைய சீன ஆய்வாளர்கள் இப்படிமம் போன்ற இன்னொரு படிமத்தின் மீதான் ஆய்வின் மீதே தங்கள் கருத்தை வெளியிட்டு உள்ளதான் ஆகவே அவர்களின் விமர்சன‌ கூற்றை பயன்படுத்துபவர்களும் அவர்களின் படிமத்தின் நம்ப‌கத்தன்மையை ஏற்பதாகவே பொருள். படிமங்கள் உண்மை என்பதே இபோதைய அறிவியலின் கூற்று. படிமங்கள் பொய் என்று வாதிடும் நண்பர்கள் தங்கள் கருத்துகளை ஆதாரபூர்வமாக் விவாதிக்கலாம்.


ii) அது ஒரு வகை டைனோசாரா இல்லை பறவையா? Was it a theropod dinosaur or a bird?

இத்தொடர் பதிவில் சீன ஆய்வாளர்கள் Xing Xu & co  ஆய்வு கட்டுரையின் மீதான் விமர்சனத்திற்கு மட்டுமே பதில் சொல்கிறோம்.சீன ஆய்வாளர்களின் 2011 கட்டுரையின் படி [மட்டும்] Archaeopteryx  ஒரு வகை டைனோசாரே [theropod dinosaur].ன். அவர்களின் உண்மையான கூற்றை இன்னும் ஆய்வோம்!!!!!!!!!!!!!!!!!!!

iii) Archaeopteryx பறக்குமா இல்லையா? Could it fly or not?

இக்கேள்விக்கு விடையளிக்கு முன் ஒரு விளக்கம் பரிணாம கொள்கையின் படி நான்கு கால் உயிரினங்களின்  முன் இரு கால்களே  இறக்கையாக மாறியது. அதாவது எந்த பறவைக்கும் 4 கால்கள் இருக்கவே முடியாது. Archaeopteryx க்கு இறக்கைகள் உண்டு பரிணாம அறிவியலின் படி அது முழுமையான பறவை இல்லாத படியால் அது கோழி போல் சிறிது தூரம் மட்டுமே பறக்க இயலும் என்பதே கருத்து. பறப்பது என்பது உண்மை எவ்வளவு தூரம் என்பதே இன்னும் விவாதத்திற்கு உரியதே.

ஆகவே  Archaeopteryx  என்பது

உண்மையான‌ 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய படிமம்

அதற்கு இறக்கைகள் உண்டு,

பறக்க இயலும்

என்பதே இப்பதிவின் சாராமசமாகும்.

இன்னும் நிறைய இருக்கிறது.அறிவியலின் படி

பறவை என்பதன் இலக்கணம் என்ன?

பறக்கும் டைனோசார் உண்டா?

அந்த சீன ஆய்வாளர்களின் உணமையான கூற்று என்ன?

அதுவே இறுதி கூற்றாக அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? 

என்பதெல்லாம் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

(தொடரும்)

Archaeopteryx ன் கதை நடந்தது என்ன?

Artist's impression of Xiaotingia zhengi (Xing Lida and Liu Yi)

An artist's impression of the new creature from China.

பரிணாமம் என்பது கிடைத்த படிம சான்றுகள்,DNA analysis,காலக் கணக்கீடுகளை அடிப்படையாக கொண்டு உயிர்களின்  பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான[random] நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும்  இப்போதைய அறிவியல் கொள்கையாகும். நாம் பரிணாமம் கற்கும் மாணவன் என்பதால் அது குறித்த ஆய்வுகள், விமர்சன‌ங்கள் மீது ஈடுபாடு காட்டி வருகிறோம்.

பரிணாமம் குறித்து சில பதிவுகள் எழுதலாம் என முயற்சிக்கிறேன். இப்பதிவில் சில மாதங்களுக்கு முன்பு பரிணாமத்தின் மீது விமர்சனமாக Archaeopteryx ஐ அடிப்படையாக கொண்டு வைக்கப்பட்ட கருத்தை இப்பதிவில் ஆராய்வோம்.

பரிணாம கொள்கையின் படி உயிர்கள் ஒரு செல் உயிரில் இருந்து கிளைத்து தழைத்து ஒரு பரிணாம மரம் போல் அனைத்து உயிரினங்களும் வள‌ர்ச்சி அடைந்தன என்று கூறுகிறது. உலகில் தோன்றிய 99% உயிரினங்கள் இபோது இல்லை.அவற்றில் கிடைத்த‌ படிமங்கள் மீதான,DNA ஆய்வுகள் மூலம் அவை பரிணாம மரத்தின் பொருந்தும் இடத்தில் வைக்கப் படுகின்றன.பரிணாம மரமும் டி என் ஏ ஒப்பீட்டு ஆய்வுகள் ஒன்றுக் கொன்று ஒத்துப்போவதும் பரிணாம்த்தின் சான்றுகளாகும் .மனிதனுக்கு நெருக்கமான் உயிரினமாக கருதப்படும் சிம்பன்ஸி குரங்கின் DNA (96 to 98)% ஒத்துப்போகிறது.இபோது மனிதனில் இருந்து பரிணாம மரத்தின் வேறு கிளை உயிரினம்  இதை விட அதிகம் ஒத்து வந்தால் பரிணாம கொள்கையின் மீதான ஆய்வு பூர்வமான் விமர்சனம் ஆகிவிடும். இப்போது பரிணாம் கொள்கையே DNA அடிப்படையில் சீர்திருத்தப்படுகிறது எனலாம். ஒவ்வொரு பரிணாம படிம ஆய்வும் DNA மூலம் சரி பார்க்கப் படுகிறது.இதன் மூலம் பரிணாம மரம் மேம்பட்ட வகையில் கட்டமைக்கப் படுகிறது.

மனிதன்,பிற உயிரினங்களின் ஜீனகளை ஒப்பீடு செய்தல்  comparative genomics என்றழைக்கப்படுகிறது.ஆய்வு மாணவர்களுக்கு அதிக வாய்ப்புள்ள துறை இது.




சரி அது என்ன Archaeopteryx ஐ அடிப்படையாக கொண்ட விமர்சனம்?

பரிணாமத்தின் படி டைனோசாரின் ஒரு பிரிவான theropods dinosar ல் இருந்து பறவைகள் தோன்றியதாக பரிணாம கொள்கை கூறுகிறது.


அதாவது பறவைகளுக்கும் theropods dinosar ம் பொதுவான முன்னோராக Archaeopteryx பரிணாம் மரத்தில் குறிக்கப்பட்டு வந்தது. என்பதை அனைத்து பறவைகளின் முன்னோர் என்றே பரிணாம ஆய்வாளர்கள் அதனை ஒரு சான்றாக கடந்த 150 வருடங்களாக வைத்தனர்.


கடந்த ஜூலை 2011 ல் நேச்சர்[nature] ஆய்விதழில் வந்த ஒரு கட்டுரையில் Xing Xu[a palaeontologist at the Institute of Vertebrate Palaeontology and Palaeoanthropology in Beijing, and his colleagues]. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களின் மீதான ஆய்வில்  பறவையை விட  ஒரு  theropods dinosar யே ஒத்து வருகிறது என்று கூறியிருந்தார். இது பரிணாம் ஆய்வில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம். பறவைகளின் முன்னோர் அல்ல என்பது பரிணாம எதிர்ப்பாளர்களுக்கு(கவனிக்கவும் விமர்சகர்கள் அல்ல)  கொஞ்சம் வாய்ப்பளித்தது. என்ன கூறுகிறார்கள்?.

பார்த்தீர்களா இந்த பரிணாம ஆய்வாளர்கள் கடந்த 150 வருடங்களாக் கூறிவந்த பறவைகளின் முன்னோர்  என்பது தவறாகி விட்டது.வேண்டுமென்றே ஒரு டைனோசாரை பறவையாக காட்டி ஏமாற்றி விட்டார்கள். இவர்கள் கூறுவது எல்லாமே இப்படித்தான் இருக்கும்.ஆகவே பரிணாமம் என்பது தவறு என்பதற்கு இன்னொரு சான்று என்கின்றனர்.


இது பற்றிய  பாரபட்சமற்ற உண்மையை அறிய வேண்டும்.அடுத்த பதிவுகளில் இதனை நோக்கி நமது தேடல் தொடங்கும்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு



(தொடரும்)
,