Tuesday, July 31, 2012

இயற்கை வழி விவசாயமே எதிர்கால‌ வழிகாட்டி



வணக்கம் நண்பர்களே,

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் விவசாயி ரெபெக்கா தனது பண்ணையில் செய்த மாறங்களினால் அடுத்த தலைமுறை விவசாயம் எப்படி இருக்க வேண்டும்  என்பதன் எடுத்துக் காட்டு ஆகி இருக்கிறார்.

உலகின் பொருளாதாரமே எண்ணெய் எரிபொருள் சார்ந்து இருப்பதால் உலகளாவிய  எரிபொருள் விலை மாற்றங்கள் அனைவரையும் பாதிக்கிறது.எரிபொருள் தேவை குறைந்த அள்வே பயன்படுத்தும் முறையை பயன்படுத்துவதில் ரெபெக்கா வெற்றி பெற்றுள்ளார்.

"இயற்கை நம் தேவைகளுக்கு   நிச்சயம் தீர்வு கொடுக்கும் ஆனால் ஆசைகளுக்கு அல்ல"

விவசாய(நில)ம் என்பது எதிர்காலத்தில் மிக அதிக மதிப்பு பெறும்.ஆகவே நிலம் உள்ளவர்கள் விற வேண்டாம்.முடிந்தவரை முறையாக விவசாயம் கற்று பயனுறுமாறு வேண்டுகிறேன்.


காணொளி பாருங்கள்!!!!!!!!!!!!!!


நன்றி  

15 comments:

  1. உங்கள் பதிவைப் பார்த்தேன். Good!

    சார்வாகன் - பெயர் புதுமையாக இருக்கிறது.
    காரணப் பெயரா? அர்த்தம் என்ன? சொல்லமுடியும் என்றால் காரணம் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சார்வாகம் என்ற பழமையான இந்திய நாத்திக தத்துவம் கேள்வி பட்டதில்லையா சகோ. அதனால் தான் சார்வாகன் என்ற பெயரில் சகோ பூந்து விளையாடுகின்றார்.

      இது அவரின் உண்மையான பெயரா புனைப் பெயரா எனக்குத் தெரியாது ... !!!

      சொல்லப் போனால் நாம் அனைவரும் ஒருவகையில் சார்வாகனர்களே !!!

      Delete
  2. இந்தக் காணொளியை ஏற்கனவே பார்த்திருக்கின்றேன் .. உலகம் முழுவதும் இப்போது இயற்கை விவசாயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு அங்கமே permaculture .. இந்தியாவில் ஆரண்யா என்ற ஒரு அமைப்பும் ஆந்திராவில் permaculture செய்து வருகின்றார்கள் .. நான் ஒரு முறை அங்கு சென்றிருக்கின்றேன் ... !!! ஆரோவில் பகுதிகளிலும் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன ...

    ReplyDelete
  3. "இயற்கை நம் தேவைகளுக்கு நிச்சயம் தீர்வு கொடுக்கும் ஆனால் ஆசைகளுக்கு அல்ல"

    மிகச்சிறப்பான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் சகோ.

    ReplyDelete
  5. நல்ல பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ. எதிர்கால இந்தியாவின் முன்னேற்றத்தைக் காட்டும் ஒருவித ஊக்க முயற்சியாக கருதுகிறேன்.பணி தொடர வாழ்த்துக்க்ள்....

    இனியவன்...

    ReplyDelete
  6. நம்மூரில் நம்மாழ்வர் என்ற மாமனிதன் செயல்படுத்தி வருகிறார். இயறகை ஆர்வலர்கள் ஆராதிக்க வேண்டியது.

    ReplyDelete
  7. காணொளி மிக அருமை. இதே முறையை இப்போது நம் நாட்டில் பலர் செய்து வருகிறார்கள். பசுமை விகடனிலும் வந்துள்ளது. நல்ல முயற்சி.
    நம்மாழ்வார் ஐயா போன்ற சிலரும் இயற்க்கை விவசாயத்தை பரப்பி வருகிறார்கள். இதுதான் நிலைக்கும்.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே,
    சகோ நம்பள்கி
    சார்வாகம் என்பது பழங்கால இந்திய நாத்திக தத்துவ சிந்தனை.இதற்கும் பல பின்பற்றுவோர் இருந்தனர் என்பது வரலாறு.சார்வாகன் என்பது நம் புனை பெயர். கருத்துக்கு நன்றி!.
    *************
    சகோ இக்பால செல்வன்,
    ஆமாம் பழைய காணொளிதான்.இறை மறுப்பு என்பது வெறும் எதிர்மறையான கொள்கையாக் இருப்பதால் அது மட்டுமில்லாமல் ஆத்திகத்தின் மாற்று இயற்கை சார்ந்து பகிர்ந்து இவ்வுலகில் வாழ்வதே என்பதையே நாம் கூறுகிறோம்.
    ம‌றுமை ந‌மக்கு வேண்டாம் ,வேண்டுப‌வ‌ர்க‌ள் அர்சியல் அன்றி தேட‌ட்டும்.ஆன‌ல் அத‌ன் பெய‌ரால் பிர‌ச்சினை ஏற்ப‌டுத்த‌ அனும‌திக்க‌ கூடாது.
    **************
    ச‌கோ இராஜ‌ராஜேஸ்வ‌ரி
    உங்க‌ளைப் போன்ற மத சார்பற்ற ஆன்மீக‌வாதிக‌ள்,இய‌ற்கை ஆர்வ‌ல‌ர்க‌ளுட‌னும் க‌ல்ந்துரையாடி வ‌ள‌ங்க‌ள் ப‌கிர்வை சுமுக‌மாக்க‌வே விரும்புகிறோம்.
    ***
    ச‌கோ இனிய‌வ‌ன்,ச‌கோ குயிக்ஃபாக்ஸ்,ச‌கோ த‌மிழான‌வ‌ன்,ச‌கோ விருச்சிக‌ம்

    அறிவிய‌லாள‌ர் ந‌ம்மாழ்வார் போல் இளைய‌ த‌லைமுறையிலும் ப‌ல‌ர் உருவாக‌ வேண்டும்.அனைவ‌ருக்கும் அலுவ‌ல‌க்ப் ப‌ணி கிடைக்காது.இய‌ற்கை வ‌ள‌ங்க‌ள் சார்ந்தே க‌ல்வி,வேலை வாய்ப்பு உருவாத‌ல் காலத்தின் க‌ட்டாய‌ம்

    ந‌ன்றி

    ReplyDelete
  9. நல்ல பதிவு,

    அந்த காணொளியில், வெளியேறி நல்ல(descent)வாழ்க்கையை அமைத்து கொள் என்ற அறிவுரையை கேட்டு, இயற்கை புகைபடக்காரராகி, முடிவில் விவசாயித்திற்கு திரும்பி வந்திருக்கிறார் அம்மணி. இது எந்தளவிற்கு இந்தியாவில் சாத்தியமாகும் என்று தெரியவில்லை.

    விவசாயத்தை குழி தோண்டி புதைக்கும் வேலைகள் நடைப்பெற்று கொண்டு வருகின்றன. ஒரு நிலையை அடைந்துவிட்டால், விவசாய பொருட்களின் விலைகள், உற்பத்தி குறைவால், வின்னை முட்டும். இப்போதிருக்கும், நில மோகம், too many money chasing too little land. வேறு தொழில் செய்து வருமானம் பெற்றுக்கொண்டு இயற்கை விவசாயத்தை தொடர்ந்தால் பிற்காலத்தில் விவசாயம் ஒரு தங்க சுருங்கம்.

    நம்மாழ்வார் பற்றி தெரிந்தவர்கள் யாரும் அதிகம் பேசுவதில்லை செய்திகளையும் தருவவதில்லை ஏன் என்று தெரிவதில்லை.

    நன்றி.

    ReplyDelete
  10. வாங்க சகோ நரேன்,
    காணொளியில் வரும் ரெபெக்கா தனக்கு ஈடுபாடுள்ள‌ விடயத்தை ஒரு தேடலில் கண்டறிந்து அதில் தன் முழு கவனம்,உழைப்பை செலவிட்டதால் அவரால் இயற்கை மேம்பாட்டில் ஒரு சிறு பங்களிப்பு அளிக்க முடிந்தது.

    நம் நாட்டில் நாம் என்ன செய்தால் குறுகிய காலத்தில் அதிக பொருள்,புகழ் ஈட்ட முடியும் என்ற சிந்தனையிலேயே தயார் செய்யப் படுகிறோம்.எனினும் வரும் கால சூழல் இயற்கை மேம்பாடு சார் பொருளாதாரம்,தொழில் நுட்பம் நோக்கியே நம்மை நகர்த்துகிறது.

    விவசாய நிலங்களை வாங்கி குவிப்பதில்,பெரும் அளவு மையப்படுத்த‌ப் பட்ட‌ விவசாயம் செய்வதில் பொருளாதார சக்திகள் உலகம் முழுதும் இப்போதில் இருந்தே முனைப்பு காட்டுகின்றன. அவர்கள் செய்தால் அனைவரும் பின் பற்றுவார்கள் என்பதில் ஐயம் வேண்டாம். என்ன விவசாயம் அப்போது மட்டும்பணம் கொழிக்கும் தொழில் ஆகி விடும். எப்படி எனில் விலை நிர்ணயமே அவர்கள் கையில்தானே!

    விவசாய நிலத்தை வீட்டு மனையாக மாற்றாமல் தொடர்ந்து விவசாயம் செய்வது நம் தலைமுறைக்கு செய்யும் மிகப் பெரிய சேமிப்பு.

    நன்றி

    ReplyDelete
  11. வணக்கம்
    சரியாய் சொன்னிர்கள்
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete
  12. சகோ.சார்வாகன்,

    இந்தப்பதிவு எப்போ போட்டிங்க, நான் ஒருப்பக்கம் விவசாயம்னு கூவிக்கிட்டு இருப்பதை மறக்க வேண்டாம்.

    அப்புறம் இயற்கை விவசாயம் நடைமுறைக்கு உதாவாதுன்னு நெம்ப படிச்சவங்களாம் தீர்ப்பு எழுதிக்கிட்டு இருக்கும் போது நீங்களும் என்னோட சேர்ந்து முட்டாள் பட்டம் வாங்க ஆசைப்படுறிங்களே :-))

    இரசாயன உர விவசாயத்தினை இந்தியாவில் தூக்கிப்பிடிக்க காரணமே பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரத்திற்காக தான் , ஏன் எனில் நம் நாட்டில் விவசாய மானியம் என்பது ,உரம் பூச்சி மருந்து நிறுவனங்களுக்கு நேரிடையாக அளிக்கப்பட்டுவிடும், எனவே விவசாயி மானியத்தின் பலனை அனுபவிக்க வேண்டுமெனில் அவன் உரம்,பூச்சி மருந்து வாங்கியாகவேண்டும்.

    இயற்கை விவசாயம் செய்தால் மாநியத்தின் பலன் வந்து சேராது. மேலும் இயற்கை விவசாய உற்பத்தி என சான்று வாங்க பல தடைகள் இருக்கு.

    முதல் தடை மண்ணில் இரசாயனம் இல்லை என நிறுபிக்க வேண்டும், பின்னர் விளைச்சலில் இரசாயனத்தின் அளவு என்ன என்பதற்கு சான்று வாங்க வேண்டும், எல்லாம் விவசாயியே அலைந்து திரிந்து வாங்க வேண்டும்.

    இத்தனைக்காலம் இரசாயனம் போட்ட நிலம் என்பதால் இப்போது உடனே இயற்கை விவசாயம் செய்தாலும் அதில் இரசாயனத்தின் எச்சம் இருக்கும் என்பதால் ,நம்முடைய இயற்கை விவசாய விளைச்சலை ஏற்றுமதி செய்ய இயலாது.

    எனவே இயற்கை விவசாய நிலம் என சான்று வாங்க நிலச்சீர்திருத்தம் செய்து , முழுவதும் இரசாயனம் அற்ற விவசாயம் என சான்று வாங்க பல ஆண்டுகள் ஆகும் என்பதே நிலை.

    இயற்கை விவசாயம் செய்துவிட்டு வழக்கமான இரசாயன விளைச்சல் விலைக்கு தான் விற்க வேண்டியதாக இருக்கு. ஒரு சில சூப்பர் மார்கெட்டுகளுக்கு குறைவான விலையில் விற்கலாம்,எனவே இப்போது வருமானம் குறைவாகவே இருக்கு.

    இரசாயன விவசாயம் செய்துவிட்டு ,இயற்கை முறைக்கு மாறும் போது சில ஆண்டுகளுக்கு விளைச்சல் குறைவாக இருக்கும், அதனை ஈடுகட்டும் விலை சந்தையில் தற்போது கிடைக்கவில்லை என்பதாலேயே இன்னும் பெருசாக பரவவில்லை இயற்கை விவசாயம்.

    ReplyDelete
  13. சகோ வவ்வால்,

    நாம் சாமான்யர்களுடன் முட்டாள் ஆகவே வாழ,அடையாளப் படுத்த‌ விரும்புகிறோம்.

    இயற்கையை பாழ் படுத்துவது புத்திசாலித்தனம் என்றால் நான் முட்டாளாக இருக்கவே ஆசைப் படுகிறேன்!!!!!!!!!!

    சந்திர பாபு பாடுகிறார்!!!!!!!!!!!

    நான் ஒரு முட்டாளுங்க
    ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க‌

    நன்றி!!!!!!!!!!!

    ReplyDelete
  14. சகோ.சார்வாகன்,

    //நான் ஒரு முட்டாளுங்க
    ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க‌//

    அஃதே,அஃதே!

    ReplyDelete