Friday, February 8, 2013

மதவாதிகளின் இரட்டை வேடங்கள்?




வணக்கம் நண்பர்களே,


மதம் என்பது ஆன்மீக போர்வை போர்த்தி, ஆண்டவனை அடையும் வழி என பிரச்சாரம் செய்தாலும் ,அதன் உண்மையான நோக்கம் அரசியல் அதிகாரம் கைப்பற்றுவதே என நாம் அறிவோம்.

இதற்கு மதவாதிகள் போடும் வேடம் வெகுநாள் நீடிப்பது இல்லை.சாதி வேதங்களில் இல்லை,சில இடங்களில் சாதி பற்றி கூறினாலும் பிறப்பின் அடிப்படையில் இல்லை என்பார், ஆனால் நடைமுறை எதார்த்தம் என்ன என்பது நமக்கு தெரியும்.

நமது சகோதர நாடான பாகிஸ்தானில் நாளொறுமேனியும், பொழுதொறு வண்ணமாக பலவகைகளில் பிரச்சினைகள் முளைப்பது நாம் அறிவோம். ஒரு மத அடிப்படைவாத நாடு இப்படித்தான் ஆகும் என சிந்திக்கும் எவருக்கும் புரியும்.

இபோது அங்கே  தாஹிர் அல் கத்ரி[Tahir ul Qarti] என்னும் ஒரு மதபிரச்சாரகர் [ அன்னா ஹசாரே மாதிரி!!!] மக்களைத் திரட்டி ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்  என செய்திகளில் வந்தது.


அவர் பற்றிய விக்கிபிடியாவில் கூட அவர் ஒரு [மத] சட்ட வல்லுனர், பல பட்டங்கள் பெற்றவர் என்க் கூறுகின்றது.


http://en.wikipedia.org/wiki/Muhammad_Tahir-ul-Qadri


இவர் டென்மார்க் சென்ற போது[2012] ஆற்றிய உரையில் இவரது இரட்டை வேடம் வெளிப்பட்டது.

பாகிஸ்தானில் மத நிந்தனைக்கு மரண தண்டனை[295 C] என சட்டம் அமலில் இருக்கிறது. கத்ரி இது மதத்தின் படி தவறு என டென்மார்க்கில் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார்.

ஆனால் பாகிஸ்தானில் உருதுவில் உரையாற்றும் போது மத நிந்தனைக்கு மரண தண்டனை என்பது சரியே என கூறுகிறார்!!.

இதில் எது சரி?


காணொளி பாருங்கள்!! மதவாதிகளின் இரட்டை வேடங்களை அறியுங்கள்!!! 



நன்றி!!!

46 comments:

  1. சகோ.சார்வாகன்,

    சாமியார்னு சொன்னாலே போலினு தனியா சொல்ல வேன்டாம் என்பது போல மதவாதின்னாலே இரட்டை வேடம்ம் தான் :-))

    எல்லா மதவாதிகளுமே இரட்டை வேடதாரிகளே,கடவுள் இல்லைனு சொன்னா இருக்குன்னு சொல்வாங்க,எந்த கடவுள்னு கேட்டா ஆளுக்கு ஒன்னை காட்டுவாங்க :-))

    சரி ஏதோ ஒரு கடவுளை நாமும் ஏற்றுக்கொள்ளலாம்னு கிட்டக்க போனா அதில ஆயிரம் பிரிவினைகள் , அதுக்கு ஆணியே புடுங்க வேண்டாம் கடவுளே இல்லைனு இருக்கலாம் :-))

    இல்லைனா நாமே கடவுளாகிடனும், எவன் சொல்றதையும் கேட்க வேண்டாம்,கேட்டா தலைவலி தான் :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் வவ்வால்,
      மத்வாதி என்றால் இரட்டைவேடம்,பொய்யன் என அறிந்த விடயம் என்றாலும்,மார்க்க பந்துக்கள் திருடத் தெரிந்த அளவு ஒளிக்கத் தெரியாத அப்பாவிகள். பாருங்கள் ஆங்கிலத்தில் பேசினால் ஒரு கருத்து,உருதுவின் பேசினால் இன்னொரு கருத்தா?

      சக பந்துக்களின் மேல் அவ்வளவு நம்பிக்கை!!

      நன்றி!!!

      Delete
  2. http://www.dailymail.co.uk/news/article-2274340/Saudi-Arabia-beheads-Abdullah-bin-Fandi-Al-Shammari--death-row-THIRTY-YEARS.html#axzz2KKowVE8I

    Saudi Arabia beheads man who had been on death row for THIRTY YEARS
    Abdullah bin Fandi Al Shammari was sentenced to death in 1983

    He killed a man by hitting him on the head with a stick following a row

    Kept from the gallows while victim's relatives were asked to grant a pardon

    Victim's sons had to come of age to decide whether to accept blood money

    While in jail he learned the Quran and was described as the 'ideal inmate'

    His beheading brings the number of executions in Saudi to 10 for this year

    **
    A Saudi Arabian prisoner who spent 30 years on death row for killing a man in a fight was finally executed yesterday after the victim's family refused to grant him a pardon.
    Abdullah bin Fandi Al Shammari, described by prison management as the 'ideal inmate', was beheaded in the northern town of Ha'il.
    Shammari was just 23 when he was arrested and jailed for killing fellow Saudi Moojab bin Mohammed Al Rashidi by hitting him on the head with a stick following a row.
    His trial dragged on for five years until the court ruled Rashidi's death was involuntary homicide. Shammari was then set free and ordered to pay the victim's family diya or blood money.
    After being released form prison Shammari was married in a lavish wedding. But al-Rashidi's relatives objected to his release and demanded a retrial.
    Shammari was subsequently rearrested and found guilty of murder and sentenced to death on murder charges in 1983.
    Under Saudi law, al-Rashidi's sons had to come of age and decide whether or not to accept diya.
    Shammari was kept from the gallows for 30 years as the court wanted allow his relatives and friends a chance to persuade the victim’s relatives to accept diya again and pardon him, but time and again they refused.
    As a prisoner Shammari was praised for his exemplary conduct, he not only memorised the Quran but persuaded other inmates to do likewise.

    ReplyDelete
  3. ஊழல் வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்தி போராடுகிறேன் பேர்வழி என மக்களை ஏமாற்றி அதிகாரம் பிடிப்பதே மதவாதிகளின் வேலையே, இந்தியாவின் பாபா ராம்தேவ், ஹஸாரே கூட இதே இரட்டை வேடதாரிகளே. பாஜக அடுத்த தேர்தலில் ஊழலுக்கு எதிர் என்ற நிலைப்பாட்டைக் கொண்டு வருது, ஆனால் மபியில் பாஜக ஊழலுக்கு எதிராய் போராடிய காவல் அதிகாரியை கொன்றது, இன்னொரு பக்கம் ராமர் கோவில், காதல் தின எதிர்ப்பு எனக் கிளம்புது. தாலிபானோடு பாஜக தொடர்பு, ஆனால் வெளியில் முஸ்லிம் எதிர்பு. பிஜே போன்ற முஸ்லிம் அரசியல்வாதி பாஜக எதிர்ப்பு, தாலிபான் ஆதரவு, ஆனா பாஜக தோழமை கட்சி அதிமுக நட்பு. ஒரே குஸ்டமப்பா !

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இக்பால்,
      இந்த ஏமாற்றுவேலைகள் எல்லாமே அரசியல் அதிகாரம் என்னும் இலக்கை நோக்கியே என்பதைப் புரிந்தால் குழப்பம் வராது!!.

      நன்றி!!

      Delete
  4. அவர்களுடைய புனித இஸ்லாம் மதமே பொய் சொல்வதை அனுமதிக்கிறதாமே தமிழ்மணத்தில் இஸ்லாமிய பொய்கள் எத்தனையை பார்த்துவிட்டோம்.
    தாஹிர் அல் கத்ரிக்கு பர்தா போட்ட இரசிகைகள்:)
    சகோ, வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய பெண்கள் பலரே பர்தா போடுவதில்லை.(இஸ்லாமிய சாம்ராஜ்ய ஓட்டோமான் பெண்கள் காபிர் பெண்கள் போலவே பல வித ஆடைகள் அணிய ஆரம்பித்ததால் பர்தாவில் அவர்களை விட்டுவிடுவோம்)அப்படியிருக்க தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமிய மதவாதிகள் சொல்லி கொள்வது இஸ்லாமியப் பெண்களின் வாழ்வில் ஒழுக்க வாழ்க்கை வாழ பின்னிப்பிணைந்த தவிர்க்க முடியாத பர்தா என்று படு பொய்யை சொல்லி கொள்வார்கள். ஆனா உண்மை என்னான்னா பர்தா இல்லாம பெண்களை கண்டால் இஸ்லாமிய ஆண்கள் தீய உணர்வை பெற்றுவிடுவார்கள்.இவர்கள் உண்மையிலேயே தமிழர்களாக இருந்து சாதி கொடுமைக்காக அரபை தழுவி கொண்டவர்களா? அல்லது அரபியாவில் இருந்து வந்தவர்களா? ஏனெனில் பர்தா என்பது அரேபிய பெண் அடக்கு முறை முகமூடி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நரி

      தாக்கியா என்பதை மதம் அனுமதிக்கும் ஒரு விடயமே!!.மெக்காவில் முக்மது(சல்) இருந்தபோது இருந்த நடைமுறைதான் தாக்கியா!!.

      சிறுபானமை என்றால்
      " 109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."

      பெரும்பான்மை எனில்

      "3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்."

      நம்ம ஆன்மீகவாதி தாசு கூட நரகமே செல்வார்!!
      http://en.wikipedia.org/wiki/Taqiyya

      நன்றி!!

      Delete
  5. சகோ வேகநரி குறிப்பிட்டது போல அல்தக்கியாவை இசுலாமே அனுமதிக்கும் போது அவர்களுக்கு என்ன வந்தது...அடித்து ஆட வேண்டியதுதானே? மற்ற மதங்களில் இந்த அனுமதி இல்லாமலோயே தூள் கிளப்புகிறானுக- மதுரை ஆதினம் சிவன் கனவில் வந்து நித்தியை குட்டி ஆதினமாக நியமிக்க சொன்னதாக அடித்துவிட்டரே, அது போல. முமின்கள் அல்லாவின் அனுமதியுடன் புகுந்து விளையாடுகிறார்கள். மற்ற மதத்தினர் முன் அமைதி மார்க்கம் என்பார்கள், தனக்குள் தனியாக பேசும் போது வேறுவிதமாக பேசுவார்கள்.

    http://www.youtube.com/watch?v=SNZQ5D8IwfI

    இந்த வீடியோவை பார்த்திருப்பீர்கள். ஒரு பகுதி இது. எப்படியெல்லாம் இசுலாமிய தீவிரவாதிகள் நடிக்கிறானுக என்று பாருங்கள். இந்த உண்மைகளைப் பார்த்தால் வருவதுதான் இசுலாமோபோபியா. விசுபரூபம் போன்ற மொக்கை சினிமாக்களைப் பார்த்து அல்ல!

    நீங்கள் வெளிநாட்டு பிரச்சாரகரை தோலுரித்துள்ளீர்கள். நம்மூரில் முற்போக்கு வேடமிட்டு நடிக்கும் ரைருடக்கர் அமீர் டவுசரை அவித்து அம்மணமாக்கி ஓடவிட்டிருக்கிறார் சவுக்கு சங்கர்
    http://tinyurl.com/byhj8wj

    இந்த பொழப்புக்கு...

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனத்தான்,
      முமீன்கள் பற்றிய கற்று அறிந்தவர் ஒருவர் சீனியர் எனக்கு விளக்கமளிக்கும் போது தக்கியா என்பது அவர்களுக்கு சக்கரை பந்தலில் தேன் மழை பொழிந்தது போல் என்றார்.

      Delete
    2. அமீர் என்ற கலைஞன் யார் என்பதை சுவர்னபிரியன் பதிவில் இருந்தே புரிஞ்சுகிட்டேன் நன்றி சகோ.

      Delete
    3. வாங்க சகோ நந்தவனம்,
      அடித்து ஆடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். இந்துவேதம், கிறித்த்வ வேதம் எல்லாம் அல்லாஹ் கொடுத்த ,மாற்றப்பட்ட வேதம். அங்கங்கே முகமது(சல்) பற்றி குறிப்பு இருக்கும். கல்கி அவதாரமே முகமது(சல்).

      http://www.irf.net/index.php?option=com_content&view=article&id=201&Itemid=131

      ஆதம்(அலை) @ ஹோமோ எரக்டசு இலங்கையில் இருந்தார்!!

      திருவள்ளுவரும் முஸ்லிமே என அடித்து ஆடுவதை சிந்திக்க மாட்டீர்களா!!

      நன்றி!!

      Delete
  6. இந்தியா, அமரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் இங்கெல்லாம் எத்தனை பேர் மதம் மூலம் ஆட்சியைப் பிடித்தார்கள் என்று சொல்வீர்களா? ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொல்லுவான்,

    எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பதறிவு.

    எது சரி எனத் தீர்மானிக்க உங்க மேல்மாடியில இருப்பதை பயன்படுத்துங்க மாமு. உங்க பாஷையில, "சிந்திக்க மாட்டீர்களா?"

    \\சரி ஏதோ ஒரு கடவுளை நாமும் ஏற்றுக்கொள்ளலாம்னு கிட்டக்க போனா அதில ஆயிரம் பிரிவினைகள் , அதுக்கு ஆணியே புடுங்க வேண்டாம் கடவுளே இல்லைனு இருக்கலாம்.\\ துணிக்கடைக்குப் போனால், ஏகப்பட்ட டிசைன்களில் துணிகள் இருக்கு, எதைத் தேர்ந்தெடுப்பது, எனவே அம்மனமாவே திரியலாம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜெயதேவ் தாஸ்,

      கடைசியில் போயி கடவுளை சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடைக்கு ஒப்பிட்டுவிட்டீர்களே? அப்போ துணிகளை மனிதன் உருவாக்குவதைப்போலத்தான், கடவுளை மனிதன் உருவாக்குகிறானா. துணிகள் அழுக்கு அடைவதைப் போல கடவுள் அழுக்காகிறானா? கழுவ வேண்டுமா?
      இல்லை எக்காலத்திற்கும் மாறாத அனைவராலும் போடக் கூடிய மார்க்கமான உண்மையான ஒரே துணி எதாவது இருக்கிறதா.

      Delete
    2. @naren

      Options பல இருக்கும்போது எதைத் தேர்ந்தேடுப்பாடு என்ற குழப்பத்தால் எல்லாவற்றையும் நிராகரிப்பதன் கூமுட்டைத் தனத்தை கோடிட்டுக் காட்டவே ஒரு உதாரணம் அதற்கும் மேல் அதை இழுத்தால் சொல்ல வந்த பொருளில் இருந்து விலகிப் போய்விடும்!!

      Delete
    3. பாகவதரே,

      //Options பல இருக்கும்போது எதைத் தேர்ந்தேடுப்பாடு என்ற குழப்பத்தால் எல்லாவற்றையும் நிராகரிப்பதன் கூமுட்டைத் தனத்தை கோடிட்டுக் காட்டவே //

      ஆப்ஷன் பல இருக்குனு இப்போ சொல்லும் வாய் தானே கிருஸ்ணா மட்டுமே பரம்பொருள் அவரையே வணங்கனும்னு சொன்னது, அதான் ஆப்ஷன்ன் இருக்கேனு சிவபெருமானை வணங்குறவங்க வணங்கட்டும்னு ஏன் நீர் சும்மா இல்லை?

      ஆதி சங்கரர் கைவல்ய அத்வைதம் சொன்னால் என்ன அதுவும் ஒரு ஆப்ஷன் தான்னு சும்மா இல்லாமல் அதெல்லாம் இல்லைனு ஏன் பதிவு போட்டீர்,அப்போ நீர் தப்பா பதிவு போட்டு இருக்கீர் தானே :-))

      இல்லை சுடலை மாடன் கோயிலுக்கு நீர் போவிரா, அதுவும் ஒரு ஆப்ஷன் தானே.

      இல்லை அல்லா ,ஜீசஸ் என போவீரா?

      அது என்ன எல்லாரும் அவனவன் கடவுள் மட்டுமே ஏக இறைவன் என சொல்லிக்கிறது.

      வெள்ளை சட்டை போட்டு இருக்கிறவன் பச்சை சட்டை போட்டு இருக்கவன் சட்டையே போடலைனு சொல்ல முடியுமா? ஆனால் இங்கே ஒருத்தன் இன்னொருத்தன் வணங்கும் கடவுளை இல்லைனு சொல்லிடுறான், எனவே எல்லாவற்ரையும் இல்லைனு சொன்னால் தப்பா?

      அப்போ இங்கே நீரே கிருஸ்ணா பரம்பொருள் இல்லைனு ஒத்துக்கிட்டீர், ஆனால் உமது பதிவில் வேற மாதிரி சொல்லி இருக்கீர்,அப்பதிவை டெலிட் செய்துவிடவும், ஆப்ஷன்கள் பல இருக்கும் போது பரம்பொருள் ஒன்று என சொன்னால் ஒரே ஆப்ஷன் என சொல்வது தப்புத்தானே :-))

      Delete
    4. கடவுள் நம்பிக்கை எனக்கு தனிப்பட்ட முறையில் இல்லை என்பது நியாயம், பல வழிகள் இருப்பதால் அனைத்தையும் நிராகரிக்கிறேன் என்பது கூமூட்டைத் தனம்.

      Delete
    5. வாங்க மாப்ளே தாசு,


      காஃபிர் புத்தியை காட்டி விட்டீர்களே!!

      நாம் யோசித்து செய்தால் ஏக இறைவன் எதுக்கு வேதம் இறக்க வேண்டும். உலகின் அருட்கொடை நலி(சல்) அவர்களின் வாழ்வு போல் வாழ சொல்ல வேண்டும்.

      சிந்தித்து வாழ்வது காஃபிரின் வேலை. ஹலால்/ஹராம் பற்றி மதகுருவின் விளக்கம் கேடு வாழ்பவனே இறையடியான்!!


      உலகின் ஒரே மர்க்கம் இஸ்லாம் மட்டுமே!!. இதில் எதைத் தேர்ந்தெடுபது என இணை வைக்காதீர்!!. நீரும் காஃபிர்தான்!!

      '5:50. அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?'

      நன்றி!!

      Delete
    6. மாப்ளே தாசு,
      நீரு ஆப்சன் கொடுப்பதால் ,நாம் வேத கால இந்து மதத்தை பின்பற்றுவோம்.
      ரிக் வேதத்தில் முழுமுதல் கடவுள் இந்திரன்.

      ரிக் வேதம் முழுதுமே!

      சோம பானம் அருந்தி பாட்டுபாடி மகிழ்வோம், இந்திரா விருத்திரனை அழித்தது போல் என் எதிரிகளை அழித்துவிடு, எனக்கு உணவும் செல்வமும் கொடு என முழுதும் ஒரே கூப்பாடு!!

      http://en.wikipedia.org/wiki/Soma

      In the Vedas, the drink, and the plant refer to the same entity. Drinking Soma produces immortality (Amrita, Rigveda 8.48.3). Indra and Agni are portrayed as consuming Soma in copious quantities. The consumption of Soma by human beings is well attested in Vedic ritual.

      The Rigveda (8.48.3, tr. Griffith) states,

      a ápāma sómam amŕtā abhūmâganma jyótir ávidāma devân
      c kíṃ nūnám asmân kṛṇavad árātiḥ kím u dhūrtír amṛta mártyasya

      We have drunk Soma and become immortal; we have attained the light, the Gods discovered.
      Now what may foeman's malice do to harm us? What, O Immortal, mortal man's deception?

      The Rigveda (8.48.3, tr. Swami Dayanand Saraswati) states,

      a ápāma sómam amŕtā abhūmâganma jyótir ávidāma devân
      c kíṃ nūnám asmân kṛṇavad árātiḥ kím u dhūrtír amṛta mártyasya

      Som (good fruit containing food not any intoxicating drink) apama (we drink you)
      amŕtā abhūmâ (you are elixir of life) jyótir âganma (achieve physical strength or light of god)
      ávidāma devân (achieve control over senses);

      kíṃ nūnám asmân kṛṇavad árātiḥ (in this situation, what our internal enemy can do to me)
      kím u dhūrtír amṛta mártyasya (god, what even violent people can do to me)

      இப்படி சாமி கும்பிடனுமா

      சரக்கு அடித்து உளறுவது போல் தெரிகிறது!!

      சோம பானம் தயாரிப்பு பற்றி ஒரு பதிவு எழுதும்!!

      நன்றி!!

      Delete
    7. பாகவதரே,

      //அனைத்தையும் நிராகரிக்கிறேன் என்பது கூமூட்டைத் தனம்.//

      நீர் எந்த கூமுட்டைத்தனத்தால் ஆதி சங்கரர் கருத்தை நிராகரித்தீரோ அதே கூமுட்ட தனத்தால் நானும் அனைத்தையும் நிராகரிக்கிறேன்.

      நீர் ஏன் ஒம் நமச்சிவாயா என சொல்வதில்லை :-))

      ஏக இறைவன் சுடலை மாடன் வாழ்க என சொல்வதில்லை, கெடா வெட்டி ,பொங்கல் வைத்து,சாராயம் படைப்பதை ஆதரிப்பதில்லையே ஏன்?

      ---------------

      சகோ.சார்வாகன்,

      ரிக் வேதம்னு ஆரம்பித்தால் பாகவதர் அடங்கிடுவார்னு உமக்கும் தெரிஞ்சு போச்சா, நான் ரிக் வேதம்னு சொல்லியே ஒரு பதிவு முழுக்க கலாய்ச்சிருக்கேன் :-))

      இப்போ அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சுடுவார் :-))

      வியாசர் தான் எல்லாம் அவர் சொன்னது தான் விதி என்பார், வியாசரோட வண்டவாளத்தை சொன்னால் ,பின்னூட்டத்தை டெலிட் செய்வார்,சரியான கோழை :-))

      Delete
  7. இரட்டை வேடம் என்பது பாக்கிஸ்தான் மதவாதியிடம் மட்டுமா?சார்வாகனிடமும் இல்லையா ?
    கல்லூரி மாணவி கற்பழிப்பு கொலைக்கு நாடெல்லாம் கண்டனக் குரல்

    அதே டில்லியில் கற்பழித்துக் கொல்லப்பட்ட ஏழைப்பெண் பற்றிய செய்தி வெளிவராமல் அமுக்கு

    சினிமா நடிகர் நடிகையின் உண்மை கதை சொன்னால் போராட்டம் பத்திரிக்கை அலுவலகம் உடைப்பு ,மருதநாயகம் படம் முடக்கம் இவற்றுக்கெல்லாம் மவுனம் .
    ஆனால் முஸ்லிம்களை பற்றி பொய்யான படம் எடுப்பதை எதிர்த்தால் கருத்து சுதந்திரம் பற்றிய அவலக் குரல்களா?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      நாமும் ஒழுங்காகத்தான் இருந்தோம். என்று குரான்,ஹதித் படித்தோமா அன்றில் இருந்து இலவச இணைப்பாக இந்த தாக்கியாவும் வந்து விட்டது!!

      மூமின்களிடம் அப்பாவி உண்மை பேசும் காஃபிர்கள் கிடைத்தால் கைமா பண்ணி விடுவீர்கள் என தெரியாதா?

      இப்பூ நமக்கு ஹூரி பற்றிய சான்றுகள் கிடைத்தால் முற்று முழுதும் மார்க்கப் பணியில் இறங்கி விடுவேன்!!.

      மற்றபடி நமக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!!

      ஏக இறைவன் மிகப் பெரியவன்!!

      நன்றி!!

      Delete
  8. சார்வாகன்,
    செமிடிக் மதங்கள் அனைத்துமே, கூட்டம் கூடுதல்(Congregation)தன்மை கொண்டது. அதனால் அதற்கு நன்றாக பேசும் திறமை கொண்ட மதம்பிடித்த அறிஞர்கள் தேவைபடுகிறார்கள். அவர்கள்தான் வெற்றியும் பெருகிறார்கள் (திராவிட கட்சிகளைப் போல????? ) பேசுவதில் ஒரு எல்லையை அடைய வேண்டும் என்றால், ஒரு வரையறையை உருவாக்க வேண்டும்- இதுதான் மதம், மார்க்கம் என்று. அந்த வரையறை புனிதமாக்கி மாற்ற முடியாமல் செய்ய வேண்டும். மதம் பற்றி கூறும்போது நம்பிக்கை belief என்ற வார்த்தையைதான் பயன்படுத்துகிறோம். அந்த வரையறை பல பரிணாமங்களை(dynamics) கொண்ட நிதர்சன வாழ்கைக்கு பயன்படுத்தும்போது, ஒத்துவராது. அதனால் பல சப்பை கட்டுகளை கட்ட வேண்டியுள்ளது. அல்தக்கியாவும் உருவாகிறது. இரட்டை நாக்குகளும் உருவாகுகிறது.

    இந்திய பண்பாட்டில் கூட்டு கூடுவது இல்லையென்பதால், சாமியார்கள் பக்தர்களை?? இழுக்க மாயாஜாலத்தை காண்பிக்க வேண்டியுள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு மாயாஜாலம் செய்வார் என்று பரப்பபடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கூட்டம் கூடும். எ.கா. நித்தியானந்த, சாய்பாபா வகையறாக்கள்.

    மத நம்பிக்கை கொள்வது அடிப்படை உரிமை என்று வைத்துக்கொண்டாலும் கூட அந்த நம்பிக்கை அதன் எல்லைக்குள் இருப்பதே நலம்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நரேன்,

      மத பிரச்சார வாதிகள் பொய் ஏமாற்றுவேலை செய்யாமல் மதம் பரப்ப முடியாது. இதற்கு எந்த மதமும் வித்தியாசம் இல்லை!!.

      இதில் நம் சகோக்களுக்கு தாக்கியா திறமை பத்தவில்லை.
      இணையம் மூலம் உண்மைகள் வேறு வெளிவந்து விடுகின்றன!!


      நன்றி!!

      Delete
    2. நரேன்,

      எங்க ஓய் கொஞ்ச நாளாக்காணோம்?

      யாராவது சாமியாரி(ணி)டம் சீடராக போயிட்டீரா?

      செமிட்டிக் மதங்களின் மூலமான சொராஷ்டிரம், யூத மதத்தில் மதப்பரபுரை மற்றும் மதமாற்ற வைபவமே கிடையாது. பிறப்பால் மட்டுமே மதத்தில் இணைய முடியும். மத மாற்றும் நிழ்வை குற்றம் என் நினைப்பவை. அதனால் தான் பார்சிக்கள் இனம் இந்தியாவில் அழிந்து வருகின்றது.

      அதற்கு பின்னர் தோன்றிய மதங்கள்,அவற்றினை தக்க வைத்துக்கொள்ள மார்க்கெட்டிங்,மதத்தில் இணையும் சடங்கு எல்லாம் உருவாக்கிக்கொண்டன.இவை எல்லாம் proselytizing மதங்கள் ஆகும்.

      இந்து மதத்தில் பரப்புரை செய்யும் தொழில் பிறமதங்கள் உள்ள வந்தது,சமண,புத்த மதங்கள் ஆகியவற்றால் ஆரம்பிச்சது. வைணவமே புத்த மதத்தினை அழிக்க உருவாக்கப்பட்டது.2000 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளது என காட்டும் வைணவ அடையாளங்களே இந்தியாவில் இல்லை என்பதில் இருந்தே அறியலாம்.

      ஏன் எனில் இந்து மதமே மதமல்ல, வைதீக மதம் தான் இருந்தது,அதன் படி வேதம்,புராணம் எல்லாம் பார்ப்பணர்கள் தான் படிக்கணும், புராணத்தை காதால் கூட பொது மக்கள் கேட்கக்கூடாதாம்,,அப்படிக்கேட்டால் தண்டனை உண்டு.

      ராமணுஜர் காலத்தில் ஓம் நமோ நாராயணா என சொல்வதே பொது மக்கள் கேட்கக்கூடாது,. எல்லாம் பார்ப்பனர்களூக்குள் மட்டும் தான் சொல்லீக்கொடுப்பாங்க, அதனால் அதனை சிரிவில்லிப்புத்தூர் கோபுரத்தில் ஏறி உரக்க ஊருக்கு சொல்லிட்டார் ராமனுஜர் ;-))

      ஏதோ அவரால் ஆன ஆன்மிக புரட்சி.

      இப்போ எல்லாம் பொதுவுடமை ஆகிட்டதால் ,ஏகப்பட்ட சாமியார்கள், அதிலும் பார்ப்பண சாமியார்களுக்கு டிமாண்ட் அதிகம் :-))

      சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதுன்னு சொன்னாங்க இணையத்தில் வேதம் விளக்கத்துடன் கிடைக்குது,நானும் என்ன தான் சொல்லி இருக்கு படிச்சி பார்த்தேன் ,அப்போ நான் இப்போ பார்ப்பனர் ஆகிட்டேனா :-))

      வேதமும் இல்லை பூதமும் இல்லை எல்லாம் மாயா... எல்லாம் சாயா !

      Delete
    3. //பிறப்பால் மட்டுமே மதத்தில் இணைய முடியும்.// தவறான தகவல்

      Delete
    4. ராபின்,

      சரியான தகவல் கூற முடியுமா? இருப்பதை அறிய முயற்சி செய்யவும்.

      Delete
    5. //சரியான தகவல் கூற முடியுமா? இருப்பதை அறிய முயற்சி செய்யவும்.// நீங்கள் முயற்சி செய்து கண்டுபிடித்து விடுவீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் தான் கூகிள் புலியாச்சே :)

      http://en.wikipedia.org/wiki/Conversion_to_Judaism

      Delete
    6. ராபின்,

      நன்றி!

      கூகிள் புலியோ,எலியோ,ஏற்கனவே பார்த்துவிட்டேன்,நான் எதாவது சுட்டிப்போட அது சரியில்லைனு சொல்வீங்கனு தான்,நீஙக்ளே சொல்லட்டும்னு சொன்னேன்.

      இருப்பதை அறிய முயற்சி செய்யவும் என ஏன் சொன்னேன் என்றால் உண்மையில் யூதம் கன்வெர்ட் ஆவதை அனுமதிக்கவில்லை என்பதை சொல்லவே.

      நீங்க போட்ட சுட்டியில் இருப்பது,

      //According to Maimonides (Isurei Biah 13:15), in the days of Kings David and Solomon, Batei Dinim (Jewish courts) did not accept converts.[13]
      Nowadays, with the notable exception of some Syrian Jewish communities, (primarily the Brooklyn, NY and Deal, NJ communities),[14] all mainstream forms of Judaism today are open to sincere converts,//

      இஸ்ரேல் உருவான பின்னரே யூதமதத்தினை வளர்க்க இதெல்லாம் ஆரம்பம் ஆச்சு, அதற்கு முன்னர் கன்வர்ஷன் அனுமதிக்க மாட்டார்கள், அவர்களின் புனித நூலில் மதம் மாற என சடங்கேயில்லை.

      சொராஷ்ட்ர மதம் ரொம்ப அழியக்காரணமே இந்த கட்ட்ப்பாடு தான், பார்சிக்கள் எண்ணிக்கை ரொம்ப கம்மியாப்போனப்பிறகு இப்போ தான் கலப்பு திருமணம் செய்வதை மத ரீதியாக அங்கிகரிக்கிறாங்க.

      இந்து மதம்/வைதீக மதத்திலேயே முன்னர் மாற்று மதத்தினர் மதம் மாற சடங்கு இல்லை,ஆர்ய சமாஜம் தான் உருவாக்கிச்சுனு எப்போவோ படிச்சேன்.

      ஆர்ய சமாஜம் மூலம் விருப்பப்பட்ட ஜாதியில் சேர்ந்துக்கலாமாம், ஆனால் அப்படி ஆக அவர் மாற்று மதத்தவரா இருக்கணும் :-))

      Delete
  9. நாம் எந்த ஆயுதம் எடுப்பது எனபதை தீர்மானிப்பது எதிரிகள்; ஆனா, தாஸ் அந்த ஆயுதத்தை எடுத்தே கொடுத்துவிடுவார்! அதான் தாசின் மழுமை! துணியோடு கடவுளை ஒப்பீட்டுள்ளார்.

    நாம் பிறக்கும் போது மதமும் கிடையாது மயிரும் கிடையாது! sorry, மன்னிக்கணும்...மயிறு மட்டும் தான் மனிதனுக்கு இருந்தது உடைக்கு பதிலாக; அப்பொழுது மனிதனுக்கு மதமும் தேவையில்லை உடையும் தேவையில்லை; மயிறு மட்டும் போதும் (see, role of hair in regulation of body temperature).
    வழுக்கை மண்டைடையன்கள் தொப்பி போடுவது இதானாலும் கூட...

    அப்புறம் பிழைக்க மதவாதிகள் வந்தனர்; பிளாட்பாரம் துணிகள்; பின்னி, மபட்லால்...அதை வித்தது அண்ணா சாலையில் உள்ள எங்க சொந்தங்கள் செல்லாராம் இப்படி...

    சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையில் உள்ள ஒரு பீஸ் துணி தான் இஸ்க்கான்; இது இல்லாமலே வாழ முடியும். பிறக்கும் போது நிர்வாணம் இறக்கும் போதும்...மதம் என்ற மதம் பிடிப்பது நடுவில்...

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி,

      // தாஸ் அந்த ஆயுதத்தை எடுத்தே கொடுத்துவிடுவார்! அதான் தாசின் மழுமை! துணியோடு கடவுளை ஒப்பீட்டுள்ளார்.//

      சரியா பாயிண்டைப்புடிச்சிங்க, இப்படித்தான் பாகவதர் அவரா வந்து என்க்கிட்டே மாட்டிக்கொள்வது வழக்கம் :-))

      அவருக்கு நேற்று சொன்னது இன்னிக்கிஉ நினைவு இருக்காது,

      பல ஆப்ஷன்கள் இருக்கும் போது எதையாவது தேர்வு செய்யணும் என்கிறார், சரி ஆனால் தேர்வு செய்ய விடாமல் நீ இதைத்தான் எடுக்கணும்,மற்றது எல்லாம் போலி, இதுவே ஏகத்துவமான துணினு ஒவ்வொரு துணிக்கும் சொன்னால் என்ன செய்வதாம்:-))

      வேறத்துணிய அணிந்தால் உனக்கு நரகம் ,என் துணியை அணிந்தால் சொர்க்கம்னு துணிக்காரன் சொல்லுறானே :-))

      அதுவும் ஒவ்வொரு துணிக்காரனும் இதையே சொல்லுறான் ,அப்போ சரியான துணியை அணியலைனா சொர்க்கம் கிடைக்காம போயிட்டா என்ன செய்வது , ஆனா எது சரியான துணினு தெரியாம ,நிர்வாணமே போதும்னு நினைக்க வைக்குதே :-))

      எனவே துணியை விட துணிவிக்குறவன் செய்யிற குழப்படித்தான் எல்லாத்துக்கும் காரணம்!!!

      அதாவது கடவுளை விட அதை பரப்புரை செய்பவன் தான் எல்லா குழப்பத்துக்கும், சண்டைக்கும் காரணம் :-))

      -----------------

      Delete
    2. வாங்க நண்பர்கள் நம்பள்கி,வவ்வால்
      மாப்ளே தாசு பத்தி உங்களுக்கும் தெரிந்து விட்டதா!!

      அவர் இருப்பதால் நம்க்கும் பொழுது போகுது!!

      அவர் இன்னும் தன் குருவைக் காட்டவில்லை, எனக்கு 99% தெரியும் என்றாலும் பொறுமையாக இருக்கிறேன்!!

      அப்புறம் சொல்ல மாட்டார்!!

      ஆகவே [ அதுவரை] அளவாய் கிண்டல் செய்து ,வளமாக எதிர்பதிவு,பினூட்டம் போடுவோம்!!

      நன்றி!!!

      Delete
  10. மதவாதிகள் மட்டுமே இரட்டை வேடம் போடுவதில்லை.
    வினவு என்ற பெயரில் கம்யூனிஸ மதத்தை பிரச்சாரம் செய்யும் வினவும் இப்படி இரட்டை வேடக்காரர்கள்தான்.

    அப்ஸல் குருவை தூக்கில் போட்டதை இந்திய அரசு பயங்கரவாதம் என்று எழுதியிருக்கிறார்கள். அரசு மரண தண்டனை விதிப்பது சரியா அல்லவா என்பது இரண்டாவது கேள்வி. ஆனால் அவர் நிரபராதி என்று எழுதும்போதுதான் பிரச்னை வருகிறது.

    இதனை வினவு பதிவில் எழுதினேன். அது அனுமதிக்கப்படவில்லை. இவர்கள்தான் மனித உரிமை, கருத்து சுதந்திரம் என்றபெயரில் தங்களது இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்துகொண்டிருப்பவர்கள்.


    --

    சுத்த பேத்தல்.
    அப்ஸல் குருவே தான் அந்த பாராளுமன்ற தாக்குதலில் பங்கெடுத்தது பற்றியும், எவ்வாறு அதில் பங்கெடுத்தவர்களுக்கு உதவினேன் என்றும் பேசிய வீடியோ இருக்கிறது.

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=9zJcFO8VvqA

    http://indiatoday.intoday.in/video/mohamammed-afzal-guru-pranab-mukherjee-parliament-attack-case/1/249612.html

    நீங்களெல்லாம் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    இவர் செய்த குற்றங்கள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரம் பக்கமுள்ள தீர்ப்பில், ஒரு இடத்தில் தேசத்தின் மனசாட்சி பற்றி சொன்ன ஒரு வரியை வைத்துகொண்டு சிலம்பாட்டம் ஆட வெட்கப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. nila nilavan,

      //இவர் செய்த குற்றங்கள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரம் பக்கமுள்ள தீர்ப்பில், ஒரு இடத்தில் தேசத்தின் மனசாட்சி பற்றி சொன்ன ஒரு வரியை வைத்துகொண்டு சிலம்பாட்டம் ஆட வெட்கப்பட வேண்டும்.//

      ஆதாரங்களின்(!?) அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பில், 'தேசத்தின் மனசாட்சி'க்கான காரணத்தை விளக்க முடியுமா ?

      Delete
  11. நண்பர் நிலா நிலவன்,
    அப்ஸல் குரு விடயத்தில் வினவின் படு அயோக்கிய தனம் என்பதில் எந்தவித சந்தேகமில்லை.
    வினவுவின் தத்துவம் எப்படிபட்டது என்பதை சிறுவயதில் தொடக்கம் நிறையவே அனுபவித்த ரஷ்சிய யுகோஸ்லாவிய நண்பர்களிடம் இருந்து நிறையவே அறிந்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. வினவில் ஒரு உருப்படியான கட்டுரை வந்தால் 9 வீணாப்போகும் கட்டுரைகள்தான் வரும் ஒரு தடவை பிரிட்டிஷ் கார் கம்பனியான ஜாக்குவார் லோன்ட் ரோவரை டாடா வாங்கிய போது அதை நடத்த UK அரசு பணவுதவி செய்தது. இதற்கு வினவில் எழுதினார்கள்... பிரிட்டிஷ் தொழிலாளிகளின் உழைப்பில் விளைந்த பணம் டாடா எனும் முதலாளிக்கு வழங்கப்படுவதாக. பிரிட்டிஷ்காரனுக இங்கு அடித்து சென்ற பணத்தில் இது சுண்டைக்காய் என்பதை மறந்து பிரிட்டிஷ் தொழிலாளியின் வரிப்பணத்தைப் பற்றி இவர்கள் கவலைபடுகின்றார்களாம். அதனால் வினவை சீரியஸாக எடுப்பது முட்டாள்தனம்.

    இங்கு அப்சல் குரு எனும் பயங்கரவாதிக்கு ஆதரவு ஏனெனில் வினவும் ஒரு பயங்கரவாதத்தில் நம்பிக்கை உடைய அமைப்பு. நாளைக்கு இவர்கள் ஏதாவது பண்ணி மாட்டிவிட்டால் தப்பிப்பதற்காக இப்போதே தண்டனைகளை எதிர்த்து வைக்கிறார்கள்.

    இந்த மாதிரி கடும் தண்டனைகள் அளிக்கப்படாவிடின் இந்தியாவை soft-state என்று நினைத்து தீவிரவாதிகள் அடித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் மதவாதியான அஜ்மீர் தர்க்காவின் தலைவர் அலிகான் தண்டனையை வரவேற்று உள்ளார். முமின்களுள் சிறந்தவர்கள் சூபிக்களே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. நந்தவனம்,

      // அதனால் வினவை சீரியஸாக எடுப்பது முட்டாள்தனம். //

      உங்களுக்கும் அந்த உண்மை தெரிஞ்சி போச்சா :-))

      அப்புறம் வினவில் பெரும்பாலும் நம்ம பதிவர்கள் தான் ,பெயர் போட்டுக்காம எழுதுறாங்க, அவங்களுக்கு ஜால்ரா அடிச்சி நான்கைந்து பின்னூட்டம் போட்டுட்டு ,தோழர் என் கட்டுரையை போடுங்கன்னு சொன்னா போட்ருவாங்க :-))

      சில பக்தி பழமான,அமெரிக்க அடிவருடி என வினவு சொல்லும் குணங்களுடன் இருப்பவர்கள் கூட வினவில் எழுதுறாங்க :-))

      நீங்க கூட வினவில் எழுத முயற்சிக்கலாம்:-))

      Delete
  13. //இதனை வினவு பதிவில் எழுதினேன். அது அனுமதிக்கப்படவில்லை. இவர்கள்தான் மனித உரிமை, கருத்து சுதந்திரம் என்றபெயரில் தங்களது இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்துகொண்டிருப்பவர்கள்.// சர்வாதிகாரம் இன்றி கம்யுனிசம் இல்லை. ஆனால் ஜனநாயக நாட்டில் இருக்கும் கருத்து சுதந்திரத்தை மட்டும் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

    ReplyDelete
  14. சார்வாகன் ,உண்மை அடுத்த தெருவுக்கு செல்வதற்குள் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.
    சவூதி போதகர்-மகள் விவகாரம் : புளுகுமூட்டை ஊடகங்கள்...

    சில நாட்களுக்கு முன்பாக சவூதியை சேர்ந்த போதகர் (?) ஒருவர் தன் 5 வயது குழந்தையை வன்கொடுமை செய்து கொடுமைப்படுத்தியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லுமா என்ற பெயருடைய அந்த குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததையும் உலக ஊடங்கங்கள் பெரிய அளவில் பேசின. பேசியதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், அந்த போதகர் (?) ரத்த பணம் கொடுத்து தப்பிவிட்டதாக அங்கலாய்த்தன மீடியாக்கள். இந்த விவகாரத்தில் தற்போது உண்மை நிலவரங்கள் தெரியவந்துள்ளன.

    அந்த குழந்தை வன்கொடுமை செய்யப்படவும் இல்லை, கொலை செய்தவன் தண்டனையில் இருந்து தப்பவும் இல்லை. லுமாவின் தாய் 'தன் மகள் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று மருத்துவமனை ஆதாரங்கள் மற்றும் போலிஸ் ஆதாரங்கள் தெரிவிக்கும்போது, இப்படியான குற்றச்சாட்டுகளை தன் மகளை அசிங்கப்படுத்தும் நிகழ்வாகவே தான் கருதுவதாக' வருத்தத்துடன் கூறியுள்ளார். தன் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பரப்பியதை இவர் நீண்ட நாட்களாகவே மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இந்த கொலைகாரன் தற்போது சிறையில் தான் உள்ளதாகவும், இவர் மீதான வழக்கு விசாரனையில் உள்ளதாகவும் சவூதி நீதித்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் ஒரு செய்தியின் உண்மை நிலையை தெளிவாக ஆராய்ந்த பிறகு செய்தி வெளியிடுவது சிறந்தது என்று நீதித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நான் மேலே சொன்ன சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தியை காண: http://gulfnews.com/news/gulf/saudi-arabia/killer-cleric-not-sentenced-yet-saudi-arabia-1.1143203




    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      என்ன சொல்ல வருகிறீர்கள்?

      .சரி அந்த கல்ஃப் நியூஸ் செய்தி 100% உண்மை எனக் கொள்வோம்.

      அதன் படியும் . அக்குழந்தை மிக கொடூரமாக அதன் தந்தையால் சித்திரவதை செய்யப்பட்டு உள்ளது. மொழி பெயர்க்க மிகவும் அருவருப்பாக உள்ளதால் அப்படியே தருகிறேன்.
      //Luma died in November at the Shumaisy Hospital in the Saudi capital Riyadh six months after she was admitted in May in an unconscious state.
      Doctors said that she had suffered internal bleeding from multiple injuries on her body and a skull fracture.//


      http://www.newiraqidinar.net/saudi-court-releases-imam-who-raped-murdered-his-5-yr-old-daughter/

      //He was then arrested in November after Lama died. He admits responsibility and says his assault began because he suspected her, a mere five-year old, of losing her virginity. A social worker said she was “raped” everywhere, but her mother says that part of the story isn’t true. Lama was beaten with electric shocks, whips and an iron. Her skull was crushed. Her back and arms were broken. Her ribs were fractured. The hospital said al-Ghamdi even tried to burn her rectum closed.//

      மதத்திற்கு கேடுவரும் போது ஏதேனும் முஸ்லிம்களை கைகாட்டி தப்புவது இஸ்லாமில் 1400 வருட நடைமுறைதானே!!

      குழந்தையை படுகேவலமாக சித்திரவதை செய்து கொன்றதை அந்த மத போத்கன் ஒத்துக் கொண்டான். இதில் கற்பழிக்கவில்லை என மட்டுமே குழந்தையின் எகிப்திய தாய் மறுத்து உள்ளார்.


      இது உண்மை என்றால், மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் செய்தி வெளியிட்ட ஊடகங்களின் மேல் நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடரலாம்.

      அக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது நவம்பர் 2012ல்.அப்போது இருந்து வரும் செய்திகள் எதுவும் கற்பழிப்பை மறுக்கவில்லை. பிரச்சினை பெரிது ஆக மதத்திற்கு சிக்கல் என்பதால் மட்டுமே இபோது மறுக்கிறார்கள் என கருதலாம்.

      சவுதி சட்டப்படி மனைவி,குழந்தைகளை கொன்றால் இரத்தப் பணம் மட்டுமே என்பது காட்டு மிராண்டித் தனம் மட்டுமே!!!

      டிஸ்கி : மதாபிமானி பதிவில் குழந்தை கொடுமை செய்யப்படவே இல்லை எனக்கூட சொல்லுவார்!!. மதப் பித்து பிடித்தால் , எந்தக் கொடுமையையும் நியாயப் படுத்துவான் மதவாது என்பதே உண்மை!!

      நன்றி!!

      Delete
    2. http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20121114142796

      Luma’s mother vows to fight for justice
      Last Updated : Wednesday, November 14, 2012 1:44 PM

      Saudi Gazette report

      RIYADH — The mother of a young girl who allegedly died after being tortured by her father has said she will pursue the case against her former husband until justice prevails.

      Five-year-old Luma died a few days ago at Shumaisy Hospital in Riyadh where she was admitted last May in an unconscious state. She had suffered internal bleeding due to skull fracture in addition to multiple injuries on her body, according the doctors.

      The girl’s mother said Luma had sustained the injuries after her father hit her repeatedly in an attempt to discipline her. She accused her Egyptian ex-husband and his current wife of constantly mistreating the girl.

      The woman said she had realized the hostile nature latent in her Egyptian husband within three months of their marriage. She said he used to beat her and abuse drugs, and was unemployed. He practiced preaching only as a front to hide his criminal behavior, the woman claimed.

      Luma’s mother separated from her husband after she became pregnant. On giving birth, the Egyptian asked her to return to him, swearing he had changed. Her return did not change anything, and she filed for divorce when Luma was three years old.

      Nine months after the divorce, she was informed that her child — who was with the father — was admitted to hospital. The father claimed that the child incurred bodily injuries while playing. She asked the girl to be transferred to a hospital in the Eastern Province, but she had already died.

      Her only wish, she said, is that this case will end with the execution of her ex-husband.

      Informed sources said a wrong diagnosis was one of the reasons for the child’s death. The resident doctor ordered her transfer from the intensive care unit to a normal patient’s bed, completely ignoring medical reports. A day later she succumbed to her injuries.

      Luma’s mother is also demanding the prosecution of the intensive care unit’s director for the critical error. The girl’s body has been lying in the mortuary since Oct. 21 and the mother is asking the authorities to release the body for burial.

      Riyadh police spokesman Fawwaz Al-Maiman said that the father was transferred to the general penitentiary, awaiting trial. All legal procedures were taken, and the case is referred to the Bureau of Investigation and Public Prosecution.

      Delete
    3. http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20121111142523

      Five-year-old dies after beating from religious scholar father

      Last Updated : Sunday, November 11, 2012 11:09 PM


      DAMMAM — A five-year-old child has died after she was allegedly severely beaten by her religious scholar father, Al-Yaum reported.

      The child, identified as Luma, suffered severe injuries after her father disciplined her by hitting her repeatedly, his ex-wife said.

      She lost consciousness and was admitted to Al-Shemaisi Hospital in Riyadh.

      The child's mother, who is divorced from the father, accused her ex-husband and his current wife of injuring her daughter so badly.

      She added he is a religious scholar who lectures on television and advocates Islamic values and merits, but does not practice what he preaches.

      She pointed out her child suffered internal bleeding in her brain after her skull was fractured.

      In addition, her left hand was also fractured with burn marks and bruises on different parts of her body.

      Luma was admitted to the hospital’s intensive care unit and the mother has appealed to human rights bodies to look into the case. She called for legal action to be taken against the father.

      She said: “I call on the authorities to apply Islamic laws. Although the child's father has been detained, his wife is still at large. I hold them responsible for my child's death.”

      A source at the National Society for Human Rights said the mother has submitted a complaint. The society will coordinate with the Riyadh health directorate to unveil the causes of the child's death, the source added.

      Al-Yaum called Riyadh police to find out what had happened to the child's father and his wife, but there was no answer. — SG

      Delete
    4. http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20121112142560

      NSHR seeks death for dad who killed girl
      Last Updated : Monday, November 12, 2012 12:26 AM


      RIYADH — The National Society for Human Rights (NSHR) has demanded the death penalty for a father accused of physically abusing Luma, a five-year-old girl who died of injuries sustained during the assault. Dr. Khalid Al-Fakhri, the NSHR supervisor in the region, said the crime was one of the most heinous he had come across. The NSHR had previously contacted the concerned authorities eight months ago asking them to interfere to stop the abuse. Luma died a few days ago at Shumaisy Hospital in Riyadh. She was admitted to the hospital in an unconscious state last May. She had suffered internal bleeding due to skull fracture in addition to multiple injuries on her bodies. She sustained the injuries as her father hit her repeatedly in an attempt to discipline her, the girl’s mother said. She accused her ex-husband and his current wife of treating her daughter badly.

      Delete
    5. http://saudiwoman.me/2013/02/03/whats-up-with-the-national-society-of-human-rights/

      FEBRUARY 3, 2013 · 5:25 PM ↓ Jump to Comments
      What’s up with the National Society of Human Rights?
      Is it strange to believe that a human rights organization would prioritize human rights? In the case of the five year old Lama who was tortured to death by her father, the NSHR seem to want to downplay both the crime and the judicial rulings. On the one hand, we have Itimad Al Sonaidi, an NSHR legal investigator, stating to the newspapers that there is no truth to the news reports that blood money had been offered. And on the other hand we have Khalid Al Fakhri, NSHR general director, denying that Lama had been sexually assaulted. Even Suhaila Zain Alabdeen, before strongly speaking out on the case and giving details was careful to have it made clear that she was on the news program as an activist and not as a member of the NSHR.

      First, when it comes to whether or not Fayhan Al Ghamdi had raped his daughter, the social worker assigned to the case, Randa Al Kaleeb stated so in a phone interview with an investigative program host, Ali Al Olayani. And we have Dr. Mohammed Mahdi, the medical examiner in Lama’s case, from the Forensic Medicine Department in Riyadh, who stated to Asharq Aawsat:

      The offender committed all types of physical abuse on the victim as well as her exposure to sexual assault as a result of swelling in the region of the genitals and laceration in the anal area. There is ambiguity and secrets and the narrative is incomplete. In domestic abuse cases, injuries are usually afflicted over several months and not all in one bout. Also there is disparity in the type of injuries, from burns to those afflicted with sharp tools, along with the presence of strikes that take distinctive forms. All of these specifications have been identified on Lama’s body through the bruises and effects of burns and blows and led to them being afflicted with a thick electrical cable and a cane. These tools have been seized from the offenders home at the request of the Forensic Medicine Department as evidence. It’s Lama’s right that we reveal the truth of what happened to her.

      Second, when blood money is offered and accepted then all maximum penalties are off the table. Over and over again, the courts have let fathers and husbands literally get away with murder by paying blood money and at most serving five to twelve years. I’ve given examples in my previous post, but I’ll give you another example that’s as recent as January 6th 2013. Wissam was a 13 year old to an Egyptian mother and a Saudi father. His mother came to Saudi as a 16 year old bride twenty years ago. Five years ago her husband divorced her and the torment began. It ended with the father chasing Wissam from the street to the door and stabbing him over and over again. Wissam died minutes later in his mother’s arms at the entrance of his home. The final ruling on January 6th was that blood money be paid and a five year sentence. After the judge ruled, Wissam’s sister turned to her mother and asked “Mama when father comes out of prison, will he kill us like he killed Wissam?”

      Delete

    6. Dr. Amal Al Kafrawi psychiatric and addiction specialist told Alwatan that protection from domestic violence committees under the Ministry of Health are unavailable and non-existent, despite the existence of them in name within the ministry. She added that the impact of domestic violence is mostly suffered by the children. She stated that we find that the weak individual is assaulted in every way without having the chance to defend himself or his human rights, which must be guaranteed by his community, so children grow up in an atmosphere of constant persecution and humiliation that destroy their innocence.

      The only case in Saudi history when a father/murder was made to pay is that of Ghusoon, an eight year old girl who was chained and tortured over a year by her father and stepmother while her mother ran from one official to the next asking for help. Ghussoon was starved, had kerosene poured over her, burned and even hit with a car in her father’s yard. All of this because the father doubted his paternity. Alas Ghusoon died before anyone would listen to her mother. In only that case was it considered murder and the father executed. You would think that Ghusoon’s case would create a precedent, right? Wrong. Because Saudi’s (reminiscently medieval) justice system is resistant to codification. Every judge can rule in whatever way he sees fit, as long as he can find a religious text to base his ruling on. That means you can have two cases of murder, divorce or whatever with the exact same specifications and in the courtroom of the same judge and still get two different rulings depending on who the defendants are, what they wore, their piety…etc.

      I can only guess what the motive is behind NSHR statements and actions. The only thing that’s apparent is that they are downplaying the case.

      Delete
  15. Ibrahim Sheikmohamed,

    //நான் மேலே சொன்ன சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தியை காண: http://gulfnews.com/news/gulf/saudi-arabia/killer-cleric-not-sentenced-yet-saudi-arabia-1.1143203//

    இதுவும் நீங்கள் சொன்ன அதே GULF NEWS இல் தான் வந்தது,

    Saudi preacher gets light sentence for killing daughter

    http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-preacher-gets-light-sentence-for-killing-daughter-1.1141045

    ReplyDelete
    Replies
    1. சவூதி அரேபிய மத போதகர் அவரது ஐந்து வயது மகளை பாலியல் துன்புறுத்தி கொலை செய்து இரத்த பணம் மனைவிக்கு கொடுத்து வெளியே வந்த செய்தியை மாற்ற வேண்டிய மத கடமை ஏதாவது ஏற்பட்டதோ என்னவோ.

      Delete