வணக்கம் நண்பர்களே,
நம்பிக்கை இல்லா மனிதர் உலகில் எவரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை உண்டு. அப்படி பிறரை பாதிக்காமல் நம்பிக்கைகள் தனிப்ட்ட வகையில் கொள்ள உரிமையும் உண்டு.
இப்பதிவில் நம்பிக்கைகள் அதன் வகைகள் குறித்து அறிவோம்.
நம்பிக்கை என்றால் என்ன?
Belief is the psychological state in which an individual holds a proposition or premise to be true.
ஒருவர் ஏற்கும் கொள்கை,கோட்பாடு உண்மை,சரி என நம்பும் மனநிலை.
சகோ இராபின் எப்போது நாத்திகம்,பரிணாமம் என்பதும் நம்பிக்கையே என் நம்மோடு வாதிடுவார். பரிணாமம் என்பதற்கும் நாத்திகம் என்பதற்கும் தொடர்பு இல்லை, இரண்டும் வெவ்வேறு தளங்கள் என நாம் சொன்னாலும் அவரோ, இன்னும் சிலரோ ஏற்கப் போவது இல்லை!!.
இருந்தாலும் சகோ இராபினின் கூற்றும் உண்மைதான். ஆனால் நம்பிக்கைகளின் மூன்று வகை உண்டு என்பதால் ,அதில் ஆத்திகம்,நாத்திகம்,அறிவியல்[பரிணாமம்!] எந்த வகையில் வருகிறது என்பதை இப்பதிவில் அறிவோம்.
நம்பிக்கைகளின் மூன்று வகை,
1. சான்று சாரா நம்பிக்கை
2. சான்று இல்லாமை மீதான நம்பிக்கை
3. சான்றின் மீதான கணிப்பு நம்பிக்கை.
முதலில் சான்று என்றால் ஏதோ ஒரு வகையில் அளவிட,கணக்கிட உணர முடியும் விடயம் எனக் கொள்ளலாம். இதனை பெரும்பான்மை ஏற்கும்,ஒருவரும் மறுக்க இயலா வண்ணம் இருக்கும். எ.கா பூமி ஏறத்தாழ கோள வடிவம் உடையது.விமானத்தில் பயணம் செய்த எவரும் ,இதனை எளிதில் உணர்ந்து இருப்போம்.ஆனால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதனை அறியாமல் இருந்தார்கள்.
1. சான்று சாரா நம்பிக்கை
இது பெரும்பாலும் ஆத்திகம் சார்ந்தது.மத புத்தகம் சொல்வதை ,சான்றுகள் ரீதியாக பார்க்க மறுத்தல்.மத புத்தகம்,சான்று முரண்படும் என்றாலும் இது வேறு,அது வேறு என சொல்லி,மத புத்கத்திற்கு சான்று தேவையில்லை, இது நம்பிக்கை சார் விடயம் என சொல்லி விடுவார்.
ஒரு நகைச்சுவை எ.கா வேண்டும் எனில் உலகம் தோன்றி 7000 ஆண்டு ஆனது என சொன்ன ஒரு படைப்புக் கொள்கையாளரிடம் ,பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய படிமங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் ? என் கேட்கப் பட்டது.
அதற்கு அவர் இவை எல்லாம் சாத்தான் என் போன்றவர்களை சோதிக்க காட்டும் மாய வலை என்று சொல்லி விட்டார் ஹி ஹி!!
இப்படி நம்புபவர்களை எதுவும் மாற்றுவது மிக கடினம். இவர்கள் அப்பாவிகள்தான், ஆனால் மதத்திற்காக எதையும் தியாகம் செய்யும் வண்ணம் இருப்பதால் தனக்குதானே அல்லது,பிறருக்கு தீமை விளையும் சாத்தியம் மிக அதிகம்.
பிரார்த்தனை மூலம் வியாதி குணப்படும் என நம்பி மோசம் போவது, பல மோசடி மதவாதிகளுக்கு பணம் அனுப்பி ஏமாறுவது , சூனியக்காரிகள் என் பலரை தீ வைத்து எரித்த கொடுமைகள் ,பிற மதத்தவரின் உரிமைகளை மறுத்தல் என பல வகைகளில் துன்பம தரும் கொள்கை இது.
2. சான்று இல்லாமை மீதான நம்பிக்கை
உலகில் எப்போதும் விடை தெரியா கேள்விகள் அனைத்து துறைகளிலும் உண்டு. மனித சமூகத்தில் தொடர் விடை தேடுதலால் மட்டுமே முன்னேற்றம் வந்தது என்பதால் இயற்கையை அறியும்,முயற்சி தொடர்கிறது.
எப்படி பிரபஞ்சம் தோன்றியது? முதல் உயிர் எப்படி தோன்றியது போன்ற கேள்விகள் மதம்,தத்துவம்,அறிவியல் என் பல் துறைகளுக்கும் பொதுவான கேள்விகள்.
மதத்தின் படி அனைத்தும் அவன் செயலே என்பார்.தத்துவவாதிகளுக்கு தர்க்கரீதியாக சரியாக இருந்தால் போதும், ஆனால் அறிவியலுக்கு சான்று அவசியம்,அச்சான்றின் மீதான விள்க்கம்,கணிப்பு என தொடர்கதை ஆக செல்லும்.
இந்த இரண்டாம வகை நம்பிக்கையாளர்கள் ,விடை தெரியா கேள்விக்கெல்லாம் வித்தகனே காரணம் என்பார்.
விடை தெரிந்த கேள்வியை தவிர்ப்பார், ஒரு கேள்வியின் விடை சமீபம் ஆனால், கடவுள் வேறு கேள்வியின் விடையாக இடம் பெயர்வார்.
இவர்கள் மத புத்தகம் நம்பி ஏற்றாலும், கடவுளின் இருப்புக்கு இயற்கையின் மகத்துவமே காரணம் என்க் காட்டுவார்!!!
இந்தவகை வாதங்களை நன்கு வரையறுத்தவர் 15 ஆம் நூற்றாண்டு கிறித்துவ பாதிரி அக்கினோ ஆவார்.
http://en.wikipedia.org/wiki/Quinque_viae
http://en.wikipedia.org/wiki/Quinque_viae
அ) முதல் காரணி வாதம்[படைப்புக்கு படைப்பவன் அவசியம்]
ஆ) ஒழுங்காக வடிவமைக்கப் பட்ட பிரபஞ்சம்.
இ) விடை தெரியா கேள்விகளின் விடை வித்தகனே
ஈ) கடவுள் இல்லை என நிரூபிக்க முடியாமையால் கடவுள் உண்டு
என இயற்கையின் மீதான விவாதங்களில் செல்வதில் மத புத்த்கம் மீதான ஆய்வுகளை தவிர்க்கலாம்.
ஏன் எனில்
மத புத்தகம் கூறும் பெரும்பாலான கதைகளுக்கு, அகழ்வாய்வு சான்றுகள் இல்லை.
மத புத்த்கம் மூல நூல்களின் மொழியாக்கம் போன்றவற்றுக்கும் மொழியியல் சான்றுகள் இல்லை.
ஒரு பழைய புத்தகம் இப்படி சொல்கிறது என்றால் அதே போன்ற சொற்கள்,வாக்கியங்கள் ஏற்கெனவே உள்ள அதே மொழி புத்தகங்களில் அதே விதத்தில் பயன்படுத்தப் பட்டு இருக்க வேண்டும். அதன் இலக்கண நூல்கள்,அகராதி போன்றவை நூல் எழுதப்பட்ட காலத்திற்கு முந்தையது ஆக இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி இருக்காது!!!
பெரும்பாலும் முந்தைய மொழிபெயர்ப்புகளை இபோது சுட்டுவதையே தவிர்ப்பார்.
ஆகவே இப்படி மத புத்தகம் சாராமல் மதம் காப்பாற்றும் ஒரு முயற்சியே இந்த இரண்டாம் வகை நம்பிக்கை.
விவாதங்களில் இவர்கள் கேள்வி கேட்பதையே விரும்புவார், நிரூபணத்தை எதிர் குழு மட்டுமே தர வேண்டும். எதிர் குழு ஒரு விடயத்தை 99% நிகழ்தகவுடன் சரி எனக் கூறினால்,இவர்கள் ஆகவே 1% தவறு.எங்கள் தரப்பு நிரூபிக்க அவ்சியம் இன்றி வெற்றி என குத்தாட்டம் போட ஆரம்பித்து விடுவார்!!!
பெரும்பான்மையான மத பிரச்சாரவாதிகள் இந்த நம்பிக்கையாளர் ஆக இருப்பார்.முதல் வகை நம்பிக்கையாளர்களுக்கு வழி காட்டி ஆவார்!!!
3. சான்றின் மீதான கணிப்பு நம்பிக்கை.
அறிவியல் என்பது இயற்கையை அறியும் இயல் என்பதால், தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம் என்பதை நம் பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
நாத்திகம் என்பதும் கடந்த ,நிகழ் கால சான்றுகளின் மீது பொருந்தும் விளக்கம் ஏற்கிறோம், அதன் மீதான கணிப்புகளை எதிர்கால சான்றுகளின் அடிப்படையில் பொருந்தும் வண்ணம் விளக்கங்களை மாற்றி அமைக்கிறோம்.
விடை தெரியா கேள்விகளின் விடை எந்த அளவு அளிக்கப் பட்டு உள்ளது என்பதை சான்றுகளின் அடிப்படையில் பரிசோதித்து ஏற்கிறோம்.
பிரப்ஞ்சம் தோன்றியது 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் என்பதை கணிப்பாக ஏற்கிறோம். அதற்கு முந்தைய சூழலும் கூட சில கணிப்புகள் குவாண்டம் இயக்கவியல்,ஸ்டிரிங் தியரி அடிப்படையில் உண்டு. அதன் பரிசோத்னை முடிவுகளுக்கு காத்து இருக்கிறோம்.
பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது ஆனால் நிலை மாறுகிறது என்பதே இப்போதைய ஆய்வுகளின் கணிப்பு!!!.
[பரிசோதனையின் படி] சூன்யம்[nothing] என ஒன்று இருக்கவே முடியாது,ஆகவே முடிவிலியும்[infinite] இருக்க முடியாது.
There is always something instead of nothing!!
பிரபஞ்சம் சூன்யத்தில் இருந்து தோன்றியது என் விளக்கும் பேரா லாரன்ஸ் க்ராஸ் அவர்களின் உரை!!
Universe from nothing!!
**
பரிணாமத்திலும் 380 கோடி ஆண்டு முந்தைய ஒரு செல் உயிர்களில் இருந்து அனைத்து உயிர்களின் கிழைத்து தழைத்து பரிணமித்தன என்பதற்கு பல பரிசோத்னை சான்றுகள் உள்ளன என்பதும், முதல் உயிர் எப்படி தோன்றியது என்பது இப்போது பரிசோதனையின் படி விடை தெரியா கேள்வி எனவும் ஒத்துக் கொள்கிறோம்.
இந்த மூன்றாம் வகை நம்பிக்கை நாத்திகர்,அறிவியல் ஆய்வாளர்கள் கொள்ளும் சான்றின் மீதான கணிப்பு ஆகும். ஒருவேளை தவறு ஆனாலும் அடுத்த பொருந்தும் விளக்கம் ஏற்பதில் தயக்கம் இல்லாதவர்கள்.
பரிணாமக் கொள்கை டார்வின் காலத்தில் இருந்து சான்றுகளின் படி பல மாறுதல்களை கண்டு உள்ளது.
பரிணாம மாற்றத்தின் காரணி இயற்கைத் தேர்வு மட்டுமே, அதுவும் மாற்றம் படிப்படியாக நிகழும் எனவே டார்வின் கணித்தார்.
ஆனால் இயற்கைத் தேர்வு[natural selection] அல்லாமல் சீரற்ற மரபு விலகலும்[random genetic drift] முக்கிய காரணி ஆக ஏற்கப் படுகிறது,படிப்படி[gradual] மாற்றம் மட்டும் அல்லாமல், நிறுத்திய நிலைத்தனமையும் [punctuated equilibrium] மாற்றமாக ஏற்கப் படுகிறது.
விளக்கம் மாறலாம், ஆனால் சான்றுகள் மாறாது.புதிய விளக்கம் பழைய ,புதிய சான்றுகளையும் மெய்ப்பிக்க வேண்டும்.
ஆகவே நாத்திகர்களின் நம்பிக்கை சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே மாறும். ஆத்திகர்கள் சான்றளிக்கப் பட்ட மத புத்தக விரோத விடயங்களை ஒதுக்கி விடுவார்கள். நம்பிக்கைகளை சான்றின் அடிப்படையில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இதனை ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள்!!!
பரிணாமமும் மதம் கூறும் படைப்புக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரண் ஆனவை என் ஒத்துக் கொள்ளக் கூட அஞ்சும் பரிணாம எதிர்பார்களர்களை பதிவுலகில் அறிந்து இருக்கிறோம் அல்லவா!!!
இந்த மூன்று வகைகளும் ஒன்றை ஒன்று சாராமல் இருக்க அவசியம் இல்லை.இந்த முதல் வகை,இரண்டாம் வகை கொஞ்சம் தொடர்பு இருக்கலாம், அதேபோல் இரண்டாம்,மூன்றாம் வகை கூட தொடர்பு இருக்க்லாம்.இப்படி Fuzzy!!
பரிணாமமும் மதம் கூறும் படைப்புக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரண் ஆனவை என் ஒத்துக் கொள்ளக் கூட அஞ்சும் பரிணாம எதிர்பார்களர்களை பதிவுலகில் அறிந்து இருக்கிறோம் அல்லவா!!!
இந்த மூன்று வகைகளும் ஒன்றை ஒன்று சாராமல் இருக்க அவசியம் இல்லை.இந்த முதல் வகை,இரண்டாம் வகை கொஞ்சம் தொடர்பு இருக்கலாம், அதேபோல் இரண்டாம்,மூன்றாம் வகை கூட தொடர்பு இருக்க்லாம்.இப்படி Fuzzy!!
இப்பதிவில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. இன்னும் நிறைய விடயங்கள் சொல்ல உண்டு!!
பின்னூட்ட விவாதங்களின் மேல் அடுத்த பதிவு எழுதுவோம்!!
நன்றி!!!