பொ.ஆ.1859ல் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் புத்தகம் வெளிவந்து 150+ ஆண்டுகள் ஆகின்றது.அவர் மேற்கொண்ட பயணம் ,ஆய்வுகளின் அடிப்படையில் வடிவமைத்த கொள்கையாக்கமே இப்போதைய அறிவியலின் ஏற்கப்பட்ட கொள்கையாக விள்ங்குகிறது. நம்முடைய கடந்த இரு பதிவுகள் பரிணமத்தின் மீது வைக்கப்பட்ட சில கேள்விகளுக்கு விடை அளித்தது.இக்காணொளியை நேற்று பார்த்த போது நாம் விவாதித்த பல விடயங்கள் இதில் விள்க்கப்பட்டு உள்ளது ஒரு மகிழ்வான் அதிர்ச்சியை கொடுத்தது.
டார்வின் ஏன் பல உயிரினங்கள் ஒரே மாதிரியாகவும்,கொஞ்சம் வித்தியாசத்தோடும்[different varieties] உள்ளன்,பல உயிரினங்கள் மடிந்தன,உயிரோடு இருக்கும் பல விலங்கினங்களும் இறந்த ஒரு[பல] விலங்கினம்போல் ஆனால் சிறிய மாற்றத்தோடு உள்ளது என்பதை விள்க்க முயன்றார்.
டார்வினால் புவியியல் சூழலுக்கு ஏற்ப ஒரே உயிரினத்தின் வெவ்வேறு வகை விலங்குகள் உருவாவதையும் ,சூழலுக்கு ஏற்றவை மட்டும் வாழ்வதும்,மற்றவை மடிவதும் அவதானிக்க முடிந்தது.நாய்கள்,மயில் போன்றவற்றின் செயற்கை இனவிருத்தி[selective breeding] முறைகள் பல்வேறு வகைகளை உருவாக்குவதையும் ஆய்வு செய்கிறார்.
பிறகு புவியியல் சூழல்,சூழலுக்கு ஏறற மாற்றங்கள்,உடல் அமைப்புகள்,படிமங்கள் போன்ற்வற்ரை நன்கு அவ்தானித்தே தனது இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம் என்னும் கருத்தை வெளியிட்டார்.இது நடந்தது 150+ வருடங்களுக்கு முன்பு என்பதால் அவருக்கும் பரிணாமம் குறித்த பல் விடயங்கள் அறிய இயலவில்லை.
அதில் சில
1. ஒரு உயிரினத்தின் பல் வேறு வகைகள் ஏன் உருவாகின்றன?
2. பரிணாம் செயலாக்கம் உண்மையில் எப்படி நடக்கிறது?
இந்த இரு கேள்விகளுக்கான் விடையை கடந்த பதிவு படித்த நண்பர்கள் அறிந்து இருக்க்லாம்.டார்வினுக்கு இந்த இரக்சியம் அப்போது தெரியாது!!!!!!!!!!!
இவை அறியாமலேயே அவரால் சரியாக கொள்கையாக்கம் வடிவமைக்க முடிந்தது என்பது மிக ஆச்சர்யமான விடயம்.. இக்காணொளி மூலக்கூறு அறிவியலின் துணையோடு டார்வின் [சரியாக கணித்தாலும்] அறியாத நிரூபண்ங்களை அளிக்கிறது.
பரிணாம் அறிவியலாளர் சான் கேரல் காணொளியை தொகுத்து அளிக்கிறார்.
Mechanisms Of Evolution: How Does Variety Arise?[சீரற்றசிறுமாற்றங்கள்பல்வேறுவகையானஉயிரினங்ளைஉருவாக்குகின்றன]
Mechanisms Of Evolution: How Does Variety Give Rise To New Species?[இயற்கைத்தேர்வு எவ்வாறு பல வகை உயிரின தொகுதிகளில் இருந்து புதிய உயிரினங்களை உருவாக்குகிறது]
சில ஐரோப்பிய ,மேற்காசிய மனிதர்களில் நிகழ்ந்த ஒரு மாற்றம் அவர்களை எய்ட்ஸ் நோய்க்கு எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக் மாற்றியுள்ளது என்ற அறிவியல் சஞ்சிகை கட்டுரை.
The discovery in the 1990s of a gene variant that thwarts HIV infection triggered development of a promising new class of medications. The gene normally encodes a protein receptor, called CCR5, that sits on the surface of white blood cells. HIV gains entry to these cells through CCR5. The variant gene, or allele, contains a mutation—called Δ32, because 32 base pairs are deleted—that produces truncated CCR5 receptors that are useless to the virus, conferring resistance to individuals with both copies of the mutation, and delaying disease progression to those with one copy. The Δ32 mutation also raised interesting questions for evolutionary biologists.
About 10% of Europeans and inhabitants of western Asia carry the mutation, which researchers think evolved at least 700 years ago—yet HIV emerged only about 50 years ago. According to population genetics theory, for a mutation to be neutral, or confer no selective advantage, it would have to be much older to occur at such a high frequency in the population. This inconsistency raised the possibility that the mutation spread because it provided an advantage against some other selective factor, now thought to be smallpox.
By classification, they are separate species, Panthera leo and Panthera tigris, respectively. However, according to the biological definition of species, they are the same because the result of crossbreeding between them is fertile.
அப்போதும் ஒரு மதவா(வியா)தி அது எப்படி 46 குரோமோசோம் ஹோமோ சேஃபியனில் இருந்து 44 குரோமோசோம் மனிதன் வர முடியும்,அது அப்போது வாழ்ந்தது என்று மட்டுமே கூறலாம் என்று வழக்கம் போல் காமெடி ப்ண்ணுவார் என்பதற்கு மட்டும் நான் உத்த்ரவாதம் அளிக்கிறேன்.
புதியமனிதன்ஆதாரமேகொடுத்தாயிற்று. எதற்கும் இங்கும் விரும்புபவர்கள் பார்க்கலாம் சிறுமாற்ற ஆய்வுக்கூடம்.இதில் பலவித் ஆய்வுகளை fruit fly மீது நடத்துகிறார்கள் http://bioweb.wku.edu/courses/biol114/vfly1.asp
தொலைபேசியை படைத்தவன் அதற்கு இப்படி எனக்கு மட்டும் பயன்[ப்]படு ,இப்படி செய்,செய்யாதே உடைந்து பயனற்று போனபின் காயலான் கடைக்கு வந்தால் இன்னும் சிறப்பானதாக்கி_______,________ connection!!!!! எல்லாம் கொடுப்பேன் என்று கூறுவான் என்றால் எவ்வளவு காமெடியாக் இருக்குமோ அதுபோல்தான் இக்கேள்வியும்!!!!!!!!!!!
ஒரு நண்பர் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.இது அவ்ர் ஏற்பாரா இல்லையா என்பதை நாம்றியோம் எனினும் இது மற்ற்வர்களுக்கும் பயன்படட்டுமே என்பதுதான் நம் நோக்கம்.
//1.நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது.//
சரி. ஒரு உயிரின குழு இன்னொரு(சில) உயிரின குழுவாக(குழுக்களாக) காலப்போக்கில் இயற்கைத் தேர்வு+சீரற்ற சிறு மாற்றங்கள் ஆகியவற்றால் மாறுவதை பரிணாம் வளர்ச்சி என்கிறோம்.இதில் ஒரு உயிரினக் குழுக்களிடையே நடக்கும் சிறு(மைக்ரோ) பரிணாமம் கண்கூடாக பார்க்கப்படுவதல் யாராலும் எதிர்க்கப்படுவதில்லை.ஒரு உயிரினம் இன்னொரு உயிரின்மாக் பல் மில்லியன் ஆண்டுகளில் மாறுகிறது என்னும் பெரும்(மேக்ரோ) பரிமாணம் பெரும்பான்மையான மதவாதிகளால் எதிர்க்கப் படுகிறது.
_________________
//2.ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் காணொளியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும், மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.//
படிமங்கள் என்பது இயற்கையால் நம்க்கு கிடைத்த கொடை.அனைத்து படிமங்களுமே பராமரிக்கப்பட்டு ஆய்வாளர்களுக்கு யாரும் கொடுப்பது இல்லை.கிடைப்பதை ஆய்வு செய்து,வகைப்படுத்தி,விவாதித்து கருத்து வெளியிடுகிறார்கள்.கிடைத்த படிமங்களில் பல இடைப்பட்ட நிலைகளை நன்றாகவிள்க்குகின்றன. படிமங்கள் எப்படி கிடைக்கின்றன என்பதை அட்டன்பரோவின் காணொளியில் அருமையாக் விள்க்கியுள்ளார்.முடிந்தால் பார்க்க்லாம்.
//3.ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம்.//
இதுதான் சிறு(மைக்ரோ )பரிமாண வளர்ச்சி.கண்கூடாக நிரூபிக்கப்பட்டதால் ஏற்றே ஆக வேண்டும்.
______________
4.தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும்படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.//
Fish to Amphibians-reptiles
5//, ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.//
Reptiles-mammals and Birds
6..அப்போ கடலில் திமிங்கிலங்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறதே! வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்து ஒரு திமிங்கிலமும் கடலைத் தாண்டி வரவில்லையே! அடுத்து கடல் வாழ் உயிரினங்களுக்கும் நில வாழ் உயிரினங்களுக்கும் அடிப்படையிலேயே சுவாச உறுப்புகளில் மாற்றங்கள் உள்ளது. தண்ணீர் இல்லாமல் அவற்றின் உடல் அமைப்புக்கு நிலத்தில் வாழவும் முடியாதே!
7.நீங்கள் கொடுத்துள்ள சுட்டி முழுவதுமாக கிடைத்த படிமங்கள் அல்ல. இவர்களாக பல இடங்களிலும் சேகரித்து எடுத்து ஒட்ட வைத்தது. மேலும் அவை ஒரிஜினல் படங்களும் அல்ல. வரைந்தவையே!
நண்பரே நீங்கள் ஏற்றுக் கொள்ளாததால் காணொளியில் காட்டப்பட்ட அப்படிமங்கள் நிராகரிக்கப் படப்போவது இல்லை.இது அறிவியல் உலகில் ஏற்கப்பட்டவை.பாதுகாத்தும் வரப்படுகின்றன். அறிவியல் உலகிற்கு பிரச்சினை இல்லாமல் தனிப்பட்ட மனித்னாக இந்த முடிவு எடுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.
8.மனிதனுக்கு இது போன்ற பரிணாம வளர்ச்சியின் படிமங்களை இது வரை சமர்ப்பிக்கவில்லையே! ஆதார சுட்டிகள் அப்படி ஏதும் இருக்கிறதா.? நமது முக்கிய பிரச்னையே மனிதனின் பரிணாமத்தைப் பற்றியதுதானே.
மனித பரிமாண வளர்ச்சிக்கு அறிவியல் உலகில் ஏற்கப் பட்ட பல படிம சான்றுகள் உண்டு.இவை ஒரு சில.இவைகள் லண்டனில் உள்ள இயற்கையியல் வரலாற்று அருங்காட்சியத்தில் உள்ளது
பரிணம்த்தின் மீதான் கேள்விகளுக்கு விடை தேடி அளிக்க சித்தமாக்வே இருக்கிறோம்.பரிணாம் மறுப்பாளர்களுக்கு விடை தேவையில்லை என்பதை உணர்ந்து இருந்தாலும் இது விடை தேடும் மற்றவர்களுக்காவது பயன்படும் என்றே முயற்சிக்கிறோம்.நன்றி!!!!!!!!!!!!!!!