Wednesday, March 28, 2012

உணவில மெதுவாக கலக்கும் நஞ்சு:பூச்சிக் கொல்லிகள்.



வண்க்கம் நண்பர்களே,

நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் உண்ணும் உணவில் 1 மில்லி கிராம் பூச்சிக்கொல்லியையும் சேர்த்து உட்கொள்ளுகிறோம் என தெரியுமா?.இது ஒரு சராசரி அமெரிக்கன் உட்கொள்ளும் அள்வை விட 40 மடங்கு என்றால் நாம் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறோம் என் தெரியும்.

விவசாயத்தில் பூச்சிகள் தாக்குதலில் இருந்து பயிர்களை காபாற்ற பூச்சி மருந்துகள் பயன்படுத்தினாலும்,இது இந்தியாவில் கட்டுபாடின்றி சரியான அள்வின்றி முறையற்ற பயன்பட்டுக்கு ஆளாகிறது.இத்னால் பல் வியாதிகள் வருகிறது என இந்த ஆவணப்படம் விள்க்குகிறது.இது டெல்லியில் உள்ள் ஆற்றல் மற்றும்   வள்ங்கள் ஆய்வுத்துறை[The Energy and Resources Institute (TERI)] என்னும் அமைப்பினரால் தயாரிக்கப்பட்டது.

கேரளாவில் ஒரு இடத்தில் பூச்சிக் கொல்லிகள் இல்லாமல் விவசாயம் செய்ய‌ முடியும் எனவும் விள்க்குகிறார்கள்.இந்தியாவில் வருடத்திற்கு  1 கோடி லிட்டர் என்டோ சல்பான் பூச்சி மருந்து பயன்படுத்தப்படுகிறது.இத்னால் பல் பூச்சி,பறவை இனங்கள் தேவையின்றி அழிகின்றன.

இதனால் பல நாடுகள் இந்திய உணவு வகைகளை இறக்குமதி செய்ய தயங்குகின்றன.இது பச்சை புரட்சி என்ற விவசாய ஊக்குவிப்பின் விளைவுதான் என்பதை சொல்லத் தேவையில்லை.
http://en.wikipedia.org/wiki/Green_Revolution_in_India

நம்மாழ்வார் என்னும் இயறகை அறிவியலாளரும் இதற்கு எதிராக் குரல் கொடுத்து வருகிறார்.

வேதிப்பொருள்கள் தவிர்த்த இயற்கை விவசாயம் செய்ய இயலுமா?.இதில் இலாபம் கிடைக்குமா,உற்பத்தி குறையாமல் இருக்குமா என்பதெல்லாம் அரசு இத்துறையில் கவன்ம் செலுத்தி வலியுறுத்த வேண்டிய விடயங்கள்.


இயற்கையை பாதிக்கும் அறிவியல் முனேற்றம் எத்தகையான‌து ஆயினும் தேவையில்லை என்பதுதான் நம் கொள்கை.

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மான்யமும்,தகுந்த ஊக்கமளிக்கும் நட்வடிக்கைகளுமே எதிர்கால சந்ததியை ஆரோகியமாக் உருவாக்கும்.இதுதான் உண்மையான் வல்ல்ரசை உருவாகும் நடவடிக்கை.

காணொளி பாருங்கள்!!!!









இயற்கையை நேசிப்போம்!

வளங்களை பாதுகாப்போம்!

நன்றி

18 comments:

  1. பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருந்தாலும் நாங்க காஞ்சு போய் இருப்பதால் இந்தியன் காய்கறிகளுக்கு இந்தியன் கடைகளில் கூட்டம் அலை மோதவே செய்கிறது.லெபனான் போன்ற இடங்களிலிருந்தும்,பாலாறு சவுதியிலிருந்தும் கூட காய்கறிகள் வருகின்றன.

    ருசியில் நம்ம ஊர் போல வருமா?

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  2. நம்மாழ்வார் என்னும் இயறகை அறிவியலாளரும் இதற்கு எதிராக் குரல் கொடுத்து வருகிறார்.

    நம்மாழ்வாரின் நலம் பய்க்கும் குரல் அனைவரையும் எட்டட்டும்..

    ReplyDelete
  3. இயற்கையை நேசிப்போம்...வளங்களை பாதுகாப்போம்...

    ReplyDelete
  4. சகோ.சார்வாகன்,

    நல்ல விழிப்புணர்வுப்பதிவு, நானும் இது போல பல இடங்களில் பின்னூட்டம் போட்டுட்டேன் :-))

    நம்ம மக்களுக்கு ஒரு பழக்கம் எல்லாத்துக்கும் யாராவது வந்து சரி செய்யனும் எதிர்ப்பார்க்கிறாங்க, அல்லது பழியை யார்மீதாவது போட்டுவிட்டு காலம் தள்ளப்பார்க்கிறார்கள்.

    விலையும் கம்மியா இருக்கணும் அது தரமாகவும் இருக்கணும்னு ஆசைப்பட்டால் பூச்சி மருந்து மட்டும் இல்லை சாக்கடையில் விவசாயம் செய்து காய்,கறிக்கொடுத்தாலும் விலை குறைவாக இருந்தால் போதும்னு வாங்கி உண்பார்கள்.

    இந்த பூச்சி மருந்து காய்,கறி எல்லாம் நடுத்தர மக்களுக்கு தான் , இயற்கை விவசாய பொருட்களை வசதியானவர்கள் வாங்கிக்கொள்கிறார்கள்.

    அப்போதெல்லாம் எங்க ஊரில் நாட்டுக்கோழியை சைக்கிளில் கூடைக்கட்டிக்கொண்டு வந்து விற்பார்கள் ,அவனிடம் பேரம் பேசி அடிமாட்டு விலைக்கு மக்கள் கேட்பார்கள், எடை எல்லாம் கிடையாது குத்து மதிப்பாக தான் விலை நிர்ணயம் , மக்கள் உரிச்சா ஒன்றும் இருக்காது என்று செம பேரம் ஓடும், பிராய்லர் சிக்கன் வாங்கினால் சரியா எடை இருக்கும் ,கொடுத்த காசுக்கு பொருள்,மேலும் உரிச்சு ,வெட்டிக்கொடுப்பான் என்று எல்லாம் பிராய்லர் சிக்கனுக்கு மாறினார்கள், இது போன்ற தெருவுக்கே வரும் சிறு வியாபாரிகள் இல்லாமலே போய்விட்டார்கள். அதே போல கிராமப்பகுதிகளில் வாரச்சந்தையிலும் கோழி விற்பனை இருக்கும், இப்போது அதுவும் குறைந்து விட்டது.

    ஆனால் பிராய்லர் சிக்கன் என்பதே ஹார்மோன்கள் , இரசாயனங்களை உண்டு வளர்ந்த ஒன்று தான் , கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்பட்ட பின் இப்போ எல்லாம் நாட்டுக்கோழி கிடைக்குமா என்று தேடுகிறார்கள் ,நாட்டுக்கோழி வளர்ப்பு குறைந்து விட்டதால் விலை அதிகம் ஆகிவிட்டது.எனவே மக்களின் தேர்வே எப்படியான உணவுப்பொருட்கள் சந்தையில் கிடைக்கும் என்பதை தீர்மானிக்கிறது. அரசின் கொள்கை முடிவெல்லாம் அடுத்தது தான்.

    120 ரூ சினிமா டிக்கெட் என்றாலும் சினிமா கொட்டாய் பளபளப்பா ஆம்பியன்ஸ் நல்லா இருக்கும்னு என யோசிக்காமல் பாடாவதி படத்துக்கும் போவார்கள், ஒரு கிலோ தக்காளி இயற்கை விவசாயத்தில் 50 ரூ என்று சொன்னால் , புறக்கணித்துவிடுவார்கள் ,அதற்கு பதிலாக விலைக்கம்மியா இரசாயன தக்காளி கொடுத்தால் பல்லைக்காட்டிக்கொண்டு ஒரு கிலோவுக்கு ரெண்டுகிலோவாக அள்ளுவார்கள் :-))

    அமெரிக்காவில் இரசானய உரம் கம்மினு சொல்லாதிங்க, அங்கும் உண்டு அப்படி ,உரம் ,மரபணு மாற்றம் எல்லாம் செய்த விலைப்பொருட்கள் பெரும்பாலும் ஏற்றுமதியாகிடும், இயற்கை முறையில் விளைவதை பெரும்பாலும் அவங்க நுகர்வுக்கு வைத்துக்கொள்வார்கள்.

    அமெரிக்காவில் ஆயத்த உணவாக கிடைக்கும் பிஸ்ஸா,பர்கர், சிப்ஸ், பிரட், பிஸ்கெட்டில் எல்லாம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானியங்கள்/ பொருட்களில் செய்யப்படவில்லைனு உறுதியளிக்கனும் என நுகர்வோர்கள் தான் வழக்கு போட்டார்கள் எனவே சில பிராண்டட் உணவு தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொண்டார்கள் மற்றவர்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை. எனவே மக்களுக்கு எதை உண்பது என்ற விழிப்புணர்வு இருக்கணும். அப்போது தான் மாற்றம் வரும்.

    ReplyDelete
  5. வங்க சகோ இராஜநடராஜன்

    பூச்சி மருந்து பற்றிய விழிப்புணர்வு,கட்டுப்பாடு,மாற்று ஏற்பாடு முதலியவை அரசு கவனிக்க வேண்டிய விடயம்.விவசாயிகளுக்கு முறையான் பயிற்சியின்மையே காரணம் என்றே கூறலாம்.

    வெளிநாட்டில் கிடைக்கும் நம் ஊர் காய்கரி கிடைப்பதே பெரிய விடயம்.இதில் நாம் என்ன செய்ய முடியும்?.கிடைப்பதை அருமையாக் ,நல்ல சூட்டில் சமைத்து உண்ண வேண்டியதுதான்.

    நன்றி
    ********
    வாங்க சகோ இராஜராஜெஸ்வரி

    நம்மாழ்வார் அய்யா நெடுநாட்களாக் இயற்கை விவசாயத்திற்காக போராடி வருகிறார்.விவசாயமும் ஒரு ஈடுபாட்டுடன்,பாதுகாப்பாக செய்யும் ஒரு தொழிலாக ,விவசாயிகளின் பொருளாதாரம் உறுதி செய்யப்பட்டாதாக் இருந்தால் மட்டுமே சாத்தியம்.நம்மை ஆள்பவர்களுக்கு விவசாயம் என்பது என்ன்மோ முக்கியத்துவம் இல்லாத ஒரு தொழில் போல் படுவது கொடுமை.

    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

    ********
    வாங்க சகோ ரெவெரி

    மனிதனும் பிற உயிரின‌ங்களும் நீடிக்க வேண்டுமெனில் இயற்கையை பாதுக்காப்பது மிக அவசியமான‌து, முயற்சிப்போம்.

    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

    ReplyDelete
  6. வாங்க சகோ வவ்வாள்

    நான் சொல்லாமல் விட்ட விடயங்களை எல்லாமே அருமையாக் விள்க்கி விட்டீர்கள்.என்ன செய்வது மக்கள் கூட்டம் விளம்மப்ரத்திற்குதானே மயங்குகிறார்கள்.

    இந்த விள்ம்பரத்தில் காட்டப்பட்ட உணவகத்திற்கு சென்று,அந்த உணவை சாப்பிடுவது பெருமை என்று நினைப்பை ஏற்படுத்தும் ஊடகங்களும் குற்றவாளிகளே!

    இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள்,பதப்படுத்த‌ப்பட்ட மாமிசம், இன்னொரு கோர முகம் கொண்ட அசுரன்.இதையெலாம் யோசிக்க எவருக்கும் நேரமில்லை!


    கிடைக்கும் வேலையை செய் கொடுக்கும் கூலியை வாங்கு,சம்பாதிப்பதை முழுதும் செலவு செய்,போதவில்லையெனில் கடன் வாங்கு,எதையும் சிந்திக்காதே ,வெந்ததை தின்று விதிவந்தால் செத்துப் போ என்கிறார்கள்

    உலகையே பொருளாதார ரீதியில் அடிமைப்படுத்தி விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

    ஒவ்வொரு நாட்டிலும் இதற்கு ஒத்து வருபவன் மட்டுமே ஆட்சி செய்ய முடியும்!!!!!

    நன்றி

    ReplyDelete
  7. விழிப்புணர்வு ஊட்டும் பதிவு. வீட்டின் கொல்லைப்புறங்களில் மொட்டை மாடிகளில் நமக்கு தேவையான காய்கறிகளை நாமே பயிரிட்டுக் கொள்ள வேண்டியதுதான் இதற்கு தீர்வு.

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி சகோ.
    USA அரிசி எல்லா இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கதக்கதாக இருந்த போதும் இந்திய பசுமதி அரிசியை தேடிபோய் வாங்கியிருக்கிறேன்.

    ReplyDelete
  9. சகோ.சார்வாகன்,

    முந்தைய பின்னூட்டத்தில் முழுசாக சொல்லவில்லை என எண்ணம், இன்னும் கொஞ்சம் சொல்ல இது.

    இரசாயன உணவு உற்பத்தி குறித்து பல பதிவுகளிலும் பின்னூட்டங்களாகவே நான் சொல்லிவிடுவதால் பதிவாக தனியாக போடவில்லை, இயற்கை விவசாயம் என்பதை குறித்து முழுமையான ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைப்பதோடு சரி , பிறகு அப்படியே தூங்கிவிடும்.

    கேரளாவில் ஒரு இடத்தில் இயற்கைவிவசாயம் என்று சொல்லி இருக்கிறீர்கள் அரசை எதிர்ப்பார்க்காமலே தமிழகத்திலும் நிறைய பேர் செய்கிறார்கள் , பெரிய அளவில் வளராததுக்கு காரணம் சரியான விலை கிடைக்காமை, சந்தைப்படுத்துதலும் சிரமம், வழக்கமான இராசயன உற்பத்திக்கே உரிய விலை கிடைக்கவில்லை என்பதை கவனத்தில் கொண்டால் இதற்கான காரணம் புரியும்.

    நல்ல விலைக்கொடுத்து வாங்க தயாராக இருப்பவர்கள் மேல் தட்டு மக்களே எனவே அவர்கள் நுகர்வுக்கு ஏற்ப உற்பத்தியாகிறது தமிழகத்தில். நீல்கிரீஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் சில வகையான காய்கறிகள் இயற்கை விவசாய விளைச்சலில் கிடைக்கிறது. பெருமளவு மக்கள் வாங்க முன்வந்தால் மட்டுமே இவ்விவசாயம் வளரும்.

    புதுவையில் ஆரோவில்லில் கோழி முதல் காய்கறிகள் வரை எல்லாமே இயற்கை விவசாயம் தான் காரணம் அங்கு வசிப்பு எல்லாம் வெளிநாட்டினர்.10 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு முழுவீச்சில் இயற்கை விவசாயம் நடைபெற ஆரம்பித்துவிட்டது. ஆர்கானிக் கோழி வளர்ப்பு பண்ணையை நான் நேரடியாக போய்ப்பார்த்துள்ளேன் , அதை செய்வது ஒரு பிரஞ்ச்காரன்.பெரிதாக ஒன்றுமில்லை நம் கிராமத்தில் கோழி வளர்ப்பது போல தான். காலம் காலமாக நாம் செய்து வந்ததை வெளிநாட்டுக்காரன் செய்ய ஆரம்பித்து விட்டான். அவன் வேண்டாம் என விட்டதை நாம் தொடர்கிறோம் :-))

    ஆரோவில்லில் அவர்கள் நுகர்வுக்கு போக மிகுதியை விற்கிறார்கள் அதை நம்ம ஆட்கள் தேடிப்போய் வாங்குகிறார்கள். நம்ம ஆட்களுக்கு எதையுமே வெள்ளைக்காரன் செய்தால் தான் மதிப்பார்கள் போல.

    மேலும் இயற்கை விவசாயத்திற்கு மானியம் வாங்குவது மிக கடினம், இந்தியாவில் விவசாயத்திற்கான மாநியம் என்பது உரங்கள்,பூச்சி மருந்துகளுக்கு கொடுக்கப்படுகிறதது. அவற்றை வாங்கிப்பயன்ப்படுத்தினால் தான் மாநியத்தின் பலன். இல்லை எனில் கிடைக்காது. நேரடி மாநியம் பெற பல கட்டுப்பாடுகள், சான்றுகள் பெற வேண்டும்.அரசாங்க விதி என்ன சொல்கிறது எனில் நம் நிலத்தில் எச்ச இரசாயம் இல்லை என நாம் நிறுபிக்க வேண்டுமாம், பின்னர் விளைச்சலை சோதனைக்குள்ளாக்கி அதிலும் இரசாயனம் இல்லை என காட்ட வேண்டும். அப்புறம் தான் நம் மாநிய கோரிக்கையை பரிசீலிப்பார்கள், கிராம புர விவசாயிக்கு இதெல்லாம் சாத்தியமா? சாதாரண மண்ப்பரிசோதனை செய்ய கூட அலைய விடுகிறார்கள்.

    கடலூர் குண்டு சாலையில் உள்ள மாவட்ட விவசாய அலுவலத்திற்கே போய் ஒரு முறைப்பட்டிருக்கிறேன்.நுண்ணுயிர் உரம்(பயோ பெர்டிலைசர்) வாங்குவது பற்றி கேட்டேன். ஒருவருக்கும் விவரம் தெரியவில்லை மேலும் விடாமல் கேட்டதற்கு ஒரு தனியார் நுண்ணுயிர் உற்பத்தியாளர் முகவரியைக்கொடுத்து விசாரிக்க சொல்கிறார்கள்.இத்தனைக்கும் அங்கு மாவட்ட நுண்ணுயிர் உர உற்பத்தி மையம் என்று ஒன்று செயல்படுகிறது. அங்கு டேபிள் ,சேர் தவிர எதுவும் இல்லை. இத்தனைக்கும் அங்கே ஏகப்பட்ட வேளாண் விஞ்ஞானிகள்,மைக்ரோ பயலாஜி படித்தவர்கள் என பணியில் இருக்கிறார்கள். சம்பளம் வாங்கிக்கொண்டு ,கட்டு சோறு சாப்பிட்டு விட்டு பொழுப்போக்கிக்கொண்டு இருக்கிறார்கள். மதியம் 2 மணிக்கு மேல் போனால் ஒருவரையும் பார்க்க முடியாது. கட்டி வந்த சோற்றை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிடுவார்கள்.அதான் மதியமே கிளம்பி விடுகிறார்களே பின் கட்டு சோறு? அவங்க வேலைக்கு வராங்களாம் , அதைக்காட்டவே டிபன் கேரியர் :-))

    தனியாரிடம் வாங்கினால் மாநியம் கிடைப்பது கடினம், மொத்தமாக பணம் கொடுத்துவிட்டு பில்லை வைத்து கிளெய்ம் செய்ய வேளாண் அதிகாரியிடம் விண்ணப்பிக்கனும் என்று சொன்னார்கள். இந்த தலையை சுற்றி மூக்கை தொடும் வேலையை சாதாரண விவசாயிகளால் செய்ய முடியுமா?

    இதெல்லாம் ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அனுபவம். செலவு செய்துவிட்டு மாநியத்துக்கு அலைவதற்கு பதில் மாநிய விலையில் கிடைக்கும் இரசாயன உரம் வாங்கிப்போட்டுவிட்டுப்போகலாம் என்று தான் பாமர விவசாயி நினைப்பான்.

    பெயருக்கு கணக்கு காட்ட ஒரு கிராமத்திற்கு 5 பேர் என முன்னோடி விவசாயிகள் என தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் கொஞ்சம் நுண்ணியிர் உரம் வெளியில் வாங்கி கொடுக்கிறார்கள் வேளாண் அதிகாரிகள். மற்றபடி உயிர் உரம் போடுங்கள் என்று லட்சக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் கொடுப்பார்கள் :-))

    நம் நாட்டில் விவசாயம் நடைப்பெறும் முறையை சொல்லப்போனால் முடிவே இல்லாத ஒரு துன்பியல் நாடகம் போல போய்க்கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  10. மிகவும் அவசியமான பதிவு. நன்றி. பூச்சிகள் கூட சாப்பிடாத கீரையை நாம் ஏன் உண்ணவேண்டும் என்று நம்மாழ்வார் ஒரு பேட்டியில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

    உணவே மருந்து என்று முன்னோர் அன்று சொன்னது இன்று கேள்விக்குறியாகிவிட்டது.

    இதோ மாம்பழக் காலம் வந்துவிட்டது. கல் வைக்காத பழங்கலாகத் தேடி (தோப்பிலே?) வாங்கி உண்டு மகிழவும்.

    ReplyDelete
  11. sorry for the typo above ..//பழங்களாகத்//

    ReplyDelete
  12. மாம்பழ சீசனில் எம்புட்டு தர்ம சங்கடம் ..பழமும் வேணும் .. கல்லிலயும் பழுக்க வச்சிருக்கக் கூடாது ... தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு கண்ணை மூடிக்கிட்டு மாம்பழம் சாப்பிட்டுர்ரோம் !!!

    ReplyDelete
  13. வண்க்கம் நன்பர்க்ளே
    கருத்துகள் இட்ட ச்கோ வவ்வால்,சகோ சுவனப் பிரியன்,சகோ குயிக்ஃபாக்ஸ்,சகோ மோசி பாலன்,தருமி அய்யா அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  14. என்டோ சல்பான் பூச்சி மருந்தை தடை செய்ய இந்தியா தான் கடும் எதிர்ப்பு. நம்மால் தான் என்டோ சல்பான் கடை இன்னும் ஓடுது. அச்சு காலத்துல கேரளா என்டோ சல்பானை தடை பண்ண தீவிரமா முயன்றது. கேரளாவில் இப்போ என்டோ சல்பானை பார்ப்பது அரிது.

    ReplyDelete
  15. நன்றி சகோ குறும்பன்

    ReplyDelete
  16. சரியான எச்சரிக்கை பதிவு நண்பரே,

    காய்கரி வளர்க்கும் தோட்டத்திற்கு சென்றால் நமது மூக்கை துளைப்பது ரசாயன உர வாசனை, அது கொத்தமல்லி வாசனையை மீறி வருகிறது.

    கருவேப்பில்லை, கீரை, கொத்தமல்லி, பூ கோசு போன்ற தோல் சீவாத காய்கரிகளை சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. மற்ற காயகரிகளை தோல் சீவி நன்றாக ஓடும்தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
    வரைமுறையில்லாமல் ரசாயன் உர உபயோகத்தால் வந்த வினை. காய்கரி பயிருடுவதை பார்த்தால் காய்கரிகளை உண்ண தோன்றாது.

    இயற்கை விவசாயத்திற்கு மண்ணின் தன்மையை மாற்ற இன்னும் ஐந்து வருடங்களாவது ஆகும்.

    இது மக்களும் அரசாங்கங்ளும் அவரவர் பொறுபுணர்ந்து சரியான சரிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  17. சகோ நீங்க ஒரு பதிவு மக்களுக்கு வழங்கி ஒரு வருடமாகி ஒரு வருடமாக போகிறது.
    உங்க பதிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete